மலர்-29

by ஸ்ரீ
3 comments 382 views
A+A-
Reset

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்

மு.வ விளக்க உரை: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

கார்த்திகேயனோடு காரில் கிளம்பியவள் அமைதியாய் வேடிக்கைப் பார்த்தபடி வர அவளை தொந்தரவு செய்ய விரும்பாதவனாய் அமைதியாகவே காரை இயக்கிக் கொண்டிருந்தான்.

கார் ஒரு ஹோட்டல் வாசலில் நிற்க கேள்வியாய் பார்த்தவளிடம்,

“ப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட ஒண்ணு வாங்கிட்டு போயிடலாம் பாப்பா. வா”

“நான் எதுக்கு மாமா. காரிலேயே இருக்கேன்.”

“வேலட் பார்க்கிங் டி வா அஞ்சே நிமிஷம் தான்.”, என்றவனோடு லிப்டில் ஏறி ஸ்டார் ஹோட்டலை வேடிக்கைப் பார்த்தபடியே மேல் தளத்திற்கு வந்திருந்தாள்.

ஒரு அறை வாசலில் சென்று கார்த்திகேயன் அழைப்பு மணியை அழைத்து நிற்க கதவைத் திறந்தவனைப் பார்த்து விழி விரித்தாள் மங்கை.

“தங்கமே!!!”

“உள்ளே வா மலரே. வா கார்த்தி.”, என்றவன் சகோதரனை ஆரத் தழுவிக் கொண்டான்.

இரண்டொரு வார்த்தை கார்த்திகேயனிடம் பேசிவிட்டு முகுந்தன் மங்கையின் புறம் திரும்பியது தான் தாமதம் அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்திருந்தாள்.

“யாருமே என்னோட பேச மாட்றாங்க தங்கம்.”

“அப்பா கூட.. இவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு தான நான் நினைக்குறேன்.”

“திருமா அண்ணன் என்னைப் பார்த்தே ஒரு வாரம் ஆகுது. மாறா எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டு திரியுறான். அம்மாவைப் பார்த்தா பாவமா இருக்கு. என்னால யார்கிட்டேயும் வெளிப்படையா பேசவே முடியலை.

உன்கிட்ட சொன்னா நீயும் அத்தையும் வருத்தப்படுவீங்கனு தான் சொல்லலை. எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுக்க நினைக்குற நான் சந்தோஷமாவே இல்லை உன்னியேட்டா.”, என்றவள் அழுதழுது அனைத்தையும் பேச முகுந்தனும் மொத்தமாய் உடைந்து போனான்.

அவன் மலர் படும் அவஸ்தைகளை உணர்ந்ததால் தானே இங்கு கிளம்பி வந்ததே. என்ன தான் சாதாரணமாய் விளையாட்டாய் பேசினாலும் அதைத் தாண்டிய அவளது குரலின் ஏக்கம் புரியாதவனா அவன்.

காலையில் தற்செயலாய் கார்த்திக்கோடு பேசிய போதே அவளை இங்கு அழைத்து வருமாறு கூறியிருந்தான். இல்லாவிடினும் எப்படியாவது அவளை சந்தித்தே ஆக வேண்டும் என்று தான் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்தான்.

கார்த்திகேயனுக்கே கண்கள் கலங்கிப் போனது. தான் தூக்கி வளர்த்த பிள்ளை போன்றவள் மனதில் எத்தனை பாரத்தை சுமந்திருந்தால் இப்படி கதறுவாள். சொல்லப் போனால் மங்கைக்கு அழத் தெரியும் என்பதையே இன்று தானே பார்க்கிறான்.

“என்ட சக்கரே. போதும். வேண்டா அழாதே. நீ யாருக்காகவும் எதுவும் பண்ண வேண்டாம். நீ சந்தோஷமா இருந்தா மதி டி.”

“…”

“இப்போவே வந்து உன் அப்பாகிட்ட பேசுறேன். சண்டை போடுறேன். இல்லையா காலில் கூட விழுறேன். எனக்கு என்ட மலர் சிரிச்சு இருக்கணும். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்யும்.”

“…”

“நான் இருக்கேன் சக்கரே. நீ தெய்வத்தின்டே கொச்சல்லே. இவங்களுக்கு உன் அருமை புரியலை. என்ட பொன்னு மோளை அழ வைக்குற எல்லாரும் இதுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகணும்.”

“…”

“இங்கே பாரு டி என்னை நோக்கு. நான் எல்லாத்தையும் சரி பண்றேன். என்னை நம்பு. எல்லாம் சரியாகாம். இப்போ நீ கவனிக்க வேண்டியது நாளையோட மேட்ச்சை மட்டும் தான். ஷெரியா?”

“…”

“என்னைப் பாரு, ஷெரியா?”, என்றவன் அவளது கண்களை அழுந்தத் துடைத்து விட்டான்.

“என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை தங்கமே..”

“அதுக்காக தன்னே உன்னை பார்க்க வந்தது. நாளைக்கே எல்லா பிரச்சனையும் முடிஞ்சு நாம கல்யாணம் கழிக்கும் சூழ்நிலை வரலாம். ஆனால் இப்போ இந்த மேட்ச் போச்சுனால் உன்னோட ஹாட்வொர்க் மொத்தமும் வீணா போகும் பொன்னு மலரே.”

“…”

“எல்லாத்தையும் மறந்து மேட்ச்சை கவனி. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். என்னை நம்பு டி.”

“உன்னை விட்டால் இப்போதைக்கு நம்புறதுக்கும் அன்பு வைக்குறதுக்கும் எனக்கு யாருமே இல்லை உன்னியேட்டா..”, என்றவள் குழந்தையாய் உதடு பிதுக்கினாள்.

அவளது குடும்பத்தின் புறக்கணிப்பு அவளை எந்தளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை தான்.

இருந்தாலும் முகுந்தன் எதோ முடிவெடுத்தவனாய் மங்கையிடம் தீர்க்கமாய் சமாதானப்படுத்தினான்.

“கஷ்டம் தான் ஆனால் கடந்து வர முடியாதது இல்லா மலரே. மனசிலாயோ. எப்பவும் நான் உனக்காக இருக்கும்.”, என்றவனின் தோளில் பக்கவாட்டாய் சாய்ந்து கொள்ள மென்மையாய் நெற்றியில் இதழ் பதித்தவனாய் கார்த்திகேயனைப் பார்த்தான்.

“எந்தா டா இதெல்லாம்?”

“என்ன பண்றது முகுந்தன். இதுக்காக தான் பயந்தேன். பாப்பாவுக்கு இப்படி ஒரு நிலைமை வேண்டாம்னு தான் கவலைப்பட்டேன். ஆனால் விதினு ஒண்ணு இருக்கே.

ஆனால் இவ சொல்றதைப் பார்த்தா என்ன நினைக்குறாங்கனு மனசில் இருக்குறதை ஆத்திரமா வெளியில் கொட்டிட்டா கூட பரவாயில்லை.

இப்படி பேசாம இருந்து என்ன சாதிக்க நினைக்குறாங்கனு புரியலை. ஆனால் இதெல்லாம் யாரு கேட்குறது. வீட்டில் பேசுற ஒரே ஆள் பாப்பா தான். எனக்கு ஒண்ணும் புரியலை.”, என்றவன் முகத்தை அழுந்தத் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தான்.

“சரி நான் வெளியே இருக்கேன் நீங்க பேசிட்டு வாங்க”, என்றவன் நாகரீகமாய் வெளியே சென்று விட முகுந்தன் தன்னவளை இறுக்கமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

அழுதழுது வீங்கிப் போன அந்த குண்டு கருவிழிகளைப் பார்க்கும் திறனே இல்லாதவனாய் சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான்.

“பொண்டாட்டியோட கண்ணீருக்கு காரணமா இருக்கேன்னு வருத்தமா இருக்கு மலரே.”

“…”

“ஆனால் சத்தியம் உன் கழுத்தில் தாலி கட்டின நாள் முதல் நீ அழவே மாட்ட அதுக்கு நான் பொறுப்பு.”

“மலர் பொண்ணை எனக்கு அத்தனை பிடிக்குது. இந்த கஷ்டமெல்லாம் வேண்டாம் உன் வீட்டில் சொல்றவனை கல்யாணம் கட்டிக்கோனு சொல்ற தைரியம் வரலை”, என்றதும் அவனது முதுகில் ஓங்கி அடித்தாள்.

“சொல்லி தான் பாரேன்..”

“பொன்னு மோள் ஹாப்பியா இருக்கணும் எனக்கு அது மட்டும் தான் வேணும்.”, என்றதில் அவனிடமிருந்து பிரிந்தவள் அழுத்தமாய் அவனது இடக்கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“பாதிக்கு மேல என் முத்தம் இந்த தாடிக்கு தான் போகுது. க்ளீன் ஷேவ் பண்ணி முறுக்கு மீசையோட நெத்தியில் குங்குமம் வைச்சு மதுரைகார மாமனா உன்னை ஒரு நாளாவது பார்க்கணும் தங்கம்.”, தன்னவனின் தவிப்பு தாங்காதவளாய் பேச்சை மாற்றினாள்.

“ஐயோ தாடியில்லை அங்கில் பேன்ஸ் டென்ஷன் ஆகும்.”

“பேன்ஸா ஓகோ அப்போ பொண்ணுங்களை உஷார் பண்ண தான் இந்த தாடியா?”, என்றவள் இரு கைகளாலும் தாடியை வலிக்கப் பிடித்தாள்.

“ஆ.. விடு டி மோகினி.”, என்றவனின் கரம் அவளது கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் பிடியைத் தளர்த்தியவளாய் அவனது விழிகளை ஏறிட,

“என்ட சுந்தரிப் பொண்ணு கேட்டதை இப்போ கொடுத்தால் அவ ஹேப்பியா இருப்பா அல்லே?!”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் கிளம்புறேன். மாமா வெளியில் இருக்கான்.”

இந்த மாமனை கவனிச்சுட்டு போய்க்கோ.”, என்றவன் தன்னவளின் கன்னங்களை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

“இந்த முகம் எப்பவும் ஹேப்பியா மட்டும் தான் இருக்கணும் மலரே.”, என்றவன் நொடியும் தாமதியாது அவளது அதரங்களை தனதாக்கிக் கொண்டிருந்தான்.

பயம் பதட்டமென அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவளாய் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் மங்கை. முதல் முத்தமே உயிர் உருகும் முத்தமாகிப் போனது.

சில நொடிகளில் அவனை விட்டு விலகியவளாய், ”நான் போணும் உன்னியேட்டா..” என்றிட,

அவளது முடிக்கற்றைகளை சரி செய்தவனாய் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்து நகர்ந்தான். மனதை அடைத்த பாரம் குறைந்ததில் மங்கையுமே சற்று தெளிவாகியிருந்தாள்.

“மறக்கண்டா நாளைக்கு மேட்ச் நம்மிட கையில்.”

“என் தங்கத்தைப் பார்த்ததில் நிறையவே தெளிவு வந்துருச்சு. நாம தான் வின் பண்ணுவோம்”

“குட் சக்கரே கோயிங் டு மிஸ் யூ.. சீக்கிரமே திரும்பவும் பார்க்கலாம்”, என்றவன் மனமே இன்றி விடை கொடுத்து அனுப்பினான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மதுரைக்கான விமானத்தில் அமர்ந்திருந்தான் உன்னி முகுந்தன். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் யோசிச்கவில்லை. அவனது மலரின் கண்ணீரே பெரிதாய் பட்டது.

வீட்டு வாசலில் வந்து நின்றவனைப் பார்த்து குணவதி அதிர்ச்சியடைய வெளியே சென்ற மருமகளைக் காணாமல் பார்க்க வந்த பூங்கோதை பேரனை எதிர்பாராதவராய் அவனின் கரம் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

“நல்லாயிருக்கியா ராசா.”, என்றவர் கன்னம் வழித்து முத்தம் வைக்க பதிலுக்கு புன்னகைத்தவனாய் குணவதியைத் தான் பார்த்திருந்தான்.

அவரது பயமே வீட்டின் நிலையைத் தெளிவாய் எடுத்துக் கூற அனைவரிடமும் பேச வேண்டும் வரச் சொல்லுங்கள் என்று கூற பதட்டமாய் கணவனுக்கு அழைக்கச் சென்றார்.

இங்கு பேச்சு சத்தத்தில் வெளியே எட்டிப் பார்த்த கனியனிற்கு கோபம் தலைக்கேறியது.

“உன்னை யாரு உள்ளே விட்டது?”

“அப்புச்சா..”

“யாருக்கு யாரு டா தாத்தா. உறவு கொண்டாடிட்டு இங்கே வர்ற அளவு தைரியமா? நேரா வந்தா சேர முடியாதுனு என் பேத்தி மனசை கெடுத்து அவ மூலமா உறவு கொண்டாட பார்க்குறீங்களோ?”

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?”

“உன்கிட்ட எல்லாம் பேசவே கூடாது. முதல்ல வெளியே போ. ஏய் உனக்கு என்ன அம்புட்டு பாசம். அப்படியே அவனோடேயே போயிடு.”

“ஏன்ங்க.. இப்படியெல்லாம் பேசுறீங்க. அவன் நம்ம பேரன்.”

“அடிச்சு பல்லை கழட்டிடுவேன் பேசாம உள்ளே போ.”, என்று அவர் கத்திக் கொண்டிருந்த போதே முத்துப் பாண்டியும் இனியனும் அங்கு வந்திருந்தனர்.

“எனக்கு உங்க யாரோட உறவும் வேண்டாம். எனக்கு என் மலரோட சந்தோஷம் வேணும். அதுக்காக மட்டும் தான் வந்தது.”

“நடிகன்ல நடிக்கவா சொல்லிக் கொடுக்கணும். எங்க வீட்டு பொண்ணை எப்படி பார்க்கணும்னு எங்களுக்குத் தெரியும் நீ கிளம்பு முதல்ல”, என்ற இனியன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பது நன்றாகவே தெரிந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan July 30, 2026 - 3:35 am

😍😍😍😍😍😍😍😍

suganyavel July 30, 2026 - 4:26 am

Nice👍

srichitra July 31, 2026 - 5:36 am

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode