சிநேகமாய் சிரித்தவள் அவன் முகம் நோக்க அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“நேத்து உங்க ப்ரோக்ராம்க்கு வந்திருந்தேன். சச் அ ப்ரிலியண்ட் பெர்பார்மன்ஸ். அப்போ தான் உங்க நேம் தெரிஞ்சுது. ”

“ஓ. தேங்க் யூ சோ மச். நீங்களும் இங்க டியூட்டரா இருக்கீங்களா?”

“நோ வே இவ்ளோ அழகான கலையெல்லாம் எல்லாருக்கும் வந்திடுமா என்ன பட் கண்டிப்பா ஒரு நல்ல ரசிகன்.

ஐ அம் அ டாக்டர் இங்க அடையார்ல தட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல தான் டீயூட்டி பாத்துட்டு இருக்கேன். ”

“தேட்ஸ் சோ நைஸ். டாக்டரா இருந்து டான்ஸ்ல ஆர்வம் இருக்குறது ரொம்பவே பெரிய விஷயம் தான். ”,என்றவள் புன்னகைத்தாள்.

“அக்சுவலா ஒரு சின்ன ஆப்ளிகேஷனோட தான் வந்துருக்கேன். இஃப் யூ டோண்ட் மைண்ட் ஒரு பைவ் மினிட்ஸ் பேசலாமா?”

அவன் பார்வையின் கண்ணியம் கொடுத்த நம்பிக்கையில் சம்மதமாய் தலையசைத்தவள் அங்கிருந்த கேன்டீனிற்கு அழைத்துச் சென்றாள்.

இருவருக்குமாய் காபி வாங்கியவாறு அமர்ந்தவன் அதை சுவைத்தவாறே பேச்சை தொடங்கினான்.

“நா வளர்ந்ததெல்லாம் ஒரு ஆர்பனேஜ்ல தான் சோ இப்பவும் அங்க பசங்களுக்கு எஜுகேஷன் வைஸ் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். லைக் டியுஷன் டீச்சர்ஸ் அந்த மாதிரி.

சோ இப்போ எனக்கு தெரிஞ்சு ஒரு அஞ்சு இல்ல ஆறு பசங்க டான்ஸ்ல இன்ட்ரஸ்டட்டா இருக்காங்க. அவங்களுக்கு நீங்க பரத நாட்டியம் வந்து கத்து கொடுக்க முடியுமா.

அத்தனையும் பெண் குழந்தைங்க தான் ஒரு வேளை இதுல அவங்க ப்யூச்சர் ஆரம்பிச்சா கூட நல்ல விஷயம் தான.

அதான் நீங்க அங்க வந்து சொல்லி கொடுக்க முடியுமானு கேட்க வந்தேன். ஸ்லரி லா ப்ரச்சனை இல்லை ரிசனபிளா கண்டிப்பா என்னால கொடுக்க முடியும். ”

“இது உண்மையாவே ரொம்ப நல்ல விஷயம் மிஸ்டர் திவ்யாந்த். பணம் எல்லாம் விஷயமே இல்ல.

கண்டிப்பா இந்த இனிஷியேட்டிவ் ரொம்ப நல்ல விஷயம். கண்டிப்பா நா வந்து சொல்லிதரேன். ஆர்பனேஜ் எந்த லொக்கேஷன்ல இருக்கு?”

“தேங்க் யூ சோ மச் கேட்டவுடனே சம்மதிச்சதுக்கு. ஹோம் இங்க பெசண்ட் நகர்ல தான். பட் ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல டிரான்ஸ்போர்டேஷன் அரேண்ஜ் பண்ணிக்கலாம். ”

“ஐயோ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அக்சுவலா நா ஹாஸ்டல் ஷிப்ட் பண்ற ப்ளான்ல இருக்கேன்.

அதனால தான் லொக்கேஷன் தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி பாத்துக்கலாமேனு கேட்டேன். ”

“ஓ. பேரண்ட்ஸ் இங்க இல்லையா நேட்டிவ் எங்க உங்களுக்கு?”

“அப்பாஅம்மாக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் பக்கத்துல பட் செட்டில் ஆனது துபாய்ல.

எனக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மேல ஒரு தனி க்ரேஸ் உண்டு அதனால காலேஜ் முடிச்சவுடனே அப்பாகிட்ட அடம்பிடிச்சு இங்க வந்துட்டேன்.

டான்ஸ் தான் என் பேஷன். இதான் இப்போ இங்க இப்படி.”, எனத் தோள் குலுக்கினாள்.

“துபாய் பொண்ணா நீங்க சத்தியமா நம்ப முடில. பட் நல்ல சாய்ஸ் ஆப் ப்ரொபஷன். அண்ட் ஹாஸ்டலா தான் பாக்குறீங்களா இல்ல பிஜி மாதிரி இருந்தா ஓ. கே வா?”

“ம்ம் யா அப்படி இருந்தாலும் ஓ. கே தான். ”

“நா முன்னாடி ஸ்டே பண்ணிருந்த வீட்டை இப்போ பிஜி யா தான் நடத்திட்டு வராரு ஹவுஸ் ஓனர் ஹோம்க்கு ரொம்ப பக்கமும் கூட.

வேணும்னா இந்த வீக்கெண்ட் போய் பாருங்க. பிடிச்சா சொல்லுங்க நா ஓனர்கிட்ட பேசுறேன். இந்தாங்க என்னோட கார்ட் அண்ட் அந்த வீட்டு அட்ரெஸ். . ”

“தேங்க் யூ சோ மச் திவ்யாந்த் நா பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்…

சரி டைம் ஆச்சு நா கிளம்புறேன் பாக்கலாம்.”, என்றவளோடு கிளம்பிச் சென்றவன் புன்னகைத்து விடைப் பெற்றான்.

தன் இருசக்கர வாகனத்தை அடைந்தவளுக்கு நினைவுகள் இதழோர இனிமையைத் தர அப்படியே வண்டியை நகர்த்தி கடற்கரை நோக்கி பயணித்தாள்.

சற்று நேரம் கடற்கரையில் தனிமையை ரசித்தவள் நேரமாவதை உணர்ந்து கிளம்பி வீட்டிற்குச் செல்ல சிந்தாமணி வாசலிலேயே காத்திருந்தார்.

“என்ன பாப்பா இது லேட் ஆகும்னா ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்ல மாட்டியா?”

“சாரி சிந்தாம்மா. நேரம் போனதே தெரியல. பீச்க்கு போனாலே இப்படிதான் ஆகுது”

“சரி தான். வாம்மா வந்து சாப்பிடு எல்லாம் எடுத்து வைக்குறேன். ”

இரவு உணவை உண்ண அமர்ந்தவள் அமைதியாய் சாப்பிட மனம் பொறுக்காமல் அவரே வாய் திறந்தார்.

“தம்பி உன்னை விசாரிச்சான் பாப்பா. ”

“ம்ம். உங்க டாக்டர் எப்படி இருக்காரு?”

“எப்படி நல்லாயிருப்பான் நீ இங்க இருக்கும் போது. ஏன் இப்படி இரண்டு பேரும் அடம் பிடிக்குறீங்க.

அதான் இப்போ எல்லாமே சரி ஆய்டுச்சுல. நீயாவது போய் பேசலாம் தான?”

“ம்ம் எல்லாம் சரி ஆய்டுச்சானு தெரில சிந்தாம்மா. எங்க காதல் எங்க ஈகோ எங்க கோபம் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்துடுச்சானு தெரில.

ஏதோ ஒரு தயக்கம் பேசுறதுக்கு. ரொம்ப படுத்தியாச்சு அவரை.  அதை அத்தனை சீக்கிரம் மறக்க முடில.

போகட்டும். காலம் பதில் சொல்லும் அத்தனைக்கும்.”, என்றவள் எழுந்து சென்று விட்டாள்.

அங்கு தன் வீட்டிற்கு வந்த திவ்யாந்த் கிச்சனில் பார்வையிட பத்து நாளைக்கு வேண்டிய தொக்கு பொடி என ஓரளவு செய்து வைத்து சென்றிருந்தார் சிந்தாமணி அம்மா.

முகத்தில் புன்னைகை அரும்ப மாவை எடூத்து தோசை வார்த்து உண்ண ஆரம்பித்தவனுக்கு வெண்பா முதன் முதலாய் இங்கு வந்தது நினைவிற்கு வந்தது.

அவனிடம் கூறியபடி அந்த வார இறுதியில் மாலை வேளையில் பெசண்ட் நகரில் இருந்த அந்த வீட்டிற்குச் சென்றாள் வெண்பா.

அழகிய தனி வீடாய் முன் பகுதியில் சிறிய தோட்டம் போன்ற அமைப்போடு நன்றாய் இருந்தது.

உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்தச் சென்ற நேரம் மின்சாரத்தடை ஏற்பட மொத்தமாய் இருட்டி விட்டிருந்தது.

அப்போது தான் கதவை தடவிப் பார்த்தவளுக்கு அது வெளியே பூட்டியிருப்பது புரிந்தது.

என்ன செய்வதென புரியாமல் கிளம்ப எத்தனித்த நேரம் அடைமழை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தது.

வரும் போதே சற்று இருட்டிக் கொண்டு இருந்ததுதான் சரி சென்னை மேகத்தை அத்தனை எளிதில் நம்ப வேண்டாம் என தைரியமாய் கிளம்பி வந்தாள்.

இப்போது காதை கிழிக்கும் காற்றோடு இந்த மழையும் இருட்டும் சற்றே பயத்தை கொடுத்திருந்தது அவளுக்கு.

மொத்தமாய் குடியிருப்பு பகுதியாய் இருக்க சட்டென ஆட்டோ கூட கிடைக்குமென தோன்றவில்லை.

என்ன செய்வதென புரியாமல் விழித்தவள் சட்டென நினைவு வந்தவளாய் மொபைல் வெளிச்த்தில் பைக்குள் இருந்து அவன் கொடுத்த கார்டை எடுத்து திவ்யாந்த் நம்பருக்கு அழைத்தாள்.

அழைப்பு நிற்கப் போகும் நேரம் ஏற்றவன் ,”ஹலோ திவ்யாந்த் ஹியர்”

“ஹலோ டாக்டர் ஐ அம் வெண்பா. நாட்டியாலயா டான்ஸ் டியூட்டர். ”

“ஹே ஹாய் சொல்லுங்க. வீட்டை பாத்துட்டு வந்தீங்களா?”

“அக்சுவலா அங்க தான் இருக்கேன். நல்ல மழை பவர் கட் வேற அதான் என்ன பண்ணணு தெரில.

இங்க நய்பர்ஸ் யாராவது உங்களுக்கு தெரியுமா?மழை நிக்குற வர ஸ்டே பண்ணிட்டு கிளம்பிடுவேன். ”

“ஓ. நோ. சரி ஒரு 15 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. ஐ வில் பி தேர். டோண்ட் பி பேனிக் ஓ. கே. நா கிளம்பிட்டேன். ”

அவள் தைரியமாய் பேச நினைத்தாலும் அதையும் மீறிய பயம் சற்றே தெரிந்ததுதான் அவனுக்கு. அதனாலேயே அவளை மேலும் பேச விடாமல் கிளம்பியிருந்தான்.

கூறியபடியே அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டு வாசலை அடைந்தவன் டார்ச் உதவியோடு அவளைத் தேட போர்டிகோவில் ஓர் ஓரமாய் அமர்ந்திருந்தாள்.

“சாரி உங்களை தொந்தரவு பண்ணிட்டேன். ”

“தட்ஸ் ஓ. கே மிஸ் வெண்பா. நல்ல வேளை எனக்கு கால் பண்ணீங்களே சரி முதல்ல வாங்க எங்க வீட்டுக்கு இங்க பக்கத்துல தான். ”

“இல்ல பரவால்ல. என்னை இங்க மெயின் ரோடுல விட்டீங்கனா போதும். ”

“கமான் மிஸ் வெண்பா. ஆல்ரெடி ரொம்ப நேரம் குளிர்ல இருக்கீங்க வந்து ஒரு காபி சாப்பிட்டு கிளம்புங்க வாங்க. ”,என்று காரை நோக்கிச் சென்றான்.

வீட்டை அடையும் வரை ஒன்றும் பேசாமலே வந்தாள். உள்ளே நுழைந்தவன்,

“வாங்க உள்ளே வாங்க. சிந்தாம்மா. அவங்க வந்துட்டாங்க. ”,என குரல் கொடுக்க சிந்தாமணி வெளியே வந்தார்.

“வாங்கம்மா. வாங்க. ”

“மேக் யுவர் செல்ப் கம்பர்டபுள் வெண்பா. இதோ வந்துட்றேன். ”

சோபாவில் அமர்ந்தவளுக்கு சூடாய் காபி கலந்து கொடுத்தார் சிந்தாமணி. புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள் மெதுவாய் பருக ஆரம்பித்தாள்.

“அங்க இருந்த பொண்ணு மதியானம் தான் அவ சொந்தகாரங்க வீட்டுக்கு போய்ருக்கா போல.

நீங்க எப்போ வரீங்கனு தெரியாததால அவகிட்ட முன்கூட்டியே சொல்லி வைக்கல போல இருக்கும்மா. ”

“என்னவிட பெரியவங்க நீங்க ஏன் வாங்க போங்கனு கூப்டுறீங்க. நீ வானே சொல்லுங்க பரவால்ல. ”

ஏனோ அவளை பார்த்ததும் பிடித்துவிட்டது அவருக்கு பதிலுக்கு சம்மதமாய் தலையசைத்தவர் நீ டீவி பாத்துட்டு இரும்மா. பத்தே நிமிஷம் டின்னரே ரெடி ஆய்டும். ”

“ஐயோ அதெல்லாம் வேணாம்மா. நா இப்போ கிளம்பிடுறேன். ”

“அட அதெல்லாம் முடியாது முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போறதா அதுவும் இந்த கொட்டுற மழைல. பேசாம உக்காரும்மா. ”

மறுக்கத் தோன்றாமல் டீவீயில் கவனத்தை பதிக்க எண்ணியவள் முடியாமல் நேரத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அந்த நேரம் அவளருகில் வந்தவன் எதிர் சோபாவில் அமர்ந்தான்.

“ரிலாக்ஸ் வெண்பா. மழை கொஞ்சம் நிக்கட்டும் நானே உங்களை ட்ராப் பண்றேன் கவலை படாதீங்க. ”

“அது அகெயின் எதுக்கு உங்களுக்கு சிரமம் பரவால்ல.”

“நோ பார்மாலிடீஸ் ப்ளீஸ். எங்க பசங்களுக்கு மிஸ் ஆகப் போறீங்க உங்களுக்கு இதுகூட செய்யலனா எப்படி?அதெல்லாம் ஒரு ப்ரச்சனையும் இல்ல. ”

லேசாய் புன்னகைத்தவளிடம், ”அவங்க சிந்தாமணி அம்மா. நா வளர்ந்த ஹோம்ல தான் வேலை பாத்துட்டு இருந்தாங்க.

எனக்கு அவங்க தான் எல்லாமே அவங்களுக்கும் அப்படிதான்.

சோ நா வெளில வந்தப்போ அவங்களையும் அழைச்சுட்டு வந்துட்டேன். 5-6 வருஷமாச்சு அப்படியே போய்ட்டு இருக்கு. ”

“ரொம்ப ஆச்சரியமா இருக்கு உங்க பாண்டிங் கேக்குறப்போ இதெல்லாம் அமையுறது ரொம்ப ரேர் தெரியுமா.

நா இங்க சென்னை வந்து ரெண்டு வருஷம் ஆகுது. ப்ரெண்ட்ஸ் பெருசா யாரும் இன்னும் செட் ஆகலை.

ரூம் மேட்ஸ் அவ்ளோ தான். மத்தபடி க்ளோஸ் ப்ரெண்ட்டுனு யாரும் இல்ல.

அதனாலயே அப்பப்போ ஹாஸ்டல் மாத்திட்டே இருப்பேன். பலதரப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த பலதரப்பட்ட மனிதர்கள் சந்திக்குறதுல ரொம்பவே ஹேப்பியா இருக்கும்.

தமிழ்நாடுக்கு போறேன்னு சொன்னவுடனேயே நா சென்னை தான்னு முடிவு பண்ணிட்டேன்.

நிறைய கல்ச்சர் நிறைய மக்கள் இல்லையா. பல முகம் கொண்ட சிங்காரச் சென்னை இல்லையா டாக்டர். ”,என அழகாய் புன்னகைத்தாள்.

“ம்ம் உண்மை தான் மிஸ் வெண்பா. ”

“நாம கூட ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம்னு தான் நினைக்குறேன் அப்புறமும் ஏன் டாக்டர் இந்த மிஸ் வெண்பாவ விடமாட்றீங்க. வெண்பானே கூப்பிடுங்க. ”

“ம்ம் அப்போ நீங்களும் திவ்யாந்த்னே கூப்பிடுங்க ஆர் கால் மீ திவா. ப்ரெண்ட்ஸ் அப்படிதான் கூப்பிடுவாங்க. ”

அதற்குள் இரவு உணவிற்காக அழைக்க வந்த சிந்தாமணி அம்மாவிற்கு அவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்ததில் ஏனோ இனம்புரியா சிறு மகிழ்ச்சி.

இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அழைத்துச் சென்று உணவு பரிமாறினார்.

அதன்பின் மழை சிறிதே வெறித்திருக்க திவ்யாந்த் அவளை ட்ராப் செய்வதற்காக கிளம்பினான்.

வெண்பா சிந்தாமணி அம்மாவிடம் விடைபெற்று காரில் ஏறிக் கொண்டாள்.

முதன்முறையாய் ஒரு பெண்ணுடனான தனிமை பயணம் மனம் ஏதோ போன்ற ஒரு அழகு நிலையிலிருக்க வெண்பாவுமே கிட்டதட்ட அதே நிலையில் தான் இருந்தாள்.

அதனாலேயோ என்னவோ இருவருமே சில நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை.

அதன்பின் வெண்பாவே பேச்சை ஆரம்பித்தாள், ”என்ன டாக்ட..ஓ சாரி திவா ரொம்ப அமைதியாவே வர்றீங்க. ”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல பேஸிக்கலி நா கொஞ்சம் சைலண்ட் தான். அப்பறம் இந்த ப்ரொஃபஷன் வந்தப்பறம் இன்னுமே ரொம்ப பேச்சு குறைஞ்சுடுச்சு. ”

“ஓ அப்போ எனக்கு சுத்த ஆப்போசிட் டைப் நீங்க. ”

“ஹா நீங்களே பார்க்க சைலண்டாதான் தெரிஞ்சீங்க. இல்லையா அப்போ?”

“பர்ஸ்ட் டைம் மீட் பண்றவங்ககிட்ட கொஞ்சம் அப்படிதான் பட் கொஞ்சம் பழகிட்டா வாயை கொஞ்சம் மூடுறியா ப்ளீஸ் அப்படிங்குற நிலைமைக்கு போய்டுவேன். ”

“ஓ நோ இது தெரியாம மாட்டிக்கிட்டேன் போலேயே.”, என அவன் சீரியசாய் கூற அதிர்ச்சியாய் போலிப் பார்வை பார்த்தவள்,

”நீங்க அமைதியா சரிதான் நம்ப வச்சுட்டீங்க. ”,என்று சிரித்தாள்.

அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட விடைபெறுவதற்கான தலையசைப்போடு கீழேயிறங்கியவள் கார் விண்டோ வழியாய் அவனைப் பார்த்து,

”தேங்க் யூ சோ மச் பார் யுவர் ஹெல்ப் திவா. நெக்ஸ்ட் வீக்ல நா அங்க ஷிப்ட் ஆகுற மாதிரி பாத்துக்குறேன் அண்ட் ஒண்ணாம் தேதில இருந்து கிளாஸ் ஆரம்பிச்சுரலாம். ஓகே தான?”

“பட் நீங்க இன்னும் வீட்டை பாக்கலையே?”

“இல்ல தேவையில்ல அங்க அம்பியன்ஸே எனக்கு பிடிச்சுருக்கு சோ நா ஓனர்ட்ட பேசிட்டு உங்ககிட்ட சொல்றேன். பை. ”

“ஷுவர். டேக் கேர் வெண்பா. பை. ”

உணவை முடித்தவனுக்கு பழைய நினைவுகளில் வயிறோடு சேர்த்து மனமும் நிறைந்ததாய் தோன்றியது. இடவலமாய் தலையசைத்து சிரித்தவாறே எழுந்து சென்றான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan September 27, 2026 - 8:42 am

💞💞💞💞💞💞💞

srichitra September 27, 2026 - 9:39 am

Nice

suganyavel September 27, 2026 - 7:38 pm

Nice👍

MalarMurugan September 28, 2026 - 8:16 am

Ohh அப்போ இவ தான் காரணமா 🤔🤔🤔
ஆனால் patchup பத்தி இன்னும் முடிவு எடுக்கல போல
அருமை 😍😍😍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode