460
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
மு.வ விளக்க உரை: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று”
“இன்னுமும் உன்னை நீயே பெரிய வில்லனா நினைச்சுட்டு இருக்கியா?
உனக்கு எதிரில் நிக்குறது வில்லாதி வில்லன் டா..”, என்றவன் பத்திரத்தை இரண்டாய் கிழித்து மனீஷின் முன் எரிந்தான்.
“ரகு இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ..”
“அதுக்கு உன்னை எங்கண்ணன் விட்டு வைக்கணுமே?”
“!!”
“நீ விளையாடணும்னு நினைச்சதுக்கே இவ்வளவு பெருசா விளையாடிட்டார். இன்னுமும் நீ அடங்க மாட்ற..”
“மனீஷ்..”, என்ற மேகனின் நிதானமான அழைப்பில் உண்மையில் மனீஷிற்கு உள்ளுக்குள் அவ்வளவு பயம் வந்திருந்தது.
“முதல் தடவை உங்க அப்பா எங்கம்மாகிட்ட பேசினாரே அப்போவே உனக்கான ஸ்கெட்ச் ரெடி ஆயிடுச்சு.
எல்லாம் தெளிவா பக்காவா நடக்கணும் இல்லையா அதுக்கு தான் இந்த ஆறு மாசம்.
பட்டுனு தோற்கடிக்குறது ஒரு சுகம்னால் எதிரியை ஜெயிக்க வைக்குற மாதிரியே கொண்டு போய் தோற்கடிக்குது அதை விட பெரிய சுகம் தெரியுமா?”
“…”
“இன்னொன்னு தெரியுமா ரகுவுக்கு பிரச்சனையோட அவுட்லைன் தான் தெரியும்.
அவன் என்ன பண்ணணும்னு ஒரு லைன் தான் கொடுத்தேன். அதுக்கே உன்னை எப்படி நிக்க வைச்சுருக்கான் பாரு.”
“..”
“அவன் என்ன பண்ண போறான் என்ன ப்ளான் பண்ணிருக்கான்னு எனக்கே கூடத் தெரியாது.
எங்க மொத்தக் குடும்பமும் அவன் பண்ணதெல்லாத்தையும் உண்மைனு தான் நம்பிட்டாங்க.”
“ஆனால் நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம் இந்த பத்திர மேட்டர்.”, என்றவன் தம்பியின் தோளில் செல்லமாய் அடித்திருந்தான்.
“இவ்வளவு நடந்த பிறகும் இந்த பத்திரத்தை நீ நம்புற இல்ல..ப்ச்ச்ச்.”, என்ற நேரம் மனீஷின் வக்கீல் உள்ளே நுழைந்தார்.
“வாங்க சார். மனீஷ் ஏதோ பத்திரத்தைப் பார்க்க விரும்புறார்.”, என்றதில் அவர் பேப்பர் கட்டை அவனிடம் நீட்ட அதைப் படித்தவனின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன.
“எதுக்கும் என்ன விஷயம் இருக்குனு நீங்களே தெளிவா சொல்லிடுங்க வக்கீல் சார்.”
“அதாவது மனீஷ் சாரோட அப்பா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்க அப்பாகிட்ட இருந்து ஒரு இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணிருக்கார்.
அதோட அடிமாட்டு விலையா ஒரு அமௌண்டை கொடுத்துருக்கார்.
அதை தெரிஞ்சுகிட்ட மனீஷ் சார் அதோட இன்னைக்கு மதிப்பான 50 கோடிக்கு முன் பணமா 10 கோடியை அவர் சொந்த விருப்பத்தின் பேரில் கொடுப்பதாகவும் மீதி 40 கோடியை சீக்கிரமே தர முயற்சி பண்றதாகவும் எழுதிக் கொடுத்துருக்கார் சார்.”
“யோவ் வக்கீல்..”, என்ற மனீஷை நகர விடாமல் சுகனும் சைதன்யாவும் பிடித்து வைத்தனர்.
“இதெல்லாம் முடிச்ச பிறகு தான் என்கிட்டேயே சொல்றான் இவன்..”
“ஒரு நாள் பேச்சு வாக்கில் இதை நக்கலா வேற சொல்றான் ண்ணா.. செம கடுப்பு அதான் இப்படி பண்ணிட்டேன்..”
“டேய் உனக்குள்ளே இவ்வளவு டேலெண்ட்டா..”, என்று சைதன்யா கேட்டதில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
“சொந்த வீட்டுலேயே ஒழுங்கா பேசாம சந்தோஷமா இருக்க முடியாம பண்ணிட்டான் டா இவன். இவனை எதாவது கண்டிப்பா பண்ணனும்.”
“ஆனாலும் செம பெர்பார்மன்ஸ் போ..”
“அஹெம்.. தேங்க் யூ தேங்க் யூ.”, என்ற நேரம் பார்த்திபன் உள்ளே நுழைந்திருந்தான்.
“போச்சு டேய் நானாவது 50 கோடியோட விட்டேன். இவர் உன் மொத்த சொத்துக்கும் கண்டிப்பா ஸ்கெட்ச் போட்டுருப்பாரு டா..”, என்றதில் மேகன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“உட்காருங்க மனீஷ். இப்போ பிசினஸ் பேசலாம்.”, என்றதில் உள்ளுக்குள் பயத்தோடு அமர்ந்தான் மனீஷ்.
ஒரு ஃபைலை பார்த்தியிடம் இருந்து வாங்கியவன் மேசையில் வைத்து மனீஷின் முன் நகர்த்தினான்.
“அது நீ இதுவரை யாரையெல்லாம் ஏமாத்தி என்னவெல்லாம் தொழில் பண்ற சொத்து சேர்த்துருக்க எல்லாத்துக்குமான பினாமி யாரு, இப்போ நாம இருக்கோமே இந்த வீடு உட்பட யார் யார் உனக்காக உதவி பண்றாங்கனு எல்லா விவரமும் இருக்கு.”
“!!”
“அந்த 40 கோடியை கொடுத்துட்டு எங்களுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லைனு உன் வழியைப் பார்த்துட்டு போயிட்டா இந்த ஃபைலும் குப்பைக்கு போயிடும்.
இல்லையா..”, என்றவன் கை நீட்ட பார்த்தி இன்னொரு ஃபைலை மேகனின் கையில் கொடுத்தான்.
“இதில் உங்க அப்பா எப்படி மினிஸ்டர் ஆனாரு. அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாரு.
இந்தப் பதவிக்கு பின்னாடி அவரோட சொத்து மதிப்பென்னனு உங்க வரலாறு மொத்தமும் இருக்கு.”
“!!!”
“நீ பிரச்சனை பண்ணினால் இல்ல, பிரச்சனை பண்ணனும்னு நினைச்சா கூட இதெல்லாம் எங்கெங்கே போகணுமோ கரெக்டா போயிடும். இப்போ சொல்லு என்ன பண்ணலாம்?”
“…”
“நான் சொல்லல இவர் என்னை விட மோசம்னு.. எப்படி பார்த்தி உங்களால இதெல்லாம் முடியுது.”, என்றதில் லேசான புன்னகை பார்த்தியினிடத்தில்.
“ஏற்கனவே உங்களுக்காக நிறைய நேரத்தை வேஸ்ட் பண்ணியாச்சு மனீஷ். சீக்கிரம் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..”
“ஃபைன். நான் பணத்தை செட்டில் பண்றேன்.”
“க்ரேட் தென். பார்த்தி அவர் சொன்னதுக்கு ஆதாரமா பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்க.
நல்லா படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க மனீஷ்..”, என்றதில் கடுப்புடன் அதை வாங்கி கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தான்.
அண்ணன் தம்பி நால்வருமாய் வெளியில் செல்ல மனீஷ் இயலாமையோடு ஆத்திரமுமாய் அவர்களைப் பார்த்திருந்தான்.
வெளியே வந்த மேகன் ரகுவந்தை அணைத்து விடுவித்தான்.
“குட் ஜாப் ரகு..”
“என் கஷ்டம் எனக்கு. இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா எங்கப்பா எனக்கு விஷம் வைச்சுருப்பாருண்ணா..
இந்தளவு நான் வாழ்க்கையில கேவலமா திட்டு வாங்கினதே இல்ல.”, என்றதில் அனைவருக்கும் அப்படியாய் ஒரு சிரிப்பு.
“அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா பெரியப்பா என்னை குழந்தை மாதிரி கொஞ்சினார்.
ரகு கண்ணா ஏன் இப்படி பண்ற பெரியப்பாகிட்ட சொல்லு. உனக்கு என்ன வேணுமோ நான் பண்றேன்னு..”
“கொழுப்பு டா உனக்கு..”, என்ற மேகனின் முகம் புத்துணர்வோடு இருந்தது.
“ஹப்பா இனி ஒரு மாசம் எனக்கு ரெஸ்ட் அண்ணா கல்யாணம் முடிச்சுட்டு நான் டூர் போறேன். என்னை யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது.”
“அண்ணா இவனை ஏன் செலெக்ட் பண்ணீங்க. இனி இவன் போடுற சீன் தாங்காது..”, என்றதில் சுகனையும் சைதன்யாவையும் வயிற்றில் குத்தினான்.
மேகன் சற்று நகர்ந்து வந்து பார்த்தியின் தோள் தட்டியவனாய்,
“தேங்க்ஸ் பார்த்தி..”, என்றதில் பதறிப் போனவனாய்,
“சார்.. தேங்க்ஸ் சொல்லி என்னை பிரிச்சு வைக்காதீங்க..”
“நீயே நினைச்சால் கூட உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது டா.
அப்பறம் உனக்கும் விஜய்க்கும் வீடு பார்த்துருக்கேன். நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் போய் முடிச்சுட்டு வந்துரு.”
“சார்!!!”
“என்ன இப்படியே காலத்தை ஓட்ட போறியா? கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆக வேணாமா?”, என்றதில் அமைதியாய் தலை குனிந்தான்.
“என் கல்யாணத்துக்கு அப்பறம் அங்கே ஷிப்ட் பண்ணிக்கோ. விஜய்க்கு விடியல் வீட்டு பக்கத்தில் இருந்தா பெட்டர்னால அங்கேயே பார்த்துருக்கேன்.
அதான் நீயும் அவனும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களாமே.. பார்த்துக்கோ..”, என்று தோள் தட்டி நகர்ந்தான் மேகன்.
அங்கு விடியலும் விஜயை வீட்டிற்கு அழைத்து விஷயத்தைக் கூற விஜய் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான்.
“என்ன விஜி ஏன் அமைதியா இருக்கீங்க..”
“இதெல்லாம் எதுக்கு விடியல். என்ன இருந்தாலும் நான் உங்க எம்ப்ளாயி தான்.”
“என்ன இப்படி பேசுற விஜய். நாங்க உன்னை எப்பவும் அப்படி நினைச்சதில்ல.
எங்களுக்கு மகன் இல்லாத குறைக்கு நீ வந்த பிறகு நாங்க அப்படி தான்ப்பா நினைச்சுருக்கோம்.”, என்று வாசந்தி கூறியதில் கண் கலங்கி விட்டிருந்தான்.
“தேங்க்ஸ் மேடம். இந்த அன்புக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்.”
“எதுவும் பண்ண வேண்டாம். காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணி சந்தோஷமா வாழப் பாரு அது போதும்.”, என்றதற்கு புன்னகைத்தவளாய் விடியல் சென்று சில கோப்புகளைக் கொண்டு வந்து விஜயிடம் கொடுத்தாள்.
“அம்மா வெறும் பேச்சுக்கு சொல்லல. அப்பா சில ஷேர்ஸை உங்க பேரில் மாத்திருக்கார். அவர் எப்போ கொடுக்க நினைச்சாரோ எங்களுக்குத் தெரியாது.
பட் நாங்க உங்க புது வீட்டுக்கான கிஃப்ட்டா கொடுக்குறோம். வாங்கிக்கோங்க..”, என்றதில் விஜயால் நிதானத்திற்கே வர முடியாமல் போயிருந்தது. சில நிமிடங்களில் தன்னை மீட்டெடடுத்துக் கொண்டவனாய்,
“மேகன் சாருக்கு என்னைப் பிடிக்காதுனு நினைச்சேன் விடியல்..”, என்றதில் சிரிப்பை அடக்க முயற்சித்தாள்.
“ஏன் விஜய் அப்படி?”, என்ற வாசந்தியின் கேள்விக்கு விடியல் உள்ளே சென்று விட விஜய்,
“சார் ரொம்ப பொசசிவ் மேடம். விடியல் என்னை விஜினு கூப்பிட்டாலே கண்ணாலேயே எரிச்சுடுவார்.”, என்றதில் வாசந்தி இடத்திலும் புன்னகை.
வீட்டிற்கு வந்த பிள்ளைகள் அனைவரும் மஞ்சுநாத்திடம் விஷயத்தைக் கூறி அந்த பத்திரத்தையும் நீட்ட கண்கலங்க மேகனை அணைத்துக் கொண்டார்.
“ப்பா..”
“அன்னைக்கு தேதிக்கு அந்த இடம் கைவிட்டு போனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது மேக்.
உழைச்சு சம்பாதிக்குறதை இப்படி யாருக்கோத் தூக்கி கொடுக்குறோமேனு. ஆனால் இப்போ..”
“அதுக்கு இவன் தான் காரணம்..”, என்றதில் ரகுவின் கன்னத்தில் முத்தம் வைத்தார்.
“பெரியப்பா.. நான் என்ன குழந்தையா?!”, என்றவன் சிணுங்கினான்.
“நீங்க எல்லாரும் எங்களுக்கு எப்பவும் குழந்தை தான டா..”, என்றதில் ராதிகாவும் சித் மற்றும் அவர் மனைவியும் புன்னகைத்தனர்.
அனைத்தும் முடிந்து தனதறை கட்டிலில் வந்து விழுந்தவனுக்கு திருமணத்தைப் பற்றிய நினைவுகள் மனதை இலகுவாக்க அதே நேரம் அவனது கைப்பேசியில் குறுஞ்செய்தி ஒலி கேட்டது.
“பொண்டாட்டிக்கு ஒரு புடவை கூட வாங்கித் தரலை. என்ன பெரிய மேகனோ தெரியலை..”, என்றதைப் படித்தவனுக்கு முகம் மலர்ந்து போனது.
“கொஞ்சம் பிசி சின்னு..”
“பிஸியாவே இருந்துக்கோ.. நான் கோவமா இருக்கேன்..”, என்றதில் வாய் விட்டே சிரித்தவன் கைப்பேசியை வைத்து விட்டு தனது அலமாரியை திறந்து அந்த அட்டைப் பெட்டியை எடுத்து அதிலிருந்த புடவையை கையால் வருடினான்.
மைசூரின் வீவிங் பேக்ட்ரியில் இருந்து வாங்கிய விலையுயர்ந்த மைசூர் சில்க் புடவை.
இப்போதும் அது நன்றாக இருக்கிறதா நல்ல நிறமா தரமா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
ஆனால் அவனின் விடியலுக்கு அது பேரழகைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் எடுத்திருந்தான். அவள் கேட்ட மறுதினமே மைசூருக்குச் சென்று வாங்கியிருந்தான் மேகன்.
இதை அவளிடம் கொடுக்கும் போது அவனுக்குப் பிடித்த அவள் நயனங்களை காணும் ஆவல் உள்ளுக்குள் பரவசத்தைக் கொடுத்திருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
💞💞💞💞💞💞💞
Semma super
❤️❤️❤️
ரகு 😘😘😘😘😍😍😍
மனீஷ் 🤣🤣🤣🤣😂😂😂😂 உனக்கு அவங்கள பத்தி தெரியல 😂😂😂
விஜி பார்த்தி 🤗🤗🤗😍😍😍
மேகன் விடியல் 😍😍😘❤️❤️
Very nice
Superb update sis
Semma..raghu kalakitta po. Paarthi athukum mela. Vijay kum paarthi kum veedu. Happy. .
Semma
அருமையான பதிவு ❤️❤️❤️❤️❤️