164
அடுத்த வந்த நான்கு நாட்களும் மெஹந்தி,லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ் என றெக்கை கட்டிப் பறக்க நாளை திருமணம்..
அனைவரின் மனதுமே மகிழ்ச்சியில் நிறைந்திருக்க சஹானா பட்டாம்பூச்சியாய் தன் வீட்டை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..
ஒருபுறம் தன்னவனின் கரம் பற்ற போகும் மகிழ்ச்சி எனில் மறுபுறம் தான் தாய் தந்தையை பிரியபோகும் துயரமென தனக்குள்ளேயே மருகினாள்..
இந்த ஒரு வாரமாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறாள்..
அவள் அன்னை கூட ஓரளவு மனதை தேற்றிக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும் ஆனால் தந்தையோ மொத்தமாய் உடைந்திருப்பதாய் தோன்றியது..
கடைக்குச் செல்வதை குறைத்துவிட்டார்..ஏதேதோ காரணம் சொல்லி அவளிடம் பேச்சை வளர்த்தார்..
சாப்பாடு தூக்கமின்றி கண்கள் இடுங்கி பார்ப்பவர்கள் அத்தனை பேரும் கேட்கும் அளவுக்கு மனதளவில் ஓய்ந்து போய் இருந்தார்..
திருமணத்தில் இது எப்போதுமே நடக்க கூடிய ஒன்று அத்தனை வருடங்கள் தன் அரவணைப்பிலும் அன்பிலும் எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து செல்லம் கொஞ்சும் மகளை இப்போது ஒரு புதியவனை நம்பி அவன் கைகளில் ஒப்படைக்கும்போது மனத்திற்குள் தானாகவே பயம் துக்கம் என அனைத்தும் ஆட்கொண்டு விடுகிறது..
அம்மாக்கள் இதில் விதிவிலக்கு ஏனெனில் அவர்கள் தங்கள் திருமணத்திலேயே இந்த வலியை உணர்ந்து விட்டதாலோ என்னவோ இப்போது ஓரளவு ஆறுதல் கூறும் நிலையில் இருக்க முடியும்..
இதற்கு இன்னுமொரு காரணம் எல்லா ஆண்களுக்குமே திருமணம் செய்து ஒரு பெண்ணை அவள் தந்தையிடமிருந்து தன்னோடு அழைத்து வரும்போது அவளின் வலி அவ்வளவாய் தெரிவதில்லை..
அதே நேரம் தன் மகள் என்று வரும்போது அப்போது நினைக்கும்போது தன் மனைவியின் மனநிலைமையும் மாமனாரின் மனநிலைமையும் புரிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது என் கருத்து..
சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு காணொளி கண்டேன்..
திருமணம் முடிந்து தன் வீட்டாரிடம் விடைபெற்று செல்லும்போது தன் தந்தையை கட்டிபிடித்து கதறி தீர்த்துவிட்டார் அந்த தந்தையுமே கண்கலங்க தன் மகளை ஆரத்தழுவி தேம்பிக் கொண்டிருந்தார்..
அதன்பின் அங்கிருந்த பெண்கள் ஒருவாறு சமாதானப்படுத்தி அவளை மாப்பிள்ளையோடு அனுப்பி வைத்தனர்..
இதை இங்கு பதிவிட காரணம் டெக்னாலஜியும் வாழ்க்கை முறையும் எத்தனை நாகரீகமாய் மாறியிருந்தாலும் தாய்–மகன் தந்தை -மகள் உறவுகளின் நெருக்கங்கள் எப்போதும் மாற்றமடைவதில்லை..
இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள் போனின் அழைப்பு சத்தத்தில் நினைவுலகிற்கு வந்தாள்..
ஹாய் மாமா என்ன பண்ற??
சஹி என்னாச்சுடா டல்லா பேசுற உடம்பு எதுவும் சரியில்லையா??
அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..ஒரு மாறி டென்ஷனா இருக்கு..அதுமட்டுமில்லாம அப்பா ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்டா இருக்காரு..
ஏன் சஹி எதனால??
என்ன மாமா நீ கேஷ்வலா கேக்குற நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நா தான் நம்ம வீட்டுக்கு வந்துருவேன்ல அதனால தான்..
ஹே ஆனாலும் அநியாயம் டீ இதெல்லாம் நா ஏதோ கல்யாணம் பண்ணி உன்ன தண்ணியில்லா காட்டுக்கு கூட்டிட்டு போற ரேஞ்சுக்கு பேசுற இதோ இருக்கு வீடு நினைச்சா பத்து நிமிஷத்துல போகபோற இதுக்கு இவ்ளோ பில்டப்பா???
மாமா உனக்கு இதெல்லாம் புரியாது நாளைக்கு உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தெரியும்..
அடடா கூல் சஹிம்மா..நா சொல்ல வர்றது உனக்கு புரில..சரி நா சொல்றத உங்க அப்பாகிட்ட போய் அப்படியே சொல்லு..
அவரு கவலையெல்லாம் ஓடி போய்டும்..என்ன பண்றியா???
என்ன..
ம்ம் அப்படி கேளு..டேடி டேடி கார்த்திக் சொல்றான் இந்த கல்யாணத்துக்கப்பறம் உங்க பொண்ணு உங்கள விட்டு போக போறதில்லயாம் கார்த்திக்நு ஹேண்ட்சமான ஒரு பையனும் உங்களுக்கு கிடைக்க போறானாம்..
இனிதான் நீங்க ஹெல்த நல்லா பாத்துக்கனுமாம் ஏன்னா இனி பொண்ணு பையன் ரெண்டு பேரையும் பாக்கநும்ல
அதுமட்டுமில்லாம சீக்கிரமே ஒரு குட்டி சஹானாவோ கார்த்திக்கோ வேற வந்துருவாங்க அவங்கள வேற கவனிச்சுக்கனும் சோ டோன்ட் வொரி அபௌட் எனிதிங் அண்ட் டோண்ட் ஸ்பாய்ல் யூவர் ஹெல்த்நு சொல்லு என்ன கரெக்ட் தான..
உம்மா உம்மா உம்மா..
ஹே சஹி பேபி பக்கத்துல யாரும் வந்துர போறாங்க..
பரவால்ல லவ் யூ மாமா..நீ ஏன் இப்படியிருக்க..அதான் நா உன்ன விடாம தொல்ல பண்ணிட்டேயிருக்கேன்..எனும்போதே அவள் குரல் கம்ம.
சஹிம்மா இதெல்லாம் இயல்பா நடக்குறதுடா..
இதுதான் நியாயமும் கூட அதுலயும் நீ ஒரே பொண்ணு அவங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும்..
நீதான இப்படி சொல்லி அவங்கள சமாதான படுத்திருக்கனும் அதவிட்டுட்டு நீயும் வந்து அழுதுட்டு இருக்க..
சரி முதல்ல போய் மாமாவ சமாதானப்படுத்து அழுது வடியாம ஈவ்னிங் ரிசெப்ஷன்ல செமயா இருக்கனும் புரியுதா???
டீல் மாமா..நா இப்போவே போறேன் பை..சிறு புன்னகையோடே போனை வைத்தவனுக்கு அடுத்த வந்த நிமிடங்கள் வேகமாய் கழிய மாலை தயாராகி மண்டபத்திற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த கோவிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
கார்த்திக் கோவிலையடைந்த பத்து நிமிடத்தில் சஹானாவும் அழைக்கப்பட்டு வந்திருக்க சிவா ஷரவ் ஷரவன் கௌரி அனைவருக்குமே அந்த ஜோடியிடமிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை..
அழகிய கருநீலநிற லெஹன்காவில் தங்கநிற துப்பட்டாவும் அதற்கேற்றாற் போல தலையின் முன் பகுதியை குவித்து ஃப்ரீ கேர் விட்டிருந்தாள்..
ஆடைக்கேத்தவாறு வெள்ளைகற்கள் பதித்த நகைகளின் நடுநடுவே நீலநிற கற்கள் பதித்த ஆபரணங்கள் தலை முதல் இடைவரை அலங்கரித்திருந்தன..
அவள் உடைக்கேற்றவாறு கருநீல நிற ஷெர்வானியில் கம்பீரமாய் கார்த்திக் இருக்க கண்களை அகற்றவும் முடியுமோ..
சஹியோ வந்ததிலிருந்து கார்த்திக்கை ஓரப் பார்வை பார்த்தவாறே நின்றிருந்தாள்..
மாமா நீ சொன்ன மாறி ரெடி ஆய்டேனா எப்படியிருக்கேன்???
ம்ம் சான்ஸேயில்ல சஹி ஸ்டன்னிங் லுக்..நாளைக்கு நைட் இதுக்கு பதில் சொல்லலாம்நு நினைச்சேன் நீ இப்போவே கேட்டு சப்புநு ஆக்கிட்டியே..
அய்யோ கோவில்ல வச்சு என்ன பேசுற மாமா நா வாயே தொறக்கலப்பா..
என்றவாறு கண்மூடி கடவுளை மனமாறற வேண்டினாள் பூஜை முடிந்து அனைவரும் வெளியே வர எத்தனிக்க சிவா அனைவரையும் தடுத்தான்..
இருங்க எல்லாரும் எங்க கிளம்புறீங்க..
டேய் விளையாடுற நேரமா இது மண்டபத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சுருப்பாங்க..சேகர்
அதையே தான் நானும் சொல்றேன் மாப்பிள்ளையும் பொண்ணையும் அழைச்சுட்டு போக வேணாமா ரெண்டு நிமிஷம் எல்லாரும் வெயிட் பண்ணுங்க..
எங்க மாப்ள பொண்ணுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு இருக்கு என்றவாறு வாசலுக்குச் சென்றவன் 5 நிமிடத்தில் உள்ளே வந்தான்…
வாங்க வாங்க போலாம் என்றவனின் பின்னே சென்ற அனைவருமே வாய்பிளக்காத குறைதான்..
என்ன சிவா இதெல்லாம் இதுல எப்படி எம்பர்ஸ்டா இருக்கும் என கார்த்திக் ஒருபுறம் டேய் குரங்கு எப்போ இதெல்லாம் ரெடி பண்ண சொல்லவேயில்ல என சஹானா ஒருபுறமும் கேட்க சிரிப்பை பதிலளித்தவன் சற்று தள்ளிச் சென்று கைநீட்டி வாங்க ராஜகுமாரி என்றழைக்க புன்னகையோடு அவன் கைப் பற்றியவள் அந்த அழகிய பல்லக்கில் சென்று அமர்ந்தாள்..
சிவா முன்புறமும் மணி பின்புறமும் பிடித்து பல்லக்கை தூக்க,அதன் முன்னிருந்த. குதிரையில் கார்த்திக் அமர்ந்திருந்தான்..
மாப்பிள்ளை பெண்ணழைப்பு ஆரம்பமாக சஹானாவிற்கோ ஏனோ அனைவரும் தன்னையே பார்ப்பதாய் தோன்ற குனிந்த தலை நிமிராமலேயே அமர்ந்திருந்தாள்..
மண்டபத்தின் வாசலில் கார்த்திக் இறங்க பல்லக்கை மண்டப வாயிலின் உள் சென்று சிவா இறக்கினான்…
சிவாவின் பின் வந்த கார்த்திக் சஹானாவிற்காக கைநீட்ட அவன் விழிபார்த்து தன் கையை கொடுத்தாள்..
ஏனோ அந்த நொடி தான் ஒரு ராஜகுமாரி என்றே தோன்றியது அவளுக்கு..
அதன்பின் சில மணிநேர போட்டோ ஷீட் முடிந்து மணமக்கள் மேடைக்கு வர கார்த்திக் சஹானா,சிவா ஷரவந்தி ஜோடிகளுக்கான நிச்சயதார்த்தம் அரங்கேற இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்..
அதன் பின் விருந்தினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுப் பொருட்களை கொடுக்க கொடுக்க உதட்டில் புன்னகை மாறாமல் அதை வாங்கி வைப்பதிலேயே மணி நேரம் கடந்திருந்தது..
ஓரளவு கூட்டம் மேடையில் குறைந்திருக்க சிவா மைக்கோடு மேடையேறினான்..
ஓ.கே மொதல்ல எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்த ஒவ்வொருத்தருக்கும் எங்களோட நன்றியை தெரிவிச்சுக்குறோம்..
நீங்க எல்லாரும் உங்களோட கிப்ட் மூலமா உங்க விஷஸ்ஸ சொல்லிட்டீங்க அப்போ நாங்களும் அப்படி சொல்றதுதான கரெக்ட்டா இருக்கும் அதான் நாங்க கார்த்திக்கும் சஹானாக்கும் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் குடுக்கலாம்நு இருக்கோம்..
சோ பர்ஸ்ட் என் சார்பா சஹானாக்கு ஒரு ஸ்பெஷல் ஏவி ரெடி பண்ணிருக்கேன்.. கியர் யூ கோ…
சிவா மானத்த வாங்கிடாதடா..என்றவள் ஸ்க்ரீனை பார்க்க..
அதில் ஒரு வயது சஹானா அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்..
அதையடுத்து அவளின் சிறுவயதின் ஒவ்வொரு பருவத்திலும் எடுத்த புகைப்படங்கள்..
இதில் கூடுதல் ஆச்சரியம் அவளுக்கு என்னவென்றால் அவையனைத்தையுமே அவளே இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறாள்..
அனைத்துமே விடுமுறையில் அவள் வந்த நேரம் சிவாவின் அப்பா எடுத்திருந்தது..
பேச வார்த்தைகளின்றி அவள் அமர்ந்திருக்க இறுதியாய் இருந்த போட்டோவை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள்…
கார்த்திக்கும் அவளும் ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்தவாறு எதற்கோ சிரித்த மாதிரியான புகைப்படம் இயல்பாய் அழகாய்..
முதன்முதலாய் சிவாவை கிண்டல் செய்வது சண்டை போடுவதை தாண்டி அண்ணணாய் தந்தைக்கு அடுத்த நிலையில் இருக்கும் தோழனாய் பார்க்க தோன்றியது..
அவள் முகம்பார்த்தே மனம் அறிந்தவன் ஆதரவாய் தோள்பற்ற தன்னை கட்டுப்படுத்தியவளாய் சிவாவிற்கு செய்கையால் நன்றி கூற கண்சிமிட்டி அவன் நகர ஷரவன் கைக்கு மைக் மாறியது..
டேய் நீயுமா??-கார்த்திக்..
அண்ணா பொண்ணுக்கே சர்ப்ரைஸ் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு இல்லனா எப்படி சரி உன் சர்ப்ரைஸ்க்கு ரெடியா இரு அண்ணா..ஷரவ் லைட்ஸ் ஆஃப்..
என குரல் கொடுக்க அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட சில நிமிடங்களில் யார் யாரோ மேடையேறும் சத்தம் கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் கார்த்திக்கிற்கு வாழ்த்து கூற பாதிக்கு மேல் குரல்க்கு சொந்தக்காரரர்களை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை..
சில நிமிடங்களில் விளக்குகள் ஒளிபெற தன்னை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தவனுக்கு உண்மையாகவே ஆச்சரியமாகத்தான் இருந்தது..
அனைவரும் அவனின் பள்ளி கல்லூரி கால நண்பர்கள்..
அவன் யாரையுமே நேரடியாய் சென்று அழைக்கவில்லை..
பேஸ்புக் வாட்ஸ்அப்பில் பத்திரிக்கை அனுப்பியதோடு சரி..
அதிலும் விக்ரம் கிஷோரே தங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றும் வர முடியாததற்கு வருந்துவதாகவும் அடுத்த மாதத்தில் ஒரு நாள் வருவதாகவும் கூறிவிட்டனர் அதுகூட மெயில் கம்யூனிகேஷன் தான்..
இன்று அவர்கள் உட்பட வந்திருப்பது நிறைவாய் இருந்தது..
அடுத்த சில நிமிடங்கள் அனைவரின் நலவிசாரிப்புக்களோடு தொடர கார்த்திக் அனைவருக்குமான தன்னுடைய நன்றியை தெரிவித்தான்..
ஹலோ மாப்ள சார் உங்க தேங்க்ஸ்க்காக நாங்க வரல சாப்பாடுலா ரெடியா இருக்குல..மச்சான் ப்ரெண்டா ஃபுட்டா டா??-விக்ரம்
அஃப்கோர்ஸ் புட் தான்டா..-கிஷோர்..சிஸ்டர் என் மேல இருந்த கோபம்லா போய்டுச்சா நம்பி சாப்ட போலாம் தான???
ஹா ஹா நீங்க வரீங்கநு தெரியாதே ப்ரோ தெரிஞ்சுருந்தா கண்டிப்பா எதாவது பண்ணிருப்பேன் என்று சஹி கூற அனைவருமாய் சிரித்தனர்..
உண்மையா ஷரவன் ஷரவந்திக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் இப்படி ஒரு ப்ளான் போட்டதுக்கு..
ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எல்லாரையும் பாத்தப்போ அந்த பீல் சான்ஸேயில்ல கார்த்திக்..
பாவம் நீதான் கல்யாண மாப்பிள்ளையா மாட்டிக்கிட்ட வாட் டு டூ..-விக்ரம்..
உண்மைதான் விக்ரம் பெஸ்ட் சர்ப்ரைஸ் இன் மை லைவ்..
தேங்க்ஸ் ஷரவ் அண்ட் கோ என்று செல்லமாய் தம்பி தங்கையை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
அடுத்து ஆட்டம்பாட்டமென கொண்டாட்டங்கள் முடிந்து பெரியவர்கள் மணமக்களை கிளப்புவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டனர்..
மறுநாளின் விடியல் அற்புதமாய் ஆரம்பமாக திருமண மண்டபமே பரபரத்துக் கொண்டிருக்க நம் இளம் ஜோடிகள் அதைவிட பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்..
சஹானாவிற்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட்டு கௌரி ஏதோ எடுப்பதற்காக வெளியே வர சட்டென அவளை இழுத்து வெளியிலிருந்த மாடிபடிகளுக்கு அடியில் நிறுத்தினான் ஷரவன்..
என்னதிது விடுங்க யாராவது பாத்தா அவ்ளோதான்..
அட உன்ன அனுப்புறதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தேன்..
வந்து நாலுநாள் ஆச்சே என்ன பாக்கனும்னு தோணிச்சா உனக்கு.. அண்ணியோடயே சுத்திட்டு இருக்க..
அப்பா வேற இருக்காரு நா எப்படி உங்ககிட்ட பேசுறது எனக்கு இந்த ஊரும் தெரியாதே..
ம்ம் ஆனா ஊனா இப்படி ஒரு பாவமான லுக் விட்டு ஆள கவுத்திரு..
என் பார்வையே அப்படிதான்..
ப்பார்ரா அதுசரி ம்ம் நா கூப்டதுக்கான காரணத்தையே மறந்துட்டேன் பாரு..இந்தா இந்த வருஷ பிறந்தநாளுக்கு என்னோட பரிசு..
அடுத்தவாரம் உன்ன பாக்க முடியாதுல அதான் இப்போவே குடுக்குறேன் வாங்கிக்கோ..
ஐயோ முதன்முதலா வாங்கி தர்றத வேண்டாம்நு சொல்ல கூடாது ஆனா இத நா எப்படி எடுத்துட்டு போறது அப்பா யார் குடுத்தாநு கேட்டா என்ன சொல்றது??
அட என் அம்பாசமுத்திர அழகி அதெல்லாம் ரெடி பண்ணாமயா இத வாங்கிருப்பேன்..
நீ எடுத்துட்டுப் போ மத்தத நா பாத்துக்குறேன்..
ம்ம் என குனிந்தவாறே தலையசைத்தவள் சட்டென கையிலிருந்து வாங்கி கொண்டு அவனை தாண்டி ஓடிவிட்டாள்..
தன்னவளை கண்டு சிரித்தவாறே அவன் தனக்கான வேலைகளை கவனிக்கச் சென்றான்..
அங்கு ஷரவ் வழக்கம்போல் சிவாவிடம் மாட்டியிருந்தாள்..
கீழே என்னைத் தேடி யாராவது இங்க வந்தா அவ்ளோ தான் நா கீழ போறேன் விடுங்க சிவா..
இனி நீங்க மாடிக்கு வாநு கூப்டாலே உஷாராய்டுவேன் என்றவாறு அவன் கை வளைவுகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்..
ஹே டீச்சரம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ..என் மேல தப்பு கிடையாது நேத்து நிச்சயதார்த்தத்த முடிச்சுட்டு இவதான் என் ஃவைப்நு ஊருக்கே சொன்னப்பறம்
மறுநாள் காலைலேயே கண் முன்னாடி இப்படி பட்டு புடவையும் மல்லிப்பூவுமா அங்கேயும் சுத்திட்டு இருந்தா நா எப்படி சும்மா இருக்க முடியும் கல்யாணத்தை தள்ளி வச்சது உன் தப்பு நா எப்படி பொறுப்பாக முடியும்???
ம்ம் நீங்க க்ரிமினல் வக்கீல்தான் ஒத்துக்குறேன்..
அதுக்காக என்கிட்டேயே உங்க வேலையெல்லாம் காட்ட வேண்டாம்..
ஆள விடுங்க என அவன் ஏமாந்திருந்த நொடி பொழுதில் கையை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்…
வருங்கால ஜோடிகளே இத்தனை உற்சாகத்தோடு இருக்க இன்றைய நாளின் நாயகனும் நாயகியும் எப்படி இருப்பார்கள் என கேட்கவும் வேண்டுமோ!
அழகான பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் மேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கர்ம சிரத்தையோடு கூறிக் கொண்டிருந்தான்..
அதற்குள் முகூர்த்த புடவை மாற்றி மணமகள் அறையிலிருந்து வெளியே வர சர்வமும் மறந்து போனான் மணமகன்..
அந்த ரத்தநிற புடவைக்கு ஏற்றவாறு தங்க நிற முக்கால் கை நீளச் சட்டை முழுவதும் கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்க அதை இன்னும் அழகூட்டுவதாய் இருந்தது அவளை அலங்கரித்திருந்த டெம்பிள் செட் ஜுவல்லரி செட்..
அவளின் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறப் போகும் பூரிப்பு அப்படியே அவள் முகத்தில் தேஜஸாய் மலர்ந்திருக்க கார்த்திக்கிற்கு மனம் நிறைந்துவிட்டிருந்தது..
அருகில் வந்தமர்ந்தவள் தன்னவனை ஓரப் பார்வையால் வருட அதை புரிந்தவனோ மெல்லிய புன்னகையை பதிலளித்தான்..
நிமிடங்கள் றெக்கை கட்டி பறக்க ஐயர் திருமாங்கல்யத்தை அவன் கைகளில் கொடுக்க மூன்று முடிச்சு சேர்த்து தன்பாதியாய் அவனின் தேவிகாவை தன்னோடு சேர்த்து அவளுக்கு விமோட்சனம் அளித்தான்…
சிறியவர்கள் கண்களில் நீர்கோர்க்க தங்களின் வாழ்த்துக்களை பகிர பெரியவர்கள் அவர்களை கேலி செய்தவாறு நகர்ந்தனர்..
தாலிகட்டி முடித்து சஹானாவை கார்த்திக் பார்க்க கண்களில் இருதுளி நீர் அவளிடத்தில்..
சிறிதும் யோசிக்காமல் தன்னோடு சாய்த்து உச்சந்தலையில் முத்தத்தை பதித்தான்..
குடும்பத்தினர் அனைவருக்குமே தங்கள் பிள்ளைகளின் அன்பு மனதை குளிர்வித்திருந்தது..
அதன்பின் பெரியவர்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்க சேகரோ கண்களில் நீர்கோர்க்க தன் ஆசியை வழங்கினார்..
மாமா என்னை நினைச்சு கவலபடுறீங்கநு தெரியுது..என் தலையை நா பத்திரமா பாத்துக்குறேன் அதுக்காக சஹி முன்னாடியே இப்படி அழலாமா??
என முடிப்பதற்குள் சஹானாவிடமிருந்து அடியை பெற்றுக் கொண்டான்..
மாப்ள நிச்சயமா இது ஆனந்த கண்ணீர்தான்..என் பொண்ணு ஒரு அழகான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துருக்காநு நா மனசார நம்புறேன் என அவனை இறுக கட்டிக் கொண்டார்..
அடுத்ததாய் சிறியவர்கள் பெரிய கிப்ட் ப்ரப் செய்யப்பட்ட பார்சலோடு வர சஹானா,மறுபடியும் முதல்லயிருந்தா..
யூ கைஸ் மேட் மை டே..என ஷரவந்தியை கட்டிக் கொண்டாள்..
அண்ணி இது ஸ்பெஷலா உங்களுக்குத்தான் ஓபன் பண்ணுங்க என ஷரவன் கூற ஆர்வம் தாங்கமாட்டாமல் பிரித்தவள் தன்னிலை மறந்து நின்றாள்..
குலதெய்வ கோவிலுக்குச் சென்றபோது ஷரவன் ஷரவந்தி சிவா சேர்த்து அவர்கள் இருவரையும் ஒரு வழியாக்கி எடுத்த புகைப்படம்..
சுற்றிலும் வயல்வெளி அதன்முன் சிறியதாய் ஒரு பாறை அதில் கார்த்திக் ஒரு கால் நீட்டியவாரு அமர்ந்திருக்க அவன் காலருகில் சஹானா புடவையில் அவன் காலில் தன் தாடையை வைத்து அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…
அதை அந்தகால முறையில் மாற்றி கிட்டதட்ட 50 60 வருடங்கள் முன் எடுத்ததாய் அமைந்திருந்தது..
கார்த்திக் அவர்களை அர்த்தமுள்ள பார்வை பார்க்க மூவரும் சிறு புன்னகையோடு அதை ஆமோதிக்கும் பாவத்தோடு நின்றிருந்தனர்..
ஷரவன் க்ரேட் வொர்க் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு தேங்க் யூ சோ மச் என அதை சஹானா தன் கைகளால் வருடினாள்..
அதனை தொடர்ந்து அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்து மணமக்கள் கார்த்திக் வீட்டிற்கு கிளம்ப தன்னவன் கொடுத்த தைரியத்தில் ஓரளவு அழாமல் சமாளிக்க முடிந்தது அவளால்..
பெற்றோரிடம் விடைபெற்று புகுந்த வீட்டை அடைந்தவளை கீதா விளக்கேற்ற அழைத்துசச் சென்றார் அதன்பின் சில நிமிடங்களில் அவர்களோடு வந்திருந்த சிவா கிளம்ப தயாராக சஹானாவிற்கு முதன்முதலாய் தமையனாய் அவனை நினைக்கத் தோன்றியது..
அப்பப்போ வருவல சிவா என கண்களில் நீர்கோர்க்க கேட்பவளை பார்த்தவனுக்குமே உருகிவிட்டது..
சட்டென தன் மேல் சாய்த்துக் கொண்டான்.. சஹானாம்மா அழக்கூடாது உனக்கு எப்போ பாக்கனுமோ சொல்லு நா ஓடி வந்துரேன் அப்படிநு சொல்லுவேன்னு நினைச்சியா ஓய் நா இந்த வீட்டு மாப்ள மூத்த மருமகளா லட்சணமா நா வர்றப்போலா ஒழுங்கா கவனிக்கனும்..
என் ஷரவ் பேபிய பத்திரமா பாத்துக்கோ புரியுதா??என கண்ணீரை அடக்கியவாறு அவளை சீண்ட அவன் நினைத்ததை போலவே சிலிர்த்தெழுந்தவள்,
வாடா நீ வரும் போது எப்படி கவனிக்குறேன்னு மட்டும் பாரு..
எருமை என்றவாறு உள்ளே சென்றவளை கடந்து கார்த்திக் சிவாவை நோக்கி வந்தான்..
என்ன சிவா சண்டைகோழி சிலிர்த்துட்டு போகுது என்னாச்சு??
ஹா ஹா அது வழக்கம்போல அவளை வம்பிழுக்குறதுதான் கார்த்திக்.. என்றவன் சற்று இடைவெளிவிட்டு கார்த்திக் நீங்கதான் அவளை பாத்துக்கணும்..
நா உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்ல..
இன்பேக்ட் உங்கள விட அவளை யாரும் நல்லா பாத்துக்க போறதுமில்ல இருந்தாலும் ஒரு அண்ணணாசொல்ல தோணுது..
அவ எதாவது தப்பு பண்ணிணாலும் நீங்கதான் எடுத்து சொல்லி புரிய வைக்கனும்..என கைப்பற்றி கொண்டான்..
சிவா இதெல்லாம் சொல்லணுமா சஹானா இனி என் பொறுப்பு ..
அவளை பத்திரமா பாத்துக்குறேன் ஓகே தான ஆனாலும் எப்பவுமே சண்டை போட்டுட்டே இருப்பீங்க ரெண்டு பேரும் பட் இப்போ என்னடானா பாசமலர் படத்தையே மிஞ்சிட்டீங்க போங்க என இயல்பாய் முடித்தான்..
அதற்கு புன்னகைத்தவன் கார்த்திக் நீங்க எப்போ கிளம்புறீங்க அம்பைக்கு.. நாங்களும் வர்றேன்னு சொன்னா கேக்க மாட்றீங்க..
நாளை மறுநாள் கிளம்புறேன் சிவா..நீங்க இங்கயிருந்து எனக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கும் அதனாலதான் வேண்டாம்நு சொல்றேன்..
அதுவும் போக ஹனிமூனுக்கு குடும்பத்தையே கூட்டிட்டு போனா என் பொண்டாட்டி என்ன உண்டு இல்லநு ஆக்கிர மாட்டாளா நீங்களே சொல்லுங்க.
என்று கண்சிமிட்டியவனை வழக்கமான ஆச்சரியத்தோடு எதிர்கொண்டு விடைப் பெற்று நகர்ந்தான்..
அவன் பாட்டி தாத்தா அத்தை தவிர அனைவருமே கிளம்பியிருக்க சஹானா ஹாலில் ஷரவன் ஷரவந்தியோடு பேசிக் கொண்டிருந்தாள்..
சஹி நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்றதுணா மேல ரூம்ல போய் பண்ணிக்கோ உன் ட்ரெஸ் எல்லாமே அங்க தான் இருக்கு என்றவாறு கார்த்திக் சோபாவில் அமர்ந்தான்..
ஆமா அண்ணி நா கூட சொல்லணும்நு நினைச்சேன் போங்க நா உங்களுக்கும் அண்ணாக்கும் சாப்ட எதாவது எடுத்துட்டு வரேன் என்றவாறு ஷரவந்தியும் கிளம்ப கார்த்திக் தம்பியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..
மாடியின் அறை கதவை திறந்து உள்ளே சென்று தாழிட்டு திரும்பியவளுக்கு தன் பிறந்தநாளன்று சுவரேறி வந்தது நினைவு வர தானாக அவளிதழில் புன்னகை குடிகொண்டது..
அலமாரியை திறந்தவளுக்கு கண்கள் தானாக விரிந்தது..
அழகான அரக்குநிற சில்க் காட்டன் புடவையில் பச்சைநிற பார்ட்ரோடு அழகாய் இருந்தது அந்த புடவை அதனை வருடியவளுக்கு உள்ளே ஏதோ தட்டுப்பட மடிப்பை பிரித்தவளுக்கு உள்ளிருந்த காகிதம் கண்களில்பட்டது..
வெல்கம் டு அவர் ரூம் மை பொண்டாட்டி..
இந்த லெட்டர நீ படிக்கும்போது நா எவ்ளோ ஹேப்பியா இருப்பேன்னு எனக்கே தெரியாது..
என் சஹி இனி புல்டைம் என்கூடவே இருக்க போறா..ஐ அம் வெரி லக்கி டு ஹேவ் யூ அஸ் மை பெட்டர் ஹாவ் சஹிம்மா..
இனி இது உன் வீடு எப்பவும் ஹேப்பியா இரு..இதேமாறி அடிக்கடி சர்ப்ரைஸ் குடுக்க ட்ரை பண்ணிட்டே இருப்பேன்..
இப்போ குட் கேள்ஆ இந்த சாரிய கட்டிட்டு சீக்கிரமா கீழே வா பாக்கலாம்..லவ் யூ பேபி..
அதை கைகளால் வருடியவளுக்கு மனமெல்லாம் நிறைந்து போனது..
கார்த்திக் அவளை இன்னும் இன்னுமாய் ஆக்கிரமித்துக் கொண்டேயிருந்தான்..
இனி அவன்தான் அவள் உலகம் என தீர்மானித்தாள்..
தன்னவனுக்காக பார்த்து பார்த்து புடவையை கட்டியவள் கண்ணாடியில் பலமுறை பார்த்து த்ருப்தியடைந்த பின் மெதுவாய் கீழிறங்கினாள்..
ஏதோ நாளிதழை பார்ப்பதாய் நடித்துக் கொண்டிருந்தவன் படிகளில் கேட்ட அரவத்தை தொடர்ந்து ஆவலாய் மேலே பார்க்க துடைத்து வைத்த குத்துவிளக்கு போல் அம்சமாய் வருபவளிடமிருந்து கண்களை நகர்த்த முடியாமல் நகர்த்தவும் விரும்பாமல் இதழோர புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்..
இரு புருவத்தையும் மேலும் கீழுமாய் அசைத்து புடவை எப்படியிருக்குஎன பெண்ணவள் கேட்க கண்ணடித்து வாய் சுழித்து பிரமாதம் என்றான் கார்த்திக்..
இருவருமே தங்கள் செய்கையை நினைத்து சிரிக்க ஷரவந்தி சஹானாவிற்காக ஜுஸ் எடுத்து வந்தாள்..
அண்ணி இந்தாங்க சாப்டுங்க வாவ் சாரி ரொம்ப அழகாயிருக்கு எங்க வாங்கினீங்க???
தேங்க்ஸ் ஷரவ் இதுவா இது வந்து அப்பா கடையில தான்..
என சமாளிக்க கார்த்திக் ஒன்றும் அறியாதவனாய் மறுபுறம் திரும்பிக் கொண்டான்..
அதன்பின் மதிய உணவு அக்கம்பக்கத்தாரின் வருகையென பொழுது கழிய இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது..
இரவு உணவை முடித்து ஷரவந்தியோடு அமர்ந்திருந்தவளை கீதா அழைக்க ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தவள் அதே நினைவோடு அவர் பின்னே சென்று சொல்லுங்க ஸ்வீட்டி என முடித்தவள் சட்டென நிலைமை உணர்ந்து அவர் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள் சாரி சாரி இனி அத்தநு தான கூப்டனும் சாரி..என காதைப் பிடித்து நின்றாள்..
சட்டென சிரித்தவர் அவள் கையை இறக்கி சஹானா நீ எப்பவும் போல இரு அதுதான் அழகே..
நா எப்பவும் ஸ்வீட்டி தான்.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா..
கார்த்திக் முதன்முதலா உங்க விஷயத்தை சொன்னப்பவே எனக்கு அவ்ளோ சந்தோஷம் காரணமே உன்னோட இந்த வெகுளிதனம் தான்..
வீட்டோட மூத்த மருமக அந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு அடுத்த அம்மா மாதிரி..
இப்போ நீ ஷரவ் ஷரவன்லா ப்ரெண்ட்லியா பழகுறத பாக்கும்போது அந்த சந்தோஷம் இரட்டிப்பாய்டுச்சு என அவள் கன்னம் வருடினார்..
தேங்ங் யூ சோ மச் ஸ்வீட்டி என அவரை கட்டிக் கொண்டாள்..
இனி நம்ம வேலையே வீட்ல எல்லாரையும் ஒரு வழி ஆக்குறதுதான் டீலா??
கண்டிப்பாடா பண்ணிடுவோம்..அடடா உன்னோட சேர்ந்து நானும் என்ன பண்ணிட்டு இருக்கேன்..
எதுக்கு கூப்டேனே மறந்துருவேன் போல இந்தாம்மா இந்த புடவையை கட்டிட்டு வா நா உன்ன ரெடி பண்றேன்..
கார்த்திக் அப்போவே மாடிக்கு போய்ட்டான்..இருநா போய் பூ எடுத்துட்டு வரேன் என அவர் நகர்ந்ததுதான் தாமதம் சஹானாவிற்கு கை கால்களெல்லாம் உதறாத குறைதான்..
தனிமை அவர்களுக்கு புதிதில்லை எனினும் கணவணாய் தன்னவனை தனிமையில் சந்திக்கப் போவதை நினைத்தால் ஏனோ வெட்கமும் பதட்டமும் மொத்தமாய் வந்து அப்பிக் கொண்டதாய் உணர்ந்தாள்..
இருப்பினும் இவையெதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் புடவையை உடுத்தி வந்து கண்ணாடி முன் அமர கீதா அவளுக்கு தலைவாறி கொண்டு வந்திருந்த பூச்சரத்தை வைத்துவிட்டார்..
மருமகளை தன்புறம் திருப்பி திருஷ்டி கழித்து பால் சொம்பை கொடுத்து அனுப்பினார்..
அடிமேல் அடி வைத்து நகர்ந்தவளுக்கு யார் கண்ணிலும் படாமல் போக வேண்டுமே என்ற நாணம் வேறு இருக்க அவள் பயந்தாற் போல் ஹாலில் யாருமே இருக்கவில்லை..
மெதுவாய் மாடி படியேறியவள் கதவின் தாழ்பாளில் கைவைக்க சரியாய் உள்ளிருந்து கார்த்திக் கதவை திறந்தான்..
வாங்க மேடம் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க??
சாரி மாமா ரொம்ப லேட் ஆய்டுச்சா.. ஸ்வீட்டி அப்போவே ரெடி ஆக சொன்னாங்க நாதான் லேட் ஆக்கிட்டேன்.. என்றவாறு டேபிளில் பாலை வைத்துவிட்டு திரும்ப கார்த்திக் கதவை தாளிட்டு திரும்பினான்..
அழகான லைட் எல்லோ நிற க்ரீப் புடவையில் துளியும் ஒப்பனையின்றி மனதின் பூரிப்பும் பதட்டமும் அவள் அழகுக்கு அழகேற்றியிருக்க அவளிடமிருந்து விழியகற்றாமல் அருகில் வந்தான்…
கைப்பற்றி அவளை தன்புறம் இழுத்தவன்,லுக்கிங் கார்ஜியஸ் டீ பொண்டாட்டி..
ஆனா ஏன் தேவையில்லாத உனக்கு செட் ஆகாத ஒரு பயம் பதட்டம் உன்கிட்ட இருக்கு அதுமட்டும் போய்டுச்சுன்னா ஆசம் ஆய்டுவ..
அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கன்னத்தின் சிவப்பு கூடிக் கொண்டே போவதாய் உணர்ந்தாள்..அது அது வந்து தெரில மாமா பட் ஒரு மாறி நெர்வஸாயிருக்கு..
தொண்டையெல்லாம் ஒரு மாறி..என திக்கி திணறி பேச அருகிலிருந்த பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்..
மறுப்பேதும் கூறாமல் அதைவாங்கி குடித்தவளுக்கு மனம் சற்று நிதானமடைந்ததாய் தோன்றியது..
ஒன்றும் பேசாமல் அருகில் அமர்ந்தவன் சட்டென அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..
ஆதரவாய் அவள் முன்தலையை வருடியவாறே அவன் அமைதியாய் இருக்க சில நிமிடங்களில் தன் இயல்புக்கு திரும்பியவள் சாய்ந்தவாறே அவனை ஏறிட்டு பார்க்க சிறு புன்னகையோடு தன் கன்னத்தால் அவள் தலையில் இடித்தான்..
அவனிடமிருந்து நிமிர்ந்து அமர்ந்தவளிடம்,
என்ன சஹிம்மா நார்மல் ஆய்டியா??எதுக்கு இவ்ளோ டென்ஷன் உன் வீடு உன் ரூம் எல்லாத்துக்கும் மேல உன் கார்த்திக்..
இப்படி பயப்படுறதுக்காகவா என்ன விரட்டி விரட்டி லவ் பண்றேன்னு சொன்ன???
மாமா என சிணுங்கியவள் அவனின் சிரிப்பில் தன்னை மறந்தாள்..
லவ் யூ சோ மச் மாமா என அவன் கண்களுக்குள் பார்த்து கூற,வாய்திறக்காமல் தன் கைகளை விரித்து தன்னவளை அழைக்க கூடு கண்ட பறவையாய் அவனுள் சேர்ந்து கொண்டாள்..
இறுக்கமாய் அணைத்து அவளை விடுவித்தவன் முகமெங்கும் முத்தங்களால் நினைக்க இறுதியில் இதழோடு இதழ் சேர்த்து இணைந்தான்..
அவன் பிடி தளர்ந்ததை உணர்ந்தவள் கண்திறந்து அவன் முகம் பார்க்க கண்களில் கண்ணீர் சேர்ந்திருந்தாய் தோன்றியது..
அதை தாங்க மாட்டாதவளாய் அவன் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள்..
மாமா என்னாச்சு மாமா ஏன் அழற??நா உனக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேனா மன்னிச்சுரு மாமா..
அதற்குள் சுதாரித்திருந்தவன் ஹே சஹி அதெல்லாம் ஒண்ணுமில்லடா சந்தோஷத்துல தான் கண்ணீர் வந்துருச்சு.
யார் மனசும் நோகாம எந்த ப்ரச்சனையும் இல்லாம உன்ன பத்திரமா என்கூட கூட்டிட்டு வந்துட்டேன்ல அந்த சந்தோஷம்தான்..
மத்தபடி ஒண்ணுமில்ல..நா ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..இனி சஹி 100 இல்ல 200% என் பொறுப்பு..
மாமா நிஜமா சொல்லனும்னா எல்லாமே கனவுமாறியிருக்கு நீ சொல்ற மாறி யாரும் அப்போஸ் பண்ணாம ப்ராப்ளம் இல்லாம ஸ்மூத்தா வெட்டிங் முடியுரது ரொம்ப ரொம்ப பெரீய விஷயம்தான்..
அதுவும் நேத்து பல்லக்குலா பாத்தவுடனே க்ரண்ட் வெட்டிங் பீல் வந்துடுச்சு..
உண்மைதான் சஹி..அவங்க நம்ம வெட்டிங்க இன்னும் ஸ்பெஷல் ஆக்கிட்டாங்க…
ஹே நீ சொன்னவுடனே தான் நியாபகம் வருது இத எங்க மாட்டலாம்நு சொல்லு என்றவாறு எழுந்து சென்று காலையில் ஷரவன் எடுத்த அந்த பெரிய ப்ரேமை எடுத்து வந்தான்..
மாமா இங்க மாட்டலாம் அப்போதான் காலைல எழுந்துக்கும் போதும் சரி தூங்கபோகும் போதும் சரி நாம அத பாக்குறதுக்கு நல்லாயிருக்கும்..
ஓ.கே எஜமானியம்மா தங்கள் உத்தரவு என்றன் சிரித்தவாறே அங்கிருந்த நாற்காலியில் ஏறி அதை மாட்டிவிட்டு இறங்கினான்..
சரி சஹிம்மா நீ தூங்கு காலைல சீக்கிரமே எழுந்துருப்ப..
நாளைக்கு உங்க வீட்டுக்கு வேற போகணும் இல்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படுத்துக்கோடா என கூற தன்னவன் மேல் அதிகரித்த காதலோடு சென்று உடைமாற்றி வந்து அமர்ந்தாள்..
அதற்குள் இரவு உடைக்கு மாறியிருந்தவனும் வந்து கட்டிலில் அமரஅவனையே பார்த்திருந்தவளை பார்த்து,என்ன பேபி தூக்கம் வரலையா??
என கிண்டல்யாய் கேட்க தாமரையாய் முகம் மலர்ந்தவள் அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்..
கொஞ்ச நேரம் படுத்துக்குறேன் மாமா..
தூங்கு சஹிம்மா..என நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தவன் பின் சாய்ந்தமர்ந்து தலைகோத சில நிமிட உரையாடல்கள் சீண்டல்கள் என தன்னையறியாமல் அவன் மடியிலேயே கண்ணயர்ந்திருந்தாள்..
எந்தவித சலனமுமின்றி தன் மடி சேர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு தன் குழந்தையை மடியில் ஏந்திய உணர்வு வந்திருந்தது..
கூடிய விரைவில் தேவிகாவின் ஆசையை நிறைவேற்றி சஹியை முழுமையாய் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென மனதில் உறுதி கொண்டவன் அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளை அருகில் படுக்க வைத்து தானும் கண்ணயர்ந்தான்..
அதிகாலையிலேயே கண்விழித்தவள் தன்னை அணைத்தவாறு தூங்குபவனின் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அப்படியே படுத்திருந்தாள்..
கம்பீரமாய் தூக்கத்தில் கூட அத்தனை ஆளுமை அவனிடத்தில்.
அவன் நெற்றியில் ஒற்றை விரலால் கோலம் வரைய சற்றாய் அசைந்து படுத்தான்..
பின் மெதுவாய் எழுந்தமர்ந்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு எழுந்து குளித்து கீழே சென்றாள்..
காலை வேளை ஆதலால் யாரும் எழுந்திருக்கவில்லை கிட்சனில் சத்தம் கேட்க அங்கே சென்றவள் கீதாவை கண்டு உள்ளே நுழைந்தாள்..
குட் மார்னிங் ஸ்வீட்டி..
வாடா குட்மார்னிங்.. என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட??
சும்மாதான்.இதுக்குமேல தூக்கம் வரும்நு தோணல அதான்..நா எதாவது ஹெல்ப் பண்ணவா ஸ்வீட்டி??
ரொம்ப நல்லாயிருக்கு வீட்டுக்கு வந்து ஒருநாள் கூட ஆகல அதுகுள்ள வேலையா நா காபி தரேன் அத சாப்ட்டு வேணா என்கூட கதைபேசிட்டு இரு..
வேற ஒண்ணும் பண்ண வேண்டாம் என்றவாறு காபியை கொடுக்க அதை வாங்கியவள் மேடை மீது ஏறியமர்ந்து பருக ஆரம்பித்தாள்..
அதன்பின் காலை உணவுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொடுக்க அவரோடு கதைபேசியபடி நேரம் நகர்ந்தது..
ஹாலில் பேச்சு சத்தம் கேட்க கீதாவிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டு அனைவருக்கும் கொடுக்க சென்றாள்..
குட்மார்னிங் அங்கிள்..
குட்மார்னிங்மா..தேங்க் யூ என்று அவர் காபியை எடுத்துக் கொள்ள ஷரவ் ஷரவந்தி என ஒவ்வொருவருக்காய் காபியை கொடுத்துவிட்டு கீதாவிடமிருந்து கார்த்திக்கிற்கு வாங்கிச் சென்றாள்..
அப்போதும் அவன் உறங்கிக் கொண்டிருக்க,
ஹே மாமா எழுந்துரு எவ்ளோ நேரம் தூங்குவ நா எவ்ளோ குட் கேள்ளா மார்னிங்கே எழுந்துட்டேன் எழுந்துரு மாமா..
மெதுவாய் அசைந்தவன் பாதி கண்களை திறந்து பார்த்து அவளை கைநீட்டி அழைக்க,அவனருகில் சென்று அமர்ந்தாள்..குட்மார்னிங்..
குட்மார்னிங் சஹி ஏன் சீக்கிரமே எழுந்துட்ட புது இடம்நு தூக்கம் வரலையா??
அப்படிலா ஒண்ணுமில்ல மாமா..இந்தா காபி எடுத்துக்கோ..
சீக்கிரமா ரெடி ஆகி ஸ்வீட்டி கீழே வர சொன்னாங்க போ ரெடி ஆகு..
ஆமா நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் இன்னுமும் ஸ்வீட்டிதானா??நல்ல மாமியார் என சிரிக்க,
கண்ணு வைக்காத மாமா..என்றவள் உடைமாற்றச் செல்ல அவனும் குளிக்கச் சென்றான்..
வெளியில் வந்தவனின் கண்கள் தன்முன் நின்றவளை கண்டு விரிந்தன..
அவன் வாங்கிக் கொடுத்த அந்த வைலட் நிற பட்டில் கழுத்தில் நீளமாய் ஒரு செயின் அணிந்து காதில் பெரிய குடை ஜிமிக்கி அணிந்து அளவான ஒப்பனையோடு தலையில் மல்லியை சூடிக் கொண்டிருந்தாள்..
அவனை கண்டவள்,மாமா நீ வாங்கி கொடுத்த புடவை தான் எப்படியிருக்கு??
ம்ம் கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லனுமா சஹி என்றவனின் குரலில் வித்யாசத்தை உணர்ந்தவள் புடவையை சரிசெய்வதை நிறுத்தி அவனைப் பார்க்க அதற்குள் அவளை நெருங்கியிருந்தான்..
சுவரோடு அவளை சாய்த்து தன் ஒரு கையை சுவரில் ஊன்றி மறுகையை அவள் இடையில் படரவிட பெண்ணவளோ மொத்தமாய் உருகிப் போயிருந்தாள்..
அவன் தொடுதல் கூறிய பாஷை புரிய மனம் படபடக்க இமைத்துடிக்க அவன் மார்பில் தன் கைகளை வைத்தவாறு தலைகுனிந்திருந்தாள்..
தன்னவளின் நாணத்தில் மேலும் தன்னை தொலைத்தவன் இதழோடு இதழ் பதித்தான் நொடிகள் நிமிங்களாய் கரைய கதவு தட்டப்படும் ஓசையில் தன்னிலையடைந்தவர்கள் சட்டென விலகி நிற்க சஹானாவோ சுவரைப் பார்த்து திரும்பிக் கொண்டாள்..
கார்த்திக் சென்று கதவை திறக்க ஷரவந்தி சாப்பிட அழைப்பதற்காக வந்திருந்தாள்..
இதோ வரேன் ஷரவ் என்று பதிலளித்து உள்ளே வந்தவன் இன்னுமும் சஹானா அப்படியே நிற்க மென்மையாய் பின்னிருந்து அணைத்தான் இதுக்கே இப்படி ஆனா எப்படி சஹிம்மா இன்னும் எவ்ளவோயிருக்கே என காதில் கிசுகிசுக்க அவனை தள்ளிவிட்டு வாசல்புறம் நகர்ந்தவள் நீ ரொம்ப மோசம் கார்த்திக் என்று ஓடிவிட்டாள்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
💞💞💞💞💞💞💞
Nice
தேவிகா ஆசை நிறைவேறிய பின் தான் சஹியோடு வாழ்க்கை தொடக்கமா? அருண் கதையை சீக்கிரம் முடிங்க
Lovely😊