76
அதிகாலை 5 மணிக்கெல்லாம் கார்த்திக் விழித்து விட்டான்..
சொல்லப் போனால் இரவு அவன் தூங்கச் சென்றதே 3 மணிக்கு மேல்தான் இருக்கும்..
காதலர்களாய் கணவன் மனைவியாய் மனதாற எத்தனை ஆண்டு வாழ்ந்தாலும் தாம்பத்யம் என்ற ஒன்று வெறும் உடல் சம்மந்தபட்டதாக இல்லாமல் இருமனங்கள் ஒரு பாதையில் சங்கமிக்கும் நிகழ்வாய் இருந்தால் மட்டுமே அந்த காதல் உண்மையான அடுத்த நிலைக்குச் செல்லும்..
கார்த்திக் அதை உணர்ந்திருந்தான்..அழகிய மலராய் தன்னருகில் உறங்குபவளிடமிருந்து அவனால் கண்களை அகற்றமுடியவில்லை..
எத்தனை பெரிய விஷயத்தை கூறினான்..அதைப்பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்ன ரியாக்ட் செய்ய போகிறாள் என அவன் பயந்திருக்க அவள் அதை ஒரு பொருட்டாக கொண்டதாகவே தெரியவில்லை..
இது என்ன மாதிரியான அன்பு நம்பிக்கைஒன்றும் புரியவில்லை..
ஏதோ சிந்தனையில் அவள் முகம் வருட இன்னுமாய் அவன்புறம் சாய்ந்துபடுத்தவளை எழுப்பிவிடுவோமோ என்றெண்ணி மெதுவாய் எழுந்து வெளியே வந்தான்..
மெழுவர்த்திகள் அனைத்தும் கரைந்திருக்க மணி யாரும் வந்தால் என்ன செய்வதென்றெண்ணி அவற்றை அகற்றி சுத்தம் செய்தான்…
அதையடுத்து குளித்து தயாரானவன் சமையலறைக்குச் சென்று தனக்கான காபியை எடுத்துக் கொண்டு உணவு மேஜையில் அமர இரவுப் பொழுதின் நினைவில் இதழ் விரிந்தது..
அப்படி இப்படியாய் ஓரளவு அனைத்தையும் சுத்தம் செய்து முடிக்க சஹானா இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்..
நேரம் ஏழைத் தொட்டிருக்க அவளுக்காக காபியை எடுத்துக் கொண்டு அறைநோக்கிச் சென்றான்..
போர்வையை இழுத்துமூடி கால்களை குறுக்கி படுத்திருந்தவளைப் பார்க்க மனம் அதுவாய் அவள்புறம் சாய்ந்தது..
மெதுவாய் அவள் தலையருகில் அமர்ந்தவன் கன்னம்தட்டி எழுப்ப அறைகுறையாய் விழித்தவள் தாய்பறவையோடு குஞ்சுகள் ஒட்டிக் கொள்வதைப்போல் ஒட்டிக் கொண்டாள்..
சஹிம்மா எழுந்துருடா டைம் ஆச்சு பாரு..நைட்டே நீ ஒழுங்கா சாப்டல வா எதாவாது சாப்ட்டு தூங்கு..
வேணாம் மாமா நா அப்பறமா சாப்டுறேன் ரொம்ப தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்ளீஸ்..
சஹி சமத்துல எழுந்து இந்த காபியாவது சாப்ட்டு தூங்கு.எழுந்திருடா..
அய்யே ப்ரஷ் பண்ணாம காபியா என்ன மாமா நீ என மெதுவாய் எழுந்து அவன் தோள் சாய்ந்து கொள்ள..
ம்ம் நீ ரொம்ப க்ளீன்தான் ஒத்துக்குறேன் பட் இன்னைக்கு ஒருநாள் பரவால்ல சாப்டு என டம்ளரை அவள் கையில் திணிக்க மறுக்காமல் வாங்கி பருக ஆரம்பித்தாள்..
பருகும்போதே அவ்வப்போது கார்த்திக்கை ஓரப்பார்வை பார்க்க அவள் காதோர முடிக்கற்றையை சரிசெய்தவாறு
ஏன்டீ அப்படி பாக்குற???
இல்ல கொஞ்சம் மேக்கப்போட இருக்குறப்போ ரொமன்ஸ் பண்றது ஓ.கே இப்படி தூக்க கலக்கத்துல கலைஞ்ச தலையா இருக்கும்போதும் வச்ச கண்ணு வாங்காம பாகுறீயே அதான்..
ம்ம் இதுக்கே இப்படி சொன்னா எப்படி ப்யூசர்ல உன் தலைமுடி நரைச்சு கன்னம் சுருங்கி பல்லெல்லாம் விழுந்து பொக்கையானாலும் நா இப்படிதான் ரொமான்ஸ் பண்ணுவேன்.. உனக்கு வேற ஆப்ஷனே இல்ல பேபி…
சஹி ..
ம்ம் சொல்லு மாமா..
நேத்து நா சொன்ன விஷயத்தைப் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையேடா??
எதபத்தி சொல்ற மாமா??
என்ன சஹி இப்படி கேக்குற??
மாமா நீ ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க அந்தளவு நா இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்கல..
ட்ரெயின் இன்ஸிடெண்ட்க்கு அப்பறம் நிஜமாவே ஏதோ இருக்கோநு பயந்தேன்..
அதாவாது தீர்க்க முடீயாத ஹெல்த் ப்ராப்ளம் இல்ல வேற எதாவதுநு..
பட் நேத்து நீ சொன்னதை கேட்டப்போ பெரிய நிம்மதியே வந்துருச்சு..
இதை நீ மறைச்சதுலயும் தப்பு இல்ல மாமா..இப்போ என் மனசுல இருக்குறது ஒரே நினைப்புதான் போன ஜென்மத்துல உன்னோட வாழ முடியாம போன வாழ்க்கையையும் சேர்த்து ரசிச்சு ரசிச்சு இப்போ வாழனும்..
இதுக்குமேல இதபத்தி யோசிக்க ஒண்ணுமேயில்ல..
இனி நீ என்ன ப்ளான் பண்றியோ எனக்குதெரிஞ்சே பண்ணு என்னால முடிஞ்ச ஹெல்ப நானும் பண்ணுவேன்..
வேற எதையும் போட்டு குழப்பிகாத மாமா..
அவளையே பார்த்திருந்தவனின் முன் விரல் அசைத்து அழைக்க செல்லமாய் அவள் தலையை வருடியவன் நீ எப்பவுமே புரீயாத புதிர் தான் டீ பொண்டாட்டி..
சரி போ ரெடி ஆய்ட்டு வா நா மணி அண்ணா டிபன் பண்ணிருந்தா வாங்கிட்டு வரேன் என்றவாறு வாசல் கதவை திறந்து பார்க்க மணி வீட்டின் கதவு பூட்டியிருந்தது..
வாசலில் இரண்டு ஹாட்பேக்கில் ஏதோ இருக்க அதை எடுத்து உள்ளே வந்தவன் கதவை மறுபடியும் பூட்டிவிட்டு வந்தான்..
சஹானா தயாராகி வந்துடேபிளில் இருந்த பாத்திரத்தை கவனித்துவிட்டு ஓ அண்ணா கிளம்பிட்டாரா நைட்டே சொன்னாரு மாமா தோட்டத்துல ஏதோ வேலை இருக்குநு நாதான் மறந்துட்டேன் சரி நா உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன் நாம டிபன் சாப்பிடலாம் என்றவாறு சமையலைறைக்குச் செல்ல ஒன்றுமே கூறாமல் மெதுவாய் அவள்பின் சென்றான்..
அடுப்பின் முன் நின்று அவள் ஏதோ செய்து கொண்டிருக்க முடிகளில் இருந்து வழியும் நீர் அவள் முதுகை வருட தலைமுடியை உதறிக் கொண்டாள்..
மெதுவாய் அவள் பின்னிருந்து அவன் அணைக்க உடல் சிலிர்த்து திரும்பினாள்..
முகத்தோடு முகம் உரச தன்னவனின் ஸ்பரிசதால் கண்மூடி நின்றவளின் முடிகற்றைகளை கைகளால் ஒதுக்கியவன் அவள் காதோடு மூக்கு உரச பெண்ணவளோ இன்ப அவஸ்தையில் நெளிந்தாள்..
மாமா..
ம்ம்ம்
இன்னமும் அவன் முகம் நகர்த்தாமல் இருக்க மெதுவாய் அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் நீ போ நா எடுத்துட்டு வரேன் என அரைகுறை குரலில் கூற..
இன்னைக்கு நீ ரொம்ப அழகா தெரியுற டீ பொண்டாட்டி உன்கூடவே இருக்கேனே ப்ளீஸ்..
மாமா என்ன இது குழந்தைமாதிரி..
என்ன எதனால உனக்கு இவ்ளோ பிடிச்சுருக்கு சஹிம்மா??
என்ன கேள்வி இது??
பரவால்ல நீ சொல்லு…
ஏன்னா என் வாழ்க்கையோட சந்தோஷமே நீதான்..
சந்தோஷத்தை யாருக்காவது பிடிக்காம போகுமா??
அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி இன்னுமாய் தன்னோடு சேர்த்தவன் நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ் பதித்தான்..
இப்போ போலவே என் ஆயுள் முழுசும் உன்மேல பைத்தியமாவே வச்சுரு சஹி..அது உன்னால மட்டும்தான் முடியும்..
கர்வமான பார்வை பெண்ணவளிடம்..ஆனாலும் என்ன எப்படி மடக்கனும்நு உனக்குதான் தெரியும் கார்த்திக்..
டூ ஸ்மார்ட் யூ ஆர் என இதழ் சுழிக்க,கார்த்திக் ஏதோ கூற வாயெடுக்க அவன் கைப்பேசி அழைத்தது..
ஒருவித கனவு தடைப்பட்டதாய் உணர்ந்தவன் தன்னவளை ஒருபுறம் பிடித்தவாறே போனை பார்க்க சிவா தான் அழைத்திருந்தான்..
சஹானா சிரித்தவாறே அவனைவிட்டு விலக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..
ஹாய் சிவா..
கார்த்திக் எப்பவும் கால் பண்ண உடனே எடுத்துடுவீங்க சாரி வெளில எங்கேயும் இருக்கீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா??
ச்சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல சொல்லுங்க..
ம்ம் உங்க குரல்லயே தெரியுது கரெக்ட்டா தப்பான டைம்ல கால் பண்ணிட்டேன்னு..
நா சொல்ல வேண்டியத சொல்லிட்றேன்..அந்த அருண் கேஸ் டீடெய்ல்ஸ்லா உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் பாத்துட்டு கால் பண்ணுங்க பை..
என பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்துவிட்டான்..
சிறு வெட்கத்தோடு கைப்பேசியை நெற்றியில் தேய்த்தவன் சஹானாவை பார்க்க நடந்ததை யூகித்தவளாய் குறுஞ்சிரிப்போடு ஹாலுக்குச் சென்றாள்..
இருவருமாய் தங்களுக்கு பரிமாறியபடியே காலை உணவை முடிக்க பாத்திரங்களை சுத்தம் செய்வதில் உதவுவதாய் கூறி சஹானாவை சீண்டிக் கொண்டேயிருந்தான்..
மாமா சிவா தான் உனக்கு ஏதோ வேலை குடுத்தானே அதப்போய் பாக்கலாம்ல..
இங்க என் வேலையையும் சேர்த்து கெடுத்துட்டு இருக்க..
போ ஒழுங்கா போய் ஹால்ல உக்காரு நா வரேன் என மிரட்ட அவனும் பயந்த குழந்தையாய் நடித்து அவளுக்கு அழகுகாட்டிச் சென்றான்..
கம்பீரமான ஆண் குழந்தையாவதும் பூ போன்ற பெண் அவனை அன்பில் கட்டி ஆட்சி செய்வதும் இல்லறத்தின் மிகப் பெரிய வெற்றி..
கார்த்திக் லேப்டாப்பில் மூழ்கிப் போக சிறிது நேரத்தில் சஹானா அவனருகில் வந்து அமர்ந்தாள்..சிவா எதுக்கு கால் பண்ணிருந்தான் மாமா..
ஆங்..இதோ கொஞ்சம் டீடெய்ல்ஸ் கேட்டுருந்தேன்டா அதான் ஆந்த அருணை பத்தி அதை அனுப்பிருக்காரு இதெல்லாம் பாத்தாலே தலைசுத்துது.. எதை எங்கிருந்து ஆரம்பிக்குறதுநு தெரில..
ஏன் மாமா நீ இவ்ளோ கஷ்டப்படுற??
என்ன சஹி சொல்ற??
இல்ல இவ்ளோதூரம் உன்னை கொண்டுவந்து விட்ட தேவிகா இதுக்கும் உனக்கு வழி வைக்காமயா போய்ருப்பா???
சஹி???
இல்ல மாமா நீ சொன்னதெல்லாம் வச்சு யோசிச்சா எனக்கு தோணிச்சு வேற ஒண்ணுமில்ல..
அன்று சிவாவும் இதையேதான் கூறினான் இன்று சஹியும் கூறுவதைப் பார்த்தால்??
என சிந்தனை வேகமாய் பறக்க அதற்கு தடை போடுவதாய் சஹானா பேச்சை தொடர்ந்தாள்..
சரி அதவிடு மாமா நீ மொதல்ல எல்லாருக்கும் கான்ப்ரெண்ஸ் கால் போடுறியா நமக்காக எவ்ளோ பண்ணிருக்காங்க முதல்ல நா தேங்க்ஸ் சொல்லனும் ப்ளீஸ்..
மேடம் பேச்சுக்கு அப்பீல் ஏது பண்ணிட்டா போச்சு என சிவா ஷரவந்தி ஷரவனுக்கு அழைக்க அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு டேபிளில் வைத்தான்..
எடுத்தவுடன் ஷரவ் அவசரமாய் அண்ணா எப்படியிருக்கீங்க அண்ணி நல்லாயிருக்காங்கல..
ஒண்ணும் ப்ரச்சனைலா இல்லையே..
ஹலோ ஹலோ மேடம் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க..
நாங்க நல்லாயிருக்கோம் உங்க அண்ணா இருக்கும்போது எனக்கு எதாவது நடந்துடுமா என்ன???
அண்ணி நீங்களா சாரி நா எதார்த்தமா கேட்டேன்..
ஷரவ் ஐ அம் வெரி லக்கி டு ஹாவ் பீபுள் லைக் யூ..உங்க மூணு பேருக்கும் தேங்க்ஸ் சொல்றதுக்காக தான் கால் பண்ணேன் எனக்காக இவ்ளோ அக்கறையெடுத்து கார்த்திக்கு ஹெல்ப் பண்ணி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கைஸ்..
சஹானா என்ன பேசுற நீ??-சிவா..
தேவிகாவை பத்தி பேசுறேன்டா..கார்த்திக் எல்லாத்தையும் சொல்லிட்டாரு..
நிஜமா நீதான் ரொம்ப சப்போர்ட்டா இருந்துருக்க தேங்க்ஸ் சிவா..
சஹானாம்மா என்னடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு உனக்காக பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன்..
நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்கனும் அதான் எங்களுக்கு வேணும்..
கார்த்திக் கைகளை கட்டியவாறு பார்வையாளனாய் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்..
சில நிமிட உரையாடலுக்குப் பின் சிவா கார்த்திக்கை அழைக்க சொல்லுங்க சிவா..
என்னத்த சொல்ல சஹானாகிட்ட சரண்டர் ஆய்டுவீங்கநு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர்பாக்கல கார்த்திக்..
என்ன பண்றது சிவா புருஷ லட்சணம்ங்கிறது இதுதான்நு தெரிஞ்சுடுச்சு சரி லேட் பண்ண வேண்டாமேநு சீக்கிரமே சரண்டர் ஆய்ட்டேன்..
அதுவும் கரெக்ட் தான் கார்த்திக்..பட் ஜோக்ஸ் அப்பார்ட் நீங்க இத சஹானாட்ட சொல்லுவீங்கநு நாங்க எதிர்பாக்கவேயில்ல அதைவிட பெரிய ஷாக் சஹானா இதை இவ்ளோ ஈசியா எடுத்துகிட்டது..
ரியலி நீங்க ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் தான்..ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு..ஹாப்பி ஹாலிடேஸ் என்ஜாய் பை..
அதன்பின் மணி கௌரியை பார்த்து பேசி காயத்ரிக்கு அழைத்து நன்றி கூறியென அன்றைய நாள் கரைய இரவு உணவை எடுத்துக் கொண்டு இருவருமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்..
இருவரும் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவன் சஹானா மடியில் படுத்துக் கொண்டான்..
ஆதரவாய் அவன் தலைமுடி கோத வார்த்தைகள் பரிமாறாமல் காதல் விழி வழியே இருவரையும் இணைத்தது..
ஏன் சஹி எதுவும் பேசமாட்ற???
இவ்ளோ நேரம் சத்தமேயில்லாம பேசிட்டுதான இருக்கோம் மாமா என்றவள் கண்சிமிட்டி சிரிக்க,அவள் இதழோரத்தை விரலால் தட்டி சிரித்தான்..
ஏன் சஹி ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சுருக்கேன்..
நீ இன்டிபெண்டட்டா வளர்ந்தவ உனக்கு ஜாய்ன்ட் பேமிலி செட் ஆகும்நு எப்படி நினைச்ச??
நீ சொன்னதுலயே பதில் இருக்கே மாமா..தனியாவே இருந்துட்டேன் கல்யாணத்துக்கப்பறமும் தனிக்குடித்தனம் போய்ட்டு ஹஸ்பெண்ட் ஆபீஸ் போனப்பறம் விட்டத்தை பாத்துட்டு உக்காந்துருக்க முடியுமா சொல்லு..
ஒரு வேளை அரேண்ஜ்ட் மேரேஜா இருந்திருந்தாகூட மாமியார் மாமனாரோட செட் ஆகாம போய்ருக்கோமோ என்னவோ பட் ஸ்வீட்டியும் அங்கிளும் சான்சேயில்ல..
என்ன முதன்முதலா பாத்தப்போ எப்படி பாத்தாங்களோ அதே மாதிரி தான் இப்போவரை நடத்துராங்க..
ஷரவ் ஷரவன் கேக்கவே வேணாம்..இந்த வீட்டு மாப்பிள்ளை சிவா..
சின்ன மருமக கௌரி இதுக்குமேல ஒருத்தருக்கு பெஸ்ட்டா பேமிலி அமையுமா சொல்லு..
போன ஜென்மத்துல என்ன பாதிலேயே கூப்ட்டுகிட்டதுக்கு ப்ராய்சித்தமா கடவுள் இவ்ளோ ப்யூட்டிபுல்லா என் லைஃப்ப டிசைன் பண்ணிருக்காரு.. கரெக்ட் தான???
ஏனோ கார்த்திக் முகம் வாடிவிட,அவன் கன்னத்தை கிள்ளியவள்..மாமா ரிலாக்ஸ் நா எதார்த்தமா சொன்னேன்..
இந்தமாதிரி நடக்ககூடாதுநு தான் கடவுள் முன்ஜென்ம நியாபகங்களை எல்லாம் அழிச்சு புது உயிராவே எல்லாரையும் படைக்குறாரு.. ப்ரில்லிண்ட் இல்ல..
கடவுளுக்கே சர்டிபிகேட்டா ம்ம் சரி வா கீழ போலாம் சஹிம்மா டைம் ஆய்டுச்சு பாரு..
இருவருமாய் கீழிறங்கிய நேரம் மணி பதட்டமாய் அவர்களை நோக்கி வந்தார்.
தம்பி நானே உங்கள கூப்பிடனும்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க..
என்னாச்சுண்ணா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க.??
தம்பி நீங்க உள்ள போங்க நா இதோ வரேன் என மீண்டும் அவர் வீட்டை நோக்கிச் சென்றார்.
கார்த்திக் என்னவென புரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருக்க சஹானா அறைவாசலில் கைகட்டி நின்று கொண்டிருந்தாள்..
மணி வரும் அரவம் கேட்டு திரும்பியவன் அவரோடு வந்த இருவரையும் கண்டு குழம்பினான்..
இருந்தும் ஒன்றும் கேட்டுக் கொள்ளாமல் அவர்களை வரவேற்று அமர செய்தான்..
சஹானா உள்ளே சென்று அவர்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்துவரா அதுவரையுமே ஒருவரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.. சஹானாவே ஆரம்பித்தாள்..
மணி அண்ணா ஏதோ முக்கியமான விஷயம்நு சொல்லிட்டு அமைதியாவே இருக்கீங்க இவங்க ரெண்டுபேரும் யாரு???
அதுவும் இந்த நேரத்துல வந்துருக்காங்க??
சஹானாம்மா வந்து..அத எப்படி ஆரம்பிக்கநு தெரியாம தான் உக்காந்துருக்கேன்…இவங்க பேரு காமாட்சி அம்மா..
இது அவங்க பேத்தி வள்ளி..நம்ம தோட்டத்து பக்கத்துல தான் வீடு ..
ரொம்ப நாளா இவங்கள நா பாக்கவேயில்ல..இன்னைக்கு காலைலதான் பாத்து பேசிட்டு வந்தேன்..
திடீர்நு பாத்தா இங்க வந்து நிக்குறாங்க.. ஏன்னா இவங்க சொல்ற விஷயம் அந்தமாதிரி இருக்கு..
என்ன அண்ணா ஏன் இவ்ளோ தயங்குறீங்க என்னாச்சு??-கார்த்திக்..
தம்பி இந்த பொண்ணோட அப்பா அம்மா சின்ன வயசுலயே தவறிட்டாங்க..
பாட்டிதான் எல்லாமே கஷ்டப்பட்டு காலேஜ் படிக்க வச்சுட்டு இருக்காங்க..
பரிட்சை முடிஞ்ச பத்து நாள் லீவ்ல தோட்டத்து வேலைக்கு போய்ருக்கா டெய்லி சம்பளம்ங்கிறதால பாட்டிக்கு உதவியா இருக்குமேநு நினைச்சுருக்கு..
ஆனா போன இடம்தான் அவ வாழ்க்கைய அழிக்குற எமனோடதுநு தெரியாம போய்டுச்சு..
அதான் அந்த பாழாபோன அருணோடது தம்பி என்ன அர்த்தமுள்ள பார்வையை பார்க்க கார்த்திக் சஹானாவை பார்த்தான்..
அந்த கடன்காரன் இந்த புள்ளையோட வாழ்க்கைய நாசமாக்கிட்டான்ப்பா..
இதபத்தி வெளில சொன்னா பாட்டியை கொன்னுடுவேன்னு மிரட்டிருக்கான்..
அதுவும் போக இந்த ஊர்ல அவனை எதிர்த்து பேச ஆளே கிடையாது..
அப்போதான் தற்செயலா சிவா தம்பியை பத்தி தெரிய வந்துருக்கு அதான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமாநு கேட்டு வந்துருக்காங்க..
சஹானா அந்த பெணண்ணருகில் அமர்ந்து ஆதரவாய் தோள்பற்றினாள்..
அவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது..
அழாதம்மா நாங்கெல்லாம் இருக்கோம்..
தைரியமா இவ்ளோதூரம் யோசிக்குற பாரு அதுவே பெரிய விஷயம்..-கார்த்திக்..
தேங்க்ஸ் அண்ணா ஆனா அந்த மிருகத்துக்கு தண்டனை கிடைக்காம நா ஓயமாட்டேன்..
பொண்ணுங்கனா அவனுக்கு அவ்ளோ இளப்பமா போச்சா..
இந்தமாதிரி ஆளெல்லாம் நிக்க வைச்சு சுடணும் அண்ணா அப்படி ஒரு தண்டனை இல்லாததால தான் இவனெல்லாம் தப்பை மட்டுமே சரியா பண்ணிட்டு இருக்கான்..
தம்பி அவ ஏதோ சின்ன பொண்ணு எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசுறா..
பாவி மக வாழ்க்கைதான் போச்சு உசுரோடயாவது இருக்காளேநு நா நிம்மதி பட்டுட்டு இருக்கேன்..
அவனை எதிர்த்தா இருக்குற இடம் தெரியாம ஆக்கிருவான்ப்பா..
எங்களுக்கு இதெல்லாம் வேணாம்..புத்திமதி சொல்லி அனுப்புங்கப்பா..
கார்த்திக் அவர்களை தேற்ற வழிதெரியாமல் இருக்க சஹானா பாட்டியிடம்,பாட்டிம்மா நீங்க தைரியமா இருங்க உங்க பேத்தி இனி தனி ஆளில்ல..
நாங்க அத்தனைபேரும் அவளுக்குத் துணையிருக்கோம்..
நீங்க நம்பிக்யோட வீடுக்கு போங்க எங்களை பாத்ததா யார்கிட்டேயும் சொல்லிக்க வேணாம்..
மணி அண்ணா நீங்க போய் விட்டுட்டு வாங்க என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்..
மாமா..
நா பாத்துக்குறேன் சஹிம்மா நீ போய் படு நா வந்துரேன்..என போனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் செல்ல சஹானா தனதறையில் அவனுக்காக காத்திருந்தாள்..
நேரமாகியும் அவன் வராமல் போக அப்படியே உறங்கியும் போனாள்..
காலை வெளிச்சம் முகத்தை தழுவ எழுந்தவள் கார்த்திக் அறையில் இல்லாததை கண்டு அவனுக்குமாய் காபி எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்..
அங்கு கார்த்திக் சேரில் அமர்ந்து மேஜையில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்..
அவன் நெற்றிமுடி ஒதுக்கி மென்மையாய் இதழ்பதித்தவள் குட் மார்னிங் மாமா..
குட் மார்னிங்டா சஹி..எப்போ தூங்கினேன்னே தெரில இங்கேயே தூங்கிட்டேன் போல..
பரவால்ல மாமா நீ காபி சாப்ட்டு போய் ரூம்ல படு முதுகு வலிக்க போகுது..
இதுக்குமேல தூங்குறதா சரிதான் எவ்ளோ வேலையிருக்கு.. என காபியை பருக,
மாமா என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்க,சொல்லலாம்னா சொல்லு இல்ல வேணாம்..
என் பொண்டாட்டிட்ட சொல்லாமயா..அந்த பொண்ணை இங்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளைண்ட் பண்ண சொல்லிருக்கேன்..
எப்படியும் அவன் ஜாமீன் வாங்கிருவான்..அந்த களேபரம் முடியரதுக்குள்ள வள்ளியும் அவ பாட்டியும் இந்த ஊரை தாண்டிருப்பாங்க..
சென்னை போக சொல்லிருக்கேன்..அங்க சிவா ப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல ஒரு போஷன்ல ஸ்டே பண்ண சொல்லிருக்கேன்..
அல்டிமேட்டா வள்ளிக்கு பின்னாடி நாம இருக்கோம்நு அந்த அருண்க்கு தெரிய கூடாது..
சிவா இந்த கேஸை எடுத்தா டவுட் வரும்தானே மாமா..
கரெக்ட் அதனால தான் சிவா இதுல நேரடியா தலையிட போறதில்ல..
பொதுநல வக்கீல் ஒருத்தர்ட்ட பேச சொல்லிருக்கேன் அவருக்கும் அந்த அருண்க்கும் எந்த கான்டாக்டும் கிடையாது சோ கண்டிப்பா நாம மேல டவுட் வராதுடா..
ம்ம் ப்ளான் நல்லாதான் இருக்கு ஆனா கொஞ்சம் பயமாயிருக்கு கார்த்திக்..
அவளை பார்த்து மென்னகைத்தவன் அவளை தன் மடியில் அமர வைத்தான்..
சஹி பேபி நேத்து நீதான சொன்ன தேவிகா எல்லாத்தையும் பாத்துப்பாநு அப்பறம் நீயே பயந்தா எப்படி..
கவலயே படாத இந்த தடவை தண்டனை நிச்சயம் அந்த அருணுக்குத்தான்..
தேவிகா சந்தோஷப்படுற மாதிரிதான் எல்லாம் நடக்கும் என்ற நேரம் அங்கு அருண் தன் ஆட்களை பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான்..
எவ்ளோ தைரியமிருந்தா என் மேலயே கம்ப்ளைண்ட் குடுத்துருப்பா.
போனா போதுனு உயிரோட விட்டா என்னையே சீண்டி விட்டாளே..
அவ எங்கயிருந்தாலும் சரி அவளுக்கு முடிவு கட்டப்போறது நானாதான் இருக்கும்.. என கர்ஜித்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் இரு தடியன்கள் உள்ளே வர,என்னடா கிடச்சாளா??
இல்லீங்க ஐயா காலைல அவளும் ஆந்த கிழவியும் எங்கேயோ போனதா அக்கம்பக்கத்துல சொன்னாங்க..
ஆனா யாருக்குமே ஒழுங்கா எந்தா விவரமும் தெரில என முழுங்கி முழுங்கி கூறி முடித்தான்..
கழுத எனக்கே ஆட்டம் காட்றாளா??எங்க போய்றாநு பாக்குறேன்..
கேஸ் கோர்ட்க்கு வர்றதுக்குள்ள அவள கண்டுபிடிச்ச இல்லாம ஆக்கிட்றேன்..
என வெறிப் பிடித்தவானாய் கத்திக் கொண்டிருந்தான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
😍😍😍😍😍😍😍😍