நாட்கள் தன் கண்ணாமூச்சியை தொடர்ந்து கொண்டிருக்க நாட்டியாலயாவின் நிகழ்ச்சி நாளும் வந்தது.

அரங்கம் முழுவதும் பெற்றோரும் பார்வையாளருமாய் நிறைந்திருக்க முதல் வரிசையில் நடுஇருக்கையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் திவ்யாந்த்.

அவளை பிரிந்து இருக்கும் இந்த பத்து மாதங்களில் இரண்டாவது முறையாய் இன்றுதான் பார்க்கப் போகிறான்.

மனதில் இனம்புரியா ஒரு தவிப்பு ஆர்வம். சற்று நேரத்தில் அவனை கவனித்தவராய் நாட்டியாலயாவின் சீனியர் ஆசிரியை ஒருவர் அவனருகில் வந்து நலம் விசாரித்து வந்தார்.

ஒப்பனையறைக்குச் சென்றவர் வெண்பாவிடம், ”உங்க ஆளு வர்றத சொல்லவேயில்லையே வெண்பா.

உங்க சண்டையை பாத்தா சின்ன பசங்க சண்டை போல இருக்கும் போலேயே. நல்ல பிள்ளைங்க”,என்று அவள் தோள் தட்டி நகர்ந்தார்.

அவர் கூறிய வார்த்தைகளில் இருந்து மனம் இன்னமும் மீண்டு வரவில்லை.

காலையிலிருந்து மனம் வெகுவாய் அவன் வரவை நாடியது. தன்னையறியாமல் கால்கள் அறை கதவின் அருகே செல்ல லேசாய் கதவை திறந்தவள் தலையை மட்டும் நீட்டி அவனை பார்க்க எப்படியும் நீ வருவாய் எனத் தெரியும் என்பதாய் அவன் கண் அங்கேயே நிலை கொண்டிருந்தது.

இதை எதிர்பாராதவளோ ஒரு நொடியில் அவனை தனக்குள் நிரப்பிக் கொண்டு உள்ளே மறைந்து கொண்டாள்.

அவனின் புன்னகை இன்னுமே பெரிதாக சற்றே சாய்வாய் அமர்ந்து கொண்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக வரவேற்பு நடனமாய் வெண்பா மேடை ஏறினாள்.

அழகிய சந்தன நிற பரத உடையில் வைலட் நிற பார்டர் அமைந்திருக்க அதற்கு பொருத்தமாய் நகைகளும் சிகை அலங்காரமும் கைகளில் மருதாணியும் காலில் சலங்கையும் அனைத்திற்கும் மேலாக அவளது திவாவிற்கு மிகவும் பிடித்த அவள் கண்களின் ஒப்பனை. அதற்காகவே அவள் நடனத்தை காண வந்திருப்பான் நிச்சமாய்.

கவிபாடும் அந்த கயல் கண்களே அவனை கட்டி ஆட்சி செய்யும் அழகிய ராஜாங்கம்.

அவள் மேடையேறியது முதல் அவன் அங்கு இங்கு முகத்தை நகர்த்தவில்லை.

பார்வை மொத்தமும் தன்னவளையே மொய்த்தெடுத்துக் கொண்டீருந்தது.

அவளும் அடவுகளுக்கு ஏற்றாற் போன்று விழியசைவு செய்தாலும் அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையிலெல்லாம் அவனையே பார்த்து ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் ஆடிமுடித்த நேரம் எழுந்த பலத்த கரகோஷத்திலேயே இருவரும் சுய உணர்வு பெற்றிருக்க அதற்குள் மேடையில் தோன்றிய அந்த மூத்த ஆசிரியை அவளை அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு மைக்கோடு அவளருகில் வந்து நின்றார்.

“ நம்ம நாட்டியாலயா வெற்றிகரமா இயங்கிட்டு வர்றதுக்கு முக்கிய காரணமே இங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்.

அவங்களையெல்லாம் கவுரவிக்குற விதமா இன்னைக்கு அத்தனை பேருக்கும் ஒரு சிறு நினைவுப் பரிசு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

இது அவங்க யாருக்குமே தெரியாது. இப்போ தான் உங்க முன்னாடி தான் அவங்களும் தெரிஞ்சுக்குறாங்க.

சோ முதல் பெர்பார்மென்ஸ் கொடுத்த வெண்பா பத்தி சில வரி பேசிட்டு அவங்களுக்கான பரிசையும் கொடுக்கலாம்னு நினைக்குறேன்.

ரொம்ப ரொம்ப டெடிகேட் ஆன ஒரு ஆசிரியை. பங்கஷன் ப்ராக்டிஸ்னு எப்போ சொன்னாலும் அவங்களோட முழு உழைப்பையும் அதில் காட்டுவாங்க.

அத்தனை ஈடுபாடு. ப்ரொபெஷன்ங்கிறத தாண்டி அவங்களோட ப்ஷேன் தெரியும் ஒவ்வொரு ஈவெண்ட்லயும்.

அது மட்டுமில்லாம வசதியற்ற திறமையான குழந்தைகளுக்கும் இந்த கலையை கொண்டு சேர்க்கனும்னு ஒரு ஆசிரமத்து குழந்தைகளுக்கு தொடர்ந்து ஐந்து வருஷமா பரதம் சொல்லி கொடுத்துட்டு வராங்க.

அவங்களை இந்த மேடையில் கௌரவப்படுத்துறது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

நா தான் எல்லாருக்கும் பரிசை கொடுக்கலாம்னு நினைச்சேன். பட் இன்னைக்கு ரொம்பவே முக்கியமான சீஃவ் கெஸ்ட் ஒருத்தங்க வந்துருகாங்க சோ அவங்களே எல்லாருக்குமான பரிசுகளை வழங்கனும்னு ஆசைப் படுறேன். டாக்டர் திவ்யாந்த் ப்ளீஸ் கம் ஆன் டூ த ஸ்டேஜ். ”

அப்பட்டமான அதிர்ச்சியோடு மனதில் ஆனந்தம் பொங்க அவனையே அவள் பார்த்திருக்க முகத்தில் மலர்ந்த புன்னகையோடு துள்ளலாய் மேடை ஏறியவனை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளருகில் வந்தவன் சட்டென கண்ணடித்துச் சிரிக்க முகம் தாமரையாய் மலர்ந்து போனது வெண்பாவிற்கு.

ஆசிரியையிடமிருந்து பரிசை வாங்கியவன் அவளுக்கு கொடுத்து பின் கை குலுக்குவதற்காய் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட தயக்கத்தை மறைத்தவளாய் கைகுலுக்கி புன்னகைத்தாள்.

அவனின் அழகிய புன்னகை மாறாமல் கீழேயிறங்கி தன் இருக்கைக்குச் செல்ல ஒப்பனை அறைக்குச் சென்றவளின் அருகில் இரண்டு இளம் ஆசிரியைகளின் பேச்சு அவள் காதில் தெளிவாய் விழுந்து புன்னகையை பெரிதாக்கியது.

“ஹே அந்த டாக்டர் செம ஸ்மார்ட்ல. அதுவும் அந்த ஸ்மைல் ப்பாபா சான்சேயில்ல. ”

“ம்ம் நானும் கவனிச்சேன். அவங்க ஃவைப் கொடுத்து வச்சவங்க. ஏன் டீ நமக்கு மட்டும் இப்படி யாரும் கண்ணுல பட மாட்றாங்க. ”

“ம்ம் நம்ம ராசி அப்படி சரி சரி வா அடுத்து நம்ம பெர்பார்மெண்ஸ் தான். ”

அவர்கள் கடந்து சென்றவுடன் தன் ஒப்பனை கலைந்து தன் பயிற்சி நடனத்தை காண்பதற்காக உடைமாற்றி முகத்தில் லேசாய் பவுடர் இட்டு உதட்டிற்கு லேசாய் லிப்  க்ளாஸ் தடவி வெளியே வந்தவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் திவா.

தடுமாற்றத்தை மறைத்தவளாய் வந்திருந்த பெற்றோருக்கு வணக்கம் கூறியவாறு மேடையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள்.

அத்தனை நிகழ்ச்சிகளும் முடிந்து பெற்றவர்களிடம் விடைபெற்று தன் உடைமைகளை சரிபார்த்து எடுத்துக் கொண்டவள் வெளியே வரும் போது அரங்கமே காலியாகி இருந்தது ஒன்றிண்டு பேர் தவிர அனைவரும் கிளம்பியிருக்க கேப் புக் செய்தவாறே வாசலையடைந்தவளை திவ்யாந்த்தின் கார் மறித்தது.

அப்பட்டமான அதிர்ச்சியோடு அவனை ஏறிட டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாறே அவளுக்கான கதவை திறந்துவிட்டான்.

நிச்சயமாய் இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவள் முகமே அவனுக்கு உணர்த்தியது.

சட்டென சமாளித்தவளாய் உள்ளே அமர்ந்தவள் வெளியே இருளை வெறிக்க உதட்டோரச் சிரிப்போடு காரை கிளப்பினான் திவ்யாந்த்த்.

காரில் அமைதியை தவிர எதுவுமிருக்கவில்லை அவனாய் பேசுவுமில்லை. அவள் பேச வேண்டும் என நினைக்ககூட இல்லை.

இருப்பினும் ஒருவரின் அருகாமையை மற்றவர் அதிகமாய் நாடினர் என்று தான் கூற வேண்டும்.

எங்கெங்கோ அலைந்து திரிந்து நம் இடத்தை அடைந்துவிட்ட ஒரு நிம்மதி. அது மட்டுமே அந்த நேரத்திற்கு போதுமானதாய் இருந்தது இருவருக்கும்.

அவள் வீட்டு வாசலில் வந்து கார் நிற்க சத்தம் கேட்டு சிந்தாமணி அம்மா வெளியே வந்தார்.

இருவரையும் ஒரு சேர பார்த்தவருக்கு மனதில் அப்படியாய் ஒரு சந்தோஷம். ஒன்றும் பேசாமல் வாசலிலேயே நின்று அவர்களை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டார்.

காரைவிட்டு இறங்கியவள் ஒன்றும் பேசாமல் கண்ணாடி வழியே அவனைப் பார்க்க ஒரு நிமிடம் முழுதாய் அவளை நோக்கியவன்,

”நிம்மதியான உறக்கமும் அழகான கனவுகளும் உனதாகட்டும். டேக் கேர் ககண்ணம்மா. . ”,என்றவன் காரைக் கிளப்பிச் சென்றுவிட அசையவும் தோன்றாமல் அவன் சென்ற திசையை பார்த்தவாறே நின்றிருந்தாள் வெண்பா.

“பாப்பா பேசாம தம்பி வீட்டுக்கு போய்டலாமா?”,என்ற சிந்தாமணியின் கேள்வியில் உயிர் பெற்றவளாய் புன்னகையோடு உள்ளே சென்றுவிட்டாள்.

அறைக்கதவை தாழிட்டவளுக்கு நினைவு தன் கடந்த காலத்தை சுற்றி வந்தது.

திவாவிடம் கூறியவாறே அந்த வீட்டிற்கு குடி வந்து ஹோமிற்கு நடன ஆசிரியையாய் பொறுப்பேற்று பதினைந்து தினங்கள் ஆகிவிட்டிருந்தது.

அன்றைய மழை தினத்திற்கு பிறகு திவ்யாந்தையும் சந்திக்கவில்லை.

வீடு மாறிவிட்டதாய் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தாள். ஆனால் அதற்கும் பதில்லாலமல் போனது.

அதன்பின் அவளும் அவனை தொடர்புகொள்ள முயற்சி செய்யவில்லை.

இப்படியான நிலையில் அன்று சென்னையின் திடீர் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

ஹோமிற்கு வகுப்பெடுக்க வந்திருந்தவள் அது முடிந்ததும் மழை நிற்பதற்காக அங்கேயே காத்திருக்க திவ்யாந்தின் கார் உள்ளே நுழைந்தது.

காரைவிட்டு இறங்கியவன் மழைக்காக வேகமாய் ஓடிவந்து அந்த வராண்டாவில் நின்று தலையை சரிசெய்தான்.

தற்செயலாய் வெளியே வந்தவள் அவனை அங்கு எதிர்பாராமல் விழிவிரித்தாள்.

“என்ன டாக்டர் சார் காலேஜ் கோயிங் மாறி ஆய்டீங்க. பட் நைஸ்”,என்றவாறு கைகட்டி நிற்க,ரௌண்ட் நெக் டீஷர்டும் ஜீன்ஸுமாய் வந்திருந்தவன் அழகாய் சிரித்தவாறு அவளருகில் வந்தான்.

“ஹே வெண்பா எப்படியிருக்கீங்க. க்ளாஸ் எல்லாம் எப்படிபோகுது. வீடு வசதியா இருக்கா. ”

“அட அட என்ன அக்கறை.  எல்லாம் நேர்ல பார்த்தா தான் மெசேஜ் பண்ணா ஒரு ரிப்ளை இல்ல”, என்றவள் உதடு சுழிக்க ஒரு நொடி அந்த இதழசைவை ரசித்தவன் சட்டென பார்வையை மாற்றியபடி அங்கிருந்த பென்ஞ்சில் அமர்ந்தான்.

“ரியலி சாரி வெண்பா. அக்சுவலா ஒரு மெடிகல் கான்ப்ரன்ஸ்காக ப்ரான்ஸ் போய்ட்டேன்.

மூணுநாள் ட்ரிப்னால இந்தியா நம்பர் எடுத்துக்கல பாத்தா லாஸ்ட் மினிட்ல 10 டேஸ் எக்ஸ்டெண்ட் ஆய்டுச்சு.

மார்னிங் தான் வந்தேன் இன்னும் மொபைல் ஆன் கூட பண்ணல. மோஸ்ட்லி ஹாஸ்பிட்டல் தவிர எனக்கு யாரும் கால் பண்ண மாட்டாங்க.

ஆல்சோ அவுட் ஆப் கன்ட்ரினா கேக்கவே வேணாம்.

என் மொபைல் வெறும் டிவைஸா மட்டும்தான் இருக்கும் என் கையில. ”,என்று மென்னகைக்க வாய் பிளந்தவளாய் வந்து அவனருகில் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.

“வாவ் டாக்டரே நீங்க இவ்ளோ பெரிய ஆள்னு தெரியாம போச்சே. செம பிஸி பீனு சொல்லுங்க.

அதுக்கு நடுவுல இங்க ஹோமையும் கவனிச்சுக்குறது நிச்சயம் ரொம்ப பெரிய விஷயம். ரியலி க்ரேட். ”

“கமான். நாம வாழ்க்கைல எத்தனை உயரத்துக்கு போனாலும் எத்தனை பிஸி ஆனாலும் தாய் வீட்டை மறக்க முடியுமா.

என் வீடு இதுதான் அப்போ இதை நா பாத்துக்காம எப்படி?”

“ம்ம் கரெக்ட் தான் திவா.”, என்றவள் அமைதியாய் சிரித்தாள்.

“எப்பவும் இவ்ளோ நேரமா க்ளாஸ் எடுக்குறீங்க?”

“இல்ல திவா க்ளாஸ் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது. இந்த மழை நிக்குற மாதிரியே தெரில அதான் வெயிடிங்.

மழையில் நனைய எனக்கு பிடிக்கும் ஆனா என் ஹெல்த்க்கு பிடிக்கவே பிடிக்காது உடனே பீவர் தான்.

அதனால தான் ரிஸ்க் எடுக்காம வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ”

“ஹே என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் இல்ல. லாஸ்ட் டைமும் மழைல தான் நாம மீட் பண்ணோம். இப்பவும் மழை சூப்பர் இல்ல. ”

“ம்ம்”,என்றவனின் பார்வை அவனறியாமல் அவளையும் அவள் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்திருந்தது.

“எவ்ளோ லென்த்தா பேசினேன் ம்ம் னு ஒத்தை வார்த்தைல முடிச்சுடீங்களே.

உங்ககிட்ட பேசி எனக்கு வயிறு காலி ஆனதுதான் மிச்சம். ”,என சலித்துக் கொண்டாள்.

“ஹா ஹா உங்க அளவுக்கு இவ்ளோ ஸ்பீடா எல்லாம் பேச வாய்ப்பே கிடையாது.

வேணா உங்க பசியை போக்க ஒரு நல்ல ரெஸ்ட்டாரண்ட் போய் சாப்டலாம் ஓ. கே வா?எனக்கும் நம்ம ஊர் சாப்பாடு சாப்டாம நாக்கு செத்துப் போச்சு. என்ன சொல்றீங்க”

“ம்ம் இதுகூட நல்ல ஐடியா தான் எனக்கும் என் சமையலை சாப்ட்டு சாப்ட்டு செத்து போன என் நாக்கை போன வாரமே எங்க வீட்டு பின்னாடி அடக்கம் பண்ணிட்டேன்.

பில் நீங்க பே பண்றீங்கனா எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. ”,

என்றவளுக்கு வழக்கமான புன்னகையை உதிர்த்தவனை பார்த்து தலையில் அடித்தவாறு அவனை பின் தொடர்ந்தாள்.

இருவருமாய் அடையாரின் அந்த பிரபலமான உணவகத்திற்குச் சென்று உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

“நைஸ் அம்பியன்ஸ். அக்சுவலா நா பெருசா ரெஸ்டாரண்ட்ஸ்னு வந்ததில்ல சென்னைல.

எப்போவாவது நார்மலா நல்ல ஹோட்டல்க்கு போய் சாப்டுவேன்.

தனியா சாப்டுறது ரொம்ப கொடுமை அண்ட் போர். சோ இது என் பர்ஸ்ட் எக்ஸ்ப்ரியண்ஸ். ”

“ம்ம் உண்மைதான் வெண்பா பட் எனக்கு அது பழகிடுச்சு. ஸ்கூல ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.

காலேஜ்ல எல்லாருமே படிப்பு ஸ்டேடஸ்னு பல விஷயங்களை வச்சு தான் தங்களோட நட்பை தேடுவாங்க அதனாலேயே நா கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன்.

வேலைக்குனு வந்தப்பறம் நட்பு குடும்பம்னு பெருசா யோசிச்சதில்ல.

நா எவ்ளோ கூப்டாலும் சிந்தாம்மா வெளில வரவே மாட்டாங்க. நானும் ஒரு கட்டத்துல கூப்டுறத நிறுத்திட்டேன்.

சோ நா வீட்ல இருக்குற நேரத்தை தவிர மத்த நேரம் எல்லாமே தனியா தான் சாப்பாடு.

சோ இந்த மாதிரி ரெஸ்ட்டாரண்ட்ஸ் ப்ளசண்ட் பீல் இருக்குறதால இதைதான் ப்ரிஃபேர் பண்ணுவேன். ”

“ம்ம் திவா உண்மை தான் ஒரு வயசுக்கு மேல நட்புங்கிறது ரொம்பவே விசித்திரமானாதா மாறிடுது. குறிப்பா காலேஜ்க்கு அப்பறமே. ”

“ம்ம். ஆமா எனக்கு வேற ஆப்ஷன் இல்ல தனியா இருக்கேன் நீங்க ஏன் வசதியான வாழ்க்கை பெத்தவங்களை எல்லாம் விட்டுட்டு இங்க இருக்கீங்க. ”

“உங்க தாட் புரியுது திவா. நீங்க சொன்ன அந்த ஸ்டேடஸ் அதான் என் வாழ்க்கையையும் மாத்தின விஷயம். அப்பா அம்மா அக்கா நா இதான் எங்க குடும்பம்.

வாழ்க்கை ரொம்பவே அழகானதா தான் போய்ட்டு இருந்தது. என் ஸ்கூல் முடிச்ச டைம்ல அப்பாக்கு ஒரு டென்டர்ல  பெரிய லாபம்.

அதுக்கு அப்பறம் வரிசையா தொழில் வெற்றிகள். பணமும் அதற்கு ஏத்தமாதிரி ஏறிட்டே போக அப்பாவ எல்லாரும் முக்கிய புள்ளியா மதிக்க ஆரம்பிக்க அம்மா அப்பாவோட பழக்கவழக்கங்கள் மாற ஆரம்பிச்சது.

நீங்களே சொல்லுங்க திவா எத்தனை உயரத்துக்கு போனாலும் வாழ்க்கை ஆரம்பிச்ச இடத்தை மறக்க கூடாது தான.

அவங்க அதை உணர மறந்துட்டாங்க. அக்கா இருந்த வரை அவளோட ஷேர் பண்ணிப்பேன்.

அவளும் கல்யாணம் ஆகி போனப்பறம் அந்த வீடு வெறும் கல்லும் மண்ணுமா தான் தெரிஞ்சுதே தவிர குடும்பமா தெரில.

அதனால தான் அவங்க எவ்வளவோ எதிர்த்தும் நா என் வாழ்க்கையை பத்துக்குறேன்னு இங்க வந்துட்டேன்.

பெத்த கடமைக்கு இங்க வந்து கஷ்டபட கூடாதேனு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினாங்க.

ஆனா அதையுமே என் சம்பளத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துட்டு தான் இருக்கேன்.

இதான் என் வாழ்க்கை வரலாறு திவா.”, என்று தோள் குலுக்கிச் சிரித்தவளை பார்த்தவனுக்கு முதன்முறையாய் நட்பை தாண்டி ஒருவித உணர்வு எழுந்தது.

“எனக்கு என்ன சொல்லனு தெரில வெண்பா உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்பவே ரேர்.

சரி விடுங்க இனி இங்க உங்களுக்காக நாங்க எல்லாம் இருக்கோம். எப்போ வேணாலும் வீட்டுக்கு வாங்க. சிந்தாம்மா வீட்லயேதான் இருப்பாங்க.

எப்போ என்ன உதவி வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுங்க. ப்ரெண்ட்ஸ்.”, என்றவன் கைநீட்ட லேசாய் அதை தட்டியவள் பின் கை குலுக்கிச் சிரித்தாள்.

“ஆல்ரெடி நீங்க என் ப்ரெண்ட் ஆய்டீங்க டாக்டரே. இல்லனா இப்படி வந்து உக்காந்து பேசிட்டு இருப்பேனா. ”,எனும் போதே அவர்களுக்கான உணவு வந்துவிட இருவரும் நிறைய நிறைய பேசியபடியே உணவை உண்டு முடித்தனர்.

அவளை அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டவன் அவள் உள்ளே செல்ல காத்திருக்க இறங்கியவள் திரும்பி கண்ணாடி வழியே,

”குட் நைட் திவா. ஹட் அ குட் டைம் ரொம்ப நாளுக்கு அப்பறம் இல்ல இல்ல ரொம்ப வருஷத்துக்கு அப்பறம். பை. ”

“நிம்மதியான உறக்கமும் அழகான கனவுகளும் உனதாகட்டும். டேக் கேர்  வெண்பா”,என்றவன் புன்னகையோடு காரை கிளப்பிச் செல்ல அவன் தமிழ் அவளை அப்படியே நிறுத்தியிருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan September 27, 2026 - 4:48 pm

💞💞💞💞💞💞💞

srichitra September 27, 2026 - 5:00 pm

Very nice

suganyavel September 27, 2026 - 8:27 pm

Super💕

MalarMurugan September 29, 2026 - 8:10 am

இப்படி கூட சொல்லலாம் இரவு வணக்கத்தை 🤗🤗🤗
வெண்பா திவா 😍😍😍🤗🤗

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode