771
“குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?”
இரண்டு மூன்று நாட்கள் விடியலிற்கு சாதாரணமாய் செல்வது போல தான் தோன்றியது.
மேகன் என்பவன் அவளது வாழ்க்கைக்குள் வருவதற்கு முன்பிருந்த படி அனைத்துமே இருப்பதாய் நம்பிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அலுவலகத்தில் விஜய்க்கும் வீட்டில் இளங்கோவிற்கும் அவள் எதையோ மறைப்பதற்காக தன்னைத் தானே அதிக உற்சாமாய் காட்டிக் கொள்வது நன்றாகவே புரிந்தது.
விஜய்க்கு அதைக் கேட்கும் அளவிற்கு உரிமை இல்லை. இளங்கோவிற்கு கேட்கும் அளவு தைரியம் இல்லை.
ஏதோ ஒன்று மகளை வருத்துறதோ என்று நினைத்து நினைத்து கவலைக் கொண்டார்.
அங்கு மேகனோ கண்ணில் படுபவரை எல்லாம் கடித்துத் துப்பாத குறை தான்.
அனைத்திலும் ஒரு எரிச்சலும் கோபமும் இயல்பாகவே வெளிப்பட்டது. தம்பிகள் மூவரும் அண்ணனின் அறைப் பக்கம் செல்வதற்கே பயந்தனர்.
“என்ன டா இப்படி கத்துறாரு?”
“எனக்கும் புரியலை. சின்ன விஷயம் தான் அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனோ தெரியலை.”
“சைத்தா நீ போய் என்னனு கேளு..”
“ஏன் என் காது இரண்டையும் கடிச்சுத் துப்பவா?”, என்றதில் மற்ற இருவரும் சிரித்தனர்.
இதற்கிடையில் தொழில் முறையிலும் மேகனுக்கு விரும்பத்தகாத படி ஒரு நிறுவனம் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்க அது ஒரு பக்கம் அவனின் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தது.
“பார்த்தி அவனுங்களுக்கு என்ன பிரச்சனை? இந்த டீல் நமக்கு தான் வரும்னு தெரிஞ்சும் என்ன ட்ரை பண்றாங்க?”
“சார்…”
“நீ வேற இழுக்காம சொல்லித் தொலை..”
“அவங்க சின்ன கம்பெனி தான் ஆனால் நம்மளை விட கம்மியா கோட் பண்ணிருகாங்க. அதுவுமில்லாம..”
“என்ன?”, என்றவன் பல்லைக் கடித்தான்.
“மேம்க்கு அந்த கம்பெனியோட ஓனர் பையனை கல்யாணம் பண்ணி வைக்க பேச்சு வார்த்தை நடக்குது.”, என்றதில் சட்டென சிரித்திருந்தான் மேகன்.
“வாட் கம் அகெயின்?”
“மேம்க்கு தெரியுமானு தெரியலை பட் அவங்க அப்பா பேசிருக்கார்.”, என்றதில் யோசனையாய் மேசையைத் தட்டிய படி அமர்ந்திருந்தான் மேகன்.
“சார்..”
“..”
“மேம் கால் பண்ணாங்களா?”
“இல்ல..”
“நீங்க போன் பண்ணீங்களா?”
“நோ..”
“பேசிப் பார்க்கலாமே சார்..”
“அவளோட குழப்பத்தை தெளிவு படுத்திக்க தான் இந்த அமைதி பார்த்தி..”
“ஆனா அவளே திரும்பி வரணும். வருவா..”
மேகனின் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த பார்த்திபன் மெலிதாய் புன்னகைத்தான்.
அந்த நிறுவனத்தின் மீது இருந்த எரிச்சல் இந்த விஷயத்தைக் கேள்விபட்ட பின் கொலைவெறியாகவே மாறியிருக்க அந்த டென்டரைத் தானே கைப்பற்ற அனைத்து வேலைகளையும் முடித்திருந்தான் மேகன்.
பத்து தினங்கள் கடந்திருந்த நிலையில் விடியலுக்கு மனம் மிகவும் சோர்ந்து போனது.
இரவானால் கைப்பேசியைத் தன்னருகிலேயே வைத்துக் கொண்டு விழித்திருந்தாள்.
அவர்களது உரையாடல்கள் ஒவ்வொன்றாய் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன.
அவனது அந்த பார்வையும் அவனது வாசனையும் பெண்ணவளின் நினைவுகளில் இருந்து கொண்டேயிருந்தது.
இந்தளவு அவன் என்னை ஏன் தொந்தரவு செய்கிறான் என்று யோசித்து யோசித்து தலை வலி எடுத்தது தான் மிச்சம்.
மேகன் லவ்ஸ் விடியல் பலமுறை காதுக்குள் ஒலித்தது.
அவனைப் போல ஏன் தன்னால் மனதை வெளிப்படுத்த முடியவில்லை என்று நினைக்க நினைக்க தன் மீதே கோபமாய் வந்தது.
எதை எதையோ நினைத்து பயப்படுபவளுக்கு அதற்கு பதில் அவனை முற்றும் முழுதுமாய் நம்பி விட்டால் போதும் அவன் பார்த்துக் கொள்ளுவான் என்பது புரியாதது தான் பரிதாபம்.
காலையில் அலுவலகத்தில் தனதறையில் இருந்தவளை இளங்கோ தனதறைக்கு வருமாறு அழைக்க அங்கு சென்றாள்.
புதிதாய் ஒருவன் அமர்ந்திருக்க மரியாதை நிமித்தமாய் சிறிது புன்னகைத்து தந்தையைப் பார்த்தாள்.
“சின்னு.. இது ராஜ். நம்ம HiTech கம்பெனியோட ஓனர்.”
“ஓ ஹாய் நைஸ் டு மீட் யூ..”, என்றவள் சிநேகமாய் கை குலுக்க அவனும் புன்னகை முகமாய் கரம் குலுக்கினான்.
“இவங்க அப்பாவும் நானும் நல்ல ப்ரெண்ட்ஸ் டா. உனக்கு கூட தெரியுமே நம்ம அரவிந்த் அங்கிள்..”
“ம்ம் ஆமா பா.. இரண்டு மூணு கான்ப்ரென்ஸ்ல நான் கூட பார்த்துருக்கேனே.”
“ராஜ் இப்போ தான் யூஎஸ்ஸில் இருந்து இங்கே வந்துருக்கார். சோ அவருக்கு பெங்களூர் அண்ட் இங்கே பிசினஸ் எல்லாம் செட் ஆகலை இன்னும்.
உன்னோட ப்ரீ டைம்ல நீ கொஞ்சம் அவருக்கு ஹெல்ப் பண்ணினா நல்லாயிருக்கும்.”
“அதுக்கென்ன ப்பா.. பண்ணிட்டா போச்சு. உங்களுக்கு எப்போ எந்த டவுட்னாலும் எனக்கு சொல்லுங்க ராஜ்.”
“ஷுவர் விடியல். அண்ட் உங்க நம்பர்..”, என்றதில் விடியல் அவளது தொழில் எண்ணைக் கொடுக்க இளங்கோ அதைக் கவனித்தும் அமைதியாய் இருந்தார்.
“ஓகே ராஜ் எந்த ஹெல்ப்னாலும் கேளுங்க ஐ அம் ஹேப்பி டு ஹெல்ப்..”, என்றவள் இருவரிடமும் விடை பெற்று வெளியேறி இருந்தாள்.
மனமெங்கும் ஒருவித குழப்பமும் அசௌகரியமும். தந்தை இப்படியெல்லாம் யாரையும் அவள் முன் நிறுத்துபவர் அல்ல.
இது உண்மையாகவே தொழில்முறை நட்பா? அல்லது தந்தையின் மனதில் வேறேதும் எண்ணம் உள்ளதா என்று குழம்பினாள்.
அந்த நேரம் விஜய் ஒரு கோப்பில் கையெழுத்து வாங்க அவளது அறைக்குள் வர கையெழுத்து போட்டவள் தயக்கமாய் விஜயை ஏறிட்டாள்.
“என்ன விடியல்? எதோ கேட்க நினைக்குறீங்க?”
“விஜி.. அப்பா ரூம்ல ஒருத்தர்..”
“ராஜ் சாரைப் பத்தி சொல்றீங்களா?”
“ம்ம்..”
“ரொம்ப நல்ல மாதிரி இருக்கார். உங்க அப்பாவோட சாய்ஸ் தப்பாகுமா?”, என்றதில் பெண் மனதில் பெரும் அதிர்வு.
“என்ன சொல்றீங்க?”
“என்னாச்சு விடியல் ஏன் டென்ஷன்?”
“விஜி நீங்க என்ன சொல்றீங்க? அப்பா அவரை..”
“உங்ககிட்ட சார் எதுவும் சொல்லலையா?!!”
“!!”
“சாரி நான் தான் ஒரு ஆர்வத்தில் உளறிட்டேன்..”, என்றதில் தலையில் கை வைத்து விட்டிருந்தாள் விடியல்.
“விடியல் நீங்க ஓகே தான?”
“..”
“இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லையா?”
“…”
“யாரை.. யாரையாவது விரும்புறீங்களா?”, என்றதில் பட்டென தலை நிமிர்த்தி விஜயைப் பார்த்திருந்தாள்.
“சாரி.. ஜஸ்ட் கேட்டேன்..”
“அதெல்லாம் இல்ல..”
“கொஞ்ச நாளாவே நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க விடியல். மே பி சாரோட இந்த முடிவுக்கு அது கூட காரணமா இருக்கலாம்.”
“நான் எப்பவும் போல தான் இருக்கேன் விஜி.”
“உண்மையை சொல்லணும்னால் எப்பவும் போல இருக்குற மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க..”
“!!”
“நான் தான் தேவையில்லாம யோசிக்குறேனோனு நினைச்சேன். மே பி சாரோட முடிவுக்கும் அது காரணமா இருக்கலாம்னு தோணுது.”
“..”
“சாரி ஒரு ப்ரெண்டா உங்களுக்கு புரிய வைக்கணும்னு தோணிச்சு தப்பா எடுத்துக்காதீங்க..”
“விஜி என்னைக்கும் நீங்க எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் தான். இவ்வளவு ஃபார்மலா எல்லாம் பேசாதீங்க..”
“தேங்க்ஸ் விடியல்.. சீக்கிரமே அப்போ கல்யாண வேலையை ஆரம்பிக்கணும். ஹேப்பியா இருங்க..
அண்ட் நான் உங்ககிட்ட சொன்னதை சார்ட்ட சொல்லிடாதீங்க..”, என்றவன் புன்னகைத்து வெளியேறியிருந்தான்.
விடியலுக்கோ மனம் படபடப்பாய் இருந்தது. இருக்கும் மனநிலையில் இதென்ன புது குழப்பம் என்று நினைத்து தனக்குள்ளேயே தவித்தாள்.
தந்தையிடம் நேராகச் சென்று பேசி விடலாமா என்று யோசித்தவளுக்கு அவர் காரணம் கேட்டால் என்னவென்று சொல்வது என்ற யோசனை வந்தது.
மதியத்திற்கு மேல் அவளால் தன்னையே சமாளிக்க முடியாத நிலையில் தந்தையிடம் கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.
திடீரென வந்து நின்ற மகளைப் பார்த்த வாசந்தி என்னவென விசாரிக்க கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாதவளாய் அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.
“என்ன டி என்னாச்சு?”
“ம்மா.. அப்பா இன்னைக்கு ஒருத்தரை அறிமுகப் படுத்தினாங்க..”
“சரி.. அதுக்கு..”
“அப்பா இப்படியெல்லாம் பண்ண மாட்டாறே.. என்ன மா விஷயம்.. எனக்கு மனசே சரியில்ல..”
“அடி லுசுப் பொண்ணே.. இதுக்கு போய் அழுது என்னைப் பயமுறுத்துவியா டி. என்ன காலம் பூரா இப்படியே எங்ககிட்ட செல்லம் கொஞ்சியே ஓட்டிரலாம்னு இருக்கியா?”
“…”
“நீ இன்னும் குழந்தை இல்ல சின்னு. காலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்கணும். எங்களுக்கும் பொறுப்பை முடிக்கணும்னு எண்ணம் இருக்காதா..”
“ம்மா.. அதுக்காக..”
“இங்கே பாரு உன்னைப் பத்தி தெரிஞ்சு தான் அப்பா விவரத்தை உன்கிட்ட சொல்லவே இல்ல.
நீ ஜஸ்ட் பேசிப் பாரு உனக்குப் பிடிச்சால் தான் மத்ததெல்லாம்.
அவங்கிட்டேயும் அப்பா தெளிவா பேசிட்டார். என் பொண்ணுக்கு பிடிச்சால் தான் மேற்கொண்டு பேசலாம்னு. அவ்ளோ வாய் பேசுறவளுக்கு கல்யாணத்தை நினைச்சு எதுக்கு டி பயம்.”
“கொஞ்ச நாள் போகட்டும் மா…”
“இங்கே பாரு இதுவே இன்னும் நீங்க பேசி பிடிச்சு, இரண்டு வீட்டுகாரங்களுக்கும் ஒத்து வந்து எவ்வளவோ இருக்கு டி.
என்ன நாளைக்கேவா கல்யாணம் நடக்கப் போகுது.”, அதற்கு மேல் என்ன கூறவெனத் தெரியாமல் அமைதியாகி விட்டாள் விடியல்.
விஷயம் அறிந்ததில் இருந்து ஒருவன் தான் மனதை மொத்தமாய் ஆக்கிரமித்திருக்கிறான்.
அனைத்தையும் அவனிடத்தில் ஒப்படைத்து விட்டு அவனது கையை இறுகப் பற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் மீண்டும் மீண்டும் எழுந்தது.
மாலை தந்தை வந்த பின் அவரிடமும் பேசி எப்படியாவது இதை நிறுத்தி விடலாம் என்று பார்க்க அவரும் வாசந்தி கூறியதையே வேறு மாதிரி கூறினார்.
தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்று தவித்தவளுக்கு அவள் மனதை அவளே ஒழுங்காய் புரிந்து கொள்ளவில்லை என்பது புரியாமல் போனது தான் வேடிக்கை.
இதற்கிடையில் ராஜ் விடியலிடம் பேச இருமுறை முயற்சி செய்ய சாதாரணமாய் கூட விடியலால் அவனிடம் இரண்டொரு வார்த்தை பேச முடியாமல் போயிருந்தது.
என்னவோ வாழ்க்கையே வெறுமையும் எரிச்சலும் மண்டிக் கிடப்பதான எண்ணம்.
யாரோடும் பேசப் பிடிக்காமல் விஜயையும் அழைக்காமல் டிரைவரை காரை எடுக்கச் சொல்லி கிளம்பியிருந்தாள்.
வெகு நேரமாய் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றை பார்த்ததும் டிரைவரை வண்டியை நிறுத்துமாறு கூறி ஒரு காபி குடித்து வரலாம் என்று இறங்கியிருந்தாள்.
“மேம் விஜி சாரும் இல்ல.. நான் வேணால் போய் வாங்கிட்டு வரேனே.”
“இருக்கட்டும் ணா.. ஒரு காபி தான.. அதுவும் இப்போ பெருசா கூட்டமும் இல்ல.”, என்றவள் அவரைப் பேச விடாமல் உள்ளே நகர்ந்திருந்தாள்.
காபியை வாங்கிக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தவளைப் பார்த்த வண்ணம் கல்லூரி இளவட்டம் ஒன்று பேசிக் கொண்டிருக்க ஆணும் பெண்ணுமாய் இருந்தவர்கள் தன்னைக் கவனித்து விட்டார்கள் என்பதை உணர்ந்தவளாய் வேகமாய் காபியை முடித்து விட்டு கிளம்ப எத்தனித்தாள் விடியல்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
6 comments
💞💞💞💞💞
அருமையான பதிவு 👍
Nice
Nice👍
Enna confusion
நைஸ் அப்டேட்…