259
“குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
மு.வ விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.”
சிறியவர்கள் மூவருமாய் அமர்ந்து உணவு உட்கொள்ள மங்கை இதோடு ஐம்பதாவது முறையாய் கூறிவிட்டிருந்தாள்.
“இந்தக் கிழவி இம்புட்டு சிரிச்சு பேசும்னு என்னால நம்பவே முடியலையே. அதுவும் காலையிலே பார்த்த உங்களோட!”
“இன்னும் ஒரு தடவை இதை நீ சொன்னனு வை..”
“என் கஷ்டம் உனக்கு புரியாது கார்த்தி மாமா. எப்போ பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் என்னைத் திட்டிகிட்டே இருக்கும் தெரியுமா?”
“மலரின்டே நல்லதுகாக தானே..”
“அடப்பாவி அதுக்குள்ளே அவங்களுக்கு சப்போர்ட்டா இப்படி நல்லவனா இருந்தவுடனே தான் அந்த கிழவிக்கு பிடிச்சு போயிருக்கும்.”
“என்னடி அங்கே கத்திகிட்டு இருக்க?”
“ஒண்ணுமில்ல அப்பத்தா பேசிகிட்டு இருக்கோம்.”, என்றதில் முகுந்தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் புரையேறியிருந்தது.
“ஐயோ மெதுவா மெதுவா.. தண்ணியை குடிங்க”, என்று கார்த்தி டம்ளரை நீட்டினான்.
அனைவருமாய் சற்று நேரம் கண்ணயர சென்றிருக்க கார்த்திகேயனுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
“ஹீரோ நீங்க ப்ளே ஸ்டேஷன் விளையாடுவீங்களா?”
“பேரைச் சொல்லி கூப்பிடு மலரே எந்தா இது எப்பவும் ஹீரோ ஹீரோ..”
“என்ன இருந்தாலும் பெரியவர் இல்லையா? அப்பறம் அப்பா அண்ணன் எல்லாம் திட்டுவாங்க.”
“…”
“சரி விளையாடலாமா வரீங்களா?”
“ம்ம் போவாம்..”, என்றவனோடு டீவியின் முன்னிருந்த சோபாவில் அமர்ந்தாள். இருவருக்குமான கேம் பேடைக் கையில் எடுத்துக் கொண்டவளாய் அவனுக்குப் பிடித்த மாதிரியான விளையாட்டைக் கேட்டு ஆரம்பித்திருந்தாள்.
“மலர் பயங்கர மல்ட்டி பெர்ஸ்னாலிட்டி போலயுண்டு.”
“ஏன் அப்படி சொல்லுறீங்க?”
“ம்ம் பயங்கர ட்ரெடிஷனல், அதே நேரம் கிரிக்கெட் ப்ளேயர் பயங்கர பாசம் அதே நேரம் எல்லாரோடையும் சண்டை இப்போ இப்படி ப்ளே ஸ்டேஷன். பொதுவா பாய்ஸ்க்கு தானே இது ரொம்ப இஷ்டம்?”
“ம்ம் கரெக்ட் தான் ஆனால் நான் சின்னதில் இருந்தே அண்ணன்களோட தான் விளையாடுவேன் அதனால அவங்களுக்கு பிடிக்குற கேம் எல்லாம் எனக்கும் பிடிக்கும். என் அமுதினி அக்கா அப்படியே ஆப்போஸிட்.”
“யூ ஆர் அன் இன்ட்ரஸ்டிங் கேரக்டர் மலரே.”, திரையைப் பார்த்து விளையாடிய வண்ணம் இருவருக்குமான இவ்வித உரையாடல்கள் தொடர்ந்தன.
மாலை மீண்டுமாய் தேர்பவனி பார்க்க கிளம்பிவிட சிறிது நேரத்தில் மங்கையின் தந்தையிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது.
“ஹலோ சொல்லுப்பா?”
“ஏலே கோயில்ல தான இருக்க கொஞ்சம் கடைக்கு வாயேன்.”
“என்னாச்சு பா?”
“நீ வா கண்ணு சொல்றேன். இப்போ சொன்னால் நீ திட்டுவ கொஞ்சம் சீக்கிரம் வா.”, என்றதும் ஒன்றும் புரியாமல் ஆண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.
ஐந்தாவது தளத்தில் இறங்கியவளாய் கார்த்தியையும் முகுந்தனையும் அமருமாறு கூறிவிட்டு இன்டர்காமை எடுத்து தந்தைக்கு அழைத்தாள்.
“வாரேன் கண்ணு..”, என்றவர் அடுத்த இரண்டு நிமிடத்தில் அங்கு இருந்தார்.
“வா மாப்பிள்ளே வாங்க தம்பி. மன்னிச்சுகிடுங்க வியாபார நேரம் ஒழுங்கா பேசக் கூட முடியலை.”
“ப்பா இப்போ எதுக்கு இப்படி அவசரமா வர சொன்ன?”
“மங்கை அப்பாக்காக இந்த ஒரு தடவை மட்டும்..”, என்றதுமே விஷயத்தை ஊகித்தவளாய் கத்த ஆரம்பித்திருந்தாள்.
“ப்பா போபப்பா உனக்கு வேற வேலையே இல்லை வர வர திருவிழா வந்தாலே இதே பொழப்பா போச்சு. அடுத்த வருஷமெல்லாம் நான் எங்கேயாவது கிளம்பி போயிடுவேன் பாரு.”
“ஏலே சொன்னா கேளு இந்த தடவை மட்டும். அப்பாக்காக.. வருஷம் பூரா தவம் கெடெக்குறேன்லே இந்த ஒரு நாளுக்காக.”
“மாமா என்னாச்சு என்ன பிரச்சனை?”
“போன வருசம் நம்ம கடைக்கு விளம்பரத்துக்காக ஒரு மாடலிங் பொண்ணை மீனாட்சி வேஷம் போட கூப்பிட்டுருந்தோம் மாப்பிள்ளே. கடைசி நிமிஷத்தில் அந்த பிள்ளைக்கு உடம்பு சரியில்லாததுனால வரலை.
வேற யாரை கேட்கனு தெரியாம இருந்தப்போ கடையில் வேலை செய்யுற பொண்ணு தான் மங்கை அக்கா இருக்கும் போது ஏன் வெளியில் ஆள் தேடுறீங்கனு கேட்டது.
எனக்கும் நல்ல யோசனையா பட நம்ம பாப்பா தான் போன தடவை மீனாட்சியா நம்ம கடை உயரத்துக்கு ப்ளேக்ஸில் நின்னுச்சு. இந்த வருஷமும் அதை பண்ணணும்னு கேட்டா ஒத்துப்பேனாங்கிறா.”
“ப்பா நீ யாரை வேணாலும் சப்போர்ட்க்கு கூப்பிடு முடியாதுனால் முடியாது போப்பா..”
கார்த்திகேயன் முகுந்தனிடம் விஷயத்தைக் கூற அவனறியால் ஒருவித ஆர்வம் அவனிடத்தில்.
“மலரே நாங்களும் இப்போ தான் இங்கே இருக்கோம். அங்கிள் இவ்வளவு சொல்றாங்களே..“, என்று முகுந்தன் கூற கோபமாய் திரும்பியவள் அவன் முகத்தில் என்ன கண்டாளோ ஒரு நொடி அமைதி காத்தாள்.
அவன் கண்கள் அவனது எதிர்பார்ப்பைக் கூற பக்கத்திலே தந்தையையும் பார்த்தவளுக்கு தலை தானாய் சம்மதமாய் அசைந்தது.
“கையை கொடுங்க தம்பி. உங்களால எனக்கு பேசுற வேலை மிச்சம். ஏலே வா கீழே எல்லாரும் தயாரா இருக்காங்க நீ வந்து உட்காந்தா போதும்.”, என்றபடி முத்துப் பாண்டி கீழே சென்றார்.
“பரவயில்லையே முகுந்தன் இந்த ராங்கியும் ஒருத்தர் பேச்சை கேட்குறானால் அது நீங்களா தான் இருக்கும். போ டி சீக்கிரம் ரெடியாகி வா.”, என்று கார்த்திகேயன் கூற முகுந்தனின் முகத்தில் நிலைத்திருந்த புன்னகையைப் பார்த்த வண்ணம் கீழேயிறங்கினாள்.
அவள் தயாரானதும் அழைக்கும்படி திருமாவிடம் கூறிவிட்டு முகுந்தனும் கார்த்திகேயனுமாய் தேரடி வீதிகளில் சுற்ற ஆரம்பித்தனர்.
அப்போது தான் அங்கு நிறைய குழந்தைகள், வயது பெண்கள் என அனைவரும் மீனாட்சி வேடமிட்டு வீதிகளில் உலா வருவது முகுந்தனிற்கு புரிந்தது.
சட்டென ஏதோ தோன்ற தனது மேனேஜர் ப்ரவீனை அழைத்து தனது கேமராவை எடுத்து வருமாறு கூறியவன் அவன் இருக்கும் இடத்தையும் கூறினான்.
அடுத்த பத்து நிமிடங்களில் ப்ரவீன் வந்து கேமராவைக் கொடுத்துச் செல்ல அழகு குழந்தைகளை எல்லாம் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.
ஒன்றரை மணி நேரம் கடந்து திருமாவிடம் இருந்து அழைப்பு வர இருவருமாய் மீண்டும் மங்கையின் கடைக்குச் சென்றனர்.
நேராய் மொட்டை மாடிக்கு வந்து விடுமாறு திருமா கூறியிருக்க யோசனையோடு இருவருமாய் மாடிக்குச் சென்றனர்.
அங்கு போட்டோ எடுப்பதற்குத் தேவையான மின்விளக்குகள் பேக்ட்ராப் செட்டிங்கோடு மீனாட்சிக்கான பீடமூம் தயாராய் இருந்தது.
“டேய் திருமா என்ன டா இது?”
“போன தடவை சும்மா அவசர அவசரமா போட்டோ எடுத்துட்டோம் டா. இந்த தடவை அப்பா பயங்கர ப்ளானிங். அவகிட்ட சொன்னா கத்துவாளேனு சொல்லவே இல்லை. வீட்டில் இருந்து எல்லாரும் வந்துட்டு இருக்காங்க. பெருசா ப்ரேம் பண்ணி வீட்டில் மாட்ட போறாராம்.”, என்றதில் இவர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“இதில் இன்னும் ஸ்பெஷல் நீங்க எல்லாரும் இந்த வருஷம் வந்தது தான்”, என்றவன் முகுந்தனையும் பார்த்து புன்னகைத்தான்.
அவன் கூறியது போலவே குடும்பம் மொத்தமும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு வந்துவிட நடப்பதையெல்லாம் பார்த்த முகுந்தனுக்கு அத்தனை வியப்பாய் இருந்தது.
“நீங்க கூட சொல்லலையே அத்தை?!”
“நீ வேற கார்த்தி இவ ஒத்துகிட்டதுக்கு அப்பறம் தான் உங்க மாமா வீட்டுக்கு போனைப் போட்டு எல்லாரையும் வர சொன்னாரே. முன்னடியே சொல்லிட்டா நாங்க எல்லாம் பிள்ளையைப் போட்டு படுத்துவோமாம்.”, எனும்போதே ஒப்பனை செய்த பெண் அங்கு வர அங்கிருந்த பெண் ஒருவர் தனது கைப்பேசியை ஸ்பீக்கரில் இணைத்து தயாராய் வைத்திருந்தார்.
அனைவரும் ஆவலாய் வாசலைப் பார்த்து நிற்க மங்கையின் வலதுகால் தெரிந்தவுடன் தனது கைப்பேசியை ஒலிக்கச் செய்திருந்தனர்.
“பாண்டிய குல பேரரசி
உலகத்தின் முதல் பெண்ணரசி
மதுரையை ஆளும் மங்கையர்கரசி
மக்கள் உள்ளமெல்லாம் கொலுவிருக்கும்
மனோன்மணி எம்பெருமாட்டி
திருவாலவாய் உடைய அங்கயர்கன்னி
தடாதகை நாச்சியார்
பராக் பராக் பராக்..”
என்றபோது அனைவருக்கும் அருகில் வந்திருந்தவளைப் பார்த்த யாருக்கும் கண்ணிமைக்கக் கூடத் தோன்றவில்லை.
முகமெங்கும் லேசான பச்சை வண்ணத்தில் ஜொலிக்க நெற்றி நிறைத்த திருநீரும் நடுவில் பெரிய பொட்டும் மூக்கின் ஒரு புறம் மூக்குத்தியும் மறுபுறம் மூக்குத்தி வளையமும் புல்லாக்கும் ஜொலி ஜொலிக்க உதட்டின் சிவப்பு நிற சாயம் அத்தனை எடுப்பாய் இருந்தது மங்கைக்கு.
பச்சைப் பட்டுடுத்தி கழுத்தில் நகைகள் நிறைத்திருக்க பீடத்தில் வந்து நின்றவளுக்கு ஒப்பனை செய்த பெண் கீரீடத்தை சூட்டிவிட முத்துப் பாண்டிக்கும் குணவதிக்கும் கண்ணெல்லாம் நீர் நிறைந்து விட்டிருந்தது.
கனியனும் பூங்கோதையும் கூப்பிய கையை இறக்காமல் நிற்க மற்ற யாருக்குமே எதுவும் பேசவும் தோன்றவில்லை. மங்கைக்கோ ஒருவித ஞான நிலையில் இருந்ததாய் தோன்றியது.
விருப்பமின்றி சென்று அமர்ந்தாலும் அமர்ந்த அடுத்த நொடி அந்த மீனாட்சியை மனதார வேண்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். இப்போதும் சுற்றமோ சொந்தமோ கருத்தில் பதியாமல் அந்தப் பெண் கூறுவதை மட்டுமாய் செய்து கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்ற எதிரில் இருந்தவர்களின் நடுவில் முகுந்தனைத் தேடினாள்.
அதற்காகவே காத்திருந்தவனாய் சட்டென தனது கேமராவில் அவளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் இன்னுமும் அவளையே பார்த்திருக்க எதோ ஓர் உணர்வு புதிதாய் சுகமாய் பெண்ணவளின் இதயத்தினில் முளைத்தது.
மீனாட்சிக்கு சொக்கநாதரைப் பார்த்தபோது இப்படிதான் இருந்ததோ என்னவோ இத்தனை நாட்களில் தெரியாத ஒருவித உரிமை நிறைந்தவனாய் தோன்றினான்.
அனைத்தையும் சரி செய்து அவளை நேர்த்தியாய் நிற்க வைத்துவிட்டு புகைப்படத்திற்காக புன்னகைக்க சொல்ல இந்த ரத்த சிவப்பு உதட்டுச் சாயத்திற்கும் பச்சை வண்ண முகத்திற்கும் வெண்பற்கள் மென்மேலும் அழகூட்டுவதாய் இருந்தது.
“எம்மவ எம்புட்டு அழகுங்க..”, என்ற குணவதி கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
“ம்மா என் மவளுக்கு ரொம்ப இடம் கொடுக்குறேன்னு சொல்லுவியே பார்த்தியா அந்த மீனாட்சியோட முகத்தை.”
“எம் பேத்தி எம்புட்டு அழகாயிருக்கா பாண்டி என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. ஆயிரம் தடவை சுத்திப் போடலாம்.”
“ஏங்க எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சுங்க.”, என்ற விஜய லட்சுமி அப்படியே திருஷ்டி கழித்தார்.
“பாப்பா எம்புட்டு வளர்ந்துட்டா இல்ல மாறா?!!”
“ஆமா பா..”, என்ற மாறனுமே உணர்ச்சி ததும்ப தான் நின்றிருந்தான்.
“இந்த மகாலட்சுமியை மருமகளா கொடுக்காம போயிட்டாளே அந்த மீனாட்சி.”, என்ற கலைச்செல்வியைத் தாமோதரன் கனிவாய் பார்த்தார்.
“என்ன முகுந்தன் வாயடைச்சு நிக்குறீங்க?!”
“இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு கார்த்தி. உங்க பேமிலியை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.”
“நீங்களும் எங்களில் ஒருத்தர் தான் முகுந்தன்.”, என்றவாறு திருமா அவனது தோளில் கைப்போட்டுக் கொண்டான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞💞💞💞
Very nice