309
ஆஷிக் மோனிஷாவோடு கிளம்பியவள் முதலில் சென்று இறங்கியது ஜெய்ப்பூரின் கட்டட கலைக்கு அழகிய சான்றான ஜல் மஹாலில்.
மகிழன் கூறிய போது கூட பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவள் அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட பின்பு நொந்து கொண்டாள்.சிறு பிள்ளைகளாய் அரற்றிக் கொண்டே வந்தனர்.
ஜல் மஹால் என்பது மன் சாகர் ஏரியில் கட்டப்பட்ட ஐந்து அடுக்கு மாளிகை.
அதில் நான்கு தளங்கள் நீருக்குள் அமைந்திருக்க மேல்தளம் மட்டுமே மேற்பரப்பில் காட்சிளிக்கிறது.
அந்த காலத்தில் டக் ஹண்டிங் போன்ற பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட மஹால் என்று கூறப்டுகிறது.
காரிலிருந்து இறங்கியவள் விருப்பமே இல்லாமல் இரண்டு நொடி அதைப் பார்த்துவிட்டு மற்றவர்களைப் பார்த்து போலாமா என்று கேட்க ஆஷிக் அவளை விசித்திரமாய் பார்த்தான்.
“வாட்?”
“நிஜமாவே நீங்க ஆர்க்யாலஜி ஸ்டுடண்ட் தானா?”
“ஏன் அப்படி கேக்குற?”
“இல்ல ஏதோ டூரிஸ்ட் மாதிரி வந்தோம் பார்த்தோம் கிளம்பலாமானு கேக்குறீங்க?
டூரிஸ்ட் கூட போட்டோ எடுக்காமா இங்க இருந்து போக மாட்டாங்க!”
“ஆனாலும் நீ ரொம்ப யோசிக்குற…இப்போ எல்லாம் கூகுள்ல தேடினா எல்லா மைனியூட் டீடெயில்ஸும் போட்டோவோட கிடைக்குது.
அதனால எடுக்கல. ஆல்சோ என் தீசிஸ் மெயினா ஆம்பர் ஃபோர்ட் பத்தி தான்.. விளக்கம் போதுமா இல்ல வேற எதுவும்??”
“தெரியாம கேட்டுட்டேன் முறைக்காதீங்க..போலாம் போலாம்..”, என்றவன் வாயை மூடிக்கொள்ள மோனிஷா நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே ஷியாமாவோடு சேர்ந்து கொண்டாள்.
அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் இரண்டாம் ஜெய் சிங் எனும் மன்னரால் கட்டப்பட்ட மிகவும் பிசித்தி பெற்ற ஜந்தர் மந்தர்.
இதன் பெயர் காரணமானது,ஜந்தர் என்றால் கருவி மந்தர் என்றால் கணிப்பு எனவே கணிப்புக் கருவி என்று பொருள்படும்.
நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது,
கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது.
இந்த வானியல் ஆராய்ச்சி வளாகம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல்,
“முகலாய ஆட்சியின் இறுதிக்காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி பெற்றிருந்த ஒரு ராஜவம்ச இளவரசரின் படைப்பாக்கம்” என்ற பெருமைக்குரிய விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஐந்து இடங்களில் ஜந்தர் மந்தர் அமைக்கப்ட்டிருந்தாலும் ஜெய்ப்பூரில் உள்ள இதுவே மிகவும் பிசித்தி பெற்றதாய் விளங்குகிறது.
“இன்ட்ரஸ்டிங்..”
“ம்ம் அக்கா..உலகத்துல எத்தனையோ இடங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுற நமக்கு நம்ம நாட்டோட அதிசயங்கள் பெரும்பாலும் தெரியாமயே போய்டுது..”
“உண்மை தான் மோனி சின்ன வயசுல இருந்து இங்க வந்துருக்கேன்னாலும் விவரம் தெரிஞ்சு இதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்ட அப்போ அப்படி ஒரு பீல் இருந்தது.”
“ஆமா டா நாம நிஜமாவே ரொம்ப லக்கி இந்தியால பிறந்ததுக்கு.. ஆனாலும் இன்னும் நான் சவுத் சைட் போனதே இல்லை கண்டிப்பா லைப்ல ஒரு தடவையாவது பார்த்துரணும்..”
“அதுக்கென்ன இப்போ தான் உன் ஷியாமா அக்கா இருக்காங்களே அவங்க வீட்டுக்கு போய் தங்கி சுத்தி பர்த்துரலாம்..”
“கிண்டல் பண்றனு தெரியுது..இருந்தாலும் எப்போ வேணா வீட்டுக்கு வாங்க அம்மா அப்பா உங்களை நல்லா கவனிச்சுப்பாங்க..
ஆமா அடுத்து எங்கபோகப் போறோம்.”,அடுத்ததாய் தன் குடும்பத்தைப் பற்றிய கேள்வி வருமோ என்றெண்ணியவளாய் பேச்சை மாற்றியிருந்தாள்.
“பாக்குறதுக்கா இடம் இல்ல..ஹவா மஹால் சிட்டி பேலஸ் முக்கியமா உங்காளுக்கான ஆம்பர் போர்ட் இருக்கே..”, என்றவாறே அடுத்த இடத்தை நோக்கி கிளம்பத் தயாராகியிருந்தனர்.
ஓரளவு அனைத்தையும் முடித்துவிட்டு மதிய உணவை ஹோட்டலில் முடித்துக் கொண்டு ஜெய்ப்பூரின் அடையாளமான ஆம்பர் ஃபோர்ட்டை அடைந்திருந்தனர்.
ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது
ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது.
கோட்டையின் கணபதி நுழைவாயில் அருகில் உள்ள சிலா தேவியின் உருவச்சிலை, தற்கால வங்காள தேசத்தின் ஜெஸ்சூர் இராஜாவை, 1604 இல் இராஜா மான் சிங் வெற்றி கொண்டமைக்காக வழங்கப்பட்டது.
கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.
ஒவ்வொரு பகுதியையும் பார்க்க பார்க்க சலிக்கவில்லை மூவருக்கும்.ஷியாமாவுமே சற்று ரசிக்க ஆம்பித்திருந்தாள் என்றே கூற வேண்டும்.
எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் எத்தனை ரசனை அந்த காலத்திலேயே என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு ஒரு ராணிகளுக்கும் தனித்தனி இருப்பிடம் அனைத்திற்கும் பொதுவாய் அரசரை அவர்கள் சந்திப்பதற்கான இடம்
அதிலும் ஒருவருக்கான தனிப்பட்ட நேரத்திற்காக ஒருவர் வருவது மற்றவர் அறியா வண்ணத்தில் படிக்கட்டுகள்,மகாராணி அவைக்கு வருவதற்காக டனல் போன்ற அமைப்பு என ஒவ்வொரு சிறு விஷயமும் நம் கருத்தை கவர்வதாய் இருந்தது.
அனைத்திற்கும் மேலாக அந்த நீண்ட நெடிய பாம்பு போன்ற பாதை அரண் போன்ற சுவர்களோடு பிரமிப்பின் உச்சமாய் இருந்தது.
“தேங்க்ஸ் ஷியாமா ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்களால ஹட் அ நைஸ் டைம்..”
“ஏன் நீங்க இங்கேயே தான இருக்கீங்க அடிக்கடி வர மாட்டீ.களா?”
“எப்பவுமே பக்கத்துல இருக்குறதோட அருமை அதிகமா தெரியாது இல்லையா!”,என்றவன் புன்னகைத்தான்.
“சின்ன வயசுல எல்லாம் இதைப் பார்த்துட்டு நாமளும் ராணியா பொறந்துருக்கலாம்னு நினைச்சுருக்கேன் கா..”
“ஹா ஹா ஏன் இப்பவும் நீங்க எல்லாம் ராஜ வாழ்க்கை தான வாழ்றீங்க அப்பறம் என்ன?”
“ம்ம்..வளர வளர தான் அப்படி இருக்குறதோட கஷ்டங்கள் புரிஞ்சுது..இப்போ எல்லாம் ஏன்டா இப்படி இருக்கோம்னு தான் பீல் பண்றேன்.”
“என்ன ஆஷிக் உன் தங்கச்சி இப்டி சொல்றா?”
“அவ சொல்றதுல தப்பு என்ன இருக்கு ஷியாமா..”
“ஏன் ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க..சொல்லக் கூடாதுனா வேண்டாம்..லீவ் இட்..”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..இங்க வர்மா பேமிலினா அரச குடும்பத்துக்கு அடுத்த மாதிரி தான் இப்பவும்.
தாத்தாவோட தாத்தா இங்க ஜமீன்தார் அந்த மாதிரி.சோ இந்த பேர் புகழ் எல்லாம் நேத்து இன்னைக்கு வந்த விஷயம் இல்லை.காலம் காலமா இருக்குறது.
இப்பவும் ஜெய்ப்பூர் ராஜ்புத் பேமிலியோட நாங்க ரொம்வே க்ளோஸ் தான்.
எல்லா பேமிலி பங்ஷனுக்கும் எங்களுக்கு இன்வைட் உண்டு.அதனாலேயே சின்ன சின்ன சந்தோஷங்கள் நிறையவே இழந்துருக்கோம்.
எப்பவுமே எங்களைச் சுத்தி பார்டிகாட்ஸ் செக்யூரிட்டினு தான் இருப்பங்க.
சொன்னா நம்ப மாட்டீங்க இப்போ கூட நம்மளை வாட்ச் பண்ண அண்ணா யாரையாவது அனுப்பிருப்பாங்க.
எவ்ரி ஆப் அன் அவர் நம்மளை பத்தின அப்டேட் அண்ணாக்கு போய்ட்டே தான் இருக்கும்.”
“ஓ…மே பி உங்களோட பாதுகாப்புக்காக தான இதெல்லாம்..”
“பாதுகாப்பு முக்கியம் தான் ஆனா அதையும் தாண்டி நம்ம ப்ரைவஸினு ஒண்ணு முக்கியம் இல்லையா..”
“ம்ம் புரியுது..”
“ஆமா க்கா..ஷ்கூல் காலேஜ்ல எல்லாம் ஆரம்பத்துல யாரும் அவ்வளவா பேசவே மாட்டாங்க
அப்பறம் நாங்க வீட்ல வந்து அழுது ஆர்பாட்டம் பண்ணி தான் எந்த கண்காணிப்பும் இல்லாம போக பெர்மிஷன் வாங்கினோம்.
அதுக்கு அப்பறம் தாத்தாவோட இறப்பு மறுபடியும் ஜெயில் வாழ்க்கை தான்..
நாங்களும் அநாவசியமா வெளியே போறதில்ல.யாரும் தேவையில்லாம உள்ளே வரதும் இல்ல.
ஆனா நாங்களே இப்படி புலம்புறோம்னா அண்ணா எல்லாம் என்ன சொல்றது.மொத்த குடும்ப பொறுப்பும் அவர் கையில.
ஆபீஸ் பிஸினஸ் வீடு இது தாண்டி ஒண்ணுமே கிடையாது அவர் வாழ்க்கையில.
காலேஜ் முடிச்சு எம்பிஏ பண்ணிட்டு பொறுப்பேத்துகிட்டவர் தான் இப்போ வரவும் ஓடிட்டே இருக்கார்.அவரோட தனிப்பட்ட வாழ்க்கைனு அவர் இதுவரை யோசிச்சுருப்பாரானு கூட தெரில.”
“ஆனால் உங்க அப்பா மாமா எல்லாரும் இருக்கும் போது ஏன் மகிழன் அத்தாரிட்டாவா இருக்கணும்?”
“எங்க பெரிப்பா அதாவது மகி அண்ணாவோட அப்பாவோட இறப்பு எங்க தாத்தாவை ரொம்பவே பாதிச்சுடுச்சு..
அவரு தான் தாத்தாவுக்கு வலது கை மாதிரி இருந்ததா சொல்லுவாங்க.அப்படிபட்டவரோட இடத்தை வேற யாருக்கும் கொடுக்க தாத்தாவுக்குத் தோணலயாம்.
அதனால அண்ணாகிட்ட தான் எல்லா பொறுப்பும் இருக்கணும்னு உயில் எழுதி வச்சுட்டாராம்.
அப்பா மாமா யாரா இருந்தாலும் அவங்க தேவைக்கு பணத்தை எடுத்துக்கலாமே தவிர அண்ணா கையெழுத்து இல்லாம ஒண்ணுமே பண்ண முடியாது.”
“ப்பா இதென்ன அனுமார் வால் மாதிரி ஒரு விஷயத்துக்குள்ள இன்னொன்னுனு வந்துட்டே இருக்கும் போலேயே..”
“என்ன??”
“இல்ல..உங்க தாத்தா உயில் எழுதிட்டாருனா யாரும் எதுவும் சொல்லலயா?
பொதுவா சாதாரண குடும்பத்துலயே சொத்து பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும்..”
“தாத்தாவை எதிர்த்து நிக்க யாருக்கும் தைரியம் வரலனு தான் சொல்லணும்.
ஆனாலும் பிரச்சனை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே தாத்தா இறந்துட்டதுனால யாராலயும் அண்ணாகிட்ட எதுவும் கேட்க முடில.
இந்த ஒரு காரணத்துக்காகவே தியாவுக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் பண்ணணும்னு அத்தை தீவிரமா இருக்காங்க..”
“தேட்ஸ் இன்ட்ரஸ்டிங்..சரி ரொம்பவே டைம் ஆச்சு போலாமா..”,என்றபடியே கிளம்பியவர்கள் வீட்டை அடைந்திருக்க என்றும் இல்லாத அதிசயமாய் மகிழன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.
சிறியவர்கள் இருவரும் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றுவிட ஷியாமா அவனை நோக்கிச் சென்றாள்.
“ஹலோ மிஸ்டர் மகிழன்..”
தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவன் அவளை அமருமாறு சைகை செய்தான்.
“இஃப் ஐ அம் நாட் ராங் நீங்க இப்போ வீட்ல இருக்குற டைம் இல்லையே!”
“ம்ம் ஆஷிக் அப்பா மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்துட்டார்..”
“வாட்??”
“யா எப்படி நடந்ததுனு அவருக்கே தெரில..நல்லாதான் இருந்ததா சொல்றார்.
யாரோ தள்ளி விட்ட மாதிரி இருக்குனு சொல்றார்.ரியலி ஐ அம் கன்பியூஸ்ட்..
என்னை சுத்தி என்ன நடக்குதுனு புரில..”, என்றவன் இரு கைகளாலும் தலையை அழுந்தக் கோதி குனிந்து கொண்டான்.
ஷியாமாவிற்கு ஏனோ அவளறியாமல் ஏதோ ஒரு உந்துதலில் கண்கள் மாடியை நோக்க முன்பு போலவே தன்னை நோக்கியிருந்த விழிகள் சட்டென மறைந்ததைப் போன்று உணர்ந்து தன்னை மறந்து அங்கேயே வெறித்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Super💕
Nice
யார் அந்த மர்ம ஆள் 🤔🤔🤔