176
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் நேரமாவதை உணர்ந்து முகத்தை துடைத்து தயாராகச் சென்றாள்.
ஹாலிற்கு வர தமிழ் கண்மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்..அவள் சத்தம் கேட்டு திரும்பியவன்,
“வாவ் லுக்கிங் க்ரேட் நிரு.. ஹரிஷ் கிளம்பிட்டேன்னு சொன்னான் அதுகுள்ள நா ரெடி ஆய்ட்டு வந்துரேன்..”
ஒன்றும் பேசாமல் பேசவும் தோன்றாமல் அவள் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை சரிப்பார்த்தாள்.
ஹரிஷ் வந்ததை தெரிவிக்க அவனை தேடிச் செல்ல அதற்குள் அவனே வந்திருந்தான் அழகிய நீல நிற சட்டையும் சாம்பல் நிற ப்ளேசருமாய் அம்சமாய் இருந்தான்..
விழிவிரிய தன்னை பார்த்து நிற்பவளை கண்டவன் எப்படியிருக்கு உன் செலெக்ஷன் என மெதுவாய் கேட்க,
“ஹாங்ங்ங் நல்லாயீருக்குங்க. கலர் உங்களுக்கு ரொம்பவே சூட் ஆகுது..”
“ம்ம் நா கேட்டது என்னைப்பத்தி “, என கண்சிமிட்டி வந்தவர்களை கவனிக்கச் சென்றான்..
“வாவ்வ் அண்ணா கலக்குறீங்க..”என ஷாலினி அவனுக்கு கை கொடுக்க,
“டேய் தமிழ் என் தங்கச்சி பத்து நாள்ல உன்னையும் பானி பூரியா மாத்திட்டாளேடா”, என ஹரிஷ் பாவமாய் கூற
அனைவருமாய் சிரித்தனர்..அதற்குள் விருந்தினர்கள் வர ஆரம்பித்திருக்க ஒவ்வொருவரிடமும் அவளை உரிமையாய் அறிமுகம் செய்து அவள் விழியறிந்து தேவையுணர்ந்து தனிமை கொடுத்து என அக்கறையாய் பார்த்துக் கொண்ட போதிலும் தவறி கூட அவள்மேல் அவன் விரல்கூட படவில்லை..
நாசூக்காய் யார் பார்வைக்கும் உறுத்தாத வாறு அவளிடமிருந்து நகர்ந்தான்…
அனைவரோடும் சேர்ந்து அன்றைய மாலை அழகாய் கழிந்தது..
மிஸஸ் தமிழ் என ஒவ்வொருமுறை அழைக்கப்படும் போதும் மனதில் மலையோர குளிர் காற்று வீசி இதமளளிப்பதாய் தோன்றியது நிர்பயாவாற்கு..
அனைவரும் கிளம்பிய பின் வீட்டை ஓரளவு க்ளீன் செய்து அவள் படுக்கச் செல்ல..
“நீ போய் தூங்கு நிரு ரொம்ப டாயர்டா தெரியுற எனக்கு ஒரு கால் பேச வேண்டியது இருக்கு ஒரு ஹாவ் அன் அவர்ல வரேன் ஓ.கே யா..குட் நைட்..”
அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது..இந்த பத்து நாட்களும் அவன் அருககாமையிலேயே தூங்கிப் பழகியவளுக்கு ஏனோ சட்டென தனிக்காட்டில் விடப்பட்டதாய் தோன்றியது..
இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தலையசைப்போடு தங்களறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
அவள் உள்ளே சென்றதை உறுதிபடுத்தியவன் சரோஜாவிற்கு அழைத்தான்..
“சொல்லு தமிழு என்ன இந்த நேரத்துல. கெஸ்ட்லா வந்துட்டு போயாச்சா??”
“ம்ம் போயாச்சும்மா..”
“என்னடா குரலே சரியில்ல..”
“வந்து ஒரு சின்ன ப்ரச்சனைம்மா..”
“என்னடா???நிர்பயாவ எதாவது சொன்னியா??”
“நீயல்லவோ பெத்த தாய் ஏன்மா ப்ரச்சனைனாலே நாதான் எதாவது பண்ணிருப்பேனா என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு??”
“டேய் விஷயத்தை சொல்லு முதல்ல..”
எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தடுமாறியவன், ”ம்மா அவ கழுத்துல ஒரு காயம்…”,என என்ன சொல்வதென தயங்க,
“ம்ம் புரியுது சொல்லுடா..”
“அம்மா..”
அன்னைக்கு அவளுக்கு புடவை கட்டி விட்டப்போவே பாத்து பதறிபோய் கேட்டேன் தமிழு அழ ஆரம்பிச்சுட்டா இன்னும் ரெண்டு மூணு தழும்பு கூட இருந்தது.
என்ன பிறவிடா அவனெல்லாம்.. அந்த சின்ன குழந்தையை இப்படி பண்ணி வச்சுருக்கான் என அவர் குரல் நடுங்க,
“அம்மா..அழறியா??”
இருடா நா வெளில வரேன் என்றவாறு வாசலுக்கு வந்தவர்,மனசு ஆவேயில்லடா.
அதைபத்தி உன்கிட்டேயும் என்னால பேச முடில சரி அவளே அதுகுள்ள மனசு மாறிக்குவானு விட்டுட்டேன்..
கல்யாணத்துக்கு மறுநாள் அவ புடவைல வந்தத பாத்து ஒரு வேளை சகஜ மாய்ட்டாளோனு நினைச்சு சந்தோஷப்பட்டேன் என அவரும் மென்று முழுங்கினார்..
அவர் கூற வருவதன் அர்த்தம் புரிந்தவன் இல்லம்மா நா இன்னைக்கு தான் கவனிச்சேன்..
ரொம்ப அழுது தீர்த்துட்டா அதுமட்டுமில்லாம என்னென்னவோ பேச எனக்கு கோபம் வந்து கொஞ்சம் ரூடா பேசிட்டேன்ம்மா..
ஆனா இதை தவர அவளை என் வழிக்கு கொண்டு வர வேற வழியே இல்லம்மா..
இருந்தாலும் மனசு உறுத்திட்டேயிருக்கு அதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்டேன்..
புரியுதுப்பா..கவலபடாத எல்லாம் சீக்கிரம் சரி ஆய்டும் நா முதல்தடவை பாத்த நிர்பயாக்கும் இப்போவுமே எவ்ளவோ மாறிருக்கா..
அப்படி நினைச்சவுடனே சட்டுனு தூக்கி போடுற விஷயமா சொல்லு கொஞ்சம் கொஞ்சமா தான் சரி ஆவா..
இருந்தாலும் இனி அவகிட்ட எதுவாயிருந்தாலும் பொறுமையா சொல்லு சின்ன பொண்ணு தான புரிஞ்சுப்பா..
கண்டதை போட்டு குழப்பிக்காம போய் தூங்குடா..வச்சுட்றேன்..
போனை வைத்தவனுக்கு அவளை நினைத்து இன்னமும் வருத்தம் மேலோங்கியது..
தானும் அவளை நோகடித்துவிட்டோமோ என தோன்ற மெதுவாய் அறைக்கதவை திறந்தவனுக்கு முதுகுகாட்டி சுவரோடு ஒட்டி உறங்கிக் கொண்டிருந்தாள்..
தலையை வருட தானாய் சென்ற கைகளை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்திவன் மறு ஓரமாய் படுத்து உறங்க ஆரம்பித்தான்..
அடுத்து வந்த இரண்டு நாட்களுமே இதே போல் நகர பெண்ணவளுக்கோ நெருப்பின் மீது நிற்தாய் இருந்தது..
அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அன்றிரவு தூங்காமல் அவனுக்காக காத்திருந்தாள்..
அவள் தூங்கியிருப்பாள் என எண்ணி வந்தவன்அவளை பார்த்து என்ன செய்வதென தெரியாமல் கட்டிலில் அமர்ந்தான்..
“என்ன நிரு தூக்கம் வரலையா??என்னாச்சு??”
என அவள் கண்ணை பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தவனை ஒன்றும் பேசாமல் இழுத்தணைத்துக் கொண்டாள்..
சற்றும் தாமதிக்காமல் அவள் தலையை வருடியவன் அவளை விலக்கி அமர்த்த அவளே பேசட்டும் என காத்திருந்தான்..
“செல்வா ப்ளீஸ் நா தப்பு பண்ணிருந்தா என்ன திட்டுங்க சண்டை போடுங்க இல்ல நாலு அடி கூட அடிச்சுருங்க ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம்ப்பா ப்ளீஸ் “,எனும் போதே குரல் உடைய,
“எதுவாயிருந்தாலும் அழாம பேசு நிரு..” அதட்டினான்..
“நா இனி அப்படி பேசமாட்டேன்ப்பா.. சத்தியமா இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க கண்டிப்பா முழுசா மாறிடுவேன் ஆனா அதுவரை நீங்க என்னவிட்டு தள்ளி போகாதீங்க..
உங்க கையின் கதகதப்பு இல்லாம ஒரு மாதிரி பயமா இருக்கு..
நா உங்க மடிலயே படுத்துக்கிறேனே “,என குழந்தையாய் கேட்பவளை மறுப்பின்றி தன் மடியில் சாய்த்துக் கொண்டான்..
“லூஸு இதை செய்றதுக்கு உனக்கு ரெண்டு நாள் தேவைப்பட்டுச்சா??”, என தலையில் தட்டியவனை ஆச்சரியமாய் அவள் பார்க்க,
“என்ன முழிக்குற?? நா அப்படி பேசிட்டு போனப்போவே வந்து நாலு அடி கொடுத்து ஏன்டா செல்வா இப்படி பண்றனு கேட்ருக்கலாம் தான??”
அவன் மார்பில் செல்லமாய் குத்தியவள் அவனை இடையோடு சேர்த்து கட்டிவாறு மடியில் படுத்துக் கொண்டாள்…
அடுத்து வந்த நாட்களெல்லாம் தேனிலவாய் மாறிப் போனது இருவருக்கும்..
நிர்பயா நிறையவே மாறியிருந்தாள்.. எந்தவித மன உளைச்சலும் இன்றி சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தாள்.. இருப்பினும் காதலர்களாய் மட்டுமே..
தமிழ் தினமும் எங்காவது அழைத்துச் சென்று வந்தான்..
இருவரின் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாய் அழகாய் நாட்கள் நகர்ந்தது..
தன்னையும் விட தன்னவனை உயிராய் நேசிக்க ஆரம்பித்திருந்தாள்.. அப்படியிருக்க அன்று சரோஜா அவளை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்..
“நிர்பயா நாளைக்கு என்ன ஸ்பெஷல்??கிப்ட் எதாவது வாங்கினியா???”
“கிப்டா???எதுக்கும்மா??”
“அடப் பொண்ணே நாளைக்கு உன் வீட்டுகாரனுக்கு பொறந்தநாள் தெரியாதா உனக்கு???”
ஐயோ அம்மா எனக்கு தெரியாது..சாரி சாரி சொல்லிட்டீங்கல கண்டிப்பா சர்ப்ரைஸ் பண்ணி அசத்திடுறேன் என மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை..
என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என ஏதேதோ எண்ணியவளுக்கு ஒன்றும் புரியவில்லை..
அவனும் வீட்டிலேயே இருப்பதால் அவனை மீறி எங்கும் செல்லவும் முடியாது என்ன செய்வதென மூளையை குடைந்து ஒன்றும் தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்..
“என்ன டீ பொண்டாட்டி என்ன யோசனை??” என பின்னிருந்து அவள் கழுத்தை கட்டியவனை பார்த்தவளுக்கு சட்டென ஓர் யோசனை உதிக்க அவனுக்கு சிரிப்பை பதிலளித்தவாறு அவனோடு பேச ஆம்பித்திருந்தாள்..
அன்றிரவு மணி 12 ஆக பத்து நிமிடமாய் இருக்க தன்னவனின் பிடியில் இருந்தவளுக்கு பயம் அப்பி கொண்டது.. அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்..
அவனை எழுப்பி தான் கூற விரும்புவதை கூறி வாழ்த்து சொல்ல எண்ணம் இருந்தும் ஏனோ தைரியம் மட்டும் வரமாட்டேன் என அடம்பிடித்தது…
இப்படியே சிந்தனையில் இருந்தவள் எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை.. விழிக்கும் போது மணி அதிகாலை 5 என்று காட்டியது..
ஐயோ என்ன பண்ணித் தொலச்சுருக்கேன்..சரியான தூங்கு மூஞ்சி என்னோட இருக்குற பர்ஸ்ட் பர்த்டே அவரு என்ன நினைச்சுருப்பாரு..
கடவுளே என்னையெல்லாம் என்ன பண்றது என தாராளமாய் தன்னை திட்டியவாறே குளித்து தயாராகி வேக வேகமாய் ஏதோ உணவு தயாரித்து விளக்கேற்றி தன்னவனை எழுப்பச் சென்றாள்..
அங்கு மீண்டும் அவனை கண்டு நாக்கு தானாய் ஒட்டிக் கொள்ள,அடடா தூங்குறவர பாத்தே இப்படி நடுங்கினா பர்த்டே விஷ் பண்ணா மாதிரி தான் என தலையில் அடித்துக் கொண்டாள்…
வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு அவனை எழுப்ப,லேசாய் திரும்பியவன் புல் மேக்கப்பில் நின்றவளை கண்டு வேகமாய் எழுந்தமர்ந்தான்..
“ஏ ரசகுல்லா என்னதிது காலைலேயே புல் மேக்கப்ல ஓ நோ..நீயே புடவை கட்ட படிச்சுட்டியா??
வெரி சேட் நீ ரொம்ப மோசம் டீ எனக்கிருந்த ஒரே வேலையையும் இப்படி பறிச்சுட்டியே..”
“அட கொஞ்சம் மூச்சு வாங்கிக் கோங்களேன் ஏற்கனவே நா பேசுறது கஷ்டம் இதுல நீங்களும் இப்படி பண்ணா நா என்ன தான் பண்ணுவேன்??”
பேசி முடித்தவளை அப்பட்ட அதிர்ச்சியை முகத்தில் காட்டியவாறு பார்த்தான்..
“வாவ் காலங்காலேலேயே இத்தனை அதிர்ச்சியா என் பொண்டாட்டி என்கூட இவ்ளோ பேசிட்டாளே..
இன்னைக்கு சென்னைல மழையோ புயலோ கன்பார்ம்”, என தலையனையை எடுத்து மடியில் வைத்து கன்னத்தில் கை வைத்தான்..
“ப்பா போதும் போய் குளிங்க போங்க “,எனக் கூற எனக்கு எதுவும் சரியாப் படல என்றவாறே ஷெல்பை திறக்க போனவனை,
“அங்க எங்க போறீங்க??”
“அடியே துண்டு எடுக்க போறேன் அதுக்கு கூட உரிமையில்லையா??”என முறைத்தான்..
“எல்லாம் எடுத்து பாத்ரூம்ல வச்சாச்சு போங்க”
“நீ சரியில்ல ரசகுல்லா இரு வந்து கவனிச்சுக்குறேன்”, என்றவாறு அவன் உள்ளே செல்ல அப்போது தான் அவளுக்கு சுவாசமே சீரானதாய் தோன்றியது..
அவன் வந்த பின் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என மனதிற்குள் ஒத்திகை நடத்தியபடியே டேபிளின் மேல் எதையோ தேடுவது போல்திரும்பி நின்றிருந்தவளின் பின் மெதுவாய் வந்து தலையை உலுக்கியவன் அவள் பதறி திரும்பும்போது பிடிப்பதற்கு தயாராய் நின்றான்..
“என்ன கொஞ்ச நாளா நா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ரூமை விட்டு ஓடி ஒளிஞ்சுக்குவ இன்னைக்கு அப்படி என்ன யோசனை???”
“அது வந்து.நா..”
எனும்போதே தமிழின் போனில் அழைப்பு வர எடுத்துப் பார்த்தால் சரோஜா தான் அழைத்திருந்தார்..
அட்டெண்ட் செய்ய போனவனை தடுத்து மொபைலை தன் கையில் வாங்கியவள் அதை கட் செய்து தன் பின்னிருந்த டேபிளில் வைத்தாள்..
“என்னடீ ஆச்சு உனக்கு??அம்மா கால ஏன் கட் பண்ண குடு பேசலாம் என அவளை தாண்டி கையை கொண்டு போக குனிந்தவனின் இதழோடு தன் இதழைப் பதித்திருந்தாள் அவனவள்..
அவளின் நெருக்கம் அதிகரித்தை உணர்ந்தவன் இடையோடு பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
அவன் பிடியின் இறுக்கத்தால் சற்று நிதானித்தவள் அவனை விட்டு விலக எத்தனிக்க தமிழின் பிடி சற்றே தளர்ந்தது…பின் மெதுவாய் நகர்ந்தவன்,
“ஏ பொண்டாட்டி என் மேல தப்பு இல்ல இதுக்கு நா பொறுப்பே கிடையாது “என இன்னும் அவளை தன் பிடியிலேயே வைத்திருந்தான்..
ஹேப்பி பர்த் டே செல்வா” என அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனைப் பார்க்க,
“தேங்க் யூ சோ மச் மை டியர் பொண்டாட்டி.. பெஸ்ட் பர்த் டே எவர்..
லவ் யூ சோ மச்..”,என அவள் காதோர முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட, பெண்ணவளின் கைகளோ நடுக்கம் கண்டிருந்தது..
அதை உணர்ந்தவன் விளையாட்டாய்,
“அடிப்பாவி கல்யாணமாகி ஒரு மாசத்துக்கப்பறம் தான் கிஸ் லெவல்க்கே வந்துருக்க இதுல எதுக்கு உனக்கு கை வேற நடுங்குது??”,என முன் நெற்றியில் தட்டினான்..
“எனிவே தேங்க் யூ அகெயின் பார் திஸ் வொண்டர்புல் கிப்ட்” என அவள் இதழ்தட்டி அவன் நகர எத்தனிக்க அவன் கரம்பற்றி நிறுத்திவள்,
“உங்க பர்த் டே க்கு எனக்கு ஒரு கிப்ட் வேணும் செல்வா”என மென்குரலில் பாதி தவிப்பும் பாதி பயமுமாய் கேட்டாள்..
“நிரு பர்ஸ்ட் டைம் நீயே வாய தொறந்து என்கிட்ட கேட்டுருக்க எப்படி முடியாதுனு சொல்லுவேன் என்ன வேணும்னு சொல்லு..”
“அப்பறம் பேச்சு மாறமாட்டீங்களே???”
“என் மேல நம்பிக்கையில்லையா??”, என அவள் கண்ணை பார்த்து கேட்டான்..
“எனக்கு..வந்து நமக்குனு.. ஒரு குழந்தை வேணும்”, என நிதானமாய் அவனை நிமிர்ந்து பார்க்க,
என்ன விளையாடுறியா??போ போய் டிபன் எடுத்து வை என அவன் மீண்டும் நகர கூடிய மட்டும் தன் பலத்தை காட்டி அவனை பிடித்து நிறுத்தினாள்..
பேச்சு மாறமாட்டேன்னு சொன்னீங்களே..
ஏன்டீ இப்படி பண்ற??ஒண்ணு பக்கத்துலயே வராம டார்ச்சர் பண்ற இன்னைக்கு என்னனா என்கூடவே இருந்து என்ன ஒரு வழி ஆக்குற..
என் ன பாத்தா பாவமா தெரிலயா உனக்கு என அப்பாவியாய் முகத்தை வைத்திருப்பவனின் முகத்தை கையில் ஏந்தியவள்,
“செல்வா இப்போ இந்த செகண்ட் நா பேசுறதுதான் நிஜம்..
உங்க நிர்பயாவா முழுசா என்ன ஏத்துப்பீங்களா??இத்தனை நாள்ல ஒரு தடவை கூட புருஷனா நீங்க வம்பு மீறினதே கிடையாது..
அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க டிஸைட் பண்ணிணதா இருந்தாலும் இவ்ளோ அக்கறையா என்னை மட்டுமே நினைச்சு எனக்கு நல்லதா மட்டுமே நடந்துக்குறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லப்பா..
அப்படிபட்ட உங்களுக்கு இதைவிட பெருசா ஒரு கிப்டும் என்னால தர முடியாதுப்பா..நா உங்களுக்காக சகிச்சுகிட்டு இந்த முடிவை எடுக்கல.
மனபூர்வமா முழு சந்தோஷத்தோட உங்களோட ஒரு அழகான வாழ்க்கைய ஆரம்பிக்க ஆசப் பட்றேன்..வில் யூ அக்செப்ட் மீ அஸ் யுவர் பெட்டர் ஹாவ்..என அவன் கையைப் பற்றிக் கொண்டாள்..
என்ன கூறுவான் தன்னவளுக்கு சமாதானமாய்..
எத்தனை நம்பிக்கை எத்தனை எத்தனை காதல் அவள் பேச்சில்..பத்து நாட்கள் முன்பு வரை கூட சமனபடாத அவள் மனம் இந்தளவு மாறியிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தான் அவன்..
உண்மையான அக்கறையும் அன்பும் காதலும் எத்தனை பெரிய காயத்திற்கும் அருமருந்தாய் இருக்கும் என்பதை கண்கூட கண்டான்..
தன்னவளை இடைபிடித்து தூக்கி டேபிளில் அமர வைத்தவன்,அவள் நெற்றியோடு நெற்றி உரச மூச்சுக் காற்று அவள் கன்னம் உரச கன்னத்தை அழுத்தமாய் வருடினான்..
“போலீஸ்காரன் பிடி கிடுக்குப் பிடியா இருக்கும் தப்பிக்கவே முடியாது பரவால்லையா???” என காதில் ரகசிமாய் கேட்க அவனோடு ஒன்றிக் கொண்டாள்..
சில வருடங்களுக்குப் பிறகு,
இரவு வேலை முடித்து தாமதமாய் வந்தவன் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்துவர ஹாலில் இரவு விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் நிர்பயா..
“ஹே நிரு என்ன அதிசயம் இன்னும் முழிச்சுட்டு இருக்க??மினி ரசகுல்லா தூங்கியாச்சா??”
“ம்ம் தூங்கிட்டாப்பா..எவ்ளோ பேச்சு பேசுறா எத்தனை கேள்வி கேக்குறா முடீல “, என்றவள் குறையாய் கூறினாலும் குரலில் நிச்சயமாய் பெருமை இருந்தது..
“ம்ம்ம் அவ யாரு பொண்ணு???அப்படிதான் இருப்பா..சரி சொல்லு மேடம் எதை தீவீரமா யோசிச்சுட்டு இருக்கீங்க??”
“அதெல்லாம் ஒண்ணுமில்லயே சும்மா தூக்கம் வரல சரி நீங்க வரட்டுமேனு உக்காந்துருந்தேன்..”
“வாய் ஒண்ணுமில்லனு சொன்னாலும் கண் ஏதோ இருக்குனு கன்பார்மா சொல்லுதே???”
“உங்க போலீஸ் புத்தியே என்கிட்டயே யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா??”
“அட இது புருஷன் புத்திம்மா..உன் கண்ணை பாத்து என்னால கண்டுபிடிக்க முடியாங்கிறியா??”,என அவள் மடியில் தலைசாய்த்துக் கொண்டான்..
என்னதிது யூனிபார்ம் கூட கழட்டாம என வாய் கூறினாலும் கை தானாய் அவன் தலை கோதியது..
“இப்போ சொல்லு என்னாச்சு??”
புதுசா ஒண்ணுமில்லப்பா..வழக்கமா வர்ற நியூஸ்தான் ஆனா ஏனோ மனசைவிட்டு போகவே மாட்டேங்குது..
ஏசிபிக்கு தெரியாதா என்ன இந்நாளின் மனதை பதைக்கும் செய்தி எதுவென்று..
“அந்த பொண்ணை பத்தி சொல்றியா??”
ம்ம்ம் சின்ன பொண்ணுப்பா அவ..ஏழு வயசு என்ன தெரியும்..கொஞ்சமும் இரக்கமே இல்லாம…
குற்றவாளினு அவனை பிடிச்சப்போ அந்த அப்பார்ட்மெண்ட் காரங்களே எப்படி அடிச்சாங்க சாதாரண மக்களுக்கு வர்ற கோபம்கூட அந்த கோர்ட்டுக்கும் ஜட்ஜ்க்கும் வராதா என்ன????
என்ன பண்றது நிரு..போலீஸையும் மீறி கோர்ட்க்கு விஷயம் போறப்போ நாங்க எதுவும் பண்ண முடியுறதில்ல..
இல்ல எனக்கு புரியவேயில்ல..அவனோட அப்பன்லா மனுஷன்தானா நிஜமாவே..
அந்த குழந்தையோட அப்பாகிட்டயே சொல்ருக்கான் நா என் பையனை வெளில எடுத்து காட்றேன் உன்னால ஆனத பாத்துக்கோனு..
பட்டாம்பூச்சி பருவம் தானப்பா அது..மிஞ்சி போனா ஒரு சாக்லேட்க்கு ஆசைப்பட்டு அவனை நம்பி அண்ணா இல்ல அங்கிள் தானனு அவன் வீட்டுக்கு போய்ருப்பாளா அந்த குழந்தை..
அதுக்கு அவளுக்கு கிடைச்ச தண்டனை எரிச்சு சாம்பல் ஆக்கிருக்கான்..
பெத்த மனசு எப்படி துடிதுடிச்சு போய்ருக்கும்..அந்த வயசு குழந்தையை எப்படி தப்பான கண்ணோட்டத்துல பாக்க முடியும்..
இதவிட கொடுமை அவன் ஒரு சாப்ட்வேர்ல வேலை பாக்குறவனாம்..இவன்லா என்ன படிச்சு என்ன ப்ரோஜனம்…
நிஜமா சொல்றேன் அவனை பாத்தா அந்த இடத்துலயே கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட போக தயார்..
நிரு..
இல்ல செல்வா..எனக்கு நடந்த கொடுமையப்போ எனக்கு இந்த தைரியம் வரல ஆனா இப்போ நிறையவே இருக்கு கல்யாண வயசுல இருந்த எனக்கே அது நரக வேதனையா இருந்தப்போ என்ன நடக்குதுனே புரியாம அந்த குழந்தை எவ்ளோ பயந்துருப்பா..
ஏன் இப்படிலா நடக்குது..அந்தகாலத்துல பெண் குழந்தை பிறந்தா அர்த்தமேயில்லாம பயந்து அதை கருவுலயே அழிச்சாங்கா ஆனா இப்போ வயித்துல இருக்குறது என்ன குழந்தைனு தெரிஞ்சா பொண்ணுங்க பிறந்து என்ன கொடுமையெல்லாம் அனுபவிப்பாங்களோங்கிற பயயத்துலயே அழிச்சுடுவாங்க..
செல்வா நம்ம சரோவ நல்ல படியா பாத்துக்கனும்ப்பா..
ஹே லூசு..
இல்லப்பா கேக்குறது அசிங்கமா இருந்தாலும் அதுதான் நிதர்சனம்..
அவளுக்கு நாம அப்பா அம்மாவா இருக்க தேவையில்ல அவளோட ப்ரெண்டா எப்பவுமே அவளுக்கு துணையா இருக்கனும்..முதல் விஷயமே அவ எந்த விஷயமா இருந்தாலும் மறைக்காம நம்மகிட்ட சொல்ற அளவு நம்ம நடந்துக்கணும்..
ஒருபத்து வருஷம் முன்னாடி வர பொண்ணை பத்தி பெத்தவங்களோட அதிகபட்ச கவலையே அவ யாரையாவது லவ் பண்ணிடுவாளோ எதாவது தப்பான முடிவு எடுத்துருவாளோநு தான் நினைப்பாங்க ஆனா இன்னைக்கு இருக்குற நிலைமைல டெய்லி ஸ்கூல்க்கு காலேஜ்க்கு வேலைக்கு போய்ட்டு வர்ற தன் பொண்ணோ அக்காவோ தங்கையோ நல்லபடியா வீடு வரணும்ங்கிற கவலதான் அதிகமா இருக்கு..
சொல்லப் போனா டெய்லி செத்து பிழைக்குற பொழப்பு.. இதுக்கெல்லாம் காரணம் சட்டம் ஒழுங்கா இல்லாதது தான செல்வா..
நிரு அப்படி பொதுவா அதை மட்டுமே சொல்லிட முடியாது..ஆனா அதுவும் ஒரு முக்கிய காரணம்தான்..
ஒரு பொண்ணை சீரழிச்சு நடுரோட்ல தூக்கி போட்டு போறவனுக்கு தையல் மிஷின் குடுக்குற நிலைமைல நம்ம நாடு இருக்குங்கிறது கேவலமான விஷயம்தான் ஆனா அதையும் தாண்டி ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் அதுல பொறுப்பு இருக்கு நிரும்மா..
நீயே சொல்லு இருபது முப்பது பேர் கண்ணு முன்னாடி ஒருத்தன் ஒரு பொண்ணை வெட்டி வீசிட்டு போறான்..
சரி யாரும் அதை அந்த செகண்ட் எதிர்பாக்கலனு வச்சுப்போம் வெட்டும் போது தடுக்கலனாலும் அதுக்கப்பறம் அவனை பிடிக்கனும்னு ஒருத்தருக்கு கூடவா தோணாது..
சாட்சி சொல்லகூட யாரும் தைரியமா வரமாட்டாங்களே..
அதுவும் இந்த சட்டத்து மேல இருக்குற பயத்துனால தான செல்வா..
வந்து சாட்சி சொன்னா நமக்கு என்ன ப்ரச்சனை வருமோ கோர்ட் கேஸ்னு இழுத்தடிப்பாங்களோ இல்ல நம்ம மேலயே கேஸை திருப்பிருவாங்களோனு பயம் இருக்கும்தான அப்படிதான நடக்குது..
ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான் ஆனா ஒருத்தரா சாட்சியா இருக்கும்போது தான அவங்களுக்கு இவ்ளோ யோசிக்க தோணுது..
அங்கிருந்த எல்லாருமே அதுக்காக குரல் கொடுத்தா சட்டத்தால ஒண்ணும் பண்ண முடியாது இல்ல…
எப்பவுமே நமக்கு இருக்குற மைண்ட் செட் யாராவது பாத்துப்பாங்க நமக்கெதுக்கு வம்புநு நினைக்குறது தான்..
தனியா நடக்குற விஷயங்களுக்கு நாம எதுவும் சொல்ல முடியாதுதான் ஆனா நம்ம கண்முன்னே நடக்குற அநியாயத்தை தட்டி கேக்கலாமே..
ஒவ்வொருத்தரும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கனும் நிரு.. இதெல்லாம் பொதுபடையான விஷயங்களுக்கு சொல்றேன்..
ஒரு பொண்ணு மேல கை வைக்குறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஆம்பளைக்கும் தன் குடும்ப பெண்கள் நினைவுக்கு வரணும்..
எப்பவோ ஒரு ஷார்ட் லைன் படிச்சேன் இது சம்மந்தமா..
ஒரு பொண்ணு வேலை முடிஞ்சு அந்த ஆள்நடமாட்டமில்லாத தெருல நடந்து போறா தூரத்துல இருந்து அவளை பார்த்தவனுக்கு அவளை சீண்டிப்பார்க்க ஆசை வருது..
அவ பின்னாடியே போறான்..அவனுகுள்ள இருக்குற மிருகம் அந்த பொண்ணு மேல கை வைக்க சொல்லுது கையை நீட்ட போற நேரம் ஆள் அரவம் உணர்ந்து அந்த பெண் திரும்ப அவனைப் பாத்து சிரிக்குறா..
”அண்ணா நீயா நா யாரோ என்னவோனு பயந்தே போய்ட்டேன்” இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆய்டுச்சு அம்மா போன் பண்ணி உன்ன பாக்க சொன்னாங்களானு அவபாட்டுக்கு பேசிட்டு வர ஒருநொடி தனக்குள்ள எழுந்த ஆம்பளைங்கிற மிருகத்துக்கு செருப்படி கிடைச்சுது..
இதுதான லைவ் நிரு அக்காவோ தங்கையோ இல்லனா கூட உன்ன பெத்தவ ஒரு பொண்ணு தான அவ உன்மேல எவ்ளோ பாசம் கனவு வச்சுருப்பா..
அது மாதிரிதான ஒவ்வொரு பொண்ணும் அவங்க குடும்பத்துக்கு அம்மாவா அக்காவா தங்கையா மகளா எத்தனையோஆசைகளோடும் கனவோடும் இருப்பாங்க..
கட்டின பொண்டாட்டியாவே இருந்தாலும் அவ விருப்பம் இல்லாம தொடுறதே கேவலம் இதுல எந்த உரிமையும் இல்லாம சொல்லப் போனா யாருனே தெரியாத பொண்ணை அழிக்குறதுக்கு பேரு என்ன சொல்ல..
இப்படி தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு என்னைக்கு நமக்கே புரியோதோ அன்னைக்கு தான் இதெல்லாம் குறையும்..
நீ சொல்ற சட்டம்ங்கிறது சின்ன விஷயம் இல்லடா.. லஞ்சம்ங்கிறது என்னைக்கு ஒழியோதோ அன்னைக்குதான் சட்டத்துல மாற்றம் வரும்..
யாரா இருந்தாலும் பணத்தை குடுத்து சரி கட்டிறலாம்ங்கிற திமிருல தப்பு பண்றவங்க தான் ரொம்ப பேரு இந்த நாட்ல..
சோ இதோட அடிப்படையும் மாற்றமும் ஒவ்வொரு தனி மனுஷன்கிட்ட தான் இருக்கு நிரு..
பணத்தை வச்சு எதுவும் பண்ணலாம்னு நினைப்பு இருக்குற வர தப்புகள் தொடர்ந்துட்டேதான் இருக்கும்..
ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்காம கடமையை செஞ்சா தப்பு பண்ணவன் அடுத்து ஐ ஜியை தேடி போறான் அவரும் ஒத்துவரலனா எம் எல் ஏ எம்பி சி எம் பி எம்னு அவங்க அவங்க பதவிக்கு ஏத்த விலை நம்ம நாட்டுல இருக்கு அப்பறம் எப்படி எல்லா குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும் சொல்லு..
மௌனமாய் தன் ஆமோதிப்பை தலையசைப்பில் வெளிப்படுத்தியவளால் அதற்கு மேல் ஒன்றும் கூற தோன்றவில்லை..
இங்க பாரு நிரு இதை விட முக்கியமா பெத்தவங்களா ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு..
பொண்ணுங்கள வளர்க்கும் போதே,இதோ பாரு பொண்ணா அடக்க ஒடுக்கமா இரு..
பசங்களோட பேசாத சத்தமா சிரிக்காத அண்ணன் தம்பி அப்பா இவங்க சொல்றத கேட்டுநடந்துக்கனும்..
கல்யாணத்துக்கப்பறம் புருஷன் சொல்றத கேக்கனும் இதெல்லாம் சொல்ல வேண்டிய காலம் எப்பவோ முடிஞ்சுபோச்சு..
இருந்தாலும் அதை மாதிக்கலா மாட்டாங்க நம்ம அம்மாக்களும் அப்பாக்களும்..
ஆனா அதோட சேர்த்து தன் பையன்கிட்ட,அக்காவோ தங்கையோ மரியாதை குடுத்து பழகு,
அவங்க உடலளவுலயும் மனதளவுலையும் ரொம்பவே மென்மையானவங்க நீ அவங்களை விட பலமா இருக்குறது முக்கிய காரணம் நீங்கதான் அவங்களை பத்திரமா பாதுகாப்பா வச்சுக்க முடியும்ங்கிறதால தான்..
என்னைக்கும் உன் பலத்தை ஒரு பெண்கிட்ட காட்ட நினைக்காத..
உன்னால ஒருபொண்ணு என்னைக்கு அழறாளோ அன்னைக்கு நீ லைவ்ல தோத்துட்டனு அர்த்தம்னு அந்தந்த வயசுல அவங்களுக்கு புரியுறமாதிரி அவங்க மனசுல பதிய வச்சுகிட்டே இருக்கனும்..
மேபி அது கண்டினியூஸா நடக்கும் போது.. ஒரு பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள்ளையாவது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிப்பா குறையுறதுக்கு வாய்ப்பு இருக்கு..
என்னடா??எதையும் போட்டு குழப்பிக்காத நிரு..உன் மனசு நிம்மதிக்காக ஒன்னு வேணா என்னால பண்ண முடியும்..
என்னவென ஆர்வமாய் பார்த்தவளின் மூக்கை செல்லமாய் கிள்ளியவன்..
எங்க டிபார்ட்மெண்ட்ல தினமும் இது மாதிரியான கேஸ் ஆயிரம் வருது அதுல எனக்கு தெரிய வர்ற இல்ல நமக்கு பக்கத்துல இருக்குற பாதிக்கப்படுற பொண்ணுங்களுக்கோ குழந்தைகளுக்கோ நம்மாளான உதவியை நிச்சயம் பண்ணுவோம்..
நீயும் ப்ரீ டைம்ல இதபத்தி நிறைய சேர்ச் பண்ணு அட்லீஸ்ட் அவங்களுக்குநடந்த கொடுமையை மறந்து சாதாரணமான வாழ்க்கை அவங்க வாழறதுக்கான கவுன்சிலிங்காவது குடுப்போம்..
இப்போதைக்கு என்னால இது மட்டும்தான் முடியும்..ஆனா எப்போ எந்த உதவி வேணும்னாலும் சொல்லு நா புல் சப்போர்ட் பண்றேன் சரியா??
தேங்க் யூ சோ மச்ப்பா..இது ரொம்ப நாளா என் மனசுலையும் இருந்த விஷயம்தான் ஆனா எப்படி ஆரம்பிக்கனு புரியாம இருந்தேன்..இப்போ க்ளியர் ஆய்டுச்சு..
லவ் யூ சோ மச் செல்வா..என அவன் நெற்றியில் இதழ் பதித்தவளை நிமிர விடாமல் பிடித்தவன்,வர வர உனக்கு தேங்க்ஸ் சொல்லவே தெரில என இதழ் நோக்கி நிமிர சந்தோஷமாய் தன்னவனோடு ஒட்டிக் கொண்டாள்..
பெண் சுதந்திரம் என்பது அவர்களுக்கு பிடித்த உடையணிவதிலோ ஆண்களுக்கு நிகராக பணிபுரிவதோ இல்லை..ஒரு பெண் எந்த பயமும் இன்றி எந்நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வர முடிவதே..
அந்தளவு இல்லையென்றாலும் ஆண் இனத்தை வெறுத்து விடாத அளவாவது அவளை பார்த்து கொள்வோம்..வருடத்திற்கு ஒருமுறை மகளிர் தினம் கொண்டாடி பெண்ணியம் பேசி மீதி 364 நாட்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை செய்வதில் எந்த பலனுமில்லை..
ஆண்களின் பலம் பெண்களை
கட்டுப்படுத்த அல்ல காப்பாற்றுவதற்கு…
நல்லதொரு மாற்றத்தை முடிந்த மட்டும்
விரைவாய் கொண்டு வருவோம்..
*******முற்றும்*******
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
Super story ma
😍😍
Thank you ka..😍😍😍
https://youtube.com/shorts/8se0lCT892w?si=rgmtd3gGDCv9AAKr
Superb story Sri ma. Last few words correct. Congrats ma.