641
அழகிய இரவு நேரத்தில் எங்கும் விளக்குகள் ஜொலி ஜொலிக்க இந்தியாவின் பிங்க் நகரமான ஜெய்ப்பூர் மிளிர்ந்து கொண்டிருந்தது.
1876 ஆம் ஆண்டு ராணி விக்டோரியா இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பொழுது மகாராஜா ராம் சிங் அவரை வரவேற்கும் விதமாக அத்தனை கட்டிடங்களையும் பிங்க் வண்ணம் கொண்டு வர்ணம் செய்தார்.
பொதுவாக பிங்க் என்பது ஹாஸ்பிடாலிட்டியை குறிக்கும் நிறம் என்பதால் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்படி வந்த பெயர்காரணமே இந்த பிங்க் சிட்டி.
இன்றளவும் அதை சட்டப்படி அனைவரும் கடைப்பிடித்து அனைத்து கட்டிடங்களும் இளஞ்சிவப்பு வண்ணத்தைக் கொண்டே மிளிர்கிறது.
அந்த நகரின் அழகை கவனித்தவாறே காரில் தான் செல்ல வேண்டிய இடத்தை எதிர்நோக்கி அமர்ந்திருந்தாள் ஷியாமா.
ஷியாமா ராகவன் டெப்யூட்டி டேரக்டர் ஆப் இன்வெஸ்டிகேஷன்,சிபிஐ.
இருபத்தி ஏழு வயதான பெண்ணவள்,ஆறடிக்கும் சற்று குறைவான உயரம்.
கோதுமையும் வெள்ளையும் அல்லாத அழகான நிறம்.கூர்மையான கண்கள்.வயத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருவித கம்பீரம் நிறைந்த இறுக்கமான முகம்.
ஜெய்ப்பூரின் அழகான சாலைகளையும் ஒளிரும் விளக்குகளையும் எவ்வித ரசனையுமின்றி அதே நேரம் கண்ணில் படும் காட்சிகளை மனதில் பதித்துக் கொண்டே வந்தாள்.
சற்று நேரப் பயணத்தில் அந்த அழகான வீட்டை அடைந்தவள் ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனித்த நேரம் செக்யூரிட்டி அவளை அழைத்தவாறே ஓடி வந்தான்.
“க்யா மேடம் கோன் ஹே?”
“மிஸ்டர் மகிழன் வர்மா வை பார்க்கனும்..”அவன் முழுப்பெயரை அழைத்த விதத்திலேயே இன்னுமாய் மிரண்டவன் அவசரமாய்,
“நீங்க யாரு என்ன விஷயமா பார்க்கனும்னு சொல்லுங்க அப்பறம் நான் சார்கிட்ட கேட்டுட்டு உங்களை அனுப்புறேன்.”
“ட்யூட்டி நேரத்துல கேட்ல இல்லாம போனதே தப்பு..இப்போ வந்து ரொம்ப கடமையை காட்டாதீங்க..
இப்போ நான் உள்ளே போகணும் தேவையான விளக்கத்தை உங்க ஐயாகிட்டயே சொல்லிருக்கேன்.புரியுதா?”
அதற்குள் மாடியில் இருந்து அனைத்தையும் பார்த்திருந்தவன் செக்யூரிட்டிக்கு இன்டர்காமில் அழைத்தான்.
அவன் பயத்தோடு ஓடிச்சென்று அழைப்பை ஏற்று பேசிவிட்டு வந்து அவளை உள்ளே செல்லுமாறு கூற சற்றே கடுப்படைந்தவளாய் உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைவதற்குள் கையில் அவளுக்கான பழரசத்தோடு வேலையாள் காத்திருக்க அவளிடம் அதை கொடுத்துவிட்டு அமரும்படி கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
அந்த அரச அரியணை போன்ற சோபாவில் அமர்ந்தவள் கால் மேல் கால் போட்டு சற்றே சாய்ந்தவாறு அமர்ந்து தனக்கான பழரசாத்தை சுவைக்க ஆரம்பிக்க சில நிமிடங்களில் படிகளில் யாரோ இறங்கி வரும் அரவம் கேட்டு பார்வையை மேலே பதித்தாள்.
ஆறடி இரண்டு அங்குலத்தில் ஆஜானுபாகுவாய் ஒருவன் எவ்வித அலட்டலுமின்றி தன் இரவு பைஜாமாவில் இறங்கி வர பார்வை மட்டும் அவளை அளவெடுத்தவாறே நகர்ந்து கொண்டிருந்தது.
அழுத்தமான அடிகளை வைத்து அவளருகில் வந்தவன் அவளுக்கு எதிர்புற சோபாவில் அமர்ந்தான்.
“ஹாய் மிஸ்.ஷியாமா..”
“ஹலோ மிஸ்டர் மகிழன்.”,சற்றே அலட்சியப் பார்வை அவனிடத்தில்.அதே நேரம் பிசிறின்றி வெளி வந்தன வார்த்தைகள்.
“ரொம்ப நாளுக்கு அப்பறம் என் பேரை கேட்குறேன்..குட்..சோ என்னைப் பத்தி எந்த விவரங்களும் உங்களுக்குத் தெரியாது அம் ஐ ரைட் மிஸ்.ஷியாமா?”
சற்றும் அசராதவளாய்,”கமான் மிஸ்டர் மகிழன். தி பிஸினஸ் மேக்னட் சந்திர வர்மாவோட பேரன் அண்ட் அமித் வர்மாவோட பையன்.
பார்ன் வித் சில்வர் இல்ல இல்ல கோல்டன் ஸ்பூன்.அஸ் ஆப் நவ் வர்மா க்ரூப் ஆப் கம்பனியோட எம் டி..
உங்களின் புகழ் பரப்பும் கூட்டத்துக்கு தி ஒன் அண்ட் ஒன்லி எம்வீ..
உங்களைப் பத்தி தெரியாம உங்க கோட்டைகுள்ள நுழைய முடியுமா?”
“நாட் பேட்..இவ்ளோ தெரிஞ்சும் நேம் மென்ஷன் பண்ணிருக்கீங்க..குட்..ஓ.கே லெட் மீ கம் டூ த பாயிண்ட்..
உங்களைப் பத்தி நெறைய கேள்விபட்டு ரொம்ப நம்பிக்கையான இடத்துல இருந்து உத்திரவாதம் கொடுத்ததுனால தான் நீங்க இங்க வர்றதுக்கே நான் சம்மதிச்சேன்.
பட் ஒரு செக்யூரிட்டிகிட்டேயே இவ்ளோ ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கீங்க..ஐ டோண்ட் திங்க் யூ கேன் ஹேண்டல் திஸ் கேஸ்…”
“எக்ஸ்கீயூஸ் மீ மிஸ்டர் மகிழன்.என்னை பத்தியும் என் ஜாப் ஸ்டைல் பத்தியும் நீங்க கன்க்ளுட் பண்ண வேணாம்பர்ஸ்ட் திங்க் இங்க நான் வந்துருக்க விஷயம் ரொம்பவே கான்பிடென்ஷியல்..
அப்படி இருக்கணும்னு சொன்னதும் நீங்க தான்னு நியாபகம்.
அண்ட் செகண்ட் திங்க் பலமில்லாத சாதாரண ஒரு மனுஷன்கிட்ட நான் என் பெருமையை பேசி அவங்களை பயமுறுத்தி மிரட்டி என் வேலையை சாதிக்குறது எனக்கு சுத்தமா பிடிக்காது.
அவருக்குத் தேவையான விஷயம் நான் எதுக்காக இந்த வீட்டுக்குள்ள வந்தேன்ங்கிறது தான்.அதுக்கான பதில் சொல்லிட்டேன்.என் வேலை முடிஞ்சுது.”
“ம்ம் ஸ்மார்ட்..சரி பைன்..பட் அந்த செக்யூரிட்டி எங்க நம்பிக்கைக்கு தகுந்தவர் தான்.
இந்த காம்ப்பவுண்ட் வால் தொடங்கி வெளில போற வர எல்லாருமே நம்பிக்கையானவங்க தான்.”
“சாரி டு இன்டரப்ட்..ஆனா அப்படி நம்பிக்கையானவங்க இருக்கும் போது தான மிஸ்டர் சந்திர வர்மா ஐ மீன் உங்க தாத்தா கொல்லப்பட்டு இருக்கார்”,
அடுத்த நொடி அவன் முகம் கறுத்திருந்திருந்தது.கையை அழுந்த மூடியவனாய் தன்னை சீர்படுத்திக் கொண்டான்.
“அது இயற்கையான மரணமாகவும் இருக்கலாம் மிஸ்..!”
“உங்களை ஹர்ட் பண்ணணும்னு சொல்லல..நான் எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காம பண்ண மாட்டேன்னு சொல்றேன்.
சோ என்னைப் பத்தின விஷயங்கள் உங்களையும் என் ஹையர் அபிஷியலையும் தாண்டி யாருக்கும் தெரியாம இருக்குறது தான் நல்லது.
இல்ல உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா யாருக்கெல்லாம் என்னைப் பத்தி தெரியணுமோ க்விக்கா ஒரு இன்ட்ரோ கொடுத்துருங்க..நோ இஷூஸ்..”
சில நொடி சிந்தித்தவனாய்,”நீங்க சொலல்றது படியே பண்ணிரலாம்.
இன்னைக்கு வீட்ல யாரும் இல்லை எல்லாரும் மதுரா வரை போய்ருக்காங்க.நாளைக்கு ஈவ்னிங் தான் வருவாங்க..
சோ அவங்க வந்தப்பறம் உங்களை என் ப்ரெண்ட்னு சொல்லியே அறிமுகப்படுத்துறேன்.
அதர் தன் தட் உங்க ப்ரொபஷன் பத்தியெல்லாம் என்ன சொல்லனுமோ நீங்களே சொல்லிக்கலாம்.
பிகாஸ் நானா பேசுற வார்த்தைகளைத் தவிர எந்த கேள்வியும் யாரும் என்கிட்ட எதுவும் கேட்கமாட்டாங்க..”
அலட்சியமாய் இரு தோள்களையும் குலுக்கியவளாய் சுற்றும் பார்த்தவள்,”எனக்கான ரூம் எதுனு சொன்னா….?”
“மேல போய் ரைட் சைட்ல செகண்ட் ரூம்..அண்ட் எட்டு மணிக்கு டின்னர் டேபிள்ல மீட் பண்ணலாம்..”, என்றவன் ஆணை போல் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட தன் பெட்டியை எடுத்துக் கொண்டு படியேறினாள்.
வீடு மொத்தமும் பணத்தின் அளவை பறைசாற்றியது.கிட்டதட்ட அரண்மனை போன்ற கட்டமைப்பு.
அத்தனை பிரம்மாண்டம் ஒவ்வொன்றிலும்.இருந்தும் எதையும் பொருட்டாய் கூட மதியாது தனக்கான அறைக்குள் நுழைந்தாள் ஷியாமா.
மிகப் பெரிய விசாலமான அறை கம்பீரமான பஞ்சு மெத்தையோடு கூடிய கட்டில் நடுநாயகமாய் போடப்பட்டிருக்க அங்கேயே அனைத்து வசதிகளும் இருந்தன.
கிட்டத்தட்ட ஒரு ஹோட்டல் அறை போலவே தோன்றியது அவளுக்கு.
இத்தனை ஆடம்பரமே ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிரியாய் மாறி விடுகிறது என்று மனதினில் நினைத்தவளாய் தன் பெட்டியை திறந்து தனக்கான உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் அலுப்பு தீர குளித்து விட்டு அவன் கூறிய நேரத்திற்கு இறங்கி கீழே சென்றாள்.
அவளுக்கு முன் மகிழன் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க அவளை கண்டவன் தன் போக்கில் ப்ரெட்டில் வெண்ணையை தடவியவாறே அருகில் இருக்கையை காட்டினான்.
வந்தமர்ந்தவள் அவளுக்கான உணவைப் பார்த்து எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
இருவரும் சாப்பிடும் வரை அந்த இடமே அமைதியாய் இருக்க அதன் பின் அங்கிருந்து எழப் போனவளை கைசைத்து தடுத்தவன்,
“மிஸ்.ஷியாமா.உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா ஓரளவு இந்த வீட்டைப் பத்தி சொல்லலாம்னு நினைக்குறேன்.
பிகாஸ் நாளைக்கு எல்லாரும் வந்துட்டா இப்படியான டைம் நமக்கு கிடைக்கப் போறது ரொம்பவே ரேர் தான்.”
“எஸ் ஷுவர்..ப்ளீஸ்..”
“ம்ம் வாங்க என்றவன் அங்கிருந்து எழுந்து வாசலில் தோட்டத்தில் இருந்த பென்ஞ்சிற்கு அழைத்துச் சென்றான்.
“சோ எங்க பேமிலி கொஞ்சம் பெருசு.என் தாத்தாவுக்கு மூணு பசங்க இரண்டு பொண்ணுங்க.
எல்லாருமே இங்க தான் இருக்காங்க.என் அப்பா அம்மா தான் மூத்தவங்க.
என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார்.
அம்மா அதுக்கப்பறம் அவங்க அறையை விட்டு வெளியே வர்றதே கிடையாது.
என்னையும் அவங்களுக்கான கேர் டேக்கரையும் தவிர யாரையும் அலோ பண்ண மாட்டாங்க.
அடுத்த ரெண்டு சித்தப்பாக்களும் எங்களோட மார்பில் பிஸினஸ் பார்த்துக்குறாங்க.அத்தையோட கணவர்கள் தான் கார்மெண்ட்ஸ் பிஸினஸ் பாத்துக்குறாங்க.
மத்தபடி எல்லாரையும் நாளைக்கு நேர்ல பார்க்கும் போது உங்களுக்கு ஓரளவு புரியும்.
அண்ட் என் பாட்டி இறந்து இரண்டு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள தாத்தாவோட இந்த இழப்பு அன்எக்ஸ்பெக்டட்.
எனக்கு இதை போலீஸ் கேஸ்னு கொண்டு போறதுல கொஞ்மும் இஷ்டம் இல்ல.
என்ன பண்ணிணாலும் போனவர் வரப் போறதும் இல்ல..ஆனா வீட்ல இருக்குறவங்க தான் இதை பெரிய இஷு ஆக்கி சிபிஐ வரை கொண்டு போய்டாங்க.
போலீஸ் எல்லா சோதனையும் செஞ்சு ஒரு ப்ரோயஜனமும் இல்லனு போய்ட்டாங்க..
இப்போ நீங்க..டூ வாட் எவர்..பட் எங்களுக்கான பெயர் வெளில எந்தவித சேதாரமும் ஆகிடக் கூடாது.காட் இட்?”
“தேட்ஸ் மை டியூட்டி..இதுவரை கொடுத்த இன்போ எல்லாம் ஓகே குடும்ப நபர்கள் தவிர இங்க வந்து போறவங்க ஆர் செர்வண்ட்ஸ் பத்தின டீடெயில் வேணுமே!”
“இங்க சமையல்காரங்க நாலு பேர் இருக்காங்க.எல்லாரும் காலையிலே ஆறு மணி தொடங்கி நைட் எட்டு மணியோட போய்டுவாங்க.
தோட்டகாரர் வீட்டு வேலை செய்றவங்கனு ஒரு அஞ்சு பேர் இருக்காங்க அவங்களும் சேம் வொர்க் டைம் தான்.
இவங்களை தவிர்த்து முருகன் அண்ணா ஒருத்தர் தான் முழு நேரமும் இங்கேயே இருக்குறவர்.
தாத்தா காலத்துலயே இங்க வேலைக்கு வந்தவர் ஒருவிதத்துல என் அப்பாவோட சிநேகிதர்.
சோ அவர் வேலையாள்னு சொல்றத விட எங்கள்ல ஒருத்தரா தான் நான் பாக்குறேன்.
அவருக்கு கிட்சன் பக்கத்துலேயே இருக்குற ரூம் கொடுத்துருக்கோம்.
அவர் இல்லாம யாருக்கும் ஒண்ணும் தெரியாது அதனால பேமிலி கூட அவரும் மதுரா போய்ருக்கார்.”
“இன்ட்ரெஸ்ட்டிங்..வெல்..எனக்கு ஓரளவு டீடெயில் புரிஞ்சுது..ஐ வில் மேனேஜ்..
நாளைக்கு மார்னிங் ஒருதடவை உங்க தாத்தாவோட ரூமை பார்த்துட்டா பெட்டர்.”
“ஷுவர்..நானே கூட்டிட்டு போறேன்.சொல்ல போனா உங்க டேரெக்டர் நீங்க இன்னைக்கு வரீங்கனு சொன்னதுனால தான் எல்லாரையும் ஊருக்கு அனுப்பினதே.
இல்லனா…ம்ம் நாளைக்கு அவங்க வந்தப்பறம் உங்களுக்கே புரியும்.
ஓகே குட்நைட்..நாளைக்குப் பார்க்கலாம்..அண்ட் மார்னிங் சர்வெண்ட்ஸ் வந்துருவாங்க முடிஞ்ச வரை என் ப்ரெண்டாவே காட்டிக்கோங்க..”
“டோண்ட் வொரி ஐ வில் டேக் கேர்..குட் நைட்..”,என்றவள் தனதறைக்கு வந்து கட்டிலில் விழுந்தாள்.
ஏதேதோ சிந்தனைகளில் உழன்றவளுக்கு அசதியினால் தூக்கம் கண்களைத் தழுவ சீக்கிரமே உறங்கியும் போனாள்.
திடீரென எங்கோ கேட்ட அலறலில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அப்போது தான் இருக்கும் இடம் நினைவில் வந்தது.
என்ன ஏதென தெரியாமல் ஒரு வேளை கனவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் மீண்டும் உறக்கத்தை வரவழைக்க முயன்றவள் ஏதோ ஒரு உந்துதலில் அறையை விட்டு வெளியே வந்தாள்.
மாடிப்படிகளில் யாரோ வேகமாய் செல்லும் சத்தம் கேட்டு அவளுமாய் மாடியேறினாள்.
அங்கு நீண்ட பெரும் வராண்டாவில் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு அறை மட்டும் இருப்பதைக் கண்டவள் மெதுவாய் அதன் அருகில் சென்று கதவின் பிடியில் கை வைத்த நேரம் பின்னிருந்து ஒரு கரம் அவளை அழுந்தப் பற்றியது.
ஒரு நொடி அதிர்ந்தவளாய் பின் திரும்பி அடிக்க கையை ஓங்கிய போது லாவகமாய் அதை தடுத்துப் பிடித்திருந்தான் மகிழன்.
“இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?”,சற்றே கோபமிருந்தது அவன் குரலில்.
“யாரோ கத்தின மாதிரி சத்தம் கேட்டுது..வெளில வந்து பார்த்தா படியில யாரோ வேகமா ஏறி போனாங்க.. இங்க இந்த ஒரு ரூம் தான இருக்கு..அதான்..”
“தேவையில்லாத விஷயத்துல தலையிடாம இருக்குறது தான் உனக்கு நல்லது. இன்னொரு தடவை இப்படி பண்ணாத..”
“வாட் யூ மீன்?”,அவளின் சந்தேகப் பார்வை கண்டு சற்றே நிதானித்தவன் ஆழ்மூச்செடுத்தவாறு அவளை அங்கிருந்து வரும்படி சைகை செய்தான்.
கீழே அவளது அறையிருக்கும் தளத்திற்கு வந்தவன் அந்த பால்கனியிலிருந்து இருளை வெறித்தவாறு நின்றான்.
“அங்க தான் என் அம்மா இருக்காங்க.அவங்க மனநிலை பாதிக்கப்பட்டவங்க..”
“!!!”
“அப்பாவோட இழப்பு அவங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்துருச்சு..
அப்போ இருந்தே ஒரு மாதிரி தான் இருப்பாங்க.கொஞ்ச வருஷத்துல மொத்தமா மாறிட்டாங்க..
பொதுவா இப்படி எல்லாம் சத்தம் போடமாட்டாங்க.. எப்போவாவது அவங்களுக்கு எதாவது டிஸ்டர்ப்ட்டா இருந்தா இது மாதிரி..பட் ரொம்ப ரேர்..
அதனால தான் உன்கிட்ட பேசினப்போ இத்தனை விவரமா சொல்லல..
இன்னைக்கு என்னாச்சுனு தெரில..படியில கேட்ட சத்தம் அவங்களோட கேர் டேக்கரா இருக்கும்.மத்தபடி ஒண்ணுமில்ல.”,
என்று பிசிறில்லாமல் கூறுபவனிடம் அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றாமல் ஷியாமா அமைதியாய் நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
இந்த வீடு இன்னுமின்னும் என்ன என்ன ரகசியங்களை சுமந்திருக்கிறதோ என்ற யோசனையோடே தனதறைக்குச் சென்றவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாய் அமைந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Nice start. Re run story thane ma.
Interesting💕