“மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்த அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ், கற்று அறிவு இல்லா உடம்பு.
மனைவி இல்லாத வீடு பாழ். சார்ந்தொழுகும் நண்பர்கள் இல்லையெனில் தன் நிலை துன்பமாகும். கல்வி, கேள்விகளில் சிறந்த ஆன்றோரில்லாத அவை பாழானது. கற்றறிவில்லாத உடம்பு பாழானது.”
அதன் பின்னான நாட்கள் பல விதமான மாற்றங்களைக் கொண்டதாய் இருந்தது ப்ரஜீஷிற்கு.அங்கிருக்கும் ஒரு ஆசிரமத்தை தத்தெடுத்திருந்தான்.அங்கிருக்கும் குழந்தைகளின் தினசரி உணவுகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும்படி கூறியிருந்தான்.
அதுமட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை அவர்களுக்கான சீருடை மற்றும் நோட்டுப் புத்தகச் செலவுகளையும் பார்த்துக் கொள்வதாய் கூறியிருந்தான்.அதுமட்டுமன்றி அம்மா அப்பாவிற்காகப் பத்து நாள் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.அவர்கள் எத்தனை மறுத்தும் கேட்காமல் டிக்கெட்டை புக் செய்து மோகனிடம் கொடுத்திருந்தான்.
பெரிய அளவில் அவர்களோடு இப்போதும் கலந்துரையாடல் எல்லாம் இல்லை எனினும் இப்போது அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் அளவிற்கான பொறுமை வந்திருந்தது.அபூர்வாவிற்கும் அவனுக்ககுமான நட்பும் புரிதலும் கூட நாளளுக்கு நாள் வலுப் பெற்றுக் கொண்டேயிருந்தது.
வேலைகளைத் தவிர எதைப் பற்றியும் பெரிதாய் பேசிக் கொள்ளவதில்லை எனினும் எப்போதாவது பேசும் ஐந்து பத்து நிமிடங்கள் கூட மனதிற்கு ஒரு வித நிம்மதியைக் கொடுப்பதாய் இருந்தது.
“இப்போ எல்லாம் இன்னும் ப்ரிஸ்க்காக வேலை பார்க்குறீங்க…”
“ம்ம் உண்மை தான்…சீக்கிரமே வீட்டுக்குப் போய்டுறேன்..நல்லா தூங்குறேன்…மேபி அதனால கூட இருக்கலாம்..”
“ம்ம் அப்படியே ஒரு கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க னா..”
“மொத்தமா லைஃப் முடிஞ்சுரும்…அதான..”
“இதை அந்தப் பொண்ணு சொன்னாலும் பரவால்ல..”,என்றவளின் முணுமுணுப்பு அவனின் காதுகளை எட்டினாலும் பெரிதாய் அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
“ராஜீவ் அண்ணா கூட சொன்னாங்க உங்க அம்மா அவர்கிட்ட இதைப் பத்தி பேசிட்டே இருக்காங்கனு…ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?”
“ப்ச்ச் எல்லாம் தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்டா என்ன அர்த்தம்…”
“யாரா இருந்தாலும் தப்பு பண்றது இயற்கை தான்…அதைப் புரிஞ்சுகிட்டு சரி பண்ணி வாழ்க்கையை அடுத்தக் கட்டதுக்கு எடுத்துட்டுப் போகாம அதையே சொல்லிட்டு இருந்தா எப்படி?”
“இங்க பாரு அபூர்வா..நான் தப்பு பண்ணேண்..திருந்திட்டேன்..அதெல்லாம் இப்போ பிரச்சனை கிடையாது..ஒருவேளை கல்யாணம்னு பேச்சை ஆரம்பிச்சு அம்மா அப்பாவுக்கு எதாவது மனக் கஷ்டம் வந்துட்டா அது ரொம்பவே பிரச்சனைகளை வேற விதமா ஆக்கிடும்..இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க நான் தயாரா இல்ல..ஜஸ்ட் சேஞ்ச் தி டாபிக்..”,என்றவனிடம் அதற்கு மேல் என்னக் கூறுவது என்றுப் புரியாமல் விழித்து நின்றாள்.
சிறிது நேரத்தில் கீழ் தளத்தீற்குச் சென்று ராஜீவைச் சந்தித்தவள் தனக்கும் ப்ரஜீஷிற்குமான கலந்துரையாடலைப் பற்றிக் கூறினாள்.
“அவரு ரொம்பவே உறுதியா இருக்கார் ணா…இதுக்கு மேல எப்படி பேசுறதுனு எனக்கும் தெரில..”
“ம்ம் நானும் எப்படியாவது அவனுக்கு ஒரு நல்லது நடந்துரும்னு பாக்குறேன்…என்னவோ என்ன சொல்றதுனு தெரில டா..”
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ணா…உண்மையாவே அவர் பண்ணின தப்புகளுக்கு இப்போ கல்யாணம்னு ஒண்ணு நடக்கும் போது அது அந்தப் பொண்ணுக்குப் பண்ற துரோகம் தான ணா?”
“நீ சொல்ற வர்றது புரியுது அபூர்வா..ஆனா இப்போ அவன் திருந்திட்டான்..முன்ன மாதிரி இல்ல…இனி தவறியும் அந்த வாழ்க்கைக்குப் போகவும் மாட்டான்.அப்படியிருக்கும் போது இந்த வாய்ப்பு அவனுக்கு ஏன் கிடைக்கக் கூடாது…சொல்லு..”
“ஒரு விதத்துல நீங்க சொல்றது கரெக்ட் தான்..ஆனா அதுக்கு அந்தப் பொண்ணு அதையெல்லாம் புரிஞ்சுக்குற ஒருத்தங்களா இருக்கணும்..இவருக்கு செட் ஆகணும்..இப்படி எத்தனையோ இருக்கு…ம்ம் என்ன சொல்றது தெரில..நல்லது நடந்தா அவருக்காக சந்தோஷப்படுற முதல் ஆளா நான் தான் இருப்பேன்..பார்க்கலாம்..”என்றபடி பேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டுத் தனதறைக்குச் சென்றாள்.
அடுத்து வந்த வாரத்தில் மோகனும் சௌமியாவும் ஊர் திரும்பியிருக்க மகனிடம் பேசுவதற்கு முக்கியமான விஷயத்தைக் கொண்டு வந்திருந்தனர்.
“ட்ரிப் எப்படி இருந்தது பா?”
“ரொம்ப நல்லா இருந்தது ப்ரஜி…அப்பறம்..”
“ம்ம் கல்யாண வயசுல பிள்ளையை வச்சுட்டு நாம ட்ரிப் போய்ட்டு வந்துட்டு இருக்கோம்…ரொம்ப நல்லாயிருக்கு…டேய் ப்ரஜி நான் உன் கூட கொஞ்சம் பேசணும்…”
“ம்மா…வந்தன்னைக்கே ஆரம்பிக்காதீங்களேன்..”
“என் இடத்துல இருந்தா தான் அந்த கஷ்டம் உனக்குப் புரியும் ப்ரஜி..”
“ம்மா…”
“சரி நேரா விஷயத்துக்கு வரேன்..ட்ரிப் போயிருந்த இடத்துல அப்படியே நம்ம உன்னி மேனன் அங்கிளை மீட் பண்ணிணோம்..உனக்கேத் தெரியுமே அவங்க பேமிலி அங்கேயே செட்டில் ஆய்ட்டாங்க…”
“ம்ம்…”
“அவரோட பொண்ணு உன்னை விட நாலு வயசு சின்னவ…அவளுக்கும் இந்த கல்யாணத்துலேயெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லாம தான் இருந்தாளாம்..இப்போ ஓகே சொல்லிருக்கா போல..உனக்கேத் தெரியும் பாரின்ல வளர்ந்த பொண்ணு சோ ரொம்பவே ஸ்சோஷியல் டைப்…நீயும் கூட அப்படிதான…அதான் உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகுமோனு தோணுது…பேசிப் பாரு ஒத்து வந்ததுனா மேல பேசலாம் என்ன சொல்ற…”
“ப்ச்…”
“டேய் இதுக்கு மேலே என்ன பண்ணணும்னு நினைக்குற…உன் இஷ்டத்துக்கு இத்தனை வருஷத்தை கழிச்சுட்ட இனியாவது அம்மா அப்பா பேச்சைக் கொஞ்சமாவது கேளேன் டா..நாங்க இருக்குற வரை உனக்கு அருமை தெரியப் போறதே இல்ல ப்ரஜி…எங்க காலத்துக்கு அப்பறம் தனிமரமா நிக்க போறியா நீ?”
“சௌமி…அவனைக் கொஞ்சம் யோசிக்க விடேன்…ஏன் இப்படி எமோஷனல் ப்ளளாக் மெயில் பண்ணிட்டு இருக்க…ப்ரஜி…அம்மா சொல்றது உன்னோட நல்லதுக்காக தான்..ஜஸ்ட் பேசிப் பாரு பிடிக்கலனா விட்டுரலாம்…யோசிச்சு சொல்லு..”,என்றவர் அவனின் தோள் தட்டி நகர எத்தனித்த நேரம்,
“சரிப்பா பேசிப் பாக்குறேன்…”
“!!!”
“ஏன் இரண்டு பேரும் அப்படி பாக்குறீங்க?உண்மையாவே பேசிப் பாக்குறேன்னு தான் சொல்றேன்..”
“ஹப்பா இப்போவாவது ஒத்துக்கிட்டியே…இது போதும்..இப்போவே பேசி அவர் பொண்ணு நம்பரை வாங்கித் தரேன்…கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்”,என்றவராய் சௌமியா உள்ளே செல்ல மோகன் அவனைப் பார்த்துப் புன்னகைத்துச் சென்றார்.
ப்ரஜீஷிற்கு இன்னமும் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை இருந்தும் பேசிப் பார்ப்பதில் தவறில்லையே என்ற எண்ணத்தில் சம்மதம் தெரிவித்திருந்தான்.அடுத்த அரைமணி நேரத்தில் அந்தப் பெண்ணின் கைப்பேசி எண் அவனிடம் இருந்தது.
நிறைய நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு அவளது எண்ணை சேமித்தவன் வாட்ஸப்பில் அவளது புகைப்படத்தைப் பார்க்க நவீன யுவதியாய் அழகிய புன்னகையோடு நவநாகரீக உடையில் நின்றிருந்தாள் லிசா.
ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தவனை வெகுநேரம் காக்க வைக்காமல் சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்துபதில் வந்திருந்தது.
“ஹாய் ஹேண்ட்சம்..”
“இஸ் திஸ் அ குட் டைம் டு டாக் வித் யூ?”
“இப்படி கேட்டா கண்டிப்பா இல்லங்கிறது தான் என் பதில்…ஹேங்கிங் அவுட் வித் ப்ரண்ட்ஸ் நவ்…ஷல் ஐ கால் யூ இன் சம்டைம்?”
“ஓகே…நோ இஷுஸ்..”,என்றவன் மொபைலைத் தூக்கி கட்டிலில் எறிந்திருந்தான்.ஐந்து நிமிட மெசெஜிற்கே இது ஒத்துப்போகாது என்ற முடிவிற்கு வந்திருந்தான் ப்ரஜீஷ்.அவர்களின் நேரப்படி ஏற்கனவே நள்ளிரவைக் கடந்துச் சென்றிருக்கும் இதில் இன்னும் சிறிது நேரம் கழித்து அழைப்பதாய் கூறுகிறாள்.
தன்னால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் அப்பா அம்மாவிற்கு இதெல்லாம் ஒத்துப் போவது என்பது வாய்ப்பேயில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தான்.இருந்தும் இப்போதைக்கு எதையும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் நடப்பது நடக்கட்டும் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.
ராஜீவிடம் போனில் விஷயத்தை கூறியிருக்க அவன் வாயிலாய் அபூர்வாவிற்கு விஷயம் எட்டியிருந்தது.மறுநாள் அலுவலகத்தில் அவனைச் சந்தித்தவள் புன்னகையோடு கை குலுக்கும் விதமாய் கையை நீட்டி நிற்க ஒன்றும் புரியாதவனாய் கையை விரித்து என்ன என்று பதிலுக்கு செய்கை செய்தான் ப்ரஜீஷ்.
“என்ன நல்லது??ஹான்..என் விஷயங்கள்ல அடுத்தவங்களைத் தலையிட விட்டதுல இருந்து என் நிம்மதியே போச்சு…இப்போ என்ன பிரச்சனை தெரியுமா என் வாழ்க்கையில் நான் ஏற்படுத்தி வச்சுருக்க குழப்பங்களால கல்யாண விஷயத்துல எந்தவித டிமாண்டும்…டிமாண்ட் கூட இல்ல..ஒபினியன் சொல்ற வழி கூட எனக்கு இருக்கும்னு தோணல..”
“ப்ரஜீஷ் ரிலாக்ஸ்…”
“இல்ல…உங்களுக்குப் புரிய வைக்க முடியுமானு தெரில…சீ க்ளியர்லி ஐ டோண்ட் ஹவ் எனி எக்ஸ்பெக்டேஷன்ஸ்..பட் என்னைக் கன்ட்ரோல் பண்ற மாதிரியான ஒரு ரிலேஷன்ஷிப் கண்டிப்பா எனக்கு செட் ஆகாது..பட் யூ நோ இந்த பொண்ணு லிசா 100% அந்த மாதிரி பொண்ணு தான்…ஐ அஷுவர் யூ..
அதை நான் தப்பு சொல்லல..எனக்கு செட் ஆகாதுனு தான் சொலேறேன்..கல்யாணம் பண்ணிணாலும் எத்தனை மாசம் தாக்குப் பிடிக்க முடியும்னு கூட ஐடியா இல்ல…அப்படி ஒரு கல்யாணம் தேவையா?”
கல்யாணத்துக்கு அப்பறமோ இல்ல அதுக்கு முன்னாடியே கூட உங்களுக்காக அவங்க தன்னை மாத்திக்க முயற்சி பண்ணலாம் இல்லையா..நான் சொல்ற எல்லாமே நடக்கலாம் நடக்காமயும் போகலாம்..பட் நாம அதுக்கான வாய்ப்பு கொடுத்தா மட்டும்தான் அதெல்லாம் தெரிஞ்சுக்க முடியும் ப்ரஜீஷ்..”
“இப்படியே பேசிப் பேசி என்னைக் குழப்பி விட்டுரு நல்லா…இப்போ யோசிச்சா அவ தான் எனக்கு செட் ஆவானு எனக்கேத் தோணுது…உன்னை மாதிரி வீட்டுக்கு ஒருத்தி இருந்தா போதும்..”,என்று கடுப்பாய் கூறியவனுக்குப் பதில் கூறும் முன்னரே அவனது அலைப்பேசியில் அழைப்பு வர எடுத்துப் பார்த்தவன் அதை அவளை நோக்கிக் காட்டினான்.
லிசா என்ற பெயரைப் பார்த்தவளுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போயிருந்தது.
“நான் சொன்னேன் நீங்க தான் கேட்கல…பாத்தீங்களா..அவங்களே கால் பண்றாங்க..பேசுங்க…நான் கிளம்புறேன்..,”,என்று அங்கிருந்து நகர்ந்தவளை முறைத்தவாறே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான் ப்ரஜீஷ்.
“ஹா..யா…உண்மையா சொல்லணும்னா எனக்கு இந்த மேரேஜ் கான்செப்ட் எல்லாம் செட்டே ஆகாது..டேட் டோல்ட் நீயும் என்ன மாதிரி சோஷியல் டைப்னு அதனால தான் பேசுறதுக்கு ஓகே சொன்னேன்…”
“ம்…அண்ட் வாட் ஆர் ஆல் யுவர் எக்ஸ்பேக்டேஷன் அதாவது கல்யாணத்துக்கு அப்பறம்?”
அதற்கு மேல் பேச்சைத் தொடர ஏனோ அவனுக்கு விருப்பமில்லை.அதை அவளிடம் வெளிக்காட்ட விரும்பாதவனாய் மற்றுமொரு அழைப்பு வருவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான்.