258
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
மு.வ விளக்க உரை: மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.”
“என்கிட்ட நல்லாதான பேசுறீங்க? அப்பறம் ஏன் மாறன் அண்ணே உங்களை அமைதினு சொல்றான்?”
“அது மலரோட மேஜிக்னு நினைக்குறேன். நிஜமாவே நான் ரொம்ப பேசினது இல்லா.”
“என்னால எல்லாம் கோடி ரூபா கொடுத்தா கூட அமைதியா இருக்க முடியாது. ரொம்ப கஷ்டம்.”
“மலருக்கு இதுதான் சௌந்தர்யமானு.”, என்றதற்கு புன்னகைத்தவளாய்,
“இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இங்கே உட்காந்து மழையை ரசிக்குறது அவ்வளவு நல்லாயிருக்கும்.”
“அக்சுவலி என்டே வீட்டடே ரிசெம்ப்லன்ஸ் இவ்விட இருக்கு. அதுவும் இந்த வீடின்டே முட்டம் மீன்ஸ் இந்த ஓபன் ஸ்பேஸ்.”
“வீட்டு முத்தத்தை சொல்றீங்களா?”
“அதே இதெல்லாம் என்டே வீடு போலவே உண்டு.”
“ஓ.. கேரளா வரும்போது பார்க்குறேன்”, என்றவள் சிரிக்க அவளையே பார்த்தவனாய்,
“நோ அதர் வே கட்டாயம் வரு.”
“பாப்பா போலாமா?”, என்று கார்த்திகேயன் கீழிருந்து குரல் கொடுக்க வருவதாய் பதிலளித்தாள் மங்கை.
“மாமாவுக்கும் பாப்பா தானா?!”, என்றதில் அசடு வழிந்தவளாய்,
“எல்லாரும் அப்படியே கூப்பிட்டு பழகிட்டாங்க. விட்டால் நாளைக்கு வரப்போற அவன் வைஃபும் அப்படி தான் கூப்பிடுவாங்கனு நினைக்குறேன்.”
“ஓ ஆனால் இவ்விட பந்துக்களில் கல்யாணம் கழிக்கானேல்லே?!”
“உண்டு தான் பட் எங்களுக்கு அப்படி விருப்பம் இல்லை. அதுவுமில்லாம அவன் அத்தை பொண்ணை லவ் பண்றான். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கவும் போறான். என்னோட அண்ணணுக்குமே அடுத்த மாசம் கல்யாணம் கட்டாயம் வரணும் நீங்க.”
“ஓ நைஸ். மலரின்டே கல்யாணம் எப்போ?”
“இப்போதைக்கு கண்டிப்பா இல்லை. ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் யோசிக்கலாம்.”, என்றவளோடு கீழே வந்திருந்தவன் கார்த்திகேயனோடு கிளம்பியிருந்தான்.
கார்த்திகேயனும் முகுந்தனும் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள மங்கை பின்னிருக்கையில் நடுவில் அமர்ந்து கொண்டாள்.
“சென்னை வந்தா எங்கே ஸ்டே பண்றீங்க முகுந்தன்?”
“படத்துக்காக 4-5 திவசம் இருப்பேன் சோ ஹோட்டல் தான். தமிழ் மூவி எதிலும் வொர்க் பண்ற சான்ஸ் வந்தால் வீடு பார்க்கணும் கார்த்திக்.”
“ஓ ஓகே அடுத்த தடவை சென்னை வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.”
“ஆமா இவனை நம்பி போங்க ஆனால் இவன் இருக்க மாட்டான். முழு நேரமா ஹாஸ்பிட்டலேயும் பார்ட் டைமா வீட்டிலேயும் தங்குற விசித்திர ஜந்து இவன்.”
“அவ்ளோ சின்சியரா இருக்கேன் டி வேலையில்.”
“ஆஹா.. ஆமா இப்படியிருக்குற உன்னோட ஸ்வப்னாக்கா எப்படி குப்பை கொட்டுவாங்க?!”
“ஹே மலர் பரைஞ்சு உங்களுக்கு கல்யாணம்னு அட்வான்ஸ் விஷஸ்.”
“தேங்க் யூ முகுந்தன். பேசிருக்காங்க டேட் இனிமேல் தான் பிக்ஸ் பண்ணணும். அவளுக்கு போஸ்டிங் கிடைக்கணும். அதுவுமில்லாம திருமா கல்யாணம் முடியணும்னு வெயிட்டிங்.”
“உங்க பாண்டிங் எல்லாம் ரொம்ப நன்னாயிட்டுண்டு. எனக்கு இதெல்லாம் புதுசு.”
“உங்களுக்கு கசின்ஸ் எல்லாம்?!”
“அல்லா அப்பா அம்மா லவ் மேரேஜ் அதனாலே பெருசா எந்த சொந்தமும் இல்லா.”
“ஓ அதுக்கென்ன ஹீரோ சார் நாங்க எல்லாம் இருக்கோம் இப்போ டோண்ட் வொரி. எப்போ தோணினாலும் இங்கே கிளம்பி வந்துருங்க..”
“ஹா ஹா தேங்க் யூ மலரே. பட்சே ஒவ்வொரு டைமும் அம்மைகிட்ட பொய் சொல்லி வரணும்.”
“ஏன்?”
“காலேஜ் டேசில் என் க்ளாஸ்மேட் ஒருத்தன் மதுரை தான். அப்போ இருந்தே எனக்கு இந்த ஊர் திருவிழா எல்லாம் வலர இஷ்டம். ஒரு தடவை அம்மேகிட்ட சோதிச்சப்போ விடவே மாட்டேனுட்டா. கேட்டால் ஏதேதோ காரணம். அப்பறம் சினிமாக்கு வந்தப்பறம் அதுவே காரணமா சொல்லுவா கூட்டம் தனியா எல்லாம் போகாதே அப்படி இப்படினு”
“இப்பவும் தெரியாம தான் வந்துருக்கீங்களா?”
“ம்ம் அட் ஷுட்க்காக மும்பை போறாத சொல்லிருக்கேன்.”
“நல்லவேளை உங்க அம்மாவை இவளுக்குத் தெரியாது. இல்லைனால் முதல் வேலையா உங்களைப் போட்டு கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பா..”
“ஆனோ மலரே?!!”
“ஐயோ ச்ச நான் போய் அப்படியெல்லாம் பண்ணுவேனா? இவனுக்கு நம்ம ப்ரெண்ட்ஷிப்பை பார்த்து பொறாமை தங்கம். உங்களை போய் மாட்டிவிடுவேனா?”, என்றதோடு கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்து நெறித்து வைத்தாள்.
“ஆ கொலைகாரி விடு டி. சரியான குட்டிசாத்தான் இவ. நம்பாதீங்க முகுந்தன்.”
“குட்டிச் சாத்தான் என்ன பண்ணும்னு காட்டடுமா?”
“ஐயோ தாயே அமைதியா வா. நல்ல படியா நாங்க ஊர் போய் சேரணும்.”, இப்படியான இவர்களின் அட்டகாசத்தில் சிரித்த வண்ணம் அமர்ந்திருந்தான் உன்னி முகுந்தன்.
நான்கு மாட வீதிகளும் மக்கள் வெள்ளத்தில் கலகலத்திருக்க மாஸ்கையும் தொப்பியையும் அணிந்து கொண்டவனாய் இருவரோடும் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
நெரிசலான இடங்களில் மங்கை முன்னே செல்ல முகுந்தனை நடுவில் விட்டு கார்த்திக் அவன் பின்னே சென்றான். கோவில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்தபின் மங்கை பார்க்கும் கடையிலெல்லாம் நின்று எதையாவது வாங்கிக் கொண்டிருந்தாள்.
அத்தனையும் நூறு ரூபாய் கூட பெறாத கம்மல் வளையல் பொட்டு குங்குமம் என்பதாய் இருந்தது. முகுந்தன் அவளது தேர்வுகளையே பார்த்து வர கார்த்திகேயனோ ஒரு கட்டத்தில் பொறுமை இழந்திருந்தான்.
“பாப்பா பத்து நாளுக்கு அப்பறம் ஊரே காலியாகிட போகுதா? வா போலாம். வெயில் வேற முடியலை. பாரு முகுந்தன் பாவம்.”
“சாரி சாரி மாமா இதோ முடிஞ்சுது வா போலாம்.”, என்றவளை அழைத்து வந்து காரில் அமர்த்தி ஏசியை உயிர்பித்த பின் தான் நிம்மதி பெருமூச்சே வந்தது.
“எதுக்கு டி இவ்வளவு? நீ போட போறதும் இல்லை?”
“எனக்கா?? நீ வேற. குங்குமம் அம்மா அத்தை சித்திக்கு இந்தப் பொட்டு பாக்கெட்டும் கம்மலும் அம்மு வாங்கி வைக்க சொல்லிருந்தா. இந்த மத்ததெல்லாம் க்ரவுண்ட்டில் விளையாட வர்ற பசங்களுக்கு மாமா. பாவம் வசதியில்லாத வீட்டு பிள்ளைங்க கொண்டு போய் கொடுத்தா ஆசையா வாங்கிக்கும்.
மதுரையில் இருக்கேன்னு பேரு இங்கே எல்லாம் திருவிழா அப்போ வர்றதோட சரி. அதனால தான் மொத்தமா வாங்கிட்டேன்.”, என்றதில் ஆண்கள் இருவருமாய் புன்னகைத்தனர்.
“உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் வேணுமா சொல்லுங்க வாங்கிடுவோம்..”
“இவ்விட ஜிகர்தண்டா எங்கே நன்னாயிருக்கும்?”
“அப்படி கேளுங்க மாமா நா வழக்கமா போற கடைக்கு போலாம்.”
“என்ன முகுந்தன் எங்க ஊரு வெயில் உங்களை ரொம்பவே டயர்ட் ஆக்கிடுச்சு போலேயே..”
“ஆமா இப்படியெல்லாம் நான் சுத்தினதேயில்லா. அதான்.”
“ஜிகர்தண்டா சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போயிடலாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”
“மாமா பாரேன் மூஞ்சியெல்லாம் பிங்க் ஆயிடுச்சு”, என்றதில் இன்னுமாய் கைக்குட்டையை வைத்து முகத்தை ஒற்றி எடுத்தான்.
வீட்டிற்கு வந்தவனைப் பார்த்த பெண்கள் அனைவரும் மங்கையிடமும் கார்த்திகேயனிடமும்,
“ஒரே நாள்ல ஊரு மொத்தத்தையும் சுத்தி காட்டிடீங்களா? பாவம் பிள்ளை களைச்சு போயிருக்கே..”
“தம்பி போங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அதுக்குள்ள சமையல் முடிஞ்சுரும்.”
“குழப்போயில்லா நான் ரூம்க்கு..”
“ஷ்ஷ்ஷ்.. பேச்சை குறைங்க.. வாங்க போலாம்..” என்ற மங்கை மாடியை நோக்கி கை காட்ட அமைதியாய் மேலே சென்றான்.
“கீழேயும் ரூம் இருக்கு ஆனால் நாங்க போடுற சத்தத்தில் கண்டிப்பா உங்களால ரெஸ்ட் எடுக்க முடியாது.”, என்றவள் கதவைத் திறந்து ஏசியையும் போட்டு விட்டுத் திரும்பினாள்.
“தூக்கம் வந்தா தூங்குங்க. இல்லை எப்போ சாப்பிடணும்னு தோணிணாலும் கீழே வந்துருங்க நான் அங்கேயே தான் இருப்பேன். ஃபீல் ஃப்ரீ ஓகே?”, என்றவள் வெளியே செல்ல திரும்ப,
“மலரே!!
“ம்ம்?”
“தேங்க்ஸ்..”
“எதுக்கு?”
“சும்மா தான் நீ போய்க்கோ..”
“அந்த பயம் இருக்கணும்.”, என்றவள் கண்சிமிட்டி வெளியே செல்ல கட்டிலில் விழுந்தவனுக்கு இது அனைத்துமே புதியதொரு அனுபவம்.
தனது கைப்பேசியில் காலையில் மூவருமாய் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவனுக்கு அந்தப் பொழுதுகள் எல்லாம் பசுமையான நினைவுகளாய்.
அதை விட மலர் என்பவள் பலப்பல விதங்களில் அவனை ஈர்த்துக் கொண்டேயிருந்தாள். மொத்தக் குடும்பத்திற்கும் பிடித்த ஒருவளாய் எப்படியிருக்க முடியும். பிடித்தவள் என்பதை விட செல்ல பெண்ணல்லவா. அதிலும் ஆண்கள் பெண்கள் என அத்தனை பேரும் பாப்பா பாப்பா என்று அழைத்தது முகுந்தனிற்கு கேட்கவே அத்தனை பிடித்தமாய் இருந்தது.
ஆனால் அத்தனை அன்பிற்கும் தகுதியான அவளது கள்ளம் கபடமற்ற மனம் இப்படியான ஒருவளை இதுவரைப் பார்த்ததேயில்லை என்று தான் தோன்றியது.
அன்பைத் தவிர ஒன்றும் அறியா பருவ வயது குழந்தையாகவேத் தெரிந்தாள். ஏதேதோ சிந்தனைகளில் உழன்றவன் அவனறியாமல் கண்ணயர்ந்திருக்க மீண்டும் எழுந்த போது மணி இரண்டாகியிருந்தது.
நீண்ட நேரம் தூங்கியதை எண்ணி நொந்தவனாய் முகத்தை கழுவிவிட்டு கீழே செல்ல கனியனும் பூங்கோதையும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
தற்செயலாய் அங்கு வந்த குணவதி அவனைக் கவனித்தவராய்,
“வாங்க தம்பி நல்லா தூங்குனீங்களா? பாப்பா தான் எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டா.. வாங்க சாப்பிடலாம்.”
“ஆமா ஆன்ட்டி எப்படியோ தூங்கி போயிட்டேன். எங்கே மலர், கார்த்தி?”
“அவங்க கடைக்கு சாப்பாடு கொடுக்க போயிருக்காங்க இப்போ வந்துருவாங்க. நீங்க வாங்க.”
“இல்லா அவா வரட்டும் எனக்கு பசியில்ல..”, என்றவன் கனியனின் அருகில் அமர்ந்தான்.
அமைதியாய் தனது கைப்பேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்தவன் அந்நேரம் வந்த தாயின் அழைப்பை எதிர்பராதவனாய் எடுத்து பேச ஆரம்பித்தான்.
“ஹலோ அம்மே..”
“…”
“ஞான் சுகமாயிட்டு உண்டு குறைச்சு பிசி அதே..”
“….”
“இவ்விட நல்ல ஸ்தலங்களுண்டு ஞான் பார்த்துட்டு 10-12 டேஸில் வராம்.”
“..”
“ஆன் ஷெரி அச்சனையும் கிச்சுவையும் கேட்டதாய் பரையு..”
“…”
“பை மா லவ் யூ..”
“அப்புச்சன் அம்மச்சி சாப்பிட்டாச்சா?”
“ம்ம் ஆச்சு. நீ சாப்பிடலையா?”
“அல்லா மலரும் கார்த்தியும் வரட்டும்.”
“தமிழ் படமெல்லாம் நீ நடிக்கலையா?”
“இனி ஆஃபர் வந்தால் நடிக்கும்..”
“தாத்தாக்கு கேரளான்னா ரொம்ப இஷ்டம் அந்த காலத்தில் அடிக்கடி தொழில் விஷயமா எல்லாம் போவாரு.”
“ஓ! எந்த ஊருக்கு போவீங்க?”, என்றவன் கனியனைப் பார்க்க,
“பாலக்காடு அங்கில் வல்ர இஷ்டம். நாட்டில் எல்லாயிடத்தும் ஞான் போயிட்டுண்டு.”, என்றதில் ஆச்சரியமாய் கண்கள் விரிந்தன உன்னி முகுந்தனுக்கு.
“அப்புச்சனடே மலையாளம் அடிப்பொலியல்லோ!!”, என்றதில் லேசாய் சிரித்தார் கனியன்.
“கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் இருக்கு. வயசாகுதுல்ல.”
“உங்களுக்கா?! மிலிட்டரிகாரர் போல உண்டு.”, என்றதில் பாட்டியும் சிரித்தார்.
மலரும் கார்த்திகேயனும் உள்ளே வந்த நேரம் முகுந்தனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பெரியவர்களைப் பார்த்து வாய் பிளந்தாள் மங்கை.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞💞💞
Very nice