குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

மு.வ விளக்க உரை: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

மனீஷ் உச்சகட்ட கோபத்தில் தனதறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். எத்தனை முயன்றும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

மேகன் அழைப்பைத் துண்டித்ததும் அவனுக்கு வேறொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அதில் அவனது பினாமி பெயரில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்று சட்டத்துக்கு புறம்பாக சரியான ஆவணங்கள் இன்றி இயங்கி வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் எப்படியோ மீடியாவிற்கு கசிந்து விட்டதாகவும் தெரிவித்ததில் தனது கைப்பேசியை தூக்கி எரிந்திருந்தான்.

கோபமாய் தனது மேனஜரிடம் மேகனை அழைக்கச் சொல்ல மறுபுறம் அழைப்பு வெகு நிதானமாய் ஏற்கப்பட்டது.

“சொல்லுங்க மனீஷ் ஜி. நியூஸ் மொத்தம் ஏதோ ஒரு ஃபேக்ட்ரி தான் இன்னைக்கு டாப்பிக் போலேயே?”

“தேவையில்லாத வேலை பண்ற மேகன்..”

“இதை ஆரம்பிச்சது நான் இல்லையே..”, என்றவன் பற்களைக் கடித்து டேபிளை ஓங்கித் தட்டியிருந்தான்.

“இங்கே பார் இன்னொரு தடவை என்னைப் பத்தின விஷயத்தில் நீ மூக்கை நுழைச்சால் இப்போ வெறும் ஃபேக்ட்ரி மட்டும் தான் வெளியில் வந்தது.

அடுத்தது அதோட ஓனர் பேரும் வெளியில் வரும். மைண்ட் இட்.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அடுத்த வாரத்தில் நேத்ராவிற்கு நிச்சயம் முடிவாகியிருந்தது.

அனைவரும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று மஞ்சுநாத் கூற அதை மேகன் காதில் வாங்கிக் கொண்டதாய் கூட தெரியவில்லை.

அவனது அத்தையோ மாமாவோ அவனிடம் பேசவும் முன் வரவில்லை.

யுவனுக்கு அவன் நிலை புரிந்தாலும்  தங்கைக்கு நடக்கும் நல்லதில் மேகன் இல்லாமல் எப்படி என்று எண்ணியவனாய் அவனை சந்திக்கச் சென்றான்.

“வா யுவன்.”

“மேக்.. ப்ளீஸ் டா எனக்காக..”

“…”

“உன் மனநிலை எனக்கு நல்லாவே புரியுது ஆனால் இது நம்ம வீட்டு பங்ஷன். நீயில்லாம எப்படி மேக்..”

“…”

“அமைதியா இருந்து இன்னும் என்னைத் தள்ளி வைக்காத மேக்..”

“யுவன் ஐ அம் சாரி..”, என்றவனின் குரலில் மறைக்கப்பட்ட வருத்தம் இருந்தது.

“இட்ஸ் ஓகே மேக்.. எல்லாம் சீக்கிரமே சரியாகணும்..”, என்றவன் அதற்கு மேல் அவனை வற்புறுத்த விரும்பாமல் கிளம்பியிருந்தான்.

நேத்ரா அண்ணனிடம் விவரம் கேட்டு விட்டு அவளே மேகனைச் சந்திக்கக் கிளம்பியிருந்தாள்.

“வேண்டாம் நேத்ரா..”

“இருக்கட்டும் ண்ணா.. என்ன இருந்தாலும் அவர் என் மாமா.. நான் பேசிப் பாக்குறேன்.”, என்ற தங்கையை நினைத்து மகிழ்வாய் இருந்தது யுவனுக்கு.

பார்த்திபன் நேத்ரா வந்திருப்பதைக் கூற மேகனின் முகமே அவளை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்த்தியது.

“வா நேத்ரா..”

“எப்படியிருக்கீங்க மாமா..”

“ஃபைன்.. நீ எப்படியிருக்க..”

“நல்லாயிருக்கேன் மாமா. விடியல் எப்படி இருக்காங்க?”, என்றதில் சற்று ஆச்சரியமாகவே அவளைப் பார்த்திருந்தான்.

“என்னென்னவோ நடந்து போச்சு மாமா. ஆனால் நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது.”

“பழசெல்லாம் இப்போ எதுக்கு நேத்ரா..”

“அப்பறம் ஏன் நீங்க நிச்சயதார்த்தத்துக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க..”

“…”

“மன்னிக்க முயற்சி பண்ணுங்களேன் மாமா..”

“இந்த விஷயத்தில் எனக்கு அவ்வளவு பெருந்தன்மை இல்லை நேத்ரா.”

“எனக்கும் புரியுது. ஆனால் என்னோட முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் நீங்களும் இருக்கணும்னு நான் நினைக்குறதில் தப்பில்லையே. எனக்காக யோசிங்க மாமா. ப்ளீஸ்..”, என்றவள் கிளம்பியிருந்தாள்.

மேகனுக்கு நேத்ராவின் மீது எப்போதும் எந்த வருத்தமோ கோவமோ இருந்ததில்லை.

அது மட்டுமன்றி அவளது பெற்றவர்களை இனி பார்க்க மாட்டேன் என்று, தான் கூறியதையும் மீறி அவள் தன்னை அழைக்க வந்தது மேகனை சிறிது யோசிக்க வைத்திருந்தது

எப்போதும் போல் யாரிடமும் எதையும் வெளிப்படுத்த வில்லை.

ராதிகாவிற்கும் மற்றவர்களுக்கும் அவன் வருவான் என்று துளி நம்பிக்கை கூட இருந்திருக்கவில்லை.

ஆனால் சரியாய் தட்டு மாற்றும் நேரம் உள்ளே நுழைந்திருந்தான் மேகன் மஞ்சுநாத். யாரையும் பார்க்கவில்லை பேசவில்லை.

நேராய் மேடைக்கு அருகில் நின்றவன் தட்டு மாற்றப்பட்டு முடித்ததும் மணமக்களுக்கு கை குலுக்கி தனது பரிசையும் வழங்கி விட்டு கிளம்பியிருந்தான்.

மஞ்சுநாத்திற்கே அந்த நேரம் மகனை நினைத்து சற்று பெருமையாய் இருந்தது.

சபையில் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்து விட்டான் என்று மனமகிழ்ந்து போனார். கணவரின் மனது புரிந்தவராய் ராதிகா அவரிடம் மெதுவாய்,

“இதுதான் நம்ம வளர்ப்புங்க.. அந்த பெருந்தன்மை நமக்கும் கொஞ்சம் வேணும்னு தோணுது.

வீண் பிடிவாதத்தை விட மகனோட விருப்பத்துக்கு கொஞ்சமாவது நாம மதிப்பு கொடுக்கலாம்.

என் பிள்ளைக்கான நிம்மதியும் சந்தோஷமும் அந்த பொண்ணுகிட்ட மட்டும் தான் இருக்கு.”, என்றதில் மஞ்சுநாத்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

விடியலுக்கு அன்று ஷோ ஒன்று இருக்க முடித்து விட்டு அலுவலக வேலைகளையும் முடித்து வீட்டிற்கு வர பின்னிரவாகி விட்டிருந்தது.

வாசந்தி கவலையாய் மகளை எதிர்பார்த்த வண்ணம் வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தார்.

“ம்மா.. நான் தான் லேட் ஆகும்னு சொன்னேனே ஏன் இன்னும் தூங்காம இருக்க?”

“எதுக்கு டி உன்னை நீயே இவ்வளவு வருத்திக்குற.. பேசாம கம்பெனியை யாருக்காவது கொடுத்துடலாம். நம்மகிட்ட இருக்குற பணம் போதும்.”

“ம்மா.. இது அப்போவோட கனவு. அதைப் போய் யாருக்கோ எப்படி கொடுக்குறது. அதெல்லாம் என்னால பார்த்துக்க முடியும் மா. நீ வொர்ரி பண்ணாத..”

“என்னவோ பொம்பள பிள்ளை இப்படி கால நேரமில்லாம ஓடி உழைக்குறதைப் பார்த்து மனசு வலிக்குது டி. உன் வயசுல நீ என் கையில் மூணு வயசு குழந்தை.”

“அதெல்லாம் அந்தக் காலம் மா.. சட்டுனு கல்யாணம் பட்டுனு குழந்தைனு உங்க வாழ்க்கையெல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளே முடிச்சுகிட்டீங்க..”, என்றவள் உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.

“அதென்னவோ உண்மை தான்.. எனக்கு பத்தொன்பது வயசில் கல்யாணம்.

அப்படினா என்னனு புரியுறதுக்குள்ளேயே குழந்தை. அதனால தான் இப்போ வரை உலகம் தெரியாம வாழுறேனோ என்னவோ டி.”

“அப்பா உன்னை ரொம்ப பொத்தி பொத்தி வைச்சுட்டார் மா..”, என்றவள் புன்னகைத்தாள்.

“அப்படி இப்படியா ஆறு மாசம் ஓடிப் போச்சே.. இல்ல..”

“ம்ம்..”

“ஆனால் என்னை விட உங்கப்பாக்கு நீ தான் உயிர். எனக்கு அவர் உன்னை கொஞ்சுறதெல்லம் பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

எங்கப்பா அப்படியெல்லாம் கிடையாதா.. அதனால புதுசா இருக்கும் இவர் பண்றதெல்லாம்.”

“பொண்ணுனால் எப்பவும் அப்பாக்கு பெட் தானே.. அம்மாக்கு தான் மாமியார்.

அதனால தான் நாம அடிக்கடி அடிச்சுக்குறோம். இல்ல..”, என்றதில் வாசந்தி புன்னகைத்தார்.

“நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன். இல்ல சின்னு..”, என்றதில் தாயைப் பார்த்தவள்,

“ஏன் அப்படியெல்லாம் நினைக்குற நீ.. நான் இப்போ உன்னோட சந்தோஷமா தான பேசிட்டு இருக்கேன்.”

“ஆனால் அம்மாவுக்கு தெரியாதா பொண்ணு சந்தோஷமா இருக்காளா இல்ல இருக்குற மாதிரி நடிக்குறாளானு..”

“…”

“சரி விடு நான் தேவையில்லாம என்னவோ பேசிட்டு இருக்கேன்.. நீ போய் தூங்கு..”, என்றவருக்கு புன்னகைத்து தனதறைக்குள் நுழைந்தவளுக்கு கண்களை கண்ணீர் மறைத்தது.

தன்னவனின் குரலுக்காக ஏங்கி சாகும் ஒவ்வொரு நொடியும் நரகமாய் இருப்பதை யாரிடம் சொல்ல முடியும்.

அந்த ஆழ்குரல் அவளை சின்னு என்று அழைப்பதைக் கேட்பதற்காக தவம் கிடைப்பதை யார் அறிவார்.

அப்படி என்ன காதல் என்று சாதாரணமாய் கேட்டு விடலாம் ஆனால் அது மட்டும் தானே அவளுக்கு சுவாசமாய் இருக்கிறது.

அது மட்டும் தானே அவளது உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.

அது மட்டும் தானே தாய்க்கே ஆறுதல் கூறுமளவிற்குத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தனது கைப்பேசியை எடுத்து தன்னவனின் புகைப்படத்தை விரல்களால் வருட அவளது கண்ணீர் தொடு திரையில் பட்டு வழிந்தது.

அனைத்திற்குமான முடிவு என்ற ஒன்று வந்து தானே ஆக வேண்டும் எட்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அது மேகன் யாரிடமும் கூறாமல் எங்கோ சென்று விட்டான் என்ற செய்தி மூலம் வரக் காத்திருந்தது.

விஜய் கூறிய செய்தியில் ஒரு நொடி விடியலுக்கு ஒன்றும் புரியவில்லை.

பார்த்தியிடம் கேட்கலாம் என்றால் அவனுக்குமே ஒன்றும் தெரியவில்லை என்று கூறி விட இருக்கும் பிரச்சனைகளில் இவன் ஏன் இதையெல்லாம் செய்கிறான் என்று கோபமும் அழுகையுமாய் வந்தது விடியலுக்கு.

ராதிகா மஞ்சுநாத் என யாருக்கும் அவன் இருக்கும் இடம் தெரியவில்லை.

பார்த்தியும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்து விட்டான் எந்த தகவலும் உபயோகமானதாய் இருக்கவில்லை.

மூன்று தினங்கள் கடந்திருந்தது. இத்தனை மாதங்கள் இருந்த திடம் மொத்தமும் வடிந்து ஒரு வித பயத்தோடு இருக்கும் மகளின் முகத்தைப் பார்த்த வாசந்தி இன்னுமாய் பயந்து போனார்.

என்னவென விஜயிடம் விஷயத்தைக் கேட்க அவனும் ஏதேதோ சமாளிக்க முயற்சித்தான் ஆனால் வாசந்தி விடுவதாய் இல்லை. விஷயமறிந்த பின் அவருக்கும் சற்று பதட்டமாகியிருந்தது.

மகளிடம் என்ன பேசுவது எப்படி சமாதனம் கூறுவது என்று புரியவில்லை எனினும் அவள் தனியே மனதிற்குள் போராடுவதைக் காண சகிக்காதவராய் மகளின் அறைக் கதவைத் தட்டினார்.

எவ்வித சத்தமும் இல்லாததில் மெதுவாய் கதவைத் திறக்க குளியலறைக்குள் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

இந்த இரவு நேரத்தில் என்ன செய்கிறாள் என்று எண்ணியவராய் கதவைத் தட்ட அவசரமாய் வருகிறேன் என்று குரல் கொடுத்திருந்தாள்.

அன்னை வெளியே சென்றிருப்பார் என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்து வந்தவளைப் பார்த்து வாசந்தி பதறி விட்டிருந்தார்.

ஈரம் சொட்ட வந்து நின்றவளுக்காக துண்டை எடுத்து வந்து வேக வேகமாய் தலையைத் துவட்டினார்.

முகமெல்லாம் அழுதழுது வீங்கியிருக்க வாசந்திக்கு இப்போது யோசித்தால் இது போன்று தான் தினமும் மகள் இருந்திருக்கிறாளா என்று தோன்றியது.

“ட்ரஸை மாத்திட்டு வா சின்னு.  சூடா பால் எடுத்து வைக்குறேன்.”, என்றவர் சமையலறைக்கு ஓடினார்.

விடியலுக்கோ நினைவு மொத்தமும் ஒருவனிடத்தில் தான். அவளது குழப்பத்திற்கு இன்னொரு காரணம் அவள் இன்னும் ஒரு முறை கூட மேகனுக்கு அழைத்திருக்கவில்லை.

ஒரு வேளை தான் அழைத்தால் நிச்சயம் திரும்பி வந்துவிடுவான் என்று வெகுவாய் நம்பினாள்.

அதை செய்யாமல் இருப்பது வேறு அவளது மனதைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

Superb update sis 👏

Raji Vijay September 20, 2026 - 7:27 am

Enga pona Megan?

EswariSkumar September 20, 2026 - 8:09 am

அடேய்… ரொம்ப படுத்துறீங்கடா😔😔😔

Kavi Natarajan September 20, 2026 - 8:32 am

Megan enga ponan

😭😭😭

jemila Paul September 20, 2026 - 9:01 am

Y sri ma vidiyal pavam romba azha vaikuringa

Mathy September 20, 2026 - 9:19 am

மேகன் எங்க போனான் எல்லாரையும் தவிக்க விட்டுட்டு 🙄

suganyavel September 20, 2026 - 10:59 am

Super💕

Kiruthika M September 20, 2026 - 12:01 pm

Enga la pona nee

srichitra September 20, 2026 - 12:06 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode