108
அந்தவார இறுதியில் இருவருமாய் ஹரிஷ் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க கதவை திறந்த ஹரிஷோ வாயடைத்து நின்றான்..
“என்னடா உன் தங்கச்சிய முதல் தடவை உரிமையோட கூட்டிட்டு வந்துருக்கேன் உள்ளே விடமாட்டியா??அவ என்ன நினைப்பா நம்ம நட்பை பத்தி..”
“ம்ம் எதாவது சொல்லிற போறேன் போய்டு ஒழுங்கா..நீ வாம்மா உள்ள..”
ஷாலினியை எதிர்கொள்ள தயங்கியவளாய் உள் செல்ல ஷாலினி சோர்வாய் சோபாவில் அமர்ந்திருந்தாள்..
“ஷாலு மேடம் எப்படியிருக்கீங்க??”,என்ற குரல் கேட்டு திரும்பியவள் இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவாறே,
“ம்ம் நாங்க நல்லாதான் இருக்கோம்..இப்போவாவது பாக்க வரணும்னு தோணிச்சே..
அதுசரி ஏசிபிக்கு இனி எங்களலாம் கண்ணு தெரியுமா..”,என்று நிர்பயாவை பார்க்க அவளருகில் அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டாள்..
“அக்கா ரியலி சாரி.. அன்னைக்கு இருந்த நிலைமைல ஏதோ வாய்க்கு வந்தபடி பேசிட்டேன்.. தயவுசெஞ்சு எதையும் மனசுல வச்சுகாதீங்க..ப்ளீஸ்..”
“ஹே என்ன நீ எப்போ பாத்தாலும் இப்படி அழுது வடிஞ்சுட்டு எப்படிதான் இந்த சிடுமூஞ்சிக்கு உன்னை பிடிச்சுதோ.. ம்ம் ஆல்வேஸ் ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் இல்ல..”
சமாதானமாய் எழுந்து அவளருகில் அமர அதற்குள் ஹரிஷ் அனைவருக்குமாய் காபி எடுத்து வந்தான்..
“என்னடா என் ஆருயிர் நண்பா வெறும் ப்ரபோசல் தான் முடிஞ்சுருக்கா இல்ல கல்யாணமே முடிஞ்சுதா??”
“டேய் நீயில்லாம என் கல்யாணமா இப்படி நினைச்சுட்ட பாத்தியா..அம்மா அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லிருக்காங்க.. அப்பறம்தான் டேட் பைனலைஸ் ஆகும்..”
“அடப்பாவி அம்மாக்கிட்ட சொல்லிட்டியா..ம்ம் உன் காட்டுல மழைனு சொல்லு..
பட் நிர்பயா ஜோக்ஸ் அப்பார்ட் இனி உனக்கு பிறந்த வீடு இதுதான் அண்ணணா உனக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கூப்டு..
இவன் என் ப்ரெண்ட்ங்கிறதால சொல்லல உண்மையாவே இவனை கல்யாணம் பண்ணிக்க நீ குடுத்து வச்சுருக்கனும்..
வாழ்க்கையோட கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்துட்டு இனி சந்தோஷமாயிரு..”,
என சிநேகமாய் சிரிக்க நிர்பயாவிற்கு மனம் நிறைந்து போனது.. நன்றியாய் ஒரு பார்வையை அவனிடம் செலுத்தியவள் தனதருகில் இருந்த தன்னவனை கண்களுக்குள் நிரப்பினாள்..
இத்தனை அழகான உறவுகள் அனைத்திற்கும் காரணமான ஒரே ஜீவன்..
சத்தியமாய் நான் கொடுத்து வைத்தவள்தான் என மனதில் எண்ணிணாள். அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பி வெளியே வர,
“ஏன் நிரு தேறுவேனா மாட்டேனா??என்ன நினைக்குற??”
“என்ன..என்ன சொல்றீங்க எனக்கு புரில..”
“இல்ல கண்கொட்டாம பாத்துட்டு இருந்தியே அதான் என்ன முடிவுக்கு வந்த சுமாராவாவது இருக்கேனானு கேட்டேன் “,என கூலாய் கேட்க
ஒரு நிமிடம் பயந்தே போனவள், ”இல்ல..அப்படிலாம்..ஏதோ யோசனையில..”
“ரிலாக்ஸ் சும்மா தான் கேட்டேன்..போலாமா “,என சிரிக்க அவளறியாமல் சிவந்த முகத்தை திருப்பியவாறே அவனோடு கிளம்பினாள்..
பாதி தூரம் சென்றிருக்க திடீரென மழை வேகமாய் பெய்ய ஆரம்பிக்க பைக்கை நிறுத்தி விட்டு அருகிலிருந்த பேரூந்து நிறுத்தத்திற்குள் சென்று ஒதுங்கினர்..
கூட்டம் அதிகமாக இருந்ததில் முக்கால் வாசிப்பேர் ஆண்களாய் இருக்க நிர்பயாவின் முகம் தன்னால் மாறியது..
என்ன செய்வதென தெரியாமல் தவித்தளை கண்டுகொண்டவன் சிறிதும் யோசிக்காது தனக்கு முன் நிறத்தி இருபுறமும் தன் கைகளை அரணாய் சுற்றி அதே நேரம் அவள்மேல் படாமல் பார்த்துக் கொண்டான்..
பெண்ணவளுக்கோ அப்போதுதான் ஒழுங்காய் மூச்சுவிட முடிந்தது..
அதே நேரம் மற்ற ஆண்களிடம் வரும் அந்த அறுவறுப்போ தவிப்போ தமிழிடம் தனக்கு தோன்றவில்லை என்பதை எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தாள்..
சில நிமிடங்களில் மழை சற்று குறைந்திருக்க தன்முன் நிற்பவளின் தோள்தட்டி போலாம் எனக்கூற கனவிலிருந்து விடுபட்டவளாய் அவனோடு சென்றாள்..
அவள் வீட்டிற்கு சற்று தொலைவிலேயே அவன் இறக்கிவிட அர்த்தம் புரிந்தவள் தலையசைப்போடு முன்னே நடக்க அவள் உள்ளே செல்லும் வரை காந்திருந்து பின் கிளம்பினான்..
“டேய் எங்கடா போன எவ்ளோ நேரமா உனக்காக காத்திருக்குறது??”
“ஏன்மா என்னாச்சு ஹரிஷ் வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன் சொல்லு என்ன விஷயம்..”
“அப்பாகிட்ட பேசிட்டேன்..அந்த பொண்ணுக்கும் யாரும் இல்லங்கிறதால நம்ம ஊருலயே கல்யாணத்தை வச்சுப்போம்னு சொல்றாரு..நீ என்ன சொல்ற??
அத பொறுத்துதான் நா கிளம்புறதா இல்ல அப்பா இங்க வர்றதானு பாக்கனும்..என்ன சொல்ற??”
“ம்ம் அதுவும் கரெக்ட்தான்ம்மா..அங்கேயே வச்சுப்போம்.. நானும் அவளும் ஒரு வாரம் முன்னாடி வரோம்.. அவளுக்கும் புது இடம் கொஞ்சம் கம்பர்டபிளா இருக்கும்..”
“ம்ம் சரிடா அப்போ ப்ளான் பண்ணபடி நாங்க நாளைக்கே கிளம்பிடுறோம்..போய்ட்டு ஜோசியர பாத்து தேதி குறிச்சுடலாம்.. எனக்கு அவளோட ராசி நட்சத்திரம் கேட்டு சொல்லுடா..”
சரிம்மா என தன் அறையில் சென்று கட்டிலில் விழுந்தவனுக்கு இன்று பேரூந்து நிறுத்தத்தில் அவளோடு நின்ற கோலம் நினைவிற்கு வந்தது..
முதன்முதலாய் ஒரு பெண்ணுடன் அத்தனை நெருக்கத்தில் இருந்தது மனதை ஏதோ செய்தது..
அதைவிட மற்ற ஆண்களை காணும்போது வரும் ஒருவித படபடப்பு நிர்பயாவிற்கு தன்னை கண்டதும் வரவில்லை என்பது இன்னும் நிம்மதியாய் இருந்தது…
தினமும் இரவில் மெசேஜ் அனுப்புவது இருவருக்குமே வாடிக்கையாகிவிட்டது..அவன்தான் முதலில் அனுப்புவான்..
பதில் வரும்..இப்படியிருக்க அன்று அவளோடு சிறு விளையாட்டு விளையாட எண்ணியவன் மெசேஜ் அனுப்பாமல் காத்திருந்தான்..
வழக்கமான நேரத்திற்கு மொபைலை பார்த்தவள் எந்த மெசேஜும் வராமல் இருக்க ஏனோ ஏமாற்றமாய் உணர்ந்தாள்..
அரைமணி நேரம் பொறுத்தவள் அதற்குமேல் முடியாமல் அவளே மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்..
“சாப்டீங்களா??”
அதற்காகவே காத்திருந்தவனோ உதட்டோர புன்னகை மாறாமல் பதில் அனுப்பினான்..
“ம்ம் சாப்டாச்சு நீ சாப்டியா??”
“ம்ம்..பிஸியா இருக்கீங்களா??”
“இல்லையே இப்போதான் படுக்க வந்தேன் டீவி பாத்துட்டு இருந்தேன் என்னாச்சு??”
“இல்ல ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன்..”
அதற்குமேல் அவளை தவிக்க விடாமல் அவளிடம் பேச எண்ணி அழைத்தான்..
அதை எதிர்பாராதவளோ தவறுதலாய் முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்துவிட என்ன பேசவென தெரியாமல் அமைதி காத்தாள்..
“ஓய்..”
“ஆங்ங் சொல்லுங்க..”
“என்ன சொல்றது நீதான் என் மெசேஜ்க்காக காத்திட்டு இருந்த மாதிரி தெரியுது அப்போ நீதான சொல்லனும்..”
“அது அப்படிலா ஒண்ணுமில்ல..”
“சரி சரி அதை விடு அம்மாவும் அண்ணியும் நாளைக்கு ஊருக்கு கிளம்புறாங்க..
அப்பா ஜோசியர பாத்துட்டு டேட் பைனலைஸ் பண்றேன்னு சொல்லிருகாங்க.. அண்ட் மேரேஜ் ஊர்லயே வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்..”
“ம்ம்..”
“என்ன ரியாக்ஷன் இது ஊர்ல யார் கல்யாணத்தையோ பத்தி பேசுறமாதிரி ம்ம்ங்கிற??”
“இல்ல இல்ல அது..”
“அது வந்து இல்ல இதை தவிர எதாவது பேசுறியா நீ..சரி வைக்குறேன் பை..”
“ஏங்க ஒரு நிமிஷம்..”
“ம்ம் சொல்லு..”
“தேங்க் யூ சோ மச்..”
“எதுக்கு???”
“எல்லாத்துக்குமே..என் லைவ்ல வந்ததுக்கு எனக்கு ஒரு அழகான லைவ் கொடுக்குறதுக்கு..எல்லாத்துக்கும்..”
“ம்ம் அப்பறம்??”
“அப்பறம்…”
“சரி நா சொல்றத சொல்லு உன் தேங்க்ஸ் அக்செப்ட் பண்ணிக்குறேன்..”
“சொல்லுங்க..”
“லவ் யூ சொல்லு தேங்க்ஸ ஏத்துக்குறேன்..”
“……”
மறுபுறம் அமைதியாய் இருக்க சத்தமாய் சிரித்தவன், ”நீ மாறவே மாட்ட சரி சரி சும்மா தான் சொன்னேன் நீ சொல்ல வேண்டாம் நிம்மதியா போய் தூங்கு லவ் யூ..பை..”, என முடிப்பதற்குள்,
“லவ் யூ டூ..பை “,என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
தமிழ் நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை..கண்டிப்பாக அவள் தான் கேட்டதற்காக கூறினாள் எனினும் அவள் மனதளவில் மாற்றமடைந்ததால் மட்டுமே இது சாத்தியம் என உணர்ந்தான்..
இன்னுமாய் அவள் மீதான அவனின் அன்பு அதிகரித்தது..வருங்காலம் அவளின் காயங்களை மறக்கச் செய்யும் என நம்பிக்கை கொண்டான்..
அதே நேரம் தன்னோடு அவள் இருக்கும்போது தன் அருகாமையால் சிறு சிறு ஸ்பரிசத்தால் அவளை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என தனக்குள் எண்ணிக் கொண்டான்..
மறுநாள் சரோஜா கிளம்பும் முன் அவளை அழைத்திருக்க வழக்கமான தயக்கத்தோடே வேலை முடித்து உள்ளே நுழைந்தவளை பார்த்து காவியா ஓடி வந்தாள்..
“நிபி சித்தி..நீயும் என்னோடா ஊருக்கு வரியா??”,என கேட்க குழந்தை தன்னை அழைத்த விதத்திலேயே மொத்தமும் மறந்து போயிருந்தாள்..
“யாருடா அப்படி கூப்பிட சொன்னது???”
“நீங்க தான் சித்தப்பாவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமே அதான் உங்கள சித்தினு கூப்ட சொல்லி அம்மாவும் பாட்டியும் சொன்னாங்க..”
தன்னோடு குழந்தையை சேர்த்து அணைத்துக் கொண்டவள் கன்னத்தில் இதழ் பதித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
சரோஜாவும் ராஜியும் தங்கள் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளை பார்த்ததும்,
“வா வா நிர்பயா..சாரிம்மா உன்னை வேற அலைய வச்சுட்டோம்.. ரொம்ப டயர்டா இருக்கியே.. உக்காரு காபி எடுத்துட்டு வரேன்”, என ராஜி உள்ளே செல்ல,
“ எதாவது ஹெல்ப் பண்ணணுமா அம்மா??பேக்கிங் முடிஞ்சுதா”, எனக் கேட்டவளை வாஞ்சையாய் கன்னத்தை வருடி அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நா கூப்டதுக்கான காரணமே வேற,
“தமிழ் கல்யாண விஷயமா பேசினானா உங்கிட்ட தமிழோட அப்பா ஊர்லயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்றாரு.. உனக்கு ஒண்ணும் ப்ரச்சனையில்லையே??”
“உங்களுக்கெல்லாம் எது ஒத்து வருதோ அப்படியே பண்ணுங்கம்மா..”
“ம்ம் சரிடா உனக்கும் எங்க ஊர்ல பாக்குறதுக்கு நிறைய இடம் இருக்கு..ஜாம் ஜாம்னு பண்ணிடலாம்..ஒரு வாரத்துக்கு முன்னாடி வரோம்னு சொல்லிருக்கான்..
வேலை வெட்டினு அவன் இங்கேயே உக்காந்துருவான்..
டேட் பிக்ஸ் ஆனவுடனேயே அவனை லீவ்க்கு சொல்ல சொல்லு..நீயும் ஆபீஸ்ல சொல்லிடு..
உனக்கு ட்ரெஸ் எல்லாமே நா அங்கேயே எடுத்துரேன்..நகை மட்டும் உனக்கு பிடிச்சமாதிரி நீ இங்க எடுத்துக்கோ.. அப்பப்போ போன் பண்றேன் எதுவாயிருந்தாலும் சொல்லு..
என் நம்பர் நோட் பண்ணிக்கோ நீயும் எப்போ வேணா கால் பண்ணு..
ஊருக்கு வரும்போது அழகா சிரிச்ச முகமா சந்தோஷமான நிர்பயாவ தான் நா பாக்கனும் சரியா??”,என அன்பு கட்டளையிட ராஜியோ,
“ஷப்பா போதும் என்னால முடில..இதெல்லாம் பாக்குறதுக்கு தம்பி வீட்ல இல்லையே..
ம்ம் நிர்பயா எல்லாம் ஒழுங்கா செய்றேன்னு சொல்லு இல்ல அத்தை இப்போவே உன்னை கையோட கூட்டிட்டு போனாலும் போய்டுவாங்க “, எனும்போதே குழந்தை ஏதோ விஷமம் செய்ய அவள் பின்னே ஓடினாள் ராஜி..
சிறிது நேரத்தில் தமிழ் வந்துவிட சோர்வாய் வந்தமர்ந்தவன் அவளை கண்டதும்,
”ஹாய் அப்போவே வந்துட்டியா கிளம்புற நேரத்துல வேலை வந்துடுச்சு அதான் லேட்..செம தலைவலி கொஞ்சம் காபி எடுத்துட்டு வரியா “, என்றவாறு கழுத்தை சுழற்றி சோம்பல் முறிக்க,
கிச்சனிற்கு சென்று சரோஜாவிடம் அவள் கூற அவர் காபி கலந்து அவளிடம் கொடுத்தனுப்பினார்.
அவளிடமிருந்து வாங்கிப் பருகியவன்,கண்ணடித்து தேங்க்ஸ் எனக் கூறியவாறு உள்ளே செல்ல பெண்ணவளோ ஒரு நொடி முகம் சிவந்து மலர்ந்தாள்..
இருவருமாய் சென்று அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு இரயில் கிளம்பும் வரை அவர்களோடு இருந்தனர்..
“டேய் ரெண்டு பேருக்குமா டின்னர் செஞ்சு வச்சுருக்கேன்.. சாப்டுருங்க.. அப்பறம் அவளை பத்திரமா கொண்டு போய் வீட்ல விட்டுரா..”, என சரோஜா கூற,
“ம்மா வர வர நீ என்னபத்தி கவல படுற மாதிரி தெரில.. இதெல்லாம் நல்லதுக்கே இல்ல”, என தமிழ் இடவலமாய் தலையசைக்க,
“அதான் இத்தனை வருஷமா உன்னைபத்தி கவலப்பட்டாச்சே இனி உன்னபத்தி கவல பட வேண்டியது இவ தான்..”,என அவர் கூறிச் சிரித்தார். ரயில் கிளம்பியவுடன் இருவருமாய் கிளம்ப,
“நா அப்படியே கிளம்புறேனே.. ஆல்ரெடி லேட் ஆய்டுச்சு..”
“ம்ம் அதையே தான் நானும் சொல்றேன் ஆல்ரெடி லேட் இதுல தனியா எங்க போகபோற வந்து சாப்டு நானே கொண்டு போய் விடுறேன்..”
வீட்டிற்குள் நுழைந்தவன் டூ மினிட்ஸ் வந்துரேன் என்றவாறு சென்று உடைமாற்றி வந்தான்..
அதற்குள் அவள் டைனிங் டேபிளில் இருந்த சாப்பாட்டை எடுத்து இருவருக்குமாய் தட்டில் வைத்திருக்க வந்து அமர்ந்தவன் அவளையும் சாப்பிடச் சொல்ல சாப்பிட ஆரம்பித்தாள்..
“ஆமா நீ எப்படி சமையல்லா தெரியுமா?இல்ல நான் தானா??”
“அது..”
“ஓ..தெரியாதா??”
ம்கும் என இடவலமாய் தலையாட்டியவளை பார்த்து சிரித்தவனுக்கு புரையேற அவசரமாய் எழுந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்..
வாங்கி பருகி முடித்தவன் தொண்டையை சரி செய்தவாறே, ” சரி சரி நீ ஒண்ணும் கவலபடாத நா ரொம்ப நல்லாவே சமைப்பேன்..
ஆனா ஊருக்கு போறப்போ யாராவது கேட்டா நார்த் இண்டியன் டிஷ் பேரா அடிச்சு விடு..யாரும் ஒண்ணும் விளக்கமா கேட்டுக்க மாட்டாங்க..
அதவிட்டு நீ பாட்டுக்கு பாவமா ஒண்ணும் தெரியாதுனு சொல்லிராத..”, என மீண்டும் புன்னகைக்க அவளுமே மெல்லிதாய் சிரித்து விட்டிருந்தாள்..
“நிரு எப்பவுமே இந்த சிரிப்பை மட்டும் உன் முகத்துல பத்திரமா வச்சுக்கோ அது ரொம்பவே அழகாயிருக்கும்..சரியா??”
முகம் சிவக்க சரி யென தலையசைத்தாள்..
“ப்பாபா அது ஏன் நா என்ன பேசினாலுமே உன் முகம் இப்படி சிவக்குது..அக்சுவலி ஐ லவ்ட் இட்.. ஐயோ போதும் போதும் விட்டா ஸ்ட்ராபெரி கலர் ஆகிடும் போலயே..
நா ஸ்கூலிங் புல்லாவே பாய்ஸ் ஸ்கூல் தான்..காலேஜ்லயும் ரொம்ப டாகெட்டிவ் கிடையாது பொண்ணுங்ககிட்ட ரொம்ப பேசினது இல்ல..
சோ இம்ப்ரஸ் பண்ற மாதிரிலா எனக்கு பேச தெரியாது.. மனசுல பட்டத சொல்றேன்.. தப்பா எடுத்துக்காத.. சரி உன் ஸ்கூலிங் பத்தி சொல்லேன்..”
“ஸ்கூலிங் நா கேள்ஸ் ஸ்கூல் தான்..இரண்டு பேர்தான் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்…நல்லா படிப்பேன் அதனாலேயே நிறைய பேர் சேர மாட்டாங்க என்கூட”, என மெல்லிதாய் சிரித்தாள்..
“ம்ம் அது கரெக்ட் தான் எனக்குகூட நல்லா படிக்குறவன பாத்தா நல்லா வச்சு நாலு சாத்து சாத்தனும்னு தோணும்..
ம்ம் ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சுருக்கேன் உன்னோட இந்த தமிழ் அக்செண்ட் ரொம்ப நல்லாயிருக்கு லைக் கொஞ்சம் ஹிந்தி கலந்த தமிழ்..
இன்னொரு விஷயம் கூட கேக்கனும்னு நினைச்சேன் கேக்கவா??”
“என்ன கேளுங்க..”
“இல்ல எதனால உனக்கு என்ன பிடிச்சுதுனு தெரிஞ்சுக்கலாமா??”
“….”
“இல்ல சொல்ல வேண்டாம்னா வேண்டாம்..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..வந்து உங்களை பத்தி தெரிஞ்சு உங்க ஆபீஸ்ல வந்து பாத்தப்போவே ஒரு மாதிரியான செக்யூர்ட் பீல்..
யூஷுவலா போலீஸ்னு நினைச்சாலே ஒருவித பயம் வரும் அது முதல் தடவையா மாறின இடம் அப்போதான்..
அதுக்கு அப்பறம் ஹரிஷ் அண்ணா ஷாலினிக்கா பாத்தப்பறம் ரொம்பவே பயம் போயிடுச்சு..
அதுக்கப்பறமா உங்க பேமிலி..இதெல்லாம் தான் காரணமா இருக்கும்.. எல்லாத்தையும் விட நீங்க சொன்னீங்களே சில பீல் சில நெருக்கம் எல்லார்கிட்டேயும் வராதுனு..
அதுமாதிரி யார்கிட்டேயும் தோணாத ஒரு பீல் உங்ககிட்ட வந்தது..அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் “,என என கூறிமுடித்து அவனை ஓரப்பார்வை பார்க்க,
தன்னருகில் இருந்த அவளின் இடக்கையை வாஞ்சையாய் பற்றி லேசாய் வருடினான்..
உடல்சிலிர்க்க இன்னுமாய் பெண்ணவள் குனிந்து கொள்ள கையில் மென்மையாய் இதழ் பதித்தவன்,
“ இனி உன் வாழ்க்கை முழுசும் அந்த எண்ணம் மாறாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு..ம்ம்”, என கேட்க விழி மூடி திறந்து ஆமோதிப்பாய் தன் நிம்மதியை வெளிப்படுத்தினாள்..
அதற்குள் அவன் போனிற்கு அழைப்பு வர சட்டென கையை உருகிக் கொண்டு உள்ளே அவள் ஓடிவிட இதழோர சிரிப்போடு அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
👌👌👌👌👌👌👌👌