எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு

மு.வ விளக்க உரை: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

காலை முழுவதும் நல்ல தூங்கியிருந்ததில் இரவில் தூக்கம் வராதவளாய் விடியல் மடிக் கணினியில் சமூக வலைதளப் பக்கங்களையும் அவளது ஷோவிற்குத் தேவையான விவரங்களையும் பார்த்த படி பொழுதை ஓட்டினாள்.

வழக்கம் போல் நடுராத்திரியில் அவளது கைப்பேசி ஒலிக்க வேகமாய் எடுத்து அதன் சத்தத்தை குறைத்தாள்.

“சரியான ஆந்தையா இவன். நேரங்காலமே இல்லாம எப்படி கூப்பிடுறான்.”, என்ற மைண்ட் வாய்ஸ் முடிவதற்குள் அடுத்த அழைப்பு.

“ஹே ஷ்ஷ்..”, என்றவள் அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தாள்.

“என்ன ஷ்ஷ்?”

“நீங்க தூங்கவே மாட்டீங்களா?”

“நீ அதுக்குள்ளே நீங்க ஆயிடுச்சு..”

“ஆமா காலையில என்ன பேசினோம்?”

“உனக்கு நியாபகம் இல்லையா?”

“இல்லையே சொல்லுங்க. எதுக்கு கால் பண்ணிருந்தீங்க?”

“எப்படியிருக்கனு விசாரிக்க தான்.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நீ தான் ஆபீஸ்க்கு வரலையே..”

“அவ்ளோ தான் பேசினோமா?”

“ஏன் உனக்கு வேற எதுவும் தோணுதா..”

“மேகன்..”

“ம்ம்?”

“இது வேண்டாமே.. நாம நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கலாம். அது தான் உங்ககிட்ட என்னோட எல்லையா இருக்கும்”

“என் எல்லையையும் எனக்கானவங்க யாருங்கிறதையும் நான் முடிவு பண்ணி தான் பழக்கம்.”

“!!”

“எனக்கு நீ ப்ரெண்டா வேண்டாம்.”

“…”

“காலையில் சொன்னது தான் இனி நான் சாகுற வரைக்கும்..”

“என்னது.. என்ன சொன்னீங்க??!!”

“மேகன் லவ்ஸ் விடியல் இதில் எப்பவும் மாற்றம் இல்ல புரியுதா..”

!!!”

“ஹலோ விடியல்?!”

“ஆங்?!”

“தேவையில்லாத பயத்தை நம்புற. என்னை நம்ப மாட்டியா?”

“..”

“நான் என்ன பண்ணினா உனக்கு நம்பிக்கை வரும்..”

“அது.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

“நான் ரொம்பவே ப்ராக்டிக்கலா இருக்கேன். நீ சொல்லு என்ன பண்ணினால் உன் பயம் போகும்? என் மேல நம்பிக்கை வரும்?”

“எனக்கு இனி கால் பண்ணாதீங்க..”

“அதனால என்ன நடக்கும்?”

“என்னால உங்க கூட பேசாம உங்களை நினைக்காம இருக்க முடியுமா இல்லையானு தெரிஞ்சுரும்.”

“ஒருவேளை பேசாம இருக்க முடிஞ்சா?”

“..”

“ஸ்பீக்…”

“முடிஞ்சா அப்படியே உங்க காதலை நிராகரிச்ச ஒருத்தியா என்னை வெறுத்துடுங்க..”

“ஆர் யூ ஷுவர்?”, என்றவனின் தொனி விடியலை சட்டென ஆம் என்று சொல்ல முடியாமல் செய்திருந்தது.

“என்ன சொல்லு.. எனக்கு இப்படி தான் வெளிப்படையா இருக்க முடியும்.”

“யெஸ் ஐ அம் ஷுவர்.”

“பைன். நீயா என்னைக் கூப்பிடாத வரை இனி நான் உன்னோட பேச மாட்டேன். பை.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க இங்கு விடியலின் கண்களில் கண்ணீர் கோடாய் வழிந்தது.

அவளுக்கு மட்டும் இதென்ன பிடித்தமானதாகவா இருக்கிறது. அவனைப் பிடிக்கிறது. அவனின் ஆளுமை பிடிக்கிறது.

தன்னிடம் லேசாய் குழைந்து போகும் அந்த ஆழ்குரல் அத்தனை பிடிக்கிறது. ஆனால் அதையும் மீறிய அவளின் எதிர்கால பயம் பெரிதாய் தெரிந்தது.

இருக்கட்டும் இதுவும் நல்லதுக்கு தான். நமக்கு பிடித்தவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்திவிடக் கூடாது என்று நினைப்பதும் காதலாகத் தானே இருக்க முடியும்.

மேகனுக்கோ தன் தாய் தந்தைக்கோ எவ்வித இடையூறும் வர வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள் விடியல்.

காலை எழுந்தவள் பழைய படி தன்னுடைய அன்றாடங்களில் தன்னைத் தொலைத்து சுறுசுறுப்பாய் பழைய விடியலாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாள்.

அன்று யுவன் நிரோஷா திருமணம் கோலாகலமாய் தொடங்கியிருந்தது. தனதறையில் இருந்து வெளி வந்த மகனை ராதிகாவின் கண்கள் வாஞ்சையாய் தழுவின.

“என்ன மாம்?”

“அழகாயிருக்க கண்ணா..”, என்றவர் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க மேகனோ அவரை முறைத்தவனாய்,

“மாம்…”

“என்ன டா நீ பெரிய பிஸினஸ் மேன் தான். ஆனா எனக்கு எப்பவும் என் செல்ல பிள்ளை தான்.”

“என்னாச்சு உங்களுக்கு?”

“என்னவோ ஒரு வித்தியாசம் டா உன் முகத்தில். ஆனா பார்க்க நல்லாயிருக்கு.”, என்றதற்கு ஒன்றும் கூறாமல் அவரோடு நடக்க ஆரம்பித்தான்.

“அப்பறம் உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”

“எப்பவும் போல தான் கண்ணா.. ஆனால் எனக்கு தான் முன்னே விட இன்ட்ரெஸ்ட் குறைஞ்சுட்டு வர்றதா தோணுது.”

“ஏன் மாம்?”

“சைத்து கல்யாணம் முடிஞ்சுது அடுத்து உன் கல்யாணம் பாட்டி ப்ரமோஷன் இதெல்லாம் நடந்தா நல்லாயிருக்கும்னு தோணுது.

சிம்பிளா சொல்லணும்னால் ரிடெயர் ஆகுறதுக்கு நான் ரெடி ஆயிட்டேன்.”, என்ற ராதிகா மகனைப் பார்த்து புன்னகைத்தார்.

“அப்பாவோட ஹெல்த் நினைச்சு கவலைப் படுறீங்களா மாம்?”, என்றதில் ராதிகா அமைதியாய் நடந்தார்.

“வேர்ல்ட்ஸ் பெஸ்ட் டாக்டர்ஸ் பார்த்துக்குறாங்க. உங்க பயம் தேவையில்லாததுனு உங்களுக்கே தெரியணும்.”

“டாக்டர்ஸ் கையில நம்ம வாழ்க்கை இருக்கு தான். அதை விட விதினு ஒண்ணு இருக்குல.”

“..”

“அப்பா வேலை வேலைனு ஓடிட்டு இருந்தவர். இப்போ அவரால முன்னே மாதிரி வேகமா எதுவும் செய்ய முடியுறதில்ல. அதனாலேயே மைண்டை குழப்பிக்குறார்.

அதுவே அவருக்கு ஒரு இரிட்டேஷனைக் கொடுக்குது. இதில் நானும் வேலை வேலைனு ஓடும் போது அவருக்கு…”

“உங்க இரண்டு பேருக்கும் நடுவில் எதுவும் பிரச்சனையா மாம்?”, என்றவன் நின்று தாயின் கரம் பற்றினான்.

“ச்ச.. ச்ச.. அதெல்லாம் எதுவுமில்ல கண்ணா. அவர் லோன்லியா ஃபீல் பண்றாரோனு எனக்கு ஒரு எண்ணம்.”

“நான் இந்த கோணத்தில் யோசிக்கலை. அவருக்கு நல்ல ரெஸ்ட் கிடைக்கட்டும்னு நினைச்சேன். நீங்க வருத்தப்படாதீங்க.

அப்பாவை இனி என்கேஜ்டா வைச்சுக்க வேண்டியது என் பொறுப்பு. ஹி வில் பீ ஆல்ரைட் மாம்.”, என்றவன் அவரது தோள் பற்ற மகனை இடையோடு கட்டி சாய்ந்து கொண்டார் ராதிகா.

திருமண மண்டபத்தை அடைந்த நேரம் அனைவருமாய் மேகன் குடும்பத்தை வரவேற்க நேத்ரா அவனைத் தவிர்க்க கருதி அமைதியாகவே இருந்து கொண்டாள்.

அதை கவனித்தவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அவளைக் கடந்து செல்ல மஞ்சுநாத் முன்னிருக்கையில் அமர்ந்ததும் மேகனின் கரம் பற்றி தன்னுடன் அழைத்தார் அவனின் அத்தை.

அங்கிருந்த அறைக்குள் அவரோடு சென்றவன் கேள்வியாய் பார்த்து நிற்க மாமாவும் உள்ளே வந்திருந்தார்.

“என்ன அத்தை எதுவும் ப்ராப்ளமா?”

“கண்ணா.. அது..”, என்றவர் பேசத் தயங்க அவரது கணவரோ பட்டென்று மேகனிடம் கேட்டிருந்தார்.

“நேத்ராகிட்ட நோ சொல்லிட்டியாமே மேகன்?”

“ஏங்க நான் பேசுறேன்..”

“அத்தை இருங்க.. ஆமா மாமா யாரோ அவளைத் தேவையில்லாம குழப்பிருக்காங்க. அதை நான் ஆரம்பத்துலேயே தெளிவு படுத்திட்டேன்.”

“எங்களுக்கு இந்தக் கல்யாணம் நடக்கணும்னு எண்ணம் மேகன்.”

“..”

“உங்க அப்பாவுக்கும்..”

“வாட்?”

“ஆமா என்ன டி வேடிக்கை பாத்துட்டு இருக்க சொல்லு..”

“கண்ணா எங்க விருப்பத்தை அப்பாகிட்ட சொன்னோம் அவருக்கும் இஷ்டம் தான். நீ சரினு சொன்னால்..”

“அத்தை இது நடக்காது. என்னை கட்டாயப் படுத்த நினைக்காதீங்க. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல.”

“என் பொண்ணு இப்படி வருத்தப் படுறதை என்னால பார்க்க முடியலை மேகன்.”, என்ற மாமாவை நோக்கியன்,

“இரண்டு நாள் பொண்ணு வருத்தப்படுறதையே தாங்க முடியலைனு சொல்றீங்க.

ஆனால் பிடிக்காத கல்யாணத்தை பண்ணிகிட்டு அவ வாழ்க்கை முழுசும் கஷ்டப்பட்டா பரவால்லையா உங்களுக்கு?”

“மேகன்!!”

“நான் நம்ம எல்லாரோட நல்லதுக்காகவும் தான் இதுக்கு இங்கேயே முடிவு கட்டுறேன் மாமா.

தப்பா நினைக்காதீங்க.”, என்றவன் வெளியேறியிருக்க அவரோ மனைவியை உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருந்தார்.

நடந்ததில் விடியல் மேல் கண்மன் தெரியாத கோபம் வந்தது. அவள் சம்மதம் கூறியிருந்தால் எதைப் பற்றியும் யோசிக்காது அவளை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வெளிப்படையாகவே கூறியிருப்பான்.

கோவத்தில் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தவனின் முதுகில் கை வைத்தாள் சைத்ரா.

“அண்ணா..”

“யா.. வா சைத்து.. இங்கே என்ன பண்ற நீ?”

“உன்னைப் பார்க்க தான் வந்தேன். ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஐ அம் ஓகே.”

“உன்னை எனக்குத் தெரியாதா? என்னாச்சு ண்ணா?”, என்றதில் கைப்பிடியை பற்றியே வண்ணம் தூரத்தை வெறித்திருந்தான்.

“சரி நீ எதையும் நினைச்சு டென்ஷன் ஆகாத ண்ணா.. எல்லாம் சரியாயிடும் சீக்கிரமே..”

“சைத்து எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சுருக்கு..”, என்றதில் சைத்ராவிற்கு கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு விரிந்தன.

“ண்ணா!!!”

“ரொம் சந்தோஷப்படாத. அவ இன்னும் ஓகே சொல்லல.”

“என்னது? உனக்கு ஓகே சொல்லலையா? நீ தானா பர்ஸ்ட் அப்ரோச் பண்ணின?”

“ம்ம்..”

“நான் கண்டிப்பா கனவு தான் காணுறேன். என் கையை கிள்ளு..”, என்றவளை முறைத்தவனாய் கையைத் தட்டி விட்டான்.

“உன்னையே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு என்னவாம் அவங்களுக்கு?”

“..”

“அண்ணா நீ விளையாடல தான..”, என்றதில் இன்னுமாய் கடுப்பாகியிருந்தான் மேகன்.

“சரி சரி.. நீங்க பேசிப் பார்க்க வேண்டியது தான?”

“என்னை பேசக் கூடாதுனு சொல்லிட்டா..”, என்றவனின் குரலில் என்னவோ ஒன்று இருந்தது தங்கைக்கு மேலும் மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“அவங்க சொல்லிட்டாங்கனு நீயும் பேசாம இருக்கியா?!”, என்றவளின் கேள்வி யாரும் சொல்வதை கேட்கும் ஆளா நீ என்ற பொருள் இருந்தது.

“சைத்து நீ போய் வேலையைப் பாரு. எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்.”

“நீ வொரி பண்ணிக்காத ண்ணா.. நான் வேணா பேசட்டுமா அவங்ககிட்ட?”, என்றதில் மெலிதாய் புன்னகைத்தவன் தங்கையின் தலையில் கரம் வைத்து ஆட்டினான்.

“எங்க போயிட போறா. வருவா. அதுவரை நீ அமைதியா இரு. யார்கிட்டேயாவது சொன்னனு தெரிஞ்சுது..”, என்றதில் வேகமாய் வாயை மூடிக் கொண்டு புன்னகைத்தாள்.

“அண்ணியை சீக்கிரமே பார்க்கணும் ண்ணா..”, என்றவளின் மகிழ்ச்சியில் மேகனின் புன்னகை விரிந்தது.

தங்கை அங்கிருந்து சென்றதும் கைப்பேசியை எடுத்து அவளது புகைப்படத்தை சூம் செய்தபடி சில நொடிகள் பார்த்திருந்தான்.

தங்கை கூறியது போல் நீ சொன்னா நான் பேசாம இருக்கணுமா? என்ற எண்ணம் வந்து அழைக்க பரபரத்த கரங்களை அவன் அடக்கிக் கொண்டதன் காரணம் அவனுக்கே புரியாதது தான் ஆச்சரியம்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

6 comments

Fathima.ar September 9, 2026 - 8:06 am

Sol pochu ketkura Sundaranaaaa megannn

Kavi Natarajan September 9, 2026 - 8:45 am

💞💞💞💞💞💞💞💞

EswariSkumar September 9, 2026 - 9:22 am

சொன்ன பேச்சை கேக்கனும்… அதுதான் காதல்ல முதல் பாடம் மேகன்😜😜😜😜😜

Mathy September 9, 2026 - 10:32 am

நைஸ் அப்டேட் 🤩🤩🤩

srichitra September 9, 2026 - 5:56 pm

Nice

suganyavel September 9, 2026 - 6:18 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode