863
“அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
மு.வ விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.“
பெண்கள் இருவரை அனுப்பி விடியலிடம் பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டு அந்தக் கல்லூரி மாணவர்கள் பொழுதைக் கடத்த இருந்த மனநிலைமையில் சூழ்நிலையை சமாளிக்க முடியாதவளாய் வேகமாய் வெளியேறி இருந்தாள்.
காரில் ஏறியவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு பின் சாய்ந்து அமர ஓட்டுநர் அவளிடம்,
“மேடம் அந்தப் பசங்க நம்ம காரை ஃபாலோ பண்ண பாக்குறாங்க.”, என்றதில் பின்னால் திரும்பி பார்க்க இரு சக்கர வண்டியில் இரு ஆண்கள் மட்டும் அக்ஸிலேட்ரைக் கொடுத்த படி தங்களுக்குள் பேசிச் சிரித்தனர்.
“விடுங்க ண்ணா.. கொஞ்ச தூரம் வந்துட்டு போயிடுவாங்க.”, என்றவள் விழி மூடிக் கொண்டாள்.
ஓட்டுநருக்கு என்னடா இது தொல்லை என்று இருக்க அவர்களை சுத்தலில் விட நினைத்தவராய் வீட்டிற்கும் செல்லாமல் அலுவலகத்திற்கும் செல்லாமல் காரை இயக்கிக் கொண்டிருந்தார்.
நினைத்தால் செல்லும் தொலைவிலும் இல்லை என்பது வேறு விஷயம்.
அவ்வப் போது ரிரர் மிரரை அவர் பார்த்த படியே இருந்தில் விடியல் திரும்பிப் பார்க்க இன்னுமும் வந்து கொண்டு தான் இருந்தனர்.
சிக்கனில் நிற்கும் போது கார் அருகில் வந்து இடைஞ்சல் வேறு.
“என்ன ண்ணா இது தொல்லையாக இருக்கும் போலேயே!”
“இப்போ இருக்குறதுங்க என்னென்ன பயன்படுத்துதுனு யாருக்குத் தெரியுதுமா.. அவனுங்க முகமே சரியில்லை.
போதையில் இருக்குற மாதிரி இருக்கு.”, என்றவருமே எரிச்சலிலும் பதட்டத்திலும் தான் இருந்தார்.
இந்தப் பிரச்சனையைப் பற்றியே யோசித்ததில் பெட்ரோலைக் கவனிக்காமல் விட்டிருக்க லோ ஃப்யூவல் என சத்தமெழுப்ப ஆரம்பித்திருந்தது.
விடியலுக்கோ தந்தையையும் விஜையையும் அழைத்தால் கூட உடனே அவர்களால் எதுவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான்.
என்ன செய்யவென புரியாமல் குழம்பியவள் கார் நின்ற அடுத்த நொடி எவ்வித யோசனையுமின்றி மேகனை அழைத்திருந்தாள்.
“மேகன்..”
“உனக்கு பின்னாடி இருக்குற கார்ல ஏறு..”
“ஆங்!”
“உன் டிரைவர் வீட்டுக்கு போயிடுவார் நீ அந்த கார்ல ஏறு..”, என்றதில் ட்ரைவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அவள் தவித்த நேரம் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் ட்ரைவரிடம் விஷயத்தைக் கூறி அவளை அந்தக் காரில் ஏறுமாறு கூறியதோடு பேட்ரோல் வண்டியில் அந்த மாணவர்களையும் பிடித்திருந்தார்.
“எனக்கு உன்ன பார்க்கணும்..”, என்றவளின் குரல் நடுங்கியதில் மறுபுறம் பெரும் அமைதி.
“மேகன் இப்போவே பார்க்கணும்..”
“அந்தக் கார்ல வா கூட்டிட்டு வருவாங்க..”, என்றதில் கண்ணீரை உள்ளிழுத்தவளாய் கைப் பையோடு அந்த வண்டியில் ஏறியிருந்தாள்.
போகும் வழியெங்கும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
ஆபத்து என்றதும் தந்தைக்கு அடுத்து அவனை மனம் நாடியதே அவளது மனதை தெளிவாய் உணர்த்தி விட்டிருந்தது.
அதை விட அவன் தனது பாதுகாப்பிற்கு அடுத்த நொடியே வந்து நின்றது விடியலை மொத்தமாய் சாய்த்து விட்டிருந்தது.
இதெல்லாம் அவனுக்குத் தேவையில்லையே! ஆனால் அதையும் மீறி தன்னை அவன் எவ்வளவு முக்கியமாய் நினைத்திருந்தால் இதெல்லாம் சாத்தியம்.
தன் வார்த்தையை மதித்து பேசாமல் இருந்தாலும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமென அவன் இருப்பதில் மனம் பரவசமடைந்தது.
அன்று அவள் வந்த அதே ரெசாட்டிற்குள் கார் நுழைய அவனை எதிர் கொள்வதில் சற்று தயக்கம் இருந்தது விடியலுக்கு.
அவள் சிந்தனையில் இருந்து விடுபடுவதற்குள் பார்த்திபன் கதவைத் திறந்து விட்டிருந்தான்.
“வாங்க மேம்..”, என்றதில் தயக்கமாய் புன்னகைத்து அவனோடு உள்ளே சென்றாள்.
அன்றைய அலுவலக அறைக்கு தான் இன்றும் அழைத்துச் சென்றான். கதவைத் திறந்து விட்டு விடியல் உள்ளே சென்றதும் கதவை பூட்டி விட்டுச் சென்றான்.
மேகன் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க அவனது விழிகளை ஒரு நொடி நோக்கியவள் மெதுவாய் அவனருகில் வர அவனோ வெகு இயல்பாய்,
“உட்காரு விடியல்..”, அந்த குரலின் ஆளுமை ஏதோ உயிர் வரை நிம்மதியைக் கொடுத்தது விடியலுக்கு.
அவனிருந்த அதே சோபாவின் மறுமுனையில் அமர்ந்தவளுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
“எப்படியிருக்க?”
“ம்ம்.. நல்லாயிருக்கேன். நீங்க?”
“ஃபைன்..”
“…”
“சோ குழப்பம் போயிடுச்சா?”
“…”
“ஸ்பீக்..”
“நான் தோத்துட்டேன் மேகன்.. என் சவாலை நானே உடைச்சுட்டேன்.”
“…”
“நான்..”
“மேகன் லவ்ஸ் விடியல். இதைத் தாண்டி என்ன யோசிக்குற நீ?”, என்றவனுக்கு அவர்களுக்குள் இருந்த விலகலின் கடுப்பு.
இந்த வாக்கியத்தை இதோடு மனதில் எத்தனை முறை கூறிப் பார்த்திருப்பாள்.
இப்போது அவன் குரலில் இத்தனை அருகில் கேட்கும் போது அத்தனை ஆற்றாமையும் கரையுடைக்கத் தயாராக சற்று சத்தமாகவே அழுதவள் முகத்தை கரங்களுக்குள் புதைத்துக் கொண்டாள்.
தனது கரத்தை சோபாவில் அழுத்தியவன் காலை அகற்றி அப்படியே அவளருகில் நகர்ந்திருந்தான்.
ஆனால் ஒரு விரல் இடைவெளியில் இருந்தான். அவளது தோள் பற்றவோ கரத்தைப் பிடிக்கவோ முயற்சிக்கவில்லை.
“சின்னு…”(Gold) , என்றவனின் ஆழ்குரல் ஒன்றே அவளது கண்ணீரைச் சட்டென நிறுத்தியிருந்தது.
சட்டென அவன் புறம் திரும்பியிருந்தவள் அவர்களுக்கு இடையில் இருந்த சிறு இடைவெளியைக் கவனித்தவளாய் அவன் புறம் நகர்ந்து அமர்ந்து தனது கரத்தை அவனது வலக்கரத்தில் வைத்து அவனது இடக்கையை வைத்து மூடிக் கொண்டாள்.
“எனக்குப் பயமா இருக்கு மேகன்..”, என்றதில் கரங்களின் அழுத்தத்தை அதிகரித்த வண்ணம் அவளது விழிகளை நோக்கினான்.
“என்னை நம்புறியா?”, என்றதற்கு யோசிக்காமல் ஆமென தலையசைத்தாள் விடியல்.
“அப்போ உன் பயத்தை நம்பாத..”
“உங்க பேமிலிக்கு.. என்னை..”
“பிடிக்கும். பிடிச்சு தான் ஆகணும்.”
“எங்க வீட்ல என்ன சொல்லுவாங்கனு தெரியலை..”
“என்ன சொன்னாலும் கடைசியில் நம்ம கல்யாணத்துக்கு ஓகே மட்டும் தான் சொல்லுவாங்க.”
“பட் இப்பவும் கேட்குறேன் வொய் மீ?”
“பிகாஸ்…”
“!!”
“நவ் விடியல் லவ்ஸ் மேகன்.”, என்றதில் மெலிதாய் சிரித்திருந்தாள்.
“பட் என் கோவம் இன்னும் குறையல..”
“கோவமா ஏன்?”
“நீ என்னை இத்தனை நாள் உன் கன்ட்ரோல்ல வைச்சுருந்ததுக்கு.”
“..”
“என்னை உன் கூட பேச விடாம பண்ணதுக்கு, என்னை நீ பார்க்காம இருந்ததுக்கு..”
“மேகன்.. ஐ அம்..”
“டோன்ட் நீட்.”
“மேகன்.. ப்ளீஸ்..”
“சரி விடு. ராஜ்க்கு என்ன சொல்லப் போற?”, என்றதில் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்.
“அதுவும் தெரியுமா?”
“என்னை என்னனு நினைச்சுட்டு இருக்க நீ?”
“..”
“இதெல்லாம் தெரிஞ்சுக்காம இன்னைக்கு கார் எப்படி வந்தது உனக்கு? தினமும் எப்பவும் நீ என் கண் பார்வையில் தான் இருக்க.”
“அப்பாகிட்ட என்ன சொல்லட்டும்?”
“உண்மையை சொல்லிடு. என்னைப் பத்தி சொல்றதுனாலும் சொல்லிடு. எனக்கு ப்ராளம் இல்ல.”
“நான் பொறுமையா பேசுறேன் மேகன்..”
“ஃபைன். இனி இப்படி எல்லாம் அழாத.”, என்றவன் தனது வலது கரத்தை அவளது முகத்திற்கு அருகில் வரை கொண்டு சென்று அவளது விழி நோக்கினான்.
அவள் மீதான சிறு தொடுதலுக்கு கூட அவளது அனுமதி வேண்டி நிற்பவன் மொத்தமாய் பெண் மனதை களவாடியிருந்தான்.
விடியல் விழி தாழ்த்தி தனது சம்மத்தை அளிக்க கட்டை விரல் கொண்டு கண்களுக்கு கீழ் அழுந்தத் துடைத்து விட்டான்.
“நேரமாச்சு நான் கிளம்பட்டுமா?”
“போயிட்டு வா. இனி இப்படி தனியா எங்கேயும் போகாத.”, என்றவன் கைப்பேசியை எடுத்து எதோ செய்து விட்டு அவளிடம்,
“பார்த்தி நம்பர் உனக்கு அனுப்பிருக்கேன். உன்கிட்ட இருந்து வர்ற கால் எப்பவும் நான் மிஸ் பண்ண மாட்டேன்.
ஒரு வேளை என்னை கான்டேக்ட் பண்ண முடியலைனால் அவனுக்கு கூப்டு.”
“ம்ம்..”
“பார்த்து போயிட்டு வா..”, என்றவன் ஒரு முறை கரத்தை அழுந்தப் பற்றி விடுவித்தான்.
இடத்திலிருந்து விடியல் எழுந்ததும் மேகனும் எழுந்து கொண்டான். இரண்டடி முன் சென்றவள் அவன் புறம் திரும்பி பார்க்க தனது இடக்கரத்தை நீட்டி விழிகளை மூடித் திறந்து தன்புறம் அழைத்தான்.
எவ்வித தயக்கமும் இன்றி அவனருகில் வந்தவள் இடப்புறம் பக்கவாட்டாய் அணைத்து அவனது மார்பில் தலை சாய்த்திருந்தாள்.
“இன்னுமும் நீ சொல்லல..”, என்றவனின் குரல் மெதுவாய் விடியலின் காதருகில் ஒலிக்க தயக்கமாய் தலையை மட்டும் நிமிர்த்தியவள் அவனது பார்வையில், மெதுவாய் தன்னை விலக்கிக் கொண்ட படி,
“விடியல் லவ்ஸ் மேகன் ஃபார்எவர்..”, என்று புன்னகைத்து தலை குனிந்து கொண்டாள்.
“பெங்களூர் சிட்டியில் 2026ல் இதை உன்னை சொல்ல வைக்குறதுக்கு எனக்கு இவ்வளவு மாசம் ஆகிருக்கு!”
“உங்களவு தைரியம் எனக்கு இல்ல.”
“இனி இருக்கும். மிஸர்ஸ் மேகன் ஆனப்பறம் இன்னமும் அதிகமா இருக்கும்.”
“வரேன் மேகன் டேக் கேர்..”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்து அவள் கதவு திறந்து வெளியே செல்லும் வரை பார்த்திருந்தான்.
இந்த பத்து நாட்கள் இருந்த எரிச்சல் எல்லாம் மொத்தமாய் தணிந்ததைப் போன்று இருந்தது மேகனுக்கு.
கோபத்திற்கு காரணமானவளே அதற்கு மருந்துமாகிப் போயிருந்தாள்.
அவள் தனியாய் கிளம்பியிருக்கிறாள் அதோடு இப்படி ஒரு பிரச்சனை என்று மேகனிற்கு தெரிய வந்ததுமே அப்பகுதியில் இருந்த பேட்ரோலுக்கும் அழைக்கச் சொல்லியிருந்தான்.
விடியல் தனக்கு அழைப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை எனவே நிலைமை கை மீறினால் போலீஸ் உதவட்டும் என்று நினைக்க விடியல் எண்ணில் இருந்து அழைப்பு வந்த நொடி மிக மெலிதான புன்னகை அவனிடத்தில்.
அந்த குரலில் அவனது பெயர் அவ்வளவு பிடித்தது அவனுக்கு.
தனக்கான மரியாதைக்கும் கௌரவத்திற்கும் முக்கியத்துவம் பெரிதும் கொடுப்பவனுக்கு அவளின் ஒருமை விழிப்பு உள்ளுக்குள் பெரும் பரவசத்தைக் கொடுக்கிறது.
வந்தவள் உரிமையாய் தன் கரத்தை அவனிடத்தில் கொடுத்தது மிகவும் பிடித்தது. அந்த கைகளின் மென்மை அவனுக்கு இதத்தைக் கொடுத்தது.
முதன் முதலில் அத்தனை நெருக்கத்தில் ஒரு பெண்ணின் ஸ்பரிசம். ஏதோ ஒரு பெண் என்பதை விட தன்னவளின் அருகாமை மனதை வெகுவாய் அமைதிப் படுத்தியது.
அந்த நேரத்து ஆறுதலாய் விடியலுக்கு அவனது லேசான அணைப்பு தேவைப்பட்டாலும் அவனைப் போலவே அவனது அனுமதி வேண்டி அவள் பார்த்த பார்வை இருவருக்குமான நெருக்கத்தை இன்னும் அதிகரிப்பதாய் இருந்தது.
மேடையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கம் அதிர பேசுபவள் தன்னிடத்தில் விழி தாழ்த்தி மென்குரலில் வெட்கமும் தயக்கமுமாய் நின்றதை அத்தனை ரசித்தான்.
பெண்மையின் மென்மை எல்லோருக்கும் தெரிவதில்லை. அதை யாரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் ஒரு பெண்ணின் மனமே தீர்மானிக்கும்.
அந்த மென்மையான விடியலை இன்று முதன்முறையாக அவன் முழுமையாகப் பார்த்திருந்தான்.
பெண்மைக்கே உரிய அழகல்லவா அது! ஊரையே வெல்லும் ஒருத்தி தன் பெண்மையின் மென்மையைத் தெரியப் படுத்த விரும்புவது அவள் மனதிற்கு நெருக்கமானவனிடத்தில் மட்டுமே.
அந்த மென் பக்கங்கள் வாசிக்கப்படுவதும் புரியாமல் கிழித்தெறியப் படுவதும் படிப்பவரின் மனநிலையைப் பொறுத்தது என்பது வேறு விஷயம்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
10 comments
https://youtube.com/shorts/GY5OYrHm7Mw?si=f4NXgWXhWLgjn6KH
😃
Akka ena song athu? Link vera etho open aguthu..
Oorula unakku oru medai.. somg
Lovely ❤️❤️❤️❤️
Avlo dha paa Meg kavuthutan 🤩❤️ vidiyal loves meghan semma ponga ❤️
Lovely ud ma 💞💞💞💞💞
Lovely 💜 விடியல் குழப்பம் தீர்ந்து மேகன்கிட்ட வந்துட்டா… 🥰
Nice
விடியல் ❤️ மேகன்
மேகன் loves விடியல்
ரெண்டுமே😍
Super💕