214
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
மு.வ விளக்க உரை: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.”
மேகன் விடியல் நிச்சயதார்த்தம் கோலாகலமாய் முடிந்திருக்க மேடையில் ஏறியதிலிருந்து பற்றிய விடியலின் கரத்தை மேகன் விடுவித்திருக்கவே இல்லை.
யார் வந்து பேசினாலும் இடது கரம் அவளோடு இணைந்தே தான் இருந்தது. அதிலும் லேசாய் நகர நினைத்தவள் தடுமாறி விழப் போக அவளைப் பிடிக்க வந்த சைத்ராவின் கரத்தைப் பற்றித் தடுத்தவனாய் தானே அவளை இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.
“ரொம்ப ஓவரா பண்ற ண்ணா நீ..”
“நான் பார்த்துக்கும் போது நீ ஏன் அவளை டச் பண்ற சைத்து. ஐ வில் டேக் கேர்”, என்றதில் மொத்தமாய் கடுப்பாகியிருந்தாள் சைத்ரா.
ரகு பாதி வரை விழாவில் இருந்தவன் பின் எங்கேயோ கிளம்பியிருக்க மேடையில் இருந்தே பார்த்திபனுக்கு கண்காட்டினான் மேகன்.
மேகனின் கை வளைவிலேயே இருந்த விடியலுக்கு நடப்பதெல்லாம் கனவு என்பதான எண்ணம் தான். சுற்றத்தையும் தாயையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டாள்.
தன்னருகில் இருப்பவனை ஒவ்வொரு நொடியும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டே இருந்தாள்.
அவனது வாசனை அவனது பேச்சு அவனது ஸ்பரிசம் என அனைத்தையும் மனதிற்குள் பத்திர படுத்திக் கொண்டே இருந்தாள்.
இரவு உணவையும் முடித்து அனைவருமாய் கிளம்பத் தயாராக விடியலை தானே வீட்டில் விடுவதாய் கூறிவிட்டு யார் பேச்சுக்கும் காத்திருக்காமல் தனது காரில் ஏறியிருந்தான் மேகன்.
பின்னிருக்கையில் அமர்ந்தவள் அப்போதும் அவன் கை வளைவிலேயே தான் இருந்தாள்.
“ஏன் டி ரொம்ப அமைதியாட்ட?”
“தெரியலை மேகன். நடக்குற எல்லாமே கனவோனு நினைச்சுட்டு இருக்கேன்.”
“…”
“இப்படி உங்க பக்கத்தில் இருக்கும் போது ரொம்ப பாதுகாப்பா இருக்கு.”
“சின்னு ஐ மிஸ்ட் யூ பேட்லி.. இதை உனக்கு எப்படி புரிய வைக்குறது.
உன்னை மாதிரி எனக்கு பேச வரலை..”, ஓட்டுநருக்குத் தமிழ் தெரியாதது காதல் புறாக்களுக்கு வசதியாகிப் போயிருந்தது.
“இன்னும் வேற புரிய வைக்கணுமா? என் இடுப்பெல்லாம் சிவந்து போச்சு ஏற்கனவே..”
“எப்படி நான் தான் எதுவும் பண்ணலையே?”, என்றதில் அவன் கையில் ஓங்கி அடித்தாள்.
“சரி என் மைண்ட்ல என்ன நினைக்குறேன்னு சொல்லு..”
“இப்போ எதுக்கு இது?”
“சும்மா சொல்லு டி. நீ நிஜமாவே மென்டலிஸ்டானு நான் செக் பண்றேன்.”
“ஒண்ணும் தேவையில்ல.. நீங்க கேட்குறதே ஏதோ வில்லங்கமா இருக்கு.”
“ஹே ரொம்ப பண்ணாத சின்னு. டூ இட் நவ்..”, என்றதில் எப்போதும் போல் அவன் விழி பார்த்தவள் தடுமாறித் தலை தாழ்த்தியிருந்தாள்.
“நோ மேகன்..”
“ஏன்?”, என்றவனிடத்தில் குறும்பான சிரிப்பு.
“என்னால உங்க கண்ணை ஃபேஸ் பண்ண முடியலை..”
“பொய்..”
“பொய்யா? என்ன பொய்??”, என்றவளிடத்தில் சிறு படபடப்பு.
“பொய் சொன்னா மட்டும் தான் உன் கண் இந்த பாவனை காட்டும்..”
“இவ்வளவு கவனிச்சுருக்கீங்களா?!”
“நீ ன்னு முடிவு பண்ண பிறகு கவனிக்காம?”
“ஆனாலும் தப்பு தான் நான் ஒண்ணும் பொய் சொல்லல..”
“நான் என்ன நினைச்சேன்னு உனக்குத் தெரியும்..”, என்றதில் விடியலின் முகம் சிவந்து போக அவன் மார்பிலேயே தலை கவிழ்ந்திருந்தாள்.
“நீ ரொம்ப மோசமாய்ட்ட மேகன்..”
“இந்த பேரை நீ சொல்ல சொல்ல பொறுக்கியா மாறிடுறேன். எனக்கேத் தெரியுது..”
“சரி பேச்சை மாத்தாம..”, என்றவனின் பேச்சை முடிக்க விடாமல் தனது விரல் கொண்டு அவனது வாயை மூடியிருந்தாள்.
“அப்போ உனக்குத் தெரியும்..”
“ஐயோ ஷ்ஷ்..”, என்றவளுக்கு அவனைச் சமாளிக்க முடியவில்லை.
“இன்னும் இரண்டு மாசம் இருக்கு டி.. அதுக்குள்ளே மொத்தமா வெட்கத்தை எல்லாம் காலி பண்ணிடு சொல்லிட்டேன்.”, என்றதில் தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள் விடியல்.
“என்ன?”
“நீங்க பக்கத்தில் வந்தாலே மூச்சு முட்டுது இப்போவே..”
“இந்தக் காலத்து ரிலேஷன்ஷிப் பத்தி ஐடியாவே இல்லாதவன் அந்த ஒருத்திகிட்ட இப்படி தான இருப்பான்?”
“மொத்தமா என்னை கரைச்சுட்ட மேகன்..”, என்றவளின் உச்சந்தலையில் இதழ் பதித்து புன்னகைத்தான் மேகன்.
திருமண வேலைகள் ஒரு புறம் மிகப் பிரம்மாண்டமாய் நடந்து கொண்டிருக்க மேகனுக்கும் மனீஷிற்குமான மோதல்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தன.
இதற்கிடையில் ரகுவந்த் தனியே தொழில் தொடங்க தனது தந்தையிடம் பணம் கேட்க ஒரே குடும்பத்தில் தனி தொழிலெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டவர் பணம் தரவும் மறுத்திருந்தார்.
இதுவே ரகுவந்தை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அவனை தள்ளியிருக்க வைத்திருந்தது.
மனீஷ் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி ராதிகாவிற்கு சற்று குடைச்சலை ஏற்படுத்த, யார் கண்ணையும் உறுத்தாமல் உள்ளே தலையிட்டு பிரச்சனைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தான் மேகன்.
அன்று அலுவல்களை முடித்த பின் கிடைத்த நேரத்தில் சுகன் சைதன்யா இருவரும் மேகனோடு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“அண்ணா ரகு இப்போ எல்லாம் சரியா பேசக் கூட மாட்றான்..”
“உன்னகிட்ட கூடவா சுகன்?”
“ம்ம்..”
“நான் அவன் கேட்குற பணத்தை கொடுக்குறேன் சுகா..”
“அதெல்லாம் வேண்டாம் ண்ணா.. அவனுக்கு அந்தளவு விவரம் பத்தாது. எங்கேயாவது போய் தேவையில்லாம மாட்டிக்க போறானேனு இருக்கு எனக்கு.”
“கவலைப்படாத என்னை மீறி அவனை எவன் தொட்டுருவான்னு பார்க்குறேன்.”
“இவன் கொஞ்சம் மெச்சூர்டா இருந்தா தேவலைனு இருக்கு. குழந்தை மாதிரி கோச்சுகிட்டு தேவையே இல்லாம ஈகோ பார்த்துட்டு இருக்கான்.”, என்றதில் மேகன் தம்பியைப் பார்க்க அவன் அவசரமாய்,
“ஐயோ நான் உங்களை எதுவும் சொல்லலை..”, என்றதில் சைதன்யா சிரித்திருந்தான்.
“கொழுப்பு டா உங்களுக்கு.”
“நம்ம குடும்பத்துலேயே ஏன் பரம்பரையிலேயே ஈகோக்கு அர்த்தம் உங்க பேரா தான் இருக்கும் ஆனால் டாப்பிக் அண்ணியா இருந்தா நீங்க ஆளே வேற இல்ல?”, என்றதில் மூவருமே புன்னகைத்தனர்.
“நான் கூட கேட்கணும்னு நினைச்சேன் ண்ணா..”
“வாட்?”
“அண்ணிக்கும் உங்களுக்கும் சண்டை வரதெல்லாம் வாய்ப்பே இல்லனு தோணுது. ஆனால் அப்படியிருந்தா வாழ்க்கை போரடிச்சுராது?”
“சண்டையே வராம இருக்க நாங்க என்ன ஞானிகளா டா?”
“சண்டை வரும்னு சொல்றீங்களா?”
“அஃப்கோர்ஸ் வரும்.. ஆனால் அவளை ஜெயிக்குறதுக்காக நான் சண்டை போட மட்டேன்.”
“குழப்புறீங்க ண்ணா..”
“சைத்து புருஷன் பொண்டாட்டிக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் யாருனு சொல்லு?”
“யாரு?”
“சிவ் பார்வதி தான்..”
“சிவன் எந்தளவு பவர்ஃபுல்னு இந்த உலகம் சொல்லுதோ அதே அளவு பவர் சக்திக்கும் இருக்கு.
ஆனால் தன்னோட சரி பாதியான சக்தியை அவர் எப்பவும் கன்ட்ரோல் பண்ண நினைக்க மாட்டார்.
ரிலேஷன்ஷிப்பில் நிலைமைக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் நெருப்பா இருக்கணும் இன்னைருத்தர் அவங்களை அமைதிப் படுத்துற பனியா இருக்கணும்.
எப்பவுமே நான் நெருப்பா மட்டுமே இருப்பேன்னு சொன்னால் தட் வில் நாட் வொர்க். நீ சொன்னது தான் கரெக்ட் “When it comes to her, my ego will go right under her feet.”
“!!!”
“இதுக்கு நான் தயாரா இல்லைனால் நான் கல்யாண வாழ்க்கைக்கு அன்ஃபிட்.”, என்றவன் தம்பிகளுக்கு மிகவும் புதியவனாய் தெரிந்தான்.
அந்த நேரம் பார்த்திபன் உள்ளே வர இவர்களின் பேச்சு அப்படியே தடை பட்டிருந்தது. பார்த்திபனின் முகத்தில் சற்று பயமும் தயக்கமும் சேர்ந்தே இருந்தன.
“சொல்லு பார்த்தி..”
“நம்ம ரிசார்ட்டில் ரைட் நடக்குது சார்.”, என்றதில் அத்தனை நேரம் தன்மையாய் பேசிக் கொண்டிருந்தவன் முகம் கோவத்தில் சிவக்க ஆங்கிலத்தில் வாய்க்கு வந்த படி கத்த ஆரம்பித்திருந்தான்.
“பிரச்சனை வராது தான?”
“அது..”
“என்னை எரிச்சல் படுத்தாத பார்த்தி..”
“ட்ரக்ஸ் மாட்டிருக்கு சார்..”, என்றதில் தம்பிகள் இருவரும் அதிர்ச்சியாய் பார்த்திபனைப் பார்த்தனர்.
“சரி அப்படியே இருந்தாலும் அதுக்கு ஏன் நமக்கு பிரச்சனை வரப் போகுது. யார் வைச்சுருந்தானோ அவனை தான பிடிக்கணும்?”
“…”
“எத்தனை கிலோ?”, என்ற மேகனின் கேள்வியில் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டிருந்தனர் சுகனும் சைதன்யாவும்.
“அல்மோஸ்ட் 30-40 கிலோ சார்..”, என்றதில் தொலைக்காட்சியை உயிர்பிக்க அவர்களது ரெசார்ட் பெயரோடு செய்திகள் வந்து கொண்டிருந்தன.
அதில் வழக்கம் போல் ராதிகாவின் பெயரும் அடிபட வேகமாய் அங்கிருந்து கிளம்பியவன் யாருக்கோ அழைத்த வண்ணம் அலுவலகத்தில் இருந்து கிளம்பியிருந்தான்.
யார் யாரிடமோ பேசியவன் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அத்தனை செய்திகளிலும் வந்த செய்தி தவறானது என்று கூறி மன்னிப்பு கோர வைத்திருந்தான்.
தொழில் போட்டி காரணமாக யாரோ செய்த திட்டமிட்ட சதி என்றும் கூற வைத்திருந்தான். காவலதிகாரிகள் கண்முன்னே அத்தனை கிலோ போதை பொருட்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டன.
சொல்லப்போனால் தெளிவான ஆதாரங்கள் அவனது ரிசார்டிற்கு எதிராய் அனைவரின் கண்முன்னே இருக்கிறது.
இருந்தும் வந்த செய்தி தவறு என்று கூற வைத்திருந்தான் மேகன் மஞ்சுநாத்.
தந்தையிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க அவரைச் சந்திக்க வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவனிடம் பார்த்தி,
“மீடியா வாயை தான் அடைச்சுருக்கோம் சார்.. பிரச்சனையை எப்படி முடிக்குறது?”
“என்ன பண்ணுவாங்க?”
“சீசீடிவி மட்டுமில்லாம கையும் களவுமா பிடிச்சுருக்குறதுனால தற்காலிகமா க்ளோஸ் பண்ண வாய்ப்பிருக்கு சார்..”
“நீ கோவிந்த்கிட்ட பேசி எதாவது ஒரு கேங்கை உள்ளே இன்வால்வ் ஆகி பழியை ஏத்துக்கச் சொல்லு. வேண்டியதை பார்த்து பண்ணிடு.”
“அது.. பிரச்சனை ஆக..”
“கண் துடைப்புக்காக கூட ரெசார்ட்டை மூட விட முடியாது பார்த்தி..
எதிராளியை ஜெயிக்க விட சொல்றியா?”, என்றவனின் அடிக்குரலில் அமைதியாகி விட்டிருந்தான் பர்த்திபன்.
“அப்பறம் அந்த மனீஷ் பேர் இதில் வெளியில் வரக் கூடாது.”
“புரிஞ்சுது சார்.”, என்றவன் அடுத்தடுத்து ஆக வேண்டியதைக் கவனிக்கத் தொடங்கினான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
👌👌👌👌👌👌👌
Nice