247
“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
மு.வ விளக்க உரை: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.”
மறுநாள் நல்ல உறக்கத்தில் இருந்தவள் அறைக் கதவு உடைக்கப்படாத குறையாய் தட்டும் சத்தத்தில் தான் எழுந்தாள். மணியைப் பார்க்க ஆறு தான் ஆகியிருக்க இந்தக் காலை நேரத்தில் யார் இப்படி தட்டுவது எனப் பதறிப்போய் கதவைத் திறந்தவளின் முன் கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாய் நின்றிருந்தான் வசந்த்.
“ஏலேய் என்ன இவ்வளவு காலையிலேயே வந்துருக்க என்னாச்சு?”
“மங்கை..மங்கை..”, என்றவனுக்கு அழுகை தான் வந்தது. அவனுக்கு பின் யாரும் இருக்கிறார்களா என்று கவனித்த வண்ணம் தோளைப் பற்றி உலுக்கினாள்.
“என்னனு சொல்லித் தொலை டா? என்னாச்சு?”
“நான்.. டீமில் செலெக்ட் ஆகிட்டேன் டி. என்னோட மேட்ச் ரெக்கார்ட்ஸ் அப்பறம் கடைசியா நான் விளையாடினதெல்லாம் வைச்சு என்னை ரெக்கமண்ட் பண்ணிருக்காங்க..”, என்றதில் மங்கைக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை.
அவனை விட அதிகபட்ச அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலுமாய் வாயடைத்துப் போயிருந்தவளை மேலே வந்த குணவதி தான் நடப்பிற்கு கொண்டு வந்தார்.
“வசந்து இந்தா இந்த இனிப்பை சாப்பிடு. நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணா போகலைலே. கண்ணு விஷயத்தை கேட்டியா?”, என்றதும் தான் உணர்வு பெற்றளாய்,
“டேய் வாழ்த்துக்கள் டா.. எம்புட்டு பெரிய விஷயம். நிஜமா தான் சொல்லுறியா?”
“உன்ட்ட தான் முதல்ல சொல்றேன் இனி தான் அம்மா அப்பாட்டயே சொல்லணும்.”
“பார்த்தியா உன் கஷ்டமெல்லாம் வீண் போகலை. அன்னைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்னலே பண்ணிருப்ப இப்போ.”, என்றவளுக்கு அழுகையாய் வந்தது.
“சாரி மங்கை இனி எப்பவும் அந்த மாதிரி ஒரு முடிவை எடுக்க மாட்டேன்.“, என்றவன் அவளது கால் அருகில் அமர்ந்து விட்டான்.
“லூசு பயலே என்ன டா பண்ற.. நீ வேணா பாரு இந்த உலகமே உன்னைத் திரும்பி பார்க்குமா இல்லையானு. போ போய் அத்தை மாமாட்ட விஷயத்தை சொல்லு முதல்ல.. போ..”,என்றதும் பெண்கள் இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பியிருந்தான்.
தங்களறைக்கு வந்த குணவதிக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போய் இருந்தது. குளித்து வெளியே வந்த முத்துப் பாண்டி மனைவியைக் கவனித்தவராய்,
“குணா?! என்னாச்சு அழறியா?”
“இல்லங்க சந்தோஷத்துல வர்ற கண்ணீர் இது..”
“என்ன சொல்ற டி என்னாச்சு?”
“எம்மவ நிசமாவே அந்த சாமி தான்ங்க. யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காம எல்லாரும் நல்லாயிருக்கணும்னு நினைக்குறாங்க.”, என்றவர் வசந்த் வந்த செய்தியைக் கூற அவருக்குமே மகளை நினைத்து நெகிழ்ச்சியாய் இருந்தது.
“எம்மவ அருமை அவ பிறந்த அன்னைக்கே தெரிஞ்சு போச்சே எனக்கு அவ எல்லாரையும் வாழ வைக்குற மீனாட்சியே தான் குணா.”
“ஆமாங்க இரண்டு நாள் முன்னாடி செல்வி போன் பண்ணிருந்தா நம்ம கார்த்திக்கு அவங்க அத்தை பொண்ணு ஸ்வப்னாவை பிடிச்சுருக்காம்.
மங்கை தான் விஷயத்தை சொல்லிருக்கா போல. என் மகன் அவ்வளவு சந்தோஷமா இருக்கான். இத்தனை வருஷமும் உள்ளேயே வைச்சு மருகிட்டு கிடந்தான் போல எல்லாம் நம்ம மங்கையால தான்.
அவளை எம்மருமவளா ஆக்கிக்குற கொடுப்பனை தான் எனக்கு இல்லாம போச்சுனு ஒரே அழுகைங்க.”
“யாருக்கு யாருனு நாம போடுற கணக்கா நடக்கும். அதுவும் எம்மவளுக்கு ராசா மாதிரி மாப்பிள்ளை தான் வருவான் பாரு.”, என்றவருக்கு மீனாட்சிக்கான சொக்கநாதரை எண்ணி மனம் கனவில் மிதந்தது.
அங்கு மங்கையோ அவனும் வசந்துமாய் இருக்கும் போட்டோவை ஸ்டேட்டஸில் வைத்து பொதுப்படையாய் ஒரு வாழ்த்துச் செய்தியைப் போட்டு விட்டிருந்தாள்.
தன் படப்பிடிப்பு தளத்தில் தயாராகி அமர்ந்திருந்த முகுந்தன் கைப்பேசியைப் பார்த்திருக்க வாட்ஸ்அப்பின் நோட்டிபிகேஷனில் அதைப் பார்த்தவன் முகம் புன்னகையைத் தாங்கியிருந்தது.
“குட் டு சீ யூ போத்”, என்று பதிலனுப்பி விட கண்ணில் பட்டது அவளது வாட்ஸ்அப் புகைப்படம். விமானத்தில் ஒப்பனையின்றி டிஷர்ட் கால்சராயில் பார்த்தற்கு இப்போது தாவணியில் அத்தனை அழகியாய் இருந்தாள்.
தாவணிப் பெண்ணின் அழகிற்கு ஏது குறை. தமிழகத்தின் காற்று சற்று அதிகமாகவே தீண்டியது நம் நாயகனை. புகைப்படத்தையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவனை சிந்தனை கலைத்தது மங்கையிடமிருந்து வந்த அழைப்பு. அதை எதிர்பாராதவனாய் ஒருவித உற்சாக மனநிலையில் அழைப்பை ஏற்றான்.
“குட்மார்னிங் ஹீரோ சார்.”
“மலர் ஒரு பாடு ஹேப்பியானோ?”
“ம்ம் ஆமா ரொம்ப ரொம்ப.. இவ்வளவு சீக்கிரம் எழுந்துடுவீங்களா?”
“அல்லா இன்னைக்கு ஷுட் இருக்கு அதான்.”
“ஓ சரி ஒரு குட் நியூஸ் இல்லை இரண்டு இருக்கு சொல்லட்டுமா?”
“கண்டிப்பா எந்தா விஷயம்?”
“நான் ரஞ்சிக்கு செலெக்ட் ஆகிட்டேன். என் ப்ரெண்ட் ரஞ்சியில் செலெக்ட் ஆகிட்டான்.”
“வாவ் எத்தன பெரிய விஷயம். உங்க இரண்டு பேருக்கும் கங்க்ராஷுலேஷன்ஸ். சோ ஹேப்பி ஃபார் யூ போத்.”
“தேங்க் யூ தேங்க் யூ மெசெஜ் வந்தவுடனே யோசிக்காம போன் பண்ணிட்டேன். உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன். இனி தான் டீம்கிட்ட சொல்லணும்.”
“என்னை இத்தர இம்பார்ட்டண்ட் பெர்சனாக்கியதுக்கு தேங்க் யூ மலரே.”
“இப்படி மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். ஓகே நீங்க வேலையை கவனிங்க. விஷயத்தை சொல்றதுக்கு தான் கால் பண்ணேன் வைச்சுரட்டுமா.”
“ம்ம் ஷெரி பின்னே காணாம்.”, என்றவனுக்கு அன்றைய பொழுது அத்தனை அழகாய் தொடங்கியிருந்தது.
எப்போதும் இல்லாமல் புன்னகையோடு கராவேனில் இருந்து வெளியே வந்தவனை விசித்திரமாய் பார்த்து வைத்தான் முகுந்தனின் மேனேஜர்.
“எந்தா ப்ரவீன்?”
“ஒன்னுமில்லா சேட்டா.”
“பரைய டா?”
“அது நிங்கள் சிரிச்சுட்டு வந்நது…”
“ஒண்ணுமில்லா என் கூட்டுக்காரனோடு சம்சாரிச்சு.. வா போவாம்.”, என்றதில் ப்ரவீனுக்கு இன்னுமாய் ஆச்சரியம்.
முகுந்தனது போனிற்கு வரும் அழைப்பு என்பது அவனது தந்தை தாய் தம்பி அவ்வளவு தானே தவிர அவனது தனிப்பட்ட எண்ணிற்கு வேறு யாரிடமிருந்தும் அழைப்போ குறுஞ்செய்தியோ வந்ததே இல்லை. அப்படியிருக்க நண்பனோடு பேசினேன் என்றது உச்சகட்ட அதிர்ச்சி தான் ப்ரவீனிற்கு.
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அண்ணன்களோடு கதையளந்த படி உணவு உண்டு கொண்டிருந்தாள் மங்கை.
“என்ன டி மாமங்கை அண்ணனுக்கு மாமனுக்குனு எல்லாருக்கும் நல்லது பண்ற என்னை மட்டும் இப்படி விட்டுட்ட பார்த்தியா?”
“உனக்கு எதாவது காதல் கதை இருந்தா சொல்லு மாறாண்ணே நான் பேசுறேன் சித்தப்பாட்ட..”
“உன் அண்ணன் கூட எல்லாம் சுத்தி எனக்கு என்னத்த அமையும் சொல்லு. வீட்டிலேயே பார்த்து யாரையாது தலையில் கட்டினால் தான் உண்டு.”
“எதென்னவோ சரி தான். ஆமா நீங்க எல்லாம் என்னத்தை பிஜி வரை படிச்சீங்க சைட்டு லவ்வு ஒண்ணுமே வா இல்ல?”
“இந்த வீட்டில் நாங்க காலேஜ் போகும்போது முதல் நாள் பண்ண அட்வைஸ் என்ன தெரியுமா?”
“என்னது?”
“காலேஜுக்கு போனோமா படிச்சோமா வீட்டுக்கு வந்தோமானு இருக்கணும். அதைத் தாண்டி எல்லாம் விஷயம் எதாவது வந்துச்சு உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்கங்கிறது தான்.”
“நிஜமாவா சொல்ற?!!! யாரு சொன்னா அப்படி?”
“அவனுக்கு அவங்க அம்மா, எனக்கு எங்கம்மா தான் வேற யாரு சொல்லுவா?”
“அம்மாவும் சித்தியுமா???!!!!”
“எதுக்கு டி இவ்வளவு ஷாக்??”
“எனக்கு அம்முவுக்கெல்லாம் எதுவுமே சொன்னதில்லையே?!!”
“உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆப்ஷனே கிடையாதுனு அர்த்தம்”, என்று கூறிவிட்டு ஆண்கள் இருவருமாய் சிரித்தனர்.
“இதெல்லாம் அநியாயம் ண்ணே.. இப்போ ஒரு வேளை அம்முவுக்கோ எனக்கோ காலேஜில் யாரையோ பிடிச்சு போயிருந்தா என்ன பண்ணிருப்பாங்க?”
“சிம்பிள் சோத்துல விஷம் தான்.”
“அண்ணே!!”
“அட இல்லாத ஒரு விஷயத்துக்கு எதுக்கு இப்போ இம்புட்டு பேச்சு அதை விடு. உன் ப்ரெண்ட் டீமில் செலெக்ட் ஆயிட்டான் . இனி உனக்கே அப்பாயிண்மெண்ட் தந்தா தான் அவனைப் பார்க்க முடியும்.”
“ஹலோ நாங்க எல்லாம் நண்பேன்டா கோஷ்டி ஊருக்கு தான் செலிப்ரட்டி எனக்கு அவன் ஏலேய் வசந்து தான்.”
“ம்ம் ரொம்ப தான் பெருமை..”
“இல்லையா பின்ன நம்ம முக ராசி அப்படி மாறாண்ணே.. காலையிலே கூட என்னோட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு நம்ம ஹீரோ ப்ரெண்ட் மெசெஜ் பண்ணினார்னா பார்த்துக்கோ.”
“சமூகம் பெரிய இடம் போலேயே!”
“இல்லையா பின்ன கேரளா வந்தா யோசிக்காம எங்க வீட்டுக்கு வந்துருனு சொல்லிருக்காருனா சும்மாவா..”, எனும் போதே வசந்த் வந்திருந்தான்.
“வாடா வசந்து உனக்கு நூறாய்சு. அந்த மாறாண்ணே சொல்றான் நீ பெரிய ஆளா ஆனப்பறம் என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்டியாம்.”
“ஏன் ண்ணே இந்த கொலைவெறி உங்களுக்கு?!”
“சும்மா கொளுத்திப் போடுறது தான் டா தம்பி. சரி சொல்லு அப்பறம் எப்போ கிளம்புற? “
“வரப்போற மேட்ச்க்கே கூப்பிட வாய்ப்பிருக்குனு சொல்லிருக்காங்க ண்ணே.. ஆனால் என்ன, சப்ஸ்டிடீயூட்டா வைச்சுருப்பாங்களா இருக்கும். எந்தப் ப்ளேயருக்காவது இன்ஜுரி ஆட முடியலைனால் உள்ளே போற வாய்ப்பு கிடைக்கலாம்னு நினைக்குறேன்.
இத்தனை நாள் பொறுத்ததை விட இனி தான் அதிக பொறுமை இருக்கணும்னு தோணுது.”
“வேணும்னால் சொல்லு நாமளே யாரு கை காலையாவது உடைச்சுருவோம்.”
“கொலை கேஸுல உள்ளே போயிருவேன்ண்ணே..”, என்றதில் மூவருமாய் சிரித்தனர்.
அன்று முழுவதும் வசந்தை விட அதிக உற்சாகமும் மகிழ்ச்சியுமாய் சுற்றித் திரிந்தது மங்கை தான்.
அடுத்த வாரத்திலேயே இராணி டிராபி மேட்ச்சிற்க்காக வசந்த் கிளம்பியிருந்தான். மங்கையும் எப்படியும் ரஞ்சி கேம்பிற்காக செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம்.
ஒவ்வொரு மேட்சும் எங்கெங்கு நடக்குமோ அந்த மாநிலத்திற்கெல்லாம் செல்ல வேண்டியதாய் இருக்கும் என்பதில் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.
அதை விட அவளுக்கு மிகவும் பிடித்தமான சித்திரைத் திருவிழாவும் அதைத் தொடர்ந்து வரும் மீனாட்சியின் திருக் கல்யாணமும்.
ஊரேயே சுற்றித் திரிவாள் அந்த பத்து நாளும். வீட்டில் உணவென்பதே கிடையாது. திருவிழாவில் இருக்கும் சவ்வு மிட்டாய் தொடங்கி வசந்த் மற்றும் அவனது நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதெல்லாம் உண்டு மகிழ்வாள்.
இந்த முறை தான் வசந்த் இல்லாத திருவிழா எப்படியிருக்குமோ என்று யோசிக்கும் போது சற்று வருத்தமாய் கூட இருந்தது.
எனினும் அடுத்த வருடமெல்லாம் அவளே விளையாட்டிற்காக எங்கோ இருக்க வேண்டிய சூழல் வரலாம் தான். இதுதான் எதார்த்தம் என்பதாய் மனதைத் தேற்றிக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
5 comments
hi i am so sad ovvoru thadavaiyum lognin panni vara kastama iruku ponga sis na poren bye 🥺🥺😞😞😞😞 ithule en mbl. vera typing vara mattenkuthu ithana thadaiye thandi vantha barigod potta mathiri 2 time login kudutha than comment box varuthu 😞😞😞😞😞😞 intha sty already na kettuten padikalamnu vantha ivvalavu akkapor enaku mattum ipadi than ah illa ellarukuma🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐
Inuma indha issue iruku ungaluku..😑
Vera yarum ithu solalaye ma ena nu purilaye..😭
Very nice. Yes. ஒவ்வொரு முறையும் login பண்ணி உள்ள போகசொல்கிறது
💞💞💞💞💞💞
Super💕