வீட்டை சுற்றிபார்க்கும் சாக்கில் இளையவர்கள் ஒதுங்கி கொள்ள பெரியவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்..

சஹானா தனதறைக்கு கார்த்திக்கை அழைத்து சென்று தன் சிறிய வயது புகைப்படங்களை காண்பித்து கொண்டிருந்தாள்..

அதை பார்ப்பதை போன்ற பாவனையோடு தன்னருகில் இருப்பவளை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்..

தற்செயலாய் அவன்புறம் திரும்பியவள்,

ஏய் கார்த்திக் உனக்கு சைட்கூட அடிக்க தெரியுமா??

அடிப்பாவி என்ன பாத்தா என்ன முற்றும் துறந்த முனிவர் மாறியா தெரியுது..

அவ்ளோ மோசமில்ல தான் இருந்தாலும் இப்படி கண்சிமிட்டாம என்ன பாக்குறியே அதுலதான் டவுட் முன்னாடிலா என்ன ஒழுங்காகூட பாக்க மாட்டல..

யாரு சொன்னது நா உன்ன பாத்ததில்லநு??ஒரு நிமிஷம் இத பாரு என தன் பேக்கிலிருந்து ஒரு சுருட்டியபடி இருந்த சாட் பேப்பரை அவளிடம் கொடுத்தான்..

ஆர்வமாய் அதை வாங்கி பார்த்தவள் இமைக்கவும் மறந்து இருந்தாள்..அவளை முதன்முதலாய் ரயில் நிலையத்தில் பார்த்ததை தத்ரூபமாய் வரைந்திருந்தான்..

அவள் அன்று அணிந்திருந்த உடை நிறம்கூட மாறவில்லை..

கார்த்திக்…

ம்ம்ம் நா உன்ன முதன்முதலா பாத்தப்போ இப்படிதான் இருந்த சஹி..அன்னைக்கே ஏதோ ஒரு பீல் பட் அத நா பெருசா எடுத்துக்கல..

பட் அப்போவே நீ எனக்குள்ள அப்படியே பதிஞ்சுட்ட..

வெரி நைஸ் பெய்ண்டிங் தேங்க் யு சோ மச் கார்த்திக் என அவன் கன்னத்தில் இதழ் பதித்து ஓடிவிட்டாள்..

திடீரென்று கிடைத்த பரிசில் திக்கு முக்காடி போனவன் கன்னத்தை தடவியவாறே குறுஞ்சிரிப்போடு அவளை பின் தொடர்ந்தான்..

ஹாலில் துளசியின் பின் ஒன்றும் தெரியாவளாய் நின்று கொண்டவளை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகரித்தது..

பேச்சும் சிரிப்புமாய் பொழுது கழிய கிளம்பும் வேளையில் கீதா,சேகர் குடும்பத்தை வரும் ஞாயிற்றுகிழமை விருந்திற்கு அழைத்தார்..

சிவா குடும்பத்தையும் கண்டிப்பாக வர வேண்டும் என அன்பு கட்டளையிட்டு சென்றார்..

மறுநாள் மாலை ஷரவந்தி பள்ளி முடிந்து வெளியே வர அங்கே சற்று தள்ளி காரில் சாய்ந்தவாறு நின்றிருந்த சிவாவை கண்டு ஆச்சரியம் கலந்த சிநேக புன்னகையை உதிர்த்தாள்..

ஹாய் சிவா என்ன இந்தபக்கம்??

உங்கள பாக்கதான் வந்தேன் ஷரவந்தி..எனக்காக ஒரு ஆப் அன் அவர் ஸ்பெண்ட் பண்ண முடியுமா??

என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்தவள் பின் சரி வாங்க போலாம்..என்று கூற அருகிலிருந்த கோவிலில் சென்று சற்று நிழல் பகுதியில் அமர்ந்தனர்..

ஓரிரு நிமிடம் மௌனத்திலிலே கரைய சிவாவே பேச்சை ஆரம்பித்தான்..

தேங்க்ஸ் என்ன மதிச்சு நா கூப்டவுடனே வந்ததுக்கு..

நோ பார்மாலிட்டீஸ் சிவா..சொல்லுங்க என்ன பேசனும் எதாவது அட்மிஷன் விஷயமா??யாருக்காவது ஹெல்ப் பண்ணணுமா??

ம்ம்ம் ரொம்ப தேவைதான் எனக்கு வேற வேலை வெட்டி இல்ல பாரு ரொம்ப கஷ்டம் என தனக்குள் நொந்தவன்,

அட நா என்ன ஸ்சோஷில் சர்வீஸ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னேனா??அதெல்லாம் இல்ல இது கொஞ்சம் பர்சனல்..

அழைப்பு ஒருமைக்கு மாறியதை கண்டும் காணாமல் அவனே பேசட்டும் என அமைதி காத்தாள்..

ஷரவ் எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது நேராவே கேக்குறேன்..ஐ லவ் யு சோ மச்..வில் யு மேரி மீ??

அவள் கண்களில் கண்டது என்ன கோபமா பயமா படபடப்பா தெரியவில்லை அவனுக்கு  ஆனால் அதை வெகுவாய் ரசித்தான்..

ஒரு நொடி அதிர்ந்தவள் தன்னை சமாளித்து கொண்டு,ஐ அம் சாரி சிவா இதுக்குதான் கூப்டீங்கநு தெரிஞ்சுருந்தா நா வந்துருக்கவே மாட்டேன்..

நாம ஒரு த்ரி டைம்ஸ் பாத்துருப்போமா அதுக்குள்ள இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் முளைச்சுருச்சா எனக்கு இதெல்லாம் பிடிக்காது..

நீங்க என் வருங்கால அண்ணியோட ப்ரதர்ங்கிற மரியாதைல தான் நீங்க கூப்டவுடனே வந்தேன்..

மத்தபடி வேற ஒண்ணுமில்லை.. நா எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுருங்க நா கிளம்புறேன்..

என எழ முயல அவள் கையை பிடித்து தடுத்தான் சிவா..காரமாய் ஒரு பார்வை அவளிடத்தில்..

சாரி ஷரவ் நா சொல்றத முழுசா கேட்டுட்டு அப்பறம் உன் முடிவ சொல்லு..ப்ளீஸ்ஸ்..

சற்றே தள்ளி அமர்ந்தவள் அமைதியாய் எங்கோ பார்த்தபடி இருந்தாள் சிவாவே தொடர்ந்தான்..

ஷரவ் நீ வேணா என்ன இப்போதான் பாத்திருக்கலாம் ஆனா நா உன்ன ரெண்டு வருஷமா தேடிட்டு இருக்கேன்..

இதென்ன புதுக்கதை என அவள் சந்தேகமாய் பார்க்க,

சத்தியமாடா நா உன்ன முதன்முதலா பாத்தது குன்னூர்ல தான்..அந்த நாளின் நினைவுகளில் கரைந்தான்..

தன் நெருங்கிய நண்பனின் திருமணத்திற்காக குடும்பத்தோடு குன்னூர் சென்றிருந்தான்,.காதல் திருமணம் வேறு..

அவன் தந்தை ஒத்து கொள்ளாததால் பேருக்கென்று சம்பிரதாயத்தோடு நடக்க அங்கு மாப்பிள்ளை சார்பில் இருந்ததில் நண்பர்களே அதிகம் ஆக ஆட்டபாட்டத்திற்கு குறைவில்லாமல் அதிர்ந்து கொண்டிருந்தது..

ஆனால் மணமகனின் தந்தை தான் அவ்வப்போது பெண் குடும்பத்திடம் சிடுசிடுத்து கொண்டேயிருந்தார்..

கல்யாணம் பிரச்சனையின்றி முடிய வேண்டுமென மணமகனும் பொறுமையை இழுத்துபிடித்து கொண்டிருந்தது நன்றாகவே தெரிந்தது..

சிவா அவனருகிலேயே இருந்து சமாதானம் கூறி கொண்டிருந்தான்..

திடீரென்று அவர் மணமகளின் தந்தையிடம் ஏறத்தாழ சண்டையிடும் தோரணையில் பேச ஆரம்பித்திருந்தார் அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் மணமகனே எழுந்து கீழே செல்ல என்னவென்று விசாரித்ததில் சீதனமாய் தருவதாய் கூறிய 5 லட்ச ரூபாயை பெண் வீட்டில் தரவில்லையாம்..

கேட்டதற்கு பணம் தொலைந்து விட்டதாக கூறினார்களாம்..

பணம் வராவிட்டால் இந்த கல்யாணமே நடக்காது..5 லட்சம்ங்கிறது என் ஸ்டேட்டஸ்க்கு ஒண்ணுமேயில்ல அத குடுக்க கூட வக்கில்லாத வீட்லயிருந்தா எனக்கு மருமக வரணும்..

எல்லாம் இதோ நிக்குறானே இவன சொல்லனும் ஊர் உலகத்துல வேற பொண்ணேயில்லநு தேடி புடிச்சுருக்கான் பாரு..

மணப்பெண்ணோ அவமானத்தினால் கோபம் ஒருபுறமும் அதை வெளிகாட்ட முடியாத இயலாமையால் கண்களில் நீர்கோர்க்க அங்கிருந்து உள்ளே செல்ல அவளை சமாதானபடுத்த ஒரு கூட்டம் உள்ளே ஓடியது,.

மணமகன் தன் அப்பாவோடு வாதத்தில் இறங்க சிவாவின் தந்தை சூழ்நிலையை அடக்க எண்ணியவறாய் இப்போ என்ன உங்களுக்கு தர வேண்டிய பணத்தை நா தரேன் முதல்ல கல்யாணம் நடக்கட்டும் வாங்க என அவரை நகர்த்த முயல..

மணமகளின் தம்பி அவரிடம் வந்து சார் அதெல்லாம் வேண்டாம் சார் நேத்து பணத்தை எடுத்துட்டு வரும் போது எப்படியோ மிஸ் ஆய்டுச்சு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கேன் சார் வேற ஏற்பாடும் பண்ணிருக்கேன் என் ப்ரெண்ட் ஊர்ல இல்ல ஈவ்னிங் கண்டிப்பா வந்து தரேன்னு சொல்லிருக்கான்..

இவரு அத புரிஞ்சுக்க மாட்ராரு என ஆதங்கமாய் முடிக்க அதற்கு அந்த பெரியவர் மறுபடியும் ஏதோ கோபமாய் கத்த வர,ஒரு நிமிஷம் என்று அவரை தடுத்தது ஒரு பெண்ணின் குரல்..

குரல் வந்த திசைக்கு முதுகு காட்டி நின்ற சிவா திரும்ப கையில் ஒரு பேக்கோடு இன்னொரு கையில் சிறிய பையை சுற்றிபிடித்திருந்தாள் அவள்..

யாரையும் கண்டுகொள்ளாமல் மணமகளின் சகோதரனிடம் சென்றவள்,ஹலோ ப்ரோ இது உங்க பேக்தான எல்லாம் கரெக்டா இருக்காநு பாருங்க..என அந்த பையை நீட்ட அவன் தொலைத்ததாய் கூறிய பணம் அத்தனையும் அதில் இருந்தது.. கண்களில் இருதுளி நீர் அவனிடம்..

தேங்க் யு சோ மச் சிஸ்டர்..நீங்க பண்ணிணது எவ்ளோ பெரிய உதவி தெரியுமா..உங்கள நா மறக்கவே மாட்டேன்..

இட்ஸ் ஓ.கே. ரிலாக்ஸ்..நா தான் சாரி சொல்லனும் நேத்து நைட்டே இது என் கையில கிடைச்சுது பட் ரொம்ப லேட் ஆய்டுச்சேநு இப்போ வந்தேன்..

நல்ல வேளையா உள்ள கல்யாண பத்திரிக்கை இருந்தது இல்லனா இது உங்க கைக்கு கிடைக்குறதுக்குள்ள சில பேர் உங்கள ஒரு வழி ஆக்கிருப்பாங்க என அந்த பெரியவரை பார்த்து முறைத்தவாறே கூற,

அவரோ,ஏ பொண்ணு வந்த வேலை முடிஞ்சுதுல கிளம்பு இது எங்க குடும்ப விஷயம் நாங்க பாத்துக்குறோம்..

ஏது உங்க குடும்பமா??குடும்பம்னா என்னனு தெரியுமா சார்??

பெத்த புள்ள மணக்கோலத்துல ஆயிரம் கனவோட தன் வாழ்க்கைய தொடங்கயிருக்கும் போது மனசு பூரா அன்பும் சிந்தனை பூரா ஆசீர்வாதமும் நிறைஞ்சு இருக்குற அப்பாவா இருந்தா நீங்க குடும்பத்த பத்தி பேசலாம் உங்களுக்கு இதோ இந்த ரூபா நோட்டு மட்டும் தான பெருசு வச்சுகோங்க ஆனா ஆடி அடங்கும் வயசுல உங்கள காப்பாத்த போறது இந்த பேப்பர் இல்ல இதோ அப்பாங்கிற மரியாதைக்காக குரல் உயர்த்தாம நிக்குறாரே இந்த பையனும் என்னதான் இருந்தாலும் நாம கல்யாணம் பண்ண போறவரோட அப்பாநு வாய மூடிட்டு அழுதுட்டு போற அந்த பொண்ணும்தான்..

ஏன் சார் இவ்ளோ பேரோட கண்ணீருக்கு காரணமான இந்த பணம் உங்ககிட்ட தங்கும்நு நினைக்குறீங்க..

பொண்ண பெத்தவங்க அமைதியா போறாங்கனு அவங்க மேலஏறி மிதிக்காதீங்க..

அவங்க திரும்பி பேசினா வயசுல பெரியவரான உங்களுக்குதான் அசிங்கம் இனியாவது மனுஷங்கள மதிக்க கத்துகோங்க சார்..

அவளது பேச்சிற்கு எதிர்த்து பேசாமல் கடுகடு முகத்தோடு அங்கிருந்து நகர்ந்தார் அவர்..

சிவாவோ மொத்தமாய் தன்னை மறந்திருந்தான்..வக்கீலா இருக்குற நமக்கு ஏத்த ஜோடிதானோ பாய்ண்ட் பாய்ண்ட்டா பிச்சு விட்றாளே என நினைக்க சிவா அப்பாவோ அவளிடம் அதை நேராகவே கூறினார்..

அவர் பண்றது தப்புநு தெரிஞ்சாலும் ப்ரெண்டா போய்ட்டாரே எல்லார் முன்னாடியும் கத்த வேண்டாமேநு இருந்தேன்ம்மா ஆனா அவருக்கு நல்ல உரைக்குற மாறி புரியவச்சுட்ட..

அதற்கு சிநேக புன்னகையை பதிலளித்தவள் அவர் அருகில் இருந்தவனிடம்,சரி ப்ரோ  நா கிளம்புறேன் இனியாவது கேர்புல்லா இருங்க என்று நகர,சிஸ்டர் இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிட்டு மேரேஜ்க்கு இல்லாம போனா எப்படி ப்ளீஸ் அதுக்கப்பறம் நீங்க எங்க போனுமோ நானே கொண்டுபோய் விட்றேன் ப்ளீஸ்…

இல்லங்க நா சென்னை போறேன்..நேத்து நைட்டே போய்ருக்க வேண்டியது உங்ககிட்ட இத குடுக்கனும்னு தான் இருந்தேன்..

இதுவே லேட் வீட்ல தேடுவாங்க அடுத்த தடவை இங்க வந்தா கண்டிப்பா வரேன்..தப்பா எடுத்துகாதீங்க என கூறி மறைந்தாள்..

அன்னைக்கே நீ எனக்குள்ள ஆனி அடிச்சு உக்காந்துட்ட ஷரவ்..

இந்த ரெண்டு வருஷமும் உன்னதான் நினைச்சுட்டு இருக்கேன்..

உன் பேர் கூட தெரியாது ஆனா ஏதோ ஒரு நம்பிக்கை நீ எனக்கானவ தான் நா உன்ன பாத்துருவேன்னு சொல்லிட்டேயிருந்தது..

அன்னைக்கு உங்கவீட்டு பங்ஷனுக்கு இன்வைட் பண்ண வந்தியே அந்த ஒரு செகண்ட் என் கால் தரையில படல தெரியுமா நீ என்கிட்டயே வந்துட்டநு அவ்ளோ சந்தோஷம்..

அப்பா அம்மாக்கும் என் விருப்பத்துல சம்மதம்தான்..நேத்து தான் உங்க அண்ணாகிட்டயும் பேசினேன் உன் முடிவு எதுவோ அதான் அவரு முடிவுனும் சொல்லிட்டாரு..

இப்போ முடிவு எடுக்க வேண்டியது நீதான் என அவள் முகம் பார்க்க,

அவளோ ஏதோ விசித்திர லோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தாள்..

அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுள் ரீங்காரமிட்டு கொண்டேயிருக்க தன்னை மறந்திருந்தாள்..

லேசாய் அவள் தோளை தொட்டு அசைக்க நடப்புலகிற்கு வந்தவள்,சாரி சிவா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..நீங்க சொல்றது எல்லாம் சினிமால தான் பாத்துருக்கேன்..

நிஜ வாழ்க்கையில் இது எவ்வளவு சாத்தியம்நு தெரில..என் பதில சண்டே நீங்க வீட்டுக்கு வரும்போது சொல்றேன் ப்ளீஸ்..

ஹே ஷரவ் டேக் யுவர் ஓன் டைம்..பட் ப்ளீஸ் பாசிட்டீவ்வா சொல்லிடு அதுக்கப்பறம் நீ என்ன சொல்ரியோ அதான் எனக்கு வேதவாக்கு..

என்ன சொல்லவென தெரியாமல் லேசாய் தலையசைத்து சென்றாள்..

வீட்டிற்கு சென்றவள் முதல் வேலையாக கார்த்திக்கை தேடி சென்றாள்..

அவனறையில் முக்கியமாய் ஏதோ ஃபைலை பார்த்து கொண்டிருந்தவன் சட்டென வந்து நின்றவளை கண்டு குறுஞ்சிரிப்போடு எழுந்து நின்றான்..

அண்ணா..

என்ன உன் ஆளு என்ன சொல்றாரு??

அண்ணா எனக்கு ஒண்ணுமே தெரியாது..இன்னைக்கு தான் அவரோட பேசினேனே அப்போ கூட அண்ணியோட கசின் ஆச்சேநு தான் பேச போனேன்ண்ணா..

என சிறு பிள்ளையாய் கண்களில் நீர் கோர்க்க சொல்ல..

ஹே ஷரவ் என்னடா இது ச்சச முதல்ல இப்படி வந்து உக்காரு இதுகெல்லாம் அழுவாங்களா நா உன்ன தப்பே சொல்லலையே சும்மா கிண்டல் பண்ணேன் அதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகுற..என சமாதானப்படுத்தினான்..

ஓரளவு நிதானமடைந்தவளாய் அவனை பார்க்க,ஷரவந்திம்மா நேத்து தான் சிவா என்கிட்ட இதபத்தி பேசினாரு,.

அதுவும் உங்க பிளாஷ்பேக்லா சொல்லல நேரா கல்யாணத்தை பத்தி தான் பேசினாரு..

அவரு உன்ன பாக்குறப்போயெல்லாமே ஒரு பல்ப் எரியும் என்னனு யோசிச்சுருக்கேன்..

ரொம்ப நல்ல பையன்தான்டா..இருந்தாலும் உன் முடிவுதான் முக்கியம் எதபத்தியும் கவலபடாத உனக்கு என்ன தோணுதோ அத சொல்லிடு சரியா??

அண்ணா என அவன் தோள் சாய்ந்து கொண்டவள்,எப்படி அண்ணா நீ இப்படியிருக்க..நீ என்  அண்ணணா கிடைச்சதுக்கு நா ரொம்ப லக்கி..

ம்ம் போதுமே ஐஸ் வச்சது ரொம்ப குளுருதுடா என கூறினாலும் அவன் கைகள் தங்கையை ஆதரவாய் தாங்கி கொள்ள தவறவில்லை..சரி அவர்ட்ட என்ன சொல்லிட்டு வந்த??

சண்டே சொல்றேன்னு சொல்லிருக்கேன்ணா…

ஓஓ சரி நல்லா யோசிச்சு முடிவு எடு இப்போ போய் எதாவது சாப்பிடு போ அம்மா தேட போறாங்க என அனுப்பிவிட்டு திரும்பவும் அவன் கைபேசி அழைக்கவும் சரியாயிருந்தது..

முகத்தில் புன்னகை தவழ அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..சொல்லுங்க மேடம் என்ன பண்றீங்க??

கார்த்திக் பயங்கரமா போர் அடிக்குது மூவி எங்கேயாவது போலாமா??

என்ன ஒரு ஆச்சரியம் உனக்கே போர் அடிக்குதா சஹி??

என்ன கலாய்ச்சது போதும் கூட்டிட்டு போவியா மாட்டியா??

அவளின் இந்த பேச்சை கேட்டு ரசிக்கவே அவளோடு பேச்சை வளர்ப்பது வாடிக்கையாகிவிட்டது அவனுக்கு…

சரி சரி டென்ஷன் ஆகாத எனக்குமே வேலை பாத்து பபாத்து தலை வலிக்குது வெளியே போனா ரிலாக்ஸ்ட்டா தான் இருக்கும்…நீ ரெடி ஆய்ட்டு கால் பண்ணு நா வரேன்..

ஹேஹேஹே தேங்க் யூ மை புஜ்ஜு குட்டி இதோ 10 மினிட்ஸ்ல ரெடியாட்ரேன் பை,.

கூறியது போலவே 10 நிமிடத்தில் தயாராகி அவனை அழைத்தாள்..

கார்த்திக்கும் ரெடி ஆகியிருந்ததால் சீக்கிரமாகவே சஹானாவின் வீட்டை அடைந்தான்..

அவன் உள்ளே நுழையவும் சேகரும் துளசியும் வெளியே வரவும் சரியாயிருந்தது..

வாப்பா கார்த்திக்..டீநகர்ல ஒரு ரிசப்ஷன்காக போறோம் சஹானா நீங்க வெளிய போறதா சொன்னா பாத்து போய்ட்டு வாங்கப்பா..

ம்ம் ஓ.கே சார்..சாரி மாமா..

ம்ம் இப்படி கேக்க எவ்ளோ நல்லாயிருக்கு சரிப்பா நாங்க வரோம் என்றவாறு கிளம்ப உள்ளிருந்து சஹானா குரல் கொடுத்தாள் கார்த்திக் உள்ள வாங்க டூ மினிட்ஸ் வந்துட்றேன்..

ஹாலில் இருந்த அவளின் படத்தை கைகளால் வருடியபடி ரசித்து கொண்டிருந்தான்..

என்ன சார் போலாமா??என அவனின் காதருகில் கு.ரல் கேட்க சட்டென திரும்பியவனின் பின் அவனின் உயரத்திற்கு ஈடுகொடுப்பதற்காக கால்களை எம்பி  நின்றவள் அவன் திரும்பிய வேகத்தில் அவன் மீதே விழ சுவரில் சாய்ந்தவாறு அவளை பிடித்து நிறுத்தினான்..

சட்டென அவள் நகர முற்பட அவனின் கரம் அவளை இன்னுமாய் தன்புறம் இழுத்தது..

கார்த்திக் விடு நா போனும்..

போ யாரு வேண்டாம்நு சொன்னா???

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களின் காதல் புரிய தலை தாழ்த்தி தன்னை விடுவிப்பதிலேயே குறியாய் இருந்தாள்..

சஹி என்னபாரு…

அவள் இமைகளை உயர்த்த அதில் தன் இதழ் பதித்தான் அந்த அன்பு காதலன்..லவ் யூ சோ மச் சஹி…

அவனின் பார்வையிலே கட்டுண்டவளாய் அசையாமல் அவள் நிற்க,என்ன இப்போ ஒத்துக்குறியா நாங்களும் ரொமாண்டிக் ஹீரோ தான்னு என புருவத்தை உயர்த்தி கேட்டவாறே அவள் முகத்தில் விழுந்த முடிகற்றையை கைகளால் ஒதுக்கினான்…

கார்த்திக் இன்னமும் நீ மாறவேயில்ல என அவன் கண்களில் கலந்தவளாய் ஏதோ ஓர் குரலில் அவள் கூற,

ஏன் சஹி அப்படி சொல்ற என அவளை தன்னோடு அணைத்தான்..

பின்ன என் தலைமுடில விளையாடுறத நீ மறக்கவேயில்லையே..

சட்டென அவளை நகர்த்தியவன் நான் இப்போதான இப்படி பண்றேன் நீ என்ன நா இதே வேலையா சுத்திட்டு இருந்தமாறி சொல்ற??

தூக்கத்திலிருந்து விழித்தவள் போல் ம்ம்ம் ஏதோ நியாபகத்துல சொல்லிட்டேன்..

சஹி என்னாச்சு??

கம் ஆன் கார்த்திக் மூவி முடிஞ்சே போய்ரும் நாம போரதுக்குள்ள என அவனை அடுத்து பேசவிடாது இழுத்து சென்றாள்..

அடுத்த மூன்று மணி நேரம் சென்றதே தெரியவில்லை ததன்னவளின் அருகாமையை ரசித்து ரசித்து நேரம் செலவழித்தாலும் ஏனோ சஹானாவின் வார்த்தைகள் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருந்தது..

இருப்பினும் அவளிடம் நேரடியாய் எதையும் கேட்கவில்லை..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan October 14, 2026 - 8:25 am

💞💞💞💞💞💞

Padmasubramanian October 14, 2026 - 4:07 pm

முன் ஜென்ம காதலோ 🤔🤔

suganyavel October 14, 2026 - 7:58 pm

Aaha interesting🤔

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode