204
“கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
காலை ஆறு மணிக்கே தயாராகி அனைவரும் வெளியே வர ஒரு முதியவர் மணியிடம்,
என்ன மணி பட்டணத்து புள்ளைக இவ்ளோ விரசா எழுந்து கிளம்பிடாக ஊருக்கு போறாகளா??
இல்ல சித்தப்பூ பாபநாசம் போறாக இப்ப போனா கொஞ்சம் கூட்டமில்லாம இருக்கும்ல அதான்..
அதுவும் சரிதான் பாத்து போய்ட்டு வாங்க கண்ணுகளா..
என்றவாறு நகர மணி உள்ளே சென்று பெரிய பையை எடுத்து வந்தார்..தம்பி இதுல மதியானத்துக்கும் சேர்த்து சாப்பாடு வச்சுருக்கேன்..
அங்கப் போய் கடையை தேடி அலைய வேண்டாம் பாருங்க..எதுனாலும் போன் பண்ணுங்க..
தேங்க்ஸ் அண்ணா போய்ட்டு வரோம் என்றவாறு கிளம்பினர்..பாபநாசம் பாவநாசம் என உள்ளுர் வட்டாரங்களில் அழைக்கப்படும் ஒரு அழகிய சுற்றுலா தலம்..
அகஸ்த்தியர் அருவி என்றுமே வற்றாத ஒன்று..போகும் வழி எங்கும் பச்சைபசலென சுற்றுச்சுழலும் சில்லென்ற காற்றும் ரம்மியத்திற்கே ரம்மியம் சேர்ப்பதாய் இருந்தது..
அகத்திய முனிவர் சிவபெருமானை திருமண கோலத்தில் காணப்பெற்ற இடமாதலால் இப்பெயர் பெற்றது….
பேச்சும் சிரிப்புமாய் வந்தலில் சட்டென வந்தடைந்துவிட்டதாய் தோன்றியது..
அருவியை கண்டதும் அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொள்ள சஹானா மட்டும் அங்கேயே நின்றாள்.
வா சஹி போலாம்..
எனக்கு தான் பயம்நு தெரியும்ல நீ போ மாமா..அதான் நாயிருக்கேன்ல வா என கட்டாயப்படுத்தி அவளை அனுப்பியவன் அவள்மீதே கவனம் வைத்திருந்தான்..
அருவியில் தலையை நுழைத்தவளுக்கோ உடல் மனம் அனைத்தும் குளிர்ந்துவிட்டதாய் தோன்றியது..
சில நிமிடங்களில் அவள் படிக்கரைக்கு செல்வதை கண்டவனும் வெளியே வர,என்ன சஹி அதுக்குள்ள வந்துட்ட..
ரொம்ப வருஷம் ஆச்சுல மாமா மூச்சடைக்குது அதான்..போன தடவை நாம வந்தத மறக்கவே முடியாது நா ரொம்ப சந்தோஷமா இருந்த நாள் மாமா..
அவனுக்குத் தெரியும் இது தேவிகாவென இருப்பினும் எதையும் வெளிக்காட்டாமலேயே பேச்சை தொடர்ந்தான்..
ம்ம் சரி சரி வா நாம ஒரு வாக் போலாம்..மாமா கோவிலுக்கு போலாம் மாமா..
பாபநாசநாதர் பாவங்களை அழிக்கும் இடத்தில் தாயார் லோகநாயகி(உலகாம்பிகை)யோடு பள்ளிக் கொண்டுள்ளார்..
மனமாற வேண்டிக் கொண்டு பிரகாரத்தை சுற்றிவர அங்கு ஒருவருடைய கைப்பையை குரங்கு எடுத்துக் கொண்டு மேலே அமர்ந்தவாறு ஒவவ்வொரு ரூபாய் தாளாய் கீழே இறைத்துக் கொண்டிருக்க அதற்குரியவர் கீழிருந்து பழத்தை தூக்கிப் போட்டவாறு அதை திரும்ப பெற போராடிக் கொண்டிருந்தார்..
அதை பார்த்து சிரித்தவாறே வெளியே வந்தவர்கள் வொண்டர்புல் ப்லேஸ் சஹி இந்த ட்ரிப்பை மறக்கவே முடியாது..
ம்ம் இதவிட நூறுமடங்கு அழகை நான் உனக்கு காட்டவா உனக்கு ரொம்ப பிடிச்ச இடமும்கூட..
இதவிட அழகாவா போலாம்டா எல்லாரும் வந்துரட்டும்..என்று முடிப்பதற்குள் அனைவரும் வந்துவிட அனைவருமாய் கிளம்பி மலையிலிருந்து இறங்கி ஒரு சிறு கோவில் அருகில் காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பிக்க நீரின் சத்தம் காதில் விழ..
ஹய் மறுபடியும் பால்ஸ்ஸா ஜாலி என ஷரவ் ஓட அங்கு அவள் கண்ட காட்சியில் மறுபடியும் அனைவரையும் நோக்கி ஓடிவந்தாள்..
அண்ணா சீக்கிரம் வாயேன் செமயா இருக்கு இதெல்லாம் நா எக்ஸ்பெக்ட்டே பண்ணல..
சூப்பராயிருக்குண்ணா..சிவா இது என்ன இடம் சிவா??
இந்த இடத்துக்கு பேர் தலையணை அக்சுவலா இது ஒரு ரிசர்வேயர் அதாவது நீர்தேக்கம் மாதிரி டேம்ல இருந்து வர்ற வாட்டரர சேவ் பண்றதுக்காக அமைக்கப்பட்து..
பாபநாசத்துக்கு வர்ற பாதி பேர் இந்த இடத்தை பாக்குறதுக்காகவே வருவாங்க..அவ்ளோ அழகாயிருக்கும்..
அனைவரும் உற்சாகமாய் ஆட்டம் போட நேரம் போவதே தெரியவில்லை..
கார்த்திக் சிறிது நேரத்தில் வெளியே வர கௌரி ஏற்கனவே அங்கு நின்று தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தாள்..
என்னடா அதுகுள்ள வந்துட்ட??
ஆமா அண்ணா நா இங்க தான இருக்கேன் நினைச்சா வரப் போறேன்..
ம்ம் அதுவும் கரெக்ட் தான் என்றவன் தயங்கியவாறே அவளிடம்.கௌரி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..
பட் இதப்பத்தி சஹானாக்கு எதுவும் தெரியய கூடாது வீட்டுக்கு போனப்பறமா டைம் பாத்து பேசுறேன் தப்பா எடுத்துகாதடா..
என்ன அண்ணா ஏன் இப்படிலா பேசுறீங்க எதுவாயிருந்தாலும் சொல்லுங்க என்றவளுக்குமே மனதில் சிறு தயக்கம் இருந்துதான் இருந்தது
சஹானா அக்காக்கு தெரிய கூடாத அளவு என்ன விஷயம் இருக்கப்போகுது சரி அவரே சொல்லட்டும்..
ஒருவழியாய் ஆசைதீர ஆட்டம்போட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்..
வீட்டிற்கு வந்தவுடன் இருந்த அலுப்பில் அவரவர் அறையில் சென்று நுழைந்து கொள்ள கார்த்திக் தனதறைக்கு வந்தான்..
காலை முதல் சஹானாவின் சந்தோஷமும் புத்துணார்வும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவளின் முன்ஜென்ம இறப்பின் காரணம் என்னவாய் இருக்கும் என்பதையே மனம் சுற்றி வந்தது..
சிந்தனைகளும் உடல் அசதியும் சேர்ந்து அவனை தூக்கத்திற்கு தள்ள தன்னையறியாமல் தூங்கியும் போனான்..
மீண்டும் கண்விழிக்கும் போது இரவு விளக்கு எரிய கண்ணை கசக்கியவாறு எழுந்தமர்ந்தான்..
அறை விளக்கை போட்டவாறு கையில் காபியோடு சஹானா உள்ளே நுழைந்தாள்..
எழுந்துட்டியா மாமா இரண்டு தடவை வந்தேன் பயங்கர அலுப்பு போல நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பாம விட்டுட்டேன்..இந்தா காபி எடுத்துக்கோ..
தேங்க்ஸ் சஹி..ம்ம் எப்போ தூங்கினேன்னு தெரில என்றவாறு அவன் காபியை குடித்து முடிக்க என் சஹி பேபி ரெண்டு தடவை அலைஞ்சு காபி கொண்டு வந்ததுக்கு கிப்ட் தராம அனுப்பினா நல்லாவா இருக்கும்என அவன் முடிப்பதற்குள் சஹானா ஓடிச் சென்று அறைவாசலில் நின்று கொண்டாள்..
நீ ஒண்ணும் தர வேணாம் ஒழுங்கு மரியாதையா கீழ வா எல்லாரும் உனக்காகதான் வெயிட்டிங்..என திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டாள்..
சற்று நேரத்தில் கார்த்திக்கும் ரெப்ரெஷ் ஆகி கீழே வரஅனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
வா அண்ணா எல்லாருமே ஒரு தூக்கம் தூங்கி எழுந்தாச்சு சோ எதாவது கேம் கண்டெக்ட் பண்ணலாம்நு இருக்கோம் வா வா உக்காரு என்றவாறு கையிலிருந்த பேப்பரை சிறு சிறு காகிதங்களாய் பிரித்து அதில் ஏதேதோ எழுதி சிறு டப்பாவில் போட்டு குலுக்கினான்..
அனைவரும் வட்டமாய் அமர்ந்திருக்க. முதலில் ஷரவந்தியிடம் நீட்ட அதை பிரித்தவளோ முடியவே முடியாது நா பண்ணமாட்டேன் என்று அடம்பிடிக்க ஷாரவன் என்னவென பார்க்க லவ் ப்ரபோஸ் பார் யுவர் வலன்டைன் என்றிருந்தது..
சிவாவோ மச்சான் நீ தெய்வம்டா என் கஷ்டம் உனக்கு புரிஞ்சுருக்கு டீச்சரம்மா ஐ அஅம் ரெடி..
எவ்வளவு கெஞ்சியும் யாரும் விடுவதாய் இல்லை என்பதை உணர்ந்து சில நொடிகளில் எழுந்து சிவா அருகில் சென்றவள்,
இந்த உலகத்துல என் குடும்பம் எனக்கு கொடுத்த பாசத்தையும் பாதுகாப்பையும் வெளி ஒரு ஆளா உங்ககிட்ட நா உணர்ந்தேன்..
ஒரு வேளை அதுக்கு பேர் காதல்னா லவ் யூ மேட்லி ப்ரம் மை பாட்டம் ஆப் தி ஹார்ட்..ஐ லவ் யூ என்று முடிக்க சிவா மெய்மறந்து போனான்..
மற்றவர்களின்ஆரவாரத்தில் சுயநினைவிற்கு வந்தவன் தன்னவளிடமிருந்து விழி அகற்றாமல் இருக்க ஷரவ் ஓடிச் சென்று தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள்..
அடுத்ததாய் கௌரியின் முறை சீட்டை பிரித்து பார்த்தவள் திருதிருவென முழிக்க ஷரவன் அதை கையீல் வாங்கிப் படித்தான்..
த டே வென் யூ சா யுவர் வலெண்டைன் பார் த பர்ஸ்ட் டைம்..என்றிருந்தது..
சிவா வழக்கம்போல் அவன் காதருகில் வந்து மச்சான் பின்ற போ இப்போதான் தெரியுது எதுக்கு இந்த கேம் சூஸ் பண்ணணு..
அய்யோ மாமா ஆரம்பிக்காதீங்க பாருங்க அவ என்னை கண்ணாலேயே எறிச்சுருவா போல நா எதார்த்தமா எழுதினேன் அது அவ கைக்கு போகும்நு எனக்கென்ன தெரியும் என்று வெளீயே கூறினாலும் மனதினுள் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருந்து கொண்டுதான் இருந்தது..
அவளோ நிதானமாய் ஏப்ரல் 6. என்றுகூற ஷரவன் ஒரு நொடி உறைந்துபோனான்..
என் லைவ் பார்ட்னர நா இன்னும் பாக்கல இப்போதைக்கு என் வலெண்டைன்னா என் அப்பா அம்மா தான்..
சோ அவங்கல நா பர்ஸ்ட் பாத்தது நா பிறந்த அன்னைக்கு அந்த டேட் தான் சொன்னேன் என்று முடித்த போதுதான் உயிர் வந்ததாய் தோன்றியது ஷரவனுக்கு..
மச்சான் தப்பிச்ச உனக்கு போட்டிக்கு ஆள்லா இல்ல..
சஹானா தனக்கான சீட்டை எடுத்து அதிலிருந்ததை படித்தாள்.. வலெண்டைனிற்கு பிடித்தமான ஏழு விஷயங்கள்..
இப்போது கார்த்திக்கிற்குமே சிறு ஆர்வம் வந்திருந்தது..
இத்தனை நாட்களில் எவ்வளவோ பேசியிருந்தாலும் தனக்கு இது பிடிக்கும் பிடிக்காது என இருவருமே வெளிப்படையாய் பேசிக் கொண்டதில்லை அதே நேரம் ஒவ்வொருவரின் செயல்களில் புரிந்து கொண்டது அதிகம் அதற்காக அவன் காத்திருக்க அவளோ சிறு யோசனைகூட இல்லாமல் கடகடவென கூறி முடித்துவிட்டாள்..
வெள்ளை ரோஜா
இளைராஜா மியூசிக்
மழை
குட்டி பேபிஸ்
அவனோட குடும்பம்
அவனோட ஜாப்
இதெல்லாத்துக்கும் மேல இப்போ அவனோட சஹி..
என்று கூறிமுடித்து கண்சிமிட்ட வழக்கம்போல் கார்த்திக் மனதை கொள்ளை கொண்டுவிட்டாள்..
உண்மைதான் அவள்கூறிய இந்த விஷயங்கள் தான் அவன் வாழ்க்கையை முழுமையாக்கும் விஷயங்கள்..
எத்தனை வித ரோஜா இருப்பினும் ஏனென்றே தெரியாமல் மனம் வெள்ளை ரோஜாவை தான் நாடும்..
ராஜாவின் இசையில் நனைவதென்பது அவனுக்கு பாற்கடலின் அமிர்தத்தை உண்ட உணர்வு போன்றது..
மழை கடவுளின் படைப்பில் அற்புதமானதாய் தோன்றும்..
குழந்தைகள் அவர்களின் வடிவில் கடவுளே இருப்பதாய் தோன்றும் அந்த சின்ன சின்ன கண்களும் பிஞ்சு விரல்களும் பார்க்க பார்க்க தெவிட்டாதது..
அவனின் குடும்பம் அது இல்லையென்றால் கார்த்திக் என்ற ஒருவனே இல்லை..வேலை அவனுக்கென ஒரு தனிமதீப்பை இந்த சமூகத்தில் அளித்தது..
சஹி மேற்கூரிய அனைத்து சந்தோஷத்தையும் ஒன்றாய் கட்டி ஓர் உருவில் கொடுக்க நினைத்த கடவுள் சஹியாய் அவனீடம் அனுப்பிவிட்டான்..
தன் நினைவுகளில் இருந்தவனை கலைத்தது ஷரவனின் குரல்..
அவனுக்கான சீட்டில் இருந்தது எ சாங் பார் யுவர் வலெண்டைன்..
வாவ் அண்ணா நீதான் சூப்பரா பாடுவியே பாடு நாங்களும் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு பாடு அண்ணா..
கார்த்திக் நீங்க பாடுவீங்களா என ஆச்சரிமாய் சிவா ஒருபுறம் முகம் முழுவதும் எதிர்பார்ப்போடு சஹானா எதிரே அமர்ந்திருக்க கண்களை மூடி குரலை சரி செய்து பாட ஆரம்பிக்க அப்படி ஒரு மௌனம் அங்கு..
“கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்”
முடித்து அவன் கண் திறந்த வேளையில் அனைவருமே அந்த குரலில் கரைந்திருக்க சஹானா கண்களில் நீர் கோர்க்க அங்கிருந்து எழுந்து தனதறைக்குச் சென்றுவிட்டாள்..
அவளைப் பின் தொடர்ந்தவன் உள்ளே ஜன்னலோரம் வெளியே வெறித்தவாறு நின்றிருந்தவளின் தோள்பற்ற சட்டென அவன்மீது சாய்ந்து கொண்டாள்..
ஏ சஹி என்னாச்சு ஏன் அழற அவ்ளோ கேவலமாவா பாடினேன்..?? என்றவனை ஒருமுறை பார்த்தவள் மார்பில் புதைந்து கண்ணீரையே பதிலளித்தாள்..
அவளை கட்டாயமாய் பிரித்து நிறுத்தி இப்போ நீ என்னனு சொல்ல போறியா இல்லையா..
என்னை நிஜமாவே உனக்கு இவ்ளோ பிடிக்குமா மாமா??
என்னடீ கேள்வி இது??
இல்ல மாமா நீ பாடும்போது எவ்ளோ பீல்லோட பாடின தெரியுமா அது எனக்காகநு நினைக்கும்போது அழுகை வந்துடுச்சு..
இதே லவ்வோட எப்பவும் இருப்பியா கார்த்திக்??
அட என் சஹி பேபி நா எப்பவுமே உன் மேல இதே லவ்வோடதான் இருப்பேன் ஏன் தேவையில்லாம யோசிக்குற??
இல்ல எனக்கு எதாவது ப்ரச்சனையிருந்தாலும் என்ன வெறுத்துறமாட்டல??
சஹி..
இல்ல மாமா இப்போலா எனக்கே ஏதோ டிப்ரண்ஸ் தெரியுது அப்பப்போ டயர்டா ஆய்டுறேன் ஏதேதோ பேசுறேன்னு தோணுது..
நேத்துகூட ஏன் அப்படி பிகேவ் பண்ணேண்ணு தெரில..
நீ பேசாம பேஷன்டிசைனிங்க்கு பதிலா டைரக்டிங்க்கு படிச்சுருக்கலாம்.அழகா யோசிக்குற..
நீ நார்மலாதான் இருக்க..நேத்து நீ அப்படி மயங்கினதுல இருந்து நா கொஞ்சம் பயந்துட்டேன் சஹிம்மா அதான் உன்னையே சுத்தி சுத்தி வரேன் ஓவர் பீல்லா பாடினதுக்கும் அதான் காரணமா இருக்கும் மத்தபடி ஒண்ணுமில்ல..
நீயா எதையாவது போட்டு குழப்பிக்காத என்ன புரியுதா??
ம்ம் என தலையாட்ட அவனும் அவளைப் போன்றே தலையாட்டிச் சிரித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
ஏன் சஹி எப்போயிருந்து உனக்கு இப்படிலா தோணுதுநு நியாபகம் இருக்கா??
ம்ம் சரியா தெரில ஆனா ஒரு கெஸ் இருக்கு..
நீ என்ன பாக்காம ஒரு மாசமா அவாய்ட் பண்ணிணல அந்த டைம்ல ரொம்ப ப்ரெஸ்ட்ரேட் ஆய்ருந்தேன் மாமா..எதுவுமே பிடிக்கல என்ன பண்றதுனே தெரில ..
அப்படி ஒரு நாள் ரொம்ப கடுப்பா வீட்ல இருந்தப்போ அப்பாஅம்மா எங்கேயோ வெளில போய்ருந்தாங்க வாசல்ல ஏதோ சத்தம் கேக்க போய் பாத்தா வயசான சாமியார் ஒருத்தர் இருந்தாரு..
என்ன பாத்தவுடனே ரொம்ப சந்தோஷமா சிரிச்சாரு..
தேவிகா நல்லாயிருக்கியா தாயீ???
ஐயா என் பேரு சஹானா..
பேர்ல என்னம்மா இருக்கு ரெண்டுமே அந்த மஹாலட்சுமியோட பேருதான்..
என் தாயீக்கு எதுக்கு மனகுழப்பம் எ ன்னைக்கு இருந்தாலும் கார்த்திகேயன் தான் உன் புருஷன்..
நீ சந்தோஷமா இரும்மா.. அந்த ஈசன் உன் மனசுக்கேத்த மாங்கல்யத்த கொடுப்பான்.. நா வரட்டுமா..
ஐயா எதாவது சாப்ட்டு போங்க..
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா உன்ன பாத்ததே போதும்னு சொல்லிட்டு போய்ட்டாரு மாமா..
உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவரு சொன்னது ஸ்ட்ராங்கா மைண்ட்ல பதிஞ்சுருச்சு அதுக்கப்பறம் அதபத்தியே மறந்துட்டேன்..
உன்கிட்ட சொல்லலனு தப்பா எடுத்துக்காத
ஹே சஹி நீ எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கியோனு தோணிச்சு அதான் கேட்டேன் மத்தபடி உன்கிட்ட எனக்கு எந்த டிவ்ரெண்ஸ்ஸும் தெரில..
சந்தோஷமா நம்ம கல்யாணத்தை நினைச்சு தூங்கு புரியுதா..
என அவளை சமாதானப்படுத்தி வெளியே வர கௌரி தன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்..
கௌரி ஒரு நிமிஷம் காலைல சொல்லிருந்தனே அதபத்தி கொஞ்சம் பேசலாமா??
சொல்லுங்கண்ணா ஏன் இவ்ளோ தயங்குறீங்க???
இல்லடா அது..சஹானாவபத்தி தான்..என ஆரம்பித்து மேலோட்டமாய் விஷயத்தை கூறிமுடித்தான்..
நீ சைக்காலஜி படிக்குறனு கேள்விப்பட்டேன் அதான் உன் மூலமா எதாவது ஹெல்ப் கிடைக்குமாநு கேக்கலாமேநு பாத்தேன்..
எனக்கு அவளோட பாஸ்ட் லைப்ப பத்தி தெரிஞ்சுகனும்..
அண்ணா இதெல்லாம் விளையாட்டு விஷயமில்ல டாக்டர பாக்கலாமே????
இல்லடா சஹானாக்கு தெரியாமதான் இத பண்ணணும் அவ எந்த அளவு ஜோவியலோ அதே அளவு சென்சிட்டிவ்..அதனாலதான் உன்கிட்ட கேக்குறேன்..
சில நிமிடம் யோசித்தவள் சரிண்ணா என் சீனியர் ஒருத்தங்க இருக்காங்க க்ளினிக்கல் சைக்காலஜி படிச்சு அல்மோஸ்ட் ப்ராக்டிஸ் முடிச்சு போஸ்டிங்க்கு வெயிட் பண்றாங்க..
அவங்களை வேணா கேட்டு பாக்கலாம் பட் கன்பார்ம்மா முடியும்நு சொல்ல முடியாது..
தேங்க் யூ சோ மச் டா நீ கேட்டுபாரு நா கூட பேசுறேன்..
சரி அண்ணா ஒரு நிமிஷம் என்றவள் மொபைலில் காயத்ரியை அழைத்தாள்..
விஷயத்தை கேட்டவளோ முதலில் மறுக்க விஷயத்தின் அவசரத்தை புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டாள்..
கார்த்திக்கும் அவளிடம் பேசியபின் அவளால் மறுக்க முடியவில்லை..மறுநாள் காலை வருவதாய் ஒத்துக் கொண்டாள்..
மற்றவர்களும் ஹாலிற்கு வந்திருக்க கார்த்திக் அனைவரிடமும் நாளை பற்றியே திட்டத்தை கூறினான்..
கண்டிப்பா எல்லாரும் இருக்கும்போது இது எவ்ளோ சக்சஸ் ஆகும்நு தெரில சோ சிவா நீங்க ஷரவ்வ கூட்டிட்டு வெளில போய்ட்டு வாங்க..
ஷரவன் நீ எதாவது ரீசன் சொல்லி ரூம்க்கு போய்டு சோ காயத்ரி வர்ற அப்போ நானும் கௌரியும்தான் இங்க இருப்போம்..
கௌரி நான் சொல்றபடி சஹானாட்ட பேச்சை ஆரம்பிடா அப்படி போனா மட்டும்தான் தானாவே சஹானாவ நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்..
எந்த விதத்தீலேயும் அவளுக்கு நா இதுல சம்மந்தபட்டுருக்கேன்னு தெரீயவே கூடாது ப்ளீஸ்..
கவலயே படாதீங்கண்ணா நான் பாத்துக்குறேன் தைரியமாயிருங்க என்றவாறு அனைவரும் படுக்கச் செல்ல கார்த்திக்கிற்கு ஏனோ தூக்கம் வர மறுத்தது..
அவளின் கடந்தகாலம் என்னென்ன அதிர்ச்சிகளை கொடுக்க காத்திருக்கிறதோ என்ற பயம் முழுவதுமாய் அவனை ஆக்கிரமித்திருந்தது..
அந்த விடியல் அனைவருக்குமே ஒருவித பயத்தை கொடுத்திருக்க சஹானா எழுந்ததிலிருந்து ஷரவந்தியை காணாமல் வெளியே வர அங்கு அம்சமாய் கிளம்பி நின்றவளை பார்த்ததும் விசிலடித்தவாறே அருகில் வந்தாள்..
என்ன நாத்தனாரே இவ்ளோ அழகா ரெடி ஆய்ட்டீங்க????என்ன மேட்டர்??
அண்ணி கிண்டல் பண்ணாதீங்க அவரோட வெளில போறேன்..
அடடா எங்க உங்க அவர காணும்???
ஏய் என்ன அங்க என் பொண்டாட்டிய ராகிங் பண்ணிட்டு இருக்க??
அதான மூக்கு வேர்த்துருமே உனக்கு.. இன்னைக்காவது ஷரவ்வ வெளில கூட்டிட்டு போகணும்னு தோணிச்சே உனக்கு..
ஹவ் அ நைஸ் டே பை..என துள்ளிச் சென்றவளை பார்க்க மனதை பிசைந்தது இருவருக்கும்..
எல்லாம் நல்லபடியா நடக்கனும் ஷரவ்..அதுக்காக தான சிவா கோவிலுக்கு போறோம் தைரியமா இருங்க என ஆறுதல் படுத்தினாள்..
சஹானாவும் கார்த்திக்கும் சாப்பிட அமர கௌரி பரிமாறினாள்..
ஷரவன் தலையில் கைவைத்தவாறு ஹாலில் அமர்ந்திருக்க கார்த்திக் அவனை அழைத்தான்..
இல்ல அண்ணா ஸ்டொமக் அப்செட் மாறி இருக்கு எனக்கு ஒண்ணும் வேண்டாம்..
மதியத்துக்கு மேல பசிச்சா சாப்ட்டுகிறேன்.. தேடுவீங்களேனு தான் வெயிட் பண்றேன்..
நா போய் படுத்துக்குறேன் என அவனும் உள்ளே செல்ல..
சஹானா கௌரியிடம்,நீயும் எங்களோடாயே சாப்டேன் கௌரி.. எப்படியும் தனியா தான சாப்டுவ..
இல்லக்கா என் ப்ரெண்ட் வரேன்னு சொல்லிருக்காங்க அவங்களோட சேர்ந்து சாப்ட்டுகிறேன் நீங்க சாப்டுங்க..
ஓ..சரி ஓ.கே என்று சாப்பிட்டு முடிக்க கார்த்திக் பேப்பர் படிப்பதாய் வந்து ஹாலில் அமர சஹானா சமையலைறைக்குச் சென்றாள்..
நேரம் ஆக ஆக கார்த்திக்கிற்கு உள்ளுர பயம் பரவிக் கொண்டேயிருந்தது..
தான் செய்வது சரியா தவறா என ஆயிரம் முறை யோசித்து விட்டிருந்தான்..
அதற்குள் வாசலில் அழைப்பு மணி அடிக்க கௌரி வந்து கதவை திறந்தாள்..
கௌரி கண்களால் அவளை அறிமுகப்படுத்த கார்த்திக் சிறு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டான்..
சஹானா வெளியே எட்டிப்பார்க்க கௌரி அவர்களுக்கான அறிமுக படலத்தை தொடங்கினாள்..
சஹானாக்கா இவங்க காயத்ரி என்னோட ப்ரெண்ட்..
ஹே ஹாய் காயத்ரி வாங்க வாங்க நீங்க தான் கௌரியோட க்ளோஸ் ப்ரெண்டா உங்களுக்காக சாப்டாம வெயிட் பண்ணிட்டு இருக்கா வாங்க பர்ஸ்ட் சாப்டலாம்..
அக்கா பரவால்ல நா பாத்துக்குறேன் நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க..-கௌரி..
அட அதென்ன பெரிய வேலையா வா கௌரி எப்படியும் வீட்ல யாரும் இல்ல எனக்கும் போர்தான் அடிக்குது அதுக்கு உங்களுக்கு கம்பனியாவது கூடுப்பேன்ல..
வா உக்காரு என்றவாறு பரிமாற தொடங்கினாள்..
ஆமா ப்ரெண்ட்ங்கிற அப்பறம் ஏன் வாங்க போங்கநு கூப்டுற???
இவங்க என் காலேஜ் சீனியர் சஹானாக்கா..
வாவ் சீனிர் ஜுனியர் ப்ரெண்ட்ஸ்ஸா இன்ட்ரெஸ்ட்டிங்.. எப்படி??
ஒரு நாள் காலேஜ்ல ஒரு நோட்ஸ் விஷயமா என்கிட்ட ஏதோ கேக்க வந்தா கௌரி அப்போ சும்மா பேச ஆரம்பிச்சோம் அது எங்கெங்கேயோ போய் எங்க ஸ்டடீஸ்ல உள்ள ஹிப்னோதெரபில போய் லேண்ட் ஆய்டுச்சு..
இவளுக்கும் என்னமாறியே அதுல இன்ட்ரெஸ்ட்னு தெரிஞ்சுது அப்போயிருந்தே டைம் கிடைக்குறப்போலா அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்..
அது அப்படியே ப்ரெண்ட்ஷிப் ஆய்டுச்சு இப்போகூட அது சம்மந்தமா ஒரு ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் கேட்டுதான் வந்துருக்கேன்..
வாவ் அப்போ நீங்க நம்ம சூர்யா சார் படத்துல வர்ற மாறி எல்லாரையும் வசியம் பண்ணிடுவீங்களா??
ஹே அப்படிலா இல்ல அது ஹிப்னாட்டிஸம் இது ஹிப்னோதெரபி முன்ஜென்மத்தை பத்தி தெரிஞ்சுக்குறதுக்கான தெரபி..
இதவச்சு பாஸ்ட் லைப்ல நாம என்னவா இருந்தோம் எப்படியிருந்தோம்நு தெரிஞ்சுக்கலாம்..
பார் எக்ஸாம்பில் சிலருக்கு எதுமேலேயாவது தேவையில்லாத பயமோ வெறுப்போ இருக்கலாம்..
அதனால அவங்களோட இயல்பு வாழ்க்கைல பாதீப்பு வரலாம் அப்படியிருக்கும் போது சைக்காட்ரிஸ்ட் கிட்ட போனா அவங்க கவுண்சிலிங் மூலமா அத குணப்படுத்த பாப்பாங்க ஒரு வேளை அது சரி வரலனா அடுத்ததா அவங்கள ஹிப்னோதெரபி குடுத்து சரி பண்ணுவாங்க..
ஹய்யோ என்னென்னவோ சொல்றீங்க கேக்கவே இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு..
ம்ம் ஆமா சஹானா இப்போ கூட என் தீசிஸ்க்காக இங்க பக்கத்துல இவளோட ப்ரெண்ட் ராதிகா இருக்கா அவளுக்கு ஹிப்னோதெரபி குடுத்து நோட்ஸ் எடுத்துக்கலாம்நு தான் வந்தேன்..
அய்யோ அக்கா அவதான் ஊர்ல இல்லையே நேத்துதான் அவங்க சொந்தகாரங்க யாரையோ பாக்கனும்னு ஊருக்கு போனா..
என்னகௌரி சொல்ற போச்சு நாளைக்கு நா தீசிஸ் சம்மிட் பண்ணலனா அவ்ளோதான்..
இப்போ என்ன பண்றது உன்கிட்ட ஏற்கனவே ஸ்டடீஸ் பண்ணிட்டேன் இல்லனா உன்னையாவது டெஸ்ட் பண்ணலாலம் ஹய்யோ நா வந்ததே வேஸ்ட்..
ஹலோ ஹலோ கூல் எதுக்கு இவ்ளோ டென்ஷன் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா நா வேணா ஹெல்ப் பண்றேன்..-சஹானா
அச்சச்சோ நீங்க எப்படி உங்க வீட்ல எதாவது சொல்ல போறாங்க என்றவாறு ஹாலில் இருந்த கார்த்திக்கை பார்க்க..
அட கார்த்திக்க சொல்றீங்களா அவரு ஒண்ணும் சொல்லமாட்டாரு.. இருங்க நா சொல்லிட்டு வந்துறேன்..
மாமா ஹிப்னோதெரபில அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன் உனக்கு ஓ.கே தான???
ஏய் பெர்மிஷன் கேக்குறியா இல்ல இன்பர்மேஷன் குடுக்குறியா???
எதுக்கு சஹி உனக்கு இந்த தேவையில்லாத வேலை..
மாமா ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்ச நேரம்தான் நா முடிச்சுட்டு வந்து லாஸ்ட் பெர்த்ல நா என்னவாயிருந்தேன்னு உனக்கு சொல்றேன்..
அதுவரை இந்த பேப்பரை கெட்டியா பிடிச்சு உக்காரு.. தேங்க் யூ சோ மச் மாமா..பை..
கார்த்திக்கிற்கு பயத்தையும் மீறி சஹியை பற்றி அவன் தெரிந்து வைத்திருப்பது சரியே என்ற எண்ணம் நிறைவாய் இருந்தது..
இந்த சூழ்நிலையில் மட்டுமே அவளை இற்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியும் என்று தீர்மானமாய் நம்பினான்..
காயத்ரியின் குரலில் நினைவு பெற்றவன்.ரொம்ப தேங்க்ஸ் காயத்ரி எனக்காக இந்த ஹெல்ப் பண்ண ஒத்துகிட்டதுக்கு..
பரவால்லண்ணா..கல்யாணமே ஆகல அதுகுள்ள நீங்க அவங்க பிரைச்சனைய உங்க ப்ரச்சனையா நினைச்சு யோசிக்குறீங்களே அந்த ஒரு காரணத்துக்காக தான் நா இதுக்கு சம்மதிச்சேன்..
கவலபடாதீங்க நல்ல முடிவு கிடைக்கும்.. கரெக்ட்டா 20 நிமிஷம் கழிச்சு நீங்க உள்ள வாங்க அண்ட் முக்கியமான விஷயம் ட்ரீட்மெண்ட் நடுல அவங்க என்ன ரியாக்ஷன் குடுத்தாலும் பார் எக்சாப்பிள் அழுகை கோபம் ஆத்திரம்னு எதுவா வேணாயிருக்கலாம் பட் நீங்க எந்த காரணத்தை கொண்டும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிட கூடாது..
நீங்க தான் பாத்து நடந்துக்கனும்..
ஷீவர் மா நா பாத்துக்குறேன்..என்றவனுக்கு சிறு புன்னகையை பதிலளித்தவள் அறைக்குள் நுழைய அவள் கூறீய இருபதாவது நிமிடம் உள்ளே நுழைந்தவனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை..
சிறிய இரவு விளக்கு, மென்மையான. வாசனை காதுக்கு இனிமையாய் மெல்லிய இசை ககட்டிலின் அருகே சாய்வு நாற்காலியில் சஹானா கண்மூடி அமர்ந்தீருக்க கட்டிலில் அவளது வலப்பக்கமாய் காயத்ரி அமர்ந்திருந்தாள்..
அவர்களுக்கு எதிரே கையில் மொபைலோடு நடப்பதை பதிவு செய்வதற்காக அமர்ந்திருந்தாள் கௌரி..
கௌரி தன் அருகில் இருந்த சேரில் அமருமாறு கார்த்திக்கிற்கு செய்கை காட்ட அமைதியாய் அமர்ந்தான்..
ஓ.கே சஹானா டேக் அ டீப் ப்ரெத்..ரிலாக்ஸ் குட்..சோ நாம இப்போ கொஞ்ச கொஞ்சமா உங்க சின்ன வயசுக்கு போகப் போறோம்..
இப்போ உங்க வயது 15 நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க..
நா..நா பெங்களூர்ல இருக்கேன்..என் சித்தி வீட்ல..
ஓ..இப்போ நீங்க என்ன பாக்குறீங்க என்ன நியாபகம் இருக்கு உங்களுக்கு??
இன்னைக்கு தீபாவளி நா என் தம்பி தங்கையோட பட்டாசு வெடிக்குறேன்.. என் அப்பா அம்மாவும் வந்துருக்காங்க..
நைஸ் இப்போ நாம இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் அம்மாவோட வயித்துக்குள்ள இருக்குற சஹானாவா பாக்க போறோம் அங்க நீங்க எப்படியிருக்கீங்க அதாவது அம்மா ஹேப்பியா இருக்காங்களா??
உங்களுக்கு உள்ளே எப்படியிருக்கு பயமாயிருக்கா???
இருட்டாயிருக்கு ஆனா ஆனா எனக்கு பயமில்ல அம்மா எனக்கு நிறைய சிவன் பாட்டு கதையெல்லாம் சொல்றாங்க அதனால நா சந்தோஷமா தான் இருக்கேன்..
வெரிகுட் சோ இப்போ நாம உங்களோட முன்ஜென்மத்துக்கு போக போறோம்..
அம்மாவோட வயித்துக்குள்ள வர்றதுக்கு முன்னாடி சஹானா எங்கயிருக்கீங்க.. உங்களுக்கு என்ன தெரியுது???
கோவில் சிவன்..நா நா கோவில்ல இருக்கேன்..
ஓ அப்படியா சரி உங்களுக்கு எத்தனை வயசு உங்க பேர் என்ன எதாவது தெரியுதா அங்க எல்லாரும் உங்கள எப்படி கூப்டுறாங்க சொல்ல முடியுமா???
என் என் பேரு..தேவிகா..ஒரு 21-22 வயசு இருக்கும்..
வெரி குட்..அது எந்த இடம்னு தெரியுதானு பாருங்க அந்த இடத்துக்கு ஒரு பேர் இருக்கனுமே???
அப்பா அம்மா யாரு என்ன பண்றாங்க சொல்ல முடியுமா???
இது ப்ரம்மதேசம்.. அங்கதான் நாயிருக்கேன்.. அம்மா அப்பா இறந்துட்டாங்க.. நா என் சாமிகூட இருக்கேன்..
ஓ சாமியா அவரு யாரு???
அவர அங்க எல்லாரும் அப்படிதான் கூப்டுவாங்க.. என்னை அவருதான் வளர்த்தாரு..
வேற என்னலா நியாபகத்துக்கு வருது உங்களுக்கு எங்ககிட்ட சொல்றீங்களா??
ம்ம் என்றவாறு மெல்லிய குறுநகை இதழோரம் இழையோட சஹானா தேவிகாவாய் மனதளவில் வாழ தயாராகிக் கொண்டிருந்தாள்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
💞💞💞💞💞💞
தேவிகாவின் காதலை பற்றி நாளைக்கு தெரியும்.. கார்த்திக் போன ஜென்மத்துல எப்படி வேறு பொண்ணை கல்யாணம் பண்ணாரோ ? 🤔🤔🤔
Very nice
Nice👍