743
“ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
மு.வ விளக்கம்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
காரில் அமர்ந்திருந்த விடியலுக்கு நடந்த எதையும் இன்னும் நம்ப முடியவில்லை. அதிலும் மேகன் என்பவனின் ஆதிக்கம் அவளிடத்தில் அதிகமாகவே இருந்தது.
அப்போது தான் கைப்பேசியின் நினைவு வர எடுத்துப் பார்த்தால் தந்தையிடமிருந்தும் விஜயிடம் இருந்தும் அழைப்புகள் வந்திருந்தன. முதலில் தந்தையை அழைத்தவள்,
“ப்பா..”
“சின்னு எங்கே போயிட்ட நீ? கால் பண்ணினாலும் எடுக்கலை?”
“ப்பா டென்ஷன் ஆகாதீங்க சும்மா கொஞ்ச நேரம் வெளியில் போலாம்னு..”, என்றவளின் குரலில் மறைக்க நினைத்தாலும் சற்று உற்சாகம் இருந்தது.
“விஜியும் வரலை. ஏன் டா தனியா போற..”
“ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்.”
“சரி டா பார்த்து போ.”, என்றவர் வைப்பதற்கும் விஜய் அவளை மீண்டும் அழைப்பதற்கும் சரியாய் இருந்தது. அவனிடமும் விவரம் கூறி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
உள் நுழையும் போதே வெகு நாட்களுக்குப் பின் மகளின் முகம் உற்சாகமாய் இருப்பதைப் பார்த்த வாசந்திக்கு நிம்மதியாய் இருந்தது.
“ம்மா எனக்கு எதாவது பண்ணித் தரியா?”
“என்ன டி வேணும்?”
“எதாவது..”, என்றவள் தனதறைக்குள் சென்று விட வாசந்தி புன்னகையோடு சமையலறைக்குள் சென்றார்.
கண்ணாடியின் முன் நின்றவளுக்கு தன் மீது இன்னுமும் மேகனின் வாசனை இருப்பதைப் போன்றதொரு எண்ணம்.
இந்த காதலை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. கண்டதும் ஈர்ப்பு வெகு விரைவிலேயே காதல் அவனைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் மலையளவு நம்பிக்கை இருக்கிறது.
இந்த ஜென்மத்தில் அவனில்லாத வாழ்க்கை என்ற பேச்சிற்கே இடமில்லை எனுமளவிற்கு மனதிடமும் இருந்தது.
அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றி விட்டான் அவளின் மாயவன் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நினைவுகளில் மொத்தமாய் தன்னவனை நிரப்பிக் கொண்ட வண்ணம் உடை மாற்றி வந்து தாயுடன் அமர்ந்தாள் விடியல்.
“என்ன டி இரண்டு நாளா மூஞ்சியைத் தொங்க போட்டுட்டே அலைஞ்ச.. இப்போ பயம் போயிடுச்சா?”, என்ற தாயைப் பார்த்துச் சிரித்தவள்,
“ம்ம் மொத்தமா..”, என்று கூறி கண் சமிட்டினாள்.
“ம்ம் இப்படி இருக்குறதை விட்டுட்டு எங்களையும் பயமுறுத்தி.. என்னென்ன அநியாயம் பண்ணிட்ட..”, என்றவர் செல்லமாய் மகளின் முதுகில் தட்டிச் சென்றார்.
இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த இளங்கோவிற்குமே மகளைப் பார்த்து சற்று நிம்மதியாய் இருந்தது.
உணவை முடித்து தனதறைக்கு வந்தவளுக்கு பார்வை மொத்தமும் அவளது கைப்பேசியில் தான்.
அவனிடமிருந்து நிச்சயம் அழைப்பு வரும் என்று தெரியும். அதே நேரம் தானாகவே அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணினாள்.
தனது பெர்சனல் ஐடி மூலம் சமூக வலைதளத்தில் அவனது பெயரைத் தேடி ப்ரொஃபைலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தாள்.
மேகன், மேகன் மஞ்சுநாத் என்று ஆங்கிலத்தில் எப்படி தட்டினாலும் எதுவுமே கிடைக்கவில்லை.
சட்டென ஏதோ தோன்ற தமிழில் அவனது பெயரைத் தேட கிடைத்து விட்டது.
புன்னகையோடு அதைத் திறந்தவள் அவனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிட்ட படி இருந்தாள்.
அதில் மில்லியன் வ்யூஸ்களைக் கடந்த ஒரு வீடியோவை என்னவென பார்க்க அவனது தலைமுடியை கலைத்து காற்றில் அவன் முடிக்கற்றைகள் பறக்கும் படி தலையை அசைத்த வண்ணம் பார்மல் வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்டுமாய் இருந்தது.
அந்தக் கேசத்தை வருடும் எண்ணத்தில் திரையைத் தடவியவள் அவனை ஃபாலோ செய்ததோடு அந்த வீடியோவிற்கு லைக்கும் செய்து வைத்தாள்.
அடுத்த சில நொடிகளில் அவனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. முகத்தின் புன்னகை பெரிதாக அழைப்பை ஏற்றாள் விடியல்.
“எப்படி கண்டுபிடிச்ச?”, என்றவனின் கேள்வியில் மெலிதாய் சிரித்துக் கொண்டவள்,
“உங்களுக்குத் தமிழ் தனி அழகு. அதை வைச்சு தான்.”
“அப்பறம் வேற?”
“என்ன வேற?”
“வேற என்ன அழகுனு கேட்டேன்..”
“..”
“ஸ்பீக்..”
“இதோ இப்படி என்னை மிரட்டுறது..”
“இதுவே மிரட்டுறதா.. ஓகே வேற?”, என்றவன் எதையோ எதிர்பார்த்து தான் கேள்வியை முன் வைத்தான்.
“ஏன் இப்படி கேட்குறீங்க..”
“ஏன்னால் அந்த கேவிக்கான சரியான பதிலை எதிர்பார்க்குறேன்னு அர்த்தம்.”, என்றதில் யோசித்தவள் தயக்கமாய்,
“உங்க.. உங்களோட லாங் ஹேர் எனக்குப் பிடிக்கும்.”, என்றதில் மேகனின் முகத்தில் புன்னகை.
“பிடிக்காதுனு நினைச்சேன்.”
“ஏன்?”
“அம்மாக்கு இது பிடிக்காது. என்னோட விருப்பத்துக்காக ஒண்ணும் சொல்லாம விட்டுட்டாங்க..”
“ஓ..”
“யூ ஆர் டுயிங் சம்திங் மா சின்னு..”, என்றவனின் குரல் இன்னுமே ஆழ்ந்து ஒலித்தது.
“ஏன்.. சின்னு?”
“எல்லாரும் கூப்பிடுறதையே நானும் ஏன் கூப்பிடணும்?”
“என்னை அப்பா சின்னு தான் கூப்பிடுவாரு..”
“ரியலி?”
“ம்ம் அதுல ஒரு மாதிரி பாதுகாப்பு கிடைக்கும். நீங்க அப்படி கூப்பிடும் போது..”
“கூப்பிடும் போது?”
“ரொம்ப க்ளோஸா உரிமையா ஃபீல் பண்றேன்..”
“இந்த சென்ட்சூரியோட காதல் அகராதி தெரியாத இரண்டு பேர் காதலிக்கும் போது இவ்வளவு அழகாயிருக்கும்னு தெரியாம போச்சு.”
“எனக்கும் இதெல்லாம் எப்படி சாத்தியம்னு கேள்வி இருந்துட்டே இருக்கு.”
“சும்மா ஒரு நாள் பார்த்ததுக்கே இப்படி காதல்னு பின்னாடி சுத்துறானேனு நினைக்குறியா?”
“அது தப்புனு சொல்லுவீங்களா? உங்க லெவல்க்கு நீங்க பல பேரை பார்த்து பழகிருக்க வாய்ப்பிருக்கு.
அப்படியிருக்கும் போது நான் அந்த இடத்தில் எப்படினு யோசனை இல்லாம போகுமா?”
“நான் ரொம்ப பிசினஸ் மைண்ட் யாரையும் அந்தக் கண்ணோடத்துல பார்த்து தான் பழக்கம். அதில்லாம நான் நிறைய சந்திச்சது பார்வையால என்னை விழ வைக்க நினைச்சவங்களை தான்.”
“..”
“தப்பா சொல்லலை பட் என்னைத் தடுமாற வைக்க நினைச்ச பார்வைகள் தான் நிறைய பார்த்துருக்கேன். என்னைப் பார்த்து தடுமாறின ஒரே பார்வை உன்னோடது மட்டும் தான்.”
“..”
“தமிழ்ல நிறைய பார்த்தும் படிச்சும் இருப்பியே?”
“எதைப் பத்தி?”
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கைண்ட் ஆஃப் லவ்..”
“!!”
“அதுதான் நம்மளோடதுனு உறுதியா இருக்கேன்.”
“மேகன்..”
“ம்ம்..”
“என்னை உங்க காதல்ல மொத்தமா கரைச்சுருவீங்கனு நினைக்குறேன்.”
“அப்போ இன்னும் நீ கரையலையா?”, என்றதில் முகத்தின் சிவப்பு அதிகரித்திருந்தது விடியலுக்கு.
“சைத்துகிட்ட விஷயத்தை சொல்லணும்.”
“அதுக்குள்ளேயா?”
“அவளுக்கு ஏற்கனவே தெரியும் உன் சம்மததுக்காக நான் காத்துருக்கேன்னு..”
“என்ன சொல்றீங்க!!”
“என் வாழ்க்கையில என்னோட ரொம்ப க்ளோஸா இருக்குற ஒருத்தர்னால் அது சைத்து. அம்மாவை விட அவளுக்கு நான் தான் வேணும் எல்லாத்துக்கும்.
அதே மாதிரி எனக்கும் அவகிட்ட எதையும் மறைக்கணும்னு தோணிணது இல்ல. நாளைக்கு மார்னிங் அவளைப் பார்த்து பேசிட்டு வரலாம்னு இருக்கேன். அவ பேச விருப்பபட்டா உனக்கு கால் பண்றேன்.”
“ம்ம் சரி மேகன் கால் பண்ணுங்க..”
“மரியாதை கொடுத்து தள்ளி நிறுத்தாத..”
“அது.. அப்போ எதோ டென்ஷன்ல..”
“டென்ஷன் ஆக்கினால் அப்போ மரியாதை காணாம போகும்?”
“எப்போவாவது கூப்பிட்டா தான் அதுக்கான அழகு கிடைக்கும்.”
“பைன். மென்டலிஸ்ட் சொன்னா சரியா தான் இருக்கும்.”
“ஐ லவ் யூ மேகன்.”, என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
மறுநாள் காலையிலேயே தங்கைக்கு அழைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு மாலுக்குச் சென்றான். அறைக்குள் நுழைந்தவள் அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்,
“அண்ணா சீக்கிரம் சொல்லு.. உன் கால் வர்றதுக்காக எவ்வளவு காத்துட்டு இருந்தேன் தெரியுமா?”, என்றதற்கு பதில் கூறாமல் விடியலின் புகைப்படத்தை எடுத்து தங்கையிடம் நீட்டியிருந்தான்.
“V யா??!!!!”, என்றவளின் குரலில் பெரும் ஆச்சரியம்.
“உனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா ண்ணா?”
“இல்ல.. உன் பங்ஷன்ல தான் முதல்ல பார்த்தேன்.”
“என்ன சொல்ற அதுக்குள்ளே லவ்வா? அண்ணா விளையாடாத..”
“இதிலெல்லாம் நான் விளையாடுவேன்னு உனக்குத் தோணுதா?”
“இன்னும் நான் ஷாக்ல தான் இருக்கேன். அதிலேயும் முதல் ஸ்டெப் உன் பக்கம்னு என்னால நம்ப முடியலை.”
“சைத்து எனக்கென்னவோ ஷி இஸ் த ஒன் அப்படினு தோணுது. அவளுக்கும் அப்படி தான். பட் சம்மதிக்குறதுக்கு இவ்வளவு டைம் ஆக்கிட்டா..”
“உனக்கு பிடிச்சுருக்குனால் எனக்கும் ஓகே தான். ஆனால் அப்பா அம்மா.. ஏத்துப்பாங்கனு தோணுதா?!”
“வொய் நாட்..”
“அண்ணா என் கல்யாணமே உன்னோட சப்போர்ட்னால தான் நடந்தது. அப்படியிருக்கும் போது இப்போ நீ சொல்ற விஷயம்..
அல்மோஸ்ட் ஷி இஸ் கோயிங் டு பி த க்வின் ஆஃப் MR Groups. சுலபமான விஷயமா எனக்குத் தோணலை.”, என்றதற்கு மெலிதாய் புன்னகைத்து தங்கையின் முன் தலையை அசைத்தான்.
“மேகன் நினைச்சால் நினைச்சது நடந்தே தீரும் சைத்து. நடத்திக் காட்டுவேன். டோண்ட் வொரி.”, என்றவனின் முகபாவம் அவனது உறுதியைக் காட்ட சைத்ராவுக்கு சற்றே பயமாகிப் போனது.
ஏனோ விடியலால் அண்ணனின் குணத்தைத் தாக்கு பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
அங்கு முகத்தில் தனி ஜொலிப்புடன் அமர்ந்திருந்த விடியலை கவனித்த படியே கோப்புகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தான் விஜய். தற்செயலாய் தலை நிமிர்த்தியவள்,
“என்ன விஜி அப்படி பாக்குறீங்க?”
“என்னவோ வித்தியாசமா இருக்கு விடியல். ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி இருக்கு.
இப்படியே இருங்க. கொஞ்ச நாளா இருந்த டல்னெஸ் இப்போ தான் காணாம போயிருக்கு.”, என்றதில் விடியல் புன்னகைக்க விஜயும் புன்னகைத்து வெளியில் செல்ல எத்தனித்த நேரம்,
“விஜி..”
“சொல்லுங்க விடியல்..”
“ஒரு நிமிஷம் உட்காருங்க..”, என்றவள் அவன் அமர்ந்ததும் சிறு தயக்கத்திற்குப் பின் நடந்த அனைத்தையும் மேலோட்டமாய் கூறியிருந்தாள்.
“நேத்து நிலைமையில் எப்படி என்னால அவரை உடனே கூப்பிட முடிஞ்சுதுனு எனக்கே ஆச்சரியம் தான்.
பட் யோசிச்சு பார்த்தா முதல்ல இருந்தே அவரை எனக்கு பிடிச்சு தான் இருந்திருக்கு.”
“…”
“என்ன விஜி ஒண்ணும் சொல்ல மாட்றீங்க?”
“இன்னும் ஷாக்ல இருந்து வெளியே வரலை விடியல்..”, என்றதில் புன்னகைத்து தலை குனிந்து கொண்டாள்.
“ஒண்ணு மட்டும் கன்ஃபார்ம் விடியல்..”, என்றதில் விஜயை அவள் ஏறிட,
“மேகன் சாரைப் பத்தி நான் கேள்விப்பட்ட வரை பயங்கர அட்டிட்டியூட் பெர்சன்.
நீங்க சொன்னதுக்காக அவர் அமைதியா இருந்தார்னு நீங்க சொல்றதெல்லாம்..”
“..”
“ஐ திங்க் நீங்க ரொம்பவே லக்கியான ஒரு மனைவியா தான் இருக்கப் போறீங்கனு தோணுது.”, என்றதில் விடியலுக்கு மனதிற்குள் ஒருவித சொல்லிலடங்கா பரவசம்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
7 comments
Innum konjam perusaa irunthaa thaan enna
Ean avasaram Ean avasaram sollu kanne
💞💞💞💞💞💞💞
Nice update 👍👍
Super💕
Nice
❤️❤️❤️
நைஸ் அப்டேட் 🤩🤩🤩