230
ப்ரம்மதேசம்–பெயரிலேயே கம்பீரத்தோடு விளங்கும் இந்த கோயில் 500-1000 வருடங்கள் பழமையானது..இங்கு மூலவர் கைலாசநாதர் ஆகிய சிவன்..
இது ப்ரம்மனின் பேரனாகிய ரோமாச மகரிஷியால் வழிபடபட்டதால் ப்ரம்மதேசம் என்று பெயர் பெற்றது..
இங்கு மொத்தமாய் ஐந்து சிவ அவதாரங்கள் கைலாசநாதர்,பத்ரி வானேஸ்வரர்,விஷ்வநாதர் விசாலாட்சி தாயார்,அருணாச்சலேஸ்வர் உண்ணாமலை தாயார்,சுந்தரேஸ்வரர் மீனாட்சி தாயார் ஆகிய உருவில் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்..
இது முதன்முதலாய் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் அதன் பின்பு பாண்டியர்கள் காலத்தில் மேம்படுத்தப் பட்டதாகவும் வரலாறு..
தாமிரபரணியும் கடனாநதீயும் இணைவது இந்த இடத்தின் தனிச்சிறப்பு..
அதுமட்டுமல்லாமல் நவகைலாயங்களில் முதல் கோவிலாய் இது இடம்பெற்றுள்ளது..
அந்த ஊரில் இத்தனை பெரிய கோவிலை நிச்சயமாய் கார்த்திக் எதிர்பார்த்திருக்கவில்லை..
சஹானாவின் கைகோர்த்து உள்ளே நுழைந்தவன் கோவிலை சுற்றிப்பார்க்க அவளோ வேறு சிந்தனையின்றி நேரே கற்பகிரகத்தின் முன் சென்று கைகூப்பி தன்னை அந்த சிவனின் பாதங்களில் தொலைத்தாள்..
என் சிவன் எப்பவுமே அழகு இல்ல மாமா..என்றவாறு பிரகாரத்தைச் சுற்றி வர கார்த்திக் தங்கள் திட்டப்படி மணிக்கு கண்ஜாடை காட்ட அவர் வேலையை முடிக்கச் சென்றார்..
சற்று தூரம் சென்றவள் மாமா இங்க வா என அவன் கைப்பிடித்து ஓரிடத்தில் அமர்த்த நாம இப்படி சந்தோஷமா இருந்து எத்தனை வருஷமாச்சு மாமா என்று எங்கோ பார்த்து கூற அவள் பார்த்த இடத்தை பார்த்தவனின் கண்கள் விரிந்தன..
கோவிலின் ஏழு கோபுரங்களூம் அங்கிருந்து தெளிவாய் தெரிந்தது..
அந்த கட்டிட கலையும் மண்டப அமைப்புகளும் அவனுக்கு மேலும் மேலும் ஆச்சரியத்தை அளித்தது..
கோவிலிலிருந்து வெளியே வரவும் சற்று தொலைவிலிருந்து மணி அவர்களை அழைக்க,கார்த்திக்,ஷரவன் நீ ஷரவ்வையும் சஹானாவையும் கௌரியும் கூட்டிட்டு கிளம்பு நாங்க ஒரு அரைமணி நேரத்துல வந்துரோம்..
மாமா நாங்க வீட்டுக்கு போய் என்ன பண்ணபோறோம் நாங்களும் வரோமே ப்ளீஸ் ப்ளீஸ்..
சஹி என அவன் பேச ஆரம்பித்த நேரம் சிவா யாரையோ பார்த்து கை காட்டவும் சஹானாவை தாண்டி கார்த்திக் பார்க்க பின் திரும்பிய சஹானாவோ முகம் சிவக்க நாங்க கிளம்புறோம் மாமா சீக்கிரம் வந்துரு என்று கூறிவிட்டு விறுவிறுவென காரில் சென்று அமர்ந்துவிட்டாள்.
கார்த்திக்கோ சிந்தனையில் ஆழ்ந்தான்.. .வந்தவன் அன்று ஹோட்டலில் இடித்தவன்..
இவன் இங்க என்ன பண்றான் ஒரு வேளை சஹிய ஃபாலோ பண்றானா இல்லேயே பாத்தா பெரிய மனுஷன் மாதிரி இருக்கானே என்று பலவாறு சிந்திக்க அதற்குள் சிவா கார்த்திக்கிடம் அவனை அறிமுகப்படுத்தினான்..
கார்த்திக் திஸ் ஸ் மிஸ்டர் அருண் என் ப்ரெண்ட்டோட க்ளைண்ட்.. அருண் இது கார்த்திக் எங்க வீட்டு மாப்பிள்ளை..
இருவரும் சிநேகமாய் கைக்குலுக்கிக் கொள்ள சில நிமிட உரையாடலுக்குப் பின் அவன் கிளம்ப,யாரு சிவா இது???
பெரிய ப்ஸினஸ் மேன் கார்த்திக் ஆனா நிறைய இல்லீகல் இன்கம்..
ப்ளாக் மணி லேண்ட் ராபரிநு அத்தனை கேஸ் இருக்கு..
சொந்த ஊர் இதுதான் ஆனா மாசத்துல பாதி நாள் சென்னைல தான் இருப்பான்..
என் ப்ரெண்ட் இவன் கேஸ் வந்தாலே பொலம்புவாரு.. தெரியாம ஒத்துகிட்டு இவனுக்குலா வாதாட வேண்டியிருக்குதேநுவாரு..
சரி வாங்க நாம வேலையை கவனிப்போம் என்றவாறு மணியை நோக்கிச் செல்ல கார்த்திக்கும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டு சென்றான்..
இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி சிறு வீட்டின் முன் சென்று மணி ராணி என்றழைக்க,பின் முப்பதுகளில் ஒரு பெண்மணி வெளியே வந்தார்..
வா மணி அண்ணே இவக தான் நீ சொன்னவுகளா வாங்க உள்ளே வாங்க..
அங்கு எண்பது எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருக்க ராணி அவரிடம் தாத்தா இவுக உங்ககிட்ட ஏதோ விவரம் கேக்கணுமாம்..
ஏன்பா சிங்ககுட்டிமாறி இருக்குற உங்களுக்கு இந்த கிழவன் என்ன பண்ணணும்???
தாத்தா இந்த ஊர்ல நெத்தில திருநாமமும் கழுத்துல ருத்ராட்சமும் போட்டு சாமியார் யாராவது இருக்காங்களா???
அப்படி யாரும் இல்லயே தம்பி இத கேக்கவா இம்பூட்டு தூரம் வந்தீக இத இந்த ஊர்ல யாரு கேட்டாலும் சொல்லிருப்பாகளே.
ஏதோ கூற வாயெடுத்த சிவாவை கைப்பிடித்து அமர்த்தியவன்..
ஐயா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இங்க தேவிகாநு யாரும் இருந்தாங்களா தயவுசெஞ்சு கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்..
சில நொடிகள் யோசித்தவர் இல்லையே தம்பி சட்டுநு பிடிபடல வயசாகுதுல..
என்று கூறும்போதே உள்ளிருந்து அவர்களுக்கு மோர் எடுத்து வந்த அந்த பெண்மணி அவரிடம் தாத்தா ஒருவேளை இவுக அந்த சாமிகொண்டாடி சித்தரப்பத்தி கேக்காகளோ???
என் று வினவ மறுபடியும் யோசனையில் மூழ்கியவர் ஏலே தம்பிகளா ஒருவேள நீங்க அந்த தேவி பொண்ணப்பத்தி தான் கேக்குறீகளோ???
தாத்தா..என அப்பட்ட அதிர்ச்சியோடு கார்த்திக் அவர் கைப்பற்ற நீங்க சொல்ற சாமியார் பேரு சாமி..
இந்த ஊர்லதான் இருந்தாராம்..நம்ம கோவில் தீருவிழா வந்தா அவருமேல தான் சாமி இறங்குமாம் அப்படி அவரு சாமியாடி சொல்ற வாக்கு அப்படியே பலிக்குமாம்..
இங்க மட்டுமில்லாம பக்கத்து கிராமங்கள்லையும் அவரதான் முதல்மரியாத பண்ணி கூப்பிடுவாகளாம்..
அவரு தேவினு ஒரு பொண்ணை தத்தெடுத்து வளத்ததாகவும் அந்த பொண்ணும் இந்த கோவிலே கதிநு கிடந்ததாகவும் சொல்லுவாக அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாக போற நேரத்துல இறந்து போச்சாம்..
அதுக்கப்பறம் அந்த சாமி கொஞ்சநாள் இந்த கோவில்லயே இருந்ததாகவும் அதுக்கப்பறம் அவரு என்ன ஆனாருனே தெரிலனும் சொல்லுவாங்க.
சிலர் அவர் சித்தரா மாறிட்டதா சொல்லுவாங்க..இந்த ஊருக்கோ இந்த கோவிலுக்கோ யார் மூலமாவது எதாவது செய்யனும்னா அவங்ககிட்ட சொல்லுவாராம் அப்படி அவர பாத்தவங்களுக்கே அவரு சித்தர்நு இங்க வந்தப்பறம்தான் தெரிய வந்துருக்கு..
இதெல்லாம் எனக்கு என் அம்மை அப்பன் சொன்னது நா அப்போ சின்னபையன் அதுனால அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரில கண்ணு..
கேட்டிருந்தவனின் கண்கள் கலங்கியிருக்க ஐயா அப்படி அவர நேர்ல பாத்தவங்க யாரையாவது உங்களுக்குத் தெரியுமா???
இல்ல தம்பி அதெல்லாம் தெரில..
ரொம்ப நன்றி தாத்தாஎன்றவாறு கிளம்பியவர்கள் கோவில் குளத்தின் அருகில் நின்றனர்..
கார்த்திக் யாரு தேவிகா என்னனு எனக்கு ஒண்ணும் புரீல என்னென்னவோ கேக்குறீங்க என்னாச்சு சொல்லுங்க..
முந்தைய நாளின் அவனது கனவு கோவிலில் சஹானா நடந்து கொண்டதென அவன் அனைத்தையும் கூற நேத்து அந்த கோவில்ல வச்சு ஒரு கதை சொன்னீங்களே அதுக்கப்பறம்தான் இது தோணிச்சு இங்கேயே இருந்தவங்கள விசாரிச்சா தெரிய வருமாநு ட்ரை பண்ணலாமாநு பாத்தேன்…
சிவா அவன் தோளை அழுந்தப்பற்றினான் கார்த்திக் அப்போ தேவிகா..
ஆமா சிவா என் சஹிதான்..அவளோட முன்ஜென்மத்துல தேவிகாவா பிறந்து என்னை கல்யாணம் பண்ண முடியாம இறந்து போய்ருக்கா..
அதனால சஹானாவ மறுபிறவி எடுத்துருக்கா என்றுகூறி முடிக்கும்போது குரல் கம்மிவிட்டது..
கார்த்திக் கம்டவுண் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது இப்படியெல்லாம்கூட நடக்குமா..
கதைகள்ல மட்டுமே நடக்குற ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி..
உங்களோட காதல் எந்த அளவு உயர்ந்ததா இருந்திருந்தா இது சாத்தியமாயிருக்கும்..
ஆமா தம்பி நா கூட உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது சஹானாம்மா உங்களுக்காகவே பொருந்தமாறி ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கேநு நினைச்சேன் ஆனா உண்மையாவே இது ஜென்ம பந்தம்நு நினைக்கும் போது பேச வார்த்தையே வரல தம்பி..
உங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்நு நடத்துவோம் தம்பி..என கண்கலங்கினார்..
ஒருவாறாய் கார்த்திக்கை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஹாலில் ஷரவனும் ஷரவந்தியும் அமர்ந்திருந்தனர்..
இவர்களை கண்டதும் ஷரவந்தி ஓடிவந்து கார்த்திக்கிடம் அண்ணா வந்தவுடனே அண்ணி ரூம்குள்ள போய் கதவ பூட்டிக்கிட்டாங்க கூப்டாலும் திறக்க மாட்றாங்க என்ன பண்றதுனே தெரில..
நா பாக்குறேன் ஷரவ் நீ பயப்படாத என்றவன் சஹானா அறைவாசலில் சென்று கதவை தட்டி சஹி கதவத் தொற..
என்ற அடுத்த நொடி கதவு திறந்தது.. அவன் உள்ளே செல்ல அவனுக்கு முதுகுகாட்டி கட்டிலில் அமர்ந்திருந்தாள்..
அவளருகில் சென்று உரசியபடி அமர்ந்தவன்..
சஹி பேபிக்கு என்ன கோபம்..??
போ மாமா என்ன விட்டுட்டு எங்க போன??
ஹே சிவாவோட வேலை விஷயமா ஒருத்தர பாக்க போனோம் அங்க போய் உன்ன எப்படி கூட்டிட்டு போறது புரிஞ்சுக்கோடீ..
ம்ம் வர வர நீ ஒரு பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்டா மாறிட்டு வர எனக்கு எப்படி ஐஸ் வைக்கனும்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க என்றாள் உதடு சுழித்து..
இன்னுமாய் அவளை நெருங்கி அமர்ந்தவன் ம்ம் நீ இப்படிலா ரியாக்ஷன் குடுத்தா புல் சரண்டர் ஆக வேண்டியதுதான் வேற என்ன சஹி பண்றது??
ம்ம் அதுசரி மாமா நீ சரியேயில்ல நீ மொதல்ல கிளம்பு..
அதெல்லாம் கிளம்ப முடியாது என்ன பண்ணுவ..ம்ம் அப்போ நா போறேன் என எழுந்தவளை தன்புறம் இழுத்து முகத்தை கையில் ஏந்தியவன் முத்த மழையால் நனைத்தான்..
ஜென்ம ஜென்மமாய் தன்னை பிரிந்து தவித்தவளுக்கு அவனின் இதழ் முத்தத்தில் விமோஷனம் அளித்திட நினைத்தான்..
நிமிடங்கள் கரைய சுயநினைவு பெற்றவள் சட்டென அவனை நகர்த்தி விலக கார்த்திக்கிற்கே நடந்தை ஏற்க நேரமாயிற்று..
மாமா எனக்கு எதாவது ப்ராப்ளம் இருக்குநு நினைக்குறியா??
நேத்து நா அப்படி நடந்துகிட்டதுக்காக டாக்டர் யாரையாவது பாத்துட்டு வரீயா?? எதுவியிருந்தாலும் சொல்லு மாமா..
ஏ லூசு ஏன் என்னென்னவோ பேசுற சத்தியமா நா சிவா க்ளைண்ட்ட பாக்க தான் போனேன் ஏன் இப்படிலா யோசிக்குற??
இல்ல நீ இப்படிலா என்கிட்ட நடந்துக்க மாட்டியே அதான் என்றாள் எங்கோ பார்த்தவாறு..
அடிப்பாவி எதாவது பண்ணாதான் தப்புநு பாத்தா ஒண்ணுமே பண்ணாம இருக்குறதும் தப்பா இத நீ முன்னாடியே க்ளியரா சொல்லிருக்கனும் செல்லம் என அவள் கைப்பற்றி அருகில் வர ஷரவ் சரியாய் உள்ளே நுழைந்தாள்..
ஸாரி அண்ணி நா அப்பறமா வரேன்..என வந்தவள் தலைகுனிந்தவாறே திரும்ப
ஹே ஷரவ் நீ வா நானே வெளியே தான் கிளம்பிட்டு இருந்தேன்..
என்றவன் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்..
தனதறைக்கு வந்து அமர்ந்தவனுக்கு மனம் மொத்தமும் அவனின் சஹானா தேவிகாவாய் நிறைந்திருந்தாள்..
என்ன மாதிரியான காதல் இது ஒரு பெண்ணால் இந்தளவு பைத்தியமாய் காதலிக்க முடியுமா??
இதற்கெல்லாம் என்னால் என்ன திருப்பித் தர முடியும்.. இது அனைத்தையும் தாண்டி அவள் எப்படி இறந்துபோனாள்..
அவளை காப்பாற்றாமல் இவன் எங்கு சென்றிருப்பான்..
தன்னை காப்பாற்றாதவனுக்காக ஜென்மமாய் காத்திருந்தாளா??
இந்த கேள்விகள் தான் அவனுள் உலன்று கொண்டேயிருந்தன அந்த ஆற்றாமையை தான் தன்னவளின்மேல் முத்தங்களாய் இறக்கினான்..
ஏதேதோ எண்ணியவனுக்கு கண்கள் குளமாக அதை துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..
எவ்வளாவு நேரம் சென்றதோ தெரியாது சஹானா அழைக்கும் ஓசையில் நினைவிற்கு வந்தவன் கண்ணைத் துடைத்தவாறு எழுந்து வாசல் நோக்கி வர வேகமாய் வந்தவள் மாமா எனக்கு ஒண்ணு வேணும்..
மறுபடியுமா குடுத்துட்டா போச்சு என அருகில் செல்ல..அய்யே அதில்ல கீழே போ நா வரேன் எல்லாரும் மொட்ட மாடில இருக்காங்கநு நினைக்குறேன்..
என்றவாறு அவள் செல்ல கார்த்திக் கீழே வந்து பார்த்தால் கையில் பெரிய கம்போடு அதன் நுனியில் கலர்கலராய் ஏதோ சுற்றியிருக்க அதை தாங்கியவாறு வயதானவர் ஒருவர் நின்றார்..
சொல்லுங்க யார் வேணும் உங்களுக்கு??
இப்போ போனாங்களே அந்த பொண்ணுதான்ப்பா கூப்டுது??
சஹானா யாரு இவரரு??
வரேன் வரேன் கார்த்திக் என குரல் மட்டும் வந்ததே தவிர அவளை காணவில்லை..
சஹி என்ன பண்ற வா சீக்கிரம் யாரு இவரூ??
ஆஆ வரேன் மாமா ஏன் காத்துற யாரு யாருனா இவரு என்ன என் சொந்தகாரரா??கையில மிட்டாய் வச்சுருக்காரே பாக்கல??
என்னது மிட்டாயா??என கார்த்திக் குழம்ப அவள்பின் வந்த ஷரவன் ஷரவந்தியும் அதே முகபாவத்தோடு எட்டிப்பார்க்க அந்த கம்பின் மேல் இருந்தது மிட்டாய் என அப்போதுதான் புரிந்தது..
அண்ணா எனக்கு இரண்டு கைலயும் வாட்ச் கட்டி விடுங்க ப்ளீஸ்..
என கையை நீட்ட அவர் அந்த சவ்வுமிட்டாயை அழகான வாட்ச் போன்ற அமைப்பில் அவள் கைகளில் கட்டிவிட்டார்.
அனைவருக்கும் வேண்டியைதை வாங்கி கொடுத்து அவரை அனுப்பி விட்டு திரும்பியவள் கார்த்திக்கிடம் வந்து தன் இரு கைகளையும் நீட்டியவாறு எப்படி என கண்ணால் கேட்க,ஒரு நொடி மௌனத்திற்குப்பின் அவனோ,
ஐய்யய்யே சிவா கடைசில எல்லாருமா சேந்து குச்சி மிட்டாய் குருவி ரொட்டிட்ட மாட்டி விட்டீங்களே நியாயமா என முடித்ததுதான் தாமதம் என்ன மாமா சொன்ன என சஹானா அவனை துரத்த மாடியை நோக்கி ஓடினான்..
அவர்களையே சிவா பார்த்திருக்க,என்ன சிவா அப்படி பாக்குறீங்க??-ஷரவ்..
இல்ல ஷரவ் உங்க அண்ணண பாத்தா ஆச்சரியமா இருக்கு இவ்ளோ பெரிய விஷயத்தை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்றாரு..
நம்ம விஷயத்தையே எடுத்துக்கோயேன்.. கார்த்திக்கிட்ட இதபத்தி பேச ரொம்ப தயங்கினேன்..
இதனால எங்க ப்ரெண்ட்ஷிப் பாதிச்சுருமோநு கவலப்பட்டேன்..
ஆனா அவருக்கு ஏற்கனவே ஒரு கெஸ் இருந்திருக்கு இருந்தாலும் அவரா என்கிட்ட எதையுமே கேக்கல நானா சொன்னப்பவும் இதுல ஷரவ் தான் முடிவு பண்ணணும் அவளுக்கு விருப்பம்னா எனக்கு சந்தோஷம்தான்னு கூல்லா சொல்லிட்டாரு..
எந்த அண்ணண்தான் இப்படி சொல்ற ஒருத்தன சும்மா விடுவான்..
ஏன் நானே சஹானாக்காக யாராவது என்கிட்ட பேசியிருந்தா சும்மா இருந்திருப்பேனானு தெரில..ஹி இஸ் ரியலி க்ரேட்..
உண்மைதான் மாமா..அண்ணா எப்பவுமே டென்ஷன் ஆகி நாங்க பாத்ததுஇல்ல..
ரொம்ப பொறுமையா அதே நேரம் ரொம்ப பொறுப்பா இருப்பாரு..இப்போ நா எனக்கு பிடிச்ச வேலையை செய்றேன்னா அது அண்ணாவால மட்டும்தான்..
உண்மையிலேயே நாங்க ரொம்ப லக்கி என ஷரவன் கூற ஷரவந்தியும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்..
அங்கு சஹானாவோ ஹாலைச் சுற்றி கார்த்திக்கை துரத்த கார்த்திக் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்..
மாமா ஒழுங்கா வந்துரு நீ கிண்டல் பண்ணதுக்கு பணிஷ்மெண்ட் கிடைச்சே ஆகனும்..
என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜன்னலோரமாய் இரூந்த அதை கையில் எடுத்துக் கொண்டு ஓ.கே சஹிகுட்டி கூப்ட்டு வராம இருப்பேனா ஆனா என் கெஸ்ட்டும் உன்ன பாக்க வரேன்னு சொல்றாங்க என தன் கையிலிருந்த கரப்பான் பூச்சியை அவள்முன் நீட்ட அலறி அடித்து ஓடியவள் சேரின்மேல் ஏறிக் கொண்டாள்..
மாமா ப்ளீஸ் ப்ளீஸ் அத கீழ விட்டுரு நா ஒண்ணும் பண்ணமாட்டேன் எனக்கு கரப்பான்பூச்சினாலே பிடிக்காது ப்ளீஸ்..
ம்ம் அந்தபயம் இருக்கனும் என்றவாறு அதை தூக்கிப் போட்டுவிட்டு அவளருகில் வந்தவன் இடையோடு பற்றி அவளை கீழேயிறக்க குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தாள்..
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் ஐயோ விடு மாமா கீழே எல்லாரும் என்ன நினைப்பாங்க என சிணுங்க..
ம்ம் நீதான என்ன துரத்திட்டு வந்த சோ என்ன யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க..
ம்ம் நீ ரொம்ப பேட் பாய் கார்த்திக் விடு நா கீழே போறேன் இல்ல ஷரவ் என்ன ஒரு வழி பண்ணிடுவா என்றவள் சிட்டாய் பறந்துவிட சிறுநகையோடு அவளை பின் தொடர்ந்தான் கார்த்திக்..
அவர்களை கண்ட சிவா தொண்டையை செருமியவாறு ம்ம் வர வர இந்த காதல் புறாக்கள் தொல்லை தாங்கமுடில..
டேய் சிவா வேணாம் அப்பறம் ஷரவ்கிட்ட எதாவது சொல்லி உன்ன கோர்த்து விட்டுருவேன்..
அம்மா தாயே ஏற்கனவே இங்க ஒரு டெவலெப்மெண்டும் இல்ல இதுல நீ வேற எதையாவது பத்த வச்சுறாத..
ம்ம் அப்படி வா வழிக்கு என உள்ளே சென்றாள்..
கார்த்திக் சிவா ஷரவனோடு ஹாலில் அமர,சிவா ஷரவனிடம் என்ன மச்சான் சைக்காலஜி க்ளாஸ்லா எந்த லெவல்ல இருக்கு என நக்கலாய் கேட்க வழக்கம்போல் ஷரவன் அவனிடம் கைகூப்ப முதலில் விளையாட்டாய் சிரித்த கார்த்திக்கிற்கு சட்டென ஒரு விஷயம் மனதில் தோன்ற அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான்..
இரவு உணவை கொடுத்துவிட்டு மணி அனைவரிடமும் கண்ணுகளா நாளைக்கு பாபநாசம் போய்ட்டு வாரீகளா??
இப்போ சீசன் வேற ரொம்ப நல்லாயிருக்கும்..அனைவரும் ஒப்புதலாய் தலையசைக்க சரி அப்போ சீக்கிரமா படுத்துக்கோங்க காலைல விரைசா போனாதான் கூட்டமில்லாம இருக்கும்..
அண்ணா கௌரியையும் அனுப்புங்க லீவ்ல தான இருக்கா எங்களோட வரட்டும் என கார்த்திக் கூற சம்மதமாய் தலையசைத்துச் சென்றார்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
💞💞💞💞💞💞💞
Nice
Super💕