294
விடிந்தும் விடியாத அந்த காலைவேளையிலேயே வாசல் தெளித்து கோலம் போட்டு அதன் நடுவில் சாணியைபிடித்து செம்பருத்தி பூ வைக்கும் பெண்களை பார்த்தவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது..
சிவா இன்னமும் கூட இந்த பழக்கமெல்லாம் ஃபாலோ பண்றாங்களே ஆச்சரியமா இருக்கு…
ம்ம் இதோ பின்னாடி பாருங்க நம்ம பத்தினி தெய்வங்கள் என்ன தூக்கம் தூங்குதுங்கநு அப்போ இதெல்லாம் பாத்தா ஆச்சரியமா தான் இருக்கும் இதுங்கள எழுப்பிவிடுறேன் பர்ஸ்ட்..
ஹா ஹா விடுங்க சிவா பக்கத்துல போய்ட்டு எழுப்பிக்கலாம்..
அது சரி இப்படி பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்களே கார்த்திக்.. சஹானா எழுந்துரு..
ஏ எருமை என்ன காலங்காத்தல வந்துருக்க பெரிம்மா சாப்பாடு போடமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?? என அரைகுறையாய் அவள் உளர
அய்யோ கார்த்திக் முன்னாடி மானம் போகுது அடச்சீ எழுந்துரு..
மாமாவா நீ என்ன பண்ற இங்க??
மாமா???இதுவேறயா கடவுளே பாரு எனக்குநு ஒண்ணு இருக்கே இப்படி எதாவது பாசமா பேரு வச்சு என்னைக்காவது கூப்ட்டுருக்கா ம்ம் அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்..
என்ன அங்க சத்தம்???-ஷரவந்தி..
எழுந்துட்டியா ஷரவ்ம்மா..சும்மா பேசிட்டு இருந்தேன்டா..கார்த்திக் அனைத்தையும் கண்டு சிரித்தவாறே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்..
சிவா வழி சொல்ல அடுத்த 15 நிமிடங்களில் வீட்டை அடைந்தனர்..
மேலப்பாளையம் தெரு விநாயகர் தெரு நடுவில் கோவிலில் கம்பீரமாய் வீற்றிருக்க நான்கு புறங்களீலும் தெரு முழுவதும் வீடுகள்..
கார்த்திக் இறங்கி வீட்டை பார்க்க முதல் ஆச்சரியம் அவனுக்கு காத்திருந்தது.. அவன் வீட்டு வாசலில் கண்ட அதே வீடு..
நடுவில் கம்பீரமாய் மாடியோடு அந்த வீடு அமைந்திருக்க அதை சுற்றிலும் சிறு சிறு வீடுகள் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தது..
அவர்கள் இறங்கிய அடுத்த நொடி உள்ளிருந்து பின் நாற்பதுகளில் ஒருவர் ஓடி வந்தார்..
வாங்க வாங்க கண்ணுகளா..சிவா தம்பி எப்படியிருக்கீக.. என்னமா வளந்துட்டீக..அம்மா அப்பாலா சுகந்தானா???
மணி அண்ணா கொஞ்சம் மூசச்சு வாங்கிக்கோங்க எல்லாரும் நல்லாயிருக்காங்க..
நீங்க எப்படியிருக்கீங்க??கௌரி எப்படியிருக்கா??
எனக்கென்ன தம்பி நல்லாயிருக்கேன்.. தம்பிதான் நம்ம வீட்டு மாப்ளையா.. ஆமா எங்க சஹானாம்மாவ காணும்???
அதற்குள் அவரின் முதுகுப்புறம் சென்றவள் அவரின்மேல் உப்புமூட்டை ஏறி,,மணி அண்ணா எப்படியிருக்கீங்க?? என்றவாறு முன் வந்தாள்..
சஹானாம்மா இன்னும் நீ பழசையெல்லாம் மறக்கவேயில்ல.. என்றவரின் கண்கள் ஆனந்தத்தில் நனைய ஆரம்பித்தது..
என்ன அண்ணா உங்கள எப்படி மறப்பேன்..
உங்களுக்கும் கௌரிக்கும் என்னலா வாங்கிட்டு வந்துருக்கேன் பாருங்க.. என்றவாறு துள்ளி குதித்து முன் சென்றவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் கார்த்திக்..
அவ அப்படிதான் கார்த்திக்..இங்க வந்தாலே அவளுக்கு சகலமும் மணி அண்ணாதான்..
பார்ட்னர் இன் க்ரைம்..அவ பண்ற தப்பெல்லாம் பாட்டிட்ட மறைச்சு தான் திட்டு வாங்கிப்பாரு..
பாட்டி தாத்தா காலத்துக்கு அப்பறம் இந்த வீட்டையெல்லாமே வாடைக்கு விட்டுட்டோம் இவரு தான் பொறுப்பா பாத்துக்குறாரு..
அவரும் அவரு பொண்ணும் அந்த வீட்ல தங்கிருக்காங்க..என்றவாரு உள்ளே நுழைந்தனர்..
அந்தகால கட்டிட்ட அமைப்பின்படி மூன்று படிகள் அதை சுற்றியும் வீட்டின் அளவிற்கு மொசைக் கற்களால் சின்ன சிட் அவுட் போன்ற அமைப்பு..
படிகளேறி உள்ளே சென்றால் பெரிய வராண்டா அதனை தொடர்ந்து பட்டாளை எனப்படும் ஹால்..
அதன் வலது ஓரத்தில் ஒரு அறை அதையடுத்து சின்னதாய் டைனிங் ஹால் அதன் ஓரத்தில் சிறியதாய் அறைவீடு(ஸ்டோர் ரூம்) அதன் மறுபுறம் மற்றொரு படுக்கையறை அதன்பின் அடுக்களை(கிச்சன்) தரை முழுவதும் சிறு சிறு சதுர செங்கல் போன்ற அந்தகால தரை..
காலை வைக்கும்போதே குளிர் தலைக்கு ஏறுவதாய் இருந்தது..
ரொம்ப அழகாயிருக்கு சிவா மாமா.. என்னதான் இப்போ விதவிதமா டைல்ஸ் போட்டாலும் இந்த சுகமே தனிதான்..
ம்ம் உண்மைதான் ஷரவன்..சின்ன வயசுல அதோட அருமை தெரில இப்போ நினைச்சாகூட அடிக்கடி வர முடில..
சரி நீ இந்த ரூம் எடுத்துக்கோ..ஷரவ் நீயும் சஹானாவும் ப்ரெண்ட் ரூம்ல தங்கிக்கோங்க நாங்க மாடில தங்கிக்கிறோம்..
ஓ.கே சிவா நாங்க சீக்கிரமா குளிச்சு ரெடி ஆய்ட்டு வந்துடுறோம்..இப்போவே வெளில போலாம்..
ஹலோ மேடம் பாத்ரூம்ல பாதி பக்கெட் தண்ணிய வச்சு பாத்து பாத்து குளிக்க இது ஒண்ணும் உங்க சிட்டி இல்ல குளிக்கவே வெளிலதான் போறோம்..
இந்தா மொதல்ல காபிய பிடி சாப்ட்டு ரெப்ரெஷ் ஆய்ட்டு வா போலாம் என்றவாறு சஹானா அனைவருக்கும் மணி கொடுத்த காபியை கொடுத்தாள்..
அடடா என் அருமை தங்கச்சிக்கு இவ்ளோ பொறுப்பா ஓ காட் என்னால நம்பவே முடில..
டேய் எரும போதும் மாமாக்கு போய் ரூம காட்டு போ என்றவாறு கிச்சனுக்குள் நுழைந்தாள்..
கார்த்திக் சிவா இருவரும் மாடிக்கு செல்ல தயாராக வராண்டாவில் இருந்தது அதற்கான படிகள்..
மாடியிலும் முன்னதாய் பெரிய வராண்டாவும் அதனையடுத்திருந்த ஹாலில் இரண்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன..
ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராக அடுத்த பத்தாவது நிமிடம் அனைவரும் தயாராகி வெளியே வந்தனர்..
சிவா காரை எடுக்க போக சஹானா அவனை தடுத்து நடந்தே போலாம் சிவா என்றாள்..
மற்றவர்களும் சம்மதிக்க நடக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் சிறியதாய் ஒரு நீர்நிலை வர ஷரவ்,ஹே இவ்ளோ பக்கத்துலயா சூப்பரா தண்ணி போகுதே..
ஏ டீச்சரம்மா இது வாய்க்கால் ஆறு இல்ல இன்னும் நடக்கனும் என்றவாறு சிவா முன் செல்ல சஹானா மெதுவாய் கார்த்திக் அருகில் வந்து என்னாச்சு மாமா வந்ததிலேயிருந்து கவனிக்குறேன் பேசவே மாட்ற என்னாச்சு???
அதெல்லாம் ஒண்ணுமில்ல சஹி ட்ரவல் கொஞ்சம் டயர்டா இருக்கு வேற ஒண்ணுமில்ல..
ஓ..சரி சரி தாமிபரணில குளிச்சுட்டு போய் படுத்தா ஒரு தூக்கம் வரும் பாரு உன் அலுப்பெல்லாம் இருந்த இடம் தெரியாம போய்டும் சரியா என்றவாறு மற்றவர்களோடு இணைந்து கொண்டாள்..
ஆனால் உண்மையில் கார்த்திக்கின் அமைதிக்கு காரணமே சஹானாவின் இந்த உற்சாகம்தான்..
இங்கு வந்தது முதலே கூடுதல் பிரகாசம் தெரிவதாய் இருந்தது அவள் முகத்தில்..
எந்த ப்ரச்சனையும் வராமல் பாத்துக்கோ கடவுளே என ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தான்..
சற்றுதூரம் சென்றதுமே நீரின் பேரிரைச்சல் கேட்க ஷரவன்,வாவ் தண்ணியோட சத்தமா இது இதெல்லாம் சினிமால தான் பாத்துருக்கோம்..
எக்ஸ்ட்ராடினரி ப்லேஸ் என்றுகூற அனைவருக்குமே அதே எண்ணம்தான்..
ஆற்றின் அருகில் வந்த கார்த்திக்கிற்கு அடுத்த ஆச்சரியம் அவன் கண்ட அதே அமைப்பிலிருந்த ஆற்றங்கரை..
பெரிய பெரிய படிகள் அமைந்திருக்க வலது ஓரத்தில் சின்னதாய் ஒரு விநாயகர் கோவில் ஆற்றின் நடுவில் சற்றுதூரம் வரை பாதை அமைத்து அதன் நடுவில் நாக கன்னிகைகள் அமைக்கப்பட்டிருந்தன..
ஷரவ் ஒவ்வொரு காலாய் மாற்றி மாற்றி விட்டவாறு நீரின் குளுமையை சோதித்து கொண்டிருக்க அவள்பின் வந்த சஹானாவோ அதுசரி இப்படி பண்ணி எப்போ குளிக்குறதா உத்தேசம் என்றவாறு தலையிலிருந்த ஹேர்பேண்டை கழள்றியவாறு நீரில் குதித்து வீட்டிருந்தாள்.. ஹே சஹி..
கார்த்திக் பயப்படாதீங்க அவளுக்கு நல்லாவே நீச்சல் தெரியும்..-சிவா..
நிம்மதி பெருமூச்சுடன் அவனும் குளிப்பதற்காக இறங்க நேரம் போவதே தெரியாமல் ஆட்டம் போட்டவர்களுக்கு மணி உணவு எடுத்து வந்த பின் தான் நேரத்தை பற்றியே யோசித்தனர்..
என்ன அண்ணா நாங்களே வந்துருப்போமே நீங்க ஏன் வீணா அலையுரீங்க-சஹானா..
தாயீ மணி பத்தாகுது மூணு மணிநேரமா ஆளையே காணும்னுதான் நானே கொண்டு வந்துட்டேன் வாங்க சாப்பிடலாம் எல்லாரும்..
ஹா அதனாலதான் வயிறு லைட்டா சவுண்ட் குடுத்தது போல என்றவாறு ஷரவன் கரைக்கு வர ஒவ்வொருவராய்மேலே வர இறுதியாய் வந்த கார்த்திக்கின் கைப்பற்றி நிறுத்தினாள் சஹானா..
மாமா இங்க உக்காரலாம்என்றவாறு நீருக்கடியில் ஒரு பாறையை தேடிபிடித்து அதில் அமர்ந்தாள்..
அவனும் அருகில் அமர்ந்து ஆளுக்கொரு தட்டை கையில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்..
மாமா பிஷ் மசாஜ் கேள்விப்பட்டுருக்கியா??
ம்ம் அது ஒரு சைனீஸ் மெத்தேட்.. இப்போ நம்ம ஊர்ல மால்ல கூட வச்சுருக்காங்களே.. அதுக்கென்னடா??
ம்ம் கரெக்ட் அதேதான் பட் இப்போ நா அதை உனக்கு ஃப்ரீயா பண்ணிக்காட்ட போறேன்..
என்றவாறு கையிலிருந்த இட்லியை இருவரின் கால்களின் அருகிலும் நீருக்குள் போட அவர்கள் காலையே மறைத்த வண்ணம் மீன்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க ஆரம்பிக்க கூச்சம் தாங்காமல் கார்த்திக் விரல்களை அசைத்தான்..
எப்படி சூப்பரா இருக்குல..இதுக்காகவே பாட்டியோட ஆத்துக்கு வருவேன் சின்ன வயசுல..
என்றவளை தலைகோதி டேக் கேர் டீ என்றான்..அஅதான் நீ இருக்கல மாமா..
என்றவள் உணவை உண்ண ஆரம்பிக்க அடுத்த ஒரு மணி நேரம் சிட்டாய் பறந்தது..
ஒரு வழியாய் மணி அனைவரையும் கிளப்பிக் கொண்டு நடக்க ஆரம்பிக்க சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தை நெருங்கும் போது புயலாய் கடந்த ரயிலின் சத்தத்தில் சஹானா அலறிஅடித்து கார்த்திக்கை தஞ்சம் அடைந்தாள்..
மாமா வேணாம் இந்த சத்தம் வேணாம் மாமா.. போ சொல்லு மாமா.. என்ன இங்கிருந்து கூட்டிட்டு போய்டு ப்ளீஸ் மாமா..
சஹி என்னாச்சு இங்க பாரு என்னடீ என்ன பாரு கண்ணத் தொற என்ற எதையுமே காதில் வாங்காமல் மயங்கிச் சரிந்தாள்..
சில நிமிட போராட்டத்திற்கு பின் சஹானா கண்விழிக்க அங்கிருந்த அனைவருக்குமே ஒன்றும் புரியவில்லை கார்த்திக்கோ மொத்தமாய் உடைந்திருந்தான்..சஹி..
போலாம் மாமா வீட்டுக்கு போலாம் என அவள் கைப்பிடித்து இழுக்க ஒன்றும் கூறாமல் சிவாவிடம் கண்ஜாடை காட்டி நகர்ந்தான்…
வீட்டிற்கு வந்தவவர்கள் அனைவரும் ஹாலில் நிற்க சஹானா சோர்வாய் அவளறைக்குச் சென்றாள்..
கார்த்திக் அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் தலைகோத ஒன்றும் கூறாமல் கண்ணயர்ந்தாள்..
அவள் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் வெளியே வர அங்கு அனைவரின் முகமும் ஒளியிழந்திருந்தது..
ஷரவந்தி ஓடிவந்து அவன் கையை பிடித்தவாறு,என்ன அண்ணா இவ்ளோ நடந்துருக்கு எங்ககிட்ட சொல்ல மாட்டியா..
நாங்கலா உனக்கு உதவி பண்ணமாட்டோமா..அண்ணிக்கு ஒண்ணுமில்ல நீ தைரியமாயிரு..
என அடுக்கிகக் கொண்டே போக கார்த்திக்கோ இயலாமையாய் சிவாவை பார்த்தான்..
மன்னிச்சுருங்க கார்த்திக் நானே ரொம்ப பயந்துட்டேன்..
அதுக்குமேல என்னால மறைக்க முடில..கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும்..
ஆமா தம்பி என் தாயீ துடிச்சத பாத்து உசுரே போய்டுச்சு..-மணி..
அண்ணா தயவுசெஞ்சு இந்த விஷயத்தை பத்தி..
தம்பி செத்தாலும் இதபத்தி வாயே தொறக்கமாட்டேன்.. என்னை தாராளமா நம்பலாம்..என்ன செய்யனும்னு சொல்லுங்க..
இங்க பெரிய கோவில் எதாவது இருக்கா??என் கணிப்பு சரினா எனக்குத் தேவையானது இங்க பக்கத்துலதான் இருக்கு..
சில நொடிகள் யோசித்தவர்,ஒருவேளை நீங்க நம்ம ப்ரம்மதேசம் கோவில சொல்றீகளோ..
இங்க பெரிய கோவில்னா அதுதான்.. ஒரு 31/2 கி.மீ தான் நாளைக்கு கூட்டிட்டு போறேன்..
எல்லாரும் களைப்பா இருப்பீக சாப்ட்டு ஓய்வு எடுத்துக்கோங்க..சாயங்காலமா பக்கத்துல இருக்குற இரண்டு மூணு கோவில்க்கு போலாம் என்றபடி அவர் நகர..
ஷரவ் ஒரு நிமிஷம் சஹானாவ பாத்துட்டு வந்துறேன்..நீ போ அண்ணா நா இங்க சோபால படுத்துக்குறேன்..
சலனமில்லாமல் தூங்குபவளை கண்டவனின் மனமோ பாரமாய் இருந்தது..
எதை நினைத்து பயந்தானோ அது நடந்துவிட்டதே என எண்ணித் தவித்தான்..
நாற்காலியில் பின் தலை சாய்த்து அமர்ந்தவன் தன்னை அறியாமல் கண்ணயர சற்று நேரத்தில் தன் நெற்றியில் பட்ட ஸ்பரிசத்தில் கண்விழிக்க சஹானா..
இடவலமாய் தலையசைத்தவள் சஹானா இல்ல மாமா தேவிகா என்னைக்குமே உன்னோட தேவிகா தான்..
கவலபடாத மாமா எனக்கு ஒண்ணும் ஆகாது..கூடிய சீக்கிரம் உனக்கே எல்லாம் புரியும்..
உன்னால நடக்க வேண்டிய ஒரு வேலை முடிஞ்சவுடனே சஹானாவா முழுசா உன்கிட்டயே வந்துருவேன் என்றவாறு நெற்றியில் இதழ்பதிக்க ஏதோ ஒரு சத்தத்தில் பதறி எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்க்கசஹானா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்..
ஒரு நொடி இதயத்துடிப்பு அதிகமாய் இருப்பதாய் உணர்ந்தான்.ஏதேதோ யோசித்தவனுக்கு சட்டென தோன்றியது முன்ஜென்மம்..
பல நிகழ்வுகளும் அவனுக்கு அதையே தெளிவு படுத்துவதாய் இருந்தது..
அதற்குள் சஹானா எழுந்துவிட அவளருகில் சென்று அமர்ந்தான்..
சட்டென அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்..
என்னனு தெரில மாமா திடீர்நு ட்ரெயின் சத்தம் கேட்டவுடனே பயந்துட்டேன் போல.. என்னாச்சுனே தெரில.. என்றவள் சாய்ந்தவாறே அவனை ஏறிட்டுப் பார்க்க..
பரரவால்ல சஹி இப்போ பெட்டரா இல்ல டாக்டர் வேணா பாத்துட்டு வந்துரலாமா??
அதெல்லாம் வேண்டாம் மாமா..பசிக்குது சாப்ட போலாமா??
ஹய்யோ மறந்தே போய்ட்டேன் பாரு வா சசாப்டலாம்..
என்றவன் அவளோடு டைனிங் டேபிளில் அமர ஷரவந்தி பரிமாறினாள்..
இப்போ பெட்டரா அண்ணி??கசாயம் எதாவது போட்டு தரவா??
அதெல்லாம் வேண்டாம் ஷரவ்..நீங்க எல்லாரும் சாப்டாச்சா??
ம்ம் சாப்டோம் அண்ணி எனும்போதே ஷரவனும் சிவாவும் வர அவர்களும் பொதுவான நலவிசாரிப்போடு நிறுத்திக் கொண்டனர்..
சஹானாம்மா இந்தா உனக்கு பிடிச்சச இஞ்சி காபி எல்லாரும் சாப்பிடுங்க காலைல ஆத்துல போட்ட ஆட்டத்துக்கு உடம்பு அலுப்பு இல்லாம இருக்கும்..
சரி வாரீகளா இங்க பக்கத்துல சுத்தி பாத்துட்டு வருவோம்..
ஹே நா ரெடி போலாம் போலாம் என ஷரவ் ஷரவன் ஆர்பரிக்க. அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் தயாராகி வெளியே வந்தனர்..
நகரங்களில் பக்கத்துவீட்டிலிருப்பவர்களையே மாதம் ஒருமுறை பார்க்கும் நிலைமையில் இருக்க இங்கு தெருவில் அனைவரும் மணியிடம் விசாரித்தனர்..
நம்ம சிவகாமி பேரன் பேத்தியா எம்புட்டு வளந்துட்டாக..அப்பா அம்மா லா நல்லாயிருக்காகளா??
ரொம்ப வருசம் ஆச்சு பாத்து என உரிமையோடு அக்கறையாய் விசாரிப்பது ஆச்சரியமாய் இருந்தது..
வீட்டின் பின்தெருவிலேயே இருந்தது அந்த அழகிய அம்மன் கோவில்..
கோவிலின் உள்நுழையும் போதே அப்படி ஒரு குளிர்ச்சி அந்த கால சிமெண்ட் தரை..
அம்மனை மனமாற வேண்டிக் கொண்டு கிளம்பியவர்கள் காரில் சற்று தூரத்தில் இருந்த சிவன் கோவிலை அடைந்தனர்..
அந்த வட்டாரத்தில் பெரிய கோவில் என்றழைக்கப்படும் அங்கு காசிநாதரும் மரகாதாம்பிகை தாயாரும் அருள்பாலிக்கின்றனர்..
அந்த இடத்தை பார்த்தவர்களுக்கு இயற்கை அன்னை மொத்த அழகையும் அங்கு பொழிந்திருப்பதாய் தோன்றியது..
அனைவரும் உள்ளே சென்று வேண்டுதலை முடித்து வெளியே வர,என்ன கண்ணுகளா கோவிலுக்கா கூட்டிட்டு போறனேனு நினைக்குறீகளா இங்க இதவிட்டா பாக்குறதுக்கு ஒண்ணுமில்லப்பா..
அண்ணா இந்த ஊர்ல நீங்க எங்க கூப்டாலும் நாங்க வரலநு சொல்லவே மாட்டோம்..
என்ன அழகு.. சூரியன் மறையுர நேரம் பச்சைபசெல்னு வயல்வெளி அதுக்கு நடுல இவ்ளோ அழகா ஒரு கோயில் வேறென்ன வேணும் நா போட்டோ எடுத்துட்டு வந்துரேன் என்று செல்ல அனைவரும் வெளியிலிருந்த திண்ணையில் அமர்ந்தனர்..
மணி அண்ணா பாட்டி இந்த கோவிலுக்கு ஏதோ கதை சொல்லுவாங்களே உங்களுக்குத் தெரியுமா??
நம்ம ஊர்ல கதைக்கா பஞ்சம் சொல்றேன் கண்ணு..ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவிலோட பூசாரி வழக்கம்போல கோவிலுக்கு கிளம்பும் போது அவரோட சின்ன பெண் குழந்தையும் வரேன் சொன்னாளாம் சரினு கூட்டிட்டு போனவரு குழந்தையை பிரகாரத்துல விளையாட விட்டுட்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாரு..
விளையாடிட்டு இருந்த குழந்தை கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்து அங்கேயே தூங்கிட்டாளாம்..
அவர் எப்பவும் போல கோவில் நடை சாத்திட்டு வீட்டுக்கு போக அவர் மனைவி குழந்தை எங்கநு கேக்க அப்போதான் அவருக்கு நியாபகமே வந்துருக்கு..
வாங்க போய் கூட்டிட்டு வந்துரலாம்நு அவர் மனைவி அழ ஆரம்பிக்க கோவில் நடை சாத்தினப்பறம் அப்படி திறக்குறது நல்லது இல்லனு அவரு சொன்னாராம்..
என்ன சொல்லியும் அவங்க சமாதானம் ஆக மறுத்து கோவிலுக்கு போக அங்க கதவுல கைவச்ச நேரம் உள்ளிருந்து அசரீரீ சத்தம் கேட்டுதாம்..
குழந்தை தன்கிட்ட பத்திரமா இருக்குறதாகவும் காலைல வந்து கூட்டீட்டு போனும் அந்த அம்மன் சொன்னாளாம்..
இப்போவே உள்ள வர நினைச்சா குழந்தையோட கை கால்களை தனி தனியா தான் தருவேன்னும் சொன்னாளாம் தாய் மனசு கேக்காம கதவ திறக்க அம்மன் சொன்னமாதிரியே குழந்தையை தண்டிச்சுட்டாளாம்..
அதிலிருந்து அதோ அங்க தெரியுர மரத்து பக்கத்துல இருந்து அந்த குழந்தை மரகதம்நு கூப்பிடுறமாறியும் அதுக்கு உள்ளயிருந்து என்னனு பதில் சத்தம் வரும்னும் சொல்லுவாங்க..
யாராயிருந்தாலும் கடவுளை மனசார நம்பி வேண்டினா இந்த தாய் கைவிடமாட்டாங்கிறதுக்கு இந்த கதை சொல்லுவாங்க..
மாமா இந்தமாறி நிறைய கதைகள் என் பாட்டி சொல்லுவாங்க.
பாதிக்கு மேல இப்படி வழிவழியா சொல்லி வைக்குறதுதான் உண்மையா இல்லையாநு கூட தெரியாது ஆனா எனக்கு கேக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும்..
என்றுகூற கார்த்திக் மனதில் எதையோ குறித்து வைத்துக் கொண்டான்..
சற்று இருள் பரவத் தொடங்கிய நேரம் அனைவரும் அங்கிருந்து கிளம்பஅவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த சின்னகோவிலுக்கு அழைத்துச் சென்றார்..
உள்ளே நுழைந்ததுமே நாகலிங்க பூவின் வாசனை மனதை எங்கோ கூட்டிச் செல்வதாய் இருந்தது..
அனைவரும் முன்னே செல்ல சஹானா வாசலிலேயே நின்றாள் வா சஹி என்னாச்சு??
என்று அவள் கையை பிடித்தவன் அதன் குளிர்ச்சியை கண்டு ஒரு நொடி தடுமாறியவன் மனதை திடப்படுத்தியவாறு சஹி என்றழைக்க பதிலில்லை..தேவிகா..
ம்ம் என்றவள் அவனை ஏறிடாது உள்ளே நுழைந்தாள்..
மொத்தமாய் பயம் சூழ்ந்து கொள்ள அவளை பின்தொடர்ந்தவன்..
எவ்ளோ வருஷம் ஆச்சு மாமா நாம சேர்ந்து இந்த சிவனை பார்க்க வந்து மனசு நிறைஞ்சுருக்கு.என்றவாறு கண்களை மூடி வேண்டினாள்…
நடப்பது அனைத்தும் கனவுபோல் இருக்க செய்வதறியாவது தவித்தான் கார்த்திக்..
சில நிமிடங்களில் சாதரணமாய் பேச ஆரம்பீத்திருந்தவளை கண்டு சற்று நிம்மதியுற்றான்..
இவ்வாறாய் அன்றைய நாள் முடிந்து வீட்டிற்குவர,எல்லாரும் ரெஸ்ட் எடுங்க கண்ணுகளா நா கௌரிட்ட சாப்பாடு குடுத்துவிட்றேன்..
எதுவும்னா குரல் குடுங்க ஓடி வந்துருவேன் என்றவாறு நகர்ந்தார்…
எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாமா நா போய் படுத்துக்குறேன் என்று சஹானா சென்றுவிட மற்றவர்கள் இரவு உணவை முடித்து மறுநாளுக்கான ஆச்சரியங்களை அறிந்துகொள்ள தயாராகினர்..
மறுநாள் பொழுதும் ரம்மியமாய் விடிய கார்த்திக் சிவா மணி மூவரும் தங்களுக்கான வேலைகளை குறித்துக் கொண்டு அனைவரோடும் உணவருந்த தயாராக கௌரி அனைவருக்கும் உணவை பரிமாறினாள்..
அக்கா எப்படியிருக்கீங்க??
ஹே கௌரி நா சூப்பரா இருக்கேன் நீ எப்படியிருக்க நைட் சீக்கிரமே தூங்கிட்டேன் அதான் உன்னை பாக்க முடில இரு நா உனக்காக வாங்கிட்டு வந்த ட்ரெஸ்லா ரூம்ல இருக்கு எடுத்துட்டு வாரேன் என்றவாறு உள்ளே சென்று எடுத்து வந்து அவளிடம் கொடுக்க சிறு புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்..
அவளையே பார்த்திருந்த ஷரவனை நோட்டமிட்டவாறே சிவா கார்த்திக்கிடம் என்ன கார்த்திக் அதுக்குள்ள அடுத்த கல்யாணத்துக்கு ஆள் ரெடி ஆகுது போலயே என்று முடித்த அடுத்த நொடி ஷரவனுக்கு புரையேற கார்த்திக் சிறு சிரிப்போடு உணவருந்த ஆரம்பித்தான்..
ஐயோ மாமா நா தற்செயலா பாத்தத வச்சு எதுக்கு இப்படி கோர்த்து விடுறீங்க..
மச்சான் வீட்டுக்கு ஒரு நல்லவங்க போதும் அது உங்க அண்ணணா மட்டும் இருக்கட்டும்..
நேத்து அந்த பொண்ண பிடிச்சு வச்சு மொக்க போட்டுட்டு இருந்தததான் பாத்தேனே..
அதெல்லாம் ஒண்ணுமில்ல அவங்க சைக்காலஜி படிக்கிறேன்னு சொன்னாங்க அதான் டீடெய்ல் கேட்டுட்டு இருந்தேன் மத்தபடிலா ஒண்ணுமில்ல..
ம்ம் ஏதோ சொல்ற என அடுத்து அவன் ஏதோ கூற வாயெடுக்க கௌரி உள்ளே வர பேச்சை நிறுத்தியவாறு ஷரவனை பார்த்து சிரித்தான்..
இப்படியாய் உணவருந்தி முடிக்க இன்னைக்கு எங்க போலாம் மாமா??என அன்றைய ப்ளானைப் பற்றி கேட்க,
சர்ப்ரைஸ் நா உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் எல்லாரும் ரெடினா போலாம்..
மமாமா உனக்கு இந்த ஊரே தெரியாது நீ எனக்கு சர்ப்ரைஸ் தர போறியா எங்கனு சொல்லு??
அதெல்லாம் சொல்ல முடியாது வா போலாம் என்றவாறு காரில் அமர கார்த்திக் சஹானா அருகில் அமர்ந்து கொள்வதாய் ஏற்கனவே கூறியிருக்க ஷரவ் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
கௌரியும் ஷரவனும் பின்னிருக்கைகளில் எதிரெதிராய் அமர்ந்தீருக்க சிவா கண்ணாடி வழியே அவனை பார்த்து சிரிக்க ஷாரவன் கண்களால் வேண்டாம் என்பதுபோல் ஜாடை செய்ய,
ஏன் என்ன பாத்தாலே ரெண்டு பேரும் சிரிக்குறீங்க??-கௌரி..
சட்டென அவள் இவ்வாறு கேட்பாள் என்பதை எதிர்பாராதவன் ஐயோ அப்படிலா ஒண்ணுமில்லங்க நாங்க எதார்த்தமா தான் சிரிச்சோம் அது கரெக்டா நீங்க இருக்குறமாறி ஆய்டுது..
மத்தபடி ஒண்ணுமேயில்லங்க நம்புங்க..
ம்ம் என்றவாறு அவள் திரும்பிக் கொள்ள,இதுக்கு என்ன அர்த்தம் நம்புறேன்ங்குறீங்களா இல்ல..-ஷரவன்..
லேசான சிரீப்போடு அதுக்கு பதில் உங்களுக்கே தெரியும் என்றவாறு மறுபுறம் திரும்பிக் கொண்டவளை அவனது கண்கள் தானாய் அளந்தது..
ஒல்லியான உடல்வாகு மாநிறம் சாதாரணமான சுடிதார் கழுத்தில் மெல்லியதாய் ஒரு செயின்..
சின்ன கம்மல் இவ்ளவுதான் அவளை பார்த்தவுடன் கண்களில்படும் விஷயங்கள்..
ஆனால் ஷரவனுக்கு பிடித்திருந்தது அந்த எளிமையிலும் தெரீந்த கம்பீரம்..
அது அவளை இன்னுமாய் அழகாய் காட்டியது..ஒருவாரு அவர்களின் ப்ரம்மதேச பயணம் ஆரம்பமாக சலசலத்துக் கொண்டே வந்த சஹானாவின் கண்கள் போகும் இடத்தை உணர ஆரம்பித்த நொடி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றேவிட்டிருந்தது..
கண்கள் நீரால் நிரம்ப இதழோரம் புன்னகை அனைத்தும்பார்த்துக் கொண்டு வந்தவன் ஆதரவாய் தோள்பற்ற மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கியவள் இங்கதான் வரோம்நு சொல்லிருந்தா நா வரமாட்டேன்னா சொல்லப் போறேன் ரொம்ப தேங்க்ஸ் மாமா..
என்றவாறு கீழேயிறங்கி நிற்க கார்த்திக் அவள் கைப்பிடித்தவாறே கோவிலினுள் நுழைந்தான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
😍😍😍😍😍😍😍
பிரம்ம தேசத்தில் தான் அவள் அவனை விட்டு சென்றாளா?
Interesting🤔
Nice