மலர்-27

by ஸ்ரீ
3 comments 416 views
A+A-
Reset

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்

மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.”

அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட மங்கை அன்னையைத் தேடி சமையலறைக்கு வந்தாள்.

“ம்மா..”

“சொல்லு கண்ணு..”, என்று திரும்பியவர் வேகமாய் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“நீ ஏன் மா அழற?”

“ஒண்ணுமில்ல மங்கை. நீ சொல்லு என்ன வேணும்?”

“பசிக்குது எதாவது இருக்கா?”

“வா உட்காரு”, என்றவர் சாப்பாட்டைத் தட்டில் போட்டு மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். சில நொடிகளில் பூங்கோதை பேத்தியைப் பார்க்க வந்து அவளருகில் அமர்ந்து கொண்டார்.

“என்ன ப்ளவர்? என்ன விஷயம்?”

“கொழுப்பு டி உனக்கு, எம்மவ போட்டோவை ஒரு தடவை பார்த்துட்டு தரட்டுமா கொடுக்குறியா?”, என்றதில் பாவமாகி விட்டது மங்கைக்கு.

“நாளைக்கே இதை பிரிண்ட் போட்டு உனக்கு தரேன் சரியா அப்பத்தா”, என்றவள் கைப்பேசியை அவரிடம் கொடுத்துவிட்டு தாய் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டாள்.

“பார்வதி மாப்பிள்ளை ராசாகணக்கா இருக்காரே! அதை விட என் பேரனுங்க இன்னும் அழகு இல்ல. அதனால தான் அவனைப் பார்க்கும் போதெல்லாம் எதோ தெரிஞ்ச மாதிரியே இருந்தது.”

“இதை சொன்னதுக்கும் உன் பேரன் திட்டுறான். பெத்த பொண்ணு ஜாடையே மறந்துப் போச்சானு..”

“வாயை உடைக்குறேன் இரு. கட்டிக்கப் போறவனை அவன் இவன்னு சொல்லிட்டு திரியுற?”, என்றதில் குணவதியின் விசும்பல் அதிகமானாது.

“ஏட்டி குணா நீ ஏன் அழுவுற?”

“அத்தை எனக்கு பயமா இருக்கு. இவங்க எல்லாம் என்ன எதுவுமே சொல்லாம போயிட்டாங்க. மாமா என்ன சொல்லுவாரோனு கிடந்து அடிச்சுக்குது அத்தை.”

“அட யாரு டி இவ. உன் மக இருக்குற தைரியத்துக்கு எவனும் ஒண்ணும் பண்ண முடியாது. நம்ம பிள்ளைக்கு நாம இருக்கோம் டி. எம்மவளுக்காக தான் பேசாம போயிட்டேன். என் பேத்தியெல்லாம் அப்படி விட்டுபுட மாட்டேன் குணா.”

“சரி அத்தை உங்களை தான் மலை போல நம்பியிருக்கேன்.”

“ம்மா உன்னை மாதிரியே அத்தையும் சூப்பரா சமைக்குறா தெரியுமா? ஆனால் கேரளா சாப்பாடு தான். ஆளே மலையாளி போல மாறிட்டாங்க மா.”

“காலேஜிலேயா வேலை பார்க்குறாங்க?”

“ம்ம் ஆமா இரண்டு பேரும் அத்தனை அழகு மா. அதை விட வீட்டைப் பார்க்கணுமே யானை எல்லாம் வளர்க்குறாங்க. அங்கே இருந்து வரவே மனசு இல்லை. உன் மருமகன் தான் கடுப்பேத்திட்டான். அதான் கிளம்ப வேண்டியதா போச்சு.”

“என் பேரன் பேசவே காசு கேட்பான் போல இருந்தான். அவனை குறை சொல்லாத”

“ம்ம் நீ தான் மெச்சிக்கணும். உன் பேரனைப் பத்தி எனக்கு தான் தெரியும். போவியா..”

“ஆனாலும் உன் வாயாடித்தனத்துக்கு எங்கே போய் என்ன பாடு படுவியோனு நினைச்சேன். நல்ல வேளை அத்தையே மாமியாகாரியா கிடைச்சுட்டா.”

“ஆமா பாட்டி கொஞ்சம் போர் தான் சண்டை கூட போட முடியாது.”, இப்படியாய் தாயோடும் பாட்டியோடும் கதையளந்தவளுக்கு சற்றே பழைய திடம் திரும்பியிருந்தது.

இருந்தும் உன்னி முகுந்தனின் வார்த்தைகள் இப்போதும் மனதை நெருட தனதறைக்கு வந்தவள் அப்போது தான் டேட்டாவை உயிர்ப்பிக்க முகுந்தனிடமிருந்து பல குறுஞ்செய்திகள் வந்திருந்தன.

“மலரே”

“என்ட சக்கர பொன்னல்லோ.”

“எடி சாரி எனக்கு உன்னை ஹர்ட் பண்ண வருமோ? சாதாரணமாய் சொன்னது மலரே.”

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

என்ற அவனது குரலில், இருந்த சிறு கலக்கமும் மறைந்து விட்டிருந்தது மங்கைக்கு. புன்னகையோடு அவனது புகைப்படத்திற்கு அழுந்த இதழ் பதித்தவளாய் வேண்டுமென்றே அவனுக்கு பதில் அனுப்பாமல் உறங்கிப் போனாள்.

காலையில் எழுந்தவன் முதல் வேலையாய் கைப்பேசியை எடுக்க அவளது பதில் இல்லாததை உணர்ந்து உடனே அழைத்திருந்தான்.

அரைத் தூக்கத்தில் அழைப்பை ஏற்றவள் அப்படியே காதில் வைத்தபடி தூக்கத்தைத் தொடர மறுபுறம் அவனோ,

“பொன்னு மலரே இத்தர கோபம் ஆகாது.”

“…”

“ஞான் சாரி பரைஞ்சனல்லே. நீ பேசாம இருக்காத”

“…”

“எடி நின்ட காலப் பிடிச்சு மாப்பரையாம். பேசு மலரே.”

“கால் இங்கே இருக்கும் போது எப்படி பிடிப்ப தங்கமே. நேரில் பார்க்கும் போது கண்டிப்பா காலில் விழணும்.”, என்றவள் தூக்கத்தில் பேச முகுந்தனின் முகமோ புன்னகையில் ஒளிர்ந்தது.

“எடி ரொம்ப டென்ஷன் படுத்திட்ட..”

“நீயும் தான்.”

“சாரி மலரே..”

“நானும் சாரி உன்னியேட்டா..”

“சக்கரே.. மிஸ்ட் யூ பேட்லி. என்னால தான நீ போயி..”

“இல்ல தங்கமே எல்லா விஷயத்தையும் மனசுக்குள் வைச்சுக்க முடியலை. அதான் கிளம்பி வந்து இங்கே எல்லாரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டேன்.”

“என்டே குருவாயூரப்பா!!! எந்தா மலரே???”

“பின்ன நான் கிளம்பி இங்கே வந்து உன் படத்தில் வர்ற ஹீரோயின் மாதிரி முட்டிக்காலில் மூஞ்சியை வைச்சு அழுதுட்டு இருப்பேன்னு நினைச்சியா?”

“!!!!”

“எல்லாரையும் உட்காத்தி வைச்சு அத்தையைப் பத்தி கேட்டேன். நம்மளைப் பத்தியும் சொல்லிட்டேன்.”

“எடி பிராந்து பிடிச்சு போயோ?”, என்றவனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.

“விடு தங்கம் பார்த்துக்கலாம். இங்கே கிழவிக்கு தான் ஒரே அழுகாச்சி சீன். பொண்ணையும் பொண்ணோட குடும்பத்தையும் பார்க்கணுமாம்.”, என்றவள் இரவு நடந்ததையெல்லாம் கூற முகுந்தன் இருந்த இடத்திலேயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

“ஹலோ தங்கமே? என்னாச்சு?!”

“பாழா போச்சு. ஏன்டி நினக்கு இத்தர அவஷரம்?!”

“இங்கே பாரு ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கவனிக்குறிங்களா மிஸ்டர் முகுந்தன்?”

“எந்தா? பரா..”

“இங்கே எல்லாரையும் சரிகட்ட வேண்டியது என் பொறுப்பு. நான் திடமா இருக்கணும். அதுக்கு நீ என் கூடவே இருக்கணும். அது எத்தனை வருஷம் ஆனாலும்..”

“மலரே!!”

“ஒரு பேச்சுக்கு சொல்றேன் தங்கம். யாரும் என்ன நினைக்குறாங்கனு எனக்குத் தெரியலை. எது எப்படியிருந்தாலும் இந்த இரண்டு குடும்பமும் ஒண்ணாகாம நம்ம கல்யாணம் நடக்காது. அதுக்கு கொஞ்சம் பொறுமையா இருந்து தான் ஆகணும்.

உன் அம்மாவோட குடும்பம் கொஞ்சம் நல்லவங்க தான் ஆனால் என்ன ஏதோ புத்திக்கெட்ட வேலையெல்லாம் பண்ணிட்டாங்க. இப்போ தான் இந்த மாமங்கை இருக்காளே. எல்லாரையும் அவ பார்த்துப்பா. நீ டென்ஷன் ஆகாம இருந்தா போதும் சரியா?”

“….”

“உனக்கு இங்கே எல்லார் மேலேயும் கோபம் இருக்குதான தங்கமே?”

“விஷயத்தைக் கேட்டவுடனே அம்மா பட்ட கஷ்டத்தை நினைச்சு கோபம் வந்தது உண்மை தான் மலரே. ஆனால் எப்பவோ நடந்ததை நினைச்சு இப்போ நாம கோபப்பட்டு என்னாகப் போகுது.

சத்தியமா உன்னை குறைச்சு பேசணும், இல்லை உன்னைக் கஷ்டப்படுத்தணும்ங்கிற நோக்கத்தில் நான் அப்படி பேசலை. என்னைத் தப்பா எடுத்துக்காத டி. என்னோட கவலை எல்லாம் என்ட சக்கரப் பொண்ணு பத்திரமா என்கிட்ட சந்தோஷமா வரணும்ங்கிறது தான்.”

“நீ தங்கமே தான். இப்படி இருந்த நீ டென்ஷன் ஆனவுடனே தான் எனக்கும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்பறம் யோசிச்சா உன் கோபத்திலேயும் நியாயம் இருக்குனு புரிஞ்சுது.

அதுவும் நல்லதுக்கு தான். இருந்த கடுப்பில் இங்கே எல்லாரையும் ஒரு வழி பண்ணியாச்சு. சீக்கிரமே என் அத்தை பையனை எங்க வீட்டில் வைச்சு அழகு பார்க்கணும் தங்கம்.”

“லவ் யூ பொண்டாட்டி..”

“அடடா ஏட்டனுக்கு ரொமேன்ஸ் மோட் ஸ்டார்ட் ஆயி.”

“பின்னே இப்படி ஒரு பொக்கிஷம் எனக்கு பாரியானால் வேற எப்படி இருக்குறது”

“எல்லாம் பேச்சு தான் நேரில் பார்த்தா ஒரு முத்தம் கூட இல்லை.”

“அடிப்பாவி லேசா கட்டிப் பிடிச்சதுக்கே பேடியாகி போனது நீயல்லோ?!”

“அதெல்லாம் அப்படி தான் இருக்கும். அதுக்காக?”, என்றவள் வெட்கத்தில் வார்த்தைகளை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“என்ட மோகினி என்னைக்கு என்கிட்ட மாட்டும் போது இருக்கு அவளுக்கு.”

“ஹீரோ வேற, நிறைய எதிர் பார்க்குறேன் உன்னியேட்டா..”, என்றவள் ராகமிழுக்க சத்தமாய் சிரித்திருந்தான் முகுந்தன்.

தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த பார்வதி உள்ளே எட்டிப் பார்த்து செய்கை செய்ய அவரிடம் கைப்பேசியை கொடுத்தான்.

“மங்கை என்ன டி போயிட்டு ஒரு போன் கூட பண்ணலை?”

“அத்தை நேத்து இருந்த கடுப்பில் உன் அப்பா அண்ணனுங்களை எல்லாம் தாளிச்சு மந்திரிச்சு விட்டுருக்கேன். நீ என்னடானா மெசெஜ் பண்ணலை கால் பண்ணலைனு சொல்லிட்டு இருக்க.”

“ஐயோ சொல்லிட்டியா?? ஒண்ணும் பிரச்சனையில்லையே எதுவும் சொன்னாங்களா??”

“சொன்னாங்க சுரைக்காயில் உப்பில்லைனு. ஆனாலும் நீயும் ரொம்ப மோசம் கிழவியையாவது பார்த்து பேச முயற்சி பண்ணிருக்கலாம் அத்தை..”

“எங்கம்மாவையா கிழவினு சொல்ற?”

“ஹலோ அது என் அப்பத்தா..”

“என்ன சொன்னாங்க அம்மா?”, என்றவருக்கு குரல் கம்மியது.

“அடுத்து நீ ஆரம்பிக்காத அத்தை. ஆல்ரெடி கீழே போய் ஹெவி பெர்பார்மன்ஸை பார்க்கணும்.”, எனும் போதே கதவு தட்டப்பட எழுந்து திறந்தவளுக்காக காத்திருந்தார் பூங்கோதை.

அவரை பேசாமல் இருக்கும் படி செய்கை செய்தவள் உள்ளே அழைத்து கதவைப் பூட்டிய வண்ணம் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.

“ஹலோ எங்க டி போன? உன்கிட்ட மாட்டிகிட்டு என் அம்மா என்ன பாடு படுறாங்களோ!  சரியான வாயாடியாய் இருக்கியே. எங்க அண்ணன் அமைதிக்கு நீ யாரைப் போல வந்த?”, என்ற மகளின் குரல் கேட்டு கலங்கியவராய்,

“பார்வதி ஏலே நல்லாயிருக்கியா?”

“!!!”

“ஹலோ பாரு, நான் தான் அம்மா பேசுறேன்.”

“ம்மா..”, என்றவர் சத்தமாய் அழ ஆரம்பிக்க போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு விட்டான் முகுந்தன்.

“அம்மச்சி..”

“என் செல்லம். நல்லாயிருக்கியா? எம் பக்கத்திலேயே இருந்தும் உரிமை தெரியாம போச்சே. பாட்டி மேல கோபமாய்யா?”

“அதெல்லாம் இல்லை பாட்டி. நீங்க வருத்தப்படாதீங்க. சீக்கிரமே நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம். அம்மா கரையண்டா பேசு.”, என்றவன் பார்வதியை சமாதானப்படுத்தினான்.

“ம்மா நல்லாயிருக்கீங்களா?”

“என் சாமி. எனக்கென்ன உன் குரலை கேட்கத் தான் இந்த உசுரு இன்னும் கிடந்துருக்கு. மருமகன் சின்ன பேரன் எல்லாரையும் கேட்டதா சொல்லு என்ன. பாப்பா உங்க போட்டோ காட்டினா எல்லாரையும் பார்த்ததில் எனக்கு அம்புட்டு சந்தோஷம்.”

“அப்பா அண்ணன் கலை எல்லாம் எப்படியிருக்காங்க மா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்க கண்ணு. என் பேரன் பேத்தி புண்ணியத்தில் உன்னை சீக்கிரமே பார்த்துட்டா போதும். நிம்மதியா கண்ணை மூடுவேன்.”

“நீ கிழிச்ச கிழவி. சும்மா போயிடுவேன் போயிடுவேன்னு அப்பறம் என் பிள்ளையை எவன் வளர்க்குறது. என் பிள்ளை என்னை விட ரெண்டு மடங்கு இருக்கும் சமாளிக்க வேண்டாம்? போய் பொழப்பை பாரு போ.”

“ஆனாலும் எம்மவளும் பேரனும் இந்த ராங்கிகிட்ட என்ன பாடு படணுமோ?”

“ம்ம் உன் மகளுக்கு பத்து வயசு, பேரனுக்கு அஞ்சு வயசு என்கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறாங்க.“, என்றவள் பூங்கோதையை வெளியே அனுப்பி விட அங்கு முகுந்தனும் பார்வதியும் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தனர்.

“அத்தே சொல்லு காலேஜ் கிளம்பிட்டியா?”

“ஆமா நேத்தெல்லாம் ரொம்ப மரியாதையா வாங்க போங்கனு எல்லாம் பேசினியே டி?”

“அது மாமியார்க்காக. இது என் சொந்த அத்தைக்காக. இங்கே எல்லாரையுமே அப்படி தான் கூப்பிடுவேன். உனக்கு மட்டும் மரியாதை வைச்சா அப்பறம் மொத்தக் குடும்பம் சண்டைக்கு வரும்.”

“மங்கை..”

“சொல்லு அத்தை..”

“ஒண்ணுமில்ல டி தேங்க்ஸ். சரி வேலைக்கு நேரமாகுது நான் கிளம்புறேன்.”, என்றவர் மகனின் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றார்.

“சரி தங்கமே நானும் கீழே போய் நாட்டு நிலவரத்தை பார்க்கணும். வரட்டுமா?”

“லவ் யூ டி என்ட மோகினி பொண்ணே..”

“லவ் யூ சோ மச்”, என்றவள் எப்போதும் போல் அழுத்தமாய் இதழ் பதித்து அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan July 29, 2026 - 3:58 am

👌👌👌👌👌👌👌👌

srichitra July 29, 2026 - 5:12 am

Very very nice.

suganyavel July 29, 2026 - 5:17 am

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode