100
“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
விளக்கம்
“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
விளக்கம்
ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.”
அன்பு கோவமாய் செல்லும் தம்பியைப் பார்த்து நிற்க காயத்ரி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து நகர எத்தனித்த நேரம் அருணாச்லத்தின் குரலில் அப்படியே நின்றாள்.இன்பாவும் நின்று என்னவென்பதாய் அவரைப் பார்த்தான்.
“கொஞ்சம் உட்காரு மா..”
“?!!”
“இன்பரசன் நீங்களும் தான் வாங்க..நான் பேசினதெல்லாம் மனசில் வைச்சுக்காதீங்க அன்புச்செல்வன்.”
“….”
“முதல்ல என்னை மன்னிச்சுருங்க காயத்ரி மேடம்.வாழ்க்கையில் நான் பண்ணின மிகப் பெரும் பாவம் உங்களை கொல்ல நினைச்து தான்.அதை நினைச்சு நான் வருத்தப்படாத நாள் இல்ல.”
“!!”
“என்ன அப்படி பாக்குறீங்க..அடி மனசில் இருந்து வர்ற வார்த்தைகள் தான் இது.நம்புங்க..பணம் பேர் புகழ்னு மெத்தனமாவே இருந்துட்டேன்.அதெல்லாம் தப்புனு எத்தனையோ சூழ்நிலை எனக்கு உணர்த்தியும் உணராம இருந்தேன்.
ஆனால் அந்த பாடத்தை எனக்கு கத்துக் கொடுக்கவே என் மனைவியோட உயிரை அந்த ஆண்டவன் எடுத்துக்கிட்டான்.எந்த ஆக்ஸிடெண்ட் மூலமா உங்களை கொல்ல நினைச்சேனோ அதே மாதிரியான ஒரு அக்ஸிடெண்ட்ல தான் அவ இறந்து போயிட்டா.என்கிட்ட இருந்த பணம் அவளை எனக்கு திருப்பி தரல.என்னோட அகங்காரம் அவளோட சாவை தடுக்கல.
ஆனால் என்ன பண்றது எல்லாமே காலம் கடந்து வந்த ஞானம்.உங்களைச் சந்திச்சு மன்னிப்பு கேட்கணும்னு தோணும் ஆனாலும் எதோ ஒரு தயக்கம்.விதி இப்படி ஒரு கட்டத்தில் நாம சந்திக்கணும்னு இருக்கு.
கிருத்தி விஷயம் தெரிஞ்சவுடனேவே எனக்குத் தெரிஞ்ச டிடெக்டிவ் வைச்சு உங்க குடும்பத்தைப் பத்தி முழு விரமும் வாங்கிட்டோம்.
நீங்க அந்த வீட்டோட மூத்த மருமகள்னு தெரிஞ்ச அப்பறம்..எங்க மேல இருக்குற கோவத்துக்கு கிருத்தி வாழ்க்கை பலியாகிடுமோனு ஒரு பயம்.
இன்னைக்கு நீங்க வருவீங்கனு எதிர்பார்க்கல.இன்பா மட்டும் வந்தா கண்டிப்பா தனிக்குடித்தனம் போனால் தான் கல்யாணம்னு கேட்க தான் முடிவு பண்ணிருந்தேன்.”
“….”
“ஆனால் யாருக்காகவும் இறங்கி வராத டிஎஸ்பி காயத்ரி தன்னோட குடும்பத்துக்காக இத்தனை பொறுமையா பேசுறதைப் பார்த்து என்னால நம்பவே முடியல.ஊரையே எதிர்த்து நிக்க தயங்காத நீங்க உங்க புருஷனோட கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு இருக்குறது பார்க்குறதுக்கு ஆச்சரியமா இருக்கு.
அதைவிட உங்க இரண்டு பேரையும் அவமரியாதை பண்றதை பொறுக்காம இன்பரசன் கோவப்படுறதைப் பாக்குற அப்போ இப்படி ஒரு அழகான குடும்பத்தில் எங்க பொண்ணு பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் மட்டும் தான் இருப்பானு மனசார நம்புறேன்.”
“….”
“என்ன தான் என் தம்பி மகள்னாலும் அவ எங்க வீட்டு இளவரசி.அதுக்காக தான் தேவையில்லாததை எல்லாம் பேசி உங்களை கோபப்படுத்திட்டேன்.என்னை மன்னிச்சுரு மா..”
“பண்ண தப்பை உணர்ந்தாலே போதும் சார்.ஒரு வகையில் உங்களுக்கு நான் நன்றி தான் சொல்லணும்.அந்த அக்ஸிடெண்ட் தான் என் கல்யாணத்துக்கு மூல காரணமே.அந்த ஒரு நிலைமை வராம போயிருந்தா நான் என் புருஷனை சந்திச்சுருக்கவே முடியாம போயிருக்கும்.”
“உண்மை தான் காயத்ரினு ஒருத்தியை என் வாழ்க்கைக்குள்ள வர வைச்சதுக்கு கண்டிப்பா உங்களுக்கு நன்றி சொல்லணும்.”,என்ற அன்புவும் காயத்ரியும் புனன்னகைத்து நிற்க அவர்களைப் பார்த்த இன்பாவும் கிருத்திகாவும் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அதன்பின் சிறிதுநேரம் பேசி முடித்து மூவருமாய் கிளம்பி வெளியே வர அன்புச் செல்வனின் கைப்பேசி அலறியது.
புது எண்ணாய் இருக்கவும் யார் என்று யோசித்தவாறே அழைப்பை ஏற்றவன்,
“ஹலோ அன்புச்செல்வன்?”
“ஆமாங்க..நீங்க?”
“என் பேர் ஹரிஷ்.தேன்மொழியோட அசோசியேட் மேனேஜர்.”
“ஓ ஹாய் சொல்லுங்க என்ன விஷயம்?”
“நத்திங் டு வொரி.உங்களை நேரில் பார்த்து பேசணுமே கொஞ்சம் பெர்சனல்..”
“நான் இப்போ சென்னையில் இருக்கேன்.நாளைக்கு மார்னிங் மீட் பண்ணலாமா?”
“ஷுவர் ஷுவர்.நாளைக்கு பார்க்கலாம்.”,என்று அழைப்பைத் துண்டிக்க அன்புவின் யோசனையான முகம் பார்த்து காயத்ரியும் இன்பாவும் என்னவென விசாரித்தனர்.
“ஹரிஷ்னு தேனோட மேனேஜராம்.என்கிட்ட பேசணும்னு சொல்றாரு.”
“எதைப்பத்தி??”
“தெரியலையே காயூ..பெர்சனல்னு சொன்னாரு..”
“அண்ணா…”
“ம்ம்?”
“அவருக்கு தேனு மேல ஒரு விருப்பம் இருக்கும்னு நினைக்குறேன்.அவகிட்ட கேட்டாராம்.அவ வீட்டில் பேசிக்கோங்கனு சொல்லிட்டா போல.”
“ஓ!!”
“மாட்டினா அவ..அன்னைக்கு என்ன டயலாக் எல்லாம் பேசினா இப்போ பார்த்தியா..”
“அவரு தான டி விருப்பத்தை கேட்டுருக்காரு..”
“அன்பு இவ்வளவு அப்பாவியா இருக்காத..மேடம்க்கு பிடிக்காமேயா உன் நம்பர் கொடுத்துருக்கா..”
“ஹா ஹா அப்படி ஒண்ணு இருக்கோ..நாளைக்கு போய் என்ன ஏதுனு பேசுறேன்”,என்றவன் புன்னகையோடே காரை கிளப்பினான்.
ஹரிஷை சந்தித்து பேசியவனுக்குத் திருப்தியாகத் தான் இருந்தது.காயத்ரியும் தன் பக்கமிருந்து அவர்களின் குடும்ப விவரங்களை விசாரித்து கூற எல்லாம் நல்லதாகவே இருக்க ராகவனிடம் விஷயத்தைக் கூறினர்.
“இப்போ தான வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்கா அன்பு..ஒரு ஆறு மாசம் போட்டுமே..”
“சரிப்பா நிச்சயம் மட்டும் வேணும்னா பண்ணிப்போம்.கல்யாணம் பொறுமையா பண்ணிக்கலாம்.விரும்பி வர்ற இடத்தை ஏன் பா தள்ளி போட்டுகிட்டு..”
“அதுவும் சரி தான்.அவங்களை முறைப்படி என்ன ஏதுனு பேச சொல்லு அன்பு.”
“சரிப்பா..”
“அண்ணி எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்.”,அபி அதிர்ச்சியாய் பார்க்க காயத்ரியோ கொலைவெறியில் பார்த்தாள்.
“எங்களைப் பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது?”
“அண்ணி..அது..இவ்வளவு வேகமா எல்லாம் நடக்குறதை பார்த்தா பயமா இருக்கு அண்ணி..”
“என்ன தேனு அன்பு அத்தான் ஹரிஷைப் பத்தி நல்லவிதமா தான் சொன்னார்.அக்காவும் குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சு சொன்னாங்க தான அப்பறமும் என்ன உனக்கு?”
“எனக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு போக வேணாம்..”,என்றவள் கண்கள் கலங்கியது.
“லூசு தேனு..”
“என்ன வேணும்னாலும் சொல்லுங்க..நிஜமாவே அதான் காரணம்.அவரைப் பிடிச்சுருக்கு என்னை நல்லா பார்த்துக்குவார்.ஆனால் நீங்க எல்லாரும் இங்க தான இருப்பீங்க..முக்கியமா நீங்க இரண்டு பேரும்..
அவருக்கு அக்கா இருக்காங்க ஆனால் உங்களை மாதிரி இருப்பாங்களானு தெரியலையே..”,என்றவள் வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தாள் இருவருக்கும்.
“வாட்டர் டேங்கை நிறுத்து டி கொஞ்சம்.இங்க பாரு..உன்னால எல்லா சூழ்நிலைக்கும் பழகிக்க முடியும்.அங்க யாரு எப்படினு யோசிக்குறதை விட்டுட்டு நீ எல்லாரையும் சொந்தமா நினைச்சு பழகு தேனு..அந்நியமா நினைச்சா தான் பிரச்சனை வரும்.நீ எங்களுக்கு நாத்தனார்னு சொன்னா தான் தெரியும்.
நமக்குள்ள இப்படி ஒரு க்ளோஸ்னெஸ் அதுவாவே வரலையா..அப்படி தான் அங்கேயும்.அபிக்கு நான் சொல்ற மாதிரி இனி அதுதான் உன் குடும்பம்.ஆனால் இந்த வீட்டுக்கு என்னைக்கும் நீ தான் செல்ல மகாராணி.அது எப்பவும் மாறாது.
சந்தோஷமா வாழ்க்கையை ஃபேஸ் பண்ணு உனக்கு பக்கபலமா நாங்க எல்லாம் இருக்கோம்..சரியா..தேவையில்லாம மனசைப் போட்டு கஷ்டப்படுத்திக்காத..”
“சரி அண்ணி..”,இவர்களின் உரையாடலைக் கேட்டபடி வந்த ராகினி கண்கள் கலங்க மாடிப்டிகளிலேயே அமர்ந்து விட்டிருந்தார்.
தற்செலாய் அறைக்குச் செல்ல வந்த அபிநயா அவரைப் பார்த்து பதறியவளாய்,
“அத்தை என்னாச்சு?”,என்றபடி அவரருகில் செல்ல காயத்ரியும் தேன்மொழியும் ஓடிவந்தனர்.
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.எனக்கு அப்பறம் தேனுக்கு என் ஸ்தானத்துல நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்கனு ரொம்ப சந்தோஷமா இருக்கு “,என்றவரின் விசும்பல் அதிகமானது.
“ம்மா என்னம்மா..நானே எதையாவது சொல்லி இவளை சீக்கிரம் புருஷன் வீட்டுக்கு துரத்தி விடலாம்னு பார்த்துட்டு இருக்கேன்.நீங்க இப்படி அழறீங்க..”,என்ற காயத்ரியைப் பார்த்து லேசாய் புன்னகைத்தார்.
“அழாதீங்க அத்தை..அக்கா சொன்னதெல்லாம் உண்மை தான்..நீங்க எங்களை அம்மா மாதிரி பார்த்துக்கும் போது அவ எங்களுக்கு தங்கச்சி தான்.நாங்க என்னைக்கும் அவளுக்காக இருப்போம்.”,என்ற மருமகளை வாஞ்சையாய் பார்த்திருந்தார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!