615
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
மு.வ விளக்க உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.”
அந்த அறையின் அமைதி ஒருத்திக்கு அவஸ்தையாய் ஒருவனுக்கு போதையாகிப் போயிருந்தது.
விளக்கை அணைக்காமலே, தான் நின்ற இடத்திலேயே நின்றிருந்தவன் வெகு நிதானமாக தனது சட்டையை கழட்டியிருக்க விடியலுக்கோ பெரும் தவிப்பு.
கட்டிலின் அருகிலிருந்த ஸ்விட்சை அணைப்பதற்கு அவள் செல்ல மீண்டும் போடுவதற்காக தனதருகில் இருந்த ஸ்விட்ச் போர்ட்டை நோக்கி திரும்பியவனின் முதுகைப் பார்த்தவள் விழி விரித்தாள்.
“மேகன்!!!”, என்றவள் எழுந்து அவனது முதுகை மறைத்த படி இருந்த ராஜாளி இறக்கைகள் போன்ற டட்டுவை நுனி விரல் கொண்டு வருடினாள்.
“இவ்வளவு பெரிய டட்டு! வலிக்கலையா?”, என்றவள் அப்படியே முகம் பார்க்க பக்கவாட்டில் தலை திருப்பியிருந்தவன் கண்சிமிட்டி இல்லை என்பதாய் சமிக்ஞை செய்தான்.
“அப்போ இந்த வலி தேவையா இருந்தது சின்னு..”, என்றதில் அவர்களின் பிரிவின் நியாபகம் அவளுள்ளும் வந்து அப்படியே அவன் முதுகில் சாய்ந்திருந்தாள்.
“எப்போவோ முடிஞ்சது மறந்துரு சின்னு..”
“உனக்கு காதலிக்கவே தெரியலை..”, என்றவள் சிரிக்க தன்னை மனம் மாற்ற நினைக்கிறாள் என்பது புரிந்தவனுக்கு அதற்கு மேல் பேச எதுவுமில்லாமல் போயிருந்தது.
அப்படியே இடுப்போடு ஒற்றைக் கையில் தூக்கி சுத்தி மறுபுறம் நிறுத்தியவனின் முகம் அவளது கழுத்து வளைவில் இளைப்பாறியது.
வெகு நிதானமாய் அதீத பொறுமையாய் அவனின் ஒவ்வொரு நகர்வுகளும் பெண்மையை பந்தாடிக் கொண்டிருந்தன.
தனக்கு பிடித்த இனிப்பை ரசித்து ருசித்து விழுங்கிக் கொள்ளும் பாவம் அவனிடத்தில்.
“மேகன் டோன்ட் டூ திஸ்..”
“ஏன்?”
“எனக்கு ஹேண்டில் பண்ண முடியலை..”
“அதைப் பார்க்குறதுக்கு எனக்கு பிடிச்சுருக்கே..”
“ரொம்ப மோசமானவன் டா நீ..”
“டா சொன்னால் இன்னும் மோசமானவனா இருப்பேன் பரவாயில்லையா?”
என்றவனின் கரங்கள் நகரும் ஒவ்வொரு நொடிக்கும் விடியலுக்கு உயிர் போய் வரும் நிலை.
அவளின் சிணுங்கல்களுக்கு சந்தமாய் கொலுசொலிகள் இசைக்க மேகனின் முத்திரைகள் அவளது உடலெங்கும் மகுடங்களாய்.
பாதி நேரம் தனது கரம் கொண்டு மேகனை பேச விடாமல் செய்வதே பெரும் பாடாகிப் போனது விடியலுக்கு.
காதலுக்கும் காமத்துக்குமான விளக்கங்கள் செயலால் மட்டுமன்றி வார்த்தைகளால் பகிரப்படுவதை ஒரே நேரத்தில் எப்படி சமாளிப்பது என்பதறியாமல் தவித்தாள் பெண்ணவள்.
இருவர் ஒருவராய் மாறிய பின்னும் ரகசியங்கள் அனைத்தும் அம்பலமாக்கப் பட்ட பின்னும் மேகனிடத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை.
இன்னுமாய் அவளைத் தன் கை வளைவில் இறுக்கிக் கொண்டவனாய் தன்னவளைத் தான் பார்த்திருந்தான்.
அறையின் ஒரு மூலையில் கிடந்த தனது புடவையைப் பார்த்தவள் மேகனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.
“புது புடவை…”
“புதுப் பொண்ணு தான் டி இன்னும் அழகு.”, என்றதில் புன்னகைத்து விழி தாழ்த்தியிருந்தாள்.
“வெட்கத்தை எல்லாம் அப்போவே மூட்டை கட்டி வைனு சொன்னேனா இல்லையா?”
“…”
“அரை மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்ட..”
“நீ தான் காரணம். நான் கூட உன்னை சமாளிக்க தயாரா தான் வந்தேன்.”
“நானா நான் என்ன பண்ணேன்..”, என்றவனிடத்தில் மெலிதான புன்னகை.
“இவ்வளவு பொறுமையான மேகனை நான் எதிர்பார்க்கலை..”
“முப்பது வருஷ காத்திருப்புக்கான காதல் என் கையில் இருக்குறது.
அதிலேயும் அவளை மாதிரி ஒருத்தி என்னை நம்பி அவளை மொத்தமா கொடுத்துருக்குறதை அவசர அவசரமா அனுபவிக்குற அளவு அவ உடம்பு மேல எனக்கு வெறி இல்ல..”, என்றதில் சட்டென கணவனின் விழி நோக்கியவள் இன்னுமாய் அவனை நெருங்கியிருந்தாள்.
“எனக்கு என் சின்னுவோட கண்ணு காட்டுற பாவம் வேணும், ஒவ்வொரு விஷயத்துக்கும் நடுங்குற அந்த குட்டி குட்டி விரலை நான் உணரணும்.
அவளுக்கு என் மேல இருக்குற ஆசையை நான் அனுபவிக்கணும்.
நான் அவளைத் தவிக்க விடும் போது தாங்க முடியாத அவளோட கோவமும் வேகமும் வேணும்.
என் சின்னுவை நான் மொத்தமா தெரிஞ்சுக்கணும் டி. மத்தபடி இந்த விஷயத்துக்கு பத்து நிமிஷம் கூட போதும்..”, என்றவனின் இதழ்களை தனதாக்கியிருந்தாள் விடியல்.
உறக்கமில்லா இரவு இடைவெளி இல்லா உடல்களின் நெருக்கம் ஒருவரின் வாசனையை மற்றவர் மொத்தமாய் அணிந்து கொண்ட கூடல் என வாழ்க்கையின் முக்கிய நாளை முழுமையாக்கி விட்டிருந்தனர் மேகனும் அவனது விடியலும்.
குளித்து தயாரானவள் வேண்டுமென்றே தயாராகிக் கொண்டிருந்தவனை இடித்துக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள்.
“கீழே போக வேணாம்னு சொல்றியா?”
“ஐயோ ஆளை விடுங்க.. உங்க தங்கச்சி என்னை வைச்சு செய்ய காத்திருப்பாங்க ஏற்கனவே..”
“ரொம்ப கலாய்க்குறாளா என்ன?”
“எக்கச்சக்கமா…”, என்றவள் சிரிக்க மேகனுமே சிரித்திருந்தான்.
“சீக்கிரம் இந்த முடியை வளர்த்து குடு மேகன்..”, என்றவள் அவனது பின்னந்தலை முடிகளை இறுகப் பற்றி ஆட்டி விட்டு ஓடியிருந்தாள்.
இருவருமாய் கீழே வந்த நேரம் சிறியவர்கள் அனைவருமாய் உணவு மேசையில் அமர்ந்திருந்தனர்.
அனைவருக்குமாய் விடியல் காலை வணக்கம் கூற அனைவரும் பதிலுக்கு கூறி அரட்டையைத் தொடகியிருந்தனர்.
மேகன் ஆண்களின் அருகில் இருந்தாலும் தங்கையின் மீது ஒரு பார்வையை வைத்திருக்க பிறர் கண்கள் உறுத்தாமல் விடியலை ஒரு வழியாக்கிக் கொண்டு தான் இருந்தாள்.
ஒவ்வொரு நொடியும் சிவந்து போகும் தன்னவளின் முகம் அப்படியே அவளை வாரி தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது மேகனுக்கு.
“அண்ணி நம்ம எல்லாருமா ட்ரிப் போறோம்..”, என்ற சுகனின் குரலில் அவன் புறம் தலையைத் திருப்பியிருந்தான் மேகன்.
“ப்பா.. ஒரு வழியா அண்ணன் நம்ம பக்கம் திரும்பிட்டார்.. டக்குனு விஷயத்தை சொல்லிரு டா..”, என்றதில் விடியலுக்கோ பெரும் வெட்கமாகிப் போனது.
“என்ன ட்ரிப்?”
“நாம எல்லாருமா சக்லேஷ்பூர் போறோம் ண்ணா.. ஜஸ்ட் டூ டேஸ்..”
“யாரைக் கேட்டு டா முடிவு பண்ணீங்க. நான் ஸ்விஸ் போகணும்..”
“அண்ணா எங்கே போனா என்ன அண்ணியோட தான இருக்க போறீங்க.
இரண்டு நாளுக்கு அப்பறம் ஸ்விஸ் போங்க. யாரு வேண்டாம்னு சொன்னா..”, என்ற சைதன்யாவின் தலையில் தட்டினான்.
“என்ன திடீர்னு?”
“சும்மா தான்.. அண்ணிக்கு வெல்கம் பார்ட்டினு வைச்சுக்கலாம்.
நாலு கப்பிள்ஸோட நாங்க மூணு சின்ன பசங்க.. பட் பரவால்ல நோ ப்ராப்ளம்..”, என்றதில் அனைவருமாய் சிரித்தனர்.
காலை உணவிற்கு பின் மேகனும் விடியலும் அவள் வீட்டிற்குச் செல்ல வாசந்தியோடு இரண்டு மூன்று விருந்தினர்கள் இருக்க விஜயும் அங்கு தான் இருந்தான்.
“வாங்க மாப்பிள்ளை..”
“வாங்க விடியல் வாங்க சார்..”, என்றதில் மேகன் அமைதியாய் விஜயைப் பார்க்க விடியல் புன்னகையோடு மேகனின் கையில் தட்டினாள்.
அதில் மெலிதாய் சிரித்தவன் விஜயிடம் கை நீட்ட ஆச்சரியத்தில் புருவமுயர்த்தியவனாய் மேகனோடு கை குலுக்கினான்.
சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்தவன் பெரிதாய் யாரோடும் எதுவும் பேச முடியாமல் கைப்பேசியை துழாவிக் கொண்டிருக்க விடியல் வந்து அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“நைஸ் ரூம் சின்னு..”, என்றவன் கட்டிலில் அமர்ந்து கை நீட்ட அவனது கரம் கோர்த்து அருகில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன டி முகத்தில் எப்பவுமே ஒரு சிரிப்பு இருக்கு. காலையில் இருந்து நானும் கவனிச்சுட்டு இருக்கேன்”
“புருஷன் காதல்ல மொத்தமா கரைச்சுட்டான். அதான்..”, என்றவள் இன்னுமாய் சிரிக்க மேகனோ,
“அதுக்குள்ளேயா இன்னும் எக்ஸ்ப்ரிமெண்ட் பண்ண வேண்டியது எக்கச்சக்கமா இருக்கு சின்னு. எப்படியும் ஒரு 20-25 வருஷம் ஆகும்.”
“ஹே ச்ச.. மோசமானவன் ரொம்ப ரொம்ப மோசம்..”
“இன்னைக்கு மென்டலிஸ்ட்க்கு நிறைய வேலை இருக்கு. பீ ரெடி”
“சான்ஸே கிடையாது நோ.. நான் போறேன்..”, என்றவள் எழுந்து கொள்ள கையை அழுத்திப் பிடித்திருந்தான்.
“நான் கேட்டா நோ சொல்ற ஆனால் நேத்து மேடம் என் கண்ணைப் பார்த்து கண்டுபிடிக்க ட்ரை பண்ணீங்க தான..
நான் அதுக்கு வாய்ப்பு கொடுக்கலை..”, என்றதில் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தவள்,
“மேகன்!!!”
“சொல்லு உண்மை தான..”
“நீ ரொம்ப பேட் பாய்..”, என்றவளுக்கு குரலே எழவில்லை.
“நீ உலகத்தையே கூட மைண்ட் கன்ட்ரோல் பண்ணலாம். ஆனால் இந்த கண்ணு என்ன பேசுதுனு கண்டுபிடிக்க என்னால மட்டும் தான் முடியும். “, என்றதில் அவ்வளவு பெருமிதம் அவனிடத்தில்.
“என்னை அவ்வளவு பிடிக்குமா?”
“இன்னுமும் இதுக்கு பதில் தெரியலையா உனக்கு. அப்போ என் தப்பு தான்..”, என்றதில் வெட்கச் சிரிப்பு விடியலிடத்தில்.
மாலை இருவருமாய் விடியலின் வீட்டிலிருந்து கிளம்பியிருக்க வீட்டிற்குச் செல்லாமல் அவர்களது கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றனர்.
“இதை எனக்கு மறக்க முடியாத இடமா மாத்திட்ட சின்னு நீ..”
“எனக்கும் தான் நம்மளோட பெஸ்ட் டேஸில் அது தான் முதல்ல மைண்ட்க்கு வரும் மேகன்.”, என்ற படி உள்ளே வந்தவர்கள் அன்று போலவே சோபாவில் மேகன் அமர அவனது மார்பில் தன் முதுகு சாய்த்து அமர்ந்து கொண்டாள்.
“சின்னு..”
”ம்ம்?”
“நீ ரொம்ப இன்டிபென்டென்ட் அண்ட் தைரியமானவ. ஆனால் என் முன்னாடி அப்படி இருக்க மாட்டுறியே ஏன்?”, என்றதில் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தவள் புன்னகைத்து திரும்பிக் கொண்டாள்.
“சொல்லு டி..”
“நான் இல்ல எல்லா பொண்ணுங்களும் இப்படி இருக்க தான் விரும்புவாங்க..”
“அதான் ஏன்?”
“எனக்கு உன்னோட இப்படி இருக்க தான் பிடிச்சுருக்கு. அதுக்காக எல்லாத்துக்கும் நான் உங்களைக் கேட்டு உங்களைத் தொந்தரவு பண்ணிட்டு எல்லாம் இருக்க போறதில்ல தான்.
ஆனால் நீங்க என்னைக் கவனிச்சுக்கும் போது எனக்கு சொல்லத் தெரியலை.. அது ஒரு மாதிரியான ஃபீல்..”, என்றவளின் முதுகில் தலை சாய்த்துக் கொண்டான் மேகன்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
7 comments
💞💞💞💞💞💞💞💞
Nice
❤️❤️❤️
Love and live only mode
Super💕
😘😘😘😘😘😘
Lovely and understanding couple…super episode 🥰