அவளுக்கென பொக்கே ஒன்றை வாங்கி கொண்டு அந்த மாலீல் அவளுக்காக காத்திருந்தான்..

சில நிமிடங்களில் அழகீய பதுமையாய் இளஞ்சிவப்பு வண்ண அனார்கலியில் நடந்து வந்தவளை பார்த்து சொக்கித்தான் போனான்..

ஹாய் கார்த்திக்..

ஆங்ங் ஹலோ ஒன்ஸ் அகெயின் ஹாப்பி பேர்த்டே என்று பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்..

தேங்க்ஸ் என்று அதை பெற்று கொண்டவள் தன் விரல்களால் மென்மையாய் வருடினாள்..

 ஏன் சஹானா இப்படி பண்ற??

 நா என்ன பண்ணேன் ..

 என்ன பண்ணல??நைட் இப்படியா தனியா வருவ ..கொஞ்சமாவது பயமிருக்கா??

 நா தான் சொன்னனே கார்த்திக் உங்ககிட்ட தான் பர்ஸ்ட் விஷ் வாங்கனும்னு வந்தேன்னு..

 அதுக்கு அவசியம் என்ன இருக்குநு தான் கேக்குறேன்..நானும் நீ புரிஞ்சுப்பநு ஒவ்வொரு தடவையும் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்..

நீ என்னடானா சின்ன குழந்தைமாறி பண்ணிணதையே பண்ணிட்டு இருக்க..

நா உனக்கு செட் ஆக மாட்டேன்..இப்போ உனக்கு இதெல்லாம் ஈசியா இருக்கலாம் நாளைகே கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்தா அந்த மிடில் கிளாஸ் லைவ்வ அங்செப்ட் பண்றது ரொம்ப கஷ்டம் சஹானா..

படத்துலயும் கதைகள்லயும் மட்டுமே காட்டுறமாறி லைவ் எப்பவுமே சந்தோஷமா மட்டும் இருக்காது..புரிஞ்சுக்க முயற்சி பண்ணு..

 

ஏன் கார்த்திக் இதையெல்லாம் பத்தி யோசிக்காம உங்க பின்னாடி சுத்துறதுக்கு நா ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது..

எனக்கு உங்க மேல வந்திருக்குறது வெறும் இன்பேங்ஷுவேஷனும் கிடையாது..நா சைல்டிஷ்ஷா பிகேவ் பண்ணுவேன் தான் பட் ஒண்ணும் தெரியாத குழந்தை கிடையாது..

உங்கள புடிச்சதுக்கு முக்கிய காரணமே உங்க பேமிலி தான்..அது மேல உங்களுக்கு இருக்குற அட்டாச்மெண்ட் தான்..

ஆல்சோ நீங்க எனக்கு அப்படியே ஆப்போஸிட்..ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர் இல்லையா..அண்ட் எங்க அப்பாவுக்காக தான ரொம்ப யோசிக்குறீங்க..

நா எப்பவோ இந்த விஷயத்தை அப்பாட்ட சொல்லிருப்பேன்..பட் உங்க மனச தெரிஞ்சுக்காம எதுவும் வேண்டாம்நு தான் அமைதியா இருக்கேன்..

இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுல பார்ட்டி இருக்கு நீங்க வரீங்க..

உங்க முடிவ சொல்றீங்க இல்லனா நானே அப்பாட்ட பேசி அங்கிள்கிட்ட பேச சொல்லிடுவேன்..சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..

கார்த்திக்கின் முகத்தில் யோசனை ரேகைகள்..சரி ஈவ்னிங் பாக்கலாம் சஹானா பை..

நேராக வீட்டிற்கு சென்றவன் சில நிமிட சிந்தனைக்கு பிறகு கீதாவை அழைத்தான்..

என்னப்பா எதாவது வேணுமா??

அதெல்லாம் இல்லம்மா உங்கிட்ட கொஞ்சம் பேசனும் இப்படி உக்காரேன்..

என்ன கார்த்தி உடம்பு எதுவும் முடிலாயா??டாக்டர்ட்ட வேணா போலாமா??

ம்மாமா நா நல்லாயீருக்கேன் நீ மொதால்ல உக்காரு..எதுவும் பேசாமல் மகனின் அருகில் அமார்ந்தார்..

அம்மா எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு நீ தான்ம்மா ஹெல்ப் பண்ணணும்..

என்னடா நா உனக்கு என்ன பண்றது??நீ இப்படியெல்லாம் பேசமாட்டீயே என்னாச்சு??

அது வந்து..சஹானா இருக்கால..அவளபத்தி தான் அதுக்காக அவள தப்பா நினைச்சுடாத ரொம்ப நல்ல பொண்ணு தான்ம்மா..

டேய் டேய் என்ன ஏதுநு சொல்லாம இப்போ எதுக்கு அந்த பொண்ணுக்கு சார்டிபிகேட் குடுத்துட்டு இருக்க??

அது…அது..என மென்று முழுங்கியவன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறினான்..நா எவ்வளவோ சொல்லிட்டேன்ம்மா கேக்க மாட்றா..

ஈவ்னிங் பதில் சொல்லலனா அவ அப்பாகிட்ட அவளே பேசுறேன்னு சொல்றா..சேகர் சார் என்ன நினைப்பாரும்மா என்னபத்தி….எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்மா..

கார்த்தி கொஞ்சம் என்னபாரு..அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்கநு யோசிக்குறத விடு மொதல்ல..உனக்கு அவள பிடிச்சுருக்கா??

அம்மாமா…

என்னடா அம்மா??இந்த விஷயத்துல இப்படிதான்டா நீ யோசிச்சுருக்கனும்..உனக்கு பிடிக்கலநு இருந்தா அந்த பொண்ணு அத ஏத்துகிட்டு இருந்திருப்பா..

அத விட்டுட்டு உங்கப்பாக்கு பிடிக்காது எங்கம்மாக்கு பிடிக்காதுநு சொன்னா யாருடா ஏத்துப்பா..

இத பாரு கார்த்தி நாம மிடில்கிளாஸ் தான் அவங்களமாறி பணத்துல பொறள முடியாதுதான் அதுக்காக நமக்கு ஆசபாசங்கள் இருக்க கூடாதுநு இல்லடா..

நீ இந்த வீட்டோட மூத்த மகன்தான் அதுக்காக உனக்கு பிடிச்சத நீ செய்யகூடாதுநு யாரும் சொல்லல..

நீ இவ்ளோ பேசும் போதே தெரியுது உனக்கும் அந்த பொண்ண பிடிச்சுருக்குநு..அப்பறம் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா பேஸ் பண்ண வேண்டியதுதான..

உனக்காக இந்த அளவு ஏங்குற பொண்ணுக்காக உலகத்தையே எதிர்த்து நிக்கலாம் தப்பில்லடா..

இதெல்லாத்தையும் விடு உன்ன உண்மையா புரிஞ்சுகீட்டவங்க எப்படி உன் விருப்பத்தை பத்தி மதிக்காம போவாங்க..

உன் குடும்பத்துக்கு உன்னபத்தி தெரியும்டா..போ போய் அவகிட்ட சந்தோஷமா உன் மனச சொல்லு..

அம்மாமாவென்று அவரை கட்டிகொண்டான்..தேங்க் யு சோ மச்ம்மா..நீ என்ன புரிஞ்சுகிட்டல..

அப்பாவும் என்ன புரிஞ்சுப்பாரு..சேகர் சாருக்கு நா புரீய வைக்குறேன்ம்மா..

சந்தோஷமாயிருடா..இப்போதைக்கு யார்ட்டையும் எதுவும் சொல்ல வேண்டாம்..

மொதல்ல சஹானாட்ட பேசு அப்பறம் பாப்போம்..என்று அவன் முன் தலையை வருடி சென்றார்..

ஏனோ அன்னையிடம் பேசியது மனதிற்குள் ஒருவித நிறைவை அளித்தது..

அதே உற்சாகத்தோடு தன்னவளுக்காய் ஒரு வாழ்த்து அட்டையை வாங்கி அதில் ஏதோ எழுதினான்..

எழுதி முடித்தவன் அதை கண்டு சிரித்து தன்னோடு அணைத்து கொண்டான்..வீட்டில் அனைவரையும் அழைத்திருந்ததால் எல்லாருமாய் கிளம்ப இவன் சற்று முன்னதாகவே சென்றுவிட்டான்..

ஓரளவு விருந்தினர்கள் வந்திருக்க வெளியே புல்வெளியில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன..

கார்த்திக்கை பார்த்ததும் அவனை வரவேற்று பொதுவாக பேசிவிட்டு நகர்ந்தார் சேகர்..

அதற்காகவே காத்திருந்தது போல் அவன் முன் வந்தாள் சஹானா..அழகான பிஸ்தாநிற காக்ராவில் கடல்நீல நிற துப்பட்டாவோடு தேவதையாய் நின்றாள்..

என்ன கார்த்திக் எவ்ளோ மார்க் போடலாம்??என இரு புருவத்தையும் அசைத்து கேட்க அப்போது தான் அவளையே பார்த்து கொண்டிருந்ததை உணர்ந்து சட்டென பார்வையை அகற்றினான்..

சைட் எல்லாம் நல்லாதான் அடிக்குறீங்க நா கேட்டதுக்கு தான் பதிலே வரல..என்ன முடிவு பண்ணிருக்கீங்க..??

தன் பையிலிருந்து அந்த க்ரீட்டிங் கார்ட்டை எடுத்து அவாளிடம் நீட்டினான்..

கார்த்திக் அதான் நேத்தே விஷ் பண்ணீட்டீங்களே இப்போ இது ரொம்ப முக்கியமா??நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க??

ஒன்றுமே பேசாமல் அவன் அதை அப்படியே பிடித்திருக்க கோவமாய் அதை வாங்கி பிரித்தவளின் கண்களில் அவன் எழுதியதை கண்டதும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள்..

ஒரு துளி கண்ணீர் வேறு எட்டி பார்த்தது..மீண்டும் படித்தாள்,

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

 

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

 

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர்

சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று…”

கடைசி இரண்டு வரிகளில் கோடிட்டுருக்க அவனை பார்த்தவளை பார்த்து என்ன சம்மதமா??என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தான்..

அதை கண்டவளோ முகம் சிவக்க போடா என்று கூறியபடியே உள்ளே ஓடிவிட்டாள்..

கார்த்திக்கிற்கும் அவளின் இந்த சந்தோஷம் மகிழ்ச்சியை கொடுத்தது இனி வாழ்வின் இறுதி வரை அந்த புன்னகையை அவளிடம் நிலைத்திருக்க செய்ய வேண்டும் என உறுதி கொண்டான்..

அதன் பின் விருந்தினர்களால் வீடே நிறைந்திருக்க அந்த நாளின் நாயகி மேடை ஏறினாள்..

பார்வை முழுவதும் தன்னவனையே பார்த்திருக்க மயக்கத்தில் கட்டடுண்டவளாய் கேக் கட் செய்து வந்த பரிசு பொருட்களை பெற்று கொண்டாள்..

இருவரையும் கவனித்த கீதாவிற்கு அகமும் முகமும் நிறைந்துவிட்டது..

அதன்பின் இரவு உணவை முடித்துவிட்டு கார்த்திக் குடும்பத்தினருடன் கிளம்ப வாசல் வரை சென்று அனுப்பிவிட்டு வந்தாள்..

இன்னுமும் கார்த்திக்கின் அந்த பார்வை அவளை இம்சித்து கொண்டிருந்தது..முகத்தில் மெல்லிய சிரிப்போடே தனதறையை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..

மொபைலை கையிலெடுத்தவள் கார்த்திக்கின் எண்ணை வைத்து கொண்டு பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தாள்..

அதை அவன் உணர்ந்தானோ என்னவோ அவனே அழைத்தான்..சட்டென அழைப்பை ஏற்றவள் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தாள்..

ஹலோ..—கார்த்திக்

……..

சஹானா…

ம்ம்ம்

என்ன மேடம் வாய தொறந்தா மூடமாட்டீங்க என்ன சத்தத்தையே காணும்..

…..

ப்பார்ராரா..ஹலோ 1000 வாலா அட்லீஸ்ட் பிஜிலி வெடி அளவாவது பேசுங்க..

நீ ரொம்ப மோசம் கார்த்திக்..

அடிப்பாவி வருங்கால புருஷன மரியாதையில்லாம பேசுற..

ம்ம் இவ்ளோ நாள் என்ன அலைய விட்டதுக்கு இதான் பனிஷ்மெண்ட்..

ம்ம் அது சரி உங்களுக்கென்ன பொண்ணுங்க டக்குநு சொல்லிடுவீங்க..பசங்க நாங்க ஆயிரம் யோசிக்கனும்ல..

ஹே கலிகாலம் நா சொல்ல வேண்டிய டயலாக்லா நீ சொல்ற..ம்ம் சரி என்ன பண்ற??

ம்ம் நீ குடுத்த புக் படிக்கலாமேனு எடுத்து வச்சுருக்கேன்.. சரி நா ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..

என்னாச்சு கார்த்திக் ஏன் இப்படி கேக்குற..

இல்ல சஹானா திரும்பவும் சொல்றேன் இது விளையாட்டு விஷயம் இல்ல..உன் லைவ்வே மாறிடும்..

இங்க வந்தப்பறம் நீ நிறைய அட்ஜெஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்..100 இல்ல 1000 மடங்கு நா உன்ன சந்தோஷமா பாத்துப்பேன் பட் இப்போ இருக்குற லைவ்வோட நீ கம்பேர் பண்ணா அது எவ்ளோ இருக்கும்நு தோணல..

தப்பா எடுத்துக்காத..எதுக்காக சொல்றேன்னா…

கார்த்தி ப்ளீஸ்..இவ்ளோ யோசிக்குறதுக்கெல்லாம் நா வொர்த் இல்ல..நாங்களும் மிடில்கிளாஸா இருந்து வந்தவங்க தான்..

எனக்கு என் மனசுக்கு பிடிச்சவங்ககூட என் லைவ் புல்லா இருக்கனும் அவ்ளோதான் மத்தபடி பணம் ஆடம்பரம்லா விஷயமேயில்ல.. ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோங்க..

தேங்க்ஸ் சஹி..

 ம்ம்.ம்

ஹேய் என்ன அடிக்கடி ம்யூட்ல போய்டுற??

இல்ல என்ன குட்டிசாத்தான்னு தான் கூப்டுவீங்கநு நெனச்சேன் பரவால்ல நைஸ் நிக் நேம்..

நீ எப்பவுமே இப்டிதான..சத்தியமா இப்படி ஒரு பொண்ண நா சந்தோஷ் சுப்ரமண்யம் படத்துலதான் பாத்துருக்கேன்..

இதெல்லாம் என்ன பெரிய விஷயம் லைவ் புல்லா இன்னும் எவ்வளவோ பாக்க போறீங்க..

வேண்டாம் தாயே நீ இப்படி சொன்னாலே பீதி கிளம்புது..

அநேகமா வீட்டுக்குள்ளேயே ஹெல்மெட் போட்டுட்டு தான் அலையனும்னு நினைக்குறேன் எப்போ எது தலைல விழும்னு தெரியாதே..என்று கூறி சிரித்தான்..

உங்க சிரிப்பு நல்லாயிருக்கு கார்த்திக்.. அதுலதான் விழுந்துட்டேன்னு நினைக்குறேன்..

அதற்கும் சிரிப்பையே பதிலளித்தான்.. ஆமா கேக்கனும்னு நினைச்சேன் அங்கிளும் ஆன்ட்டியும் என்ன ஏத்துபாங்களா??

ஆன்ட்டி சைட் ரூட் க்ளியர்..டீச்சர் சார் தான் என்ன சொல்லுவாருநு தெரில..

அங்க எப்படி??

ஹே ஸ்வீட்டிட்ட சொல்லிட்டீங்களா??அதான் சார் தைரியமா ப்ரபோஸ் பண்ணதுக்கு காரணமா??

ஓய் மாமியாரை என்ன ஸ்வீட்டிநு கூப்டுட்டு இருக்க??

கார்த்திக் கண்டிப்பா நானும் அவங்களும் செம காம்பினேஷனா இருப்போம் சோ நீங்க நடுல வராதீங்க..

ம்ம் இப்போவேவா சரி உங்க வீட்ல எப்படி??

தெரிலப்பா..சத்தியமா நோ ஐடியா..நாளைக்கு தான் பேசலாம்நு பாக்குறேன்..

அதுவும் கரெக்ட்தான் சஹி மொதல்லயே சொல்றது பெட்டர்..விளையாட்டுதனமா பேசிடாத ஒழுங்கா பேசு புரியுதா??

ம்ம் ஆனாலும் கார்த்திக் நீங்க ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க..நா பாத்து பக்குவமா பேசுறேன் போதுமா..

ஓ.கே சஹி நீ போய் படுத்துக்கோ ஆல்ரெடி டயர்ட்ல இருப்ப..நாளைக்கு சார்கிட்ட பேசிட்டு எனக்கு அப்டேட் பண்ணு….

கார்த்திக் பட் அதுக்கு முன்னாடி உங்கள மீட் பண்ணணுமே ப்ளீஸ்…

ம்ம்ம் சரி எங்க வரணும்னு சொல்லு..

ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாம் நா டைம்மிங் உங்களுக்கு மெசெஜ் பண்றேன்…

ஓ.கே சஹி..குட் நைட்..

குட் நைட் கார்த்திக்…இருவருமே தங்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய கனவுகளோடு மறுநாளின் விடியலுக்காக காத்திருந்தனர்…

அந்த அழகிய விடியலை ரசித்தபடியே நின்றவனுக்கு பின் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்ப கையில் காபியோடு நின்றிருந்தார் கீதா..

ம்மாம்மா வா நானே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன்..

ம்ம் என்னடா சொல்றா என் மருமக??

அம்மா எப்படி நீ இப்படியிருக்க..இவ்ளோ ஈசியா எடுத்துகிட்ட??

டேய் கண்ணா இதுல கோபப்பட என்னயிருக்கு..பசங்க வளர்ந்து பெரியவங்களானப்பறம் அவங்களுக்கு பெத்தவங்களோட அரவணைப்பு இருக்க வேண்டியது ரெண்டே விஷயத்துலதான் ஒண்ணு அவங்க க்கேரியர்..

அது அவங்க விருப்பப்பட்டதாயில்லனா லைவ் மொத்தமும் பிடிக்காத வேலை தான் செய்யனும்..இன்னொன்னு கல்யாணம்..

சாதரண வேலைக்கே அப்படினா இது வாழ்க்கைடா வாழபோறவங்கதான் முடிவு பண்ணணும்..

அதே நேரம் அந்த முடிவு தப்பாயிருந்தா அத திருத்துற கடமையும் பெத்தவங்களுக்கு இருக்கு..

உன் விஷயத்துல அந்த அவசியமில்லனு தோணிச்சு ஈசியா எடுத்துகிட்டேன்..என்று அவன் கன்னத்தை கிள்ளினார்..

அம்மா பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு நல்ல வேலைல இருக்குறவங்களால ஏத்துக்க முடியாத யோசிக்க முடியாத விஷயத்த குடும்பத்தையே உலகமா நினைக்குற நீ அசால்ட்டா முடிச்சுட்டியேம்மா..

கார்த்திக் சில விஷயங்களுக்கு படிப்பறிவ விட பகுத்தறிவு இருந்தா போதும்டா..

என்ன வேணா சொல்லு நீ க்ரேட்ம்மா,.சரி எனக்காக அப்பாட்ட பேசும்மா ப்ளீஸ்..

சஹானா வீட்ல சொல்லிட்டாளாடா??

இல்லம்மா ஈவ்னிங் தான் சொல்ல போறேன்னு சொன்னா..

சரி அவங்கப்பா என்ன சொல்றாருநு பாப்போம் அத பொறுத்து அப்பாட்ட பேசலாம்டா

அப்போ சரிம்மா நா சேகர் சார்ட்ட பேசிட்டு சொல்றேன்..

மாலை இருவரும் முடிவு செய்த நேரத்திற்கு கார்த்திக் வந்து காத்திருந்தான்..அடுத்த பத்து நிமிடத்தில் சஹானா வந்தாள்..

இருவரும் தங்களுக்குள் புன்னகையை பரிமாறியபடி சற்று தூரம் சென்று அமர்ந்தனர்..

சஹானா அமர சற்று இடைவெளிவிட்டு கார்த்திக் அமர்ந்தான்..

ஐந்து நிமிடங்கள் மௌனத்திலேயே கரைய கார்த்திக் அவளை திரும்பி பார்க்க அவளோ கடலை வெறித்தபடி இருந்தாள்..

சஹி..என்ன பாக்கனும்னு சொல்லிட்டு கடலையே பார்த்திட்டு இருந்தா எப்படி??

நா வேணா கிளம்புறேன் நீ பொறுமையா பாத்துட்டு வா..என்று லேசாய் புன்னகைக்க..

ம்ம்ம் பார்ர்ரா நேத்து வர வாய் தொறக்காத அப்பாவியெல்லாம் இப்போ எனக்கே கவ்ண்டர் குடுக்குறத நேரம் தான்.. என்று அவனையே பார்க்க.

.என்ன என்பதாய் புருவத்தை அசைத்தான் கார்த்திக்..

ஒன்றுமில்லையென தலையசைத்தவள் அவனருகில் சற்று நெருங்கி அமர்ந்து அவன் வலது கரத்தை அழுத்தி பிடித்து கொண்டாள்..கார்த்திக் எதுக்காகவும் என்ன விட்றமாட்டல???

ஹே..என்ன சஹி என்னாச்சு??

இல்ல அப்பா எப்படியும் 99% ஒத்துப்பாருநு எனக்கு நம்பிக்கையிருக்கு பட் அந்த 1% எதாவது மாறினா அப்பாக்காகநு என் காதல விட்டுற மாட்டல??

சஹானா ஏன் இப்படிலா யோசிக்குற அப்படிலா ஒண்ணும் ஆகாது..உனக்கு இதெல்லாம் செட்டே ஆகல எப்பவும் போல ஜாலியாயிரு..

எல்லாம் நல்லபடியா நடக்கும்..என அவள் வைத்திருந்த கையை மெதுவாய் தட்டி கொடுக்க அவள் அதை இறுக்கமாய் பிடித்து கொண்டாள்..

குட் பாய்..சும்மா செக் பண்ணி பாத்தேன் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கீங்கநு..சேகர்லா ஒரு மேட்டரே இல்ல அதெல்லாம் அசால்ட்டா ஓ.கே பண்ணிரலாம்.

என கண்சிமிட்ட அவனோ என்ன செய்யலாம் இவளை என்ற யோசனையோடு பார்த்தான்..

சாரி கார்த்திக் சீரியஸா இருக்குறமாறி நடிக்ககூட வரமாட்டேங்குது நா என்ன பண்றது..

என்று பாவமாய் கேட்க..இதே ரேஞ்ச்ல உங்கப்பாட்ட பேசினா போதும் அவரு வேண்டாம்நு சொல்லி எனக்கு நல்ல வழி காட்டிருவாரு..எப்படி வசதி..

கார்த்திதிதிக்க்க்…சரி உன்கிட்ட கேக்கனும்னு நினைச்சேன் நிஜமாவே என்ன பிடிச்சுருக்கா இல்ல நா படுத்தின டார்ச்சர் தாங்காம ஒத்துகிட்டீங்களா??

ஏன்னா என் கேரக்டர் எல்லாருக்கும்லா செட் ஆகாது காலேஜ்லயே சில பேருக்கு என்ன பிடிக்காது அதுலயும் நீங்களோ ஸ்ரிக்ட் ஆபிஸர் மாறியே விரைப்பா சுத்துவீங்களே அப்பறம் எப்படி இந்த கல்லுக்குள் ஈரம்..??

அவள் பேச்சை கேட்டு அவன் சிரிக்க அதை தனக்குள் நிறைத்தாள் சஹானா..

அக்சுவலி இது நீ சொன்ன பாய்ண்ட் தான் ஆப்போஸிட் போல்ஸ் வில் அட்ராக்ட் ஈச் அதர்..

அது மாறிதான் உன்னபாத்தப்பவே மனசுக்கு பிடிச்சுருந்தது..

பட் லவ்நு நினைக்கல க்யூட்டான ஒரு ஸ்கூல் கோயிங் கேள் மாறி தெரிஞ்ச பட் அதுக்கப்பறம் நிறைய இன்ஸ்டன்ஸ் என்னையே அறியாம நீ எனக்குள்ள வந்துட்ட..

அது மட்டும் எப்படிநு சத்தியமா இப்போ வர தெரில மேபி நீ என் வீட்ல பழகின விதம் கூட அதுக்கு காரணமா இருக்கலாம்நு நெனைக்குறேன்..

பட் எல்லாத்தையும் தாண்டி எல்லார்க்காகவும் என் மனச மறைச்சுடலாம்நு நெனைச்சேன் பட் நீ அத செய்யவிடல..இப்போ மாட்டிக்கிட்டேன் .

இவ்ளோ பேச தெரியோமா உங்களுக்கு??

ஹே என்ன என்னனு நினைச்சுட்ட??நா வெளில கொஞ்சம் காம் டைப் அதுவும் பிஸினஸ் லைன்ல ரொம்பவே ப்ரொவ்வஷ்னலா இருக்கனும்னு நினைப்பேன் மத்தபடி நானும் யூத் தான்ம்மா.,

ம்ம்ம் நம்பிட்டேன்..என்று அவள் சிரிக்க அவனும் அதில் கலந்து கொண்டான்..

ஆனா நீ ஏன் இவ்ளோ ஸ்ராங்கா இருந்த சஹி??

தெரிலயே…

என்னது தெரிலயா??

ஆமா கார்த்திக் நிஜமா..முதல் நாள் உங்கள பாத்த அந்த செகண்ட் ஏதோ ஒரு பீல் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த ஒருத்தர பாத்தமாறியிருந்தது..

ஆனா வெளி காட்டிக்கல..ஏனோ வருஷ வருஷமா உங்களோட இருந்தமாறி ஒரு பீல்..நான் பல நாள் அத நினைச்சு குழம்பி போய்ருக்கேன்..

ஆனா எப்போனு தெரில இந்த ஜென்மத்துல கல்யாணம்நு பண்ணா உங்களதான்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்..

உங்களுக்கு பிடிக்கலநு தெரிஞ்சும் உங்கள விடுறதுக்கு மனசு வரல..

உங்கள உயிருக்குயிரா லவ் பண்றேன் அது மட்டும்தான் தெரியுது ஆனா அது எப்போ எப்படிநு தெரில..

ஹேய் என்ன நீ விட்டா ஜென்ம ஜென்மமா என்கூடதான் வாழ்ந்தநு சொல்லுவ போல..

என்று சிரிக்க அவள் ஒன்றும் பேசாமல் அவனை ரசித்தாள்..

இவ்வாறாக பேசியபடியே நடக்க ஆரம்பிக்க கார்த்திக்கின் கரத்தை பற்றியவாறே நடந்தாள் அவனின் சஹி..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

Kavi Natarajan October 12, 2026 - 8:15 am

💞💞💞💞💞💞💞

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode