வரம்-33(Final)

by ஸ்ரீ
4 comments 720 views
A+A-
Reset

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

விளக்கம்
ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

காரில் ராகவனோடு பின் சீட்டில் அவளை அமர்த்தியவன் காரை உயிர்பிக்க அன்பு அவனுக்கு அழைத்தான்.

“ஆனந்தா மொபைலை காரிலேயே விட்டுட்டேன் அப்பா நிறைய தடவை கால் பண்ணிருக்காரு நான் இப்போ பண்ணினா எடுக்கலை டா..நீ வீட்டுக்கு வந்துட்டியா?”

“அண்ணே அண்ணிக்கு வலி வந்துருச்சு வாட்டர் ப்ரேக் ஆகிருக்கு நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன் நீ நேரா அங்க வந்துரு.”,என்றவன் அழைப்பைத் துண்டிக்க அன்புவோ பயந்து போனான்.

“ம்மா காயூக்கு வலி வந்துருச்சாம் அப்பாவும் ஆனந்தனும் ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்காங்க..”

“ஐயோ கடவுளே இன்னும் ஒரு வாரம் இருக்குனு சொன்னாங்களே..அன்பு சீக்கிரமா போ டா..பாவம் காயூ பயந்துருப்பா..”,என்றவர் கைக்கூப்பி கடவுளை வேண்ட ஆரம்பித்திருந்தார்.

இருவரும் சரியாய் ஒரே நேத்தில் மருத்துவமனையை அடைய அன்பு வந்தது தான் தாமதம் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள் காயத்ரி.

“அன்பு..”.

“தைரியாமா இரு டி வந்துட்டேன்.”

“காயூ கண்ணா ஒண்ணுமில்ல டா..சீக்கிரமே குழந்தை பிறந்திடும் தைரியமா இருக்கணும்”,என்ற ராகினி மருமகளின் தலையை தடவியவாறே அவளோடு ஓட்டமும் நடையுமாய் உள்ளே சென்றார்.

காயத்ரியை உள்ளே அனுப்பிவிட்டு ராகவன் அப்படியே நாற்காலியில் அமர்ந்துவிட அன்பு தம்பியை இறுகக் கட்டிக் கொண்டான்.

“நல்ல வேளை நீ வீட்டுக்கு வந்த இல்லைனா..”

“ஏன் தேவையில்லாம யோசிக்குற அண்ணே..டென்ஷன் ஆகாத..”

“என்னங்க..”

“ராகி பயந்தே போயிட்டேன் தெரியுமா..பிள்ளை முகம் வலியில் துடிச்சு போச்சு..கையும் ஓடல காலும் ஓடல..இன்னமும் பதட்டம் அடங்க மாட்டேங்குது.”

ஆனந்தன் அனைவருக்கும் அழைத்து விஷயத்தைக் கூறிக் கொண்டிருந்தான்.இரட்டை குழந்தை அதோடு தண்ணீர் குறைந்து விட்டதால் ஆப்ரேஷன் தான் செய்ய வேண்டும் என்று கூறி படிவங்களில் அன்புவிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அபி இன்பா காயத்ரியின் பெற்றோர் என அனைவரும் வந்து விட்டிருந்தனர்.ராகினி காயத்ரிக்கு தேவையான அனைத்தையும் ஏற்கனவே பையில் எடுத்து வைத்திருக்க இன்பா வரும் வழியில் அதையும் எடுத்து வந்திருந்தான்.

சில மணி நேரத்தில் கதவைத் திறந்து வெளியே வந்த செவிலியர் இருவர் கைகளிலும் இரு ரோஜா மொட்டுக்கள்.

அன்பு தன் மகனை வாங்கிக் கொள்ள ராகினி பேத்தியை வாங்கிக் கொண்டார்.

“பொண்ணு தான் முதல்ல வெளியே வந்தது”,என்று கூறி செவிலியர் சிரித்து நகர குழந்தைகளை பார்க்க இரு கண் போதவில்லை அன்புவிற்கு.

மகனை தன் மாமியாரின் கையில் கொடுக்க ராகினி குழந்தையை ராகவனிடம் கொடுத்தார்.

இரண்டும் அப்படியே அன்புவின் சாயலில் ராகவனுக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி.

“அப்படியே அன்புவை பார்த்த மாதிரியே இருக்கு இல்ல ராகி?”

“அண்ணா என் பொண்ணு தூங்கும் போது கூட மாப்பிள்ளையை தான நினைச்சுட்டு இருப்பா.அவரை மாதிரி இல்லைனால் தான் ஆச்சரியப்படணும்”,என்று காயத்ரியின் அன்னை கூற அனைவருமாய் சிரித்தனர்.

ஆதர்ஷினிக்கு இரு குட்டி பொம்மைகளைப் பார்த்து குதுகலம் தாளவில்லை.மெது மெதுவாய் விரலை வைத்து கன்னத்தைத் தொட்டு தொட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் காயத்ரியை வார்டிற்கு மாற்றியிருக்க அன்பு வேகமாய் சென்று அவள் கைப்பற்றி அழுந்த இதழ் பதித்தான்.

“இரண்டு பேரும் ஜாலியா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்துருக்கீங்க?”,என்றவள் மாமியாரை முறைக்க அவரோ பையிலிருந்த விபூதியை அவள் நெற்றியில் வைத்து விட்டபடி,

“உன் புள்ளைங்களுக்கும் உன்னை மாதிரியே அவசரம்.ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துருவாங்கனு எங்களுக்கு என்ன தெரியும்.”,என்ற சம்மந்தியைப் பார்த்து காயத்ரியின் தாயும் தந்தையும் சிரித்தனர்.

மற்ற அனைவருமாய் உள்ளே வர ராகவனையும் ஆனந்தனையும் பார்த்த காயத்ரிக்கு மனம் நெகிழ்ந்து போனது.

“ப்பா ரிலாக்ஸ் ஆனீங்களா..சாரி ரொம்ப படுத்திட்டேன்.”

“என்ன காயூ மா..அதெல்லாம் ஒண்ணுமில்ல உன்னையும் குழந்தைகளையும் பார்த்த அப்பறம் தான் உயிரே வந்தது.”,என்றவரைப் பார்த்து புன்னகைத்தவள் தன் தாய் தந்தையைப் பார்த்து ஆனந்தனை நோக்கி கை காட்டியபடி,

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான்..இனி இவன் நம்ம வீட்டு புள்ளை நல்ல கவனிச்சுக்கனும் சரியா”,என்றவளின் ஒருமை விழிப்பில் ஆனந்தனின் புன்னகை விரிந்தது.

“என்னை தம்பியா ஏத்துக்க உங்களுக்கு மூணு வருஷம் வேணுமா?”,என்றவன் சிரிக்க,

“முதல்ல இருந்தே தம்பி தான் அப்போ பாசமும் மரியாதையும் இருந்தது.இப்போ மரியாதை இல்ல பாசம் மட்டும் தான்..அளவுக்கு அதிகமா..”,என்றவளின் மறுபுறம் அமர்ந்தவளாய் அபிநயா,

“போதும் போதும் ரொம்ப ஓவரா தான் போகுது.”,என்று உதட்டைச் சுழிக்க. சற்று அதிகமாய் சிரிக்க நினைத்தவள் வலியில் முகம் சுருக்கினாள்.

“இரண்டு பிள்ளை பெத்து அரை நாள் கூட ஆகல என்ன கதை வேண்டியிருக்கு உனக்கு..அமைதியா தூங்கு காயூ”,என்று ராகினி கூற,ஏதோ கூற வந்த இன்பா சிரித்தபடி வாயை மூடிக் கொண்டான்.

அனைவருமாய் வெளியில் சென்ற பின்னும் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்த அன்புவை பார்த்தவள் வீட்டில் நடந்ததைக் கூறினாள்.

“எனக்கு தான் ஒரு மாதிரி ஆகிருச்சு அன்பு.அப்பாவும் ஆனந்தனும் ஒரு முக சுழிப்போ தயக்கமோ இல்லாம கூட்டிட்டு வந்தாங்க..”

“சாரி டி நான் உன் கூட இருந்துருக்கணும்..”

“ஹே இதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு.திடீர்னு நடக்குற விஷயத்துக்கு நீ என்ன பண்ணுவ..”

“இரண்டு பேரும் என்னை மாதிரியே இருக்காங்களாம்.எல்லாரும் சொன்னாங்க.”

“அது தான எனக்கும் வேணும்.”,என்றவளின் கரங்களை இன்னுமாய் அழுத்திக் கொண்டான்.

ஐந்து நாட்களில் வீட்டிற்கு வந்தவளை படியேற விடாமல் நாற்காலியில் அமர்த்தி இன்பாவும் ஆனந்தனுமாய் மாடியில் அவளது அறைக்குத் தூக்கிச் சென்றனர்.

காயத்ரியின் உடல் தேற வேண்டும் என்பதால் முப்பதாம் நாள் பெயர்சூட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

சமையலுக்கு மட்டும் ஆள் வைத்துவிட்டு காலை முழுவதும் ராகினி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இரவானால் அன்பு பார்த்துக் கொண்டான்.

ஒரு குழந்தை பிறந்தாலே எத்தனை பேர் இருந்தாலும் பத்தாது என்று இருக்கும்.இங்கோ இரண்டும் காயத்ரியை உண்டு இல்லை என்று ஆக்கியிருந்தனர்.

அன்புவிற்கே பாவமாய் போய்விட்டது காயத்ரியை நினைத்து.அத்தனை பேருக்கும் வஞ்சனை இல்லாமல் வேலை வைத்தனர் குழந்தைகள்.

“டேய் உன்னை மாதிரியே பிறக்கணும்னு எப்பவும் உன்னை பத்தி தான் டா அம்மாகிட்ட கதை சொல்ல சொல்லி கேட்டுட்டே இருப்பேன்.இவங்க என்ன இப்படி படுத்துறாங்க..”,என்றதை கேட்ட அன்பு விழுந்து விழுந்து சிரித்தான்.

“உனக்கு ஆனாலும் பேராசை தான் டி புருசன் பிள்ளை எல்லாம் சமத்தா இருந்தா அப்பறம் உன்னை ட்ரில் வாங்குறது யாரு?”

“இப்போவே முடியல அன்பு..நான் பாவம்.”

“கண்மணி வளர வளர சரி ஆகிடுவாங்க டி.நீ கிடைக்குற நேரமெல்லாம் ரெஸ்ட் எடுத்துக்கோ வேற என்ன பண்றது.”

அன்றும் நடு இரவில் இரண்டும் அடித் தொண்டையிலிருந்து அழுது கரைய இன்பா தனது அறையிலிருந்து அரைத் தூக்கத்தில் எழுந்து வந்தான்.

கதவை திறந்து மகளுடன் அன்பு சரியாய் வெளியே வர உள்ளே மகனோடு பாவமாய் அமர்ந்திருந்த காயத்ரியைப் பார்த்து இன்பா சிரித்தான்.

“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அண்ணி”,என்றவனைப் பார்த்து முறைத்தவள் அருகிலிருந்த டப்பாவைத் தூக்கி அவன் மீது எறிந்தாள்.

“ஒழுங்கா ஓடிரு கொலைவெறியில் இருக்கேன்.போக்கிரி படத்துல பிரகாஷ் ராஜுக்கு கொடுத்த பனிஷ்மெண்ட் மாதிரி கண்ணை மூடவே விட மாட்றாங்க டா இன்பா..”,என்றவள் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தாள்.

“நானும் பாவமேனு தான் வந்தேன் ஆனால் இரண்டும் சைசுக்கும் தொண்டைக்கும் சமந்தமே இல்லாம கத்துறதை பார்த்து சிரிக்காம இருக்க முடில அண்ணி..”

“அதுவாவது பரவால்ல உன் மகனை கூட விடு பொண்ணு இருக்கா பாரு அப்படியே என்னை மாதிரி அவ தலை முடியை அவளே பிடிச்சுட்டு கத்து கத்துனு கத்துறா..தட் சொந்த செலவில் எதோ வைச்சுக்குறது மாதிரி.”,என்றதைக் கேட்டு அன்புவுமே சிரித்தான்.

“தெரிஞ்சா சரி தான் டி”,என்றவன் பால்கனிக்கு போய்விட இன்பா காயத்ரியிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.

அப்படி இப்படியாய் முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழா சிறப்பாய் நடந்தது.ஐயர் குழந்தைகளின் பெயரைக் கேட்க அன்பு காயத்ரியைப் பார்த்து புன்னகைத்த வண்ணம்,

“ராகவன் @வித்யூத், ராகினி @ வித்யா”,என்று கூறி பெற்றவர்களைப் பார்க்க மருமகளின் வேலை என்பதை உணர்ந்தவர்களாய் அவளையே பார்த்திருந்தனர்.

“வித்யூத் வித்யா இந்த வீட்டு மருமகளுங்க கூப்பிட மட்டும் தான்.மத்தபடி அவங்க பேர் உங்க பேர் தான்.”,என்றவளை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் புன்னகைத்து பார்த்திருந்தனர்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,

ஏழு மாத வயிறோடு தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த தேன்மொழிக்கு உணவை வாயில் திணித்தாள் அபிநயா.

“தேனு மெஹந்தி போட இப்போ வந்துடுவாங்க சீக்கிரம் சாப்பிடு”,என்றபடி தன் மகனைத் தேடினாள்.

“உங்க புள்ளைங்க என்னைக்கு நீங்க இருக்குற இடத்தில் இருந்துருக்காங்க அண்ணி”,என்றவள் சிரிக்க அபிநயாவுமே சிரித்தாள்.

படிகளில் சலசலப்பு கேட்க இருவருமாய் சிரித்த வண்ணம் அங்கே பார்த்தனர்.காயத்ரியோடு குழந்தைகள் கூட்டணி கீழேயிறங்கி வேகமாய் வாசலை நோக்கி ஓடியது.

“இன்னைக்கு நோ ரவுண்ட்..வேலை இருக்கு டி ஆது..வித்து நில்லு..”

“எதுக்கு கா எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க”,என்ற அபி சிரிக்க அவள் கையில் வைத்திருந்த உணவை தன் வாயில் வாங்கிக் கொண்டவளாய்,

“கமிஷனர் ஆபீஸில் மீட்டிங் இருக்கு இதுங்க வர வர என்னை ரொம்ப படுத்துதுங்க..”,என்றபடி ஷுவை மாட்டிவிட்டு ஓடினாள் காயத்ரி.

அபியின் மகள் மகனோடு காயத்ரியின் பிள்ளைகளுக்கும் காலையில் அவளுடன் வண்டியில் தெரு முனை வரை ஒரு சுற்று அடித்தே ஆக வேண்டும்.அன்பு இன்பா ஆனந்தன் யார் கூப்பிட்டாலும் வராத வாண்டுகளுக்கு காயத்ரி வண்டியில் போவதில் ஒரு தனி சுகம்.

வாசலில் போய் நின்ற அபி சுற்றிவிட்டு வந்து வண்டியை நிறுத்திய காயத்ரியிடமிருந்து நால்வரையும் இறக்கி விட்டாள்.

“நாளான்னைக்கு வீட்டில் கல்யாணம் நியாபகம் இருக்கா?”

“இதைக் கேட்டா கமிஷ்னர் உனக்கா கல்யாணம்ங்கிறார் டாக்டரம்மா..”,என்றவள் சிரிக்க அபிநயா முறைத்தாள்.

“சரி சரி மதியானம் வந்துருவேன் அப்பறம் மூணு நாள் லீவ் தான் ஓகே..நேரமாச்சு அபிக்குட்டி பை..”,என்றவள் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்திருந்தாள்.

மணமக்களான இன்பாவும் கிருத்திகாவும் நடுவே அமர்ந்திருக்க கிருத்திகா பக்கத்தில் ராகினியும் இன்பாவின் அருகில் ராகவனும் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்குப் பின் அன்பு காயத்ரி ஆனந்தன் அபிநயா ஹரிஷ் தேன்மொழி நிற்க குழந்தைகள் அனைத்தும் மணமக்களின் அருகில் நின்றிருக்க அந்த அழகிய தருணம் மிக அழகான புகைப்படமாய் அந்த ஆனந்த வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்க காத்திருந்தது.

இரவின் அமைதியில் தெருவே அடங்கியிருக்க காயத்ரியும் அன்புவுமாய் சுவரேறி குதித்து தங்களின் ஐஸ்கீரீம் பயணத்தைத் தொடங்கினர்.

“உன் பொண்ணுகிட்ட என்னைக்கு மாட்ட போறேன்னு தெரியல டா..ஏற்கனவே எங்கப்பாவை ரொம்ப உரசாதனு ரூல் எல்லாம் போடுறா.”

“உன்னை எப்படி வெறுப்பேத்தணும்னு நல்லா தெரிஞ்சு வைச்சுருக்கா டி..”,என்ற அன்பு சிரிக்க பைக்கில் அமர்ந்தவள் கணவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“கண்மணி..”

“இந்த வாழ்க்கை எல்லாருக்குமே ஒரு ஒரு விதத்தில் வரம் தான் இல்லை அன்பு..”

“ம்ம்…”

“கொடுக்கப்படுற அன்பு மதிக்கப்பட்டுடாலே எந்த பிரச்சனையும் இல்ல.அன்பு பாசத்தை எல்லாம் ஓரங்கட்டிட்டு கோபம் பொறாமை ஈகோ இதெல்லாத்தையும் பிடிச்சுகிட்டு வாழ்க்கையை கெடுத்துக்குறாங்க டா..”

“ம்ம்..”

“எவ்வளவு ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்கேன்”,என்றவள் அவன் முதுகில் அடிக்க சிரித்தவறே அவளது கரத்தை எடுத்து இதழ் பதித்து விடுவித்தான்.

“உன்னை மாதிரி எல்லா மருமகளும் இல்ல..அதேநேரம் உன்னை போல இருக்குற எல்லாருக்கும் உனக்கு கிடைச்ச மாதிரி உறவுகள் அமையுறது இல்ல.

என் கண்மணி எனக்கு கிடைச்ச வரம்னு நான் சொல்லுவேன்.என் அன்புவும் அவன் குடும்பமும் கிடைச்சது தான் வரம்னு நீ சொல்லுவ.சிலருக்கு எங்களைப் பார்த்து பொறாமையா இருக்கும்.சிலருக்கு உன்னைப் பார்த்தால் பொறாமையா இருக்கும்.

ஆனால் உண்மையில் எல்லாரை சுத்தியும் ஒரு காயத்ரி கண்டிப்பா இருப்பா அவளை பிடிச்சு புரிஞ்சு காதலிக்க பழகிட்டாங்கனு வை எல்லாமே அதுவாவே கண்டிப்பா மாறும்.

இந்த அன்புச்செல்வன் அளவுக்கு இதை புரிஞ்சுக்குற டேலெண்ட் யாருக்கும் இல்லை டி பொண்டாட்டி”,என்றவனின் மீதான பித்து இந்தப் பிறவியில் தீரப் போவதில்லை என்பதை தெளிவாய் உணர்ந்து கொண்டாள் அன்புவின் அன்பான காயத்ரி.

“People never forget how you make them feel”

தீரா காதலோடு உன்னுடன் ஒரு நாள்

இந்த வாழ்வு மொத்ததுக்குமான

என் ஒரே ஆசை

பேராசை!!

பேராசை தவறென்றால் 

திருத்திவிட வந்துவிடு

முழுதாய் மாறிப்போவேன்

ஆசை துறந்த துறவியென

உன் அன்பின் பிடியில்

************முற்றும்*************

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

srichitra July 9, 2026 - 10:42 am

Very nice story ma. Ethanai முறை படித்தாலும் alukkadhu

Thank you ka..

ஸ்ரீ July 9, 2026 - 2:03 pm

😍😍😍

Kavi Natarajan July 10, 2026 - 4:42 am

Very nice story ma

Thank you ka..

ஸ்ரீ July 10, 2026 - 4:45 am

😍😍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode