650
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
மு.வ விளக்க உரை: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.”
பணத்தை இறைப்பதற்கு உதாரணமாய் இருந்தது அந்த திருமண வரவேற்பு. மகனின் திருமணத்தை திருவிழாவாக மாற்றியிருந்தனர் ராதிகாவும் மஞ்சுநாத்தும்.
வாசந்தி எவ்வளவோ கேட்டும் திருமணத்திற்காக ஒரு பைசா செலவு செய்யக் கூடாது என்று மஞ்சுநாத்தே மறுத்து விட்டிருந்தார்.
மொத்தக் குடும்பமும் ஒருவனின் திருமணத்தைக் கொண்டாட காத்திருக்க அவனுக்கோ எண்ணம் மொத்தமும் தான் கரம் பிடிக்க போகும் யுவதியின் மேல் மட்டும் தான்.
என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் எனக்குத் தேவையானது நாளை காலை முகூர்த்த நேரம்.
என் உயிரானவளை என்னோடு ஆயுளுக்கும் கட்டி வைத்துக் கொள்ளும் பந்தத்தை முடிவு செய்யும் திருமணம் மட்டுமே என் கவனம் என்றிருந்தான் மேகன்.
விடியலுக்கோ மனம் மொத்தமும் தந்தையும் காதலனும் தான் நிறைந்திருந்தனர்.
மகிழ்ச்சியென்றால் இந்தளவா இருக்கும் எனுமளவிற்கு மகிழ்ந்திருந்தாள். ஏதேதோ நடந்து விட்டதற்குப் பரிசாய் தான் இந்த திருமணம் அவளைப் பொறுத்த வரையில்.
இப்படியான பலவேறு தரப்பட்ட மனநிலைகளோடு ஒவ்வொருவராய் மேடையேற தன் இணையை விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டனர் மணமக்கள்.
எப்போதும் உள்ளிருக்கும் ஆர்பரிப்பெல்லாம் வெளியில் தெரியா வண்ணம் வெகு அமைதியான புன்னகையும் கை கோர்த்தலும் அவர்களிடத்தில்.
ஆனால் இந்த நொடி தங்கள் முன் யாருமில்லையென்றால் அந்த காதலின் பரிமாற்றமே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
நிச்சயம் அடுத்த பத்து நாட்களுக்காவது இவர்களின் திருமணம் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
“சின்னு..”
“ஷ்ஷ்.. பேசவே கூடாது நாளைக்கு கல்யாணம் முடியுற வரை..”
“ஏன் டி?”
“உன்னை சமாளிக்கத் தெரியலை எனக்கு.. ப்ளீஸ் மேகன்..”
“சரி பொழச்சு போ..”
“நான் சொன்னதை உடனே கேட்டுடியா?!”
“நாளைக்கு சேர்த்து வைச்சு கவனிச்சுக்குறேன்.”, என்றதில் அதன் பின் மறந்தும் வாயைத் திறக்கவில்லை விடியல்.
வரவேற்பிற்கு மிச்சமாய் மறுநாளின் திருமணம் கோலாகலமாய் நடைபெற தாலியை தன்னவளின் கழுத்தில் அணிவித்த போது விடியலின் புன்னகை நிறைத்த முகம் அப்படியே மனதில் பதிந்து போனது மேகனுக்கு.
“கங்ராஜுலேஷன்ஸ் மேகன்..”
“தேங்க்ஸ் சின்னு. ரொம்ப பெரிய பொறுப்பு, மா பங்காரியை பத்திரமா பார்த்துக்க வேண்டியது. சரியா செய்வேனா?”
“உங்களைத் தவிர யாராலயும் அதை செய்ய முடியாது.”, என்றவளிடத்தில் அழகான புன்னகை.
மேகனுக்கு பெரும் ஆச்சரியம் தான் விடியல் தாலி கட்டும் பொழுதோ அதன் பின்னரோ மிகவும் உணர்ச்சி வசப்படுவாள் என்று நினைத்திருந்தான்.
ஆனால் அவள் மகிழ்ச்சியாய் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.
தந்தையை மொத்தமாய் மனதிற்குள் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது மேகனுக்கு.
ராதிகா மற்றும் மஞ்சுநாத்திடம் ஆசீர்வாதம் பெற்று புன்னகைத்து நின்றவளை ராதிகா மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டார்.
அடுத்ததாய் வாசந்தியிடம் வந்த போதும் அதே நிறைவான புன்னகையில் துளியும் மாற்றமில்லை. வாசந்தி கண்ணீர் மறைக்க மகளை ஆரத் தழுவிக் கொண்டார்.
“அழாத மா. இங்கே பக்கத்துலேயே தான இருக்கப் போறேன். நீ அழுதால் எனக்கு கஷ்டமா இருக்கும்.”
“சரி சரி சின்னு நான்.. நான் அழல..”, என்றவர் புன்னகைக்க மேகன் வாசந்தி பிடித்திருந்த விடியலின் கையோடு சேர்த்துப் பிடித்திருந்தான்.
“ஷி இஸ் மை க்வின் ஆன்ட்டி. எப்பவும் அது மாறாது.”, என்றதில் பரம திருப்தி வாசந்திக்கு.
இளையவர்களோடு விஜய் பார்த்தி என அத்தனை பேருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை இந்தத் திருமணம் கொடுத்திருந்தது.
பிள்ளைகள் மொத்தமாய் மேகனையும் விடியலையும் சேர்த்துக் கட்டிக் கொள்ள பெரியவர்களுக்கு மனம் நிறைந்து போனது.
மணமக்களை மேகனின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க விடியலை மாடிக்கு அழைத்துச் சென்றிருந்தார் ராதிகா.
சைத்ராவும் நேத்ராவும் அவளோடு இருக்க சற்று நேரத்தில் மேகன் அங்கு வந்திருந்தான்.
அண்ணனை கேலி செய்ய நினைத்தவள் அவன் வந்த வேகத்திலும் அத்தனை நேரம் சிரித்திருந்த விடியலின் முகம் மாறியிருப்பதையும் கவனித்து நேத்ராவோடு வெளியேறியிருந்தாள்.
கதவு மூடியவுடன் வேகமாய் மேகனை அணைத்துக் கொண்டவள் இடுப்போடு இறுகக் கட்டிக் கொண்டாள்.
“இட்ஸ் ஓகே சின்னு. ரிலாக்ஸ்..”, என்றதில் அவளிடத்தில் விசும்பல்.
“அங்கிள் உன்னோடவே தான் இருக்காரு டி..”, என்றதில் நிமிர்ந்து ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அவனைச் சுட்டிக் காட்டினாள்.
“இவ்வளவு கன்ட்ரோல் பண்ணணுமா நீ? என்னால மேடையில நார்மலா இருக்கவே முடியலை..”
“நான் அழுதா அம்மா இன்னும் ஃபீல் பண்ணுவாங்க மேகன். அதுவுமில்லாம உங்களுக்கு நம்ம கல்யாணத்தோட நியாபகம் எப்போ வந்தாலும் சந்தோஷமா உங்க பொண்டாட்டியான என் முகம் தான் நியாபகத்துல இருக்கணும்னு நினைச்சேன்.”
“ஐ லவ் யூ சின்னு..”, என்றவன் அழுத்தமாய் உச்சந்தலையில் முத்தம் வைத்து அணைத்திருந்தான்.
“இப்போ நீ ஓகே தான? நான் போட்டுமா? இல்ல ரூம்க்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறியா?”
“இல்ல நான் இங்கேயே இருக்கேன். நீங்க போங்க..”, என்றதில் கன்னத்தை அழுத்திக் கொடுத்து வெளியேறியிருந்தான் மேகன்.
இரவிற்கான ஏற்பாடுகள் முடித்து இருவருமாய் விடியலை அழைத்துக் கொண்டு மேகனின் அறைக்குச் சென்றனர்.
அறைக்குள் வந்தவள் அறையை சுற்றிப் பார்த்த படி அங்கிருந்த மேகனின் புகைப்படத்தை விரல் கொண்டு வருடி விட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
பயம் என்றெல்லாம் கூறிவிட முடியாது உயிர் உடலை விட்டுச் சென்று விடும் அளவிற்கு உள்ளுக்குள் நடுக்கம் பெண்ணவளுக்கு.
மேகன் என்பவனின் பொறுமையை ஆன மட்டும் சோதித்து விட்டல்லவா இந்தத் திருமணம் நடந்திருக்கிறது.
இதற்கு மேல் அவனிடம் எந்தப் பொறுமையையும் நிச்சயம் அவள் எதிர் பார்க்கவில்லை.
கதவு திறக்கும் சத்தத்தில் சிந்தனை கலைந்தவள் கட்டிலின் நடுவில் கால் குவித்து அமர்ந்திருந்த வண்ணம் உள்ளே வந்தவனைத் தான் பார்த்திருந்தாள்.
அவள் நினைத்தற்கு மாறாக அவ்வளவு நிதானம் அவனது உடல் மொழியில்.
புன்னகையோடு அவளருகில் வந்து அமர்ந்தவன் லேசாய் அவளது பாதத்தின் அருகில் புடவையை நகர்த்த எதற்காக என்று புரிந்தவள் தலை கவிழ்ந்த வண்ணம் இரு கால் பாதங்களையும் நிமிர்த்தி அவனுக்குக் காட்டினாள்.
மெஹந்தி பங்கஷனின் போது மேகன் அவளை உள்ளங்காலில் முழுதாக மெஹந்தி வைத்துக் கொள்ளுமாறு கூற அப்படியெல்லாம் யாரும் வைப்பார்களா என்ன என்று சந்தேகம் கேட்டாள்.
அவனின் ஆசையென்று கூறி அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இப்போது கூட காதை சூடு கொள்ள வைப்பதாகிப் போனது.
மிக மெல்லிதாய் விரல் கொண்டு மெஹந்தியை மேகன் வருட அவளுக்கோ கால்கள் லேசாய் நடுங்கியது. அதை விட மென்மையான இதழொற்றல் பெண்ணவளை மொத்தமாய் குழைத்து விட்டிருந்தது.
அறையின் அமைதியும் அவனது நிதானமும் தன்னவனின் வாசனையும் என பெண்ணை பித்தாக வைத்திருந்தது.
அவனது கரம் பற்றி லேசாய் இழுத்தவள் மேகன் நிமிர்ந்ததும் அருகில் சென்று மார்பில் தலை சாய்த்திருந்தாள்.
“சின்னு..”, அவளுக்கே அவளுக்கான ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் அந்தக் குரலுக்கு தான் எத்தனை வலிமை அவனோடு அப்படியே கட்டிலில் விழுந்திருந்தாள் விடியல்.
மேகனின் கழுத்தோடு கட்டிக் கொண்டவள் மொத்தமாய் அவன் மீது தன்னைப் பதித்துக் கொண்டாள்.
“சின்னு லுக் அட் மீ..”, என்றதற்கு மறுப்பாய் தலையசைத்தவளை தொந்தரவு செய்யாது இன்னுமாய் இறுக்கியிருந்தான்.
இரண்டொரு நிமிடங்கள் அப்படியே இருந்தவள் மெதுவாய் தலை நிமிர்த்திய போதும் அவனது விழி நோக்காமல் முகமெங்கும் முத்தத்தை பதித்திருந்தாள்.
“சின்னு கொஞ்ச நேரம் சும்மா இரு. பேசணும் டி..”
“…”
“எதாவது பேசு இல்ல என்னை பாரு.. ஜஸ்ட் டு மினிட்ஸ் டி..”, என்றவனின் கெஞ்சலில் சிரித்திருந்தவள் அவனை ஏறிட அப்படியே அவளை கீழே தள்ளியவன் இடுப்பில் வலிக்கக் கிள்ளியதோடு அவள் கத்துவதற்குள் இதழ்களை தன் இதழ் கொண்டு அடைத்திருந்தான்.
நொடிகளில் விலகியவன் அவளை அப்படியே தூக்கியமர்த்தி அருகில் அமர்ந்திருந்தான்.
“ஏன் டி இப்படி பண்ண?”
“…”
“வாயைத் திறக்கலைனு வை..”
“மேகன் நீ… உனக்கென்ன வேணும் இப்போ லைட்டை ஆஃப் பண்ணு..”
“நான் எதுவுமே பண்ணலை அப்பறம் என்ன உனக்கு..”, என்றவனின் பார்வை கள்ளுண்ணும் வண்டாய் அல்லவா அவளைக் குடைந்து கொண்டிருக்கிறது.
அந்த பார்வையின் நிதானத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாமல் போயிருந்தது.
மூச்சு விடட்டும் என்று நினைத்தானோ என்னவோ அவன் எழுந்து அலமாரியின் அருகில் செல்ல மெதுவாய் அவனை அடிப் பார்வை பார்த்தாள் விடியல்.
அந்தப் புடவை பெட்டியோடு அவளருகில் இடித்துக் கொண்டு அமர்ந்தவன் பெட்டியை அவள் முன் நீட்ட விழி விரித்தவளாய் ஆவலாய் ஆசையாய் அதைக் கையில் வாங்கியிருந்தாள்.
அழகான சிகப்பு நிற புடவைக்கு ப்ரவுன் நிற பார்ட்டரும் தலைப்பும் இருக்க அத்தனை வாஞ்சையாய் அந்தப் புடவையை வருடினாள்.
“அப்படி என்ன இருக்குனு அதை இப்படி பார்த்துட்டு இருக்க நீ..”
“என் புருஷன் கொடுத்த புடவை இது ஒரு காரணம் போதாதா..”
“சரி எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருப்ப..”, என்றதில் பெட்டியை மூடச் சென்றவளின் கையைப் பற்றியிருந்தான் மேகன்.
“ரொம்ப படுத்துற.. நீ தான பார்த்தது போதும்னு சொன்ன..”
“நீ பார்த்தது போதும் நான் பார்க்க வேண்டாமா?”, என்றதில் ஒரு நொடி விழித்தவள் மொத்தமாய் சிவந்து போனாள்.
“என் பொறுமையை ரொம்ப சோதிக்குற.. சீக்கிரம் கட்டிட்டு வா..”
“மேகன்.. நோ..”
“சின்னு..”, என்றவனின் குரலின் மென்மை அதற்கு மேல் விடியலை பேச விடாமல் செய்திருக்க குளியலறையோடு இருந்த ஒப்பனை அறை நோக்கிச் சென்றவளை மேகனின் குரல் நிறுத்தியது.
“இப்போ கண்டிப்பா நீ அங்கே போய் தான் மாத்திக்கணுமா?”
“ஹேய் சுப்ப். “, என்றவள் கிட்டதட்ட ஓடியிருந்தாள். ஐந்து நிமிடத்திற்கு மேலானதும் பொறுக்க முடியாதவனாய் கதவைத் தட்டினான்.
“அஞ்சு நிமிஷம் பார்க்க போற புடவையை எவ்வளவு நேரம் டி கட்டுவ..”
“கத்தாத நீ போ நான் வரேன்.”
“என்ன நடந்தாலும் கத்தி ஊரைக் கூட்டிராத சொல்லிட்டேன். எல்லாமே உன்னால தான்..”, என்றவன் மீண்டுமாய் கட்டிலில் சென்று அமர்ந்திருந்தான்.
மிக மெதுவாய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள் அவன் கட்டிலில் இருப்பது தெரிந்து வெளியே வந்திருந்தாள். அவளது நிறத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.
“மா பங்காரி..”, என்றவன் இரு கரம் விரிக்க தயக்கத்தையும் மீறி அவனைச் சென்று அணைத்திருந்தாள் விடியல்.
“புடவை எல்லாம் எடுக்கத் தெரியாதுனு சொன்ன?”
“ஆமா தெரியாதே..”
“ஆனா இதைப் பார்த்தா அப்படி தெரியலை..”
“இதோ நீ இப்படி நின்னு நான் உன்னைப் பார்க்கும் போது இது நல்லாயிருக்குமானு யோசிச்சேன்.
நல்லா தான் இருக்கு.”, என்றவனின் குரலில் மேலும் மேலும் சிவக்கத் தான் முடிந்தது அவளுக்கு.
“சின்னு ஹேப்பி?”
“ம்ம் ரொம்ப..”
“Noone is watching us now சின்னு..”, என்றதில் தலை குனியச் சென்றவளின் கன்னத்தை அழுந்தப் பற்றியவனாய்,
“காதலிக்கலாமா?”, என்றவன் தனது சட்டையின் இரு பட்டன்களை கழட்ட வேகமாய் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள் விடியல்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
9 comments
So sweet ❤️❤️❤️❤️
Thegatta thegatta love panna vaikkuraanga pa intha writer
மேகன் 😘😘😘😍😍
சின்னு 😘😘🙈🙈🙈
💞💞💞💞💞💞💞💞💞
,😍
Very nice
🥰🥰🥰💖💖💖😍😍😍
Woww….lovely 😍can you please post one more episode 🥰
😍😍
On the way sis.. 4:15 PM