226
கடையிலிருந்து கிளம்பியவர்கள் அருகிலிருந்த ஹோட்டலில் அமர்ந்திருந்தனர்..
கார்த்திக் வேண்டியவைகளை ஆர்டர் செய்துவிட்டு திரும்ப சஹானா அப்போதும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..
என்னாச்சு சஹி அப்படி பாக்குற??
இல்ல தீடீர்நு இப்படி வெளில கூட்டிட்டு வந்துருக்கியே அதான்..
அடிப்பாவி நா உன்ன வெளிலேயே கூட்டிட்டு போகாத மாறி சொல்ற?
அவ்ளோ மோசம் இல்லதான் இருந்தாலும் எல்லார்ட்டையும் சொல்லிட்டு கெத்தா வந்தியே அதான் என்று கண்சிமிட்டி கூற
சரியான வாலுடீ நீ..
ஹப்பாடா இப்போதான் நீ என்ன லவ் பண்றநு கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு கார்த்திக்..
அடிப்பாவி என்ன சொல்ற??
இல்ல எனக்கு யாரும் டீ போட்டு கூப்டாலே பிடிக்காது ஆனா அப்பா அம்மாவ கூப்பிடும்போது ஒருமாறி நல்லாயிருக்கும் இப்போ நீ என்ன அப்படி கூப்பிட்டவுடனே ஒருமாறி ஜாலியா இருக்கு என தோள்குலுக்கிச் சிரித்தாள்…
வாய்விட்டே சிரித்தவன் சத்தியமா நீ ஒரு எல் கேஜி தான்..
கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப கஷ்டம்தான் என்று கூறி மறுபடியும் சிரித்தவாறே வந்திருந்த உணவை எடுத்து வாயில் வைக்கபோக சஹானா சாப்பிடாமலே அமர்ந்திருப்பதை கண்டு என்னவென கேட்க வாய்திறந்து ஊட்டிவிடுமாறு செய்கை செய்தாள்..
தன்னவளை ரசித்தவாறு அவளிடம் உணவை நீட்ட அவள் உண்ண ஆரம்பித்தாள்..
அங்கு ஷரவ் சிவாவோடு பீச்சில் அமர்ந்திருக்க,ஷரவ் இருக்குற விலைவாசில எதுக்கு என்கேஜ்மெண்ட்ட தனியா கல்யாணத்தை தனியா பண்ணிகிட்டு பேசாம உங்க அண்ணா கல்யாணத்தனைக்கே நாமளும் மேரேஜ் பண்ணிப்போம் என்ன சொல்ற??
ஹா அதெல்லாம் முடியாது..இன்னும் இரண்டு வருஷத்துக் கதையவே பேசி முடிக்கல அதுக்குள்ள மேரேஜ்ஜா நோ வே..
நீ இந்த இரண்டு வருஷத்தை விடவே மாட்ட போலேயே..
அப்படி என்னதான் தெரினும் உனக்கு..
நல்லா கேட்டீங்க போங்க எனக்காக ஒருத்தர் ரெண்டு வருஷம் காத்திருந்தாருங்கிறது எவ்ளோ பெரிய விஷயம் அதைப்பத்தி எனக்கு தோணுற அப்போ எல்லாம் கேட்டுட்டே தான் இருப்பேன்..
ஆமா எந்த நம்பிக்கைல நா கிடைச்சுருவேன்னு நினைச்சீங்க??
ம்ம் உண்மைதான் ஷரவ்..உன்னை பாத்த நாள்ல இருந்து இங்க குன்னூர்லநு தேடினேன்..
ஆனா உன் பேர் கூட தெரியாம எப்படி தேட முடியும்நு அப்போ எனக்கு தோணவேயில்ல..என் ப்ரெண்ட்ஸ்லா திட்டினாங்க..
என்னடா சின்ன பையன்மாறி பேசுற எந்த டீடெயில்லுமே இல்லாம என்னனு தேடுறதுநு கேட்டாங்க நாள் ஆக ஆக எனக்கும் நா பண்றது முட்டாள்தனம்நு தோணிச்சு..
அதே நேரம் வீட்ல கல்யாண விஷயமா பேச அவங்ககிட்டயும் விஷயத்த சொன்னேன்..
ஆனா அம்மா அப்பா ரெண்டு பேருமே கோபம்லா படல ப்ரெண்ட்ஸ் கேட்ட கேள்விதான் அவங்களுக்கும்..
எனக்கும் என்னோட சந்தோஷத்துக்காக அவங்கள வருத்தப்பட வைக்குறதுல இஷ்டமில்ல அதனால ரெண்டு வருஷம் டைம் கேட்டேன்..
கேரியர்ல இம்ப்ரூவ் ஆகனும் அதே நேரம் அதுக்குள்ள உன்னை பாத்துட்டேன்னா உன்னதான் கல்யாணம் பண்ணிப்பேன்..
ஒரு வேளை நீ கிடைக்கலனா கண்டிப்பா அம்மா அப்பா பேச்ச கேட்டுத்தான் நடந்துருப்பேன் பட் தேங்க் காட் அதுகுள்ள நா உன்ன பாத்துட்டேன் என்றவாறு அவளை பார்க்க அவனையே கண்கொட்டாமல் பார்த்திருந்தவளை தோள்தட்டி என்னவென கேட்க..
இல்லப்பா உங்கள எனக்கு காட்டினதுக்கு நா தான் கடவுளுக்கு நன்றி சொல்லனும்..
என்னதான் தன் வாழ்க்கை நானாலும் அதை மட்டுமே நினைக்காம பெத்தவங்களோட மனசையும் காயப்படுத்தாம இருக்க நினைச்சு அதை மறைக்காம என்கிட்டயும் சொல்றீங்க பாருங்க இந்த மனசு எல்லாருக்கும் வந்துராது..
என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
அங்கு கார்த்திக்கோ சஹி போதும் இதோட ஆறாவது ஐஸ்கீரிம்..கோல்ட் வர போது வா போலாம்..
நீயெல்லாம் எப்படி லவ் பண்ண..நா பாவம்தான்..
சும்மா சொல்லாத..நா அப்போ பிக் கேள் ஆய்டுவேன்..
தெரியுமா இனி நா உன்ன பேர் சொல்லி கூப்பிட போறதில்ல..
அய்யய்யோ இப்படீ அதிரடி முடிவெல்லாம் எடுக்காதம்மா..
எல்லாரையும் சமாளிக்கனுமா இல்லயா..சரி சொல்லு எப்படி கூப்பிட போற..
கிண்டல் பண்ணாம கேளு மாமா..
என்னது மாமாவா..என விழுந்து விழுந்து சிரிக்க எதிரிலிருந்தவளோ கையில் தண்ணீர் டம்ளரை எடுத்து வேண்டாம் மாமா கிண்டல் பண்ண மேல கொட்டிருவேன்..
ஐயோ அம்மா தாயே எதுவும் பண்ணிடாத சரி சிரிக்கல..
ஆமா இந்த டீ போட்டு கூப்பிட்டதுக்கு ஒரு கதை இருந்த மாறி இதுக்கும் எதாவது வச்சுருப்பியே என்னனு சொல்லு..
ஐயோ எப்படி மாமா..சரி சொல்றேன் கேளு இரண்டு நாள் முன்னாடி ஒரு கனவு அதுல நீயும் நானும் பச்சைபசல்நு வயல்வெளில ஒரு 80’ஸ் ஹீரோ ஹீரோயின் கெட்டப்ல நடந்து போறோம்..
அதுல ஹைலைட் என்னனா நீதான் பேசிட்டேயிருக்க நா சமத்தா அமைதியா உன்னோட வரேன்..
கார்த்திக்கிற்கு ஏனோ இது அவளின் மாற்றத்திற்கு தொடர்புடையதாய் தோன்றியது..
அப்போ தீடீர்நு கால்ல ஏதோ ஊர்ற மாறியிருக்க பயந்துபோய் மாமாநு உன் கையஇருக்கமா பிடிச்சுகிட்டேன்..என்றவைள் அமைதியாக.
என்ன சஹி அப்பறம் என்னாச்சு..தெரிலயே நாதான் முழிச்சுட்டேனே என்றவளை ஆற்றாமையாய் பார்த்தான்..
என்ன மாமா ரியாக்ஷன் இது..நா எவ்ளோ அழகா ஒரு லவ் ஸ்டோரி சொல்றேன் நீ என்னவோ ஹாரர் ஸ்டோரி கேட்ட மாறி ரியாக்ஷன் குடுக்குற..
ஆங் அதெல்லாம் ஒண்ணுமில்ல சஹி எதோ கடிச்சுதுநு சொன்னியா அதான் என்னவோநு பயந்துட்டேன்..
மாமா நல்லவனா இருக்கலாம் ஆனா அந்த நல்லவனே நாதான்ங்கிற ரேஞ்ச்ல இருக்கக்கூடாது..
ம்ம் போதும் போதும் என்ன கிண்டல் பண்ணது..சீக்கிரம் கிளம்பு நாம ஊருக்கு போறதுக்கு டிக்கெட் வேற புக் பண்ணணும்..
மாமா அவங்க எல்லாரும் ப்ளான் பண்ணபடி டூ வீக் கழிச்சு வரட்டும் நாம இந்த வீக்கெண்ட் போலாமா ..
என்ன சஹிம்மா கல்யாணத்துக்கு முன்னாடி தனியா எப்படிடா வீட்ல கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க..
எனக்கு போணும் போல இருக்கே..
ம்ம் சரி வேணா ஒண்ணு பண்ணலாம் நீ நா சிவா ஷரரவ் ஷரவன் மொதல்ல போலாம் பெரியவங்கலா அப்பறம் வரட்டும் என்ன சொல்ற???
வாவ் சூப்பர் மாமா..டபுள் ஓ.கே..
ம்ம் கல்யாணமே ஆகல அதுகுள்ள பேமிலி டூர் போற நிலைமைலல இருக்கேன் என்ன பண்றது என கார்த்திக் போலியாய் அலுத்துக் கொள்ள,
நா உனக்கு பெட்டர் ஆப்ஷன் தான் குடுத்தேன் மாமா நீ தான் யூஸ் பண்ணிக்கல
ம்ம் எதுவும் பண்ண மாட்டேன்ங்குற தைரியம்..வா ஒரு வாரம் என்கூட தான் இருக்கனும் அப்போ பாத்துக்குறேன்..
போ மாமா காமெடி பண்ணிகிட்டு..
யாரு நா காமெடி பண்றேனா பாக்கதான போற..
பாக்கலாம் பாக்கலாம் இப்போ கிளம்பலமாஇல்ல இன்னோரு ஐஸ்கீர்ம் சொல்லவா??
அய்யோ ஆளவிடு வா வா போலாம் என எழுந்து நடந்த நேரம் எதிரில் வந்தவன் யாருடனோ பேசியவாறே சஹானாவின் மேல் மோதிவிட சாரி சொல்ல திரும்பியவள் முகத்தில் கோபம் வெறுப்பு ஏதோ பார்க்க கூடாதவனை பார்த்த முகபாவத்தோடு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்..
ஹே சஹி என்னாச்சுஅவர உனக்கு தெரியுமா ஏன் கோபமா வர??
என்ன அவரு சுவருநு இடிச்சுட்டு சாரி கேக்கனும்ங்கிற மேனர்ஸ் கூட இல்ல அவனுக்கென்ன மரியாதை..
ஹே அவன் வேணும்நு இடிச்சமாறிலா தெரில யார்ட்டயோ பேசினதுல. கவனிக்காம இடிச்சுட்டான்..
என்னவோ அவனும் மூஞ்சியும் எனக்கு அவன பாத்தாலே பிடிக்கல..
போலாம் மாமா..அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பினான்..
சஹானாவை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை அடைந்தவன் தங்கள் ட்ரிப் பிளானை பற்றி பெற்றவர்களிடம் கூற..கீதா தான் பயந்தார்..
என்னப்பா கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் சரி வருமாயாராவது எதாவது சொல்ல போறாங்க..
ம்மமா எல்லாரும் சேர்ந்து தான போறோம் அங்கயும் சஹானாவோட பூர்வீக வீட்ல தான் தங்க போறோம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கம்மா..
என்னவோப்பா இந்தகால பசங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான் பாத்து போய்ட்டு வாங்க என்றவாறு மோகனும் கீதாவும் நகர,
அண்ணா என்ன ஏன் கோர்த்துவிடுற??நீங்க போய்ட்டு வாங்க..
என்ன ஷரவன் ஜஸ்ட் அ பேமிலி ட்ரிப் ஜாலியா போய்ட்டு வரலாம் வாடா..நாம ஸௌத் சைட்லா போனதேயில்லையே இதுவரை..
உனக்கும் போட்டோ எடுக்க நிறைய சீனரீஸ் கிடைக்கும்.. அப்பறம் ஷரவ் சிவாட்ட நானே கேக்கவா இல்ல நீ கேக்குறியா?
போ அண்ணா நீயே கேட்டுக்கோ..என்று உள்ளே ஓடிவிட மொபைலை கையில் எடுத்தவாறு வாசலுக்கு வந்தவன் சிவாவை அழைத்து விஷயத்தை கூற,
வாவ் செம ப்ளான் கார்த்திக்…ஆமா டீச்சரம்மாகிட்ட கேட்டீங்களா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அவங்க தான்..
ஹாஹா அதெல்லாம்கேட்டாச்சு தைரியமா வாங்க
க்ரேட்தென் நாளைக்கு மீட் பண்ணி ப்ளான் பைனலஸ் பண்ணிடலாம்..
போனை வைத்துவிட்டு திரும்பியவனின் கண்களில் ஏதோ வித்தியாசமாய் பட அதனருகில் lசென்றான்..
அரச மரத்தின் ஒரு கிளை கீழே விழுந்துகிடக்க அதை கையில் எடுத்தவனுக்கோ தன் கண்களையே நம்ப முடியவில்லை அழகழகான ஓவியங்கள் வயல்வெளி,வீடு,நதி அதையடுத்து ஒரு பெரிய கோவில் அதையே பார்த்திருந்தவனை ஷரவன் அழைக்கும் சத்தத்தில் சட்டென கிளையை கீழே விட வா அண்ணா அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..
இதோ வரேன் என்றவன் கீழே பார்க்க அது வெறும் இலைகளாய் இருந்தது..
என்ன அண்ணா எதையாவது தொலைச்சுட்டியா??
அதெல்லாம் ஒண்ணுமில்ல டா வா போவாம் என அங்கிருந்து நகர்ந்தான்..
மறுநாள் டிர்ப் ப்ளான் பைனலைஸ் செய்வதற்காக சிவாவை பார்க்க சென்றிருந்தான்..
கார்த்திக் கொஞ்ச நாளாவே வொர்க் ஜாஸ்தி நானே ப்ரேக் எடுக்கனும்னு நினைச்சேன் கரெக்ட் டைம்ல இந்த ப்ளான் அமைஞ்சுடுச்சு..
நம்ம கார்லயே போய்டலாம்..நீங்களும் ட்ரைவ் பண்ணுவீங்க சோ மேனேஜ் பண்ணிக்கலாம்..
என்ன கார்த்திக் நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன யோசிக்குறீங்க??
ஆங்ங் இல்ல ஒரு கோவில் பாத்தேன் ரொம்ப நல்லாயிருந்தது சிவா..
ஓ நைஸ் எங்கயிருக்கு??
எங்க வீட்டு வாசல்ல..
வாட்?????
ஸாரி நா உங்ககிட்ட முழுசா விஷயத்தை சொல்லல..என நடந்தவற்றை கூற சிவா தலையில் கை வைத்துவிட்டான்..
சுத்தம் இவ்ளோ நாள் சஹானா தான் யாருக்கோ டப்பிங் குடுத்துட்டு இருந்தானா இப்போ நீங்க ராமநாராயணன் படம் மாறி விஷுவல் எபெக்ட்லா குடுக்குறீங்க..
வர வர நம்ம நிலைமை சூனியகாரிட்ட மாட்டின சோட்டாபீம் மாறி ஆய்டுச்சு..என சோகமாய் கூற,
தன் சிந்தனையையும் மீறி கார்த்திக் சிரித்துவிட்டான்..
ம்ம் சிரிங்க சிரிங்க இன்னும் அங்க போனா என்னெல்லாம் நடக்குமோ கடவுளே நீ தான் காப்பாத்தனும்..
அடுத்த இரண்டு நாட்கள் ரெக்கை கட்டிபறக்க இரவு 8 மணிக்கு சஹானாவோடு சிவா கார்த்திக் வீட்டை அடைய இனிதே ஆரம்பமானது அவர்களின் பயணம்..
சிவா அருகில் கார்த்திக் அமர மற்ற மூவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்..
திண்டிவனம் தாண்டிய மோட்டலில் உணாவை முடித்துவிட்டு கிளம்ப கார்த்திக் வண்டியை இக்கினான்..
சுமோ டைப் வண்டி என்பதால் ஷரவன் ஷரவந்தி பின்னிருக்கை களில் படுத்துக் கொள்ள சஹானா நடுவில் படுத்திருந்தாள்..
அதிகாலை ஐந்து மணி சில்லென்று அடிக்கும் வாடை காற்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசெலென வயல்வெளிகள்..
அத்தனை ரம்மியமான காலை வேளையை முதன்முறையாய் அனுபவித்தவன் கண்களில் படுகிறது அந்த பெயர்பலகை..
அம்பாசமுத்திரம் நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.!!!!!!
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
💞💞💞💞💞💞
Super💕 super
அவன் பார்த்த வீடு, கோயில் எல்லாமே இங்கே தான் இருக்கோ
Nice