103
“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
விளக்கம்
“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
விளக்கம்
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.”
வீட்டிற்கு வந்ததும் அனைவருமாய் காயத்ரியை அங்கேயே அமர்த்திக் கொள்ள அன்பு புன்னகையோடு கடைக்குக் கிளம்பியிருந்தான்.
“ப்பா நிஜமாவே ஒண்ணுமில்ல பா..”
“நீ கொஞ்சம் அமைதியா உட்காறியா..”,என்றபடி ராகினி மருமகளுக்கு திருஷ்டி சுத்த ஆரம்பித்திருந்தார்.
“என்ன அண்ணி காலையிலேயே ஒரே அக்க்ஷன் ஸீக்குவன்ஸாமே..”,என்றபடி இன்பா அவளருகில் அமர தேன்மொழி அவளது கையைப் பிடித்துத் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரியான கும்பகர்ணன் டா நீங்க..ஒருத்தி கத்தி குத்தெல்லாம் வாங்கிருக்கேன் இரண்டும் தூக்கத்துல இருந்து வரவே இல்ல..”,என்றவள் தேனுவின் புறம் திரும்பி வடிவேலு பாணியில்,
“என்ன தெரிகிறது??”,என்று கேட்க ஆனந்தனும் இன்பாவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்னங்க சிரிச்சுட்டு இருக்கீங்க?”
“காமெடி பண்ணதே அவங்க தான்..என்ன ஏன் டி திட்டுற..”,என்றவுடன் அபிநயா காயத்ரியை முறைத்தாள்.
“அக்கா கொஞ்சம் கூட பயமே இல்லக்கா உங்களுக்கு..”
“நானே பேஷண்ட் என்ன ஏன் அபி திட்ற..”,என்று ஆனந்தன் போலவே கேட்க பெரியவர்களும் சேர்ந்து முறைத்தனர்.
“சரி வயிறு லைட்டா பசிக்குது..எல்லாரும் முறைக்காம சமத்தா என்னை சாப்பிட விட்டீங்கனா..அப்பறம் நாள் மொத்தம் கூட என்னை பார்த்துட்டே இருங்களேன்.”,என்றதும் ராகினி சமையலறைக்குள் செல்ல அபிநயாவும் அவரோடு சென்றாள்.
“ஏன் டா மருமகளே அவனை என்ன பண்ணாங்க?”
“ஏற்கனவே முடிவு பண்ணதுபடி தூக்கு தான் பா..”
“அப்பறம் ஏன் நீ அங்க போயிட்டு வந்த?”
“அவனைப் பார்த்து பேசுறதுக்கு தான்.”
“என்ன??!”
“வாழும்போது எப்படி வாழ்ந்தாலும் சாகும் போதாவது நிம்மதியா சாகணும் பா..அவனோட தப்பை உணருவானானு எனக்குத் தெரியல அட்லீஸ்ட் என் மேல இருக்குற கோவத்தையாவது குறைச்சுக்கோனு சொல்லிட்டு வந்தேன்.”
“தேவையில்லாத வேலை அண்ணி..”
“கரெக்ட் தான் இருந்தாலும் நம்ம மனசாட்சி சிலதை எல்லாம் கேட்காதே”,என்றவளின் வாயருகில் ஒரு வாய் இட்லியை நீட்டியிருந்தாள் அபிநயா.
“பரவால்ல அபி ஸ்பூன்ல சாப்பிட்டுக்குவேன் குடு..”
“ஒண்ணும் தேவையில்லை சாப்பிடுங்க..”,என்றபடி ஊட்டிவிட அத்தனை பேருக்கும் அந்த காட்சி அப்படி ஒரு நிறைவாய் இருந்தது.
காயத்ரி அபிநயாவைப் போன்ற முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அழகு காட்ட தட்டை வைத்து அவளை இடித்துச் சிரித்தாள் அபிநயா.
“ம்மா உங்களுக்கு ஏத்த சின்ன மருமக இல்ல..”
“பெருசும் கொஞ்சம் நல்லவ தான் வாய் தான் ரொம்ப ஜாஸ்தி..”,என்றபடி பூஜையறையில் இருந்து வந்தவர் அவளுக்கு விபூதி பூசிவிட்டார்.
அவரின் கலங்கிய கண்களை புடவையால் துடைத்துக் கொண்டவரை ராகவன் ஆதரவாய் தோள் தட்டிக் கொடுத்தார்.
“ராகி ரொம்ப பயந்துட்டா காயூ..”
“ம்மா..இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன்.ப்ளீஸ்..அதை மறந்துருங்களேன்..”
“என்னவோ இப்போ நினைச்சாலும் படபடனு வருது காயூ..நான் கும்பிடுற கடவுள் எப்பவும் என் பிள்ளைங்களுக்கு துணை இருக்கணும்.”,எனும் போதே காயத்ரியின் கைப்பேசி அழைப்பு விடுக்க எடுத்தவள் தாய் என்பதைப் பார்த்ததும்,
“எங்கம்மா தான் நீங்களே கேளுங்க அவங்க பேசுறதை..”,என்றபடி ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.
“சொல்லு மா..”
“ஏன் டி காலங்காத்தாலேயே பிரச்சனையை இழுத்து வைச்சியாமே..மாப்பிள்ளை குரலே சரியில்ல..”
“நினைச்சேன்..சொல்லிருப்பான்னு..ஒண்ணுமில்ல மா.. சின்ன அடி தான்..”
“ம்ம் இப்படியே பண்ணிட்டு இரு சம்மந்தி அம்மாகிட்ட சொல்லி சோறு போடாதீங்கனு சொல்றேன்..”
“ம்மா..பெத்த தாயா நீயெல்லாம்?”
“அதே டவுட் தான் எனக்கும்..என் வயித்துல இந்த ஜாக்கி சான் எப்படி பொறந்ததுனு.சும்மாவே பயம் கிடையாது..இப்போ ஓவர் லவ்ஸ்ல ரொம்ப கேர்லெஸா இருக்கியா?”
“ம்மா மானம் போகுது வை மா போனை..”
“அப்பாகிட்ட சொன்னா சிங்ககுட்டி எலிக்குட்டினு புகழ்ச்சி வேற..மறுபடியும் எங்கேயாவது போய் பிரச்சனையை கிளப்பிட்டு வராத புரியுதா..என் அன்பு புள்ளை பாவம்..”
“ம்ம் எல்லாம் என் நேரம் சரி வைக்கவா..”
“உடம்பை பாத்துக்கோடி”,அழைப்பு துண்டிக்கப்பட்டதும் சிறியவர்கள் சிரித்த சிரிப்பில் ராகினியே சிரித்து விட்டிருந்தார்.
“அண்ணி அத்தை பயங்கரம்..”
“ஹப்பாடா ம்மா..சிரிச்சுட்டீங்களா..இதுக்காக ஒரு டிஎஸ்பி மானத்தை காத்துல பறக்க விட வேண்டியதா இருக்கு..”,என்றவளைப் பார்த்தவர் கன்னம் கிள்ளிச் சென்றார்.
“என்னக்கா உங்களை விட பெரியம்மா மோசம்..”
“இதாவது பரவால்ல ஒருதடவை கால் ப்ராக்சராகி கிடந்தப்போ ஏதோ ஒரு ஷோ பார்த்துட்டு இருந்தவங்க சிரிச்சுட்டே கால்லயே ஒரே தட்டு…எவ்வளவு கடுப்பாயிருப்பேன்னு யோசிச்சு பாரு அபி.”,என்றவளின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்படி இப்படியாய் நாட்கள் மாதங்களாய் கடந்திருக்க இன்பாவும் தேன்மொழியும் வேலைக்குச் சேர்ந்திருந்தனர்.இவரும் வேறு வேறு அலுவலகம் எனிலும் பக்கத்திலேயே இருந்தது.
முதல் நாள் வேலைக்குக் கிளம்பியவள் காயத்ரியை இறுகக் கட்டிக் கொண்டாள்.
“ஓய் என்னடி ஆச்சு?!”
“டென்ஷனா இருக்கு அண்ணி..”
“இதுவும் ஒரு பேஸ் ஆப் லைப் தேனு..என்ஜாய் பண்ணு..முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.சீனியர்ஸ்கிட்ட திட்டு எல்லாம் வாங்க வேண்டியிருக்கும்.பட் அதெல்லாம் பெருசா எடுத்துக்காம வேலையை நல்லா கத்துக்கணும் என்ன..அப்பறம் சில பல ப்ரோபோசல்ஸ் கூட வரலாம்..”
“அண்ணி…”
“உண்மையை தான சொல்றேன்..பட் பக்குவமா ஹேண்டில் பண்ணணும்..எல்லாத்துக்கும் மேல உனக்காக இந்த குடும்பமே இருக்கு சப்போர்ட்டுக்கு..சரியா..”
“தேங்க்ஸ் அண்ணி..”
“எனக்கெல்லாம் அட்வைஸ் இல்லையா அண்ணி?”
“உனக்கு தான நல்லா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு மேனேஜர் வரட்டும்னு கண்டிப்பா வேண்டிக்குறேன் டா இன்பா..”,என்றவளைப் பார்த்து முறைக்க நினைத்தவன் சிரித்து கை குலுக்கிச் சென்றான்.
அபிக்கு ஏழாம் மாதம் வரவிருக்க ஆனந்தனிடம் அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.
“என்னைத் துரத்தி விட அவ்வளவு ஆசையா உங்களுக்கு?”
“ஏன் அபி இப்படியெல்லாம் சொல்ற..எல்லாருக்கும் பண்ற வழக்கம் இதுதான?!”
“எனக்கு இப்போ வேண்டாம் ஒன்பதாவது மாசமே போட்டுக்குறேன்..ப்ளீஸ்ங்க..இல்லைனா இப்போவே கூட்டிட்டு போயிடுவாங்க..நான் இங்கேயே இருக்கேனே..”
“என்ன டி என்னாச்சு உனக்கு?”
“நான் இங்க தான் ரொம்பவே சந்தோஷமாக இருக்கேன்..நீங்க பேசுவீங்களா மாட்டீங்களா?இல்லைனா நான் அக்காகிட்ட பேசுறேன்”,என்றவள் காயத்ரியின் அறைக் கதவைத் தட்டி நின்றாள்.
கதவைத் திறந்த அன்பு புன்னைக்கத்தவாறே,”வா டா அபி..”
“அத்தான் அக்கா எங்க?”
“சொல்லு டாக்டரம்மா..”
“அக்கா உங்க தம்பியை என்னனு கேளுங்க…என் பேச்சை கேட்கவே மாட்றாரு..”
“என்ன டா ஆனந்தா என்னாச்சு?”
“அண்ணே நீ வேற..”,என்றவன் விஷயத்தைக் கூற காயத்ரியும் அன்புச் செல்வனும் சிரித்தனர்.
“க்கா ப்ளீஸ் கா..”
“அபி டேட் சொன்னதே உங்க எம்டன் குடும்பம் தான்..இதில் யாரு என்னத்தை சொல்றது?”
“அத்தான்..நீங்களாவது சொல்லுங்க..”
“பாவம்டா அபி இவ்வளவு சொல்றா இல்ல..உன் மாமனார்கிட்ட பேசு..”
“அதுக்கு நான் நடுரோட்ல நின்னு டான்ஸ் கூட ஆடலாம்..”,என்றதும் அபி ஏகத்துக்கும் அவனை முறைத்து வைக்க காயத்ரி சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சரி நீ வருத்தப்படாத அபி நான் அப்பாவை பேச சொல்றேன்..”
“தேங்க்ஸ் அத்தான்..உங்க ரெண்டு பேரோடையும் நான் பேச போறதில்ல..”,என்றவளைப் பார்த்து தலையை இடவலமாய் அசைத்த வண்ணம் ஆனந்தன் அவள் பின்னே சென்றான்.
“நல்ல.. பொண்ணு இந்த அபி..”,என்ற அன்பு சிரிக்க காயத்ரிக்கு தான் அவளை நினைத்து கவலையாய் இருந்தது.
“பாவம் அன்பு..இந்த அளவுக்கா கட்டுப்படுத்தி வைப்பாங்க..எல்லாரும் அம்மா அப்பாவை தான் இந்த நேரத்துல தேடுவாங்க..இவளைப் பாரு..என்னவோ இந்த மனுஷங்களை எல்லாம் என்ன தான் பண்றதோ..”
ராகவனும் ராகினியும் அபிநயாவின் வீட்டில் பேச வெகுவாய் யோசித்தனர்.அன்புவின் வற்புறுத்தலிலும் அபிநயாவின் வாடிய முகத்திலும் வேறு வழியின்றி ராகவன் பேசி ஆனந்தனுக்கு இப்போது அனுப்ப விருப்பமில்லை என்று கூறி ஒன்பதாவது மாதத்திற்கு சம்மதம் வாங்கியிருந்தார்.
தேன்மொழி அலுவலகத்திற்குள் நுழைந்து ஐடி கார்ட்டை வைத்து அக்ஸஸ் செய்ய அந்தக் கதவு தான் திறந்த பாடில்லை..
மீண்டும் மீண்டும் வைத்துப் பார்த்தவளுக்கு லேசாய் பதட்டமாகிவிட சரியாய் அந்த நேரத்தில் அவளின் பின்புறம் குரல் கேட்டது.
“எக்ஸ்க்யூஸ் மி?”
“?!!”
“என்னாச்சு?”
“நியூ ஜாய்னி அக்செஸ் ஒர்க் ஆகல..”
“ஓ ஒன் மினிட்”,என்றவன் தன் கார்ட்டை பயன்படுத்தி கதவைத் திறந்து விட்டான்.
“தேங்க் யூ சோ மச்..”
“நோ இஷுஸ்..அந்த பக்கம் அட்மின் டிபார்ட்மெணேட் இருக்கு..போய் அவங்ககிட்ட சொன்னா அக்செஸ் எனேபிள் பண்ணுவாங்க..”
“ஓ ஓகே நான் பாக்குறேன்..தேங்க்ஸ் அகெயின்.”,என்றவளுக்கு பதட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.
அங்கு வேலையை முடித்துக் கொண்டு தனக்கான தளத்திற்குச் சென்றவள் விசாரித்து அவளது அசோசியேட் மேனேஜரைச் சந்திக்கச் சென்றாள்.
“ஹாய்..இங்க ஹரிஷ் சார் ப்ளேஸ்?”
“அந்த கார்னர் கேபின்க்கு ஆப்போசிட்ல இருப்பார்..”
“தேங்க் யூ..”,என்றவள் அவர்கள் கூறிய இடத்திற்குச் செல்ல அங்கு அவளுக்கு உதவி செய்தவன் தான் அமர்ந்திருந்தான்.
“ஹாய் சார் ஐ அம் தேன்மொழி..”
“கால் மீ ஹரிஷ்..வெல்கம் ஆன் போர்ட்.அக்ஸெஸ் பிரச்சனை சால்வ் ஆச்சா?”
“யெஸ் ஹரிஷ்..”
“குட்..ஓகே அதுதான் உங்க டேபிள்..உங்க சீட் பக்கத்துல கவிதா இருப்பாங்க அவங்ககிட்ட மத்த டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக்கோங்க..ஈவ்னிங் ஒரு மீட்டிங் இருக்கு அப்போ டீம்க்கு உங்களை இன்ட்ரோ கொடுக்குறேன்.”
“ஓகே ஹரிஷ்..தேங்க் யூ..”,என்றவளுக்கு தன்னிருக்கையில் அமர்ந்தபோது அப்படியாய் ஒரு மகிழ்ச்சி.
“ஹே ஹாய் நீங்க தான் தேன்மொழியா?”
“ம்ம் ஆமா நீங்க கவிதா?”
“ம்ம் நானே..நானும் இந்த இயர் பாஸ்ட் அவுட் தான்.லாஸ்ட் மன்த் ஜாயின் பண்ணேன்..சோ நாம ப்ரெண்ட்ஸ்..”,என்றவள் கை குலுக்க தேன்மொழிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!