அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

மு.வ விளக்கம்: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சிறியவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி எனும் நிலை தான். மேகன் விடியல் வந்த பிறகும் எப்போதும் போல தான் இருந்தான்.

அவர்களுக்குள் சாதாரணமான பார்வை பரிமாற்றங்களைத் தவிர பெரிதாய் எதுவும் இல்லை.

அதாவது சிறியவர்களின் எதிர்பார்ப்போ காதலின் முதல் நிலை அவர்களுக்குள்ளான நெருக்கம் அண்ணன் தன் இணையிடம் நடந்து கொள்ளும் அழகு.

அண்ணியாக வரப் போகிறவள் அண்ணனின் மேல் வைத்திருக்கும் அன்பு இதெல்லாம் அப்பட்டமாய் வெளியில் தெரியும் என்பது.

ஆனால் நம்மவர்கள் தான் முந்தைய தலைமுறை காதலர்கள் ஆயிற்றே.

நண்பர்கள் போன்ற உரையாடலும் பார்வையும் தான் அவர்களிடத்தில் கிடைத்தது.

பேச்சும் சிரிப்புமாய் சில நிமடங்கள் கடந்திருக்க சைத்ரா அங்கு வந்திருந்தாள்.

“ஹாய் அண்ணி..”, என்றவள் விடியலை இறுக அணைத்துக் கொண்டாள். விடியலோ இதைச் சற்றும் எதிர் பார்க்காததால் ஆச்சரியமான புன்னகையோடு அணைத்து விடுவித்தாள்.

“ஹாய் சைத்ரா எப்படியிருக்கீங்க?”

“சூப்பரா இருக்கேன். அதெல்லாம் விடுங்க. உங்க கூட முதல்ல சண்டை போடணும்.”

“ஐயோ ஏன் ?”

“எங்கண்ணாவை பேசக் கூடாதுனு சொல்லிட்டீங்களாமே? ஓகே சொல்லாம எப்படியிருக்கலாம் நீங்க?”, என்றதில் விடியல் புன்னகைத்தாள்.

“உனக்குத் தெரியுமா சைத்து?!”

“ம்ம்.. நடுவில் கொஞ்ச நாள் அண்ணா செம ஸ்ட்ரெஸில் இருந்தாரே..”

“அட ஆமா…”

“இவங்க பேச வேண்டாம்னு சொன்னதுக்காக அண்ணாவும் அவங்களை கான்டாக்ட் பண்ணாம இருந்துருக்கார்..”

“நாங்க எதைப் பண்ணாதனு சொல்றோமோ அதை தான் அச்சு பிசாகாம பண்ணுவாரு.. அப்படி பட்டவரை..”, என்று ஒவ்வொருவரும் பேசுவதில் விடியலின் முகத்தில் இருந்த புன்னகை அப்படியே இருந்தது.

“ஆனா ரீசெண்டா காலிக்குறவங்க மாதிரியே இல்லையே நீங்க இரண்டு பேரும். ரொம்ப மெச்சூர்ட்டா ஆனா பார்க்க அழகா இருக்கு..”, என்ற சைத்ராவின் வார்த்தைக்கு விடியல் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின்னர் மெலிதாய் புன்னகைத்தவள்,

“Love… when nobody is watching.” என்று கூற, அதே நொடியில் அவளருகில் இருந்த மேகனும்,

“Love… when nobody is watching.” என்று அதே வார்த்தையைக் கூறியிருந்தான்.

ஒரு நொடி அங்கே இருந்தவர்கள் அனைவருமே அமைதியாகிப் போயினர்.

அனைவருக்கும் ஆச்சரியமெனில் விடியலுக்கு தங்களின் எண்ணங்கள் ஒத்துப் போவதில் பெரும் கர்வம்.

“பெர்ஃபெக்ட் மேட்ச் மேக்..”, என்ற யுவனைப் பார்த்தவன் புன்னகைத்து விடியலின் மேல் பார்வையைச் செலுத்தினான்.

அங்கு வெளியில் அமர்ந்திருந்த விஜயின் அருகில் பார்த்திபனும் இருக்க இருவருக்கும் இடையில் பொதுவான பேச்சு வார்த்தைகள் நடந்தன.

“நீ எதுக்கும் மேம் கூட சார் கண்ணில் படாம இருக்குறது தான் நல்லது..”, என்று பார்த்தி நக்கலாகவே பேச்சை ஆரம்பித்தான்.

“ஏன்?”

“சாரை விட அதிகமா நீ தான மேம் கூட இருக்க..”

“இதென்ன கொடுமையா இருக்கு. அப்போ உங்க சாரை சீக்கிரமே கல்யாணம் பண்ணி மேடத்தை கூட்டிட்டு போக சொல்லு..”

“நீ சொன்னதா கண்டிப்பா சொல்றேன்.”

“யோவ் ஏன் இந்த கொலைவெறி உனக்கு?”

“எனக்குனு ஒரு அடிமை சிக்கிருக்கு. பொழுது போக வேணாமா?”

“எல்லாம் என் நேரம்..”

“அப்பறம் ஊர்ல வேற ஆளே கிடைக்கலையா உங்க முதலாளிக்கு. பொண்ணுக்கு அப்படி ஒரு ஆளை பார்த்துருக்காரு.”

“ரொம்ப பேசாத.. அவன் குடும்பம் நல்ல குடும்பம் தான். அந்த லூசு பைய தான்..”

“குடும்பத்தையா கல்யாணம் பண்ணிக்க போறாங்க?”

“ஆமா எங்களை எல்லாம் கலாய்க்குறது இருக்கட்டும். நீ என்ன எப்போ பார்த்தாலும் உங்க சாரோட தான் இருப்பியாம். எங்க விடியல் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்..”

“மேம்னு சொல்லு எதுக்கு பேர் சொல்ற?”

“தோடா.. அவங்க எப்பவும் எனக்கு விடியல் தான்.”

“அப்படியா சார் முன்னாடி அவங்களை அப்படி கூப்பிடு. திரும்ப கூப்பிட வாய் இல்லாம பண்ணிடுவாரு.”

“ஆமா உங்க சார் பிஸினஸோட சேர்த்து அடி தடி எல்லாம் பண்றாராமா?”

“ம்ம் உன்னை மாதிரி சிலருக்கு எல்லாம் வாய் வார்த்தையா சொன்னா புரியாதாம் அதனால வேற மாதிரி பதில் சொல்லுவாரு..”, இப்படியாய் இரண்டு வளர்ந்து கெட்டவன்களும் பள்ளிக் குழந்தைகள் போல் அடித்துக் கொண்டிருந்தனர்.

டின்னரை முடித்து அனைவருமாய் கிளம்பத் தயாராக விடியல் ஒவ்வொருரிடமும் கை குலுக்கி விடைப் பெற்றாள்.

அனைவரின் முகத்திலும் இருந்த புன்னகை அவளுக்கு தனி உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

இறுதியாய் மேகன் அருகில் அவள் வந்த போது மற்றவர்கள் அவர்களுக்குத் தனிமை கொடுத்து நகர்ந்திருந்தனர்.

“ஐ ம் சோ ஹேப்பி மேகன்.. காரணம் நீங்க தான். தேங்க் யூ.”

“எல்லாரையும் பிடிச்சுருக்கா?”

“ம்ம் முக்கியமா சைத்ராவை..”, என்றவள் புன்னகைக்க அவளது கன்னம் தழுவிய இரு முடிக் கற்றைகளை இயல்பாய் நகர்த்தி காதுக்கு பின்னால் வைத்து விட்டான்.

“லுக்கிங் கார்ஜியஸ் சின்னு..”, என்றதில் விழி தாழ்த்திக் கொண்டவள் அவனது இரு கரங்களையும் எடுத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“திரும்ப உன்னை எப்போ பாக்குறது?”, என்றவளின் குரலின் தவிப்பு அவனுக்கு ரசிக்க வைப்பதாய் இருந்தது.

“விடியல் மேகத்துக்காக ரொம்ப ஏங்குதே..”

“ஹேட் யூ.. நீங்க அதை ரசிக்குறீங்க இல்ல..”

“பின்ன மை கேர்ள் இஸ் க்ரேஸி ஆன் மீ.. ரசிக்காம?”

“..”

“உனக்கு ஒரு பாட்டுத் தெரியுமா?”

“??”

“பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்துக் கொண்டது உன்னில் மட்டும்..”, என்றதில் முகம் அழகாய் மலர்ந்தது விடியலுக்கு.

“எனக்கு யார் மேலேயும் மையல் கூட இருந்ததில்ல.. ஆனா உன் மேலே ரொம்ப பித்து இருக்கு..

ஐ வாண்ட் டு நோ யூ கம்ப்ளீட்ளி..”, என்றதில் விடியல் தவித்துப் போனாள்.

“மேகன்.. நாம போலாம்..”, என்றவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

“என்னோட ஒவ்வொரு விடியலும் இந்த விடியல் கூட வேணும்னு தோணுது..

ஐ லவ் யூ பங்காரி..”, என்றவன் கன்னத்தில் ஒரு கரம் கொண்டு அழுத்தி விடுவித்தான்.

அவனோடு லிப்டின் அருகில் வந்த நேரம் பார்த்திபனும் விஜயும் நின்றிருக்க விடியல் விஜயை மேகனிடம் அறிமுகப் படுத்தினாள்.

“மேகன்.. இவர் விஜி.. விஜய்..”, என்றதில் லேசான தலையசைப்பு மேகனிடத்தில். விஜயும் அவனிடமிருந்து பெரிதாய் எந்த எதிர் வினையும் எதிர் பார்க்காததால் சிறு புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

நால்வருமாய் லிப்டில் இருந்து இறங்கிய போது விஜய் தன்னிச்சையாய் பார்த்திக்கு கையசைக்க அவனோ முதலாளிக்கு மேல் முறுக்கிக் கொண்டு சென்றதில் கடுப்பாகியிருந்தான்.

“சாரி விஜி ரொம்ப லேட் ஆயிடுச்சு..”

“அந்த வளர்ந்து கெட்டவனோட நல்ல பொழுது போச்சு விடியல்.”, என்றதில் விடியல் சத்தமாய் சிரித்திருந்தாள்.

“உங்க ஆளு எதில்லாம வேணாலும் இருப்பார் போல இவன் இல்லாம இருக்க மாட்டாரோ..”

“ஹா ஹா.. நானும் இதை நினைச்சுருக்கேன் விஜி.”, என்றவளுக்கு சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

“அவர் கண்ணசைச்சால் கிணத்துல கூட குதிப்பான் போல. ஒரே சார் புராணம் தான் பாடுறான்.”

“ஐயோ விஜி போதும் என்னால சிரிப்பை நிறுத்த முடியலை..”, என்றதில் அவனுமே சிரித்திருந்தான்.

ஹோட்டலில் இருந்து கிளம்பிய மேகனும் பார்த்தியும் அவர்களது கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றனர்.

மேகன் அமர்ந்ததும் பார்த்தி தனது மடிக்கணினியை உயிர்பித்து மேகனின் முன் வைத்தான்.

“பேர் மனீஷ். சென்ட்ரல் மினிஸ்டர் பையன். முப்பத்தி ஏழு வயசு. தொழில் எல்லாம் பினாமி பேரில் நடத்திட்டு வராங்க. அதில் அதிகபட்சமா அவங்களை விட லீடிங் இருக்குறது நாம தான்.”

“அவங்க அப்பா போன மாசம் நம்ம ராதிகா மேமோட மீட்டிங் நடத்திருக்கார்.”, என்றதில் மேகன் புருவம் சுருக்கினான்.

“நீங்க என்கிட்ட எதையாவது நாம மிஸ் பண்றோமானு கேட்டப்போ எனக்கு அம்மாக்கு இடைஞ்சல் கொடுக்க தான் யாராவது இப்படி பண்றாங்களோனு தோணிச்சு அந்த அங்கிள்ல விசாரிச்சப்போ தான் இவனைப் பத்தி தெரிஞ்சுது.”

“..”

“அவங்க நம்ம MR groups ஓட சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்க நினைச்சுருக்காங்க.

ஆனால் உங்ககிட்டேயோ சார்கிட்டேயோ பேசாம அரசியல் செல்வாக்கை வைச்சு மேம்கிட்ட பேசி முடிக்க பார்த்துருக்காங்க.”

“…”

“மேம் தெளிவா சொல்லிட்டாங்களாம் இது நடக்காது. பிசினஸ்க்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைனு.”

“…”

“அவங்க சைட்ல இருந்து பொலிட்டிக்கலி மேம்க்கு ப்ரெஷர் கொடுத்துருக்காங்க. எதுவும் வேலைக்கு ஆகலைனு தெரிஞ்சதும் நம்மகிட்டேயே வாலாட்ட பார்த்துருக்காங்க.”

“..”

“எதாவது ஒரு இடத்தில் நாம லாக் ஆனா அதைப் பயன்படுத்தி அவங்க உள்ளே வர நினைக்குறாங்களோனு எனக்கு தோணுது சார்.”

“அவ்ளோ தானா?”, என்ற மேகனின் கேள்வியில் ஒரு நொடி அமைதியானவன்,

“அது.. உங்களுக்குள்ள எதாவது இடைவெளி இருந்தா அதைப் பயன்படுத்த பாக்குறான்.”, மேகனின் பார்வை மடிக்கணினித் திரையில் நிலைத்தது.

“என்ன இடைவெளி?”

“மஞ்சுநாத் சார் இப்போ தொழிலில் அக்டிவ்வா இல்ல. அதனால உங்க ப்ரதர்ஸ்குள்ள சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தா அதை பெருசாக்க முடியும்னு நினைக்குறான்.”, என்றதில் சில நொடிகள் மேகன் எதுவும் பேசவில்லை.

“அதாவது…”

“..”

“என்னைத் தனியா அடிக்க முடியாது. அதனால வீட்டுக்குள்ளேயே ஆள் தேடுறான்.”

“அப்படித்தான் தோணுது சார்.”

மேகன் மெதுவாய் பின்னால் சாய்ந்தமர்ந்தான். முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. மாறாக, உதட்டின் ஓரத்தில் மிகச் சிறிய புன்னகை.

“சோ அவனுக்கு இந்த மேகனைப் பத்தி தெரியலை..”

“..”

“விளையாடிப் பார்க்க நினைக்குறான். விளையாடிருவோம். என்ன சொல்ற பார்த்தி..”

“என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார் பண்ணிடலாம்.”, என்றதில் லேசாய் உதடு வளைத்து புன்னகைத்தான் மேகன்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

10 comments

Fathima.ar September 13, 2026 - 8:02 am

Nice update

Kavi Natarajan September 13, 2026 - 8:50 am

Very nice ud ma
Daily 2 ud kudunga sri ma

😃

ஸ்ரீ September 13, 2026 - 9:52 am

Sekirame mudinjurume ka..😁

Kavi Natarajan September 13, 2026 - 11:48 am

Sekiram muduja new story sri ma kuduppanga

Nice update sis.

Raji Vijay September 13, 2026 - 9:49 am

Viji yum paarthiyum thaan kala kala nu. Megan enna panna poraan?

suganyavel September 13, 2026 - 11:33 am

Super💕

srichitra September 13, 2026 - 11:41 am

Very nice

EswariSkumar September 13, 2026 - 4:04 pm

Interesting update ❤️❤️❤️

Kiruthika M September 13, 2026 - 7:05 pm

❤️❤️❤️

Mathy September 15, 2026 - 11:52 pm

Interesting 🤩🤩🤩

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode