279
“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
மு.வ விளக்க உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.”
“பரவாயில்லை என்னை தெரிஞ்சுருக்கு உங்களுக்கு!!”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. இரண்டு மூணு படம் தான் பண்ணிருக்கீங்கனாலும் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. இந்த ஓடிடி வந்தப்பறம் மத்த மொழி படங்களும் எல்லாரும் நிறையவே பார்க்குறாங்க இல்ல. நானும் அந்த கேட்டகிரி.”
“தேங்க் யூ சோ மச். வல்ர சந்தோஷமானு..”
“உங்க நடிப்பை விட இந்த தமிழும் மலையாளமும் ரொம்ப நல்லாயிருக்கு.”, என்றவள் சிரித்தாள்.
“தமிழ் புரியும் பட்சே பேசுறது கொஞ்சம் கஷ்டமாயிட்டுண்டு.”
“எனக்கும் மலையாளம் கொறைச்சு புரியும் ஆனால் பேச வராது..”
“அப்பறம் நீங்க என்ன பண்றீங்க?”
“நான் டிகிரி முடிச்சுட்டு இந்தியன் டீமில் விளையாடணும்னு வெறியோட காத்துட்டு இருக்கேன்.”, என்று கூறி சிரித்ததும் அவன் கண்களில் ஒரு ஆச்சரியம்.
“வாவ் கிரிக்கெட் ப்ளேயரா அடிப்பொலி.”
“சின்ன வயசில் இருந்து ரொம்ப இஷ்டம். நேத்து தான் ஸ்டேட் லெவல்ல செலெக்ட் ஆகிருக்கேன். அடுத்து ரஞ்சி ட்ராபி தான்.”
“அடடா நான் ஒரு ப்யூச்சர் செலெப்ரிட்டியோட பேஷிட்டு இருக்கேனா?!”
“கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா! அப்படி பார்த்தா நான் இப்போவே செலெப்ரட்டியோட தான பேசிட்டு இருக்கேன்.”, என்றவள் எதோ ஒரு விதத்தில் ஆணவனின் மனதை அசைத்து தான் பார்த்தாள்.
கண்டதும் காதல் எல்லாம் இல்லை எனினும் நட்பைக் கடந்த ஒருவித ஈர்ப்பு. அந்தக் கதைபேசும் குண்டு குண்டு கருவிழிகள் அதன் காரணமாக இருக்கலாம்.
“ஒரு செல்பி எடுத்துக்கலாமா? எங்க வீட்டில் எல்லாருக்கும் நீங்க என் ப்ரெண்டுனு காட்டுவேன்.”
“ஓ ஞான் மலரோட ப்ரெண்டோ?”
“இல்லையா அப்போ?!”, என்றவள் பாவமாய் உதடு பிதுக்க பற்கள் தெரிய சிரித்தவனாய் அவளது கைப்பேசியை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்தான்.
“எனக்கும் ஷேர் செஞ்சால் நானும் ப்யூச்சரில் உலகத்துக்கு உங்க ப்ரெண்ட்னு காமிச்சு கொடுக்கும்.”
“பரவாயில்லை நான் கூட சினிமா மக்கள் எல்லாம் சாதாரணமா எல்லாரோடயும் பேச மாட்டாங்கனு நினைச்சுருக்கேன். நீங்க நல்லா பேசுறீங்களே..”, என்றவள் அவள்போக்கில் தனது கைப்பேசியை அவனிடம் கொடுக்க தனது எண்ணை அதில் சேமித்து அந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்து விட்டு திருப்பிக் கொடுத்தான்..
“நான் கொஞ்சம் காம் டைப். பட்சே உன்னோட பழக கம்போர்டபிளா இருக்கு.”
“ம்ம்.. நானும் கொஞ்ச நேரமா இருந்த டென்ஷன் எல்லாம் மறந்துட்டேன். தேங்க்ஸ் ஃபார் தட்..”
“அண்ட் எனக்கு தமிழில் மரியாதை எல்லாம் கொஞ்சம் ஒழுங்கா வராது தப்பா எடுக்காதே..”
“எப்படியும் நீங்க என்னை விட பெரியவரா தான் இருக்கணும். சோ அதெல்லாம் பிரச்சனை இல்லை.”, என்றவள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“டேண்ஞ்சரஸ் கேர்ள்.. நத்திங் டு ஹைட். எனக்கு 28.”
“ஹா ஹா சொன்னேனே என் அண்ணனை விட நீங்க பெரியவங்க தான். அப்போ மரியாதை தேவைப்படாது. உங்க நேட்டிவ் எது?”
“திர்ச்சூர் தான், அம்மா அப்பா எல்லாம் இருக்குறது. நான் கொச்சினில் இருக்கேன்.”
“ஓ நான் கேரளா வந்ததே இல்லை. வரணும். உங்களுக்கு தான் போன் பண்ணுவேன். அங்கே யாரையுமே தெரியாது எனக்கு.”
“அதுக்கென்ன என்ட அச்சன் அனியன் (தம்பி) எல்லாம் உனக்கு ஊர் சுத்தி காட்டுவா”
“சூப்பர் நீங்களும் மதுரை வந்தா யோசிக்காம எனக்கு போன் பண்ணுங்க எங்க வீட்டிலேயே தங்கிக்கலாம்.”
“நிஜமானோ? சித்திரை திருவிழா நடக்கும் போ ஞான் வரும். ஒரு பாடு இஷ்டம்.”
“பாருடா அவ்வளவு தெரிஞ்சு வைச்சுருக்கீங்களே. கண்டிப்பா வாங்க பத்து நாளும் அப்படியிருக்கும்.”
“ம்ம் மும்பையில் தனியா சமாளிச்சுடுவியா?”
“அண்ணா அவனோட ப்ரெண்ட் ஒருத்தரை அனுப்புறேன்னு சொல்லிருக்கான். பார்த்துக்கலாம்.”
“ஓ. ஞான் இரண்டு மூணு திவசம் அவ்விட தன்னே இருக்கும் எதுவானாலும் கால் செய் சரியானோ?”
“கண்டிப்பா, என்னைப் பத்தி தெரியாம சிக்கிட்டீங்க. இனி மலையாளம் கேரளானு போர்ட் பார்த்தாலே உங்களுக்கு தான் கால் பண்ணுவேன்.”
இப்படியான உரையாடல்களில் விமானமும் மும்பையில் தரையிறங்கியிருக்க விமானம் நிறுத்தப்படுவதற்காக காத்திருந்தனர்.
“முதல் தடவை ப்ளைட் ட்ராவல் போர் அடிக்காம இருந்துது.”
“எனக்கும் மனசு கஷ்டமே மறந்து போன மாதிரி இருக்கு.”,என்றவளுக்கு வசந்தின் நினைவில் முகம் வாடியது.
“உன் கூட்டுகாரன் ஒரு பாடு லக்கி. இத்தன வல்லிய ப்ரெண்ட் இருக்கே. நிச்சயம் நல்லாகிருவான்.”, என்றதற்கு மங்கை புன்னகைக்க அனைவரும் இறங்கிய பின் இறுதியாய் இருவரும் வெளியே வந்தனர்.
“மறக்கண்டா சென்னை ரீச் ஆகிட்டு மெசெஜ் செய்”
“கண்டிப்பா பண்றேன் வரட்டுமா..”, என்றவள் கையசைத்து விடைபெற்றாள்.
முகுந்தன் தனது உடைமைகளுக்காக காத்திருக்க மங்கை கைப்பை மட்டும் தான் என்பதால் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
ஏனோ முகுந்தனுக்கு மனம் முழுவதும் ஒருவித இலகுத்தன்மை இடம் பெற்றிருந்தது. உன்னி முகுந்தன் வயது 28. பலராம் பார்வதி தம்பதியரின் மூத்த மகன். அவனின் தம்பி உன்னி கிருஷ்ணன்.
முகுந்தன் சிறுவயது முதலே சற்று அமைதியானவன் தான் நண்பர்கள் என்று யாரும் பெரிதாய் கிடையாது.
தாயும் தந்தையும் காதல் திருமணமென்பதால் பல வருடங்கள் சொந்த பந்தங்களோடு தொடர்பே இல்லாமல் இருக்க அவனைப் பொறுத்த வரை அவன் தம்பி தாய் தந்தை மட்டுமே அவனது உலகம்.
அதிலும் சினிமாவிற்கு வந்த பின் இன்னுமாய் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு தான். யாராய் இருப்பினும் என்னவென்றால் என்ன அளவிற்கு தான் அவனிடம் நெருங்க முடியும்.
அதுவே அவனது மிகப்பெரும் பலம் என்றும் அவனுக்கு தோன்றுவதுண்டு. இப்படியானவனின் இந்த திடீர் தோழி மங்கை எதோ ஓர் அழகிய உணர்வை உண்டாக்கியிருந்தாள்.
அவனது தொழில் ரீதியாக பல பெண்களோடு பேச வேண்டிய சூழல் இருக்கும் அதிலும் அவனுக்கு ரசிகைகள் தான் அதிகம் அப்படியிருக்க பெண்களையே அறியாதவன் ஒன்றும் இல்லை.
இருந்தும் எல்லா உணர்வும் எல்லார் மீதும் வருவதில்லையே.( குறிப்பாக இந்த கதாசிரியர் வர விடுவதில்லையே..)
அவளைப் பற்றிய சிந்தனையோடு தனது பைகளை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பியிருந்தான். அங்கு மங்கை தனது அண்ணனின் நண்பனோடு மருத்துவமனையை அடைந்திருந்தாள்.
அவளை எதிர்பாராதவனாய் வசந்த் அதிர்ந்து விழித்தவன் பின் தலையை திருப்பிக் கொண்டான். வந்த வேகத்தில் தன் கைப்பையை கொண்டு அவனது தலையில் அடித்தாள் மங்கை.
“ஹே அவனே..”
“அவனே என்ன டா அவனே அப்படியே போய் சேர சொல்லு. யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் கவலைப் படாம போக நினைச்சவன் தான.”
“மங்கை..”
“பேச வேண்டாம்னு சொல்லு டா. அத்தையும் மாமாவையும் நினைச்சு பார்த்தானா கொஞ்சமாவது. எப்படி டா மனசு வந்தது. அப்படி என்ன சாருக்கு பெரிய கஷ்டமாம்?”
“சாரி மங்கை..”, என்றவன் அழ ஆரம்பித்திருந்தான். மங்கைக்குமே கண்கள் குளமாகியிருந்தன.
“ஏன் டா இப்படி பண்ண..”
“நாம எல்லாம் டீமில் சேர்றது எவ்வளவு கஷ்டம். சின்ன வயசில் இருந்து அவ்வளவு ஆசை எனக்கு. கிரிக்கெட்னால் பைத்தியம் எனக்கு.
எத்தனை மேட்ச் எத்தனை ஊரூரா சுத்திருப்பேன். அதைவிட அம்மா அப்பா செலவு பண்ண முடியாத நேரம் யார் கையையாது எதிர்பார்த்து அந்த காசில் எல்லாம் ஊருக்கு போயிருக்கேன்.
நீயும் நானும் ப்ரெண்டான அப்பறம் தான் கொஞ்சம் தலை நிமிர்ந்து நடக்குறனே ஊருக்குள்ளே. எல்லாத்தையுமே நீ பார்த்துக்குற. அதுக்காக அதை அனுபவிச்சுட்டு சுத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை மங்கை.
இன்னும் சொல்ல போனால் என்னோட முதல் மேட்ச் ஆடி வர்ற காசில் எங்க அம்மாக்கு எதுவும் வாங்கிக் கொடுக்குறேனோ இல்லையோ உனக்கு தான் வாங்கணும்னு நினைச்சுருக்கேன் தெரியுமா?
ரஞ்சிக்காக முப்பது பேரில் ஒருத்தனா என்னையும் செலெக்ட் பண்ணிணாங்கனு தெரிஞ்சப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதே நேரம் பக்கத்தில் போக போக அளவுக்கு மீறி ஆசைப்படுறோமோனு ஒரு எண்ணம்.
இதில் தோத்து வேற போயிட்டோம். இதை விட்டால் எனக்கு ஒண்ணும் தெரியாது மங்கை. அதனால தான் எதோ புத்தி வேலை செய்யாம இப்படி என்னவோ..”, என்றவன் தலை குனிந்தான்.
“எல்லாம் சரி தான் டா. அதுக்காக இந்த ஒரு முடிவு எல்லாத்துக்கும் தீர்வு கொடுத்துருமா? பேசுறது ஈசி தான் ஆனால் நாங்க எல்லாம் இல்லையா டா உனக்கு. அப்படியே விட்டுருவோமா உன்னை?”
“….”
“இன்னொரு தடவை இப்படி பைத்தியம் மாதிரி பண்ணாத புரியுதா? எந்த சூழ்நிலையிலேயும் நான் இருக்கேன் உனக்கு.”
“கேட்டுக்கோ டா இப்படி ஒரு ப்ரெண்டு இருக்கா இதை விட என்ன டா வேணும் உனக்கு.”
“…”
“சரி விடு அருணு. நீ எதாவது சாப்பிட்டியா? போய் சாப்பிடு”
“ம்ம் சரி மங்கை நான் போயிட்டு உனக்கும் எதாவது வாங்கிட்டு வரேன்.”
அவன் அங்கிருந்து நகர்ந்ததும் மங்கை வசந்தின் அருகில் நாற்காலியில் அமர தயக்கமாய் அவளை ஏறிட்டவன்,
“இனி சத்தியமா இப்படி பண்ண மாட்டேன் மங்கை. என்னை மன்னிச்சுரு.”
“சரி விடு. நான் அத்தை மாமாக்கு எல்லாம் விஷயத்தை சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். அடுத்த வருஷம் முயற்சி பண்ணு அதுவரை அப்பாகிட்ட பேசி எதாவது இடத்தை வாடகைக்கு எடுத்து தரேன். பசங்களுக்கு கோச்சிங் கொடு.
உனக்கு பிடிச்சதை பண்ணின மாதிரியும் ஆச்சு சம்பாத்தியமும் கிடைச்ச மாதிரி ஆச்சு. என்ன சொல்ற?”
“மாமா என்ன சொன்னாரு?”
“சொன்னாரு சோத்துல உப்பில்லைனு. என்ன சொல்ல சொல்ற? நீ நல்லபடியா பொழச்சு வந்ததே போதும்னு இருக்கு எங்க எல்லாருக்கும்.”
“இந்த அளவுக்கு நீ எனக்கு பண்ற.. நான் உனக்கு ஒண்ணுமே பண்ணலையே மங்கை.”
“லூசு மாதிரி பேசாத டா. பதிலுக்கு பதில் பண்றதுக்கு நாம என்ன பிசினனஸா பண்றோம். நீ என் ப்ரெண்டு. யாருக்குத் தெரியும் எதிர்காலத்துல நீயும் எனக்கு எதாவது உதவி பண்ற நிலைமை வந்தாலும் வரலாம்.”
“அப்படியெல்லாம் சொல்லாத. இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் நீ அந்த மீனாட்சி தாய் மாதிரி அள்ளிக் கொடுக்குற நிலைமையில் தான் இருக்கணும்.”
“ஹே இன்னைக்கு நான் யாரோட ப்ளைட்ல வந்தேன்னு பார்க்குறியா?”, என்றவள் பேச்சை மாற்றும் பொருட்டு தன் கைப்பேசியை எடுத்து அவனிடம் காட்டினாள்.
“யாரு டி இது?”
“உன்கிட்ட போய் காட்டினேன் பாரு. உன்னி முகுந்தன் மலையாள ஹீரோ டா..”
“நான் தமிழ் படமே பார்க்க மாட்டேன். உன் வாயாடித் தனத்துல மனுஷன் நொந்து போயிருப்பாரே?!”
“என் அருமை உங்களுக்கு எல்லாம் தான் தெரியலை டா. எவ்வளவு நல்லா பேசினாரு தெரியுமா?”
“ஒரு மணி நேரம் பேசினால் அப்படி தான் சொல்லுவாங்க. கூடவே இருந்து பார்த்தால் தெரியும்.”
“பொறாமை டா உனக்கு. ஆனாலும் பாரேன் எப்படி பளபளனு இருக்காருனு நான் தான் பக்கத்துல டிம்மா தெரியுறேன் இல்ல?”
“அவங்களுக்கு என்ன எந்த நேரமும் ஏசியிலேயே இருப்பாங்க நாம அப்படியா? அதுவும் மதுரையில் அடிக்குற மொத்த வெயிலும் உன் மேல தான் விழும் அப்பறம் எப்படியிருப்ப?”
“அதென்னவோ கரெக்ட் தான். சரி நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன். நீ வெட்டியா தான இருக்க வந்து இந்த சேரில் உட்காரு வா.”
“அடியே ட்ரிப்ஸ் ஏறுது. செத்து பொழச்சு வந்துருக்கேன் டி.”
“அதான் வந்துட்டியே. வா டா இங்கே. எவ்வளவு தூரம் அலைஞ்சு வந்துருக்கேன்.”
“அந்த ஹீரோவோட கடலை வருத்துட்டு வந்து பேச்சைப் பாரு.”, என்றவன் எழுந்து கொள்ள கட்டிலில் படுத்தவள் பழிப்பு காட்டிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
😍😍😍😍😍😍