சற்றும் விடியாத அந்த மார்கழி நேர காலைப் பொழுதில் தன் வீட்டு மாடியில் குளிருக்கு அடக்கமாய் கைகளை இறுகக் கட்டிய படி இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் வெண்பா.

அந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்திலும் நிர்மலமான திருத்தமாய் செதுக்கப்பட்டது போன்ற முகம்.

கண்களோ கூர்வாள் போன்ற பிரகாசமாய் எந்த ஒப்பனையுமின்றியே அத்தனை அற்புதமாய்,பிறை வடிவான அந்த அதரங்கள் அழகுக்கே அழகாய்.

உயரத்திற்கு ஏற்ற எடை,இடை வரையிலான கார்கூந்தல் ஆனால் இவையனைத்தையும் தாண்டிய ஏதோ ஒரு சலனம் அந்த முகத்தில்.

அவள் சிந்தனையை கலைத்தது அருகில் மணந்த காபியின் நறுமணம். தலையை உலுக்கி தன்னை மீட்டெடுத்தவள் அதை கையில் வாங்கி பருக ஆரம்பித்தாள்.

“ஏன் கண்ணு இதெல்லாம் உனக்கு தேவையா?இப்படி தனியா கஷ்டப் படணுமா?தம்பி. . ”

“சிந்தாம்மா.  போய் டிபன் வேலையை பாருங்க. இன்னைக்கு சீக்கிரமே க்ளாஸ்க்கு போனும். பசங்க வந்துருவாங்க. ”,என்றவள் அவர் கன்னம் தட்டிச் சென்றாள்.

தனதறைக்கு வந்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வந்தாள்.

அதற்குள் அவளுக்கான உணவை சிந்தாமணி தயார் செய்திருக்க காலை மதியம் இரு வேளைக்குமான உணவை கையில் எடுத்துக் கொண்டவள்,

“இந்தாங்க இந்த 500 ரூபாயை வச்சுக்கோங்க நேத்தே உடம்பு முடிலனு சொன்னீங்களே.

ஒழுங்கா போய் டாக்டரை பாத்துட்டு வந்து நல்லா ரெஸ்ட் எடுங்க. சரியா நா மதியானம் சாப்பாட்டுக்கு அப்பறம் வந்துருவேன். ”

“தம்பி வர சொல்லிச்சும்மா அவன்ட்டயே பாத்துப்பேன். காசெல்லாம் வேணாம். ”

“ம்ம் கைவசம் ஒரு டாக்டர் தயாரா வச்சுருக்கீங்க. சரிதான். பரவால்ல பணத்தை வச்சுக் கோங்க சாப்பிட பழம் இல்ல வேற என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. ”,என்றவள் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை உயிர்பித்து சிட்டென பறந்திருந்தாள்.

அவளையே பார்த்திருந்த சிந்தாமணிக்கு பெருமூச்சு எழுந்தது.

என்னைக்கு தான் இவங்களுக்கு விடிவுகாலம் வருமோ. என நினைத்தவர் உள்ளே தன் வேலையை பார்க்கச் சென்றார்.

தன் இருசக்கர வாகனத்தை அந்த மிகப் பெரிய நாட்டியாலயத்தின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

சிறியவர்கள் முதல் குமரிகள் வரை அத்தனை பேர் நாட்டியம் பயில் வந்திருக்க தன் எதிரில் வருபவர்களுக்கெல்லாம் அழகான புன்னகையை அளித்தவள் ஒப்பனை அறைக்குச் சென்று நாட்டிய உடைக்குமாறி வந்தாள்.

அதன் பின்னான பொழுதுகள் எதை பற்றியும்சிந்திக்க விடாமல் நாட்டியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

வேலைகளை முடித்த சிந்தாமணி வீட்டை பூட்டிவிட்டு பெசண்ட் நகரிலிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து அடையாருக்குச் சென்றார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த ப்ளாடின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தார்.

இரண்டு நிமிடத்தில் வந்து கதவை திறந்தவனை வாஞ்சையாய் பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு சிரித்தவாறே உள்ளே சென்றான்.

“எப்படி இருக்க தம்பி?”

“எனக்கென்ன சூப்பரா இருக்கேன். பாத்தா தெரிலையா?”என புருவமுயர்த்தி சிரித்தான் திவ்யாந்த்.

அந்த ஏரியாவின் மிகச் சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் முன்னனி மருத்துவர்.

பால் நிறமும் திருத்தமான உடல் கட்டும் ப்ரெண்ஞ்ச் பியர்டுமாய் மருத்துவருக்கே உரிய அம்சங்களோடு இருந்தான்.

 “ம்ம் ரெண்டு பேரும் நல்லவங்க தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து பேசிப் போனா எவ்ளோ நல்லாயிருக்கும் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?”,என மனதில் நினைத்தவர்  கிட்சனிற்குச் செல்ல முயல,

“உடம்பு சரியில்லனு இப்போ அங்க எங்க போறீங்க உக்காருங்க நா காபி போட்றேன். ”

“ஆமா பெரிய உடம்பு. அதெல்லாம் வயசான காலத்துல எதாவது பண்ணிட்டு தான் இருக்கும்.”, என்றவாறே காபி கலந்து இருவருக்குமாய் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து தானும் உண்ண ஆரம்பித்தார்.

“ம்ம் அப்பறம் உங்க பாப்பா எப்படியிருக்கா?”

“ஏன் உன் பொண்டாட்டி எப்படியிருக்கானு கேட்க மாட்டியா?”

பதிலுரைக்காமல் மென்னகையோடே தன் காபியை பருக இடவலமாய் தலையசைத்தவர்,

“ம்ம் ரெண்டு பேர் மனசுலயும் அன்பு நிறையவே இருக்கு அதை காட்டிக்க தயாரா இல்ல. பாப்பாவும் உங்களயே நினைச்சு தான் உருகுறா.

எப்போ பாரு ஏதோ சிந்தனைலயே  இருக்கா. ஆனா தவறியும் உன்ன பத்தி மட்டும் பேச்சை வளர்க்க மாட்றா. ”

“ம்ம் என் பொண்டாட்டிக்கு என்னில் பாதியாவது வைராக்கியம் இருக்காதா!!சரி சிந்தாம்மா நா ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்.

நீங்க உங்க கிட்ட இருக்குற சாவி வச்சு வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுங்க. வரட்டுமா.

அப்பறம் உங்களுக்குத் தேவையான மாத்திரை எல்லாம் அங்க டேபிள்ல வச்சுருக்கேன் மறக்காம எடுத்துட்டு போங்க. ”

அவனை வழியனுப்பிவிட்டு வந்தவருக்கு நினைவுகள் அவனை முதன்முதலாக சந்தித்ததை நோக்கி பயணித்தது.

ஐந்து வயது சிறுவனாய் பெற்றோரை இழந்து சொந்தகாரர் ஒருவரால் சிந்தாமணி வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரமத்தில் சேர்ந்தான் திவ்யாந்த்.

இளம் விதவையான அவர் அப்போது தான் அந்த ஆசிரமத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார்.

கண்களில் நீர்கோர்க்க அவனை பார்த்த அவருக்கு ஏனோ பாவமாய் தோன்ற அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

அன்று முழுவதும் அவர் பின்னே சுற்றியவனுக்கும் அவரை பிடித்துவிட அதன்பின் அவரோடு மகனாகவே உறவாட ஆரம்பித்தான்.

அரசுப்பள்ளியில் பயின்றவன் படிப்பில் அத்தனை ஆர்வமாய் இருக்க பல பேர் அளித்த சலுகைகள்,நன்கொடை மூலம் பன்னிரெண்டாவது வரை படித்து மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தான்.

சிந்தாமணிக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி எப்படியாவது அவன் விரும்பிய மருத்துவ படிப்பை படிக்க வைக்க வேண்டும் என படாதபாடு பட்டு தன்னால் ஆன முயற்சிகள் செய்து கவுன்சிலிங்கில் கிடைத்த நல்ல கல்லூரியில் சேர்த்தார்.

அவனை பிரிவது கடினமாய் இருந்தாலும் இதுதான் அவன் எதிர்காலம் என்று முடிவுசெய்தவர் தன்னை தேற்றியவாறு அவனை அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமல்லாது ஆசிரம விதிப்படி படிப்பு முடிந்ததும் அங்கிருந்து பிள்ளைகள் கிளம்பிவிட வேண்டும்.

எனவே இப்போதே அவனை பிரிந்து இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என எண்ணிணார்.

ஐந்து ஆண்டு காலங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட மருத்துவனாய் தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தவருக்கு கண்கள் ஆனந்தத்தில் குளமாகியது.

ஆசிரம நிர்வாகி அவன் கிளம்புவதற்கான வேலைகளை முடித்து அவனிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ள தன் உடைமைகளோடு வெளியே வந்தவனை வழியனுப்புவதற்காக மொத்த ஆசிரமும் வாசலில் நின்றிருந்தனர்.

நிதானமாய் சிந்தாமணியின் அருகில் சென்றவன், ”போலாமா? உங்க பொருளெல்லாம் எடுத்துக்கலையா இன்னும்?”

“நா. நானா. நா எங்கப்பா வரணும்?”

“பிள்ளையோட தங்காம இங்கே தனியாவா இருக்க போறீங்க?”

அத்தனை வருத்தமும் பொங்கி எழ பெருங்குரல் எடுத்து கதற ஆரம்பித்தார். அவரை தோளில் தாங்கி கொண்டவன் நிர்வாகியிடம்,

“சார் அவங்களுக்கும் வயசாய்டுச்சு முன்ன மாதிரி வேலையெல்லாம் பாக்க முடியாது அதனால என்னோடேயே அழைச்சுட்டு போய்ட்ரேன். ”,என்று கூறி தன்னோடு அழைத்துச் சென்றான்.

சிறிய வீடாய் வாடைக்கு எடுத்து இருவருமாய் தங்கள் புது வாழ்க்கையை நிம்மதியாய் வாழ ஆரம்பித்தனர்.

பழைய நினைவுகளை நினைத்தவருக்கு கண்கள் கலங்கியது. குறுகிய காலத்திலேயே தன் திறமையை நிரூபித்து தொழிலை கடவுளாய் மதித்து தன் நோயாளிகளை குணப்படுத்தி நன் மதிப்பை பெற்றிருந்தான்.

இது மாதிரியே இவனோட கல்யாண வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சுட்டா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்.

ம்ம் கடவுள் என்ன நினைச்சுருக்காரோ.” என்றவருக்கு பெரூ மூச்சு தான் விட முடிந்தது.

இங்கு நாட்டிய பள்ளியில் அடுத்த மாதம் வரவிருக்கும் அரங்கேற்றத்தில் வரவேற்பு நடனம் வெண்பா வோடது என முடிவாகியிருந்தது.

அதற்கான பயிற்சியை அவள் மேற் கொண்டிருக்க மாணவியரோடு சேர்ந்து அங்கிருந்த மற்ற ஆசிரிர்களும் கண் இமைக்காமல் அவளின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் ஆடி முடித்ததும் அத்தனை பேரும் எழுந்து கைதட்ட அழகிய புன்னகையோடு அதையேற்று கொண்டு வெளியே சென்றாள்.

அவளை பின்தொடர்ந்து வந்த அந்த புதியவன் வாசலை தாண்டியதும்,

“ஹாய் மிஸ் வெண்பா. ”

புதியவனின் குரலில் நின்று அவனை ஏறிட்டவள் நிதானமாய்,”சாரி. மிஸஸ். வெண்பா திவ்யாந்த். ”

“ஓ. பட் நீங்க பிரிஞ்சுட்டதா கேள்விப்பட்டனே. ”

“ம்ம் பிரிஞ்சவங்க திரும்ப சேர கூடாதுனு சட்டம் எதுவும் இல்லனு நினைக்குறேன்?”

“ம் அப்கோர்ஸ். எனிவே அம் அருண். பெங்களுர்ல இருந்து இங்க லாஸ்ட் வீக் தான் வந்தேன். இனி இங்க தான் டியூடரா இருக்க போறேன். ”

“தட்ஸ் நைஸ். வெல்கம் டு நாட்டியாலயா. ஓ. கே டைம் ஆச்சு நா கிளம்புறேன். பை. ”

என்று நகர்ந்தவளுக்கு தன்னவனை முதன்முதலாய் ஐந்து வருடங்களுக்கு முன் இதே நாட்டியாலயாவில் சந்தித்த தருணம் நினைவிற்கு வந்தது.

“ஹாய் மிஸ் வெண்பா. ”

“ஹலோ. சாரி. நீங்க?”

“ஐ அம் திவ்யாந்த்”,என்றவன் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட மறுக்கத் தோன்றாமல் புன்னகையோடு பதிலுக்கு கைக் குலுக்கினாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

10 comments

Kiruthika M September 26, 2026 - 8:12 am

My another favourite story 😻❤️

Kavi Natarajan September 26, 2026 - 8:41 am

Nice start ma
Ithu re-run story ah

😃

ஸ்ரீ September 26, 2026 - 9:29 am

Ama ka..😃

EswariSkumar September 26, 2026 - 9:36 am

❤️❤️❤️👍❤️❤️❤️❤️

Fathima.ar September 26, 2026 - 10:47 am

Nice

srichitra September 26, 2026 - 1:50 pm

Nice start. Re run story ah. Nan padikkavilaye

😃

ஸ்ரீ September 26, 2026 - 8:50 pm

Ama ka romba munadi eluthinathu..😃

Krishnav September 26, 2026 - 5:09 pm

💖💖🥰🥰❤️❤️

suganyavel September 27, 2026 - 7:31 pm

Nice👍

MalarMurugan September 28, 2026 - 8:06 am

நான் படிக்காத கதை 🤗🤗🤗
அருமை 😍😍3

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode