“அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக் கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை, நட்டார்கண் விட்ட வினை!
அஞ்சத் தகுந்த செயலைச் செய்ய அச்சப்பட வேண்டும். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கோடி பொருள் கொடுத்தாலும் மனமறிய நடுவு நிலைமையில் இருந்து மாறுபடக் கூடாது. நண்பர்களின் பொறுப்பில் விட்ட காரியங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது.”
ப்ரஜீஷின் தோரரணையும் பேச்சில் இருந்த தெளிவும் பெரியவர்களை அதற்கு மேல் எதுவும் பேசவிடாமல் செய்திருந்தது.அதற்கும் மேல் மகளின் பார்வை அவனை விட்டு நகராமல் இருப்பதைக் கண்டவர்களுக்கு அவளின் உள்ளம் புரிந்தாலும் ப்ரஜீஷ் தரப்பில் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கவலை மேலோங்கியது.
“சார்..அது…”
“உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டு வந்துருக்கேன்..சார்னு கூப்டுறீங்க?”
“அது..தம்பி எங்களுக்கு அபூர்வாவோட விருப்பம் தான் முக்கியம்..ஆனாலும் நீங்க வீட்ல ஒரு தடவை பேசின அப்பறம் முடிவெடுக்கலாமே..அவங்களுக்குனு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா?”
“முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போனா எப்படி கொஞ்சம் இருங்க..”,என்றவராய் அபூர்வாவின் தாய் அவனுக்கு காபியும் பலகாரங்களும் கொண்டு வந்துக் கொடுக்க அதை உண்டு முடித்தவன் அவர்களிடம் கூறிவிட்டுக் கிளம்பினான்.
அபூர்வா வாசல் வரைச் சென்று வழியனுப்பி வருவதாய் கூறிவிட்டு அவனோடு வெளியே வர சரியாய் அவளது தங்கை வகுப்பு முடிந்து வந்திருந்தாள்.தன் வீட்டில் நிற்கும் புதியவனைக் கவனித்தவாறே தன் தமக்கையின் அருகில் வந்து அவள் நிற்க,அபூர்வா ப்ரஜீஷிற்கு அவளை அறிமுகப்படுத்தினாள்.
“தங்கச்சி ராஜி..”
“ஓ…நீ கொடுத்த கெர்சீப் ரொம்ப நல்லாயிருந்தது.பத்திரமா வச்சுருக்கேன்..”,என்றுத் தன்னை நேரடியாய் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் அவன் கூறிய விதத்திலேயே கண்டுக் கொண்டவளாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
மேலும் இரண்டொரு வார்த்தை அவனோடு பேசிவிட்டு அவள் உள்ளே செல்ல அபூர்வா அவனையேப் பார்த்திருந்தாள்.
“இப்படியே பார்த்துட்டு இருந்தா கார்க்குள்ள தூக்கிப் போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்..பரவால்லையா?”
“ம்ம்..ஆமா என்ன திடீர்னு வந்துருக்கீங்க…உடம்பு இப்போதான் பரவால்ல ஏன் ட்ராவல் பண்றீங்க..”
“திடீர்னு எல்லாம் இல்ல நேத்து நீ பேசும் போதே முடிவு பண்ணது தான்..நாம சம்மந்தப்பட்ட விஷயம் உன்னை மட்டும் தனியா எப்படி விட முடியும்..அதான்..
அப்பறம் என்ன சொன்ன உடம்பு பராவாயில்லையா…நேத்து காலையிலேயே ஒருத்தி என் உடம்புக்கும் மனசுக்கும் தேவையான மொத்த தெம்பையும் கொடுத்துட்டா..ஐ அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் நவ்..”
“உண்மையா எனக்கு டயர்டா இல்ல..ஆனா உனக்காகவாவது இனி ஹெல்த்தை நல்லா பார்த்துக்கலாம்னு இருக்கேன்..சோ திருச்சில நைட் ஸ்டே..நாளைக்கு மார்னிங் கிளம்பிடுவேன்..”
“ம்ம்..சரி..”
“வீட்டுக்குப் போயிட்டு அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்..ஐ திங் இதுக்கு அப்பறம் நீ எம்ப்ளாயியா எர்ணாகுளம் வர வேண்டியது இருக்காது..மிஸர்ஸ் ப்ரஜீஷா தான் வரணும்..”
“என்ன இவ்வளவு சீக்கிரமா!!!”
“என்னைப் பொறுத்தவரை இதுவே லேட் தான்..தயாரா இரு..இந்த ப்ரஜீஷை சமளிக்குறதுக்கு..”,என்றவன் கூறியதில் இருந்த இரு பொருள் புரிய முகமெங்கும் குங்குமமாய் சிவந்து விட்டிருந்தது அபூர்வாவிற்கு.
ஓட்டுநர் எங்கோ அருகில் சென்றிருக்க காரின் பின்பக்கக் கதவைத் திறந்து அமர்ந்தவனின் பின் நகர்ந்தவளாய் அவனே எதிர்பார்க்காத நேரம் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்திருந்தாள்.
“இன்னைக்கு இங்க வந்து எனக்குக் கொடுத்த சர்ப்ரைஸ்க்காக..”,என்றவளுக்கு குரல் உள்ளேயேப் போயிருந்தது…
“சோ சர்ப்ரைஸ் பண்ணிணா பதிலுக்கு சர்ப்ரைஸ் கிடைக்கும்…ம்ம் நோட்டட்..தினமும் சர்ப்ரைஸ் பண்ணிடலாம்..”,என்றவனின் பதிலுக்கு மீண்டும் பேசும் தைரியம் இல்லாமல் போயிருந்தது பெண்ணவளுக்கு.
அங்கிருந்து ப்ரஜீஷ் கிளம்பிய பின் வீட்டிற்குள் வந்தவள் தாய் தந்தையின் முகத்தைப் பார்க்க இருவருமே ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது புரிந்தது.
“ப்பா…என் மேல கோவமா?”
“அதெல்லாம் இல்ல மா…அந்த தம்பியும் உன் மேல பாசமா இருப்பாருனு தோணுது..எல்லாம் நல்லபடியா நடந்தா சந்தோசம் தான்..வரட்டும் அவங்க வீட்ல என்ன சொல்றாங்கனு பார்ப்போம்..”
தாயும் தந்தையுமாய் அங்கிருந்து நகர்ந்த பின் தங்கையிடம் சிக்கிக் கொண்டாள் அபூர்வா.
“அன்னைக்கு அவர் எப்படியிருப்பார்னு கேட்டதுக்கு அவ்ளோ சீன் போட்ட…இதுதானா விஷயம்..”
“ஹே நீ பாட்டுக்கு எதாவது நினைச்சுக்காத..உண்மையாவே நேத்து தான் அவர் சம்மதம் சொன்னார்..”
“நேத்து ஓகே பண்ணதுக்கு இன்னைக்கு உனக்காக வீட்டுக்கே வந்து நின்னுருக்காரு..ம்ம்..ம்ம்..அம்புட்டு லவ்ஸு…”
“ப்ரஜி..இப்போ தான் உடம்பு சரியாயிருக்கு…மறுடியும் ஆரம்பிச்சுட்டல நீ..சொல்லாம கொள்ளம கிளம்பி போய்ட்ட..கால் பண்ணா இரண்டு நாள்ல வந்துருவேன்னு கூலா சொல்ற..கொஞ்சமாவது எங்களைப் பத்தி யோசிக்குறியா நீ..”
“ம்மா..கொஞ்சம் என்னையும் பேச விடுங்களேன்..அப்பா எங்க?”
“நான் கேட்டதுக்கு பதில் இல்லாம அப்பாவைத் தேடிட்டு இருக்க நீ..”
“ம்மா…”
“இரு கூப்பிடுறேன்..”,என்றவர் உள்ளே அவர்களது அறையில் இருந்த மோகனை அழைத்து வந்தார்.
“எப்போ வந்த டா…என்னைப் பார்க்கணும்னு சொன்னியாமே..எதுவும் பிரச்சனையில்லையே..”
“இப்போதான் வந்தேன் பா..நான் சொல்லப் போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..பட் உங்களுக்குப் பிரச்சனையா இல்லையானு நீங்க தான் சொல்லணும்..”
“என்ன விஷயம் பா?”
“எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்கு…அவளும் என்னை விரும்புறா…கல்யாணம் பண்ணிக்கலாம்னு விருப்பப்படுறேன்..”,அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சௌமியா வேகமாய் வந்து அவனருகில் அமர்ந்து கொண்டார்.
“ப்ரஜி..உண்மையாவா டா..யாரு டா பொண்ணு..இதுல எங்களுக்கு என்னப் பிரச்சனை இருக்கப் போகுது…”
“ம்மா..முழுசா கேட்டுட்டு எக்ஸைட் ஆகுங்க…அவ..அவங்க பேமிலி நார்மல் மிடில் க்ளாஸ்…திருச்சி பக்கம் சின்ன கிராமம் அவளோடது.இதெல்லாம் பத்தி அஃப்கோர்ஸ் நான் யோசிக்கக் கூட இல்ல..பட் உங்ககிட்ட முதல்லயே தெளிவா பேசிடணும்னு தான் எல்லாத்தையும் சொல்றேன்..
இதெல்லாம் இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றதுக்கு இருக்குற காரணங்கள்..ஆனா இதையெல்லாம் விட அவளோட இருந்தா என் லைப் எப்பவும் சந்தோஷமா இருக்கும் இது தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறதுக்கு இருக்குற ஒரே காரணம்..
கொஞ்ச நாளா உங்க பையன் நிறைய மாறிருக்கான்னு நீங்க சந்தோசப்பட்டீங்க தான..அதுக்கு முழு காரணமும் அவ மட்டும் தான்..சோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்..நீங்க இரண்டு பேரும் பேசிட்டு முடிவைச் சொல்லுங்க…”,என்றவன் மோகனைப் பார்த்தான்.
அதற்குள் சௌமியாவோ,”பொண்ணு யாரு டா அன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்கு வந்தாளே உன்னோட செகரெட்டிரி அந்த பொண்ணா டா?”
“ம்ம் அவ தான்..பேரு அபூர்வா.”
“பார்த்தீங்களாங்க சரியான கள்ளூளி மங்கனா இருந்து என்ன வேலை பண்ணிருக்கான்னு…”
“ம்மா…இரண்டு நாள் முன்னாடி தான் நானே முடிவு பண்ணேன்..”
“ப்ரஜி அப்பா இப்படி சொல்றனேனு தப்பா எடுத்துக்காத…நீ வளார்ந்த விதமே வேற..காதல்னு பார்த்தா உனக்கு அவளைப் பிடிச்சுருக்குறது மட்டும் போதும்..ஆனா கல்யாணம்னு வரும் போது அவளோட மொத்தமும் உன் பொறுப்பு..
அதெல்லாம் உன்னால ஏத்துக்க முடியுமானு யோசி..இந்த சொசைட்டியை ஃபேஸ் பண்ற நிலைமையில் நீ இருப்ப..கேட்குறவங்களுக்கு பதில் சொல்லனும் தேவையில்லாத பேச்சுக்களைக் கடந்து வரணும்..இந்த மாதிரி நிறையவே இருக்கு..”
“நீங்க சொல்ற எல்லாமே கரெக்ட் தான்..ஆனா இந்த ப்ரஜீஷைக் கேள்வி கேட்குற உரிமை உங்களைத் தவிர யாருக்கும் கிடையாது.அதையும் மீறி வர்றதைக் கண்டிப்பா நான் பாத்துக்குறேன்..அப்படி நடக்குற எந்த விஷயமும் எங்க இரண்டு பேரோட ரிலேஷன்ஷிப்பை ஒரு துளிக் கூட கண்டிப்பா பாதிக்காது..ஐ அஷுவர் யூ தட்..
அண்ட் அவளோட எல்லாமும் என் பொறுப்புனு சொன்னீங்களே..அஃப்கோர்ஸ் யெஸ்…அவ என்னோட சேர்த்து உங்களையும் ஏத்துகிட்டு இங்க வாழ்க்கை முழுசும் வாழும் போது என்னால அவளோட பெத்தவங்களை ஏத்துகிட்டு எதோ ஒரு இரண்டு மூணு நாள் அவளோட வீட்ல இருக்க முடியாதா..கண்டிப்பா முடியும்னு நம்பிக்கை இருக்கு பா..
இதுக்கு முன்னாடி எப்படியோ தெரில…இப்போ உடம்பும் மனசும் கொஞ்சம் இல்ல நிறையவே பக்குவம் அடைஞ்சுருக்கு..கண்டிப்பா ஐ வில் மேனேஜ் மை பெர்சனல் லைஃப் வெரி வெல்..”,என்றவனைத் திருப்தியாய் பார்த்திருந்தார் மோகன்.
“உங்க இரண்டு பேர் முடிவையும் சொல்லவேயில்லையே?”
“உனக்கு நடக்க இருக்குற நல்லதை நாங்க ஏன் டா வேண்டாம்னு சொல்ல போறோம்..இப்போவே ஜோஷியர் கிட்டப் பேசி நல்ல நாள் பார்க்க சொல்றேன்..அதுக்கு முன்னாடி அப்பா அவங்க அப்பாகிட்ட பேசிடட்டும்..என்னங்க சொல்றீங்க?”
“ம்ம் அப்படியே பண்ணிரலாம்..அவங்க விருப்பப்படி எப்படி நினைக்குறாங்களோ சிம்பிளா கல்யாணத்தை அங்க வச்சுப்போம்..எனக்கு கோவிலா இருந்ததாக் கூட ஓகே தான்..ஏன்னா நம்ம வழக்கப்படி குருவாயூர் கோவில்ல தானே பண்ணுவோம்..