726
“அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
மு.வ விளக்கம்: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.”
அன்று மஞ்சுநாத்திற்கு எப்போதும் இருக்கும் செக்கப் நடைபெற அளவுக்கு அதிகமான ஓய்வில் இருப்பதில் இப்போதெல்லாம் கண்மன் தெரியாத எரிச்சல் வருகிறது அவருக்கு.
மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் படுத்தியவரை சமாதானப்படுத்தி வேலையை முடிப்பதற்குள் ராதிகா சோர்ந்து போனார்.
மருத்துவ குழு கிளம்பிய பின் மேகன் தந்தையைப் பார்த்துச் செல்வதற்காக வர மஞ்சுநாத் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார்.
“எனக்கு இந்த வீடே ஜெயில் மாதிரி இருக்கு. இதில் அப்பப்போ செக்அப் பண்றேன்னு இவங்க எல்லாம் வேற என் உயிரை எடுக்குறாங்க.
என்னால இதுக்கு மேல ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது..”, என்ற நேரம் உள் நுழைந்தவன்,
“க்ரேட் டேட்.. நானே அதைப் பத்தி பேச தான் வந்தேன்.”, என்றதில் மகனைப் பார்த்தவர் அமைதியாய் தலையைத் திருப்பிக் கொண்டார்.
“ப்பா..”, என்றதில் மகனின் புறம் திரும்பியவர் என்னனவென்பதாய் பார்த்திருந்தார்.
“நம்ம MR hotels & Resorts எல்லாத்தையும் நீங்க பார்த்துகிட்டா நல்லாயிருக்கும். நீங்களே சொன்ன மாதிரி நிறையவே ரெஸ்ட் எடுத்துட்டீங்க தான..”
“ஏன் ரகுவந்த் தான அதைப் பார்த்துக்குறான்?”
“டெம்பரரியா பொறுப்பைக் கொடுத்தோம். இப்போ அகெயின் நீங்க டேக் ஓவர் பண்ணிக்கோங்க. அவன் உங்ககிட்ட ரிப்போர்ட் பண்ணுவான்.”
“என்ன கண்ணா திடீர்னு..”, என்ற தாயைப் பார்த்தவன் ஒரு நொடி அமைதிக்குப் பின்,
“அது.. அப்பா கொஞ்சம் கொஞ்சமா பேக் டு ஃபார்ம் வந்துட்டா நானும் கல்யாணம், ட்ரிப்னு கொஞ்ச நாள் பெர்சனலா பிசி ஆகலாம்னு பார்க்குறேன் மாம்.”, என்று வெகு நிதானமாய் கூற ராதிகாவிற்கு மகிழ்ச்சி எனில் மஞ்சுநாத்திற்கு சந்தேகம்.
“கண்ணா! ஆர் யூ ஷுவர்?”
“யெஸ் மாம் நான் ஏன் பொய் சொல்ல போறேன்.”, என்றதற்கு ராதிகா ஏதோ கூற வருவதற்குள் மஞ்சுநாத் மகனிடம்,
“பொண்ணு யாரு?”, என்று கேட்டதில் ஆச்சரியமாய் மகனைப் பார்த்தார் ராதிகா.
“முதல்ல நீங்க ஆபீஸ் வேலையை கவனிக்க ஆரம்பிங்க டேட்.. அப்பறம் ஒரு நாள் இதைப் பத்தி பேசலாம்.”
“நேத்ராவுக்கு நோ சொல்லிட்டியாமே?”, என்றதில் மீண்டுமாய் ராதிகாவிற்கு அதிர்ச்சி.
“யெஸ் டேட் அது செட் ஆகாது. எனக்கு விருப்பமும் இல்ல.”
“அதுக்காக மாமாகிட்டேயே அப்படி பேசனுமா நீ?”
“நான் நல்ல விதமா தான் சொன்னேன். அவங்க பேச்சை வளர்த்தா நான் என்ன பண்ண முடியும்?”
“என்ன நடக்குது இங்கே? உனக்கு அம்மாவா உன்னைச் சுத்தி நடக்குற எதுவுமே தெரியாம இருக்கேன் மேகன்.”, என்றவரின் குரலில் வருத்தம் மண்டிக் கிடந்தது.
“மாம் இதெல்லாம் உங்களுக்குத் தெரியுற அளவு பெரிய விஷயம் இல்ல. அதனால சொல்லல.
ஏன் டவுண் ஆகுறீங்க..”, என்றவன் தாயை சமாதானப் படுத்தி விட்டு எழுந்துச் செல்ல ராதிகா கணவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.
“என் பிள்ளை வாழ்க்கையில் எல்லா முடிவையும் நீங்களே எடுத்தா போதுமா?”
“இப்போ என்ன ஆகிடுச்சு..”
“நேத்ரா விஷயம் என்ன?”
“என் தங்கச்சிக்கு நேத்ராவை இந்த வீட்டு மருமகளாக்கணும்னு ஆசை. என்கிட்ட கேட்டா எனக்கும் சம்மதம்னு சொன்னேன்.”
“அப்போ என் சம்மதம்?”
“அதான் எதுவும் நடக்கலையே ராது.. அது ஜஸ்ட் வெறும் பேச்சு வார்த்தை தான்.”
“..”
“மேகனுக்கு விருப்பமில்ல. அதை அவங்ககிட்டேயே நேரா சொல்லவும் சொல்லிட்டான்.
இதுக்கு மேல அந்தப் பேச்சே வேண்டாம்.”, என்றவர் பேச்சை முடித்துக் கொள்ள ஆற்றாமையோடு வெளியே வந்தவருக்காகவே காத்திருந்தவனாய் தாயின் தோள் பற்றி தன்னோடு அழைத்துச் சென்றான் மேகன்.
தனதறையில் சோபாவில் தாயை அமர வைத்தவன் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“மேல உட்காரு கண்ணா..”
“மாம் டோண்ட் ஃபீல் பேட். அது அவ்வளவு வொர்த்தான விஷயமே கிடையாது.”
“ம்ம்”
“உங்க மருமகளைப் பார்க்குறீங்களா?”, என்றதில் ராதிகா அதிர்ச்சியாய் மகனைப் பார்த்தார்.
“கண்ணா என்ன சொல்ற நீ?!”
“அப்பாகிட்ட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். நான் பொறுமையா பேசினால் தான் சரியா இருக்கும்.”, என்றவன் தனது கைப்பேசியில் அன்று ஹோட்டலில் இருவருமாய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டினான்.
மேகனின் தோளுயரத்தில் முகம் நிறைத்த புன்னகையோடு சல்வாரில் நின்றிருந்தவளைப் பார்த்தவுடன் ராதிகாவிற்குப் பிடித்து விட்டது.
“ரொம்ப அழகா இருக்கா கண்ணா..”
“இன்னொரு விஷயம் சொன்னால் இன்னும் ஹேப்பி ஆகிடுவீங்க..”
“!!”
“அவங்களும் தமிழ் குடும்பம் தான்..”, என்றதில் புன்னகைத்தவர் அவளது விவரங்களைப் பற்றி கேட்க மேலோட்டமாய் விவரித்திருந்தான்.
“அப்பா இதுக்கு சம்மதிச்சாலும் உன் அத்தை எதாவது பிரச்சனை பண்ணுவாங்க கண்ணா..”
“ஐ நோ மாம். அதனால தான் பொறுமையா பேசலாம்னு இருக்கேன். உங்களுக்குப் பிடிச்சுருக்கா?”
“உனக்குப் பிடிச்சால் எனக்கும் கண்டிப்பா பிடிக்கும்.”, என்றவர் மகனின் கன்னம் தட்டிச் சென்றிருந்தார்.
இங்கு மஞ்சுநாத்திற்கு மகனின் பேச்சு பல யோசனைகளைக் கொடுத்திருக்க மகன் தேர்ந்தெடுத்திருக்கும் பெண் யாராய் இருக்கும் என்பதை விசாரிக்க ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.
அன்று மாலைக்குள் விடியலைப் பற்றிய மொத்த விவரமும் மஞ்சுநாத்தின் கையில் இருந்தது. அவருக்கு சுத்தமாய் மனதிற்கு ஒப்பவில்லை.
தன் மகன்.. மேகன் மஞ்சுநாத்திற்கு இந்தப் பெண் எந்த வகையிலும் பொருத்தமில்லாதவள் என்பது மட்டும் தான் அவர் மனதில் நிலைத்திருந்தது.
மனது பொறுக்க முடியாதவராய் அப்போதே தம்பிக்கு அழைத்திருந்தார்.
“சொல்லுங்கண்ணா எப்படியிருக்கீங்க?”
“சித், மேகன் பண்றது ஒண்ணும் எனக்கு சரியா படலை.”, என்றவரின் குரலில் அவ்வளவு எரிச்சல்.
“என்ன ஆச்சு ணா? “, என்றவரிடம் விடியலைப் பற்றி மஞ்சுநாத் கூறியிருக்க இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே மனிதருக்குப் புரியவில்லை.
“நம்ம மேக்கிட்ட பொறுமையா பேசலாம் ணா..”
“என்னத்தை பேசுறது? கட்டி வைங்க இல்லை சொத்தைப் பிரிங்கனு சொல்லுவான்.”, என்றதில் சித்திற்கு இருக்கும் நிலைமையை மீறி சிரிப்பு வந்திருந்தது.
“ண்ணா..”
“நீ வளர்த்தவன் அப்படி சொல்ல மாட்டாங்கிறியா?”
“இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசினால் எப்படி ண்ணா.. பொண்ணைப் பத்தி விசாரிப்போம்.”
“விசாரிச்சு? நல்லதா இருந்தா கல்யாணம் பண்ணி வைச்சுரலாமா?”
“!!”
“சைத்ரா கல்யாணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாம உட்காந்துருக்கேன். இதில் இவன் என்னை இன்னும் டென்ஷன் பண்றான் டா..”
“அண்ணா.. அண்ணா கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க..”
“..”
“நாம என்ன ஏதுனு பார்க்கலாம். நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறது நல்லதுக்கு இல்லை.
நான்.. நான் அவன்கிட்ட பேசுறேன்.”, என்று அண்ணனை சமாதானப்படுத்தி அழைப்பைத் துண்டித்த நொடி மேகனை அழைத்திருந்தார்.
“சொல்லுங்க சித்தப்பா.. இன்னும் கொஞ்சம் முன்னாடியே எதிர் பார்த்தேன்.”
“ஏன் கண்ணா இப்படி பண்ற..”
“இதைத் தவிர என்னால அப்பாகிட்ட இதைப் பத்தி பேச வேற வழியிருக்குனு நினைக்குறீங்களா?”
“எல்லாமே பிசினஸ் மைண்ட்ல தான் பண்ணுவியா நீ? பொறுமையா எடுத்துச் சொல்லிருக்கலாம் தான?”
“உங்க அண்ணா அதுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்துருப்பாரா?”
“அப்பாவும் மகனும் என் தலையை உருட்டுங்க நல்லா..”
“..”
“சோ நீ என்ன எதிர் பார்த்தியோ அது தான் நடந்துருக்கு..”
“ம்ம் ஆமா.. அடுத்து உங்க தங்கச்சி உள்ளே புகுந்து என்ன பண்ணுவாங்கனு பார்க்கணும்.”
“அவ கண்டிப்பா அண்ணனை இன்னும் ஏத்தி தான் விடுவா..”
“அப்போ உங்களுக்கு ஓகே தான?”
“இல்லனு சொன்னா அதை நீ கன்சிடர் பண்ணுவியா?”
“அஃப்கோர்ஸ் இல்ல தான்..”
“படவா.. ரொம்ப மோசமானவன் டா நீ.. சரி மருமக போட்டோ அனுப்பி விடு..”, என்றவர் அழைப்பைத் துண்டித்திருக்க மேகனின் முகத்தில் பு.னகை.
மறுநாள் அவன் எதிர் பார்த்தது போலவே அத்தையும் மாமாவும் காலையிலேயே வீட்டிற்கு வந்திருக்க அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் தான் இருந்தான் மேகன்.
மஞ்சுநாத்தின் அறையில் மூவருக்கும் இடையில் அனல் பறக்க விவாதம் நடைபெற அவரது அறையிலிருக்கும் சீசீடிவி வழி மேகன் நடப்பதைப் பார்த்திருந்தான்.
“அண்ணா நாம மேகனுக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டோம்.. இதெல்லாம் நமக்கு எப்படி ஒத்து வரும்?”
“எனக்கும் சுத்தமா விருப்பம் இல்ல. தமிழ் குடும்பம் அதிலேயும் நம்ம ஸ்டேட்டஸ்க்கு கொஞ்சமும் ஒத்து வராதது.”
“என்னங்க அமைதியா இருக்கீங்க?”
“நான் என்ன பேசணும். என் பொண்ணை வேண்டாம்னு சொன்னப்போவே என்னால எதுவும் பண்ண முடியலை.
இது எனக்குத் தேவையில்லாத விஷயம். மச்சான் கூப்பிட்டாரேனு தான் வந்துருக்கேன்”
“மாப்பிள்ள நான் அவன்கிட்ட பேசுறேன். நேத்ராவையே..”
“நல்லாயில்ல மச்சான். என் பொண்ணுக்கு வேற பையனே கிடைக்காத மாதிரி இருக்கு இந்தப் பேச்சு.
சொந்தம் விட்டு போகக் கூடாதுனு இவ சொன்னதுல தான் நான் அந்த பேச்சுக்கே சம்மதிச்சேன்.”
“..”
“நான் பண்ணின மிகப் பெரிய தப்பு அது தான். இனி நேத்ராவே சம்மதம் சொன்னாலும் நான் இதுக்கு சம்மதிகக்க மாட்டேன்.”
“அண்ணா நான் மேகன்கிட்ட பேசுறேன்..”
“வேண்டாம். எனக்கு விஷயம் தெரியும்னே அவனுக்கு இன்னும் தெரியாது.
நான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்குறேன்.”, என்றதில் அவர்கள் இருவரும் கிளம்பியிருக்க மேகனும் கணினித் திரையின் முன்னிருந்து எழுந்து கொண்டான்.
“என்ன பார்த்தி நல்ல அக்ஷன் சீக்வென்ஸ் வரும்னு பார்த்தேன். மிஸ் ஆகிடுச்சே..”, என்றதில் பார்த்தி ஒன்றும் கூற முடியாமல் அமைதியாய் புன்னகைத்து நின்றிருந்தான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
6 comments
💞💞💞💞💞💞
Nice update sis
Ithukuthaan vidiyal payandhaa. Avangappa and athai @ co va Megan eppadi samalikuraan nu paarpome.
Super💕
Pakka calculative ah erukkaaney…
Nice
நைஸ் ❤️