வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

மு.வ விளக்கம்: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

தந்தையிடம் போகிற போக்கில் ஒரு குண்டைப் போட்டிருந்தவன் அதன் பின் தவறியும் அவர் கண்ணில் படவில்லை.

இது எதுவும் தெரியாதவளாய் விடியலோ தினமும் தன்னவனின் காதலில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று காலையும் எப்போதும் போல் தனது நடனப் பயிற்சியில் இருந்தவளின் கைப்பேசிக்கு மேகனின் அழைப்பு வர புன்னகையோடு அழைப்பை ஏற்றவள் வீடியோ காலிற்கு மாற்றிய படி தனது அரங்கேற்ற புகைப்படத்தை திரை நிறைக்க காட்டிய படி வைத்திருந்தாள்.

“சின்னு..”, என்றவனின் குரலில் தன் புறம் கேமராவைத் திருப்பியவள் கையசைத்து புன்னகைத்தாள்.

“டான்ஸ் ரூமில் இருக்கனு சொல்லிருக்கலாமே.”

“முடிச்சுட்டேன் மேகன். சொல்லுங்க என்ன இவ்வளவு காலையிலேயே?”

“எனக்கு உன்னைப் பார்க்கணும்..”, என்றவனின் குரலின் பிடிவாதம் விடியலுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

அன்று ஹோட்டலில் பார்த்த பின் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாமல் போயிருக்க விடியலுக்குமே நேற்றிலிருந்து அவனைப் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றிக் கொண்டே தான் இருந்தது.

“எனக்கும்..”

“ஒன் அவர்ல வரேன். நீ ரெடியா இரு..”

“வீட்டுக்கா? வேண்டாம் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு காபி ஷாப் இருக்குல அங்கே வாசலில் வெயிட் பண்றேன்.”

“சரி பை..”, என்றவன் அழைப்பைத் துண்டித்ததும் யோசனையோடு வெளியே வந்தவள் பெற்றோரிடம் தோழிகளோடு கெட் டு கெதர் என்று கூறிவிட்டு கிளம்பச் சென்றிருந்தாள்.

காரில் கிளம்பியவள் அந்த காபி ஷாப் வாசலில் இறங்கிக் கொள்ள ஓட்டுநர் அவளைப் பார்த்து புன்னகைத்து கிளம்பியிருந்தார்.

அவள் காரை விட்டு இறங்கவும் மேகனின் கார் பின்னால் வந்து நிற்கவும் சரியாய் இருக்க அவன் காரில் ஏறினாள் விடியல்.

“ஹாய்..”, என்றவள் அவனது இடக்கரத்தை எடுத்து இறுகப் பற்றிக் கொண்டாள்.

கார் அவர்களது கெஸ்ட் ஹவுஸிற்கு வந்திருக்க மேகனோடு உள்ளே நுழைந்தாள் விடியல்.

கதவு சாற்றப்பட்ட அடுத்த நொடி அவளை இடுப்போடு சேர்த்து லேசாய் தூக்கி சுற்றி தனது மறுபுறம் நிறுத்திப் பிடித்துக் கொண்டான் மேகன்.

“மேக…ன்..”

“ஐ மிஸ்ட் யூ சின்னு..”, என்றவனின் அழுத்தமான முத்தம் அவளது கன்னத்தில் பதிந்தது. நடந்ததில் மொத்தமாய் பதறி விட்டிருந்தாள் விடியல்.

இத்தனை நாட்களில் அளவு மீறிய பேச்சுகள் எல்லாம் பட்டும் படாமல் இருக்கிறது தான்.

இருந்தாலும் இத்தனை உரிமையை அவனிடம் எதிர் பாராதவளாய் திணறிப் போனாள் விடியல்.

“இன்னைக்கு மொத்த நாளும் உனக்காக மட்டும் தான்..”

“நிஜமாவா!”

“எப்படி சொன்னால் நம்புவ?”, என்றதில் புன்னகைத்தவளோடு வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

அந்த மெத்தென்ற சோபாவின் கைப்பிடியில் சற்று சாய்ந்த வண்ணம் அமர்ந்தவன் தன் மார்போடு அவளை சாய்த்த படி அமர வைத்துக் கொண்டான்.

இரு கைகளும் அவளைச் சுற்றி அணைவாய் இருந்தது. அவனின் நிதானத்திற்கு எதிர்மாறாய் பெண்ணவளுக்குள் தான் பலவித உணர்வுகள் தனது முடிக்கற்றைகளை காதுக்கு பின்னால் தள்ளி விட்ட படி அவனிடம் இருந்து மறைக்க முயன்றாள்.

“மா பங்காரிக்கு இவ்வளவு டென்ஷன் எதுக்கு?”

“அதெல்லாம் இல்ல மேகன்..”, என்றவள் லேசாய் பக்கவாட்டில் திரும்பி அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அத்தனை நெருக்கத்தில் அவனது பார்வையும் ஆழ்குரலும் அவளை மொத்தமாய் பலகீனமாக்கியது.

மிக மெலிதான அழுத்தத்தோடு அவனது கன்னங்களை இருபுறமும் பற்றிக் கொண்டவள் புன்னகைத்தாள்.

“ரொம்பத் தள்ளி இருக்கோம் இல்ல?”

“ம்ம்..”

“ஸ்பீக்..”, என்றதற்கு மறுப்பாய் தலையசைத்தவளின் வலது கரம் அவனது தலைக்குப் பின் சென்று அவன் முடிச்சிட்டிருந்த ரப்பர் பேண்டை அவிழ்த்து விட்டிருந்தது.

ஏதோ பிறந்த குழந்தைக்கு வலிக்கும் என்பது போல் அத்தனை மிருதுவாய் அவனது தலை உச்சியிலிருந்து முடிக்கற்றைகளை வருடினாள்.

அவனது முடிக்கற்றைகளையும் அவனது விழிகளையும் மாறி மாறி பார்த்திருந்தவள் அமைதியாய் சற்று சரிந்து அவன் மார்பில் தலை சாய்த்து சோபாவில் கால் நீட்டியிருந்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ?”, என்றவனின் குரல் அத்தனை இலகுவாய் ஒலித்தது.

“உன் தலையில் கை வைக்க விட மாட்டனு நினைச்சேன்.”, என்றவளின் தாடை பற்றி தன்னைப் பார்க்க வைத்திருந்தான்.

“மென்டலிஸ்ட்க்கு எப்பவும் என்னை மட்டும் சரியா புரிஞ்சுக்கவே முடியாது இல்ல?”

“அப்படியில்ல…”

“வேற எப்படி?”

“ஏன் கோபப்படுற?”,  என்றவள் இன்னுமாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“நீ கோபப்படுத்துற..”

“சாரி..”

“என்னாச்சுனு சொல்லு..”

“இப்படி இவ்வளவு பக்கத்துல இருக்குறது ரொம்ப பாதுகாப்பா இருக்கு. தேவையில்லாத எண்ணமெல்லாம் வரல. இப்படியே இந்த உலகம் நின்னுடனும் போல இருக்கு.”

“நீ தான் இப்போ என்னை கரைச்சுட்டு இருக்க டி..”, என்றவன் அவளை அப்படியே இழுத்து இதழ்களைக் களவாடிக் கொண்டான்.

அவனது முடிக்கற்றைகளுக்குள் விடியலின் விரல்கள் அழுத்தம் கொடுக்க மேகனோ மொத்தமாய் தன்னவளின் முத்தத்தில் தன்னைத் தொலைத்திருந்தான்.

“ஐ லவ் யூ மேகன்..”

“கரெக்ட்டா சொல்லு..”, என்றவன் அவளது விழிகளைத் தான் பார்த்திருந்தான்.

“விடியல் லலவ்ஸ் மேகன் ஃபார்எவர்..”, என்றவள் அவனது கழுத்தோடு கரம் கோர்த்திருந்தாள்.

“என்கிட்ட வர உனக்கு இத்தனை வருஷம் ஆச்சா?”

“நீ பொறுப்பே இல்லாம என்னைத் தேடவே முயற்சி பண்ணாம ஏன் இருந்த?”

“இப்பவும் நான் தான டி உன்னை கட்டி இழுத்துருக்கேன். நீயா வந்த என்கிட்ட?”

“மேகன் மேன் ஆஃப் அட்டிட்டியூட்னு நினைச்சேன்.”

“இல்லையா அப்போ?”

“விடியலோட மேகன் அப்படியில்ல..”

“என்னோட கரேக்டர்.. நான் பிசினசில் பண்ற சில விஷயங்கள் எல்லாம் உனக்கு பயமா இல்லையா?”, என்றதில் அப்படியே பக்கவாட்டில் அவன் முகத்தை ஏறிட்டாள்.

“ம்ஹும் இல்லையே..”, என்றவள் சிரித்தாள்.

“நிஜமாவா?!”

“நீ தான சொன்ன உன்னை நம்புறதா இருந்தா என் பயத்தை விட்டுருனு. உன்னை ரொம்ப ரொம்ப நம்புறேன். அதனால பயத்தை விட்டுட்டேன்”, என்றவளின் கன்னம் பற்றி தன்புறம் திருப்பியவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சின்னு..”, என்றவன் அவளின் நெற்றி முட்டி விழி மூடியிருக்க அவளிடம் பதிலில்லாததில் விழிகளைத் திறந்து அவளை ஏறிட்டான்.

“வேண்டாமா?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்?!”

“உன் பார்வையும் அமைதியும் அதை தான சொல்லுது..”

“நான்.. நான் வீட்ல பேசுறேன் மேகன்..”

“நானும் வரவா..”

“வேண்டாம் நானே பார்த்துக்குறேன்.”

“ம்ம்ம்..”

“உங்க வீட்ல..”

“ஏற்கனவே தெரியும். பிரச்சனையை எப்போ ஆரம்பிப்பாங்கனு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”, என்றதில் அதிர்ந்து அவசரமாய் அவனை விட்டு விலகி அவனது முகத்தை ஏறிட்டாள்.

“ப்ச்.. இங்கே இருந்து என் முகம் தெரியலையா உனக்கு? ஏன் தள்ளிப் போற?”, என்றவன் வெகு சாதாரணமாய் மீண்டும் அவளைத் தன் மார்பில் அழுத்திக் கொண்டான்.

“நீ ஏன் இப்படியிருக்க?”, என்றவள் நிமிர்ந்து அவனை முறைத்திருந்தாள்.

“என்ன டி?”

“என்கிட்ட எதுவும் சொல்லல. சின்ன டென்ஷன் கூட இல்ல..”

“என்ட்ட எப்படி பேசுறதுனு எங்கப்பா தான் டென்ஷனா இருக்கார். நான் ஏன் டென்ஷன் ஆகணும்?”

“மேகன்..”

“நீ என் பேரை ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் உனக்கு வலிக்குற அளவுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும்னு தோணுது..”

“என்னை கடைசி வரை இதே மாதிரி காதலிப்பியா?”

“உனக்கு என்ன தோணுது?”

“நான் தப்பு பண்ணினாலும் சண்டை போட்டாலும் என்னை வெறுத்துட மாட்ட தான?”

“ஆர் யூ மேட்?”, என்றவன் அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்தியிருந்தான்.

“தேவையில்லாம யோசிக்க விடாம வைக்குறது ஒரே வழி தான் இருக்கு..”, என்றவனின் வார்த்தை முடிந்த நேரம் விடியலே அவனது இதழோடு தன் இதழை இணைத்திருந்தாள்.

அன்று மாலை வரை அவர்கள் இருவர் மட்டுமான அந்த பொழுதுகள் என்றும் பசுமை நினைவுகளாய் அவர்களுக்குள் புதைந்து இருக்கும். அந்தளவு ஒருவர் மேல் மற்றவர் காதலைக் கொட்டி கொடுத்தனர்.

மாலை வீட்டிற்கு வந்தவள் ஒருவித மோன நிலையிலேயே இருந்தாள்.

தந்தை வருவதற்காக காத்திருந்தவளாய் அவர் இரவு உணவை முடிக்கும் வரை பொறுத்தவள் தந்தையைத் தயக்கமாய் பார்த்து நின்றாள்.

இளங்கோவிற்கு மகள் தன்னிடம் ஏதோ பேச நினைப்பது புரிய மெதுவாய் அவளோடு வாசலுக்கு நடந்தார்.

“என்ன விஷயம் சின்னு?”

“ப்பா.. அது.. வந்து..”

“எதுவாயிருந்தாலும் சொல்லு டா. அப்பா இருக்கேன்.”

“ப்பா…”

“யாரையவது விரும்புறியா சின்னு?”, என்றதில் விடியலுக்கு அதிர்ச்சியும் அழுகையும் அடைத்துக் கொண்டது.

“ப்பா.. நான்.. முயற்சி பண்ணிணேன் பா.. ஆனால் என்னால அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியலை.

நிறைய குழம்பி நிறைய யோசிச்சு அப்பறம் முடியாம தான்..”, என்றவளின் கண்ணீர் அவள் கரம் தொட்டது.

“இதுக்காகவா இவ்வளவு பயம். அப்பாகிட்ட இதை சொல்றதுக்கு என்ன தயக்கம்? பையன் யாரு? என்ன பண்றாரு?”

“…”

“சாதி ஸ்டேட்டஸ் இதெல்லாத்தையும் விடு.. உன் மனசை ஜெயிச்ச அந்த அதிர்ஷ்டசாலி யாரு..”, என்றதில் லேசாய் புன்னகைக்க முயற்சி செய்தவள்,

“MR Groups.. மேகன் மஞ்சுநாத் பா..”, என்றதில் இப்போது அதிர்வது இளங்கோவின் முறையானது.

“சின்னு!!!”

“ப்பா ஐ அம் சாரி. எனக்கு நல்லா தெரியும் நமக்கும் அவங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

ஆனால் எல்லாத்துக்கும் மேல எனக்கு மேகன் வேணும் பா.”, என்றவளிடத்தில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

சில நிமிடங்களுக்கு அங்கு அமைதியே நிலவ கணவருக்கு பால் கொண்டு வந்த வாசந்தி மகளின் முகத்தையும் கணவரின் யோசனையையும் பார்த்த படி அமர்ந்தார்.

“என்னடி முகமே சரியில்ல?”

“…”

“ஏங்க நீங்க ஏன் இப்படி உட்காந்துருக்கீங்க?”

“சின்னுவுக்கு ஒருத்தரை பிடிச்சுருக்காம் வாசு.”

“என்னது?!! என்ன டி இதெல்லாம்?”

“ப்ச்.. பொறுமையா இரு வாசு..”

“ஏங்க உங்களை மாதிரி என்னால இருக்க முடியாது. பையன் யாரு என்ன பண்றான்?”

“..”

“உங்கப்பா அந்த ராஜ் விஷயத்திலேயே ரொம்ப கவலைப்பட்டார். சரியா விசாரிக்காம பண்ணிட்டோமேனு.

நீ என்னடானால் யாரையோ காதலிக்குறேன்னு வந்து நிக்குற.

ஊர் உலகம் இருக்குற நிலைமைக்கு யாரை டி நம்ப முடியுது. வேண்டாம் விடியல் இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராது.”

“ம்மா.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ..”

“என்னத்தை புரியணும். இந்த பேச்சை இதோட விடு நாளைக்கே நான் நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன். சீக்கிரமே கல்யாணத்தை முடிக்குறோம்.”

“வாசு உன்னால அமைதியா இருக்க முடியுமா முடியாதா?”, என்று இளங்கோ கத்தியதில் தாயும் மகளும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

Kavi Natarajan September 14, 2026 - 3:55 pm

💞💞💞💞💞💞💞💞

srichitra September 14, 2026 - 4:52 pm

Nice

Kiruthika M September 14, 2026 - 5:12 pm

Super ❤️

EswariSkumar September 14, 2026 - 6:29 pm

Nice update 👍

Fathima.ar September 14, 2026 - 7:14 pm

Azhuththamaanz kadhal

Mathy September 16, 2026 - 12:08 am

❤️❤️❤️❤️

suganyavel September 16, 2026 - 8:40 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode