அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்ற தறம்

மு.வ விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

தன் முன் இந்த நொடி இருக்கும் மேகன் விடியல் அறிந்திராதவன். தன்னைப் பாதுகாக்கிறான் என்பது அவளுக்குப் புரிகிறது.

ஆனாலும் இது சற்று அதிகப் படியோ என்று தோன்றியது. அவளுக்குமே நேற்று இரவு இருந்த மனநிலைக்கு ராஜை இழுத்து நான்கு அறை விட வேண்டும் என்று தோன்றியது தன்.

ஆனால் இந்த ஒரு நிலைமையில் அவனைப் பார்த்ததில் சகலமும் மறந்து அவன் நல்ல படியாய் இங்கிருந்து வெளியே சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

“மேகன் பிரச்சனை வேண்டாம். எனக்காக..”, என்றவளை கூர்ந்து நோக்கியவன் கோபமாய் வெளியே செல்ல ராஜைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் மேகனின் பின்னே ஓடினாள்.

“மேகன்.. ப்ளீஸ்..”, என்றவள் அவனது கரத்தைப் பிடிக்க வேகமாய் தட்டி விட்டவன்,

“உன்னை ஹர்ட் பண்ற உரிமை எப்பவும் யாருக்கும் கிடையாது. ஏன் எனக்கே கிடையாது. யார் அவன்.. கொன்னு புதைச்சுருக்கணும். பார்த்தி தான் தடுத்துட்டான்..”

“..”

“நல்ல மாப்பிள்ளை பார்த்துருக்கார் உங்கப்பா..”, என்றதில் சற்றே கோவமாய்,

“அப்பாவுக்கு அவன் இப்படினு தெரிஞ்சுருந்தா செலெக்ட் பண்ணிருக்க மாட்டார்.”, என்றதில் இன்னுமாய் கடுப்பாகியிருந்தான்.

“என்னால அவனை அப்படியே விட முடியாது..”

“எனக்காக பண்ணு ப்ளீஸ்..”, என்றதில் ஆழ்ந்து மூச்சை வெளியிட்டவனாய்,

“ஃபைன்..”, என்று பேச்சை முடித்திருந்தான். சில நிமிடங்களுக்கு அங்கு அமைதியே நிலவியது.

“ரௌடி மாதிரி இதெல்லாம் ஏன் பண்றீங்க?”

“நான் இப்படி தான்..”, என்றவனின் கோவத்தில் பயத்திற்கு பதில் புன்னகை அரும்பியது விடியலுக்கு.

“சரி நான் கிளம்புறேன்.”

“ம்ம்..”, அவன் அப்போதும் அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க தயக்கத்தை ஒதுக்கியவளாய் அவனருகில் நெருங்கியவள் அவன் யோசிப்பதற்குள் அவனது இதழ்களில் முத்தம் வைத்திருந்தாள்.

“ஐ லவ் யூ மேகன்..”, என்றவள் தலை குனிவதற்குள் தாடையை ஒரு கையால் இறுகப் பற்றியிருந்தான்.

“முப்பது வருஷமா இதோட ஜோடி இல்லாம இருக்குற உதட்டுக்கு நீ கொடுக்குற இந்த சின்ன ஒத்தடம் எப்படி பத்தும்?”, என்றதில் விழி விரித்தவள் சுதாரிப்பதற்குள் இதழ்களைத் தனதாக்கியிருந்தான்.

நொடிகள் நீடித்த முத்தம் முடிந்த நேரம் விடியல் மொத்தமாய் தனது முகத்தை அவனது மார்பில் மறைத்திருந்தாள்.

மேகனின் கரம் அவளின் கழுத்தில் பதிந்திருக்க உச்சந்தலையில் மென்மையாய் இதழ் பதித்தான்.

“ஐ லவ் யூ சின்னு..”

“..”

“என்ன ஹார்ட் ரேட் இவ்வளவு வேகமா இருக்கு. பயந்துடியா என்ன?!”, என்றதில் சட்டென அவனிடமிருந்து பிரிந்து நின்றாள்.

“ப்ளஷிங் ப்யூட்டி இன்னும் லவ் பண்ண வைக்குறாளே..”

“நான் கிளம்புறேன். நேரமாச்சு..”

“பார்த்து போயிட்டு வா. வீட்டில் நிலைமை சமாளிக்க முடியலைனால் விஷயத்தை சொல்லிடு நான் வந்து பேசுறேன்.”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அமைதியாகவே நகர, பூட்டியிருந்த அறையை ஒரு நொடி பார்த்தவள் தயக்கமாய் மேகனைப் பார்த்தாள்.

“உன்னை மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன். போயிட்டு வா.”, என்றதில் புன்னகைத்து கிளம்பியிருந்தாள்.

அதன் பின்னான நாட்கள் சாதாரணம் போல் செல்ல தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி வருவது போன்று மேகனிற்குத் தோன்றியது.

அவன் அந்த யோசனையில் இருந்த நேரம் தம்பிகளும் அதையே வந்து கூற இன்னுமாய் யோசனையில் இறங்கினான்.

“எப்போவாவதுனால் பரவால்ல. ஒண்ணு மாத்தி ஒண்ணு பிரச்சனைனால் சந்தேகமா இருக்கு ண்ணா..”

“நமக்கு குடைச்சல் கொடுக்குறவங்க யாரா இருக்கும்?”

“நாம எதையாவது மிஸ் பண்றோமா பார்த்தி?”, என்றவனின் பார்வையில் என்ன புரிந்ததோ பார்த்திபன் பதிலுக்கு,

“நான் பார்த்துக்குறேன் சார்.”, என்று வெளியேறியிருந்தான்.

“அண்ணா பார்த்தி மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்குப் பார்க்கணும்னால் எவ்வளவு கஷ்டமான வேலை..”, என்று ரகுவந்த் கூறியதில் சுகனும் சைதன்யாவும் சிரித்திருந்தனர்.

“பின்ன என்ன டா.. மிஸ் பண்றோமானு தான் கேட்டாரு. நான் பார்த்துக்குறேன்னு ஓடுறாரு. என்ன மனுஷன்ல..”

“நீ அண்ணாகிட்ட அடி வாங்காம வரப் போறதில்லனு நினைக்குறேன்.”, என்று சைதன்யா முணுமுணுக்க மூவரையும் ஒரு முறை பார்த்த மேகன் அமைதியாய் கணினியில் வேலையைக் கவனித்தான்.

“அண்ணாக்கு பார்க்குறது இருக்கட்டும். எனக்கு கண்டிப்பா இப்படி ஒரு பொண்ணு தான் வேணும் டா.”

“பேசாம பார்த்தியையே கேட்டு பாரேன்.”, என்றதில் சுகனை ரகுவந்த் முதுகிலேயே அடித்தான்.

“ஸ்கூல் பசங்க மாதிரி பிகேவ் பண்ணாதீங்க டா..”, என்ற மேகனைப் பார்த்து மூவரும் தலையை சொரிந்த படி வெளியே செல்ல எத்தனிக்க,

“அண்ட்..”, என்ற மேகனின் குரலில் மூவருமாய் அண்ணனின் புறம் திரும்பினர்.

“எனக்கு பார்த்தி மாதிரி இல்ல அதை விட பெர்ஃபெக்ட்டான பார்ட்னர் கிடைச்சாச்சு.”, என்றதில் மூவருமாய் அடித்துப் பிடித்து அவனது மேசையின் அருகில் வந்து அதில் கையூன்றி நின்றனர்.

“அண்ணா ஆர் யூ சீரியஸ்?”

“..”

“அண்ணா விளையாடாத..”

“..”

“தலையே வெடிச்சுடும் ஒழுங்கா சொல்லுண்ணா..”

“இதில் என்ன டா விளையாட்டு. ஐ ஃபௌண்ட் மை கேர்ள்.”

“வாவ்!!!”

“லவ் மேரேஜா!!! நீங்களா!!!”

“ஏன் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?”

“இல்ல அது.. எப்படிண்ணா..”

“…”

“அண்ணி யாரு எங்கே இருக்காங்க?”

“எனக்கு ஒரு கெஸ் இருக்கு அண்ணா அடிக்கடி பாரிஸ் தான் போயிட்டு இருந்தார். அப்போ அங்கே தான் இருக்காங்க. கரெக்டா?”

“..”

“இல்ல அண்ணாக்கு ஸ்விஸ் தான் ரொம்ப இஷ்டம். வெக்கேஷன் போறதே அங்கே தான..”

“ஷ்ஷ்….”

“!!”

“விட்டா நான் பொண்ணு தேட தான் நாடு விட்டு நாடு போறேன்னு சொல்லுவீங்க போல.. போய் வேலையைப் பாருங்க டா..”

“அண்ணா திஸ் இஸ் நாட் ஃபேர். யாருனு சொல்லுங்க…”

“விடியல்..”

“விடி.. வாட்? யாரது?”, என்று மூவரும் தங்களுக்குள் பார்த்து நிற்க இருக்கையில் பின் சாய்ந்து அமர்ந்தவனாய்,

“V கேம்ஸ் விடியல் இளங்கோ.”, என்றதில் மூவரும் விழி விரித்திருந்தனர்.

“வாவ்!!! ண்ணா எப்படி ண்ணா..”

“அன்னைக்கு அவங்களைப் பத்தி சொன்னப்போ கூட ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டுட்டு இருந்தீங்க?”

“அவங்க உங்களுக்கும் மேல நம்ம வீட்டுக்கு வந்தப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி வந்தாங்களே..”

“இனாஃப் கைஸ்.. அதுக்கு அப்பறம் தான் அவளை எனக்குத் தெரியும். நீங்களா கற்பனையை ஓட விடாதீங்க..”

“வாட் இன் ஜஸ்ட் த்ரீ மன்த்ஸ்!!!”, என்ற சைதன்யா மயங்கி விழுவது போல் செய்கை செய்தான்.

“அண்ணா இன்ட்ரோ கொடுங்க. நாம எல்லாம் மீட் பண்ணலாம்..”

“நோ வே.. வீட்டில் பேசின அப்பறம் பார்க்கலாம்..”

“ண்ணா!!”, என்று மூவருமாய் கத்த தலையில் கை வைத்தவனாய்,

“சரியான எல்கேஜி டா நீங்க. சரி நான் யோசிச்சு சொல்றேன்.”, என்றவன் தனக்கு வந்த அழைப்பை ஏற்ற வண்ணம் மூவரையும் வெளியில் செல்லுமாறு கை காட்டினான்.

மேகன் அதன் பின் ஒரு வாரம் அப்படி இப்படியாய் தம்பிகளுக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்க யுவனையும் கூட்டுச் சேர்த்து கொண்டு அவனை தொல்லை செய்ததில் அன்றைய இரவு விடியலுக்கு அழைத்தவன்,

“தம்பிங்க உன்னை மீட் பண்ணணும்னு சொல்றாங்க சின்னு..”

“ஓ யெஸ் பண்ணலாமே..”, என்றவள் கால் நகத்திற்கு நெயில் பாலிஷ் இட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆர் யூ ஷுவர்?”

“ஏன் அப்படி கேட்குறீங்க. உங்க கூட தான வரேன். ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல..”, என்றவள் லேசாய் காலில் பட்டதில் ச்ச் என்று சத்தமிட மேகன் அவளிடம்,

“என்ன பண்ற?”

“நெயில் பாலிஷ் போட்டுட்டு இருக்கேன் லேசா கால் விரல்ல பட்டுருச்சு.”

“ஐ லவ் யுவர் செகெண்ட் ஃப்ன்கர்.. கட்டை விரலை விட நீளமா..”

“ஹே…”

“என்ன?”

“இதெல்லாமா கவனிப்பீங்க…”

“நீ மொத்தமா எனக்குனு ஆனப்பறம் சின்ன டீடெயில் கூட தெரிஞ்சுக்கணும் தான..”

“…”

“என்னாச்சு?”

“எப்பவும் போல உன் லவ் என்னை ஆச்சரியப் படுத்திட்டே இருக்கு..”

“ஆஹான்..”

“எப்போ உன்னை பார்க்க முடியும்?”

“நீ கேட்டால் இப்போவே கூட..”

“ஐயோ அதெல்லாம் வேணாம்..”

“நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம்.”

“சரி நான் ஈவெண்ட்னு தான் சொல்லிட்டு வரணும்.”

“தனியா வா? அப்போ நானே வரேன்.”

“இல்ல விஜியோட தான் வருவேன்.”

“ஹிஸ் நேம் விஜய். அப்பறம் என்ன விஜி?”, என்றதில் சத்தமில்லாமல் சிரித்தாள் விடியல்.

“சிரிக்காத..”

“அவர் எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட்..”

“..”

“நீங்க உங்க தம்பி தங்கச்சிகிட்ட எல்லாம் ஷேர் பண்ணின மதிரி நான் அவர்கிட்ட தான் நம்மப் பத்தி சொன்னேன் மேகன். ரொம்ப நல்லவர்.”

“ம்ம்..”

“பார்த்தி கூட உங்களுக்கு அப்படி தான? அப்பறம் ஏன் இந்த கோவம்?”

“ஐ அம் பொசசிவ் ஆன் யூ சின்னு. மாத்த நினைக்காத..”, என்றதில் விடியலுக்கு மனம் அவன்பால் இன்னுமின்னும் சாய்ந்தது.

மறுநாள் மாலை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு விடியலை மேகன் வரச் சொல்லியிருக்க விஜயிடம் உண்மையைக் கூறியவள் அவனோடு அந்த ஹோட்டலை அடைந்திருந்தாள்.

நான்காவது மாடியில் இருந்த ரெஸ்டாரன்டிற்கு லிப்டில் வந்ததும் விஜய் அங்கு இருந்த வெயிட்டிங் சோபாவில் அமர்ந்து கொள்வதாய் கூற விடியலுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

“ரியலி சாரி விஜி.. இது..”

“என் ப்ரெண்ட்க்கு நான் பண்ண மாட்டேனா? போயிட்டு வாங்க விடியல்..”, என்றதில் நெகிழ்ந்தவள் நன்றியாய் அவனை நோக்கி விட்டு உள்ளே நுழைந்தாள்.

அழகான அடர் பச்சை வண்ண டிசைனர் சல்வாரில் உள்ளே அவள் நுழைந்த நேரம் மேகனோடு சேர்ந்து அனைவரும் அவள்புறம் திரும்பியிருந்தனர்.

அங்கு அவர்கள் ஐவர் மட்டுமே இருக்க முகத்தில் ஒட்டிய புன்னகை மாறாமல் அனைவருக்குமாய் கை குலுக்கியவள் மேகனை ஒரு முறைப் பார்த்து விட்டு அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹாய்..”

“ஹலோ எப்படியிருக்கீங்க எல்லாரும்?”

“ஃபைன்.. நாங்க இன்னும் ஷாக்ல இருந்து வெளியில வர்ல V.”, என்ற சுகனை மேகன் ஒரு பார்வைப் பார்க்க அவனோ,

“சாரி அண்ணி..”, என்றதில் மெலிதாய் புன்னகைத்தாள் விடியல்.

“வெல்கம் விடியல். விஷயம் தெரிஞ்சு எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம்.”, என்ற யுவனைப் பார்த்து புன்னகைத்தவளாய் அமைதியாய் இருந்த மேகனை ஓரப் பார்வை பார்த்து வைத்தாள்.

“ஆனாலும் எப்படி இது சாத்தியம்?”, என்று சைதன்யா கேட்ட தொனியில் ரகுவந்திற்கு குடித்த தண்ணீர் புரையேறி இருந்தது.

“நீங்க ப்ரபோஸ் பண்ண உடனே அண்ணா ஓகே சொல்லிட்டாரா?”

“என்னது நானா?”, என்றவள் அதிர்ச்சியாய் மேகனைப் பார்க்க ஆண்கள் அனைவரும் அதே அதிர்ச்சியோடு மேகனைப் பார்த்து வைத்தனர்.

“நீங்க இல்லையா!! அண்ணா எனக்கு மயக்கம் வந்துரும்..”

“ரொம்ப ஓவர் பில்டப்பா இருக்கு டா..”, என்றவன் கையிலிருந்த பழரசத்தை ஒரு மிடறு விழுங்கினான்.

“அண்ணா உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணாரா?!! சோ யெஸ் சொல்றது மட்டும் தான் உங்களுக்கு ஆப்ஷனா இருந்துருக்கும்.”

“அவளா.. பத்து நாள் என்னை வெயிட்டிங்கில் வைச்சுருந்தா சுகன்.”, என்றதில் பிறரறியாமல் அவனது கையில் தட்டினாள் விடியல்.

“உண்மை தான..”, என்றவனின் பார்வை வெகு சாதாரணமாய் தன்னவளை விழுங்கிக் கொண்டிருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

Fathima.ar September 12, 2026 - 7:38 am

Impressive writing sriii…

EswariSkumar September 12, 2026 - 8:24 am

Super 👌👌👌

Kavi Natarajan September 12, 2026 - 8:49 am

Super ud sri ma
Eagerly waiting for next ud ma

Superb

Raji Vijay September 12, 2026 - 12:25 pm

Appuram sis and bro ku ellam ok. Ini parents thaan. Athaiyum Megan paarthupaan.

srichitra September 12, 2026 - 4:31 pm

Nice

suganyavel September 12, 2026 - 9:17 pm

Super💕

Mathy September 15, 2026 - 11:45 pm

❤️❤️❤️❤️

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode