மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

மு.வ விளக்கம்: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

இரு தினங்கள் கடந்திருந்த நிலையில் ராஜ் விடியலை சந்திப்பதற்காக அவளது அலுவலகத்திற்கு வந்திருந்தான்.

அவனை அந்நேரத்தில் அங்கு எதிர்பாராதவளாய் சிநேகப் புன்னகையோடு அவனை அமருமாறு கை காட்டினாள்.

“ஹாய்.. என்ன இந்தப் பக்கம்?”

“வேற வழி தெரியலை. உங்களை இதை விட்டால் பார்க்க வாய்ப்பே கொடுக்க மாட்றீங்களே..”

“இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

“சும்மா சொன்னேன். அது இருக்கட்டும் இன்னைக்கு நீங்க ஃப்ரீனால் வெளியே போலாமா? ஜஸ்ட் அ காபி..”, என்றதில் ஆழ்மூச்செடுத்தவளாய்,

“ராஜ்.. ஐ அம் ரியலி சாரி..”

“!!”

“நானே நிறைய குழப்பத்தில் இருந்ததில் உங்ககிட்ட இதைப் பேசுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கலை.”

“என்ன விஷயம் விடியல்?”, என்றவனின் முகம் யோசனையைத் தாங்கியிருந்தது.

“அது.. வந்து.. இது வொர்க் அவுட் ஆகாது ராஜ்..”

“எது?”

“அப்பா உங்ககிட்ட என்ன பேசிருக்காங்களோ, நீங்க என்ன நினைச்சுட்டு என்னோட பேசுறீங்களோ அது.”

“!!”

“நான்.. நான் ஒருத்தரை காதலிக்குறேன்.”

“வாட்?”

“ப்ளீஸ்.. இன்னும் வீட்டில் சொல்லல. இப்போதைக்கு சொல்ற நிலைமையும் இல்ல. அதனால தான் உங்ககிட்ட சொல்றேன். ஹோப் என் நிலைமை உங்களுக்குப் புரியும்..”

“…”

“சாரி உங்களை ஹர்ட் பண்ணணும்னு..”

“ஹே இட்ஸ் ஓகே.. அட்லீஸ்ட் இப்போவாவது வாயைத் திறந்து சொன்னீங்களே அதுவரை சந்தோஷம். ஆல் த பெஸ்ட்..”, என்றவன் எழுந்து கை நீட்ட தர்ம சங்கடமாய் அவனுடன் கை குலுக்கினாள்.

விஷயத்தை அவனிடம் நேரடியாக கூறி விட்டதில் ஒரு வகையில் மனம் நிம்மதியானது விடியலுக்கு.

மனம் இலகுவாகி விட்டது போல் இருக்க அன்றைய அவளின் நிகழ்ச்சியை மிகுந்த உற்சாகத்தோடு முடித்து வீட்டிற்கு வந்தவளுக்கு வாசந்தி வாயில் இனிப்பைத் திணித்திருந்தார்.

“ம்மா.. என்ன மா?”

“என் தங்கம்.. அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம் தெரியுமா?”

“!!!”

“ராஜ் தம்பி வீட்டில் இருந்து பேசினாங்க. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியாமே.. அப்பாக்கு தலைகால் புரியலை..”

“ம்மா என்ன சொல்ற?!!”

“ஆமா இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்திருந்தாராமே. நீ பேசிப் பார்த்ததில் பிடிச்சுருக்குனு சொல்லிட்டதா அவங்க வீட்ல சொல்லி அவங்க அப்பா போன் பண்ணி நம்ம அப்பாகிட்ட பேசிருக்கார்.”, என்றதில் ராஜின் மேல் கண்மன் தெரியாத கோபம் வந்தது.

தாயிடம் ஒன்றும் கூறாமல் நேராக அறைக்குச் சென்றவள் ராஜின் எண்ணிற்கு அழைக்க முழு அழைப்பும் சென்று நின்றது. மீண்டுமாய் முயற்சிக்க அழைப்பை ஏற்றவனோ,

“சொல்லுங்க மேடம். உங்களுக்கு என்னோட பேச எல்லாம் நேரமிருக்கா?”, என்றவனின் குரலில் ஏளனம் அதிகமாகவே இருந்தது.

“ராஜ் நீங்க என்ன பண்ணி வைச்சுருக்கீங்க. உங்ககிட்ட என் நிலைமையை சொன்னேன் தான?”

“என்ன புடலங்கா நிலைமை? நீ எவனை வேணாலும் காதலிச்சுக்கோ ஆனால் என்னைக் கல்யாணம் பண்ணு நீ ஒண்ணும் உலக அழகியெல்லாம் இல்ல.

எனக்குத் தேவை உன் பிசினஸ். கல்யாணத்துக்கு அப்பறமும் நீ..”

“ஷட் அப் ராஜ். இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை..”

“ஏய் வார்த்தையை அளந்து பேசு..”

“அதுக்கு நீ அந்த தகுதியோட இருக்கணும். உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சுட்டு இருக்கார் எங்கப்பா..”

“நான் நல்லவனாவே இருந்து தான் கல்யாணத்தை முடிக்க நினைச்சேன்.

நீ விடலை. நீ போய் என்ன வேணாலும் சொல்லு நான் எல்லா தப்பும் உன் மேல தான்னு சொல்லுவேன். என்னப் பண்ணிடுவ..”

“இதெல்லாம் நல்லாயில்ல ராஜ்..”

“கரெக்ட் தான்.. என்ன பண்ணலாம்? ம்ம்.. பேசாம நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடு பிரச்சனை முடிஞ்சுரும்.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

ராஜின் குடும்பம் விடியலின் குடும்பத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கம்பெனியின் மதிப்பே பல கோடி அப்படிபட்டவனுக்கு பணத்தின் மீதான ஆசையை நினைத்து விடியலுக்கு எரிச்சலாய் இருந்தது.

காதலைப் பற்றி வீட்டில் கூற முடியாமல் அவனது மிரட்டலுக்கு பயந்து ஒடுங்குபவளாய் விடியலை நினைத்து விட்டான் போலும்.

ஆழ்மூச்செடுத்தவள் அறையிலிருந்து வெளியே செல்ல இளங்கோவும் வாசந்தியும் புன்னகை முகமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ப்பா..”

“சின்னு வா டா..”

“ப்பா.. இந்த கல்யாணம் நடக்காது. அவங்ககிட்ட சொல்லிருங்க..”

“ஏய் என்ன டி?”

“ம்மா அந்த ராஜ்கிட்ட எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லனு தான் சொன்னேன். அவன் போய் மொத்தமா வேற மாதிரி சொல்லி வைச்சுருக்கான்.

இப்போ கால் பண்ணி ஏன் இப்படி பண்ணினனு கேட்டா எனக்குத் தேவை உங்க கம்பெனியும் சொத்தும் தான். உன் விருப்பமெல்லாம் முக்கியமில்லங்கிறான்.”

“!!!”

“தயவு செஞ்சு கல்யாண பேச்சை இதோட விடுங்க பா..”, என்றவள் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டிருந்தாள்.

“சின்னு அவர் எதுவும் விளையாட்டா..”

“எவனோ விளையாட என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாதுப்பா.

நல்லதுக்கு தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.”, என்றவள் எழுந்து அறைக்குள் சென்று விட கணவனும் மனைவியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அமர்ந்திருந்தனர்.

சில நிமிடங்களில் தெளிந்தவராய் இளங்கோ ராஜின் தந்தைக்கு அழைத்து திருமணப் பேச்சு வேண்டாம் என்று கூறிவிட விஷயம் அறிந்து ராஜ் விடியலுக்கு விடாமல் அழைத்துக் கொண்டேயிருந்தான்.

ஒரு கட்டத்தில் கடுப்பானவளாய் தனது மொபைலை அணைத்து விட்டு படுத்திருந்தாள் விடியல்.

“சின்னு..”

“ப்பா வாங்க..”, என்றவள் வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.

“நான் பேசிட்டேன் டா. நீ வொர்ரி பண்ணிக்காத..”

“ம்ம்.. தேங்க்ஸ் பா..”

“என்கிட்ட முதல்லயே சொல்லிருக்கலாமே டா?”

“ப்பா.. அது..”

“இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு எதுவும் காரணம் இருக்கா சின்னு?”

“…”

“எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“இல்லப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“அப்பாகிட்ட எதையோ மறைக்குறனு தெரியுது..”, என்றதில் கண்கள் கலங்கி விட்டிருந்தது விடியலுக்கு.

“என்ன டா..இங்கே வா..”, என்றவர் மகளைத் தன் தோள் சாய்த்துக் கொண்டார்.

“ப்பா..”

“ம்ம்?”

“ஒண்ணுமில்ல பா..”, என்றவளுக்கு அந்த ராஜின் மேல் கண்மன் தெரியாத ஆத்திரம் வந்திருந்தது.

இளங்கோவும் அதற்கு மேல் மகளை துருவாமல் அமைதியாகவே விட்டிருந்தார்.

அன்று இரவு மனசோர்வில் அப்படியே உறங்கியும் போனவள் மறுநாள் எழுந்து வந்த நேரம் இளங்கோ சாதாரணம் போல் மகளிடம் பேச வாசந்தி சற்றே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வேலையைக் கவனித்திருந்தார்.

“ம்மா ஏன் இப்படியிருக்க?”

“உனக்கு பிடிக்குது பிடிக்கலைனு எங்ககிட்ட சொல்ல முடியாதா டி? எவன்ட்டேயோ சொல்ல தைரியம் இருக்கு.”

“வாசு..”

“நீங்க சும்மா இருங்க. எல்லாமே நீங்க கொடுக்குற இடம் தான்.”

“ம்மா நான் ஆரம்பத்துலயே இது வேண்டாம்னு சொன்னேன் நீ எங்கே கேட்ட?”

“வேண்டாம்ங்கிறதுக்கு ஒரு உருப்படியான காரணத்தைச் சொல்லு நான் விட்டுறேன்.”, என்றதில் விடியல் அமைதியாகி விட்டிருந்தாள்.

“ம்ம் ஒரு காரணமும் இல்ல ஆனா கல்யாணம் வேண்டாம். நல்லாயிருக்கு டி.

சொந்த பந்தத்துல யாராவது உங்க அப்பாவை நாக்கு மேல பல்லை போட்டு ஏதாவது பேசட்டும் அப்பறம் இருக்கு உனக்கு.”, என்றவர் சமையலறைக்குச் சென்றிருந்தார்.

“ப்பா அம்மா ஏன் இப்படி சொல்றாங்க..”

“அவ ஏதோ டென்ஷனில் பேசுறா சின்னு நீ போய் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணு நேரமாச்சு பாரு..”

“ப்பா சொல்லுங்க..”

“என்ன டி சொல்லணும் உனக்கு நாங்க கோவிலுக்கு போயிருந்த நேரமே எல்லாரும் உன் கல்யாணத்தைப் பத்தி கேட்டாங்க.

25 வயது ஆகுதுங்கிற காசு பணம் இருந்து என்ன பயன். காலா காலத்துல கல்யாணம் பண்ண வேணாமானு..”

“போன மாசம் உன் அத்தைகாரி போன் பண்ணி என்ன அண்ணி உங்க மகளுக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லையானு நக்கல் பண்றா.. நீ என்னடானால் எங்ககிட்ட வாயே திறக்காம இருக்க..”

“…”

“ம்மா.. கொஞ்ச நாள் தான ம்மா டைம் கேட்குறேன்..”

“அதில் என்ன மாறிடப் போகுது?”

“இப்படி பேசினால் நானும் தான் என்ன பண்ணுவேன்?”, என்றதில் சற்றே அமைதியடைந்தவர் பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டார்.

அலுவலகத்திற்கு கிளம்பியவள் காரில் ஏறியதும் மேகனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“நாம இன்னைக்கு மீட் பண்ண முடியுமா மேகன். எனக்கு உன்னைப் பார்க்கணும்.”

“அதுக்கு தான் கால் பண்ணேன். நான் லோகேஷன் அனுப்புறேன். வா.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

விஜய் அன்று விடுமுறையில் இருக்க ட்ரைவரிடம் வழி கூறிய படி மேகன் கூறிய இடத்தை அடைந்திருந்தாள்.

வில்லா போன்ற வீடுகள் நிறைந்த இடத்தில் அவன் கூறியிருந்த வீட்டின் முன் இறங்கியவள் ட்ரைவரிடம் தயக்கமாய்,

“அண்ணா, அப்பாகிட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம். ப்ளீஸ். நான் இப்போ வந்துரேன்.”, என்றதற்கு தலையசைத்து வைத்தார்.

பார்த்தி வீட்டு வாசலில் நிற்க அவனுக்கு புன்னகையை அளித்தவள் உள்ளே சென்ற நேரம் மேகன் பால்கனியில் நின்றிருந்தான்.

வேகமாய் அவனை நோக்கிச் சென்றவள் எதுவும் பேசாமல் அவனை இடுப்போடு அணைத்து மார்பில் தலை சாய்த்திருந்தாள்.

“ரிலாக்ஸ் சின்னு..”

“ஐ பேட்லி நீட் திஸ். நீ ஏன் என்னை விட்டு தூரமா இருக்க..”, என்றவள் தலையை நகர்த்தாமல் இருக்க இரு கரம் கொண்டு இன்னுமாய் அழுத்தம் கொடுத்து தன்னோடு சேர்த்திருந்தான் மேகன்.

“மா பங்காரிக்கு என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல ஐ ஜஸ்ட் மிஸ்ட் யூ..”

“அப்படியா?”

“ம்ம்..”

“நான் அவளுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேனே..”

“என்னது?”, என்றதில் தன்னிலிருந்து அவளைப் பிரித்தவன் கைப்பற்றி அவளை அங்கிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

உள்ளிருந்தவனைப் பார்த்தவள் கண்கள் தெறித்து விழுந்து விடும் அளவிற்கு அதிர்ச்சியில் விழித்தாள்.

ராஜ் இருக்கையில் அமர வைத்துக் கட்டப்பட்டிருக்க முகத்தில் சிறு சிறு அடி வாங்கிய தடங்கள் இருந்தன.

“மேகன்!!”

“என்ன பண்ணலாம் சொல்லு.. நீ என்ன சொல்றியோ அதான் முடிவு.”

“மேகன்.. அவரை.. விட்டுடுங்க..”

“அதெப்படி முடியும். உன்னை உண்மையாவே கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டுருந்தா கூட பொழச்சு போனு விட்டுருப்பேன். ஆனா சார் ப்ளானே வேறயா இருக்கே..”

“!!!”

“தைரியம் இருந்தா இப்போ பேசு அவகிட்ட..”, என்றவன் விடியலின் தோள் பற்றி தன்னோடு நெருக்கியிருந்தான்.

பெண்ணவளோ அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றாள்.

“மேகன் ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம். விட்டுடுங்க.”

“உன்னை ஹர்ட் பண்ணா அது என்னைத் தொட்டதுக்கு சமம். எப்படி விட சொல்ற?”, என்றவன் கோவத்தில் கத்தியதில்  வாயை மூடிக் கொண்டாள் விடியல்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

Kavi Natarajan September 11, 2026 - 5:28 pm

💞💞💞💞💞💞💞💞💞

EswariSkumar September 11, 2026 - 5:41 pm

ஆத்தீ கேங்ஸ்டர் அவதாரமா மேகன்

Kiruthika M September 11, 2026 - 6:15 pm

Athana Avan aal ta thimira pesna summava irupan 😌

Superb

Raji Vijay September 11, 2026 - 7:50 pm

Ithai expect panninane Megan kitta..😂 V ya seendina summava viduvaan.

suganyavel September 11, 2026 - 8:09 pm

Super💕

srichitra September 12, 2026 - 4:26 pm

Nice

Mathy September 15, 2026 - 11:22 pm

நைஸ் அப்டேட் 🤩🤩🤩

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode