“புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.
புகையின் காரணமாக நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மன மகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களால் பகைமை வெளிப்படும். பகைமையை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.”
காலைப் பத்து மணியிலிருந்து தொடங்கிய வேலைகள் அனைவரையும் நிற்க நேரமில்லாமல் சுழற்றிக் கொண்டிருந்தன.அத்தனையும் முடித்து ஆறரை மணியளவில் ப்ரஜீஷும் அபூர்வாவும் அவர்களது பிரம்மாண்டமான வரவேற்பிற்குத் தயாராகி இருந்தனர்.
ப்ரஜீஷ் கருப்பு வெள்ளைக் கோட் சூட்டில் கம்பிரமாய் கிளம்பியிருக்க அபூர்வாவோ ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தாள்.
அழகிய பேபி பிங்க் நிற பால் கௌனும் மேற்கத்திய முறைப்படி தூக்கியிடப் பட்ட கொண்டையுமாய் உயர்தர ஒப்பனைகளோடு உள்ளே வந்தவளைக் கண்டவன் அசந்து தான் போனான்.
“வாவ்..லுக்கிங் ஸ்டன்னிங் அப்பூ…”
“எனக்கு என்னவோ போல இருக்கு ப்ரஜு…இவ்ளோ மேக்கப் எல்லாம் போட்டதேயில்ல..”,என்று குழந்தையாய் சிணுங்கியவளை தன்னெதிரில் இருந்தக் கண்ணாடியைப் பார்த்து திருப்பியவனாய் அவளது கழுத்து வளைவில் தன் தாடையை வைத்து நின்று கண்ணாடியில் அவளைப் பார்த்து புருவமுயர்த்த அழகாய் புன்னகைத்தாள் அவனின் அபூர்வா.
“டோண்ட் கால் மீ லைக் திஸ் மை டியர்..ஐ அம் லூசிங் மை கன்ட்ரோல்..”,என்றவனாய் அவளின் பின்னங்கழுத்தில் அழுந்த இதழ் பதித்திருந்தவன் மென்மையாய் அவள் காது மடல் உரச,.
“நாளைக்கு நாம ஹனிமூன் கிளம்புறோம்..”என்றான்.
“என்ன திடீர்னு இங்கேயே…”
“ஷ்ஷ்..எதுவும் பேசாம ஜஸ்ட் கெஸ் தி ப்லேஸ்..”,என்றவன் அவளின் இடைச் சுற்றி கை வைத்தவாறு கண்ணாடியில் அவளையேப் பார்த்திருந்தான்.
ஒவ்வொரு நொடியும் மாறும் அவளது முக பாவனைகளை ரசித்தவனாய் அமைதியாய் இருக்க இரண்டே நிமிடத்தில் பதிலைக் கண்டு பிடித்தவளின் முகம் பிரகாசித்தது.
“டெல்லி???”
“தேட்ஸ் மை ஏஞ்சல்…எப்படி கண்டுபிடிச்ச..”
“இவ்வளவு சீக்கிரம் நீங்க போகணும்னு நினைக்குற இடம் னா அது அங்க மட்டுமா தான் இருக்கும்..ப்ரெண்ட் கிட்ட பேசிட்டீங்களா?”
“ம்ம் இவ்ளோ அழகா…”,என்றவன் கண்ணாடியில் அவளைச் சுட்டிக் காட்டிட வழக்கமான அவளின் புன்னகையேப் பதிலாய் அளித்திருந்தாள் அபூர்வா.
அந்த மிகப் பிரம்மாண்டமான ஹோட்டலின் வரவேற்ப்பு நடைபெறும் பகுதி மொத்தமும் அத்தனை தீவிரமான கண்காணிப்பில் இருந்தது.ஏழு மணியளவில் தொடங்கிய வரவேற்பு நிகழ்வு இரவு பனிரெண்டு மணி வரையிலும் தொடர்ந்தது.
தொழில் வட்டாரத்தின் முக்கியப் புள்ளிகள்,அரசியல் தலைவர்கள் சில பல சினிமா நட்சத்திரங்கள் என கூட்டத்தை சமாளிப்பது சற்று சிரமமாகித் தான் போனது.
இத்தனைக்கும் கடைசி நேர அழைப்பாய் பலரை தொலைப்பேசியில் தான் அழைத்திருந்தான்.அவர்களும் கூட தங்கள் துணையோடு வந்து சிறப்பித்தது அவனே எதிர்பாராதது.
வீட்டிற்கு வந்து உடைமாற்றி கட்டிலில் விழுந்த போது அபூர்வாவிற்கு அப்படி ஒரு அலுப்பாய் இருந்தது.கால் வலி ஒரு புறம் அத்தனை கனமான உடையை அவ்வளவு நேரம் அணிந்ததால் ஏற்பட்ட உடல் வலி ஒரு புறமென ஒரு வழியாகி விட்டிருந்தாள்.
ப்ரஜீஷிற்க்குமே அத்தனை அலுப்பு இருந்தது இருந்தும் எப்போதும் ஒருவித நிமிர்வோடு இருப்பவளை அத்தனைச் சோர்வாய் பார்க்க அவனுக்கு ஏதோ போலிருக்க அவளருகில் அமர்ந்தவன் அவளது கால்களை எடுத்துத் தன் மீது வைத்திருந்தான்.
“ஐயோ என்ன பண்றீங்க..”,என்று பதறியவளாய் அபூர்வா எழுந்து அமர அவளை படுக்குமாறு செய்கை செய்தவன் கால்களை இதமாய் அழுத்திவிட ஆரம்பித்திருந்தான்..
“ப்ரஜு..வேண்டாம் விடுங்க…”
“வொய் ஆர் யூ ஓவர் ரியக்டிங் அப்பூ…உன் முகத்துலேயே தெரியுது…ஜஸ்ட் ரிலாக்ஸ்..”என்றவனையே பார்த்திருந்தவளைப் பார்த்து என்னவென ப்ரஜீஷ் கேட்க,
“இல்ல நீங்க என்ன பண்ணாலுமே விரைப்பா..கெத்தா பண்றீங்களே அது எப்படி?”
“பாராட்டுறியா இல்ல கிண்டல் பண்றியா?”
“ம்ம் பாருங்க இதைக் கூட அப்படியே டெரரா கேட்குறீங்க…”
“அது அப்படியே பழகிருச்சு..நான் அதிகமா பேசுறது னா அது ராஜீவ்கிட்ட தான்..ஐ அம் நாட் அ டாக்கடிவ் டைப்..”
“ம்ம்…ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு..”,என்றவள் கண்சிமிட்டி கூறிச் சிரித்தாள்.
“லைஃபை ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன்னு உன் கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் தோணுது..”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..இனி வேஸ்ட் பண்ணதையெல்லாம் சேர்த்து வச்சு சந்தோஷமா இருக்கலாம்..”
“உனக்கு நான் இதுவரை எதுவுமே கிப்ஃட்னு தரலையே அப்பூ..என்ன வேணும் சொல்லு..”
“எனக்கா எனக்கு என்ன ஒண்ணும் வேண்டாம்..இதோ இந்தச் சிரிப்பு இந்த சந்தோஷம் உங்க முகத்துல எப்பவுமே இருந்தா அதுவே போதும்..”
“நிஜமாவே உனக்கு எதுவுமே வேண்டாமா!!!”
“நிஜமா தான் சொல்றேன்..ஒண்ணும் வேண்டாம்..நீங்க கேட்குறதைப் பார்த்தா எதையோ எதிர்பார்த்து கேட்குற மாதிரி இருக்கே என்னது?”
“நத்திங் சும்மா கேட்கணும்னு தோணிச்சு…”
“ஐ நோ யூ பெட்டர்..அண்ட் யூநோ தட் வெரி வெல்…”,என்றவள் என்னவென மீண்டும் கேட்க ப்ரஜீஷோ கண்களில் குறும்பு மின்ன,
“இல்ல…என்னை மாதிரியே அழகா ஒரு ஜுனியர் வேணும்னு கேட்பனு நினைச்சேன்..”என்றவன் கூறியதைக் கேட்டவளுக்கு முகம் சிவந்து போனது.
“சரியான பிஸ்னெஸ் மேன்னு நிரூபிக்குறீங்க..எதுவாயிருந்தாலும் இனி டெல்லி போய் தான்..என்னால முடியாது ஆளை விடுங்க ”,என்றவள் தன் காலைப் பட்டென உருகிக் கொள்ள வய்விட்டுச் சிரித்திருந்தான் ப்ரஜீஷ்.
மறுநாள் பின் மதியத்தில் அவர்களுக்கு டெல்லிக்கான விமானத்திற்கு ப்ரஜீஷ் ஏற்பாடு செய்திருந்தான்.காலை உணவை முடித்து அபூர்வாவின் பெற்றோரும்,ப்ரஜீஷின் தங்கைகளும் அவர்களது ஊருக்கு கிளம்புவதாய் கூறியிருந்தனர்.
ப்ரஜீஷிற்கு முன்பாகவே எழுந்திருந்தவள் குளித்துத் தயாராகி தனக்கான காபியோடு சேர்த்து முன்தினமே அவன் தன்னை எதிர்பார்த்ததை மனதில் வைத்து அவனுக்கான க்ரின் டீயையும் எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றாள்.
அப்போதும் அவன் நல்ல உறக்கத்தில் இருக்க மெதுவாய் அவனது அருகில் தரையில் அமர்ந்தவள் சில நொடிகள் அவனையேப் பார்த்திருந்தாள்.
முந்தைய தினம் வரவேற்பில் வந்த ஒவ்வொருவரின் தோரணையும் ஆனால் அவர்கள் கூட அவனுக்குக் கொடுத்த மரியாதையும் பவ்யமும் ஒரு நொடியாயினும் அபூர்வாவின் மனதைச் சலனப்படுத்தாமல் இல்லை.
எத்தனை உயரத்தில் இருப்பவன் தன் அன்பு ஒன்றிற்காக எப்படி மாறியிருக்கிறான்.குழந்தையாய் தன்னைச் சூழ்ந்து கொள்கிறான்.ஆணின் ஆண்மையில் இருக்கும் மென்மை வெளிப்படுவது அவனின் மனம் கவர்ந்தவளிடமே..
உடலளவிலும் சரி மனதளவிலும் சரி தன் பலத்தை அவளிடம் காட்ட எப்போதும் எண்ணவே மாட்டான் என்பதை இந்த இரு தினங்களிலேயே அதிகமாய் உணர்ந்திருந்தாள் அபூர்வா.
“சைட் அடிச்சு முடிச்சுட்டனா நான் எழுந்துப்பேன்..அங்கிள் ஆன்ட்டி ஊருக்கு கிளம்ப வேண்டாமா..”,என்று விழி மூடிபடியே அவன் கேட்ட விதத்தில் அசடு வழிந்தவளாய் எழுந்துக் கொண்டாள்.
“போற போக்கைப் பார்த்தா என்னை விட நீ புல் ஃபார்ம்ல இருப்ப போலேயே..”
“ஐயோ ச்ச..உங்களுக்குத் தூக்கத்துல கூட கண்ணு முழிச்சுருக்கும்னு தெரியாம வந்துட்டேன்..காபி குடிச்சுட்டு வாங்க நான் கீழே போறேன்..”,என்றவளை இழுத்து இதழ் பதித்தப் பின்னரே விடுவித்திருந்தான்.
அபூர்வாவின் பெற்றோர் கிளம்பிய நேரம் அவளுக்குக் கண்களில் நீர் கோர்த்திருக்க அவளை விட அபூர்வாவின் தாயும் தங்கையுமே அதிகமாய் அழுதிருந்தனர்.
அபூர்வாவின் தோளை ஆதரவாய் பற்றியவன் அவள் தங்கையிடம் விளையாட்டாய்,”வொய் ஆர் யூ க்ரையிங் லைக் திஸ்..என்னை உங்க அக்கா கிட்ட தனியா விட்டுட்டு போறோமேனு பயப்படுறியா?”,என்று அவன் கேட்ட விதத்தில் அத்தனைப் பேருமே சிரித்திருக்க அபூர்வா பிறரறியாமல் லேசாய் அவனது வயிற்றில் இடித்தாள்.
“செமஸ்டர் லீவ் ஃபுல்லா இங்கதான் இருக்க போற நீ..ஓகே…அண்ட் அங்கிள் ஆன்ட்டி அன்னைக்கு உங்ககிட்ட சொன்னது தான்…எப்பவும் அபூர்வாவை சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு..அண்ட் இனி இது உங்க பொண்ணு வீடு எப்போ தோணுதோ எந்தத் தயக்கமும் இல்லாம தாராளமா நீங்க வரலாம்..”,என்று அவர்களுக்குச் சமாதானம் கூறியவனைப் பெருமையாய் பார்த்திருந்தனர் மோகனும் சௌமியாவும்.
அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே லதாவும் லேகாவும் கிளம்ப அப்போதும் கண்ணீர் மல்க நின்றவளைப் பார்த்தவன் குழப்பமாய்,
“உன் தங்கச்சி கிளம்பினதுக்கு அழுதா பரவால்ல..என் தங்கச்சிங்க கிளம்புறதுக்கு அழுது என்னை ஏன் மாட்டி விடுற..”,என்று அவர்களின் காது படவே கேட்டு வைக்க தங்கைகள் இருவரும் வாய் பிளந்து நின்றனர்.
“அபூர்வா என்ன வேணா சொல்லுங்க…நீங்க எங்க அண்ணனைத் தலைகீழா மாத்திட்டங்க…”
“பீ ஹேப்பி லைக் திஸ் ஆல்வேஸ் அண்ணா..நம்ம பேமிலியோட பெஸ்ட் கப்பிள் நீங்களா தான் இருக்க போறீங்க..”,என்றவாறு இருவரும் இருவரையும் கட்டியணைத்து விடைப் பெற்றனர்.
இரவு எட்டு மணியளவில் டெல்லியில் அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த கெஸ்ட் கவுஸை அடைந்திருந்தனர்.பணியாட்கள் எல்லாம் வேண்டாம் என்று ப்ரஜீஷ் ஏற்கனவே கூறியிருக்க உள்ளே வந்தவள் யாரையும் காணாது தன்னவனின் வேலை என்பதை உணர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
பெட்டிகளை உள்ளே வைத்தவன் சற்றும் தாமதியாது தன்னவளோடு அப்படியே கட்டிலில் சரிந்திருந்தான்.திகட்டத் திகட்ட உண்ணும் இனிப்பைப் போன்று தன்னவளை திக்கு முக்காடச் செய்திருந்தான்.முதல் தினம் போல் அல்லாது தன்னவனுக்கு ஈடுகொடுக்க முயன்றவள் இறுதியில் ஓய்ந்து தான் போயிருந்தாள்.
“அப்பூ..”
“ம்ம்..”
“இரண்டு நாள்ல ஊருக்குக் கிளம்பிடலாம்..”
“பத்து நாள்னு சொன்னீங்க இப்போ என்னாச்சு…”
“…”
“என்னாச்சு ப்ரஜு…”
“டோண்ட் நோ..பட் ஐ அம் லூசிங் மை கன்ட்ரோல் ஆன் யூ..ஹர்ட் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு..”அதன் பொருள் உணர்ந்தவளுக்கோ முகம் மலர்ந்து போனது. தன்னவன் தன் மேல் கண்மன் தெரியாத ஆசையையும் காதலையும் கொடுப்பதை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள்.
இன்னுமாய் அவனோடு ஒன்றியவளாய்,”எப்பவோ நான் படிச்ச ஒரு கவிதை சொல்லட்டுமா..ப்ரஜு..”
“தமிழ் பேச தான் தெரியும் கவிதையெல்லாம் புரியுமா தெரில..இருந்தாலும் சொல்லு கேட்குறேன்..”,என்றவன் அவளின் தலைக்கோதிக் கொண்டிருந்தான்.
“காமம்கொண்டகாதலுக்கும்
காதல்கொண்டகாமத்திற்கும்
வித்தியாசம்உண்டு
முன்னதுஉடலின்பால்
கொண்டகாதல்..
பின்னதுஉயிரின்பால்
கொண்டகாமம்..
உடற்காதலின்
பசிதீரநொடிபோதும்..
உயிர்க்காமத்தின்
பசித்தீரயுகம்வேண்டும்..
காமத்தைஉயிருக்கும்
காதலைஉடலுக்கும்
அளிக்கும்
மனங்களின்கூடல்கள்
சொர்க்கத்தின்இருப்பிடம்”
அவனுக்காக நிறுத்தி நிதானமாய் அவள் கூறி முடிக்க அதன் அர்த்தத்தை ஓரளவு புரிந்துக் கொண்டவன் அவளை இன்னுமாய் தன்னோடுச் சேர்த்துக் கொண்டான்.
“இது நமக்கு ரொம்பவே பொருந்தும்..எந்த நிலைமையிலேயும் உங்களால என்னை ஹர்ட் பண்ண முடியாது ஹர்ட் பண்ணவும் மாட்டீங்க..”
“அப்பூ…”
“நிஜமா தான் சொல்றேன் ப்ரஜு..உங்களோட தேவை என்னோட சதை இல்ல..அதுகுள்ள இருக்குற நான்..இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு..”
“நேத்து நீ அம்மாகிட்ட சொன்னது ரொம்பவே உண்மைதான்…”
“என்னது??”
“யாரும் யாரையும் மாத்த முடியாது அவங்களா மாறணும்னு நினைக்காத வரை..ஹவ் ட்ரூ…எப்பவுமே என்னை மாத்துறதுக்கு நீ மெனக்கெட்டதே இல்ல..
ஆனா ஏதோ ஒரு விதத்துல நீ தான் காரணமா இருந்துருக்க..இப்போ யோசிச்சா இங்க…இதே ரூம்ல அன்னைக்கு நான் உனக்கு கொடுத்த முத்தத்துல எந்தவித உணர்வுகளுமே இல்லனு தோணுது..
ஆனா இப்போ இந்த செகண்ட் அந்த மாதிரி ஒரு முத்தத்தை என்னால உனக்குக் கொடுக்க முடியாது…ஐ மீன் இட்..அண்ட் யூ சேண்ஞ்ச்ட் இட் அப்பூ…லவ் யூ சோ மச்…யூ மேட் மீ கம்ளீட்..அண்ட் தேங்க் யூ ஃபார் பீயிங் மை லைஃப்…”,என்றவன் தன்னவளின் மார்புக் கூட்டில் புதைந்துக் கொண்டான்.
அடுத்த ஒரு வார காலமும் ப்ரஜீஷிற்கு கனவுபோல் இருந்தது.இத்தனை வருடமும் சந்தோஷம் என்று நினைத்த எதுவுமே உண்மையில்லை என்று தோன்றியது.அபூர்வா என்ற ஒருத்தியே தன் வாழ்விற்கான ஒட்டுமொத்த சந்தோஷம் என்பதை உணர்ந்திருந்தான்.
“அப்பூ..”
“சொல்லுங்க ப்ரஜு.”
“நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆபீஸ் போணும் நீயும் வா…”
“நான் எதுக்கு ப்ரஜு..”
“உன்னை பார்க்காம எப்படியிருக்குறது?”
“இதெல்லாம் ரொம்ப ஓவர்..”
“என்ன வேணா சொல்லு நிஜமாவே அதுக்காகத் தான் கூப்பிடுறேன்.நீயில்லாம ரொம்ப கஷ்டம்..”
“ஏன் இப்படி பண்றீங்க..”
“நீ வந்து வேலையே பார்க்கலனாலும் பரவால்ல..பட் ஆபீஸ் வர்ற..”
“ப்ரஜு..”,என்றவளைப் பிடித்து தன் கை வளைவில் அமர்த்தியவனாய்,
“இந்த வாசனை எப்பவுமே என்னை சுத்தி இருக்கணும்..அட்லீஸ்ட் நமக்கு ஜுனியர் வர்ற வரையாவது..”
“ஓ அஅப்போ அதுக்கு அப்பறம் நான் தேவையில்லையா?”,என்றவள் அவனை முறைக்க இன்னுமாய் அவளைத் தன்னோடு இறுக்கியவன்,
“என்னை விட நம்ம குழந்தைக்கு நீ அதிகம் தேவைப்படுவ அதனால அப்படி சொன்னேன்.அப்பறம் நாளைக்கு ஊருக்கு போயிட்டு பிஸினஸ் சர்க்கிள் பார்ட்டி ஒண்ணு இருக்கு அப்பூ..”
“பார்ட்டியா!!அங்க எல்லாம் நான் எதுக்கு..அதெல்லாம் பழக்கமேயில்லை..”
“புரியுது..நாளைக்கு ஒரு நாள் தான் இனி நானே அவாய்ட் பண்ணிடுவேன்..”
“ம்ம் சரி..”,என்று அரைகுறை மனதாய் சம்மதித்து வைத்தாள்.மறுநாள் காலையிலேயே கிளம்பி கொச்சினை அடைந்திருக்க ப்ரஜீஷ் முக்கியமான சில வேலைகளை ராஜீவோடு சேர்ந்து போனில் பேசியபடி முடித்துக் கொண்டிருந்தான்.
அபூர்வா கீழே செல்ல பூஜையறையில் இருந்த மாமியாரைக் கவனித்தவளாய் அங்கு சென்று அவருக்கு உதவி செய்யத் தொடங்கினாள்.
“அத்தை வேற எதுவும் வேலை இருந்தா சொல்லுங்க நான் பார்க்குறேன்..”
“இல்ல டா எல்லாம் தான் சர்வென்ட்ஸ் இருக்காங்களே..ப்ரஜி என்ன பண்றான்?”
“ஆபீஸ் கால் பேசிட்டு இருக்கார் அத்தை.ஈவ்னிங் எதோ பார்ட்டி இருக்குனு சொன்னார்.”
“ஓ சரி டா..”
அதன்பின் அப்படி இப்படியாய் பொழுதைக் கழித்தவளுக்கு மாலை அந்த பார்ட்டிக்கு செல்லவே மனமில்லாமல் தான் இருந்தது.இருந்தும் தொழில் வட்டார முக்கிய புள்ளிகள் என்பதால் தான் ப்ரஜீஷே தவிர்க்க முடியாமல் இருக்கிறான் என்பதை உணர்ந்தவளாய் கிளம்பத் தயாரானாள்.
பெரிதாய் கண்ணை உறுத்தாத வண்ணம் அடர் சிவப்பு நிற டிசைனர் சேலையை ஒரே மடிப்பாய் விட்டு அணிந்தவள் சென்டர் க்ளிப் போட்டு முடியை விரித்து விட்டிருந்தாள்.தன்னவளிடமிருந்து விழியகற்றாமல் கட்டிலில் அமர்ந்து தனது சாக்ஸை மாட்டிக் கொண்டிருந்தான் ப்ரஜீஷ்.
“ப்ரஜு இதை சரி பண்ணி விடுங்க ஒழுங்காவே வரல..”,என்றபடி தன் முன் நின்றவளின் புடவை மடிப்பை சரி செய்து கொடுத்தான்.
“இந்த பின்னை கொஞ்சம் தள்ளி குத்தி விடுங்களேன்..”,என்றதற்கும் ஒன்றும் கூறாமல் செய்து முடித்தவன் பட்டென அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கினான்.
“எவ்வளவு பெரிய பிஸினஸ் மேன்..என்னை பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது?”
“ம்ம் என் புருஷன் மாதிரி தெரியுது..”,என்றவள் சிரிக்க அவளது உதடுகளை வருடியவனாய்,
“புருஷன் மேல பயமே இல்ல..”
“அதுக்கு பயப்படுற மாதிரி நீங்க நடந்துக்கணும்.”,என்றவள் கன்னம் கிள்ளிச் சிரித்தாள்.
“அப்படியா சொல்ற”,என்றவனது இறுக்கம் இன்னுமாய் அதிகரிக்க அவன் தோளில் லேசாய் அடித்தவளாய் விடுபட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“இப்படியே பண்ணீங்கனா என் எலும்பு மொத்தமும் உடைஞ்சு போக போறது கன்பார்ம்..அப்பறம் பத்து நாள் என் அம்மா வீட்டுக்கு போய்டுவேன்”,என்றவளின் குரலில் குறும்பு மின்னியது.
“ரொம்ப வாய் அதிகமாயிடுச்சு டி உனக்கு”,என்றவன் இதழ்களை சிறை செய்து கொள்ள அவனைப் பிரித்தெடுத்து கிளப்புவதற்குள் ஒரு வழியாகி இருந்தாள்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவள் கணவனை முறைத்து நிற்க ஒன்றும் பேசாமல் அவளது லிப்ஸிட்டிக்கை எடுத்து பொறுமையாய் போட்டு வீட்டான்.
“ரொம்ப வொர்ஸ்ட் நீங்க..”,என்றவளைப் பார்த்தவாறே கண்ணாடியில் தன் தலைமுடியை ரி செய்தவன்,
“பொண்டாட்டிகிட்ட இந்த பேர் வாங்குறது தான் டி நல்லது..போலாமா?”,என்று தன் தரம் நீட்டி அவளை அழைத்துச் சென்றான்.
அந்த மிகப்பெரும் ஸ்டார் ஹோட்டலின் முன் இறங்கியவன் அவளுக்காக கை கொடுத்து நிற்க கீழே இறங்கியவளுக்கு பதட்டமாய் இருந்தது.அந்த இடம் சூழல் எதுவும் மனதில் ஒட்டவில்லை.
தன்னவளின் மனவோட்டம் அறிந்தவனாய் ஆதரவாய் தோள் பற்றி,”ஜஸ்ட் ஒன் அவர் தான்.கிளம்பிடலாம்.அவாய்ட் பண்ண முடியாத அளவு க்ளோஸ் அப்பூ..”
ஹாலிற்குள் நுழைந்த நொடி முதல் அத்தனை கண்களும் அவர்களைத் தான் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன.அபூர்வா இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொள்ள வரவேற்றவர்களுக்கெல்லாம் தலையசைத்து நகர்ந்தான் ப்ரஜீஷ்.
நடுவில் போடப்ட்டிருந்த வட்ட வடிவ மேசை நாற்காலியீல் அவளை அமர வைத்தவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
ஒவ்வொருவராய் வந்து அவனிடம் பேசிச் செல்ல யாரையும் தெரியாமல் அமைதியாய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாழ் அபூர்வா.
எப்போதும் போல் தன்னவனின் கம்பீரத்தில் தன்னைத் தொலைத்தவளாய் அவ்வப்போது அவனை ஓப் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்து சட்டென ப்ரஜீஷ் கண்ணடிக்க இருக்கும் இடம் உணர்ந்து முகம் சிவந்துவிட்டிருந்தது பெண்ணவளுக்கு.
அங்கீருந்த பலருக்கும் ப்ரஜீஷ் என்பவன் புதிதாய் தெரிந்தான்.எப்போதும் யாரிடமும் தேவையில்லாமல் பேசுபவன் இல்லை தான் எனினும் இப்போது அவன் கண்களில் தெரியும் எதோ ஒன்று அவனை இன்னும் வசீகரமாய் காட்டியது.
அங்கிருந்த பெண்களில் பலருக்கோ தங்களை ஒரு முறை இப்படி பார்க்க மட்டானா எனுமளவிற்கு அவனது பார்வை அபூர்வாவை மொய்த்தது.
எத்தனையோ பார்டிகளில் அவனை சந்தித்த பெண்களில் அவர்களாக விருப்பப்பட்டு அவனை நெருங்கினாலும் கண்களில் எந்தவித உணர்ச்சிகளுமின்றி அவர்களின் தேவை புரிந்தவனாய் அங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுவான்.
இன்றோ அந்த கண்களில் கொட்டிக் கிடக்கிறது காதலும் உரிமையும்.அந்த நொடியில் அபூர்வாவைப் பார்த்து வயிற்றெரிச்சல் படாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.
சி நிமிடங்களில் அனைவரும் மது கோப்பைகளோடு மிதமான இசைக்கு ஆடத் தொடங்கியிருக்க ப்ரஜீஷும் அபூர்வாவும் மட்டுமாய் அமர்ந்திருந்தனர்.
“ஹே டார்லிங்..”,என்ற குரல் வந்த திசையை இருவருமாய் திரும்பி பார்க்க நவநாகரீக உடையில் மதுவின் தள்ளாட்டத்தோடு ப்ரஜீஷின் அருகில் அமர்ந்தாள்.
“ஹு ஆர் யூ?”
“எப்படி மறந்துட்ட லாஸ்ட் இயர் துபாய்ல மீட் பண்ணோமே.”
“எனக்கு நியாபகம் இல்ல.”
“ஓ..தட்ஸ் ஓகே..கம் நான் நியாபகப் படுத்துறேன்”,என்றவள் அவனது கழுத்தில் கை வைத்து தன்புறம் இழுக்க அபூர்வா சட்டென எழுந்து சென்றிருந்தாள்.
ப்ரஜீஷோ கொலைவெறியில் தன்னருகில் இருந்தவளின் கைகளைத் ட்டிவிட்டு எழுந்து செல்ல எத்தனிக்க மீண்டுமாய் அவன் மீதே வந்து விழுந்தவளை தள்ளி நிறுத்தி ஓங்கி அறைந்திருந்தான்.
“என் அனுமதியில்லாம இன்னொரு தடவை மேல கை வைச்சா …”,என்றவனின் கனல் பார்வையில் போதை மொத்தமாய் தெளிந்திருந்தது அப்பெண்ணிற்கு.
அங்கு வெளியே லானிற்கு வந்த அபூர்வாவிற்கோ மனம் கனத்திருந்தது.அவனின் தவறு இல்லை எனினும் அவனது கடந்தகாலத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்பதை கிரகித்துக் கொள்ள தயாரானாள்.
அந்நேரம் அங்கு வந்த பெண்கள் குழு அவளைச் சூழ்ந்து கொள்ள என்னவென்பதாய் அவர்களைப் பார்த்து நின்றாள்.
“ப்ரஜி உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டானாமே?!”
“எங்களை மாதிரி மில்லினியர்ஸ் கிட்ட இல்லாதது ஒரு எம்ப்ளாயி உன்கிட்ட என்ன இருக்கு?!”
“ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்பறமும் அவன் இஷ்டப்படி வாழறதுக்கு உன்னை மாதிரி ஆள் தான் சரினு ஓகே சொல்லிட்டானா?”
“மைண்ட் யுவர் பிஸினஸ்..”,என்றவள் கோபமாய் முறைத்து நிற்க பெண்கள் அவளைப் பார்த்து எள்ளலாய் சிரித்தனர்.
“பார்க்க சின்ன பொண்ணா இருக்க..இந்த வயசிலேயே ப்ரஜீஷ் மாதிரி ஒருத்தனை வளைச்சு போடுற அளவு டேலண்ட் இருக்குனா..ம்ம்ம்..”
“ஆமா அவனுக்கு ஊர் மொத்தம் கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க..எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிருக்கனா .”
“எல்லாத்தையும் விடு இப்போ கூட உள்ளே ஒருத்தி பேசிட்டு இருக்காளே..அவ நினைச்சா எந்த அழகனையும் ஒரு நிமிஷத்துல தன் பக்கம் இழுத்துருவா..இந்நேரம் உன் புருஷன் அவளோட கிளம்பிருப்பான்.நீ…”
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..”
“!!!”
“என் புருஷனைப் பத்தி எனக்கு தெரியும்.அவரைப் பத்தி கவலைபடவும் அக்கறைபடவும் பொண்டாட்டி நான் இருக்கேன்.உங்களுக்கு என்ன பிரச்சனை..அவரைப் பத்தி உங்ககிட்ட ப்ரூவ் பண்ண வேண்டீய அவசியம் எனக்கு இல்ல.உங்க வேலையை பார்த்துட்டு போங்க”,என்றவள் திரும்பி நிற்க உள்ளே அவனைச் சமாதானப்படுத்திய சிலரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன் அனைத்தையும் கேட்டிருந்தான்.
அங்கிருந்த பெண்களை பார்த்தவனின் பார்வையில் அப்படியாய் ஒரு வெறி.அவனைத் தாண்டி செல்ல இருந்தவர்களை சொடுக்கிட்டு நிறுத்தியவன் அபூர்வாவைத் திருப்பி தன் கை வளைவிற்குள் நிறுத்திய வண்ணம்,
“ஷி இஸ் அபூர்வா ப்ரஜீஷ்.இன்னொரு தடவை தேவையில்லாத பேச்சு அவகிட்ட பேசினா இருந்த இடம் தெரியாம போயிடுவீங்க புரிஞ்சுதா.கெட் லாஸ்ட்..”,என்றவனின் கர்ஜனையில் அபூர்வாவே சற்று நடுங்கி தான் போனாள்.
அவர்கள் அங்கிருந்து நகர்ந்த அடுத்த நொடி பார்வையின் வெறி மொத்தமும் வடிந்து வலி குடியேறியிருந்தது ப்ரஜீஷிற்கு.
“அப்பூ சாரி..”
“விடுங்க ப்ரஜு போலாமா..”
“என்னை இரண்டு அடி கூட அடிச்சுரு..இப்படி எதுவுமே நடக்காத மாதிரி இருக்காத அப்பூ..”
“…”
“நிஜமாவே அவ யாருனு எனக்கு நியாபகமே இல்லை..ப்ராமிஸ்..”
“நான் உங்களை நம்பலைனா தான் இந்த விளக்கம் எல்லாம் சொல்லணும்.இதெல்லாம் எதிர்பார்த்தது தான்.உடனே எல்லாமே மாறாது ப்ரஜு.அதுக்காக தான் நான் இங்க வர்றதுக்கு யோசிச்சேன்.
உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை.தேவையில்லாத மனக்கஷ்டம் வேண்டாமேனு தான்.நீங்களும் எதையும் மைண்ட்ல போட்டு கஷ்டப்படாதீங்க.கொஞ்ச நாளுக்கு இதெல்லாம் இருக்கும் சமாளிங்க..ஐ அம் வித் யூ..”,என்றவள் ஆதரவாய் அவனது மார்பில் அழுந்த கைப் பதித்தாள்.
“அப்பூ..நிஜமா கோவம் இல்லையா?”
“அதெல்லாம் இல்ல ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருந்தது.இதெல்லாம் பழக்கமில்லாததுல அதான்.நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க ப்ரஜு.”,என்றவள் அவன் மீது சாய்ந்து கொள்ள எப்போதும் போல் இறுக அணைத்துக் கொண்டான்.
“நீ என் கூடவே இரு எல்லாத்தையும் கண்டிப்பா சரி பண்ணிடுவேன் அப்பூ.என்னைத் தப்பா நினைச்சுறாத..”
“தேவையில்லாம யோசிக்காதீங்கனு சொல்றேன்ல..உங்க வாழ்க்கையில் நான் மட்டும் தான்.இது சாகுற வரை மாறாதுனு எனக்கு நல்லாவே தெரியும்.”,என்றவளை தனக்குள் இன்னுமாய் இறுக்கிப் பத்திரப்படுத்திக் கொண்டான் அவன் அவளில் பரிபூரணம் என்பதை உணர்ந்து…