33
வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் பேசுவதற்காக காத்திருந்தாள் சஹானா..கீழே அவரும் துளசியும் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது..
சற்று நேரத்தில் தந்தை தோட்டத்தில் வாக் செல்ல கிளம்பிவிடுவார் என அதற்காக காத்திருந்தாள்..
அதன்படியே துளசி கிச்சனுக்கு செல்ல சேகர் எழுந்து தோட்டத்திற்கு சென்றார்..
மெதுவாய் கீழிறங்கி அவரை நோக்கி சென்றவள் டாட் உங்ககிட்ட கொஞ்சம் பேசனுமே..
வாடா நீ தூங்கியிருப்பநு அம்மா சொன்னா??இவ்ளோ நேரம் உன்ன ஆளையே காணும்??என்ன விஷயம்??
பெருசா ஒண்ணுமில்லப்பா என் கல்யாணத்தை பத்தி தான்..
ஒரு நொடி அதிர்ந்தவர் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கினார்..
அப்பா வழக்கம்போல விளையாட்டெல்லாம் இல்ல சீரியஸா பேசனும்..
என்ன சஹானா நா தான் மாட்டினேனா இன்னைக்கு சரி சொல்லு கல்யாணத்தைபத்தி என்ன??
இல்ல எனக்கு மாப்பிள பாக்குறதுனா எப்படி பாப்பீங்க??
இது என்னடா கேள்வி..சொந்தகாரங்ககிட்ட ப்ரெண்ட்ஸ்கிட்டநு சொல்லி வைப்பேன்..
இல்ல மேட்ரிமோனியல் அது இதுநு எவ்வளவோ வந்துருக்கே..
ஓஓ..ம்ம் சரி அப்பறம்..
அப்பறம் என்ன பையனபத்தி விசாரிக்கனும்,பேமிலி எப்படி பையன் கேரெக்டர் எப்படி உன்ன நல்லா பாத்துப்பானானு தெரிஞ்சுக்கனும்..
ஸ்டேடஸ் விட்டுடீங்களேப்பா..
அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல சஹானாம்மா அப்படி ஸ்டேடஸ் பாத்துதான் கல்யாணம் பண்ணணும்னா உங்க தாத்தா எனக்கு பொண்ணே குடுத்துருக்க முடியாது.. குணம் தான்ம்மா முக்கீயம்..
வாவ் சூப்பர் டாட் நா என்னவோநு நெனைச்சேன்..
சரி எதுக்கு நீங்க இவ்ளோ கஷ்டபட்டு மாப்ள தேடிக்கிட்டு அதுக்கு பதிலா உங்களுக்கு தெரிஞ்ச எனக்கும் ரொம்ப பிடிச்ச கார்த்திக்குக்கே என்ன கல்யாணம் பண்ணி வச்சுரலாம்ல..
சஹானா!!!!!!
அப்பா ப்ளீஸ் இந்த படத்துல,சீரியல்ல வர மாறி எதாவது டயலாக்லா பேசிடாதீங்க..
ஐ லவ் ஹிம் சோ மச்..நா இப்போ உங்ககூட எவ்ளோ சந்தோஷமா இருக்கேனோ அதே மாறி என் வாழ்க்கை புல்லாயிருப்பேன்..
நானே கஷ்டபட்டு கார்த்திக்க ஒத்துக்க வச்சுருக்கேன் ப்ளீஸ் டாடி..நோ சொல்லிடாதீங்க..
அவள் கூறிய விதத்தில் லேசாய் சிரித்தேவிட்டார்..
கண்ணா எப்படிடா நீயோ இப்படியிருக்க கார்த்திக் ரொம்ப காம் டைப்பாச்சே எப்படி???
ப்பாபாபா உங்க முடிவ மொதல்ல சொல்லுங்க இந்த க்வெஸ்டின்க்கு எங்களுக்கே பதில் தெரியாது..
தெரியாதா… சஹானா இது ஒண்ணும் விளையாட்டு காரியம் இல்ல..நல்லா யோசிச்சுதான் பேசுறியா??
200% கான்விடண்ட் டேட்..
சிறிது நேரம் அமைதி காத்தவர் நீண்ட மூச்செடுத்துவிட்டு சரிம்மா நீ கார்த்திக்க நாளைக்கு என்ன பார்க்க வர சொல்லு அதுக்கப்பறம் என் முடிவ சொல்றேன்..
டாடி???
கண்டிப்பா பாஸிட்டிவ் ரிசல்ட் சொல்ல ட்ரை பண்றேன் போதுமா??
கூல்..தேங்க்யுப்பா.குட் நைட்..
தனதறைக்கு வந்து கார்த்திக்கை அழைத்து நடந்ததை கூற அவனோ தலையை பிய்த்து கொண்டான்..
இதவிட மோசமா யாரும் லவ்வ வீட்ல சொல்லிருக்க மாட்டாங்க சஹானா..என்ன பண்ணி வச்சுருக்க நீ??
ஹலோ ஆடிட்டர் சார் ரிலாக்ஸ்..எங்கப்பாவே கேஷ்வலா தான் பேசினாரு நீங்க என்னடானா இப்படி பேசுறீங்க.
சஹி…
கார்த்திக் கூல் டவுண்..ஆல் இஸ் வெல்..நிம்மதியா தூங்குங்க நாளைக்கு மாமனார்ட்ட செமயா பேசுற..
கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ற..ஆல் தி பெஸ்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்..
போனை வைத்தவனுக்கோ ஊர்ல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும் நா ஏன் இவள லவ் பண்ணேன்னு VTV சிம்புவோட மைண்ட் வாய்ஸ் கேக்க மறுநாளின் சவாலை எண்ணி தூக்கமின்றி இரவை கழித்தான்..
மறுநாள் பதட்டத்தோடே உள்நுழைந்தவனை வழக்கமான புன்னகையோடே வரவேற்றார் துளசி..
வாப்பா அவர் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு..
ஆக இவங்களுக்கும் தெரிஞ்சுடுச்சு..கடவுளே..இந்த குட்டிசாத்தான என்ன பண்றது ஒழுங்கா வெளில மீட் பண்ணலாம்நு சொன்னேன் வீட்டுக்கே வாங்கநு சொல்லிட்டு இவ எங்க போனா??
ஹாய் கார்த்திக்..
வந்துட்டாயா வந்துட்டா..
ஹே என்ன இங்கேயே நிக்குறீங்க வாங்க..
இவ நம்மள வச்சு காமெடி எதுவும் பண்றாளா??யார் முகத்துலயும் எந்த ரியாக்ஷனையும் காணும்..
வாப்பா கார்த்திக் உள்ளே வா-சேகர்..
உள்ளே சென்று அமர்ந்தவனுக்கு அவரை நிமிர்ந்து பார்க்கவும் தயக்கமாயிருந்தது..
சார் சஹானா உங்ககிட்ட சொல்லிருப்பானு நினைக்குறேன்..
ம்ம் சொன்னாப்பா..நிஜமாவே உனக்கு முழு சம்மதமா??
சார்..
ரிலாக்ஸ் கார்த்திக்..எனக்கு உன்ன பத்தியும் தெரியும் என் பொண்ணபத்தியும் தெரியும் அவ ஒரு விளையாட்டு பொண்ணு அவளுக்கு நீங்க வேணும்ங்கிறதுக்காக உங்கள ஒரு வழி ஆக்கிருப்பாநு தெரியும்..நீ உன் மனசுல இருக்குறத வெளிப்படையா சொல்லுப்பா..
சார் நீங்க நினைக்குறமாறியெல்லாம் ஒண்ணுமில்ல..அவ விளையாட்டுதனமா இருக்குறவ தான் அதே நேரம் பக்குவமானவ கூட..
எங்க ரெண்டு பேரோட முழு சம்மதத்தோட தான் உங்ககிட்ட பேசுறேன்..
தேங்க்ஸ் கார்த்திக்..உன்னவிட நல்ல பையனாவா நா பாத்துறபோறேன்..அதுவும் போக எல்லாராலயும் அவள புரிஞ்சுக்க முடியாதுப்பா..
எனக்கு அவ சந்தோஷந்தான் முக்கியம்..எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்ப்பா..நீ வீட்ல பேசிட்டு சொல்லு..
அதுமட்டுமில்லாம நா ஒத்துகிறதுக்கு இன்னொரு காரணம்….சரி அதவிடுப்பா..நீ அப்பா அம்மாட்ட பேசிட்டு சொல்லு..
தேங்க்ஸ் சார்..இந்த விஷயத்த இவ்ளோ ஈசியா புரிஞ்சுகிட்டதுக்கு..
இன்னும் என்னப்பா சார்??மாமாநு சொல்லு..
அழகாய் சிரித்தவன் அங்கிருந்து விடைபெற்று தன் வீட்டை அடைந்தான்..
மோகன் அவர் அறையில் பேப்பர் படித்து கொண்டிருக்க அவர் அருகில் சென்று அமர்ந்தான்..
என்ன கார்த்தி என்ன விஷயம்??ஏன்டா என்னவோ போலயிருக்க??
அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..நா பேசுறத கேட்டு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துகாதீங்க..
என்னடா ஏன் இப்படியெல்லாம் பேசுற??
அப்பா எனக்கு ஒரு பொண்ண பிடிச்சுருக்கு அவளயே கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசபட்றேன்..
கார்த்திக்!!!!!
சாரிப்பா என்னால மனச மாத்திக்க முடில அவளும் என்ன ரொம்பவே நேசிக்குறா..
நம்மள நம்பி வரவங்களுக்கு நாம தானப்பா துணையாயிருக்கணும்..அவ என்ன நம்பி வந்துட்டா வாழ்க்கை புல்லா அவளுக்கு துணையா கூடவேயிருக்கனும்னு ஆசப்பட்றேன்.. முடியாதுநு சொல்லாதீங்க ப்ளீஸ்,..
வாஞ்சையாய் அவனின் முன் நெற்றியை தடவியவர் என் பசங்கள நா நல்லவிதமா வளர்த்துருக்கேன்டா..
உன் விருப்பத்தையும் தாண்டி என்னை மதிச்சு என்கிட்ட பொறுப்ப குடுக்குற பாரு ஒவ்வொரு பையனும் அப்பாக்கு தர வேண்டிய மரியாத இது மட்டும்தான்..
என்கிட்ட எதுவுமே கேட்டதில்ல நீ முதல் தடவையா கேக்குற அத நா எப்படி மறுப்பேன் சந்தோஷமாயிருடா..என்று கூற அவர் கைகளை பற்றி கொண்டான்..
என்னதான் வீட்டிற்கு தெரியாமலும்,பெற்றவர்களின் சம்மதமில்லாமலும் நடக்கும் திருமணங்களில் திரில் இருந்தாலும்,நிதானமாய் அனைவரின் ஆசியும் பெற்று பெரியவர்களின் மனநிறைவோடு நடத்தப்படும் திருமணங்களின் திருப்தி என்பது அலாதியான சுகம் தான்..
கார்த்திக் இன்று அந்த சுகத்தை உணர்ந்தான்..
ஷரவனும் ஷரவந்தியும் விஷயமறிந்து சந்தோஷத்தின் உச்சியிலிருந்தனர்..
அண்ணா நீயும் KCயும் செம பேர் நிஜமா ஒவ்வொரு நாளும் வீடு செம ஜாலியா இருக்க போகுது.. என்று சிரிக்க கார்த்திக்குமே அந்த நினைவுகளில் கரைந்து போனான்..
இரவு அவளை போனில் அழைக்க முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்..
ஹே சஹி போனும் கையுமாவேதான் சுத்துவியா??
ம்ம் இந்த சாருக்கு இப்போ தானே பேசுறதுக்கு டைம் கிடைக்கும் அதான் காத்திட்டு இருக்கேன்..
கார்த்திக் நீ ரொம்ப வொர்ஸ்ட் லவ்வரா இருக்க மார்னிங் கிளம்பும் போது என்கிட்ட சொல்லிட்டு போனும்னு கூட தோணலையா..
ஹே சாரிடா..சார் என்கூடயிருக்கும் போது உன்ன கூப்பிட்டு பேசுறது நல்லாவாயிருக்கும்
ஷப்பாபாபா நல்லவனா இருக்கலாம் ஆனா அந்த நல்லவனே நா தான்ங்கிற ரேஞ்ச்ல இருக்க கூடாது..
ம்ம்ம் உங்கள லவ் பண்ண வச்சு கல்யாணம் பண்ணி ரொமான்ஸ் பண்ண வைக்குறதுக்குள்ள நா கிழவி ஆய்டுவேன் அது மட்டும் கன்பார்ம்..
ஹேய் வாலு..அந்த அளவு பழம் நா இல்ல..இரண்டு சைடும் ஓ.கே ஆய்டுச்சுல இனி பாரு நீயா நிறுத்துநு சொல்ற வர ரொமான்ஸ்ஸ அள்ளி குடுத்துருவோம்..
வாவ் கார்த்திக் அங்கிள் ஓ.கே சொல்லிட்டாங்களா..ஷரவ் என்ன சொன்னா??ஹே லவ் யு லவ் யு லவ் யு..
ஹேய் கத்தாத யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க..
ஐ டோண்ட் கேர்..கார்த்திக் நீ இவ்ளோ பாஸ்ட்நு நா நினைச்சு கூட பாக்கல..அப்போ எப்போ வீட்டுக்கு பேச வரீங்க??
நாளைக்கே..ஓ.கே வா??
ஓ மை காட் யு ஆர் க்ரேஸி..நா உன்ன இப்போவே பாத்தாகனும் வரட்டுமா??
ஹே அதெல்லாம் எதுவும் பண்ணிடாத..கையும் காலையும் வச்சுட்டு சும்மாயிரு..
நாளைக்கு மார்னிங் வெளில மீட் பண்ணலாம் நாங்க ஈவ்னிங் தான் வரோம் இப்போ ஒழுங்கா போய் தூங்கு..
எல்லாம் நேரம் நீ கேக்க வேண்டியத நா கேக்குறேன்..நா சொல்ல வேண்டியத நீ சொல்ற..குட் நைட்..
தன்னவளை நினைத்து சிரித்து கொண்டான்..யார் இவள்??
எப்படி என்னுள் வந்தாள்??அவளை சந்தித்த முதல் தருணம் நினைவிற்கு வந்தது சேகரின் வீட்டிற்கு செல்லும் முந்தைய நாள் ரயில் நிலையத்திற்கு தன் நண்பன் ஒருவனோடு சென்றிருந்தான்..
நண்பன் டிக்கெட் கவுண்ட்ர்க்கு செல்ல அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.. அவனுக்கு சற்று தள்ளியிருந்த ஒரு பெண் முகத்தில் தீவிர யோசனையோடு அங்குமிங்கும் யாரையோ பார்த்து கொண்டிருந்தாள்
முகத்தில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அவளிடம் ஏனோ அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது கார்த்திக்கிற்கு..
அதன்பின் அன்றைய வேலைகளில் அதை சற்று மறந்தும் போனான்..
ஆனால் மறுநாள் அதே தேவதை கண்களில் குறும்பு மின்ன தன்னிடம் பேசியதை கண்டு மொத்தமாய் தவித்துதான் போனான்..
அவளை முதன்முதாலாய் தன் பைக்கில் அழைத்து சென்றது,அவளோடு அந்த மாலில் செலவிட்ட பொழுதுகள் என அனைத்தும் ரசித்து ரசித்து பாதுகாத்தான்..
திருமணத்திற்கு பின் தன் மொத்த காதலையும் அவளிடம் கொட்டி தீர்க்க தயாராகி கொண்டிருந்தான்.
கைபேசி அழைப்பில் அவனின சிந்தனை கலைந்து அதை கையில் எடுக்க அவனது நண்பன் ஷ்யாம் அழைத்திருந்தான்..
ஹலோ சொல்லுடா நானே உனக்கும் கிஷோருக்கும் பண்ணணும்னு இருந்தேன்..
எதுக்கு உன் லவ் மேட்டர சொல்றதுக்கா??-கிஷோர்
டேய் நீயும் லைன்ல இருக்கியா ஆமா அதெப்படி உனக்கு தெரியும்???
ம்ம்ம் கடல போடுறத விட்டுட்டு கொஞ்சம் பேஸ்புக் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்கனும்.. பரவால்ல இந்த விஷயத்துல என் தங்கச்சி உன்னமாறியில்ல..-ஷ்யாம்
டேய் என்னடா சொல்றீங்க??
ம்.ம் உன் லவ் ஊருக்கே தெரிஞ்சுடுச்சுநு சொல்றோம் அதுவும் சும்மா இல்லப்பா காட் என்கேஜ்ட்னு போட்டுருக்கா சஹானா..
கல்யாணத்துக்காவது கூப்டுவியா இல்ல எப்படி??
ஐயோ அவளால சும்மாவே இருக்க முடியாதுடா எப்போ பாரு இதே வேலையா போச்சு..
பட் கார்த்திக் யு கைஸ் வில் மேக் அ பெஸ்ட் பேர்டா..ஹார்ட்டி விஷ்ஷஸ்..-ஷ்யாம்
தேங்க்ஸ் மச்சி நாளைக்கு தான் பேச போறோம் டேட் பைனலைஸ் ஆனவுடனே சொல்றேன் கண்டிப்பா வரீங்க..
இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு படுக்க சென்றான் கார்த்திக்..
ஏதேதோ காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் புரியவில்லை அவனுக்கு தெளிவாகவும் இல்லை..
படுக்கையில் இருப்பவனுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்ட இறுதியாய் தெரிகிறது அவனின் சஹியின் முகம் அலறிஅடித்து எழுந்தமர்ந்தான்..
தன் அறையில் தான் இருக்கிறோம் என்பதை உணரவே நேரமெடுத்தது..
என்றுமே இப்படியொரு கனவு கண்டதில்லை அவன்..எவ்வளவு முயன்றும் எந்த காட்சியுமே நினைவிற்கு வரவில்லை..
தனக்கு தானே ஏதேதோ சமாதானம் கூறிகொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு தூங்க முயன்றான்..
மறுநாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க தன்னவளை சந்திக்க ஆர்வமாய் கிளம்பினான்..
அதையும் தாண்டி உள்ளுக்குள் அந்த கனவின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருந்தது..
சஹானாவின் வீட்டினருகிலேயே அவளை அழைத்து கொண்டு தன் வண்டியில் கிளம்பினான்..
ஈசிஆரில் அமைந்துள்ள இஷ்கான் கோவிலை அடையும் வரையுமே இருவரும் பேசி கொள்ளவில்லை..
அவனுக்கு கனவின் தாக்கம் காரணமென்றால் அவளோ அவனோடானா அந்த பயணத்தை ரசித்தாள்..
உள்ளே சென்று அந்த மாய கண்ணணை மனமாற வேண்டிக் கொண்டு அங்கிருந்த படிகளில் ஓரமாய் அமர்ந்தனர்..
கார்த்திக் அவளையே பார்த்திருக்க முதன்முதலாய் தன் குறும்புதனத்தை தாண்டி பெண்மைக்கே உரிய நாணம் எட்டிபார்த்தது..
அவள் முகத்தின் சிவப்பை வெகுவாய் ரசித்தான் அவளவன்..
வேறெங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் கைகளை தன்னோடு இணைத்து கொள்ள முகத்தில் அப்படியாய் ஒரு பூரிப்பு பெண்ணவளிடத்தில்..
வாவ் சஹி உனக்கு வெட்கம் கூட பட தெரியுமா??
சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு அதைதாண்டி எதுவும் கூறும் நிலையில்லில்லை..
அதை உணர்ந்தவனும் கரத்தை பிடித்தவாறே எங்கோ பார்வையை செலுத்தினான்..
சற்று தூரத்தில் வயதான தம்பதியர் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்தபடி பிரசாதத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர்..
சஹி நம்ம லைவ்வும் இப்படிதான் இருக்கனும்டா.. ஆத்மார்த்தமாய் உணர்ந்து கூறினான்..
கண்டிப்பா இப்படிதான் இருக்கும் கார்த்திக்..என அவன் கைகளை அழுந்தபிடித்தாள்..
சரிடா ஈவ்னிங் உன் மாமியார் மாமனாரோட வரேன் ரெடியாயிரு..இப்போ போலாமா என சிரிக்க..
கார்த்திக் நீ மட்டும் எப்படி இவ்ளோ அழகா சிரிக்குற??
ஆமா அதென்ன எப்போ பாத்தாலும் என் சிரிப்புலயே ஒரு கண்ணாயிருக்க..
ம்ம்ம் ஏனோ உங்க சிரிப்ப பாக்கும் போதெல்லாம் மனசு ஒருமாறி ஜாலியாயிருக்கு..
ஹா ஹா சைட் அடிக்குறநு டேரெக்ட்டா சொல்லு அதுக்கு இப்படி ஒரு எக்ஸ்பளநேஷன் வேற..
எப்படி வேணா நினைச்சுக்கோ..சைட் அடிச்சா மட்டும் என்ன தப்பு??என்ன தவற யாருக்கு அந்த ரைட்ஸ் இருக்கு??
ம்ம் அது என்னவோ கரெக்ட்தான் என்றவாறு அங்கிருந்து கிளம்பினர்..
மாலை சஹானாவின் வீட்டில் சிவாவின் குடும்பமும் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் கார்த்திக் தன் குடும்பத்தோடு உள் நுழைந்தான்..
பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் நலம் விசாரித்து கொள்ள சிவா கார்த்திக்கிடம் என்ன இப்படி மாட்டிகிட்டீங்களே மாப்ள??
டெய்லி தலைய பாதுகாக்குறதே வேலையாயிருக்குமே பரவால்லையா என அவனை வாரிக்கொண்டே ஷரவந்தியை கண்களால் பருகி கொண்டிருந்தான்..
என்ன சிவா கொஞ்சம் என்ன பாத்தும் பேசுங்க..-கார்த்திக்..
ஹாங்ங்ங் உங்ககிட்டதான பேசிட்டு இருக்கேன்..என அடுத்து அவன் பேச வருவதற்குள் சேகர் அவனை ஏதோ எடுத்து வர சொல்லி அனுப்ப விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்..
துளசி சஹானாவை அழைத்து வருவதற்கு செல்ல கார்த்திக் தன்னவளை பார்ப்தற்காக தயாராய் இருந்தான்..
அரக்கு வண்ண பட்டில் தங்க சரிகையோடு அளவான ஒப்பனையோடு கழுத்தில் ஒரு நீள சங்கிலி,காதில் ஜிமிக்கி என இத்தனை நாள் பார்த்த குறும்புதனம் மறைந்து மணமகளுக்கேயுரிய வனப்போடு ஒயிலாய் வந்து அவனின் எதிரில் அமர்ந்தாள்..
கார்த்திக்கின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் இதயம் தாறுமாறாய் எகிறி கொண்டிருந்தது..
அவளருகில் வந்து ஷரவந்தி ஏதோ கூற அவளை முறைத்தாள்..
அந்நேரம் சிவா கார்த்திக்கிடம்,உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும் கொஞ்சம் வரீங்களா ப்ளீஸ்..
என்னவென்று ஓரளவு ஊகித்தவனோ சிறு புன்னகையோடு வெளியில் சென்றான்..
சொல்லுங்க சிவா அப்படி என்ன அவசரம்??
கார்த்திக் எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது நா…நா ஷரவந்திய ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்..
பட் அவளுக்கு தெரியாது எங்க வீட்ல எல்லார்க்கும் பரிபூரண சம்மதம்..அவங்க பேச்ச ஆரம்பிக்குற மாறி தெரில அதான் நானே சொல்லிட்டேன் ப்ளாஷ்பேக்லாம் நாளைக்கு பொறுமையா சொல்றேன்..
இப்போதைக்கு உங்களுக்கு ஓ.கே வா இல்லையாநு சொல்லுங்க??
லேசாய் புன்னகைத்தவன், அண்ணணுக்கும் தங்கைக்கும் எதுல ஒத்து போகுதோ இல்லையோ சிவா,இப்படி தடாலடியா லவ்வ சொல்றதுல ஒத்துபோகுது..
ம்ம் எனக்கு இதுல சம்மதம்தான் பட் முக்கியமான ஆளூ ஷரவந்தி தான் நீங்க உங்க ஸ்டோரிய சொல்லி அவ அத ஏத்துகிட்டு என்ன சொல்றாளோ அதான் இறுதி முடிவு பட் அவளுக்கும் சம்மதம்ங்கிற பட்சத்துல வீட்ல பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு ஓ.கே??
தேங்க் யு சோ மச் கார்த்திக் இனி தைரியமா என் ஆள நா சைட் அடிப்பேன்..
ஓ அஅப்போ இவ்ளோ நேரம் நீங்க என் தங்கச்சிய பாக்கவேயில்ல??
சரி..சரி..அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா..-சிவா..
அதற்குள் அங்கு கார்த்திக் சஹானாவின் திருமண நாள் குறிக்கப்பட்டிருந்தது..
45 நாட்களில் திருமணம்..மிஸஸ் சஹானா கார்த்திக் ஆகபோகிறாள்..
அவளவனின் சஹியாக அவனோடு வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கழிக்க போகிறாள்..
மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு அவளிருக்க அதை ரெட்டிப்பாக்க சிவாவோ,சஹானா கார்த்திக்கு வீட்ட சுத்தி காட்டேன் அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சுல என்று எடுத்து கொடுக்க அவனை பார்த்து கண்சிமிட்டி நன்றி கூறிவிட்டு கார்த்திக்கை அழைத்து சென்றாள்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
💞💞💞💞💞💞