வரம்-32

by ஸ்ரீ
2 comments 307 views
A+A-
Reset

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

விளக்கம்


இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.
உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது.

தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

மாதங்கள் உருண்டோட விடிந்தால் தேன்மொழி திருமணம்.மேடிட்ட வயிறோடு உறங்கும் மனைவியைப் பார்த்தவாறே படுத்திருந்தான் அன்புச்செல்வன்.

எங்கிருந்து எப்படி எனக்காக அந்த கடவுள் இவளை கொண்டு வந்து சேர்த்தான் என கோடி முறையாய் நினைத்துக் கொண்டான்.

பணம் பதவி அழகு இப்படி எதுவுமே தன்னிடமிருந்து தேவைப்படாமல் தன் மனம் மட்டுமே முழுதாய் வேண்டி நிற்கும் இவள் வாழ்வின் வரமன்றி வேறென்ன!

இந்த நான்கு மாதங்களில் மசக்கை சுமை குறைந்த நாளிலிருந்து மீண்டுமாய் வீட்டில் சுறுசுறுப்பாய் வளைய வர ஆரம்பித்திருந்தாள்.

வேலைக்கு காரில் சென்று வர வீட்டிற்கு வந்தால் ஒரு புறம் ஆது பாப்பா மறுபுறம் தேன்மொழி.

“காய்ம்மா காய்ம்மா..”,இந்த அழைப்பு இன்றி நொடிப்பொழுது இருக்காது வீடு.

“காய்ம்மா அம்மா அடிச்சா..

காய்ம்மா நீ மம் மம் தா..

காய்ம்மா பாப்பா..”

இப்படியாய் ஆதுவிற்கு மொத்தமும் காயூம்மா தான்.தேன்மொழி தன் ரவிக்கை தைப்பது தொடங்கி அத்தனை பயம் கோபம் வருத்தம் அனைத்தும் கொட்டுவது அவளது காயூ அண்ணியிடம் தான்.

பத்தாதற்கு அபிநயா,காயத்ரியை ஒரு துரும்பைக் கூட அசைக்க விடுவதில்லை.சமையலறைக்குள் வரக் கூடாது என்பது அவளது கட்டளை.

ராகினியைப் பற்றி கேட்கவும் வேண்டாம் காயத்ரியின் தாயை விட ஒருபடி அதிகமாகவே கவனித்துக் கொள்கிறார்.வார இறுதிகளில் மட்டும் காயத்ரியின் வீட்டிற்கு அதுவும் அன்புவும் அவளுமாய் போய் வருகிறார்கள்.

அத்தனை பேரும் அவளிடம் காட்டும் அன்பு பெரிதெனில் அவள் ஒருத்தி அத்தனை பேருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அளப்பரியது.

அன்பு என்ற ஒருவனின் கைப்பிடித்து இந்த குடும்பத்திற்கு வந்தவள் மொத்தக் குடும்பத்தையும் சுகமாய் தோளில் சுமந்து கொண்டிருக்கிறாள்.

இன்று காலை கூட தேன்மொழி அப்படி ஒரு அழுகை காயத்ரியும் அபிநயாவுமாய் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.

ராகினியும் ராகவனும் கண்கலங்கி அமர்ந்திருக்க அண்ணன்களை எல்லாம் அவள் கண்டு கொள்வதாகக் கூட இல்லை.இரண்டு அண்ணிகளும் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்த அதைப் பார்த்த ஆண்களுக்கோ கண்கள் அதுவாய் கலங்கியது.

இப்படி அனைத்தையும் இயல்பாய் அழகாய் மாற்றி வைத்துக் கொண்டு எதைப் பற்றிய சிந்தனையும் இன்றி அன்பு அன்பு என குழந்தையாய் சுற்றி வருபவளைப் பார்க்கத் தெவிட்டிவிடுமா என்ன!

“அன்பு ஏன் டா அதுகுள்ள எழுந்துட்ட..”

“சும்மா தான் தூக்கம் வரல சரி நீ எழுந்துருவியேனு அப்படியே படுத்துருக்கேன்.”

“தேனு நினைச்சு ஃபீல் பண்றியா என்ன?”

“ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“இன்பா தான் டா ரொம்ப அழுதுட்டான் தேன் அழறதை பாத்து.இவ இன்னும் குழந்தையாவே இருக்கா..”

“ம்ம்..”

“ஹரிஷ் நிலைமை தான் பாவம்”,என்றவள் சிரிக்க அவளது கன்னம் கிள்ளி நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

“லவ் யூ பொண்டாட்டி..”

“லவ் யூ ஃபார் எவர் புருஷா..என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல டி..சும்மா..சரி வா ரெடி ஆகலாம் நான் வெந்நீர் போட்டுட்டு கூப்பிடுறேன் அதுவரை படுத்துரு.”,என்றவன் எழுந்து குளித்து தயாராகி காயத்ரி தயாராக காத்திருந்தான்.

அழகிய நாவல் பழ நிற பட்டுடுத்தி அளவான நகைகளோடு தலையில் மல்லியை சூடிக் கொண்டிருந்த மனைவியை பின்னிருந்து வயிற்றோடு கட்டிக் கொண்டான்.

“வழக்கம் போல அழகா இருக்க போலீஸம்மா..”

“என் புருஷனை விட கொஞ்சம் கம்மி தான்.”,என்றவள் பக்கவாட்டில் திரும்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

மேடையில் ராகவனும் ராகினியும் தேன்மொழிக்கு பக்கவாட்டில் நிற்க மணமக்களுக்கு பின்புறம் அன்பு காயத்ரி ஆனந்தன் அபிநயாவைத் தொடர்ந்து இன்பா நிற்க தன் தோழி ஒருத்திக்கு தேன்மொழி கண்காட்ட மற்றவர்கள் கண் உறுத்தாத வண்ணம் கிருத்திகாவை இன்பரசனுக்கு அருகில் நிற்க வைத்துக் கொண்டனர்.

தேன்மொழி மெதுவாய் திரும்பி இன்பாவைப் பார்க்க அவன் கலங்கிய கண்களோடு இதழ் விரித்த புன்னகையை சுமந்து நின்றான்.

ராகினி ராகவனை அர்த்தமுள்ள பார்வை பார்க்க காயத்ரி குனிந்த தலை நிமிரவே இல்லை.பெரிவர்கள் அவளைப் பார்த்து புன்னகைக்க அன்பு என்னவென்பதாய் ஏறிட்டான்.

அத்தனை பேரின் ஆசிகளோடு ஹரிஷ் தேன்மொழியின் கழுத்தில் தாலியைக் கட்டியிருந்தான்.குடும்பத்தின் செல்ல மகள் இப்போது மற்றொரு குடும்பத்தின் மருமகளாய் போகிறாள் என்ற சந்தோஷம் அனைவரின் கண்களிலும் பளபளத்தது.

சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்கள் ஹரிஷ் வீட்டிற்கு கிளம்ப அண்ணன்களின் கைகளுக்குள் சிறு பறவையாய் நின்று அழுதவளை ஆறுதல்படுத்தக் கூட தோன்றாமல் நின்றிருந்தனர் அனைவரும்.

“தேனு நல்ல பிள்ளையா இருக்கணும்.”

“எல்லாரையும் அணுசரிச்சு போணும் டி.”

“மாப்பிள்ளையை கண்கலங்காம பார்த்துக்கணும் தேனு”,என்ற இன்பாவை அடித்தவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.கருவறையிலிருந்து தொடரும் சொந்தமாயிற்றே.

“இன்பா…”

“அழாத டி இங்க தான இருக்க போற..நினைச்சா பார்த்துக்க போறோம்.மாப்பிள்ளை பாவம் பயந்து போய் நிக்குறாரு பாரு.”

“அண்ணே பாருணே கிண்டல் பண்ணிட்டே இருக்கான்.”

அடுத்ததாய் அன்னை தந்தையிடம் வந்தவளுக்கு அழுகை இன்னுமாய் அதிகரித்தது.அபியும் காயத்ரியும் கலங்கிய விழிகளோடு புன்னைகையாய் அவளைப் பார்க்க,

“நீங்க இரண்டு பேரும் தான் ஏதேதோ சொல்லி மயக்கி இங்க வரை கொண்டு வந்துட்டீங்க..”,என்றவள் மூக்கை உறிஞ்சி நிற்க காயத்ரியோ,

“அடிப்பாவி..அவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணும் நீ என் தம்பி வீட்டுக்கு போக வேணாம் வா போலாம் நம்ம வீட்டுக்கு”,என்றதும் அசடு வழிந்து சிரித்தவள் இரு அண்ணிகளையும் இறுகக் கட்டிக் கொண்டாள்.

காயத்ரியின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து விடுவித்து அவளது வயிற்றில் கை வைத்த வண்ணம்,

“உள்ளே இருக்குறவங்களும் சரி இந்த ஆது பாப்பாவும் சரி எனக்கு அப்பறம் தான்.எத்தனை வருசம் ஆனாலும் உங்களுக்கு நான் தான் பர்ஸ்ட் சரியா?”,இதைக் கேட்டு எத்தனை தடுத்தும் காயத்ரியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆமோதிப்பாய் தலையசைத்தவள் தேன்மொழியின் கண்களை அழுந்தத் துடைத்து ஹரிஷிடம் லேசாய் தள்ளிவிட்டு,

“தம்பி இனியாவது நாங்க எல்லாம் கொஞ்சம் ஜாலியா இருப்போம்.இந்த பொண்ணை வீட்டுப்பக்கம் அனுப்பாதீங்க பெரிய வாட்டர் டேங்க் கண்ணுக்குள்ளே வைச்சுருக்கா..பாருங்க எல்லாரையும் எப்படி படுத்துறானு”,என்றவளுக்கு அழகு காட்டி ஆது பாப்பாவிற்கு முத்தமிட்டு அபிநயாவை கொஞ்சி என ஒரு அலப்பறையை பண்ணிய பிறகே ஹரிஷோடு காரில் ஏறினாள்.

“ஆனாலும் ஒரே ஊரில் ஒரு மணி நேர தூரத்தில் இருக்குற வீட்டுக்கு இதெல்லாம் ரொம்ப அநியாயமா இல்லையா உனக்கு ஹனி?”

“ம்ம்ம்??”

“சரி சரி நோ டென்ஷன்”,என்று சிரித்தவன் ஆதரவாய் அவள் தோள் சாய்த்து கொள்ளவும் மறக்கவில்லை.வீட்டிற்கு வந்து உடை மாற்றிய வண்ணம் காயத்ரி எதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்க அன்பு லேசாய் அவளருகில் சென்று காதை வைத்தவாறு அவளைப் பார்க்க சத்தமாகவே பாடினாள்.

அத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம்

சட்டென அவள் இதழ்களின் மேல் விரல் வைத்து தடுத்தவன் அடுத்த வரியை அவனே பாடினான்.

போதும் இது போதும் உந்தன் அன்புக்கு ஈடில்லை ஏதும்.”

“உனக்கே உனக்குனு பொருத்தமா இருக்கு பார்த்தியா..”

“அன்பு..”

“நிஜமா டி அம்மா மறக்காம உனக்கும் அபிக்கும் சுத்தி போடணும்னு சொன்னாங்க”,என்று சிரித்தவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

அடுத்த மூன்று மாதங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடியிருக்க அன்றைய தினம் தேன்மொழிக்கு சீர் வைப்பதற்காக புடவை எடுக்க ராகினி அன்புச் செல்வனோடு கடைக்குச் சென்றிருந்தார்.

மற்றவர்கள் வேலைக்குச் சென்றிருக்க அபி குழந்தையோடு தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.ராகவன் காயத்ரிக்கு துணையாய் வீட்டில் இருந்தார்.பானை வயிற்றோடு அசைந்து அசைந்து அமர்ந்திருந்த மருமகளுக்கு சிறிய முக்காலியை எடுத்து கால் அருகில் போட்டபடி எதிர் இருக்கையில் அமர்ந்தார் ராகவன்.

“ப்பா நீங்க ஏன் பா இதெல்லாம் எடுத்துட்டு வரீங்க?”

“இருக்கட்டும் மா கால் வீக்கமா இருக்கு பாரு தொங்க போட்டு உட்காராத..”

“தேங்க்ஸ் பா..”,என்றவளை பார்த்து லேசாய் முறைத்தார்.

“இல்ல இதுக்கு இல்ல..அப்பானு நான் கூப்பிடுறதுக்கு ஏத்த மாதிரி அப்பாவாவே இருக்குறதுக்கு”,என்றவள் புன்னகைத்தாள்.

“ஏன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற மருமகளே என்னைக்கும் நீ என் பொண்ணு தான்.”

“அன்புக்கு அப்படியே உங்க குணம் தான் இல்ல..”

“…”

“பொறுமை நிதானம் பொறுப்பு எல்லாம்..”

“இன்னைக்கு உனக்கு நான் தான் கிடைச்சேனா..”

“ப்பா..”

“சரி சரி நீ சொல்றதெல்லாம் சரி தான்..அமைதியா டீவியைப் பாரு..”என்றவர் பு.னகைக்க பதிலுக்கு ஏதோ கூற வந்தவளுக்கு திடீரென அப்படி ஒரு வலி.

“ப்பா..”

“காயத்ரி மா..என்ன டா ஆச்சு..”

“ப்பா வலிக்குது”என்றவள் நாற்காலியின் நுனியை இறுகப் பற்றிக் கொள்ள ராகவன் வேகமாய் அலைபேசியை எடுக்கச் சென்றார்.

“ப்பா மெதுவா போங்க..”,என்றவள் பல்லைக் கடித்து வலியை பொறுக்க அங்கு அன்புவோ கைப்பேசியை காரிலேயே விட்டுச் சென்றிருந்தான்.

ராகவன் உடனடியாய் ஆனந்தனிற்கு அழைக்க பத்து நிமிடத்தில் வருவதாய் கூறினான்.விடாமல் அன்புவிற்கு அழைத்த வண்ணம் காயத்ரியின் அருகில் ஓடி வந்தார்.

“கண்ணா ஒண்ணும் இல்ல டா..ஹாஸ்பிட்டல் போயிடலாம்.”

“ப்பா அன்பு..”

“ட்ரை பண்ணிட்டே இருக்கேன் டா எடுக்க மாட்றான் ராகி போனை இங்கேயே விட்டுட்டு போயிட்டா..”,என்றவருக்கு பதட்டத்தில் நா வறண்டு போனது.

“ப்பா டென்ஷன் ஆகாதீங்க உங்களுக்கு நல்லதில்ல..”,அதற்குள் ஆனந்தன் ஓடி வந்திருந்தான்.

“அண்ணி வாங்க போலாம்.”என்றவன் கை கொடுக்க மறுபுறம் ராகவன் அவள் தோள்பற்றி கொண்டார்.

எழ முயற்சித்தவள் அசூகையில் அமர்ந்துவிட ராகவனும் ஆனந்தனும் பதட்டமாய் அவளைப் பார்த்தனர்.

“என்னாச்சு அண்ணி..”

காயூமா என்ன பண்ணுது?”

“ப்பா..வாட்டர் பேரேக் ஆகிடுச்சுனு நினைக்குறேன்..”,என்றவள் தயங்கியபடி கூற ராகவனுக்கு பயம் எனில் ஆனந்தனுக்கு பதட்டம் ஆனால் காயத்ரிக்கோ ஆண்களின் முன் என்னவோ போல் இருந்தது.

அவள் எண்ணவோட்டத்தை உணர்ந்தவனாய் அவளது கையை அழுத்திப் பிடித்த ஆனந்தன்,

“எங்கம்மாக்கு நான் பண்றேன்.எதுக்கு சங்கோஜப்படுறீங்க அண்ணி, அப்பாவும் தம்பியும் தான ஒண்ணுமில்ல வாங்க போலாம்.”,என்றதும் வலியை மீறிய ஆனந்தக் கண்ணீர் பெண்ணவளின் கண்களில்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

💞💞வரம் 💞💞

Padmasubramanian July 9, 2026 - 4:09 am

கொடுத்தாலும் வரம்
கொடுப்பவருக்கும் வரம்
கிடைத்தாலும் வரம்
கிடைப்பவனுக்கும் வரம்
அன்பு மட்டுமே
வற்றாத ஊற்று!!!
சுயநலமில்லா மனையில்
வாழும் வாழ்வும் வரம்!!

ரொம்ப அருமையான அன்பான கதை. இவங்க மாதிரி மனிதர்ளோடு வாழும் வாய்ப்பு எதிர்காலத்தில் அமைவது கடினம். நிகழ் காலத்தில் இருப்பவரும் சிலரே. உங்க கதையில் தான் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தேங்க்ஸ் ஸ்ரீமா. ♥️♥️♥️🤗🤗🤗🤗

Thank you ka..

ஸ்ரீ July 9, 2026 - 4:19 am

😍😍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode