108
மறுநாள் எழுந்தும் எழாதவளாய் சென்று கார்த்திக்கின் அறைக் கதவை தட்டினாள்..
தூக்கம் கலைந்தவன் மணியை பார்த்துவிட்டு இவ்வளவு காலையிலேயே யாரா இருக்கும் என்ற யோசனையோடு கதவை திறக்க நைட் பைஜாமாவோடு வந்து நின்றவளை பார்த்து பதறிவிட்டான்..
சஹி என்னாச்சு டா??
மாமா நேத்துலேயிருந்து ஒரே டயர்டா இருக்கு ஏன்னே தெரில என்றவள் அவனை தாண்டிச் சென்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து சாய்ந்து கொண்டாள்..
சிறு சிரிப்போடு அவளருகில் சென்றவன் அவளை பார்த்தவாறு அமர்ந்து அவள் இடைப்பிடித்து தன்புறம் நகர்த்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..
சஹி பேபி இதுக்காகவா இவ்ளோ காலைலேயே வந்து சர்ப்ரைஸ் குடுக்குறது..
நா தான் நேத்தே சொன்னேன்ல வேண்டாம்நு நீதான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்றேன்னு போன..
பாவமேநு போனேன் மாமா அது இவ்ளோ டயர்டா ஆகும்நு எனக்கென்ன தெரியும்..
ஆமா முடிச்சுட்டு வந்து காயத்ரி என்ன சொன்னாங்க..
ம்ம் என்ன சொல்லுவாங்க உங்க தூங்குமூஞ்சி பொண்டாட்டி தூங்கிட்டாங்க உங்க நிலைமை ரொம்ப கஷ்டம்நு சொன்னாங்க என்று பலமாக சிரித்தவனின் கையை இறுக கிள்ளியவள் கிண்டல் பண்ணாத கார்த்திக் அப்பறம் நிஜமாவே கஷ்டபடுவ என அவனை ஏறிட்டுப் பார்க்க
நோ நோ மீ பாவம் என்று தன் தாடையால் அவள் தலையில் இடித்தான்..
சரி போ போய் ப்ரெஷ் ஆய்ட்டு வா எதாவது சாப்டு நேத்தே ஒழுங்கா சாப்டலல..
என்று அவளை அனுப்பிவிட்டு தானும் தயாராகி வந்தான்.
அப்படி இப்படீயாய் காலை பொழுது கழிய மதிய உணவை முடித்துவிட்டு அனைவரையும் ஓய்வெடுக்க சொல்லிவீட்டு சிவாவுடன் கார்த்திக் கிளம்பினான்..
அந்த அருண் வீட்டு தெருவை அடைந்தவர்கள் தங்களுக்குள் செய்ய வேண்டியதை ஒருமுறை உறுதிபடுத்திக் கொண்டு கார்த்திக் அங்கேயே நிற்க சிவா அருண் வீட்டை இருமுறை இங்குமங்குமாய் கடந்து வந்தான் சில நிமிடங்களில் அருண் வெளியே வருவது தெரிய சாதாரணமாய் நடப்பதாய் காட்டிக் கொண்டு நகர்ந்தான்..
என்ன வக்கீல் சார் இவ்ளோ தூரம்???
ஹாய் அருண் சார்..இதுதான் உங்க வீடா??சும்மா போர் அடிக்குதேநு வாக்கிங் வந்தோம் அதுகுள்ள கார்த்திக்கு போன் வந்துருச்சு என கார்த்திக்கை காட்ட அந்த புறம் திரும்பி அவன் போன் பேசிக் கொண்டிருந்தான்..
ஓ சரி சரி இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு வரலனா எப்படி வாங்க காபி சாப்ட்டு போலாம்..
ஐயோ பரவால்ல சார்..நீங்களே வெளில கிளம்பிட்டு இருந்தீங்க எங்களால லேட் ஆக வேணாம்.. இன்னொரு நாள் வரோம்..
அட என்ன வக்கீல் சார்..உங்கள கவனிக்குறத விட எனக்கு ஒரு வேலையும் இல்ல வாங்க என கட்டாயப்படுத்த கார்த்திக்கை உள்ளே வருமாறு கைகாட்ட இரு நிமிடத்தில் வருவதாய் அவன் கூற அருணோடு சிவா உள்ளே சென்றான்..
சில நிமிடங்களில் கார்த்திக் வந்துவிட அருண் அவனிடம் என்ன ஆடிட்டர் சார் ரொம்ப பிஸி போல..
அப்படிலா ஒண்ணுமில்ல சார் இப்டி கண்டினியுவஸ் லீவ் நா எடுத்தாதில்ல அதான் மத்தபடி வேலையெல்லாம் கம்மி தான்…
சும்மா விளையாட்டு கேட்டேன் சார் இந்தாங்க காபி எடுத்துக்கோங்க..
காபியை அருந்தியவாறே வீட்டை சுற்றி கண்களை சுழற்றியவன்,உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு பாத்து பாத்து கட்டிருக்கீங்க..
உண்மைதான் இங்க இருக்குற ஒவ்வொரு கல்லும் எங்க தாத்தா பர்மால போய் சம்பாதிச்சது..
வீடு இந்த தெருவுல ஆரம்பிச்சு அடுத்த தெருல தான் முடியுதுனா பாருங்களேன்..
வாங்க வீட்டை சுத்தி காட்றேன் என்று பெருமை பீத்தியவாறே வீட்டை சுற்றிக் காட்ட தொடங்கினான்…
மாடிக்குச் சென்றவர்கள் அங்கிருந்த ஹால் முழுவதும் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்தவாறு நடக்க கார்த்திக் சட்டென ஒரு படத்தின் அருகில் நின்றான்..
அதன் கண்ணாடி உடைந்திருக்க கார்த்திக் அந்த முதியவரையே பார்த்தவண்ணம் நிற்க அருண் அவனருகில் வந்து நேத்து எதோ பட்டு கண்ணாடி உடைஞ்சுருச்சு கார்த்திக் சார் மாத்த சொல்லிருக்கேன் ஆள் வர்ற நேரம்தான்..
அதில்ல சார் இவரு பாக்க உங்களமாறியே இருக்காறே???
ஹா ஹா சார் பயங்கரமான ஆளு நீங்க கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே ஆனா என்ன நா தான் அவரை மாதிரி இருக்கேன்..
எங்க தாத்தா இவரு பேரை தான் எனக்கு வச்சுருக்காங்க அருணாச்சலம்..
நா தான் சுருக்கமா அருண்ணு வச்சுகிட்டேன் என்று பேசிக் கொண்டே போக கார்த்திக்கோ கோபத்தின் உச்சியிலிருந்தான் என்றால் சிவா கொலைவெறியோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தான்..
அதற்குமேல் அவர்களால் சாதாரணமாய் இருக்க முடியாது என தோன்ற ஏதேதோ காரணம் சொல்லி அங்கிருந்து வெளியே வந்துவிட்டனர்..
அந்நேரம் சரியாய் கார்த்தியின் மொபைல் சிணுங்க எடுத்துப் பார்த்தவன் கௌரியின் அழைப்பை பார்த்து ஏற்று பேசினான்..
யாரு கார்த்திக்???
கௌரி தான் சிவா காயத்ரி வந்துருக்காங்களாம் நா இங்க வாய்க்கால் பக்கத்துல வர சொல்லிருக்கேன் பேசிட்டே போய்டுவோம்.. என்றவாறு அவளுக்காக காத்திருந்தனர்..
ஹாய் அண்ணா..
வாங்க காயத்ரி..இது சிவா சஹானாவோட அண்ணா…
ஓ ஹலோ..அண்ணா நேத்து உங்ககிட்ட பேசுற நிலைமைல நாயில்ல நீங்களும் கேக்குற நிலைமைல இல்ல..
அதான் இப்போ பேசலாமேநு வந்தேன்.. அக்சுலா இது கொஞ்சம் சென்சிஸிடிவ்வான விஷயம் தான்..
மொதல்ல உங்களுக்கு இது எந்தளவு சாத்தியம்நு நம்புறீங்க???
உண்மைய சொல்லனும்னா இதெல்லாம் பொய்னுதான் நினைச்சுட்டு இருந்தோம் ஆனா என் கண்ணு முன்னாடி சஹானா நடந்துகிறதெல்லாம் பாத்தப்பறம் எப்படிம்மா நம்பாம இருக்க முடியும்…
ம்ம் கரெக்ட்தான் ஏன்னா இவங்களோடது ரொம்ப ரேர் கேஸ்..
யூஷுவலா முன் ஜென்ம நினைவுகள் மனுஷனோட 2லிருந்து 4 வயசுகுள்ள தான் வரும்..
ஏன்னா குழந்தைகளோட அந்த வயசுல அவங்களோட மூளை வேகமா செயல்படும்..
அதுக்கப்பறம் அவங்களோட மனசு முழுவதுமா இந்த வாழ்க்கைல ஈடுபட ஆரம்பிச்சுரும்..
அப்படி அவங்களுக்கு நியாபகம் வர்றதுல பெரும்பாலும் அவங்களோட குடும்ப உறுப்பினர்கள் தாம் எப்படி இறந்தோம் இதெல்லாம் தான் முக்கியமா நினைவுக்கு வரும்..
சோ நார்மலா இந்த ஹிப்னோதெரபி எதுக்காக யூஸ் பண்ணுவோம்நு பாத்தீங்கனா பார் எக்சாம்பில் பாரின்ல ஒரு லேடிக்கு தண்ணீர பாத்தாலே கண்ணீர் வருமாம் பயமா இருக்குமாம் அப்போ அவங்க டாக்டர் எடித்நு ஒருத்தர போய் பாக்கும் போது அவரு அவங்கள ஹிப்னோதெரபி மூலமா பாஸ்ட் லைப் பத்தி தெரிஞ்சுக்க பண்ணாரு அப்போ தெரிய வந்தது
என்னன்னா அந்த லேடி ஒரு பிறவில குழந்தையா இருக்கும் போது படகு சவாரில இருந்து தவறி ஏரில விழுந்து இறந்துட்டாங்க அடுத்த பிறவில மீனவரா பிறந்து கடல்ல மூழ்கி இறந்துருக்காங்க
அதோட தாக்கம்தான் இப்போ இந்த பிறவில அவங்க தண்ணிய பாத்து பயப்படுறதுக்கு ரீசன்..சோ இது தெரிஞ்சப்பறம் எடித் சரியான ட்ரீட்மெண்ட் மூலமா அவங்க ஆள்மனசுலயிருந்து அந்த நினைவுகளை மாத்தினார்..
இதெல்லாம் கேக்குறது கதை மாறி கூட இருக்கலாம் பட் இதெல்லாம் உண்மை..
இன்னும் ஈசியா சொல்லனும்னா உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது தூங்கிட்டு இருக்கும் போது உயரமான இடத்துலயிருந்து விழறமாறி தோணி பயந்து எழுந்துருக்கீங்களா அப்பறம் பாத்தா நீங்க உங்க பெட்லயேதான் இருப்பீங்க???
எனக்கு அப்படி தோணிருக்கு காயத்ரி சின்ன வயசுல அடிக்கடி அந்தமாறி வரும் பட் இப்போ கம்மி ஆய்ருக்கு சில நேரம் நிஜமாவே பெடட்ல இருந்தே விழுந்துருக்கேன்…சிவா
கரெக்ட் அண்ணா இப்போ உங்களோட பாஸ்ட் லைப் பாத்தோம்னா கண்டிப்பா ஏதோ ஒரு பிறவில நீங்க ஏதோ ஒரு இடத்துலயிருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம்..
ஒரு வயசு வர உங்க ஆத்மாக்கு அது நியாபகம் இருந்து இப்போ அந்த நினைவு மறைஞ்சுக்கும் அதனால தான் அப்படி தோணுறது கம்மி ஆகியிருக்கும்..
காயத்ரி சான்லெஸ்ம்மா நீ சொல்றதெல்லாம் கேக்க கேக்க ஒருமாறி புல்லரிக்குது..
அப்போ இந்த ஏழு ஜென்மம்ங்கிறதெல்லாம் உண்மைதானா??
கண்டிப்பா அண்ணா அதுக்கு மேலேயும் இருக்கலாம்..நம்ம புராணப்படி புல்லாகி பூண்டாகி காயாகி கனியாகிநு வரிசைப்படுத்துரோம் சைன்டிவிக்கா பாத்தா நாம முற்பிறவில குருவியா மயிலா மரமா பூவா பட்டாம்பூச்சியா ஏன் உருவமேயில்லாம பேயா கூட அலைஞ்சுட்டு இந்த உடம்புக்குள்ள வந்துருப்போம்..
மை காட்..இதெல்லாம் சாதாரண ஒருத்தர்கிட்ட போய் சொன்னா பைத்தியம்நு சொல்லுவாங்க அதனாலதான் கடவுள் நம்மளோட ஒவ்வொரு பிறவியோட நியாபகங்களையும் அங்கேயே மறக்க வச்சுட்றாரு..
அதெல்லாம் நியாபகத்துல இருந்தா மனுஷங்களோட வாழ்க்கையே நரகமாயிருக்கும்..
ஹா ஹா உண்மைதான்..தன் வாழ்க்கை பூரா முன்ஜென்ம ஆராய்ச்சில கழிச்ச சைன்டிஸ்டையே நம்ம மக்கள் நம்பல.
அப்பறம்ல தனி மனுஷனா நாம சொன்னத நம்புவாங்க..
அது யாருங்க???-சிவா..
அவர் பேர் ஸ்டீவன்சன்..வெர்ஜீனியா யூனிவர்சிட்டில வேலை பாத்துட்டு இருந்தவரு..
எங்கள மாறி ஹிப்னோதெரபி பத்தி படிக்குறவங்களுக்கெல்லாம் அவரோட தீசிஸ் எல்லாம் தான் ஓலைச்சுவடி மாதிரி..
கிட்டதட்ட 40 வருஷம் அவரு முன்ஜென்மத்தை பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரு..
அப்போ ஒரு தடவை பக்கத்து கிராமத்துல இரண்டு வயசு பையன் ஒருத்தன் சம்மந்தமேயில்லாம ரெண்டு பேர் பேரை சொல்லிட்டு இருந்துருக்கான்..
அவன்கிட்ட ஸ்டீவன்சன் விசாரிச்சப்போ தன் பேரு இப்ராஹிம்நும் அவன் க்ரீத்ங்கிற கிராமத்துல வாழ்ந்ததாகவும் 1949ல் காய்ச்சலால இறந்துட்டதாகவும் சொல்லிருக்கான்..
அவனோட மனைவியும் பையனும் இன்னமும் அங்க வாழ்றதாகவும் அவங்கள பாக்கனும்னும் சொல்லிருக்கான்..
அவன் சொல்ற பகுதி பக்கத்துல தான் இருக்குநு தெரிஞ்சு அவரும் அங்க கூட்டிட்டு போனா அவன் சொன்ன எல்லாமே சரியா இருந்துருக்கு..
தன்னோட பால்ய சிநேகிதனையும் அவன் மனைவி பேரையும்தான் சொல்லிட்டே இருந்துருக்கான்..
அவனை டெஸ்ட் பண்ணதுல அவனோட முன்ஜென்மம் பத்தின 57 கேள்விகள்ல 51 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லிருந்தானாம்..
மிச்ச 6 கேள்வி கூட அவன் சின்ன பையன்ங்கிறதால அவ்வளவு தெளிவா இல்லாம போய்ருக்கலாம்நு சொன்னாராம்..
இது ஒரு எக்சாம்பில் தான் இதுமாதிரி அவரு 3000 முன்ஜென்ம கேஸ்களை பாத்திருக்காரு..
அதுல அவங்க இறந்ததா சொல்ற காரணத்தையும் போஸ்ட்மார்ட்டம் ரீப்போர்ட்டையும் வச்சு தன்னோட ஆராய்ச்சியை சம்மிட் பண்ணாரு ஆனா அதை பல டாக்டர்கள் ஏத்துக்கவேயில்ல..
அவரு இறக்குறதுக்கு முன்னாடி பைல் வைக்குற அலமாரியை வாங்கி அதுக்கு ஒரு பூட்டு ரெடி பண்ணாராம் பர்டிக்குலர் வேர்ட் போட்டாதான் அது திறக்குமாம்..
அந்த பார்ஸ்வேர்ட்டை யார்ட்டையுமே சொல்லாம தன்னோட மறுபிறவில தானே வந்து அந்த பூட்டை திறப்பேன்னும் அப்போ இந்த உலகம் முன்ஜென்மத்தை பத்தி நம்பும்நும் சொல்லிட்டு இறந்துட்டாரு..
பட் இன்னைக்கு வரைக்குமே அது திறக்கப்படாம தான் இருக்கு..
வாவ் க்ரேட் மா எவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்க..கேக்க கேக்க வாயடைச்சு போய்ட்டோம்..-கார்த்திக்..
தேங்க்ஸ்ண்ணா எதுக்காக நா இவ்ளோதூரம் உங்களுக்கு எக்ஸ்ப்லைன் பண்றேன்னா இதெல்லாமே நார்மலா ஹிப்னோதெரபில நடந்தது இல்ல நடக்குறது பட் உங்க விஷயத்துல எல்லாத்தையும் தாண்டி இது இப்படிதான் நடக்கனும்னு கடவுளால நிச்சயிக்கபட்டு நடக்குதுநு தோணுது..
ஒரு டாக்டரா இப்படி பேச கூடாதுதான் இருந்தாலும் அதான் உண்மை..தேவிகா மனசுல நினைச்சது நடந்த அடுத்தநொடி சஹானா முழுமையா சஹானாவா தான் இருப்பாங்க..
சோ பயப்படாதீங்க அண்ணா..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அந்த அருணாச்சலம் யாருநு கண்டுபிடிங்க..
அவனின் முற்றுபுள்ளி நீங்களா இருக்குற பட்சத்துல சஹானா பழையபடி மாறிடுவாங்க..
அக்சுவலா அந்த அருணாச்சலம் இங்கதான்ம்மா இருக்கான்..
வாட்???தென் பைன் இதுக்கு மேல நா சொல்றதுக்கு ஒண்ணுமேயில்ல..
அவனை நீங்க பாக்குற அளவுக்கு கடவுளோட ஏற்பாடு இருக்குண்ணா இதுக்கப்பறம் நடக்க வேண்டியதும் கணிக்கப்பட்டுருக்கும்ண்ணா..
எல்லாத்தையும் மீறி என் உதவி எப்போ தேவைப்பட்டாலும் சொல்லுங்க நிச்சயமா நா வரேன்..
தேங்க் யூ சோ மச் காயத்ரி நீங்க பண்ண உதவியை நாங்க என்னைக்கும் மறக்கமாட்டோம்..-சிவா..
பரவால்ல அண்ணா..இப்படி ஒரு காதலுக்காக என்ன வேணா பண்ணலாம்..நா கிளம்புறேன் டைம் ஆச்சு என்று புன்னகையோடு விடைப் பெற்றாள்..
வீட்டிற்குள் நுழையும்போது சஹானா கையில் காபியோடு ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்..
இவர்களை கண்டதும் கார்த்திக்கின் மீது காரப் பார்வை வீசியவாறே காபியை பருக சிவா கார்த்திக்கிடம்,
இருக்கு இன்னைக்கு உங்களுக்கு ஆப்பு இருக்கு..
ஏன் சிவா நீங்க வேற??
ம்ம் என்ஜாய கார்த்திக் நா வரல இந்த விளையாட்டுக்கு மாட்டினா ஒரு வழி ஆக்கிடுவா என்றவாறு ஷரவந்தியை தேடி உள்ளே ஓடிவிட்டான்…
ஹலோ சஹி பேபி என்றவாறு அவளருகில் அமர்ந்தான்.. கார்த்திக் அடி வாங்காம ஓடிடு.. நா கோவமா இருக்கேன்..
ஏய் பொண்டாட்டி என்ன நீ திடீர் திடீர்நு பேர் சொல்லி கூப்டுற??
ம்ம் விட்டா வாடா போடானே கூப்டுவேன்..நீ இந்த சிவாயெல்லாம் எப்படி லவ் பண்ணீங்க எப்போ பாரு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஊர் சுத்திட்டு இருக்கீங்க…சரியா படல என குறுகுறு பார்வை பார்க்க,
சத்தமாய் வாய்விட்டு சிரித்தவன்..
பேபி நல்லவேளை யாரும் பக்கத்துல இல்ல மானம் போய்ருக்கும் ஏண்டி நீ இப்படியிருக்க சரி இப்போ என்ன அவரோட வெளில போனது தப்புதான்
அதுக்கு பனிஷ்மெண்ட் என்னவோ சொல்லு செய்றேன்..
கில்லாடி மாமா நீ சரி நீ இவ்ளோ தூரம் கெஞ்சி கேக்குறதால சொல்றேன்.. ஈவ்னிங் என்ன வெளில கூட்டிட்டு போ..
நா கெஞ்சினேனா அது சரி.. ம்ம் எங்க போலாம்நு சொல்லு..
பெருசாலா இல்ல மாமா சும்மா அப்படியே ஒரு வாக் போய்ட்டு வரலாம்..
சரி சஹி நா போய்ட்டு ப்ரெஷ் ஆய்ட்டு வந்துரேன் நாம போலாம் 10 மினிட்ஸ் என கன்னம் கிள்ளிச் சென்றவனை கண்களுக்குள் நிரப்பினாள்..
அடுத்த அரைமணி நேரத்தில் இருவருமாய் வீட்டை விட்டு கிளம்பி நடக்க ஆரம்பித்தனர்..
மாலை மங்கும் வேளையில் தன்னவனோடு கைகோர்த்து அந்த தெருக்களில் நடக்கும்போது ரம்மியமாய் இருப்பதாய் தோன்றியது..
என்ன சஹி அமைதியாவே வர???
இல்ல மாமா மனசு ஒருமாறி அமைதியா இருக்கு அதான்.. என்று அவள்முடிக்க கார்த்திக்கின் கைப்பேசி ஒலித்தது..
அப்பா கிளம்பிடீங்களா???
ம்ம் ஆமா கார்த்தி சம்மந்தி வீட்ல கிளம்பிடாங்க இங்க வந்து பிக்கப் பண்றேன்னு சொல்லிருக்காங்க.
ஓ சரிப்பா பாத்து வாங்க..நாங்க இங்க கோவில் பூஜைக்கு அரேஜ்மெண்ட்ஸ்லா பண்ணியாச்சு நீங்க வந்தவுடனே கோவில் போக கரெக்ட்டா இருக்கும்..
மேலும் சில நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் தன்னவள் ஏதோ யோசனையாய் வருவதை கண்டு,
என்னாச்சு சஹி???
இல்ல மாமா இந்த ஒரு வாரமும் போனதே தெரில இல்ல அழகான நாட்கள் மாமா.. நாளைக்கு ஊருக்கு போனும்னு நினைச்சா கஷ்டமாயிருக்கு..
ம்ம் உண்மைதான் சஹிம்மா ப்யூட்டிபுல் ப்லேஸ்.. பட் என் சஹிகுட்டி இப்படி பீல் பண்ணுவானு தெரிஞ்சுதான் நா ஆல்ரெடி ஒரு ஏற்பாடு பண்ணிட்டனே..
என்ன மாமா சொல்ற???
ம்ம் அடுத்த வாரம் நாம கல்யாணம் முடிஞ்சதும் டூ டேஸ்ல ஹனிமூன் ட்ரிப் ஆரம்பிக்கலாம்நு இருக்கேன் ஒரு 20 டு 25 டேஸ்..
மீ அண்ட் சஹி மட்டும்..என்ன ஓ.கே தான??
பெண்ணவள் கன்னம் சிவக்க தலையை குனிந்து கொள்ள,எங்கநு கேக்க மாட்டியா சஹி???
ம்ம் எங்க போறோம் மாமா??
இங்கதான் என்றுகூறி கண்சிமிட்ட சஹானாவோ வாயடைத்து நின்றாள்.. இங்கேயா????
ம்ம் ஆமா சஹிம்மா ஹனிமூன் ப்லேஸ் நமக்கு பிடிச்ச இடமா மனசுக்கு சந்தோஷத்த குடுக்குறதா இருக்கனும் உனக்கு இதவிட எந்த இடம் சந்தோஷத்தை குடுக்க போகுது அதனால தான் இங்கேயே வரலாம்நு டிஸைட் பண்ணிட்டேன்..ஓ.கே தான??
லவ் யூ சோ மச் மாமா என அவன் தோள் சாய்ந்து கொண்டாள்..
இரவு உணவை எடுத்து வந்த கௌரி வீடு முழுவதும் தேடியும் யாரையும் காணாமல் வாசலை நோக்கி செல்ல ஷரவன் அவனது அறையிலிருந்து வந்தான்..
யாரையாவது தேடுறியா???
இல்ல சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் யாரையும் காணுமேநு அதான்..
ஓ அண்ணா அண்ணி வெளில போய்ருக்காங்க ஷரவ் மாடிலயிருக்கா..
ஓ சரி நா அப்பறமா வாரேன் என நகரப் போனவளை மறித்து நின்றவன் நா கொஞ்சம் உன்கூட பேசனுமே..
என்ன சொல்லுங்க என்றாள் சிறு தயக்கத்தோடு..
ம்ம் எனக்கு உன்னை பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்நு ஆசப்பட்றேன்..
நாளைக்கு நாங்க ஊருக்கு கிளம்புறோம் அதான் அதுக்குள்ள சொல்லிடலாம்நு ஒண்ணும் அவசரமில்ல நீ யோசிச்சு சொல்லு..
ஒரு முறை அவனை நிமிரிந்து பார்த்தவள்.மறுபுறம் திரும்பியவாறு எனக்கு வந்து…..
இதெல்லாம் சரிபடாதுங்க..இன்னும் படிக்கனும் என் பீல்ட்ல எதாவது சாதிக்கனும் அதுக்கப்பறம் தான் கல்யாணத்தை பத்தி யோசிக்கனும் அதுகூட எங்கப்பாவோடமுடிவுதான்..
கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ..நா உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் சொன்னேன் நாளைக்கே பண்ணிக்கனும்னு சொல்லலையே..
இன்பேக்ட் நானே என் ப்ரோபஷன்ல கத்துக்க நிறைய இருக்கு…
அதுக்கப்பறம் வந்து உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டா நீ பிடிக்கும்நு சொல்லுவியா மாட்டியானு தெரியனுமே அந்த அஷீரன்ஸ் கூட இல்லாம எந்த நம்பிக்கைல நா எங்க அம்மா அப்பாவ பொண்ணு கேட்டு வர சொல்றது??
இப்போ புரியும்னு நினைக்குறேன்..சொல்லு இன்னும் 4 இல்ல 5 வருஷம் கழிச்சு பொண்ணு கேக்க வரலாமா கூடாதா என குனிந்து அவளைப் பார்க்க அவளோ பதட்டமாய் தன் துப்பட்டாவை கையில் சுழற்றிக் கொண்டிருந்தாள்..
எஸ் ஆர் நோ??என மீண்டும் அவன் விடாபிடியாய் கேட்க,
மௌனம் சம்மதம்நு தெரியாதா கொழுந்தனாரே??நா கூட உங்கள என்னவோநு நினைச்சேன் பட் பரவால்ல நீங்க உங்க அண்ணன் அளவுக்கு மோசமில்ல..
என்ன கௌரி என் கொழுந்தனார் ஓ.கே தான என அதிகாரமாய் கேட்க கார்த்திக் குறுஞ்சிரிப்போடு அவளருகில் வந்து நின்றான்..
அண்ணா..
எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன் ஷரவன்… கௌரி உன் விருப்பத்தை சொல்லு..
இரண்டு பேருக்கும் சம்மதம்ங்கிற பட்ஷத்துல பெரியவங்ககிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு.. என்று ஷரவனின் தோள்தட்டிச் சென்றான்..
ஆனா கொழுந்தனாரே உங்க அண்ணன் எப்படி இப்படி ஒரு நல்லவரா இருக்காருனே தெரில..
ம்ம் எனிவே உங்க ரெண்டு பேருக்கும் என் சப்போர்ட்டும் எப்பவும் உண்டு..
கௌரி நாதான் சீனியர் சோ ரகிங்லா உண்டு பீ கேர்புல் என்று உள்ளே சென்றுவிட,ஷரவன் இன்னமும் அவளை மறித்து நின்றிருந்தான்..
பாரு நம்ம விஷயத்துலா எல்லாமே தலைகீழா இருக்கு உன் சம்மதமே தெரில அதுகுள்ள குடும்பமே ஓ.கே சொல்லியாச்சு..
ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தவள் சம்மதம் இல்லாமயா இவ்ளோ நேரம் நீங்க பேசினதெல்லாம் அமைதியா நின்னு கேட்டுட்டு இருந்தேன்..
சரியான டியூப்லைட் என்றவாறு அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..
அவள்சென்ற அடுத்த நிமிடம் ஷரவனின் பின்னிருந்து மச்சான்…….
குரல் வந்த திசையை பார்த்து கைக்கூப்பியவன் மாமா உங்ககிட்டயும் மாட்டிட்டேனா நா பாவம் மாமா..
இப்படி ப்ரோபபோஸ் பண்ண அன்னைக்கே குடும்பத்துல அத்தனை பேர்ட்டயும் மாட்டிட்டேனே..
ஹா ஹா விடு மச்சான் நடு வீட்ல நின்னு ப்ரோபோஸ் பண்ணா அப்படி இப்படி காதுல விழதான் செய்யும்..
நல்லவேளை என் மாமனார் மாமியார் இல்லயேநு சந்தோஷப்பட்டுக்கோ..
ஷரவன் கங்க்ராட்ஸ்டா..-ஷரவ்..
நீயுமா தேங்க்ஸ் ஷரவ் என தனதறைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்..
மறுநாள் காலையிலேயே பெரியவர்கள் வந்துவிட அவர்கள் குளித்து தயாராகி கோவிலுக்கு கிளம்பினர்..
அனைவரும் வெளியே வந்து காரில் ஏற சஹானாவை காணாமல் கார்த்திக் உள்ளே வந்தான்..என்னாச்சு அத்தை சஹானா எங்க???
அத ஏன் கேக்குறீங்க மாப்ள..நானே உங்கள கூப்பிட வரலாம்நு இருந்தேன்..
நீங்க கூப்டாதான் வருவாளாம்.. கதவை தட்டி தட்டி ஓஞ்சு போய்ட்டேன்..
சரி சரி நீங்க போங்க அத்தை நானே கூட்டிட்டு வரேன்..என அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு மனதிற்குள் தன்னவளை நினைத்து சிரித்தவாறே கதவைதட்ட திறந்துதான் இருக்கு மாமா வா என உள்ளிருந்து குரல் கொடுத்தாள்..
என்ன சஹி இப்படி பண்ற என கேட்டவாறே உள்நுழைந்தவன் தன்னவளை கண்டு வாயை மூடிக் கொண்டான்..
அழகான நாவல்பழ நிற மைசூர் சில்க் சேலையில் கரும்பச்சை நிற பார்டரோடு அதற்கேற்ற சிறு செயினும் கம்மலும் கைநிறைய அதே நிறத்தில் வளையலுமாய் அழகாய் நின்றிருந்தாள்..
மாமா எப்படியிருக்கு..நானே பர்ஸ்ட் டைம் கட்டிருக்கேன்..
உனக்குதான் முதல்ல காட்றேன் சொல்லு எப்பாடியிருக்கு என அவனருகில் வர அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன்
என் சஹி எப்பவுமே கொள்ளையழகு அதுல என்ன டவுட்.. வந்ததுக்கு ஒரு கிஸ் லாபம் போலாமா என கேட்க
ஆனாலும் நீ ஆடிட்டர்நு ப்ரூவ் பண்ணிட்டே தான் இருக்க கணக்குல கரெக்ட்டா இருக்கியே மாமா வந்த வேலைய முடிச்சுட்டு கிளப்பற பாத்தியா??
சஹிம்மா எல்லாரும் வெயிட்டிங்ல அதுக்காகதான் சொல்றேன்..
இன்னும் ஒரே வாரம் கல்யாணத்துக்கப்பறம் நீ இப்படி ரெடி ஆய்ட்டு வந்து நில்லு நீயே விரட்டினாலும் ரூமை விட்டு நகர மாட்டேன் என்ன சொல்ற டீலா???
அதான உன்கூட பேசி ஜெயிக்க முடியுமா சரி சரி வா போலாம் மாமா..
அதன்பின் அன்றைய பொழுது தெய்வத்தின் அருளோடு அழகாய் அமைந்தது..
குல தெய்வ கோவிலில் ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக்க அவர்கள் சென்றவுடன் பூஜை ஆரம்பித்தது..
அபிஷேகங்கள் முடிந்து பெண்கள் அங்கேயே பொங்கல் வைத்து இரு தம்பதிகளுக்கும் அர்ச்சனை செய்து திருப்தியாய் வேண்டுதலை முடித்து வீட்டுற்கு வர மதியத்தை தாண்டியிருக்க பெரியவர்கள் பயண களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட சிவா ஷரவந்தியை அழைத்து கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றான்..
என்னப்பா சொல்லுங்க எதுக்கு கூப்டீங்க??ட்ரெஸ்லா பேக் பண்ணணும்..
ம்ம் நாட்டுக்கு அதான் இப்போ ரொம்பா முக்கியம்..ஏன் ஷரவ் நானே ஊருக்கு போறத நினைச்சு எவ்ளோ பீலிங்க்ஸ்ல இருக்கேன்..
அங்க போனா வேலை வெட்டிநு பாக்கவே டைம் எப்பவாவதுதான் கிடைக்கும்..
நா அதை நினைச்சு கவல பட்டுட்டு இருக்கேன் நீ என்னனா ஜாலியா பேக்கிங் பண்ண போறங்கிற..
ஐயோ என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க..எனக்கும் இங்கயிருந்து போக மனசேயில்ல..
பட் நெக்ஸ்ட் வீக் அண்ணா கல்யாணம்ல நாம அவங்களுக்கு எவ்ளோ சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணி வச்சுருக்கோம் அந்த ஜாலில தான் ரெடி ஆகுறேன்..
ம்ம் டீச்சரம்மா நீ ஆனாலும் என்ன கண்டுக்கவே மாட்ற கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப பீல் பண்ணுவ??
என்ன லாயர் சார் கிரிமினல் மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க.
எதுவாயிருந்தாலும் கல்யாணத்துக்கப்பறம் நா சமாளிச்சுக்குறேன் நீங்க கவலபடாதீங்க பை..
என அவள் வேகமாய் கிழிறங்க.. படியருகில் சென்று அவனைப் பார்க்க உண்மையாகவே அவன் முகம் வாட்டமாய் தான் இருந்தது..
மேலும் இரண்டுபடி இறங்கியவள் அம்மா என்று அலற சிவா ஓடி வந்தான்..
ஷரவந்தி காலைப் பிடித்தவாறு அமர்ந்திருந்திருக்க பதறிவிட்டான்..
ஷரவ் என்னடா ஆச்சு??விழுந்துட்டியா??என்னடீ??என அவன் கேட்டுக் கொண்டேயிருக்க சட்டென அவன் கன்னத்தை பற்றி இதழ் பதித்தாள்..
இப்போதைக்கு இவ்ளோ தான் ஆள விடுங்க.. முதல்ல பாவமா மூஞ்சிய வச்சுக்குறத மாத்துங்க என்றவாறு நிற்காமல் ஓடிவிட்டாள்..
தேங்க் யூ டீச்சரம்மா என்றவாறு தன்னவளை பின் தொடந்தான்…
கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன் கார்த்திக் மணியை தேடிச் சென்றான்..
வாங்க தம்பி எதுவும் வேணுமா??
இல்ல அண்ணா சாரி இனி உங்கள மாமாநு தான் கூப்டனும் மறந்துட்டேன்..
தம்பி என்ன சொல்றீக எனக்கு புரில..
என் தம்பிக்கு மாமனார்னா எனக்கு மாமா தான??
தம்பி..
பதட்டபடாதீங்க அண்ணா..ஷரவன்க்கு கௌரியை பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும் ஆசப் பட்றான்..
பட் கௌரி படிப்ப முடிக்கட்டும் மேல படிக்குறதுனாலும் படிக்கட்டும்..
ஷரவனும் அதுக்குள்ள அவனோட வேலைல நல்ல நிலைமைக்கு வந்துருவான்..
நா இத இப்போவே உங்ககிட்ட ஏன் சொல்றேன்னா நாளைக்கே கௌரி படிப்ப முடிச்சவுடனே நாலஞ்சு வரன் வரும்..
ஊர்காரங்க தெரிஞ்சவங்கநு கேப்பாங்க அப்போ உங்களுக்கு தர்மசங்கடம் ஆக கூடாதுநுதான் சொல்றேன்..
எங்க வீட்டுக்கு கௌரி மருமகளா வர்றதுல உங்களுக்கு சம்மதம் தான???
அவன் கைகளைப் பிடித்தவாறு தம்பி சந்தோஷத்துல பேச வார்த்தை வராம நிக்குறேன்..
சஹானாம்மா வாழப் போற வீட்ல என் பொண்ணும் இருக்கப் போறாங்கிறத விட வேற எண்ணம் வேணுமா ஆனா இப்போ அதையும் தாண்டி அவளுக்கு ஒரு நல்ல அண்ணணா நீங்க இருக்கீங்களே தம்பி அது போதாதா பொம்பள பிள்ளைய எப்படி கரையேத்த போறோம்நு தவிச்சு போயிருந்தேன் இனி கௌரி வாழ்க்கைய பத்தி எனக்கு எந்த கவலயும் இல்லப்பா..
சந்தோஷம் அண்ணா..ஆனா இப்போதைக்கு நா உங்ககிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசினது யாருக்கும் தெரிய வேணாம் கௌரி உட்பட..
அப்பா அம்மாட்ட விஷயத்தை பேசி சம்மதம் வாங்குறது என் பொறுப்பு .நீங்க எப்போ சென்னை வரீங்க??
நல்லா கேட்டீக போக உங்க கல்யாண வேலைலா நா இல்லாமையா ரெண்டே நாள்ல வந்துருவேன் தம்பி..
நல்லா சொன்னீங்க போங்க அது எங்க ஊரு உங்களுக்குலா ஒரு வேலையும் வைக்க மாட்டோம்..
எங்கள ஆசீர்வாதம் பண்றது மட்டும்தான் உங்க வேலையா இருக்கனும்..என்றவாறு அவரிடமிருந்து விடைப் பெற்றான்…
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
💞💞💞💞💞💞💞