198
நாட்கள் அழகாய் நகர ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் சரோஜா தமிழுக்கு அழைத்திருந்திருந்தார்..
“தமிழ் ஜோசியரை பாத்தோம்ப்பா இந்த மாச கடைசிலேயே முகூர்த்தம் ஒண்ணு நல்லாயிருக்குநு சொல்லிருக்காரு..”
“என்னம்மா சொல்ற இன்னும் 20-25 நாள் தான இருக்கு அதுக்குள்ள எப்படி??”
“தமிழ் நீ ஏன் கவலபடுற அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே வந்தா மட்டும் போதும்..”
“ம்ம் சரிம்மா அப்படியே பண்ணிரலாம்.. நா நிர்பயாகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்..”
“சரிப்பா அப்பறம் நாளைக்கு உங்களுக்கு லீவ் தான நீ அவள கூட்டிட்டு போய்ட்டு அவளுக்கு தேவையான நகையை வாங்கிடு.. அப்பறம் நிச்சயதார்த்ததுக்கு மோதிரமும் வாங்கிடுங்க..”
“ம்ம் சரிம்மா.. நாளைக்கு பேசுறேன் பை..”
நிர்பயாவிடம் விஷயத்தை கூற அவள் சற்று பயந்தாள்.
”இவ்ளோ சீக்கிரமா, எனக்கு என்னவோ ஒரு மாதிரி டென்ஸ்டா இருக்குங்க..”
“ம்ம் புரியுது டா.. பட் ப்ராங்க்லி ஸ்பீக்கிங் நா இதுக்கு ஒத்துகிட்டதுக்கு முக்கிய காரணம் உன்னை ரொம்ப நாளைக்கு தனியா விட இஷ்டமில்ல..
ஏனோ நாளாக நாளாக உன்னை மிஸ் பண்ற மாதிரி ஒரு பீல்.. சீக்கிரமா நீ இங்க வந்துடு.. மத்தபடி எதை நினைச்சும் கவலபடாத..”, என அவன் போக்கில் பேச மறுபுறம் அமைதியாய் இருந்தது..
“ஹலோ நிரு லைன்ல இருக்கியா??ஹலோ??”
“ம்ம் இருக்கேன் செல்வா..”
மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் பெயரை குறிப்பிடுவதை உணர்ந்தவன் சற்றே தன்மையான குரலில் பேசினான்..
“என்னாச்சுடா??அம்மா அப்பாவ மிஸ் பண்றியா??”
மறுபுறம் விசும்பல் சத்தம் கேட்க, ”நிரு கம் டவுண்.. அவங்க ரெண்டு பேரும் உன் கூடவே தான் இருக்காங்க.. தைரியமா இரு நா இருக்கேன்ல..”
“ம்ம்..”
“சரி நா போனை கட் பண்றேன் டூமினிட்ஸ்ல ப்ரெஷ் ஆய்ட்டு நீயே கால் பண்ணு.. அழாம பேசனும் இல்ல நானே நேர்ல வந்துருவேன்..
ஓ.கே??”,என்றவன் பதிலுக்கு காத்திராமல் கட் செய்துவிட பெண்ணவள் கண் துடைத்து முகம் கழுவி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து அவனுக்கு அழைத்தாள்..
“ம் குட்..சரி அப்பறம் நாளைக்கு மார்னிங் ரெடியா இரு அம்மா உனக்கு வேண்டிய நகையெல்லாம் வாங்கிக்க சொன்னாங்க..
அப்படியே உனக்கு வேறென்ன வேணுமோ வாங்கிக்கோ…சரியா??”
“ம்ம் சரி..”
“அழுகை வந்தா தான் செல்வானு கூப்பிடனும்னு இல்ல சாதாரணமாவும் கூப்பிடலாம் பை..”, என்றவாறு படுக்கச் சென்றான்..
மறுநாள் காலையிலேயே எழுந்து தயாரானவன் தான் வருவதை அவளுக்கு குறுஞ்செய்தியாய் அனுப்பிவிட்டு கிளம்ப இவன் அங்கு செல்லும் நேரம் இவனுக்காக வெளியில் காத்திருந்தாள்.
நேராய் டீநகரின் அந்த பிரபல புடவை கடையில் பைக்கை நிறுத்தியவன் அவளோடு உள்ளே நுழைந்தான்..
அவனை கண்டு கொண்ட கடை உரிமையாளர் வணக்கம் கூற கம்பீரமான தலையசைப்போடு உள்ளே சென்றான்.
பட்டுப்புடவை செக்ஷனில் சென்று அவன் அமர அவளும் அவனருகில் அமர்ந்தாள்..
“ஹே என்ன நீயும் வந்து உக்காந்துட்ட புடவை செலெக்ட் பண்ணு எனக்கு இதெல்லாம் அவ்ளோ நாலெட்ச் கிடையாது..”
எனக்கும் தான் என பாவமாய் கூறியவளை பார்த்து அடக்க மாட்டாத சிரிப்பு வர அதை கட்டுப்படுத்தியவனாய் நார்மல் ரேட்ல நல்ல பட்டுப் புடவை காட்டுங்க என்றான்.
தன் முன் இருந்ததில் மனதிற்கு நிறைவாய் இருந்ததை அவன் தேர்வு செய்து அவளிடம் காட்ட சம்மதமாய் தலையசைத்தாள்.
அதன்பின் அவளை கேட்காமல் தானே அவளுக்கு பொருத்தமாய் இருப்பதாய் 5-6 புடவைகளை எடுத்தான்..
“மேடம் சுடிதாராவது செலெக்ட் பண்ண தெரியுமா இல்ல நானே??”,என அவள் காதருகில் கேட்க முகம் சிவந்தவளாய் அவளே வேண்டியதை எடுத்துக் கொண்டாள்..
தனக்கும் சட்டைகள் எடுப்பதற்காய் அந்த தளத்திற்குச் செல்லும் போதே சின்னதாய் அவளிடம் விளையாட தோன்ற தனக்கு பொருந்தாத சட்டைகளாய் எடுத்து தனியே வைத்துக் கொண்டிருந்தான்..
ஒன்றும் கூறாமல் அவளும் அமைதியாகவே இருக்க கண்டும் காணதவனாய் தன் வேலையை பார்த்தான்..
ஒரு கட்டத்தில் தன் மௌனத்தை கலைத்தவள், “வந்து..” என ஆரம்பிக்க காது கேக்காதவனாய் அவள்புறம் திரும்பாமல் நின்றான்..
மற்றவர்கள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் சற்று குரல் உயர்த்தி செல்வா என்றழைக்க, உதட்டோர சிரிப்பை மறைத்து
”என்ன நிரு??”
“இல்ல வந்து.. தப்பா எடுத்துக்காதீங்க இதெல்லாம் உங்க கலருக்கு சூட் ஆகாதோனு தோணுது”, என மெதுவாய் கூற,
அப்பாவியாய் அதைப் பார்த்தவன் , ”அப்படியா சொல்ற??ம்ம் சரிநீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்..”
அவனுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுக்க தனக்காக மெனக்கெடுபவளை தனக்குள் பதித்து கொண்டான்..
அனைத்தையும் பில் போட்டு வெளியே வந்தவன் ,
”பரவால்லையே புடவை செலெக்ட் பண்ண தெரிலனு சொல்லிட்டு எனக்கு ஷர்ட் இவ்ளோ நல்லா சூஸ் பண்ணிருக்க..”
“இல்ல நா புடவை அவ்வளவா யூஸ் பண்ணிணது இல்ல..
அம்மாவும் பட்டுபுடவையெல்லாம் வாங்கினதில்ல.. சோ அதுபத்தி தெரியாது பட் அப்பாக்கு எப்பவுமே நா தான் ஷர்ட் வாங்குவேன் அதான்..”
ஓ..ஓ.கே என தன் பைக் நோக்கி செல்லும் போதே அவர்களுக்கு எதிர்புறம் நான்கைந்து ஆண்கள் அவர்களை கமெண்ட் அடித்தவாறு வர தமிழின் கை அதுவாய் நிர்பயாவின் தோள்பற்றி தன்புறம் சேர்த்தவாறு நடக்க பார்வை மட்டும் அவர்களை எச்சரிப்பதாய் இருக்க அத்தோடு வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்…
அனைத்தையும் கவனித்தவளுக்கோ மனதளவில் பெரும் நிம்மதியாய் இருந்தது..
அத்தனை குழப்பங்களையும் தாண்டி என்னவன் எனக்காக எதையும் செய்பவன் இவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என மனதினுள் உறுதி கொண்டாள்..
பைக்கில் அமர்ந்தவள் இத்தனை மாதங்களில் முதன்முறையாய் அவன் தோள்பற்றி அமர சைட் மிரர் வழியே அவளை அவன் பார்க்க சட்டென தலையை முன்னே தள்ளிக் கொண்டாள்.
அவளின் முதல் ஸ்பரிசம் ஏனோ அவனுக்கு கிளர்ச்சியை தராமல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது..
அடுத்தது நகை கடைக்குச் சென்று தேவையானதை வாங்கசொல்ல எவ்வளவு கூறியும் சின்னதாய் ஒரு ஆரமும் கைக்கு நான்கு வளையல்களையும் தவிர்த்து ஒன்றும் வேண்டாமென கூறிவிட்டாள்..
அடுத்து இருவருக்குமாய் மோதிரங்கள் எடுத்து முடித்து வெளியே வரும் போது மதிய உணவுக்கான நேரத்தை எட்டியிருக்க அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பாட்டை முடித்து வீட்டிற்குச் சென்றனர்..
அனைத்தையும் ஹால் சோபாவில் வைத்துவிட்டு அவன் சோர்வாய் அமர டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தவள் அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள்..
நீரை பருகி முடித்தவன் அவள் ஏதோ கூற தயங்குவதை கண்டு என்னவென கேட்க,
“இல்ல உங்களுக்காக ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்.. அத தரலாமானு தெரில.. அதான்..”
“ என்ன அது??”
மெதுவாய் தன் ஹேண்ட் பேக்கிலிருந்து அதை வெளியிலெடுத்து காட்டினாள்.
“செயினா??இது எப்போ வாங்கின அதுவும் எனக்காக??”, என அவள் விழி நுழைந்து கேட்டான்.
“இல்ல இது என் டேடியோட ஃபேபரட் செயின்..அவருக்காக நானே வாங்கிக் கொடுத்தது..
இனி இது என்கிட்ட இருக்குறத விட உங்ககிட்ட..”, எனும்போதே அவனை பார்க்க அவன் பார்வையில் வார்த்தையெழாமல் தலைகுனிந்து கொள்ள,
மெதுவாய் அவள் காதோர முடிக்கற்றையை ஒதுக்கியவன் கன்னத்தை மிருதுவாய் அழுத்தி கட்டை விரலால் வருட கையில் தலைசாய்த்து கண்மூடினாள்..
அவன் கையின் வெப்பம் கூட சட்டென பதறியவள் எழுந்து சென்று சுவரோரமாய் நின்று கொண்டாள்..
கனவிலிருந்து விழித்தவனாய் தன் தப்பை உணர்ந்தவன் எழுந்து அவளருகில் சென்று அவளை தன்புறம் திருப்பி,சாரி நிரு.. என்னையறியாம எனும்போதே தன் விரலால் அவன் வாயை மூடினாள்..
“நீங்க ஏன் சாரி சொல்றீங்க.. நா இதுக்காக தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்..”
“நிரு.. நாதான் சொல்லிட்டேன்ல என்னை அறியாம நடந்துருச்சுனு இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்..
நீ எனக்காக அதை கொண்டு வந்தேன்னு சொன்னவுடனே ஐ வாஸ் ஹேப்பி.. வேற ஒண்ணுமில்ல நீ எதையும் போட்டு குழப்பிக்காத ம்ம்..”, என அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து விடுவித்தான்..
“திஸ் இஸ் வாட் ஐ நீட்..பீ வித் மீ ஆல்வேஸ் அதுபோதும்..சரி செயினை போடுறியா இல்ல அப்படியே எடுத்துட்டு போலாம்னு பாக்குறியா “,என அவளுக்கு எட்டுமளவு குனிந்து நின்று அவளை பார்க்க புன்னகையோடு சிவந்த முகத்தை மறைத்தவாறு அவனுக்கு அணிவித்தாள்..
“தேங்க் யூ சோ மச் டியர்”, என கண்சிமிட்டி அவன் நகர எத்தனிக்க,
“உங்ககிட்ட ஒண்ணு சொல்லவா??”
“ஹே நா என்னவோ ஸ்கூல் டீச்சர் மாதிரியும் நீ ஸ்டுடண்ட் மாதிரியும் குடுக்கவா சொல்லவானு பெர்மிஷன் கேட்டுட்டே இருக்க எதுவாயிருந்தாலும் சொல்லு..”
“கல்யாணத்துக்கு அப்பறம் நா வேலையை விட்டுரவா??கொஞ்ச நாளுக்கப்பறம் வேணா திரும்ப போறேன்..”
“ஏன் என்னாச்சு??”
“இல்ல சும்மா தான்..வீட்டை கவனிச்சுகிட்டு இங்கேயே இருந்துரேனே..”
மீண்டுமாய் அவளை நெருங்கியவன் ,”அப்போ நானும் அடிக்கடி லீவ் போடுவேன் பரவால்லையா”, என குறும்பாய் கேட்க சிரித்து விட்டிருந்தாள்..
“உனக்கு எது இஷ்டமோ செய்..எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல.. சரி அப்போ இந்த வீக்லயே ரிசிக்னெஷன் குடுத்துரு..
ப்ராஸஸ்லா முடிஞ்சு செட்ல் பண்றதுக்கு சரியா இருக்கும்… ஆல்ரெடி லேட் ஆச்சு வா போலாம் “,என்றவாறு முன்னே சென்றான்..
அடுத்து வந்த பத்து நாட்களில் பத்திரிக்கை மண்டபம் சாப்பாடு என அனைத்து வேலைகளையும் பெரியவர்கள் மின்னல் வேகத்தில் முடிக்க தமிழுக்கு அந்த வாரம் முழுவதுமே சற்று வேலைப்பழுவோடு சென்றது..
நிர்பயா வேலையை விட்டு விலகுவதாய் அலுவலகத்தில் அறிவிப்பு கொடுத்திருக்க அவளுக்கு ஒரளவு ஃப்ரீயாகவே இருந்தது..
தமிழை தொந்தரவு பண்ண வேண்டாமென அன்றைய நாள் அவளே கிளம்பி ஹரிஷ் வீட்டிற்குச் சென்றாள்..
“வாங்க புதுப்பொண்ணு எப்படியிருக்கீங்க??”
“நல்லாயிருக்கேன் அக்கா..நீங்க எப்படியிருக்கீங்க??செக்கப் போனீங்களா??”
“ம்ம் போய்ட்டு வந்தோம்டா..பட் மாசம் ஆகுதுல ரொம்ப டயர்டா இருக்கு.. ஆமா இன்னைக்கு உனக்கு ஆபீஸ் இல்லையா??”
“சீக்கிரம் கிளம்பிட்டேன்க்கா.. நா வேலைய ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்..”
“ஏன்டா என்ன உங்க அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரா??”
“ச்சச்ச அவரு ஒண்ணும் சொல்லல நாதான் விட்ரவானு கேட்டேன் ஓ.கே சொல்லிட்டாரு..”
“இப்போவே சப்போர்ட்டா.. ம்ம்.. நடத்து நடத்து.. அண்ணா எப்போயிருந்து லீவ் போட்றாரு??”
“ஒன் வீக் முன்னாடியிருந்து தான்.. நீங்களும் அண்ணாவும் கண்டிப்பா வரீங்க தான??”
“இல்லடா..பாப்பாவோட பக்கத்து ரூம்க்கு போறதுக்குள்ளேயே ஒரு வழி ஆய்ட்றேன் இதுல ட்ரெயின்ல 14 அவர்ஸ் ட்ரவலா நோ வே..
உங்க அண்ணா கண்டிப்பா வருவாரு.. சரியா?? இங்க ரிசெப்ஷன் வைக்குறீங்க இல்லையா??”
“இல்லக்கா வீட்லயே அவர் ப்ரெண்ட்ஸ்காக சின்னதா கெட் டூ கெதர் அரேண்ஞ்ச் பண்ண போறேன்னு சொன்னாரு..”
“அதுவும் கரெக்ட் தான் அப்போ நா முதல் ஆளா அங்க வந்துட்றேன்..”
“சரிக்கா நா கிளம்பறேன்.. உங்கள இன்வைட் பண்ணிட்டு போலாம்னு தான் வந்தேன்.. நா ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி கால் பண்றேன்..”
“ஓ.கேடா பாத்துப் போ..பை..”
அன்றிரவு தமிழிடம் அனைத்தையும் கூற,
”பார்ரா போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு தைரியம் வந்துருச்சு போல தனியாவே போய்ட்டு வந்தது மட்டுமில்லாம அதிசயமா இவ்ளோ பேசிருக்காங்க..”, என்றான் அவன்..
“ஆபீஸ்ல ரிசெக்னேஷனுக்கு ஒண்ணும் சொல்லல??”
“இல்லங்க..பர்ஸ்ட் யோசிச்சாரு அப்பறம் காரணத்தை சொன்னவுடனேஅக்செப்ட் பண்ணிட்டாங்க..”
“ம்ம் ஆங்ங் சொல்ல மறந்துட்டேனே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணியாச்சு..
வரும் போது ஊர்ல இருந்து காரை எடுத்துட்டு வந்துரலாம்னு இருக்கேன்..”
“அங்க அப்பாக்கு அண்ணாக்கு தேவைபடுமே??”
“அது ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சின்ன காரை நாம எடுத்துக்கலாம் இன்னொன்னு அங்க தான் இருக்கும்…”
“ஓ.. சரிங்க டக்குனு தோணிச்சு அதான் கேட்டேன்..”
“நோ ப்ராப்ளம்.. எப்போ தான் நீ பார்மலா பேசுறத விடுவியோ தெரில..
ஊருக்கு போறதுகுள்ள மாத்திக்கோ ஊர்காரங்க கண்ல எண்ணெய் விட்டுபாத்துட்டு இருப்பாங்க அப்பறம் நா ஏதோ உன்னை கட்டாய கல்யாணம் பண்றேன்னு நினைச்சு உள்ளே தூக்கி வச்சுறப் போறாங்க..”
“அய்யோ ஏன் அப்படி சொல்றீங்க??நிறைய பேர் இருப்பாங்களா??எனக்கு பயமா இருக்கு??”
“அப்படிலா இல்ல ரொம்ப க்ளோஸ் சொந்தகாரங்க தான் வீட்ல இருப்பாங்க..மத்தவங்க கல்யாணத்தன்னைக்கு வந்துட்டு கிளம்பிடுவாங்க டோன்ட் வொரி..”
“ம்ம் நீங்க என் கூடவே இருப்பீங்கல??”
“ம்ம் சரியா கேக்கல என்ன சொன்ன???”
தான் கூறியதை உணர்ந்தவள் நாக்கை கடித்து தன்னை தானே திட்டிக் கொண்டாள்.. இல்ல அது..
“சரி சரி சமாளிக்க வேணாம்..கண்டிப்பா நா உன்கூடவே இருக்கேன்..
அப்படி நா வெளில போனாலும் அம்மாவோ அண்ணியோ உன்கூடவே தான் இருப்பாங்க.
சோ நெக்ஸ்ட் சனிக்கிழமை நாம கிளம்புறோம் அநேகமா அப்போதான் நேர்ல பாக்க முடியும்னு நினைக்குறேன்..
வீக் புல்லாவே கொஞ்சம் டைட் வொர்க் இருக்கு ஒன் மந்த் லீவ்ல சோ ஹண்ட் ஓவர் பண்ணிட்டு வரனும்..”
“ஒன் மந்த்தா?????”
“ம்ம் ஆமா பின்னே ஹே சொல்ல மறந்துட்டேனே ஊர்ல யார் கேட்டாலும் ரெண்டு வாரம்னு சொல்லு நாம அப்போதான் இங்க கிளம்ப முடியும்.. ஓ.கே வா?”
அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தவளுக்கு முகம் அதுவாய் சிவக்க,
”டியர் பொண்டாட்டி போதும் அங்க சிவக்குறது இங்க தெரியது.. கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ..
இங்க வந்தப்பறம் தேவைப்படும்.. சரி நிரு பை சட்டர் டே பாக்கலாம்..டேக் கேர் டா..”
போனை வைத்தவள் தன் பெட்டியிலிருந்த பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து கையில் வைத்தவாறு சுவரில் சாய்ந்தமர்ந்தாள்..
இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைவதை பார்ப்பதற்கு அவர்கள் இல்லையே என்ற எண்ணம் ஏனோ மனதினுள் உழன்று கொண்டேயிருந்தது.
தமிழுக்கு தன் மீதான அன்பும் அக்கறையும் அவளுக்கு நிறைவாய் இருந்தது..
தன்னை போன்ற பெண்ணுக்கு கல்யாணம் என்பதே எட்டா கனி எனும் உலகத்தில் இத்தனை காதலோடு ஒரு கணவன் தாயின் அன்போடு மாமியார் அழகான ஒரு குடும்பம் இதெல்லாம் கிடைத்திருப்பது இன்னமும் கனவா நினைவா என்ற குழப்பத்திலேயே பாதி இரவு கழிந்தது..
ஊருக்கு கிளம்புவதற்குள் ஓரளவு அனைவரையும் எதிர்கொள்ள தயார் படுத்திக் கொண்டாள்..
தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவர்களுக்கு எந்தவித கெட்ட பெயரும் அளித்துவிட கூடாது என்பதை மனதில் கொண்டாள்…
சனிக்கிழமை இரவு இரயில் என்பதால் மாலை 7 மணிளவில் கிளம்பி தமிழோடு எக்மோர் ஸ்டேஷனிற்கு வந்தாள்..
முதல் வகுப்பில் டிக்கெட் புக் செய்திருக்க தங்கள் கூபேவை பார்த்து லக்கேஜை வைத்து செட்டில் ஆகவே நேரமெடுத்தது..
“ஷப்பாபா..இதுக்குதான் ஊருக்கு அவ்வளவா போறதேயில்ல கால் டேக்ஸில 1 மணி நேரம் அடுத்து ட்ரெயின்ல 12 மணிநேரம்னு வாழ்க்கைய வெறுத்துடுவேன்.. ஆமா உனக்கெப்படி??”
“எனக்கு ட்ராவல்னா ரொம்ப பிடிக்கும்… அதுவும் ட்ரெய்னா ரொம்ப இஷ்டம்..”
“அதானே எல்லாமே எனக்கு ஆப்போசிஸ்ட் தான்..”,என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வயதான தம்பதிகள் அவர்கள் கூபே விற்கு வர அத்தோடு பேச்சை நிறுத்தி நிமிர்ந்து அமர்ந்தான்.. நிர்பயாவும் எழுந்து அவனருகில் அமர்ந்தாள்..
அவர்களைப் பார்த்து பெரியவர்கள் சிநேகமாய் சிரிக்க பதிலுக்கு புன்னகைத்தனர்..
“நீங்களும் திருநெல்வேலிக்கு தான் வாரீங்களா???”
“ஆமா அங்கிள்..நீங்க??”
“நாங்களும் அங்கதான்ப்பா..வண்ணார்பேட்டை.. பையன் இங்க இருக்கான் பேரபசங்க இருக்காங்க பாக்கனும்னு தோணிணா வந்துருவோம்..
இங்கேயே இருக்க சொல்றான் நமக்கு தான் நம்ம சனத்தையெல்லாம் விட்டு இங்க கூண்டுக்குள்ள வந்து அடைய முடில ..”
“அது கரெக்ட் தான் அங்கிள்..எங்க அப்பா அம்மாவும் இதே கதை தான் “,எனக்கூற..
“தம்பி விரைப்ப பாத்தா பட்டாளத்துகாரர் மாதிரி இருக்கீகளே??”
“போலீஸ்ல இருக்கேன்.. அஸிஸ்ட்டெண்ட் கமிஷனர்..”
“ஓ..நல்லது நல்லது..”
“இது யாரு உங்க வீட்டுகாரம்மாவா??”,என அவரின் மனைவி ஆர்வமாய் கேட்க,
சிரித்தவாறே, ”ஆமா ஆன்ட்டி அடுத்த வாரம் கல்யாணம் அதுக்காக தான் ஊருக்கு போய்டு இருக்கோம்..”
“அப்படியா ரொம்ப சந்தோஷம்.. ஜோடிபொருத்தம் அம்சமா இருக்கு”, என கூறி இருவரும் புன்னகைத்தனர்..
“ஏன்ம்மா நீ ஒண்ணும் பேச மாட்ற??”
“ஆன்ட்டி அவளுக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும் நீங்க நம்ம ஊரு பாஷை பேசுறீங்கல அதான் அமைதியா இருக்கா..”
ஓ.. சரிதான்.. இப்படியாய் இரவு உணவு முடித்து அவர்கள் படுக்கச் செல்ல கண்ணசைத்து அவளை வெளியே வரச் சொன்னான்..
“என்னாச்சு முகமே சரியில்ல..”
“ஒண்ணுமில்லங்க எவ்ளோ பேசுறாங்க நிஜமாவே எனக்கு பாதிக்கு மேல அர்த்தம் புரில..
இரண்டு பேரே இப்படினா நாளைக்கு உங்க வீட்ல?? நினைச்சாலே பயமா இருக்கு..”
அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன், ” நாதான் சொல்லிருக்கேன்ல நா உன்கூடவே இருக்கேன்னு..
அதைமீறியும் யாரையாவது சமாளிக்க முடிலனா நீங்க பேசுறது புரிலநு சொல்லிடு சிம்பிள்..
ம்ம்..போய் தூங்கு மார்னிங் ஸ்டேஷன்கே எவ்ளோ பேர் வருவாங்களோ தெரியாது “,எனக் கூறி கண்ணடிக்க இன்னுமாய் மிரண்டு போனவளை லேசாய் தோள்தட்டி ரிலாக்ஸ் போ போய் தூங்கு என அனுப்பி வைத்தான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice.
💞💞💞💞💞💞
Super💕