தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

மு.வ விளக்க உரை: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

இளையவர்கள் அனைவருமாய் உள்ளே வர மேகனைத் தவிர மற்றவர்கள் அறைக்குச் சென்றிருந்தனர்.

மேகன் இரு கால்களையும் அகற்றி நின்ற படி தாயையும் தந்தையும் பார்த்திருந்தான்.

“இப்போ சொல்லுங்க டேட்..”

“அவ உன்னை பலகீனமாக்குறா மேகன்.”

“அவகிட்ட மட்டும்..”

“இது உனக்கு நல்லதா?”

“எனக்கு பிடிச்சுருக்கு டேட்.”

“எனக்கு இன்னமும் இதில் முழு உடன்பாடு இல்ல. சேம் லைக் சைத்ரா கல்யாணம் இதையும் வேற வழியில்லாம பண்ணி வைக்குறேன்.”

“வாழ்க்கையில் இதுக்காக எப்பவுமே நீங்க ரிக்ரெட் பண்ண மாட்டீங்க டேட்..”, என்றவன் தந்தையை அணைத்து விடுவிக்க மஞ்சுநாத் அமைதியாய் அவரது அறைக்குச் சென்றிருந்தார்.

“ம்மா..”, என்றவன் தாயைக் கட்டிக் கொள்ள அவனது முதுகில் தட்டிக் கொடுத்தவராய்,

“ஒரு வழியா உன்னோட கோ-டு பெர்சனை கண்டுபிடிச்சுட்ட கண்ணா..”, என்றதில் புன்னகைத்தவன் அன்னையோடு சில நிமிடங்கள் பேசி விட்டு தனதறைக்குச் சென்றான்.

அங்கு வீட்டிற்கு வந்த விடியலுக்காக காத்திருந்த வாசந்தியின் அருகில் தயக்கத்தோடு வந்து நின்றாள்.

“சாரி மா..”

“பரவாயில்ல சின்னு. அங்கே யாரும் எதுவும் சொன்னாங்களா?”

“அதெல்லாம் இல்ல மா..”

“நிம்மதியா தூங்கு போ..”, என்றதில் தனதறைக்குச் சென்றிருக்க வாசந்தி கணவரின் புகைப்படத்தின் முன் சில நிமிடங்கள் நின்று விட்டு படுக்கச் சென்றிருந்தார்.

அறைக்குள் வந்தவளின் கைப்பேசி ஒலியெழுப்ப ஏனோ அது மனதிற்கு அத்தனை இனிமையாய் இருந்தது விடியலுக்கு.

“சின்னு..”, அழைப்பை ஏற்றவள் அமைதியாகவே இருந்தாள்.

“மா பங்காரி.. பேசு டி பைத்தியகாரனா நடமாடிட்டு இருக்கேன்..”

“இந்தக் குரலை கொஞ்சம் கொஞ்சமா உள் வாங்கிட்டு இருக்கேன் மேகன்..”

“இன்னொரு தடவை என் பேரைச் சொல்லு..”

“லவ் யூ மேகன்..”

“என் மேல கோவம் இல்லையா?”

“ம்ஹும்..”

“நான் பெரிய சுயநலக்காரன் இல்ல?”

“ம்ஹும்..”

“என் மேல கோவப்படாம இருக்குறது நீ மட்டும் தான். பார்த்தி கூட சில நேரம் என் மேல கொலைவெறியில் இருந்துருப்பான்.”

“மேகன் ஐ மிஸ் அப்பா..”, என்றதில் மேகன் அமைதியாகி இருந்தான்.

“நீ என்னோட இருந்துருந்தா நல்லயிருந்துருக்கும்.”

“…”

“எனக்கு அப்பா இல்லாம சமாளிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது மேகன்.”

“…”

“உன்கிட்ட வந்து உன் கைக்குள்ளே ஒழிஞ்சுக்கணும் போல இருக்கும்.”

“சின்னு..”

“அன்னைக்கு முழுசும் என்னை உன் கைக்குள்ளேயே வைச்சுருந்தியே அப்படியே இருந்து செத்து போயிடணும் மேகன்..”

“இப்படி பேசினால் நானே கொன்னுருவேன் டி..”

“..”

“அங்கிள் உன்னை விடவும் ரொம்ப ஸ்வீட்..”, என்றதில் கண்ணீரோடு அழகான புன்னகை விடியலிடத்தில்.

“ஒரே மீட்ல அப்பாவையும் ஏமாத்தி கவுத்துட்ட நீ..”

“அப்படியா?”

“ம்ம் அப்பா சொன்னாங்க மேகன் ரொம்ப நல்ல பையன்னு..”

“அவரோட சின்னுவை எப்பவும் மேகன் பாதுகாப்பா பார்த்துக்குவான். இட்ஸ் அ ப்ராமிஸ் டு ஹிம்..”

“அவருக்கே அது தெரியும். அதனால தான் தைரியமா என்னை இங்கே விட்டுட்டு போயிருக்கார்.”

“எனக்கு பிடிச்ச முடியை ஏன் வெட்டின?!”

“கண்ணாடியில் முகத்தை பார்த்தாலே  நீ தான் டி வந்து நிக்குற. என்ன பண்ணட்டும் நான்?”

“..”

“அன்னைக்கு என் தலையை நீ வருடினது இப்போ வரை எனக்குள்ளே ப்ரெஷ்ஷா அப்படியே இருக்கு.

உனக்குப் பிடிச்சதை மட்டும் என்கிட்ட வைச்சுட்டு உன்னை தூரமா தொலைச்சுட்டதில் வந்த கோவம். அதான்..”

“…”

“சீக்கிரமே வளர்த்துடலாம் சின்னு..”

“இந்த மேகன் இன்னும் அழகா இருக்கான்..”, என்றதில் இருவர் முகத்திலுமே விரிந்த புன்னகை.

“மேடம் ஏதோ கேப்ஷன் எல்லாம் போட்டீங்களே?”

“ஏன் ரீஷேர் பண்ணவருக்கு மறந்து போச்சா..”

“அந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு நேரா ஆன்ட்டி காலில் வந்து விழுந்துரலாமானு யோசிச்சேன்…”

“ஆனா உன் ஈகோ விட்டுருக்காது இல்ல?”, என்றவள் சிரித்தாள்.

“உனக்காக இதை பண்ண மாட்டேனா?”

“மாட்ட..”

“மென்டலிஸ்ட்க்கு எப்பவும் என் மனசு மட்டும் தெரியவே தெரியாது.”, என்றவனுக்கு அன்று முழுவதும் உறக்கம் துளி கூட விழிகளைத் தழுவியிருக்கவில்லை.

அதிகாலையில் தான் கண்ணயர்ந்தவள் தாய் வந்து எழுப்பியதில் மெதுவாய் அசைந்து படுத்தாள்.

“சின்னு என்ன டி இப்படி தூங்குற எழுந்துரு..”, என்று வாசந்தி உலுக்கியதில் மணியைப் பார்த்தவள் 7 மணி என்றிருந்ததில் அதிர்ந்து எழுந்தமர்ந்தாள்.

“ம்மா.. என்னாச்சு 7 தானே ஆகுது.. நீ நல்லாயிருக்கல..”, என்றவளின் பதட்டத்தில் அவளருகில் நின்றிருந்தவர் மகளை வயிற்றோடு அணைத்துக் கொண்டார்.

“சின்னு.. ஒண்ணுமில்ல.. ரிலாக்ஸ் ஆகு.. அவர் வந்துருக்கார் நீ கொஞ்சம் வா..”

“யா… யாரு வந்துருக்கா?”

“ப்ச்.. வாயேன் டி..”, என்றவர் முன்னே செல்ல தலையை கோதி கொண்டையிட்டவள் நைட் பைஜாமாவோடு அப்படியே ஓடினாள்.

அங்கு சோபாவில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தவனைப் பார்த்து வேகத்தை குறைத்தவள் அப்படியே நின்றிருந்தாள்.

“என்னோட தான டா தூங்கப் போன ப்ரஷ்ஷா வந்து உட்காந்துருக்க..”, என்பது தான் விடியலின் மைண்ட் வாய்ஸாக இருந்தது அந்த நேரம்.

“ஹாய் விடியல்..”, என்றதில் என்ன கூறுவதென புரியாமல் திருதிருவென விழித்து நின்றவளைப் பார்த்து சிரித்தான் மேகன்..

“காபி எடுத்துக்கோங்க.”, என்று வாசந்தி நீட்டியதை புன்னகையோடு வாங்கிக் கொண்டான்.

“சாரி ஆன்ட்டி காலையிலேயே வர வேண்டியதா போச்சு.”

“இருக்கட்டும் பரவால்ல..”

“எப்படியிருக்கீங்க?”

“ம்ம்.. நான்.. நல்லாயிருக்கேன்.”

“ஹோப் நீங்க எடுத்த முடிவு மனசார எடுத்தது தான்?”

“ஆமா.. எனக்கு பரிபூரண சம்மதம் தான்..”, என்றதில் எழுந்து கொண்டவனாய்,

“அங்கிளும் இப்படியே தான் பேசினார். கேட்டா மருமகனை பேர் சொல்லி கூப்பிடக் கூடாதுலனு சொன்னார்.”, என்றதில் விடியலின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இனி விடியல் எப்பவும் என் பொறுப்பு. அண்ட் நீங்களும்..”, என்றவன் குனிந்து அவர் பாதம் பணிந்து நிமிர பெண்கள் இருவருமே பதறி விட்டிருந்தனர்.

“தம்பி இருக்கட்டும்..”

“உங்க ப்ளசிங் எப்பவும் எங்களுக்கு இருக்கணும். என்ன சின்னு?”, என்றதில் அவனருகில் வந்தவள் பக்கவாட்டில் அவனைக் கட்டிக் கொண்டாள்.

வெகு இயல்பாய் அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தவன் வாசந்தியிடம்,

“அப்பா அம்மா கல்யாண வேலையை ஆரம்பிக்குறதா சொன்னாங்க. அதனால தான் உங்களைப் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.

பை ஆன்ட்டி..”, என்றவன் கிளம்ப அவனது கரத்தை விடாமல் அவனோடு வாசலுக்கு நடந்தாள் விடியல்.

“இன்னைக்கு ஒரு நாள் என்னோட இரு மேகன்..”

“நோ.. வே…”

“ஏன்?”, என்றவள் மூக்கைச் சுருக்க மூக்கின் நுனியில் விரல் கொண்டு தட்டியவனாய்,

“உன் முன்னாடி இருக்குற டீசெண்ட் மேகன் எல்லாம் உள்ளுக்குள்ளே இல்ல சின்னு.. கல்யாணம் வரை போன் கால் மட்டும் தான் பெட்டர்..”

“ஹேய்…”

“உண்மையை சொல்றேன் டி.. இருக்குற நிலைமைக்கு கொஞ்சம் மிஸ் ஆனாலும் போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்னு உன்னைத் தூக்கிட்டு போயிடுவேன்.”

“மேகன்…”

“ஸ்டாப்.. பேரை சொல்லாத.. நான் கிளம்புறேன்.. பை..”, என்றவனின் விரல்களின் அழுத்தமே சற்று வலியைக் கொடுத்தது விடியலுக்கு.

இத்தனை மாதங்கள் இருந்த வருத்தங்கள் எல்லாம் மொத்தமாய் மறந்து போகும் அளவிற்கான சந்தோஷத்தில் மனம் திளைத்திருந்தது.

அடுத்த பதினைந்தே தினங்களில் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மஞ்சுநாத்தைப் பார்த்த போது எழுந்த சிறு சுணக்கமும் ராதிகா தன்னை அரவணைத்துக் கொண்டதில் மறைந்து போனது வாசந்திக்கு.

மேகன் வேலையில் பிசியாகி விட வாசந்தி ராதிகா சைத்ரா விடியல் நால்வருமாய் நிச்சயத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆபீஸ் வேலைகளை மொத்தமாய் விஜய் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது விடியலுக்கு பெரும் உதவியாய் இருந்தது.

விடியல் ஒவ்வொரு நிகழ்வையும் தனக்குள் ரசித்து அனுபவித்து மனப் பெட்டகத்தில் சேகரித்தாள்.

நிச்சயத்தன்று மாலை வரை மேகனை அவள் பார்க்கவே இல்லை.

ஏதேதோ காரணங்கள் சொல்லி தப்பித்துக் கொண்டிருந்தவனிடம் கடந்த இரு தினங்களாய் விடியல் பேசியிருக்கவில்லை.

அவன் அழைத்தாலும் அழைப்பை ஏற்காமல் போக்கு காட்டிட ஹோட்டலிற்கு வந்தவன் நேராய் அவளது அறைக்குள் நுழைந்திருந்தான்.

அங்கிருந்த பெண்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிச் சிரித்த படி வெளியேறிட சைத்ரா அண்ணனை முறைத்து நின்றாள்.

“உனக்கு இங்கே என்ன வேலை ண்ணா.. போ ஒழுங்கா?”

“உன் அண்ணி தான் என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா.. ஆமா வா இல்லையா கேளு..”, என்றதில் விடியல் தடுமாற அண்ணிக்காக பெரிய மனது பண்ணி வெளியேறியிருந்தாள்

சைத்ரா சென்ற அடுத்த நொடி கதவை பூட்டியவன் விடியலை இடுப்போடு இறுக்கி இதழ்களைத் தனதாக்கியிருந்தான்.

பெண்ணவளின் கரங்கள் அவனை இன்னுமாய் தன்னோடு சேர்த்திருந்தன.

ஆரம்பத்தில் பிரிவின் தாக்கத்தில் சுற்றம் உணராதவள் சற்று தெளிந்த பின் தான் அவனின் வேகத்தை உணர்ந்திருந்தாள்.

மூச்சு விட முடியாதவளாய் அவனது தோளில் தட்ட ஆரம்பிக்க மேகனோ கடுப்பானவனாய்,

“என்னடி?”, என்றதற்கு பதில் கூறாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் விடியல். மீண்டுமாய் நெருங்கியவனைத் தள்ளி நிறுத்தியவளாய்,

“எனக்கு மூச்சு முட்டுது..”

“இதுக்கே இப்படி சொன்னால் என்ன பண்றது நான்..”

“மேகன்..”

“இதனால தான் நானே கண்ணில் படாம இருந்தேன். நீ ஆசைப்பட்ட தான அனுபவி..”, என்றவன் மீண்டுமாய் இதழ்களை விழுங்கிக் கொண்டான்.

அதற்கு மேல் அவனைத் தடுக்க முடியாதவளாய் அவன் போக்கிலேயே விட்டிருந்தாள் விடியல்.

சில நிமிடங்களுக்குப் பின் அவன் விலக நாற்காலியில் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.

நல்ல வேலையாய் புடவையை மட்டும் கட்டி முடித்து இனி தான் ஒப்பனை செய்ய வேண்டும் என்றிருந்ததால் தப்பித்தாள்.

இல்லையெனில் இதன் பின் யாரையுமே முகம் கொடுத்து பார்க்க முடியாமல் போயிருக்கும் விடியலுக்கு.

“புடவை நல்லாயிருக்கு சின்னு..”, என்றவன் இரு பக்க முடிகளையும் காதுகளுக்குப் பின் ஒதுக்கி விட்டான்.

விடியலுக்கு நடந்தை நினைத்தாலே முகமெல்லாம் சிலிர்த்தது

“சின்னு..”, என்றவன் அவளது தாடைகளை இரு புறமும் அழுத்தமாய் பிடித்து தன்னைப் பார்க்க வைத்தான்..

“மேகன்.. வலிக்குது.. ரிலாக்ஸ்..”

“நான் தான் சொன்னேன்ல ரொம்ப மிருகமா இருக்கேன். உன்னைப் பார்க்காம இத்தனை நாள் இருந்த தவிப்பெல்லாம் இப்போ வேற மாதிரி ரியாக்ட் ஆகுது.

உன்னை ஹர்ட் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு டி..”, என்றவன் பேச்சிற்கு நடுவிலேயே அவளது முகமெங்கும் முத்தத்தைப் பதித்துக் கொண்டே இருந்தான்.

“ஷ்… காம்டவுண்..”, என்றவளின் தளிர் கரம் மென்மையாய் அவனது கன்னத்தை வருடியது.

“ஐ காண்ட்..”,என்றவன் அவளோடு நெற்றி முட்டி விழி மூடியிருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

11 comments

Hi

jemila Paul September 21, 2026 - 7:16 am

Superb ❤️❤️❤️❤️❤️❤️

Kavi Natarajan September 21, 2026 - 7:46 am

💞💞💞💞💞💞

Kiruthika M September 21, 2026 - 7:47 am

Meg loves uh overflow agirchu 😻❤️today innu oru chapter kudunga ka

Fathima.ar September 21, 2026 - 7:48 am

Moradabad morattu kadhal…

EswariSkumar September 21, 2026 - 9:18 am

❤️❤️❤️❤️❤️❤️❤️

Krishnav September 21, 2026 - 10:19 am

Where did he go these days and what happened to him

Jacky September 21, 2026 - 10:22 am

highly romantic

srichitra September 21, 2026 - 11:01 am

Nice

MalarMurugan September 21, 2026 - 1:25 pm

அவங்க கரையறாங்களோ இல்லையோ நாங்க கரைஞ்சிட்டோம் 😍😍😍😍

Gayathri Sivaraman September 21, 2026 - 4:01 pm

Woww…lovely 😍😍😍

suganyavel September 21, 2026 - 8:54 pm

Super💕 lovely😊

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode