73
“கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
“கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.
ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.
அனைவரும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த திருமண தினமும் வந்திருந்தது.அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரும் விரைவாகவே எழுந்துத் தயாராகி கோவிலை அடைந்திருந்தனர்.
பட்டு வேஷ்டிச் சட்டையில் ப்ரஜீஷைப் பார்த்த மோகனிற்கும் சௌமியாவிற்கும் மனம் நிறைந்து போயிருந்தது.எத்தனை ஆண்டுகளின் ஏக்கம் இது.இப்படி ஒன்று நடக்காமலே போய்விடுமோ என்று பயந்த நாட்களும் உண்டு.
இப்போது அத்தனை கவலைகளும் மறந்து போயிருந்தனர்.அபூர்வாவிற்கென வாங்கியிருந்த அரக்கு நிற முகூர்த்தப் புடவையை முந்தைய தினமே அவர்களிடம் ஒப்படைத்திருக்க லேகாவும் லதாவும் தங்கள் வழக்கப்படி அவளைத் தயார் செய்கிறோம் என்று கேட்டுக் கொண்டு இருவருமாய் தங்களளின் ஹோட்டல் அறையில் மணப்பெண் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“அண்ணி ஆனாலும் அநியாயத்துக்கு குட்டிப் பொண்ணா இருக்கீங்களே..”
“ஐயோ ப்ளீஸ் முதல்ல பேர் சொல்லிக் கூப்பிடுங்க..என்னவோ போல இருக்கு..”
“ஹா ஹா..சரி நமக்குள்ள மட்டும் பேர் சொல்லிக்கலாம்..வெளில அண்ணி தான்..அட்லீஸ்ட் ரிசெப்ஷன் முடியுற வரை…”
“ம்ம் சரி…”
“ஒழுங்கா சாப்டுவீங்களா மாட்டீங்களா புடவையோட வெயிட்டுக்கு உள்ளே மறைஞ்சுருவீங்க போலே..”
“ம்ம் ஆமா சாரி ரொம்ப வெயிட்டா இருக்கு..”
“ஹலோ நீங்க வெயிட் கம்மியா இருக்கீங்கனு சொல்லணும்..”
“ஹான்..அப்படியும் சொல்லலாம்..”
“அப்படி மட்டும் தான் சொல்லணும்..”,என்று கூறிச் சிரித்தவாறே அவளைத் தயார் செய்து முடித்தவர்கள் அவளோடு செல்பி எடுத்து ப்ரஜீஷிற்கு அனுப்பி வேண்டுமென்றே வெறுப்பேற்றினர்.
அரக்கு நிறப் பட்டுப்புடவையில் தலை முதல் நகைகள் நிறைத்திருக்கத் தலை நிறைய கொத்தாய் மல்லிகைப் பூவோடு முகத்தை மேலும் அழகாக்கிய ஒப்பனையுமாய் சிரித்து நின்றவளைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் அறையில் இருக்கத் தோன்றாமல் அவளைப் பார்பதற்குச் சென்றிருந்தான்.
அவனின் அழைப்பை எதிர்பார்த்தவர்களுக்கு அதற்கு மாறாய் அறையின் அழைப்பு மணி சத்தம் கேட்டது.லதா சென்று யாரெனப் பார்த்தால் அங்கு ப்ரஜீஷ் நின்று கொண்டிருந்தான்.
“அண்ணா இங்க என்ன பண்றீங்க??”
“ம்ம் கிரிக்கெட் விளையாட போறேன்.. “
“அண்ணா…யாராவது பார்த்தாங்கனா அவ்வளவு தான்..ஒழுங்கா போங்க இல்லனா அம்மாவைக் கூப்பிடுவேன்..”
“நீ யாராய் வேணா போய் கூப்பிடு ஆனா போகும் போது இந்தக் கதவைச் சாத்திட்டு போ”, என்றவன் உள்ளே வர தலையைச் சொறிந்தவாறே அபூர்வாவைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சென்றவர்கள் கதவை பூட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர்.
“ப்ரஜீஷ் என்ன பண்றீங்க…யாரவது வந்துர போறாங்க…”
“என்ன பதில் சொல்லுவேன்னு உனக்கேத் தெரியும்..”,என்றவன் தன் மொபைலை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்து நின்றான்.
“அன்னைக்கு லேகா உன் போட்டோ கேட்டப்போ தான் தோணிச்சு உன்னோட போட்டோ ஒண்ணுமே இல்லையேனு..இப்போ அவ செல்பி அனுப்பின உடனே திரும்வும் நியாபகம் வந்தது.அதான் உடனே வந்துட்டேன்..”
“…”
“ம்ம் இப்படியே அமைதியா இரண்டு போஸ் குடு போதும்..”,என்றவனையேப் பார்த்திருந்தவளைத் தன் கைப்பேசியின் கண்களால் படம் பிடித்துக் கொண்டவனாய் அவள் முன் கையை நீட்ட என்ன என்று யோசித்தவாறே தனது கரத்தை அவனிடம் கொடுத்தாள் அபூர்வா.
லேசாய் பற்றிய அவளின் கரத்தைப் பற்றித் தன்புறம் ப்ரஜீஷ் இழுத்ததில் கிட்டதட்ட அவன் மார்பின் மீது கை வைத்தபடி இடித்து நிற்க அதையும் அப்படியே படம் பிடித்துக் கொண்டான்.
தன்னை நெருங்கி நின்றவளின் இடையைச் சுற்றியிருந்த அவனது கையின் இறுக்கம் அத்தனை உறுதியாய் இருக்க கூச்சத்தில் நெளியத் தொடங்கியிருந்தாள் அபூர்வா.
“யூ நோ சம்திங்..உயரமான ஆணும் குள்ளமான பொண்ணும் பெஸ்ட் ரிலேஷன்ஷிப்ல இருப்பாங்கனு படிக்கும் போதெல்லாம் சிரிச்சுருக்கேன்..பட் இப்போ அதை உண்மையா உணரேன்..”
ஏன் என்ற கேள்வியை அவள் விழி தாங்கி நிற்க அதற்கானப் பதிலை அவனது இதழ்களால் அவளவனின் இதழ்களில் வரைந்திருந்தான் ப்ரஜீஷ்.
சற்றும் எதிர்பாராமல் கிடைத்த முதல் முத்தம். அபூர்வாவிற்கு மட்டுமல்லாது ப்ராஜீஷிற்கும் என்றே கூற வேண்டும்.இத்தனை தினங்களில் எத்தனையோ பெண்களிடம் பெற்ற ஒரு விஷயமாயினும்,
ஆத்மார்த்தமான பிடித்தமும் உரிமையும் கலந்த முதல் முத்தம் இதுவாகத் தான் இருக்கும்.இன்னும் சொல்லப் போனால் முத்தம் என்பதன் அர்த்தத்தை முழுவதுமாய் இப்போது தான் உணர்ந்திருந்தான்.
அபூர்வாவிற்கோ நடப்பது புரிவதற்கே சில நொடிகள் தேவைப்பட்டது.அவளைச் சுற்றி எந்தச் சத்தமுமே இல்லை என்பதைப் போன்ற உணர்வு..காதுகளில் அவனின் இதயத்துடிப்பு மட்டுமே கீதமென ஒலிக்க தன்னை அவனிடம் தொலைக்கத் தொடங்கியிருந்தாள் அவள்.
நொடிகள் நிமிடமாய் நீடித்திருக்க சூழ்நிலை உணர்ந்தவனாய் அவளை விடுவித்து தன் மீது சாய்த்துக் கொண்டான் ப்ரஜீஷ்.
“லவ் யூ மேட்லி அப்பூ..இத்தனை நாள் நீ எங்கயிருந்த..”
“லவ் யூ டூ ப்ரஜு…”,என்றவளின் பதிலில் அவள் முகத்தை நிமிர்த்தியவன் கண்களையேப் பார்த்தபடி,
“கம் அகெயின்…”,எனக் கேட்க மறுப்பாய் தலையசைத்தவளை மேலும் தன்னோடு இறுக்கி டெல் மீ நவ் என்று அவளின் செவிமடலை இதழ் உரசக் கூறினான்.அவனது செய்கையில் மொத்தமாய் குழைந்திருந்தாள் அபூர்வா.
“லவ் யூ சோ மச்..”
“நோ..என்னை எப்படி கூப்பிட்டியோ அப்படியே சொல்லு..”
“லவ் யூ சோ மச் ப்ரஜு…”,மெதுவாய் தன் பிடியிலிருந்து விலக்கி நிறுத்தியவனாய் அவளின் இரு கைகளையும் கோர்த்து அழுந்த இதழ் பதித்த வண்ணம்,”தேங்க் யூ பார் எவ்ரித்திங்”,என்று கூறிவிட்டு லேசாய் கலைந்திருந்த அவளின் முன்னந்தலை முடிகளை சரிசெய்து விட்டு வெளியேறியிருந்தான்.
அவன் தங்கள் முகத்தைக் கூட பார்க்காமல் சென்ற வேகத்திலேயே லதாவும் லேகாவும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள உள்ளே வந்துப் பார்த்தால் ஏதோ ஓர் உலகில் இருந்தாள் அபூர்வா.
“போச்சு ஒரு மணி நேரமா போட்ட மேக்கப் எல்லாம் போச்சு..”
“ஹே அதெல்லாம் ஒண்ணும் இல்ல சும்மா பேசிட்டுத் தான் இருந்தாங்க…”
“நான் இப்போ எதூவுமே சொல்லலியே நீங்களா வந்து ஏன் மாட்டுறீங்க..”,என்றவளின் கேலியில் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அபூர்வா.
“ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் முகத்தைக் காட்டுங்க லிப்ஸ்டிக் போடணும்”,என்று லதா கூறியதில் லேகா சிரித்திருக்க அபூர்வாவோ முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டாள்.
அப்படி இப்படியாய் அவளைக் கிளப்பி வெளியே அழைத்து வர ராஜி தன் அக்காவைக் கட்டிக் கொண்டாள்.தாயும் தந்தையும் மகளை மணக்கோலத்தில் பார்த்து மகிழ்ந்து போயிருந்தனர்.
ஹோட்டலின் கேரிடரில் மணமக்களை நிற்க வைத்து புகைப்டக் கலைஞர் புகைப்படங்களை எடுக்க இருவரையும் சேர்த்துப் பார்த்த அத்தனை பேருக்குமே ஒரு ஒரு விதத்தில் மகிழ்ச்சி அதிகரித்திருந்தது.
சரியாய் அவர்கள் கோவிலை அடைந்த நேரம் ராஜீவ் தன் மனைவி மகளோடு அங்கு வந்திருந்தான்.ஏஞ்சலை முதல் முறையாய் அப்போது தான் பார்த்தவள் சிறிதும் யோசனையின்றி கட்டிக் கொண்டாள்.
“அண்ணா நேத்தே வந்துருக்கலாம் இல்ல..”
“வரணும்னு தான் நினைச்சேன் டா..கிளம்புற நேரம் பெர்சனல் வொர்க்ல மாட்டிக் கிட்டேன்..விடு ரிசெப்ஷன்ல இன்னும் ஜமாய்ச்சுரலாம்..”
“அண்ணி…அப்படி கூப்பிடலாம் தான?”
“அவர் உனக்கு அண்ணா னா நான் அண்ணி தான…”,என்று கூறிச் சிரித்தவளை ஏனோ உடனேப் பிடித்து விட்டிருந்தது அபூர்வாவிற்கு.
“உங்க கல்யாணத்தை நினைச்சு உங்களை விட இவரு தான் சந்தோஷமா இருக்கார்..”,என்றதைக் கேட்டு ப்ரஜீஷ் அவன் தோள் மீது கைப் போட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள அபூர்வா இருவரையும் மகிழ்ச்சியோடு பார்த்திருந்தாள்.
“ம்ம் இப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப்பை பார்க்க முடியுமா..ராமரும் அனுமனும் மாதிரி தான் இவங்களும்..ஆனா என்ன அண்ணா இவரை கொஞ்சம் கண்டிச்சு வளர்க்காம விட்டுடாரு..”,என்றவள் சிரிக்காமல் கூற அதைக் கேட்டு சிரித்ததவனாய் ராஜீவ்,
“அதுக்கென்ன டா அதான் இப்போ நீ வந்துட்டியே..இனி டெய்லி வீட்ல அப்போ ப்ரஜிக்கு பலமான கவனிப்பெல்லாம் இருக்குனு சொல்லு..”
“அவளுக்கே அந்த ப்ளான் எல்லாம் இருக்கும் இதுல நீ வேற போட்டுக் கொடுக்காத டா…அவ்வளவு தான் அப்பறம்..”,என்றவன் தனக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்காக அவர்களை விட்டுச் சற்று தள்ளிச் சென்றான்.
“அபூர்வா உண்மையாவே எனக்கு எவ்வளவு நிம்மதி இருக்குனு வார்த்தையில் சொல்ல முடியாது..அவன் தேவையில்லாத நிறைய விஷயங்கள் வாழ்க்கையில பண்ணிருக்கான் தான் ஆனா கண்டிப்பா கெட்டவன் இல்ல டா…
அவனோட ப்ரெண்டா என்னால பண்ண முடியாததை நீ பண்ணிருக்க..இப்படியே இதே சந்தோஷத்தோட எப்பவும் இருக்கணும் நீங்க இரண்டு பேரும்..அவனைச் சார்ந்தவங்களுக்கு அவன் எப்பவுமே நல்லது மட்டும் தான் டா பண்ணுவான்..ஆனா வெளில காட்டிக்க மட்டான்..
இப்படி பட்டவனுக்கு வாழ்க்கையில் எதாவது நல்லது நடந்தா நல்லாயிருக்குமேனு எத்தனையோ நாள் நான் கடவுள்கிட்ட வேண்டிருக்கேன்..
எங்க வேண்டுதல்களுக்கு எல்லாம் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷம் நீ..உன்கிட்ட சம்மதம் சொன்ன அன்னைக்கு எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னப்போ அப்படி ஒரு வித்தியாசம் அவனோட குரல்ல..
அது சந்தோஷம்னு சொல்றதையும் தாண்டின ஒரு விஷயமா இருந்தது.உன்னைப் பத்தி அவ்வளவு பேசினான்..அவனைப் பத்தி புரிஞ்சு வச்சுருக்குறதை வச்சு சொல்றேன்..இந்த நிமிஷம் நீ தான் அவனோட உலகம் நீ தான் அவனோட எல்லாமும்..ஆனா…”
“ஆனா?என்ன ணா…சொல்லுங்க…”
“இன்னமும் அவன் மனசுல ஒரு ஓரத்தில சின்னதா அவனைப் பத்தின குற்றவுணர்ச்சி இருக்கு டா..”
“என்ன சொல்றீங்க…ஏன்?”
“உன்னால எஎப்படி இதை சாதாரணமா கேட்க முடியுதுனு எனக்குத் தெரியல..ஆனா அவனுக்கு மனசுல ஒரு ஓரத்துல உனக்குப் பொறுத்தமில்லாதவனோங்கிற எண்ணம் இருக்கு..என்கிட்ட பேசும் போதெல்லாம் ஏதோ ஒரு விதத்துல அதை வெளிப்படுத்துறான்..என்னால புரிஞ்சுக்க முடியுது அதை..
உண்மையா சொல்றேன் டா..அவன் முன்ன மாதிரி இல்ல…எப்பவோ மாறிட்டான்..அவனோட கடந்தகாலம் முழுசா அழிஞ்சு பல நாள் ஆச்சு..உனக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை தான்..ஆனாலும் சொல்னும்னு தோணுது..”
“என்கிட்டப் பேச ஏன் ணா இவ்வளவு தயங்குறீங்க..அவருக்கு அப்படி ஒரு எண்ணம் ஏன் இருக்குனு எனக்குத் தெரியல ஆனா இதுக்கப்பறம் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வரவே வராது அதுக்கு நான் பொறுப்பு..”,என்று உறுதியாய் எந்தத் தயக்கமும் இன்றி கூறியவளைப் பார்த்தவனுக்கு நிறைவாய் இருந்தது.
அதன் பின் நேரம் ரெக்கைக் கட்டிக் கொண்டு பறக்கக் குறித்த நேரத்தில் ப்ரஜீஷ் அபூர்வாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.சுற்றியிருந்த யாரும் அவனது கவனத்தில் இருந்திருக்கவில்லை.தனக்காகவே எங்கிருந்தோ தேவதையென வந்தவளையே இமைக்காமல் பார்த்த வண்ணம் மூன்று முடிச்சுகளையும் போட்டு முடித்தவனின் கண்களில் கண்ணீரின் பளபளப்பு.யாரும் அறியா வண்ணம் அதை அவன் மறைத்திருந்தாலும் அபூர்வாவின் கண்களில் இருந்து அது தப்பியிருக்கவில்லை.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!