நினைவிலிருந்து மீண்டவனுக்குத் தெரியும் அந்த நொடியிலிருந்து தன் கண்ணம்மாவை கோடி மடங்கு காதலிக்க தொடங்கியிருந்தான் அவன்.

அத்தனை பெரிய குறையிருப்பதாய் கூறிய அடுத்த நொடி ஒன்றையும் யோசிக்காமல் நான் இருக்கிறேன் என்று கூறுபவளை எப்படியாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றியது.

வெண்பாவிற்கு நிச்சயமாகவே அந்த செய்தி சிறு அதிர்வை கொடுத்திருந்தாலும் வாழ்வே முடிந்துவிட்டது என்ற முடிவுக்கெல்லாம் வந்து விடவில்லை.

தன்னவனை அந்த செய்தியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுக்கு பிரதானமாய் இருந்தது.

நினைவுகளை புறந்தள்ளியவன் அனைத்தையுமாய் ஓரளவு பேக் செய்துவிட்டு சிந்தம்மாவிற்கும் தனக்குமாய் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்தான்.

அதற்குள் வெண்பாவிற்காக கஞ்சியை போட்டு வைத்தவர் உணவை முடித்து அவனோடு மருத்துவமனைக்குக் கிளம்பினார்.

இருவரும் உள்ளே நுழைந்த நேரம் வாசலையே வெறித்தப்படி வெண்பா விழித்துதான் இருந்தாள்.

“இப்போ எப்படி இருக்கு பாப்பா?”

“பரவால்ல சிந்தாம்மா உங்களை தான் ரொம்ப படுத்துறேன். சாரி. ”

“என் பிள்ளைங்களுக்கு நா பண்ணாம யாரு பண்ண போறா ஏன் இப்டியெல்லாம் பேசுற கண்ணு.

நாளைக்கு நீ மறுபடி நம்ம வீட்டுக்கு வரப் போறதே அத்தனை பலம் கொடுத்துருக்கு எனக்கு. ”

அமைதியாகவே சிரிப்பை உதிர்த்தவள் அத்தனை நேரமும் பார்வையாளனாய் மட்டுமே இருந்த திவ்யாந்தை ஓரப் பார்வை பார்த்தாள்.

மெதுவாய் வந்து அவளருகில் அமர்ந்தவன்,

“எப்படியிருக்க கண்ணம்மா. ”

“பீலிங் பெட்டர் திவா. ”

“குட் இன்னைக்கு புல்லா ரெஸ்ட் எடு நாளைக்கு இன்னுமும் நல்லா தெம்பாய்டுவ.

கஞ்சி கொண்டு வந்துருக்காங்க சிந்தாம்மா கொஞ்மா சாப்டு. ”

“இல்ல இப்போ எதுவும் வேணாம். சாப்பிட தோணல. ”

என்றவளை பார்த்தவாறே எழுந்து சென்றவன் கஞ்சியையும் ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

அவனே அவளுக்கு ஊட்டிவிட மறுப்பேதும் கூறாமல் வாங்கிக் கொண்டாள்.

அதன் பின் மீண்டும் அவள் உறங்கும் வரையுமே அந்த அறையை விட்டு நகராதவன் அவளோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அவளுக்கு புரிந்தது மேலும் தன்னை குழப்ப வேண்டாம் என ஒதுங்குகிறான்.

எது எப்படியாயினும் நாளை முல் தன் வாழ்க்கை திருமதி திவ்யாந்தாய் அந்த வீட்டில் தான் என்பதை தீர்மானித்து விட்டான் என்றே தோன்றியது.

அவள் உறங்கிய பின் சிந்தாம்மாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பியவன் தன்னவளுக்காய் வீட்டையே ஒருவழி ஆக்கினான்.

அவர்களின் அறையை ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்து என ஒருவித உற்சாகத்தோடு இருந்தான்.

அன்றைய மொத்த நாளும் எத்தனையோ அலைச்சலும் வேலைகளும் ஆனால் அதன் தாக்கமும் சோர்வும் துளியும் இன்றி அத்தனை பரப்பரப்பாய் வேலைகளைத் தொடர்ந்தான்.

அதற்கு முழு காரணமும் அவனின் கண்ணம்மா. அவளால் மட்டுமே இந்த மந்திரத்தை அவன்மீது செலுத்த முடியுமென அவனுக்குத் தெரியும்.

நினைவுகள் அதுவாய் தன் கடந்தகாலத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

அன்றைய நாளுக்குப்பின் வெண்பா தன்னவனுக்காய் இன்னும் இன்னும் தன் காதலை பொங்கி வழிய செய்து கொண்டிருந்தாள் என்றே கூற வேண்டும்.

அவன் மருத்துவ அறிக்கையை பொருட்டென கூட கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள்.

ஆனால் திவ்யாந்த் எத்தனை முயன்றும் சில நாட்களுக்கு அவனின் முகத்தில் ஒருவித தெளிவில்லாமல் தான் இருந்தது.

அதையும் போக்கி அவனை பழைய திவ்யாந்தாய் மீட்டிருந்தாள் அவனின் வெண்பா.

“திவா நாளைக்கு நாட்டியாலயா டே செலெப்ரேஷன் இருக்கு. நீங்க வருவீங்க தான?”

“கண்டிப்பா டா. நா இல்லாம உன் ப்ரோக்ராமா அதுவும் கல்யாணத்துக்கு அப்பறம் நீ கொடுக்கப் போற முதல் பெர்பார்மன்ஸ் அதை மிஸ் பண்ணுவேனா?”

மறுநாள் வெண்பா காலையிலேயே நடனப் பள்ளிக்குச் சென்றிருக்க மதியத்திற்கு மேல் மருத்துவமனைக்குச் சென்று ஒரு பைலை எடுத்து வந்தவன் அதை தன் அலமாரியில் மத்த பைல்களோடு சேர்த்து வைத்துவிட்டு கிளம்பத் தயாரானான்.

அந்த மாலையின் நாயகி வெண்பா என்றே கூற வேண்டும் அந்தளவுக்கு அவள் அலங்காரமும் ஒப்பனையும் நேர்த்தியான நடனமும் ஒருவித மாயையே தோற்று வித்திருந்தது திவ்யாந்திற்கு.

ஒவ்வொரு முறையும் அவள் பார்வை தன்னை தீண்டும் போதும் அதிலிருந்த ஏதோ ஒன்று மீண்டும் மீண்டுமாய் அவள்மீது காதல் கொள்ளச் செய்து கொண்டேயிருந்தது நிச்சயமாய்.

அன்று இரவு திவாவின் கையணைப்பில் இருந்தவள் அவனிடம்,

“திவா ஆனாலும் நீங்க கொஞ்சமே கொஞ்சம் ஸ்மார்டா இருக்கீங்களோ?”

“என்ன??”,சட்டென அவன் கேட்ட விதத்தில் சிரித்தவள்

“எதுக்கு இப்படி ஒரு ஷாக், இல்ல இன்னைக்கு ப்ரோக்ராம்ல ஜுனியர் டீச்சர்ஸ் புதுசா ஜாயின் பண்ணிருகாங்க உங்களைபத்தி அப்படி ஒரு கமெண்ட் என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே முடில. ”

“என்ன சைட் அடிக்குறத பாத்தா உனக்கு சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடிலயா?”,என செல்லமாக அவள் கன்னம் கிள்ள அவளோ இன்னும் சிரித்தவாறே,

“ஐயோ திவா அப்படியில்ல. அவங்க பேசினதை கேட்டு சிரிப்பு வந்துச்சுனு சொன்னேன்.

அப்பறம் தான் பார்த்தா என் புருஷன் கொஞ்சமே கொஞ்சம் அழகோனு தோணிச்சு. ”

“அதனால தான் ஆடும்போது அப்பப்போ என்னை பார்த்துட்டே இருந்தியா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல என் திவா நா பாப்பேன் எப்போ வேணாலும் எப்படி வேணாலும்.

அதே தான் உங்களுக்கும் என்னை தவிர யாரையாவது பார்த்தீங்க கொன்னுருவேன்.”, என்றபடி மீசையை திருகிச் சிரித்தாள்.

“ம்ம் பார்க்க வேண்டிய காலத்துலயே நானெல்லாம் அவ்ளோ குட்பாய் இப்போ கல்யாணத்துக்கு அப்பறமா அதெல்லாம் பண்ண போறேன்.

சாகுறவர எனக்கே எனக்கு மட்டுமான என் கண்ணம்மா போதும்”,என்று தன்னவளோடு ஒன்றிக் கொண்டான்.

அதே நேரம் அங்கு துபாயில், ”வாவ் மிஸ்டர் ஆனந்த் இது உங்க பொண்ணா இதுவரை நா பாத்ததேயில்லையே?”

“அவ இந்தியால இருக்கா மிஸ்டர் கிஷோர் டான்ஸ் டியூட்டரா இருக்கா. ”

“தட்ஸ் இன்ட்ரெஸ்டிங். ஆனந்த் உங்ககிட்ட நேரடியாவே கேக்குறேன். ஐ லவ் திஸ் கேர்ள்.

எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமா?

ஒரு வேளை அது உறுதியாகுற பட்சத்துல இப்போ நம்ம ஸைன் பண்ணிருக்குற கான்ட்ராக்டை மொத்தமா உங்களுக்கே கொடுத்துடுறேன். இட்ஸ் அ டீல்.

ஒரு பிஸினஸ் மேனா என்னால இப்படி தான் கேக்க முடியும் பட் ட்ரஸ்ட் மீ இதுவரை எந்த பொண்ணையும் நா நிமிர்ந்து பார்த்தகூட இல்ல.

என் வசதியின் உயரம் உங்களுக்கு தெரியும் ஆனா அதை தப்பான வழியில் நா எப்பவும் யூஸ் பண்ண நினைச்சதில்ல.

சோ உங்க முடிவை நீங்க யோசிச்சு உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்லுங்க. ”

“அது வந்து சார். ”,என்றவரை கைப்பற்றி நிறுத்திய சுலோச்சனா அவனிடம்,

“மிஸ்டர் கிஷோர் நாங்க பேசிட்டு சீக்கிரமே நல்ல முடிவா சொல்றோம்”, என்று புன்னகையோடு வழியனுப்பி வைத்தார்.

“என்ன சுலோ வெண்பாக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லிற வேண்டியதுதான. ஏன் இப்படி சொன்ன?”

“என்னங்க பேசுறீங்க. இந்த ப்ராஜெக்ட் மதிப்பு தெரியும் தான இந்திய பணமதிப்பு படி நூறுகோடி.

அதுவும் மொத்தம்மா கிடைச்சா கொஞ்சமாவது யோசிங்க ஆனந்த் நம்ம மதிப்பு எங்கேயோ போய்டும்.

அதுவும் கிஷோரோட மாமனார் மாமியார்னா நம்ம ஸ்டேடஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சீங்களா?”

“எல்லாம் சரிதான் ஆனாலும். ”

“ஆனாலும் என்ன ஆனாலும். அவ ஏதோ சின்ன புள்ளை தனமா விளையாட்டு கல்யாணம் பண்ணிகிட்டா அதெல்லாம் பெரிய விஷயமா.

ஒரு வருஷத்துக்கும் மேல இருக்குமே முதல்ல அங்க நிலைமையை விசாரிப்போம். நா அடுத்த மாசமே இந்தியா போறேன்.

அவ என் பொண்ணு நா சொன்னா கேப்பா. டிவோர்ஸ் வாங்கின கையோட அவளை இங்க கூட்டிட்டு வரேன்.

இதுக்குமேல பேச ஒண்ணுமில்ல ஆனந்த் இந்த ப்ரச்னையை நா பாத்துக்குறேன். கிஷோரை சமாளிக்குறது மட்டும் உங்க வேலை. காட் இட். ”

இரண்டு நாட்கள் கழித்து வெண்பாவிற்கு போனில் அழைத்தார் சுலோச்சனா.

“ஹலோ அம்மா!!!”

“வெண்பா எப்படிமா இருக்க?”

தன் செவிகளை தானே நம்பாமல் விழிவிரிய கண்களில் நீர்கோர்க்க அமர்ந்திருந்தாள் வெண்பா.

“நா நல்லாயிருக்கேன் மா நீ எப்படியிருக்க அப்பா எப்படியிருக்காரு?”

“அவருக்கென்ன நல்லாயிருக்காரு எனக்கு தான். ”

“ம்மா என்னாச்சு நல்லாயிருக்க தான. ”

“அப்படி சொல்லனும்னு தான் எனக்கும் ஆசை டா. ஆனா நிஜமா நல்லாயில்லை டா. என்க்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு வெண்பா மா. ”

“என்னமா என்னவோ போல பேசுற!?”

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் டா வெண்பா. ரொம்பவே கஷ்டப்பட்டு தான் பொழைக்க வச்சாங்க. ”

“ம்மாமா என்ன சொல்ற நீ ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல. இப்போ எப்படிமா இருக்க. மாத்திரையெல்லாம் ஒழுங்கா போடுறியா?”

“இப்போ பரவால்ல வெண்பா. ஆனா உன்னை பார்க்கணும் போல இருக்கு அம்மாவ பார்க்க வருவியா டா. ”

“ம்மாமா அது திவாகிட்ட கேட்டு சொல்றேன்ம்மா. கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமே வரோம்.”, என்றவளின் பதிலைக் கேட்டு மறுபுறம் பல்லை கடித்தவர் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டார்.

“ஓ. ”

“ம்மா தப்பா எடுத்துக்காத அவர்கிட்ட கேக்காம நா சொல்ல முடியாதுல நீ புரிஞ்சுக்கோயேன். ”

“சரிம்மா என்ன இருந்தாலும் உனக்கு உன் புருஷன் முக்கியம். சரி விடு நா வேணா உன்னை பார்க்க வரலாமா வெண்பா. ”

“என்னம்மா இப்படி கேக்குற நீ எப்போ வேணா வரலாம். ஆனா உன் ஹெல்த். ”

“அதெல்லாம் ஒண்ணும் ப்ரச்னையில்ல வெண்பா. எனக்கும் இட மாறுதல் தேவையோனு தோணுது.

சரி நா அப்பாகிட்ட பேசி டிக்கெட் போட்டுட்டு சொல்றேன் மா. வச்சுட்றேன். ”

போனை வைத்தவளின் மனம் ஆனந்த களிப்பில் பொங்கியது.

என்னதான் இருந்தாலும் பெற்றவளின் குரலும் அரவணைப்பும் என்றுமே தனி சுகமாயிற்றே.

மாலை திவ்யாந்திடம் அனைத்தையும் கூறியவள் குழந்தையாய் ஆர்பரித்தாள்.

“திவா ஐ அம் சோ சோ ஹேப்பி. அம்மா என்னை பார்க்க வரேன்னு சொன்னதும் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா. ”

“இவ்ளோ பாசத்தை வச்சுகிட்டு இத்தனை நாள் மனசுகுள்ளேயே வச்சுட்டு இருந்துருக்க ஹம்ம்.

எனக்கு உன் கண்ணை பாத்தாலே தெரியும் பல நேரத்துல நீ அவங்களை தேடுறனு.

இருந்தும் அதை கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனுதான் அமைதியாவே இருப்பேன் கண்ணம்மா.

இப்போதான் உன் சிரிப்புக்கு இன்னும் கொஞ்சம் ஜீவன் சேர்ந்த மாதிரி இருக்கு. ”

“திவா. அது. ”

“கண்ணம்மா உன் இமை அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும் அதுல பெரிய கர்வமே இருக்கு எனக்கு அதுக்காக தான் சொன்னனே தவிர தப்பா எதுவும் சொல்லல டா. ”

“தெரியும் டா திவா. சும்மா.”, என்றவள் பழிப்புகாட்டி ஓடி விட அத்தனை உற்சாகமாய் அவளைப் பார்த்தவனுக்கு மனம் மகிழ்ந்து தான் போனது.

அடூத்து வந்த நாட்கள் அத்தனையுமே ஒருவித உற்சாகத்தோடே நகர்ந்தது வெண்பாவிற்கு.

வார இறுதியில் அவளை டின்னருக்காக வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.

“அப்பறம் அம்மாகிட்ட பேசினியா கண்ணம்மா?”

“ம்ம் திவா. நானே கால் பண்ணேன் இங்க வர்ற வேலையெல்லாம் முடிக்குறதுல பிசியா இருக்காங்களாம் அவங்களே கூப்டுறேன்னு சொல்லிட்டாங்க. ”

“ஓ. சரி. அப்பறம் கண்ணம்மா. ஒரு விஷயம் சொல்லணும். ”

“ஏன் திவா இவ்ளோ தயக்கம்?என்னனு சொல்லுங்க. ”

“பார்சூனேட்லி நம்மளோட இந்த ஒன் இயர் நா ஓரளவு ரிலாக்ஸ்டானா லைஃப் தான் நமக்கு போச்சு.

அதாவது என்ன சொல்ல வரேன்னா ஏற்கனவே சொல்லிருந்த மாதிரி என் வேலை எப்போ எப்படியிருக்கும்னு தெரியாது.

அடுத்த மாசத்துல இருந்து மெடிக்கல் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு பொரொபஸரா போக வேண்டியது இருக்கு ககண்ணம்மா. ”

“வாவ் இது நல்ல விஷயம் தான திவா இதுக்கு ஏன் இவ்ளோ யோசிச்சீங்க. ”

“இல்லடா அது என்னனா மார்னிங் டூ நூன் காலேஜ் அதுக்கப்பறம் வழக்கமான என் டியூட்டி.

சோ கொஞ்சநாளுக்கு இட் வில் பி ஹெக்டிக். எனக்கு இது பழகின விஷயம் தான்.

ஆனா உனக்கு ரொம்பவே புதுசா இருக்கும். எப்போ வருவேன் எப்போ கிளம்புவேன்னு சொல்ல முடியாது.

எல்லாம் ஆல்ரெடி சொல்லிட்டேன் தான் இருந்தாலும் இப்போ ப்ராக்டிக்கலா வரும்போது எனக்கே கொஞ்சம் ஏதுக்க கஷ்டமா இருக்கு. ”

“திவா. என்ன இது குழந்தை மாதிரி. நீங்க எப்போ எங்கயிருந்தாலும் என் திவாங்கிறது மாறிட போகுதா.

உங்க ப்ரோபஷன் மேல நீங்க வச்சுருக்குற லவ் அண்ட் பேஷன் எனக்கு நல்லாவே தெரியும்.

அப்படியிருக்கும் போது இதெல்லாம் பொறுத்துக்க மாட்டேனா.

நீங்க ஒழுங்கா உங்க வேலைல கான்சென்ட்ரேட் பண்ணுங்க நானும் எப்படியும் அம்மா வந்தா பிஸி ஆயிடுவேன்.

சோ உங்க வழிக்கு வரமாட்டேன்.. ”, என்று விளையாட்டாய் முடித்தவளைப் பார்த்தவனுக்கு ஒருவித நிம்மதி பரவியிருந்தது.

“தேங்க் யூ கண்ணம்மா. ”

“இதெல்லாம் பத்தாது இன்னொரு ஐஸ்கீரீம் வேணும். ”, என்று அனைத்தையும் இயல்பாகவே எடுத்துக் கொண்டவளையும் ஒருவித சூறாவளி புரட்டிப் போடத்தான் போகிறது என்பதை அந்நேரம் அறிந்திருக்கவில்லையே.

அடுத்த வந்த நாட்கள் அனைத்துமே வெண்பாவுக்கு சற்று கொடுமையாகத் தான் இருந்தது.

காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிச் செல்பவன் இரவு பத்து பதினோரு மணிக்கு தான் வீடு திரும்பினான்.

சில நேரங்களில் மதியத்திற்குப் பின் சிறிது நேரம் வீட்டிற்கு வந்து செல்வான் அப்போதும் வெண்பா நடனப்பள்ளிக்குச் சென்று விடுவதால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

இரவு வந்தபின் தன் அயர்வை மறைத்து அவன் அவளோடு பேச நினைத்தாலும் வெண்பாவிற்கு பாவமாய் இருக்கும்.

முகமே அத்தனை களைப்பையும் அப்பட்டமாய் காட்டும். சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு உறங்கி விடுவார்கள்.

ஞாயிறு ஒரு நாள் ட்டுமே விடுமுறை என்றானது. அன்றும் வீட்டு வேலைகள் தேவையான பொருட்கள் வாங்குதல் என பொழுது கழிந்து விட இருவருக்குமான நேரம் என்ற ஒன்றே இல்லாமல் போனது.

எதுவுமே கண்கூடாய் நடக்கும் போதுதான் அதன் தாக்கம் அதிகமாய் நமை வாட்டி எடுக்கும்.

வெண்பாவின் நிலையும் அதுவாகவே இருந்தது. செவி வழி கேட்கும்போது சாதாரணமாய் இருந்த விஷயம் இப்போது பூதாகரமாய் இருந்தது.

நம் மனமே நமக்கான எதிரி பல நேரங்களில். அப்படிதான் வெண்பாவும் ஏதேதோ எண்ண ஆரம்பித்திருந்தாள்.

திவா மாறி விட்டானோ தங்கள் காதலில் சற்றே விரிசல் வந்து விட்தோ. வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறானோ இப்படியாய் இன்னும் என்னென்னவோ.

அனைத்திற்கும் மகுடமாய் அவளது குழம்பிய குட்டையான மனதில் தனக்கு சாதாகமாக மீன் பிடிக்க சில வாரங்களில் அவள் வீடு  வந்திறங்கினார் சுலோச்சனா.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan October 2, 2026 - 5:13 pm

💞💞💞💞💞💞

srichitra October 3, 2026 - 11:04 am

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode