385
“குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்
மு.வ விளக்க உரை: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.”
அடுத்த இரு தினங்களில் திருமாவும் கன்னிகாவும் தேனிலவிற்கு கிளம்பியிருக்க மங்கைக்கோ யாரிடமும் முன்பு போல் பேசவே முடியவில்லை.
மனதில் இருப்பதை கேட்டுவிட்டால் கூட நிம்மதி என்று தோன்றியது. அதிலும் கோபம் மொத்தமும் அப்பாவின் மீதும் தாத்தாவின் மீதும் தான்.
அந்த இன்னொருவர் ஆணா பெண்ணா தந்தையை விட பெரியவரா சிறியவரா? இப்போது எங்கு எப்படியிருக்கிறார் அப்படி ஒரு உயிர் இந்த உலகத்திலேயே இல்லாதது போல் எப்படி இவர்களால் இத்தனை வருடம் வாழ முடிந்தது என்று நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது.
அத்தனைக்கும் வடிகாலாய் இருந்தவன் அவளது முகுந்தன் தான். எத்தனை வேலைப்பளு இருந்தாலும் ஒரு முறையாவது மங்கையை அழைத்துப் பேசி அவளைத் திசை திருப்ப முயன்றான்.
கார்த்தி கூறியது போல், அவனுக்கு விஷயம் தெரிந்தது மட்டுமே பிரச்சனை என்று எண்ணியவனாய் அதைப் பற்றிய சமாதானங்களை கூறி அவளை சாதாரணமாக்க முயன்றான்.
ஒரு வாரத்தின் அதிகப்படியான நேரத்தை மைதானத்திலேயே கழித்தவளாய் மேட்சிற்காக கொச்சினிற்கு கிளம்பியிருந்தாள் மங்கை.
“ஏன் கண்ணு முகுந்தன் தம்பியை பார்த்தா நான் கேட்டதா சொல்லு..”
“மேட்ச் பார்க்க வரேன்னு சொல்லிருக்காரு மா. சொல்றேன் கண்டிப்பா.”
“ஏலே மங்கை நம்ம முகுந்தன் தம்பியும் அந்த ஊரு தான?”
“அவரு அன்னைக்கு நைட் ஷுட்டிங்காக வேற ஊர் போறாராம் பா. ஸ்டேடியத்தில் பார்க்க வருவாரு.”
“ஆல் த பெஸ்ட் மங்கை”
“தேங்க் யூ அண்ணி.. வாரும்போது உங்களுக்கு எதுவும் வேணுமா சொல்லுங்க வாங்கிட்டு வரேன்.”
“பாப்பா எனக்கு?”, என்ற மாறனை முறைத்தவளாய் அண்ணியிடம் கதையளந்து கொண்டிருந்தாள்.
இப்படியாய் அனைவரிடமும் விடைபெற்று ரயிலில் ஏறியவளுக்கு உண்மையில் சற்று சுதந்திரமாய் சுவாசிப்பதாய் தோன்றியது. சரியாய் அவளது கைப்பேசி அழைக்க,
“மலரே..”
“கிளம்பிட்டேன் தங்கம்.”
“காலையில் நீ ப்ரெண்ட்ஸோட போயிடு மதியம் மேட்ச் முடிஞ்ச அப்பறம் நான் வந்து உன்னை பிக் பண்ணிக்குறேன். அம்மேயும் அச்சனும் காத்திருக்கும்.”
“சரி தங்கமே. காலையில் பார்க்கலாம்.”, என்றவளுக்கு அவர்களைப் பார்க்க போவது வேறு சிறிது படபடப்பாய் இருந்தது.
மறுநாள் தனது ஷுட்டிங்கை முடித்து மங்கையை அழைத்துச் செல்வதற்காக ஸ்டேடியத்திற்கு வந்தவன் கண்டதோ மைதானத்தில் காரசாரமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்த மங்கையைத் தான்.
என்னவென விசாரித்ததில் எதிர் அணியின் பெண் ஒருவர் வேண்டுமென்றே எதோ பிரச்சனை செய்திருக்க அதற்காகத் தான் இந்த சண்டை எனத் தெரிந்து கொண்டான்.
ஒரு வகையில் மலரின் இந்த கோபம் முகுந்தனுக்கு ஆச்சரியம் தான். எப்போதும் சிரித்த முகமாய் பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிபவளாய் பார்த்திருந்த அவனது மலர் இன்று அவளின் மற்றுமொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தாள்.
ஒரு வழியாய் அம்பயர் எதிர் அணியின் பெண்ணின் தவறைச் சுட்டிகாட்டிய பின்னே அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“ஹாய் தங்கம். ரொம்ப நேரம் ஆச்சா?”
“ஜஸ்ட் பத்து மின்ட்டு. போலாமா?”
“ம்ம் இரண்டே நிமிஷம் வரேன்.”, என்றவள் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு ஓடினாள். வெளியே வந்தவள் அழகான காட்டன் சுடிதாரில் இருபுறமும் முடிக்கற்றைகளை எடுத்து நடுவில் க்ளிப் போட்டபடி தலை முடியை விரித்து விட்டிருந்தாள்.
“ஓகே தான?”
“எனக்கு எப்பவும் ஓகே தான்..”, என்றவனை வாயை மூடிய வண்ணம் தள்ளிச் சென்றாள்.
இரண்டு இரண்டரை மணி நேர பயணம் இதற்கிடையில் அரை மணி நேர உணவு நேரம். வாழ்வின் பொக்கிஷமாய் தோன்றியது மங்கைக்கு.
அதிலும் பயணம் முழுவதும் அவளது கரத்தை விடாமல் தன்னோடு கோர்த்துக் கொண்டவனை அத்தனைப் பிடித்தது. திரிச்சூர் உள்ளே நுழைந்ததுமே விட்டுப் போன பதட்டம் மீண்டுமாய் ஒட்டிக் கொண்டது பெண்ணவளுக்கு.
“எந்தா மலரே?”
“ரொம்ப டென்ஷனா இருக்கு தங்கம். வீட்டுக்கும் தெரியாது இவங்க வேற எப்படி எடுத்துப்பாங்கனு..”
“இது பொன்னு மலரிண்ட வீடாம். ஏன் பயம். சந்தோஷமா வரணும் சரியா?”
“ம்ம்..”, என்றவள் முகுந்தனின் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டாள்.
ஒரு பெரிய கதவைத் திறந்து கார் உள்ளே செல்ல கண்ணெதிரே இருந்த வீட்டைப் பார்த்து மங்கையின் விழிகள் விரிந்தன. அச்சு அசல் சினிமாக்களில் எல்லாம் பார்த்த கேரளாவின் பாராம்பரிய வீடாய் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது.
அதை விட வீட்டின் பரந்த மறுபுறத்தில் இவர்களைப் பார்த்ததும் சத்தம் எழுப்பிய யானையைப் பார்த்தவளுக்கு மனம் குழந்தையென குதுகலித்தது.
“ஹே!!!!”
“அவனின்ட பேரு அர்ஜுனன்.”, என்றதைக் கேட்டவாறு மங்கை யானையை நோக்கி செல்ல அவளைத் தடுத்தவனாய்,
“காலையில் அவனை பார்க்க போலாம் சக்கரே.. இசமயம் வேண்டா.”, என்று அவளை அழைத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றான்.
நம் ஊர்களின் திண்ணை போன்று கேரள அமைப்பில் மரத்தில் வளைந்து அமைக்கப்பட்ட வாசலின் திண்ணைகளை வருடியவளாய் தனது வலது காலை எடுத்து வைத்தாள்.
அதற்குள் உள்ளிருந்து ஐம்பதுகளில் ஆணும் பெண்ணுமாய் வெளியே வந்தனர். இருவருமே முகுந்தனைப் போல் நல்ல நிறம் அந்த வயதிற்கு ஓரிரண்டு வெள்ளை முடி கூட இல்லாத கருங்கூந்தல்.
அதைவிட வயதை இருபது வயது குறைத்துக் கூறினால் கூட ஏற்கும் அளவிற்கான சருமம். அந்த பெண்ணின் முகவடிவில் சற்றும் மாற்றமில்லாத ஆண் வடிவாய் இருந்தான் உன்னி முகுந்தன்.
“அம்மே அச்சா.. இதானு மலர்”, என்றவன் அவளது தோள்பற்றி சிரித்தான். மங்கை இருவருக்குமாய் கைகூப்பி நமஸ்கரிக்க பலராமே முதலில் பேச்சைத் தொடங்கினார்.
“வரா மோளே உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.”
“எப்டியிருக்கீங்க அங்கிள். ஹாய் ஆன்ட்டி.”
“வா மங்கை. மலர் ஒருத்தரோட ஸ்பெஷல் பேராம். நாங்க அப்படி கூப்பிட கூடாது இல்ல ராமேட்டா?”
“அம்மே வந்தவுடனே ஆரம்பிக்கண்டா.. நீ வா”, என்றவன் இயல்பாய் மலரை உள்ளே அழைத்துச் சென்றான்.
சதுரமான அமைப்பில் கட்டப்பட்டிருந்த வீட்டின் நடுவில் அத்தனை பெரிய முற்றம். அழகான செம்மண் தரை என ரம்மியத்தின் இருப்பிடமாய் இருந்தது.
“எந்தா மங்கை ஒரு பாடு அமைதியாயிட்டுண்டு?”
“இல்லை ஆன்ட்டி வந்தவுடனே என் பேச்சை ஆரம்பிச்சு அப்பறம் உங்களுக்கு பிடிக்காம போயிடுச்சுனால் அதான் கொஞ்சம் அமைதியா இருக்க ட்ரை பண்றேன்.”
“ஆஹா நம்ம முகுந்தனுக்கு இப்படி ஒரு ஆள் தேவை தான். உன்னைக் கண்டதில் ரொம்ப சந்தோஷம் மோளே.”
“ரொம்ப கன்ட்ரோல் பண்றேன். பட் சொல்லாம இருக்க முடியலை சொல்லட்டுமா?”
“எந்தானு?”
“நீங்க இரண்டு பேருமே இப்போ தான் கல்யாணம் முடிஞ்சவங்க மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய பையன்?!”, என்றதில் பெரியவர்கள் இருவருமே மென்மையாய் சிரித்தனர்.
“எங்களிண்டே ப்ரேமம் தான் எங்க இளமையின் ரகசியம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.”, என்றதில் சட்டென மங்கை முகம் சிவந்து போனாள்.
“கிச்சு எவ்விடயா?”
“கிளம்பிட்டான். வர சமயம் தான். நீ கொச்சுவை போய் ரூமில் ரெப்ரெஷ் ஆக விட்டு வா முகுந்தா..”
“சரி அம்மே. மலரே வா”, என்றவன் சிறு குழந்தைகள் தனது நட்பை கைப் பிடித்து விளையாட அழைத்துச் செல்லும் அதே குதுகலத்துடன் தன்னவளை அழைத்துச் சென்றான்.
அழகிய மரத்தால் ஆன மாடிப்படிகளில் ஏறி அங்கிருந்த முதல் அறையின் கதவைத் திறந்தான். மங்கை உள்ளே நுழைந்தது தான் தாமதமென அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து கதவிற்கு பின்னால் நிறுத்திக் கொண்டான்.
இதைச் சற்றும் எதிரிர்பாராதவளாய் ஒரு நொடி அதிர்ந்தவளுக்கு இயல்பான பயம் தலைத் தூக்கியது.
“தங்கமே!!”
“என்ட சக்கர பொன்னு என்ட வீட்டில் என்னோடே..”
“…”
“மலர் ஹாப்பியானோ?”
“ரொம்ப ஹாப்பி ஆனால்.. விடுங்க யாராவது வந்தா தப்பா நினைச்சுக்க போறாங்க.”, என்றதில் அவளது எண்ணம் உணர்ந்தவனாய் உடனே இடுப்பிலிருந்து கையை எடுத்துவிட்டு லேசாய் நகர்ந்து நின்றான்.
“சாரி.. மலர் பேடியாய் போயோ?”
“இல்ல அது..”
“மலரே ரிலாக்ஸ். இனி இதுபோல நடக்காது.”, என்றவன் இருபுறமுமாய் அவளது முடிக்கற்றைகளை ஒதுக்கி விட லேசாய் அவன் மீதே சாய்ந்து கொண்டாள்.
“சாரி தங்கம். எதோ ஒரு மாதிரி தப்பு பண்றேனோனு பயம் வந்துருச்சு.”
“மலரை எனக்கு அறியாம். நான் தான் ஏதோ எக்ஸைட்மெண்ட்டில். நீ டென்ஷன் ஆகாத கேட்டோ?”, என்றவன் ஆதரவாய் தலையை வருடிக் கொடுத்தான்.
“ஆங் பின்னே காலையில் நீ பார்க்க வேண்டிய முக்கியமான இடம் ஒண்ணு இருக்கு. எனக்கு அறியாம் யூ வில் லவ் இட்.”, என்றதில் அவளுமே மற்றதை மறந்து வீட்டைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தாள்.
மீண்டுமாய் இருவரும் கீழே சென்ற நேரம் முகுந்தனை விட சற்று ஒல்லியான தேகமாய் அதே நிறத்தில் தகப்பனின் சாயலில் அமர்ந்திருந்தான் அவனது தம்பி உன்னி கிருஷ்ணன்.
“ஹாய் அண்ணி!”, என்றவன் உற்சாகமாய் கையசைக்க மலரும் பதிலுக்கு கைசைத்தவளாய் அருகில் வந்ததும் கைக் குலுக்கினாள்.
“எப்படியிருக்கீங்க கிச்சு?”
“எந்தா இது மரியாதை எல்லாம்?”
“ஹா. என்னை விட இரண்டு வயசு பெரியவராமே அப்பறம் எப்படி மரியாதை இல்லாம!!”
“ஆகா.. சேட்டா டோட்டல் டேமேஜ்..”
“நான் தான் சொன்னேனே ஷி இஸ் வெரி டேன்ஜரஸ்..”, என்ற முகுந்தனை முறைத்தவள் அவனோடு அப்படியே உணவு மேஜையில் அமர்ந்தாள்.
சமையலறையில் இருந்து பார்வதி பாத்திரங்களை எடுத்து வர அதை வாங்கி மேசையில் வைத்தவளாய் உணவின் வாசனையை உள்ளிழுத்தாள்.
“வாசனையே சூப்பரா இருக்கே அத்தை..”
“அத்தையோ?!”
“ம்ம் மாமியாரை காக்கா பிடிப்பது எப்படி? இப்படி தான்.”, என்றவள் ரகசியம் போல் அனைவரிடமும் கூற மூவருமாய் சிரித்தனர்.
“ஓ அப்போ மாமனார் சப்போர்ட் தேவையில்லையோ மோளே?”
“மாமா நான் எப்போ அப்படி சொன்னேன். நாம தான் ஒரு டீம். எப்படியும் இவங்க அம்மா பசங்க தான?”
“ஆமா மோளே. எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”
“இனி நோ கஷ்டம். நான் மாமவோட மோளானு. தெரிச்சு ஓட விடுறோம்.”
“அடிப்பாவி.. வந்தன்னைக்கே என் புருஷனை எனக்கு எதிர் டீமில் சேர்த்துட்டியா?”
“என்ட அம்மே.. நீங்க என்ன அத்தை இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க???!!”
“அவ தமிழ்நாட்டுகாரியல்லே. அப்பறம் தமிழ் பேசாம?!!”
“எதே!!!!”
“ஹா ஹா அம்மா நல்லவே தமிழ் பேசுவா மலரே..”
“ச்ச என்ன அத்தை இது உங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்குத் மலையாளம் தெரியாது. நாம இரண்டு பேருக்கும் சண்டை வந்தா உங்களை ஆசை தீர தமிழில் திட்டிக்கலாம்னு எல்லாம் நினைச்சேனே. எல்லாம் போச்சு”, என்றதில் கிருஷ்ணன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“சேட்டா யூ ப்யூபிள் ஆர் பெர்பெக்ட் மேட்ச்..”, என்ற தம்பிக்கு புன்னகையை பதிலளித்தவனாய் தன்னவளைத் தான் பார்த்திருந்தான் முகுந்தன்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
Super💕
👌👌👌👌👌👌👌
Athai ya malar paathaachu poka
Very nice