மலர்-35

by ஸ்ரீ
3 comments 410 views
A+A-
Reset

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்

மு.வ விளக்க உரை: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்த முகுந்தனுக்கு தம்பியின் குறுஞ்செய்தியை திறக்க தகப்பனும் தன்னவளும் இருந்தப் புகைப்படத்தைப் பார்த்து இருந்த பதட்டமெல்லாம் காணாமல் போயிருந்தது.

சிறு வயதில் தந்தை ஊட்டிவிட்ட நியாபகம். அதன் பின் அவர்களும் கேட்டதில்லை. அவரும் தந்ததில்லை. இன்று உரிமையாய் தன் மருமகளுக்கு உணவூட்டும் மாமானாய் அவரைப் பார்த்த போது அத்தனை மகிழ்ச்சி.

ஒரு வகையில் பலராமும் உறவுகளுக்காக ஏங்கியிருக்கிறார் என்பது மங்கை வீட்டிற்கு வந்து சென்ற பின்னான நாட்களில் நன்றாகவே தெரிந்திருந்தது முகுந்தனுக்கு.

அடுத்ததாய் மங்கையிடமிருந்து குறுஞ்செய்தி அவனது தாய் பாட்டியின் மடியில் படுத்திருக்க மறுபுறம் கலைச்செல்வி படுத்திருந்தார்.

அத்தனைக்கும் காரணமான அவனின் மோகினியை அப்போதே தூக்கி வந்து யாருக்கும் கொடுக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

மங்கைக்கு அழைத்தவன் அவள் அழைப்பை ஏற்றதும் ஒன்றும் பேசாமல் அழுத்தமாய் இதழ் பதித்தான். இதைச் சற்றும் எதிர்பாராதவளுக்கு முகமெல்லாம் புல்லரித்துப் போனது.

எப்போதுமே அன்போ காதலோ எந்தவித தயக்கமுமின்றி அவள் தான் வெளிக்காட்டுவாளே தவிர ஒரு போதும் முகுந்தன் வரம்பு மீறி அவளிடத்தில் பேசவே மாட்டான்.

அப்படிப்பட்டவனின் இந்த முத்தம் அவனது மனநிலையைத் தெளிவாய் உணர்த்த பெண்ணவளின் முகத்திலும் அழகான புன்னகை.

“உன்னியேட்டா..”

“என்னோட வந்துரு சக்கரே. எனக்கு நீ இப்போவே வேணும். “

“தங்கம்…”

“இ சுந்தரி குட்டியோட மொத்த ப்ரியமும் எனக்கு மாத்திரமே வேணும். யாருக்கும் கொடுக்க வேண்டாம். என்ட பொன்னு மலரு டி நீ.”

“என்னாச்சு தங்கமே… ரொம்பவே சந்தோஷமா இருக்கியா?”

“ம்ம் ரொம்ப ரொம்ப எல்லாவருக்கும் எல்லாம் கிட்டி. நீ என்கிட்ட வரு சக்கரே. ஐ நீட் யூ பேட்லி.”

“!!”

“இறுக்கி அணைச்சு ஒரு முத்தம் தரணும் போலுண்டு. காத்து கூட நமக்கு நடுவில் வரக் கூடாதுனு தோணுது. நீயும் நானும் மாத்திரமா ஜீவிக்கணும்னு தோணுது மலரே. கல்யாணம் கழிச்சால் மலருக்கு நான் அல்லே முதல் ப்ரையாரிட்டி. அவளட சிநேகம் பிரேமம் எல்லாம் எனக்கு மாத்திரமேயல்லே.”

“உன்னியேட்டா. ஏன் என்னென்னவோ பேசுற. நான் போனை வைக்குறேன்.”

“என்ட பொன்னு மலருக்கு நாணமுண்டோ?”

“ஏட்டா…”

“எனக்கு அறியாம் உன்னை ரொம்ப டிஸ்ட்ரக்ட் பண்றேன்னு. ஆனால் ஐ அம் ஹெல்ப்லெஸ் மலரே..”

“…”

“ஞான் என்டே பாரியாயே ஒரு பாடு சிநேகிக்குன்னு மலரே.”

“லவ் யூ தங்கமே..”

“இன்னொரு தடவை பரா..”

“உன்னியேட்டன் இத்தனை ரொமெண்டிக்குனு நினைக்கலை.”

“இந்த மலருக்காக தன்னே இத்தனை வருஷ காதலும் காத்து கிடந்தது. இனி அது மொத்தமாய் அவளுக்கு போகுறது தானே நியாயம்.”

“உன் நியாயமெல்லாம் போதும் தங்கமே. என்னை என்னவோ பண்ற. நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன். நீ ரொம்ப மோசம்.”, என்றவளின் சிணுங்கலில் தனது புருவத்தை வருடியவனாய் அங்கு புன்னகைத்து அமர்ந்திருந்தான்.

“சரி பரா என்ன சொல்லணும்?”

“சொல்லலாம். அதுக்கு முன்னாடி எனக்காக ஒரு பாட்டு பாடி ரொம்ப நாள் ஆச்சு தான? பாடு தங்கம்.”

“பாடினால் பதிலுக்கு எனக்கு எந்தா கிட்டும்?”

“…”

“சொல்லு மலரே..”

“உன்னியேட்டன் என்ன கேட்டாலும் நான் தரேன்.”

“உரப்பானோ?( நிஜமாவா)”

“நீ பாடவே வேண்டாம் போ.”

“எடி சொல்லு கண்டிப்பா பேச்சு மாற கூடாது?”

“ம்ம் சரி..”

சொல்லப்போனால் என் நாட்களை..

வண்ணம் பூசி தந்தவள் நீதான்..

துள்ளல் இல்லா  என் பார்வையில்..

தூண்டில் மீனாய் வந்தவள் நீதான்..

எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..

எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..

“தேங்க் யூ தங்கமே..”

“எனக்கு என்ன வேணும்னு நேரில் சம்சாரிக்கும் போ சொல்றேன். கண்டிப்பா மறக்க மாட்டேன் சரியா?”

“நீ ரொம்ப ரொம்ப பேட் பாய் உன்னியேட்டா.”

“இருந்துட்டு போறேன் ஐ லவ் டு.”, என்றவன் மேலும் மேலும் அவளை சிவக்க வைக்க, சொல்ல வந்ததில் பாதியை மறந்தே போயிருந்தாள் மங்கை.

மறுநாள் காலையில் மங்கை கீழே வந்த நேரம் உண்மையாகவே கிருஷ்ணன் தான் சமைத்துக் கொண்டிருந்தான்.

“ஹே கிச்சு மாமா நான் சும்மா தான் சொன்னேன் நீ ஏன் சமைக்குற?”

“என்ட அண்ணி கேட்ட பிறகு பண்ணாம எப்படி. கேரளத்து ஸ்பெஷல் புட்டும் கடலைகறியும்.”

“ஆகா ஆகா சூப்பர்.”, என்றவள் அடுப்பை எட்டிப் பார்த்துவிட்டு ஹாலிற்குச் செல்ல இனியன் அவளை நோக்கி வந்திருந்தார்.

“பாப்பா..”

“சொல்லு சித்தப்பா..”

“இதை அவகிட்ட கொடுத்துரு.”

“எதை எவகிட்ட கொடுக்கணும்?”

“காலங்காத்தாலேயே ஆரம்பிக்காத. இது நம்ம பிரேமா விலாஸ் அல்வா உன் அத்தைக்கு கொண்டு போய் கொடு.”

“ஓ கதை அப்படி போகுதா??!”

“…”

“நீ போய் கொடுத்தா இன்னும் சந்தோஷப்படுவா தான?”

“உன்கிட்ட சொன்னேன் பாரு. நீ கொடு இல்ல கொடுக்காம போ. நான் கிளம்புறேன்.”, என்றவர் சென்றுவிட சிரிப்பை அடக்கியவளாய் பார்வதியைத் தேடிச் சென்றாள்.

“அத்தே..”

“வா டி என் மருமகளே…”

“நைட்டெல்லாம் உன் அம்மாவோட கொஞ்சினதில் என்னை மறந்துட்டு இப்போ ரொம்ப தான்..”

“கண்ணு வைக்காத டி..”

“ம்ம் வைச்சாங்க. சரி உனக்கு நான் ஒண்ணு தரேன். பதிலுக்கு நீ என்ன தருவ சொல்லு?”

“உனக்கு தான் என் பையனையே தரேனே அதைவிட என்ன டி வேணும்?”

“நீ பொழச்சுக்குவ அத்தை.”, எனும்போதே பலராம் குளித்து வெளியே வந்தார்.

“ஹாய் மாமா. உங்க பொண்டாட்டி ஜொலிப்பில் அப்படியே கண்ணு கூசுது இல்ல?”

“ஆமா மோளே நானே கண்ணாடி போட்டுக்கலாம்னு தான் இருக்கேன்.”, என்றதில் பார்வதி கணவனை முறைத்தார்.

“வந்ததுக்கு ஒரு நாரதர் வேலை பார்த்தாச்சு. அத்தை இந்தா உனக்கு ரொம்ப பிடிக்குமாமே?!”, என்றவள் நீட்டியதைப் பார்த்தவர் மங்கையை ஏறிட,

“எல்லாம் உங்க பாசக்கார அண்ணன் தான். அவரு கொடுக்க மாட்டாரம் நான் தான் தூது.”

“உங்கப்பா வா?!”

“ம்ஹும் சித்தப்பா கொடுத்தார்.”, என்றதும் பார்வதி கணவனைப் பார்க்க அவரும் புன்னகையோடு மனைவியைத் தான் பார்த்திருந்தார்.

 பெண்கள் கனியனுக்கு உணவு எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல மாறனும் கார்த்தியும் வீட்டிற்கு வந்திருந்தனர். பலராமை அழைத்துக் கொண்டு தாமோதரன் அவர்களது ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தார்.

கார்த்தியும் மாறனும் குளித்து கீழே வர மலர் திருமா கன்னிகாவோடு கிருஷ்ணனும் உணவு மேசையில் இருந்தான்.

“வாங்க வாங்க இன்னைக்கு நம்ம சின்ன மாமா சமையல். செம டேஸ்ட் தெரியுமா?”

“அண்ணி இந்த மாமா ரொம்ப வயசான ஃபீல் கொடுக்குதே.”

“நீ என்னை அண்ணினு கூப்பிடும் போது எனக்கும் அப்படி தான் இருக்கு வாட் டு டூ.”

“…”

“ஆமா நீ நம்ம மாறனோட நண்பேன் டா ஆகவே இல்லையே”, என்றதில் மிரண்டவனாய் அனைவரையும் பார்க்க கார்த்தியும் திருமாவும் சத்தமாகவே சிரித்திருந்தனர்.

“உன்னை மொத்தமா டேமேஜ் பண்ணி வைச்சுருக்காக டா மாறா?”

“மாமங்கை!!!”

“ஹி ஹி நீ டெரர் மோட்டில் இருந்த காண்டில் ஒரு ஏழெட்டு பிட் போட்டுட்டேன் மாறாண்ணே.”

“கிச்சு மாமா அண்ணன் நம்ம பய. நீ இப்படியெல்லாம் ரியாக்ஷன் கொடுத்து என்னை மாட்டி விடாத..”, என்றவள் கிச்சுவை கண்ணை உருட்டி மிரட்டினாள்.

சில நிமிடங்களில் சிறியவர்கள் தங்களுக்குள் சிநேகமாகி விட அதைப் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. அன்றைய நாள் இப்படியாய் நகர மாலை  உன்னி முகுந்தனின் பட ப்ரமோஷன் வீடியோ யூடியூப்பில் வெளியாகியிருந்தது.

அதைப் பார்த்திருந்தவளுக்கு தன்னவன் என்ற பெருமை மனதை நிறைத்தது. அதைவிட தன்னிடம் அத்தனை பேச்சுகள் பேசுபவன் அமைதியாய் ஒரு புன்னகையோடு அங்கு இருப்பதைப் பார்த்தவளுக்கு புன்னகை அரும்பியது.

நேர்காணல் எடுக்கும் பெண் கேட்கும் கேள்விகளைக் கவனித்துக் கொண்டிருந்த மங்கைக்கு அப்போது தான் புரிந்தது. படத்தை கடந்து அவனைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகளை விளையாட்டாய் கேட்க ஆரம்பித்திருந்தனர்.

“உன்னி முகுந்தன் சிங்கிள் ஆர் கமிட்டட்?”, என்றதற்கு மென்னகைத்தவனின் முகத்தில் தனிப்பொலிவு தெரிந்தது.

“இப்போதைக்கு சிங்கிள் தான்.”

“அப்போ ப்யூச்சரில் மிங்கிள் ஆக வய்ப்பு இருக்கு?”

“இதென்ன நான் எப்படியும் கல்யாணம் கழிக்கும் தான்.”

“வரப்போற வைஃப் எப்படி இருக்கணும்னு சொன்னால் எங்க பொண்ணுங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே..”

“ஐயோ என்னை ஏன் வம்பில் மாட்டி விடுறீங்க?”

“உங்க கேர்ள் பேன்ஸெல்லாம் இதுக்கான பதிலுக்காக எப்படி காத்திட்டு இருப்பாங்கனு உங்களுக்கு புரியலை.” என்றதும் அருகிலிருந்த கதாநாயகி,

“அடப் போங்க இதையெல்லாம் கேட்டு எல்லாரும் டயர்ட் ஆகிட்டோம். இதுக்கு ஒழுங்கான பதிலை மட்டும் நீங்க வாங்கிடுங்க பார்க்கலாம்.”, என்று கிண்டல் செய்து சிரித்தார்.

“..”

“சொல்லுங்க சும்மா, கண்ணு இப்படி பேச்சு அப்படினு எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே?”

“ம்ம் அவளை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்குறதை பார்த்தே அவ சந்தோஷமா இருக்கணும். அப்படி ஒரு பொண்ணை பிடிக்கும்.”

“என்னங்க.. இதெல்லாம் டைனோசர் காலத்துலேயே அழிஞ்சுடுச்சுனு சொல்றதை போய் இப்போ உங்க எதிர்பார்ப்பா சொல்றீங்களே?”

“அதான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.”, என்றவன் புன்னகைத்த முகமாகவே பதிலளித்தான்.

“அட போங்க.. சரி லாஸ்டா ஒரே ஒரு கேள்வி. நீங்க நல்ல சிங்கர்னு எங்களுக்குத் தெரியும். பேன்ஸ்காக இரண்டே இரண்டு வரி பாடினால் நல்லாயிருக்கும்.”

“பாட்டா???!!”

“ஜஸ்ட் இரண்டு லைன் ப்ளீஸ்..”, என்றதில் ஒரு நொடி யோசித்தவன் பின் நிதானமாய்,

அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பார்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி


என்றப் பாடலைக் கேட்டதும் மலர் முகம் மொத்தமாய் சிவந்து போக நேர்காணல் எடுத்த பெண்ணோ எதையோ உணர்ந்து கொண்டவராய் கண்களை விரித்து சூசகமாய் சிரித்திருந்தார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan August 3, 2026 - 3:53 am

💞💞💞💞💞💞💞

suganyavel August 3, 2026 - 4:12 am

Super💕

srichitra August 3, 2026 - 5:53 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode